ஓம் சாந்தி.
இந்த மாதாவின் மகிமை பாரதத்தில் தான் பாடப்படுகிறது. ஜகதம்பா
பாக்கியத்தை வழங்கும் வள்ளல் ஆவார். இவருடைய பெயரே காமதேனு என
வைக்கப் பட்டிருக்கிறது, அதாவது அனைத்து விருப்பங்களையும்
நிறைவேற்றுபவர். இந்த ஆஸ்தி அவருக்கு எங்கிருந்து கிடைக்கிறது?
சிவபாபாவின் மூலம் ஜகதம்பா மற்றும் ஜகத்பிதாவுக்கு ஆஸ்தி
கிடைக்கிறது. நாம் ஆத்மாக்கள் எனக் குழந்தைகளுக்கு நிச்சயம் (நம்பிக்கை)
உண்டாகியிருக்கிறது. ஆத்மாவை பார்க்க முடியாது, அறிய முடியும்.
ஜீவன் மற்றும் ஆத்மா. ஆத்மா அழிவற்றது, சரீரம் அழியக் கூடியது,
அது இந்தக் கண்களால் பார்க்கப்படுகிறது. ஆத்மாவின் காட்சி
தெரிகிறது. விவேகானந்தருக்கு ஆத்மாவின் காட்சி தெரிந்தது எனச்
சொல்கின்றனர், ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம்
நம்முடைய ஆத்மாவின் காட்சியைப் பார்த்தால், தந்தை யுடைய
காட்சியையும் பார்ப்போம். ஆத்மா எப்படி இருக்கிறதோ அதே போல
ஆத்மாக்களின் தந்தையும் இருக்கிறார். எந்த வித்தியாசமும்
கிடையாது. புத்தியால் அறியப்படுகிறது - இது தந்தை, இது குழந்தை.
அனைத்து ஆத்மாக்களும் அந்தத் தந்தையை நினைவு செய்கின்றனர்.
இந்தக் கண்களால் தனது ஆத்மாவையோ தந்தையின் ஆத்மாவையோ பார்க்க
முடியாது. அவர் பரம ஆத்மா, பரம்தாமத்தில் வசிக்கக் கூடிய
சுப்ரீம் (உயர்வான) பரமாத்மா ஆவார். பக்தி மார்க்கத்திலும்
கூடத் தீவிர பக்தி செய்தால் அவர்களுக்குக் காட்சி தெரிகிறது.
அவரின் ஆத்மா இந்தச் சமயம் இந்தச் சரீரத்தில் உள்ளது என்பதல்ல.
அவருடைய ஆத்மா மறுபிறவியில் சென்று விட்டது. பக்தி
மார்க்கத்தில் யார் யார் எந்த எந்தப் பாவனையுடன் யாரை பூஜிக்
கின்றனரோ அவரின் காட்சி தெரியும். அளவற்ற படங்களை உருவாக்கி
யிருக்கின்றனர். அது பொம்மைகளின் பூஜை எனப்படுகிறது. பாவனை
வைப்பதன் மூலம் அல்ப காலத்தின் சுகத்தின் கொஞ்சம் பலன்
கிடைக்கிறது. உங்களுடைய எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தின் விஷயமே
தனிப்பட்டதாகும். நாம் சொர்க்கத்தின் இராஜ்யத்தை எடுக்கிறோம்
என நீங்கள் அறிவீர்கள். பக்தியால் யாரும் சொர்க்கத்திற்குச்
செல்வதில்லை. பக்தி மார்க்கம் முடிவடையும் போது அதாவது உலகம்
பழையதாக ஆகும்போதுதான் பிறகு கலியுகத்திற்குப் பின்
சத்யுகமாகிய புதிய உலகம் வரும். யாருடைய புத்தியிலும்
பதிவதில்லை. இன்னார் ஜோதியுடன் ஜோதியாக ஐக்கியமாகி விட்டார்
எனச் சன்னியாசிகள் சொல் கின்றனர், ஆனால் அப்படி எதுவும்
கிடையாது. உங்களுக்கு இப்போது ஈஸ்வரிய புத்தி கிடைத்துள்ளது,
இதனை ஸ்ரீமத் எனச் சொல்கிறோம். வார்த்தைகள் எவ்வளவு நன்றாக
உள்ளன. ஸ்ரீஸ்ரீ பகவானுடைய மகா வாக்கியம். அவர்தான்
சொர்க்கத்தின் எஜமானாக அதாவது நரனிலிருந்து நாராயணனாக
ஆக்குகிறார். நீங்கள் ஸ்ரீமத் மூலம் உலகின் இராஜ்யத்தை
அடைகிறீர்கள். ஸ்ரீஸ்ரீ 108-இன் மாலைக்கு நிறைய மகிமை
இருக்கிறது. 8 ரத்தினங்களின் மாலை இருக்கிறது. சன்னியாசி களும்
கூட ஜபிக்கின்றனர். ஒரு துணியை (சிறிய பை) உருவாக்குகின்றனர்,
அதனைக் கௌமுக் (பசுவின் வாய்) எனச் சொல்கின்றனர். உள்ளே கையை
வைத்து மாலையை உருட்டுகின்றனர். நிரந்தர மாக நினைவு செய்யுங்கள்
எனப் பாபா சொன்னால் அவர்கள் பிறகு மாலையை உருட்டக் கூடிய
அர்த்தத்தை எடுத்துக் கொண்டனர். இப்போது பரலௌகிக தந்தை வந்து
பிரம்மாவின் மூலம் நம்மைத் தம்முடையவராக ஆக்கியுள்ளார்.
பிரஜாபிதா இருக்கிறார் எனும் போது பிரஜாமாதாவும் இருக் கிறார்.
ஜகதம்பா ஜகத்தின் தாய் மற்றும் லட்சுமி உலகின் மகாராணி
எனப்படுகின்றனர். விஷ்வ அம்பா எனச் சொல்லுங்கள் அல்லது ஜகத்
அம்பா எனச் சொல்லுங்கள், எல்லாம் ஒன்றேயாகும். நீங்கள்
குழந்தைகள் எனும்போது இது குடும்பம் என ஆகி விட்டது.
குழந்தைகளாகிய நீங்கள் கூட அனைவரின் மன விருப்பங் களை
நிறைவேற்று கிறீர்கள். நீங்கள் ஜகதம்பாவின் குழந்தைகள்.
புத்தியில் இந்தப் போதை இருக்கிறது - நாம் நம்முடைய சகோதர -
சகோதரிகளுக்கு வழி காட்டுவோம். மிகவும் சகஜமானதாகும். பக்தி
மார்க்கத்தில் நிறையக் கஷ்டங்கள் உள்ளன. எவ்வளவு ஹடயோகம்,
பிராணாயாமம் முதலானவைகளைச் செய்கின்றனர். நதியில் சென்று
நீராடுகின்றனர். மிகவும் கஷ்டங்களை அடைகின்றனர். நீங்கள்
களைத்து விட்டிருக்கிறீர்கள் எனத் தந்தை இப்போது சொல்கிறார்.
பிராமணர்களுக்குத்தான் புரிய வைக்கப்படுகிறது, நிராகார பரமபிதா
பரமாத்மாவுடன் நம்முடைய சம்மந்தம் என்ன என அவர்கள் புரிந்து
கொள்கின்றனர். சிவபாபா எனும் வார்த்தை அழகாக இருக்கிறது, ருத்ர
பாபா என்று சொல்ல மாட்டார்கள். சிவபாபா என்றுதான் சொல்கின்றனர்.
இது மிகவும் சகஜமானதாகும். பெயர்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.
ஆனால் சிவபாபா என்பது துல்லியமானதாகும். சிவன் என்றால் புள்ளி.
ருத்ரன் என்றால் புள்ளி அல்ல. சிவபாபா எனச் சொல்லவும்
செய்கின்றனர், ஆனால் கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. சிவபாபா
மற்றும் நீங்கள் சாலிக்கிராமங்கள், இப்போது குழந்தைகளாகிய
உங்கள் தலையின் மீது பொறுப்பு இருக்கிறது - காந்திஜி
முதலானவர்கள் இந்த வெளி நாட்டவர் களிடமிருந்து பாரதத்தை
மீட்போம் எனப் புரிந்து கொண்டிருந்தது போல. அவை
எல்லைக்குட்பட்ட விஷயங்கள். தந்தை உங்களைப் பொறுப்பு
மிக்கவர்களாக ஆக்குகிறார். குறிப்பாகப் பாரதத்தையும், பொதுவாக
முழு உலகத்தையும் மாயா இராவணனிடமிருந்து விடுவிக்க வேண்டும்.
இந்த எதிரிகள் அனைவருக்கும் மிகவும் துக்கத்தைக் கொடுத்தனர்,
அவர்கள் மீது வெற்றியடைய வேண்டும் - காந்தி வெளிநாட்டவரை
விரட்டியது போல், இந்த இராவணனும் கூட ஒரு பெரிய வெளி நாட்டவன்.
துவாபரத்தில் இந்த இராவணன் நுழைகிறான், யாருக்கும் தெரிவதில்லை,
இராவணன் வந்து முழு இராஜ்யத்தையும் பறித்துக் கொள்கிறான். இவன்
அனைவரை விடவும் பழைய வெளி நாட்டவன், இவன் பாரதத்தை இப்படி
ஏழையாக ஆக்கியுள்ளான். அவனுடைய வழியில் பாரதம் இப்படிப்
பிரஷ்டாச்சாரியாக (கீழானதாக) ஆகியுள்ளது. இந்த எதிரியை விரட்ட
வேண்டும். இவனை எப்படி ஓட்ட வேண்டும் என்பதற்கு ஸ்ரீமத்
கிடைக்கிறது. நீங்கள் தந்தைக்கு உதவி யாளர்களாக ஆக வேண்டும்.
என்னுடையவர்களாக ஆகி விட்ட பிறகு பிறர் வழியில் நடந்தால்
விழுந்து விடுவீர்கள். உயர் பதவியை அடைய முடியாது. தைரியம்
குழந்தைகளுடையது. . . எனப் பாடவும் படுகிறது. நீங்கள் இறை
சேவகர்கள். இறைவன் வந்து உங்களுக்குச் சேவை செய்கிறார். ஓ பதித
பாவனா வாருங்கள் என அவரை நினைவு செய்கின்றனர். சேவை செய்பவர்கள்
சேவகர்கள் (சர்வண்ட்) எனச் சொல்லப்படுகின்றனர். பாபா எவ்வளவு
அகங்காரமற்றவராக, நிராகாரமாக (உடலற்ற வராக) இருக்கிறார்.
அகங்கார மற்றவராக, நிர்விகாரியாக (விகாரமற்றவர்களாக) ஆவதற்காகக்
கற்பிக்கிறார். தமக்குச் சமமாக ஆக்கி முட்களை மலர்களாக மாற்ற
வேண்டும். நாங்கள் விகாரத்தில் செல்ல மாட்டோம் என உத்திரவாதம்
கொடுக்கப்படுகிறது. இது (விகாரம்) அனைத்திலும் பழைய எதிரியாகும்.
இதன் மீதுதான் வெற்றியடைய வேண்டும். பாபா நாங்கள் தோற்றுப் போய்
விட்டோம் என ஒரு சிலர் எழுதுகின்றனர், சிலரோ தெரிவிப்பதே இல்லை.
பெயரைக் கெடுத்து விடுகின்றனர், சத்குருவின் நிந்தனை
செய்பவர்கள் தன்னுடைய நஷ்டத்தைத்தான் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் - இப்போது நாம் சிவபாபவின்
பேரன் பேத்திகள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள்.
பிரம்மாவும் கூட ஆஸ்தியை சிவபாபாவிடமிருந்து எடுக்கிறார்.
நீங்களும் அவரிடமிருந்து எடுக்கிறீர்கள். பாபாவிடமிருந்து
கல்பத்திற்கு முன்பு ஆஸ்தி எடுத்திருந்தோம் எனக்
குழந்தைகளுக்குத் தெரியும். ஆத்மா புரிந்து கொள்கிறது.
ஆத்மாதான் ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்று எடுக்கிறது.
சரீரத்திற்குப் பெயர் வைக்கப் படுகிறது. சிவபாபா ஞானத்தைக்
கொடுப்பதற்காக மட்டும் (சரீரத்தை) கடன் பெறுகிறார்.
சிவபகவானுடைய மகா வாக்கியம் - பிரம்மாவின் உடல் மூலம். மற்றபடி
அதிகமான விஷயங்களில் போக வேண்டிய தேவையில்லை. ஆத்மா வெளியேறி
விடுகிறது, பிறகு என்ன நடக்கிறது? எப்படி வருகிறது? இந்த
விஷயங்களில் போவதால் ஒரு லாபமும் இல்லை. இது காட்சி தெரிவது
ஆகும். என்ன நடக்கிறதோ அது சாட்சாத்காரம் (காட்சி தெரிவது)
ஆகும். சூட்சும வதனத்தின் வழி இப்போது திறந்திருக்கிறது. பலர்
சென்று வந்தபடி இருக்கின்றனர். இதில் ஞான யோகத்தின் விஷயம்
ஏதும் கிடையாது. போக் வைக்கின்றனர், ஆத்மா வருகிறது, உண்ணவும்,
குடிக்கவும் கொடுக்கின்றனர், இவையனைத்தும் கலந்துரையாடல் ஆகும்.
தந்தைக்குக் குழந்தைகளின் மீது மிகவும் அன்பு இருக்கிறது.
பாப்தாதா நாங்கள் வந்துள்ளோம் எனக் குழந்தைகளாகிய நீங்கள்
சொல்கிறீர்கள், சிவன் மற்றும் பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார்.
பிரம்மாவை பாட்டனுக்கும் பாட்டன் முப்பாட்டன் (கிரேட் கிரேட்
கிரேண்ட் ஃபாதர்) எனத்தான் சொல்கிறோம். எவ்வளவு பெரிய வம்சம்,
இதனைச் சிவபாபா எனச் சொல்ல மாட்டோம். இங்கே இந்த மனிதர்களுடைய
வம்சம் இருக்கிறது. இது சாகாரத்தின் (ஸ்தூல) விஷயமாகும்.
அனைத்து குலத்தையும் விட இது முதல் நம்பர் முக்கியமான குலம்
ஆகும். பெரிய நாடகம் அல்லவா. இப்போது குழந்தைகள் நல்ல விதமாகப்
புரிந்து கொள்கின்றனர். சிலர் புரிந்து கொள்ளாமலும் இருக்கலாம்.
சிவபாபா அனைவரின் தந்தை என்ற அளவிலாவது புரிந்து கொள்கின்றனர்.
ஆஸ்தி தாத்தாவிடமிருந்து கிடைக்க வேண்டும், இவருக்கும் (பிரம்மாவுக்கும்)
கூட அவரிடமிருந்து கிடைக்கிறது. நல்லது, பிரம்மாவையும் மறந்து
விடுங்கள். நிச்சயதார்த்தம் நடந்து விட்டது, வேறென்ன? பிறகு
இடைத்தரகரை நினைவு செய்வது கிடையாது. இவர் இடைத்தரகர் ஆவார்,
நிச்சயதார்த்தம் செய்விக்கிறார். குழந்தைகளே . . .எனச்
சொல்கிறார். ஆத்மாக்களிடம் பேசுகிறார். பாபா, வந்து எங்களைத்
தூய்மையாக்குங்கள் என ஆத்மா நினைவு செய்கிறது. பாபா சொல்கிறார்
- என்னை நினைவு செய்தீர்கள் என்றால் தூய்மையாகிக் கொண்டே
இருப்பீர்கள், வேறு எந்த உபாயமும் கிடையாது. சாந்தி
தாமத்திலிருந்து பிறகு சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். இது
தாய் வீடு, அது மாமியார் வீடாகும். தாய் வீட்டில் நகைகள்
முதலானவை அணிவதில்லை, சட்டத்தில் இடம் இல்லை. அது இன்றைய ஃபேஷன்
ஆகிவிட்டது. நாம் புகுந்த வீடு சென்று இவையனைத்தும் அணிவோம் என
இந்தச் சமயத்தில் நீங்கள் அறிவீர்கள். திருமணத்திற்கு முன்பாக
மணப்பெண் அணிந்திருக்கும் அனைத்தையும் களைந்து விடுவார்கள்.
பழைய உடையை உடுத்துவார்கள். மாமியார் வீடு செல்வதற்காகப் பாபா
நம்மை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் என நீங்கள் அறிவீர்கள்.
நாம் மாமியார் வீட்டில் 21 பிறவிகள் சதா காலத்திற்காக இருக்கப்
போகிறோம். ஆம், அதற்காக முயற்சி செய்ய வேண்டும், தூய்மை யாய்
இருக்க வேண்டும். இல்லற விஷயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல்
இருக்க வேண்டும். இது கடைசிப் பிறவியாகும். முதலில் அவிபச்சாரி
சதோபிர தானமான பக்தியாக இருந்தது, இப்போது தமோபிரதானமாக ஆகி
விட்டது. பம்பாயில் கணேசருக்கு (விநாயகருக்கு) பூஜை நடக்கிறது,
இலட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். தேவதைகளை (மூர்த்திகளை)
படைத்து, அவர்களைப் பாதுகாத்து வைத்திருந்து பிறகு மூழ்கடித்து
விடுகின்றனர், அழித்து விடுகின்றனர். இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு அதிசயமாக இருக்கிறது. இது என்ன வழக்கம் என்பதை
நீங்கள் புரிய வைக்க முடியும். தேவி களுக்குப் பிறவி கொடுத்து,
பூஜை செய்து, உண்ண வைத்து, குடிக்க வைத்து, ஊர்வலம் நடத்தி பின்
மூழ் கடித்து விடுகின்றனர். அதிசயமாக உள்ளது. துளசியின்
திருமணத்தைக் கிருஷ்ணருடன் காட்டுகின்றனர். மிகவும் தாம் தூம்
எனத் திருமணம் செய்கின்றனர். வெளி நாட்டவர்கள் இப்படிப்பட்ட
விஷயங்களைக் கேள்விப்பட்டால் இப்படியெல்லாம் நடந்திருக் கலாம்
எனப் புரிந்து கொள்வார்கள். என்னென்ன விஷயங்களை உருவாக்கி
விட்டிருக்கிறார்கள். இங்கே சூதாட்டத்தின் விஷயம் எதுவுமில்லை.
பாண்டவர்கள் சூதாடினார்கள், திரௌபதியை பணயம் வைத்தார்கள் என
என்னென்ன விஷயங்களை உருவாக்கியுள்ளனர், இதனால் இராஜ யோகத்தின்
விஷயம் முற்றிலும் மறைந்து விடுகிறது. என்னை நினைவு செய்யுங்கள்
என இப்போது தந்தை சொல்கிறார், இது முற்றிலும் சகஜமானதாகும்.
நாம் 21 பிறவிகளுக்குச் சொர்க்கம், பாற்கடலுக்குச் செல்கிறோம்
என்பது புத்தியில் வர வேண்டும். இப்போது இது விஷக்கடலாக உள்ளது.
விஷக்கடலிலிருந்து வெளிப்பட்டுப் பிறகு பாற்கடலுக்கு நீங்கள்
சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுடையது புதிய விஷயங்களாகும்.
மனிதர்கள் கேட்டு அதிசயப்படுவார்கள். நாம் சொர்க்கத்தில்
மிகவும் சுகம் மிக்கவர்களாக இருப்போம் எனக் குழந்தைகளாகிய
நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாம் உலகின் எஜமானாக ஆகிறோம்.
அங்கே நம்முடைய இராஜ்யத்தை யாரும் பறித்துக் கொள்ள முடியாது.
இப்போது எவ்வளவு பிரிவினைகள் இருக்கின்றன, சண்டை போட்ட படி
இருக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும் -
உங்களுடைய உண்மையான எதிரி இராவணன் ஆவான், இவன் மீது நீங்கள்
ஒவ்வொரு கல்பமும் வெற்றியடைகிறீர்கள். மாயையை வென்றவரே உலகை
வென்றவராக ஆகிறீர்கள். இது வெற்றி-தோல்வியின் விளையாட்டாகும்.
நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நீங்கள் அறிவீர்கள். தோற்றுப்
போக முடியாது, வினாசம் முன்னால் நின்றுள்ளது. இரத்த ஆறு ஓடும்.
எவ்வளவு பேர் அனாவசியமாக இறக்கின்றனர். இது நரகம் அல்லது கீழான
(பிரஷ்டாச்சார) உலகம் எனச் சொல்லப்படுகிறது. பதித பாவனா
வாருங்கள் என்று பாடுகின்றனர் - எப்படி நீங்கள் ஆத்மாக்கள்
நட்சத்திரம் போல் இருக்கிறீர்களோ, அப்படி நானும் நட்சத்திரம்
போல் இருக்கிறேன் எனத் தந்தை சொல்கிறார். நானும் கூட நாடகத்தின்
பந்தனத்தில் கட்டுண்டு இருக்கிறேன், யாரும் இதிலிருந்து விடுபட
முடியாது. இல்லா விட்டால் இந்தத் தூய்மையற்ற உலகத்திற்கு
வரவேண்டிய அவசியம் எனக்கென்ன உள்ளது. நான் பரமதாமத்தில்
இருப்பவன் அல்லவா. இந்த நாடகத்தில் ஒவ்வொருவரும் அவரவருடைய
நடிப்பை நடிக்கின்றனர். கவலைப்படக் கூடிய விஷயம் எதுவுமில்லை.
இங்கே நீங்கள் போதையில் கவலையற்று இருக்கிறீர்கள், முற்றிலும்
எளிமையாக இருக்கிறீர்கள். தந்தை எந்தக் கஷ்டமும் கொடுப்பதில்லை.
நினைவு மட்டும் செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும்.
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தைக்
கொடுக்க வந்துள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் நீங்கள் அழைப்பு
கொடுக்க வேண்டும், அவ்வளவு வேலை செய்ய வேண்டும். குழந்தை
களாகிய உங்கள் மீது மிகவும் அதிகமான பொறுப்பு உள்ளது. மாயையும்
கூடப் பாருங்கள் ஒரேயடியாகச் சத்ய நாசம் செய்து விடுகிறது.
பாரதம் எவ்வளவு துக்கம் மிக்கதாக ஆகி விட்டது. துக்கத்தை மாயை
கொடுத்தது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு உதவி
செய்து முட்களை மலர்களாக மாற்ற வேண்டும். நம்முடைய இந்தப்
பிராமணக் குலத்தில் பல வகையான மலர்கள் இருக்கின்றன என நீங்கள்
அறிவீர்கள். சேவை செய்தால் பதவியும் அடைவீர்கள், இல்லை யென்றால்
பிரஜைகளில் சென்று விடுவீர்கள். முயற்சி உள்ளதல்லவா. பல
குழந்தைகள் சேவையில் ஈடுபட்டிருக்கின்றனர். சில குழந்தை களுக்கு
அனுமதி கிடைப்பதில்லை, நிறைய அடிகள் வாங்குகின்றனர், இதில்
தைரியம் தேவை. பயப்படக் கூடாது. துணிவு வேண்டும். மோகத்தை
வென்றவராகவும் இருக்க வேண்டும். மோகமும் ஏதும் குறைந்ததல்ல,
மிகவும் பலம் வாய்ந்தது. செல்வந்தர் வீட்டைச் சேர்ந்தவர்கள்
எனில் பாபா முதலில் தரையைப் பெருக்கு, பாத்திரங்களைத் தேய் எனச்
சொல்வார். பரீட்சை செய்வார் அல்லவா. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட
செல்லக் குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஸ்ரீமத்படி தந்தைக்கு முழுமையிலும் முழுமையான
உதவியாளராக ஆக வேண்டும், பிறர் வழி மற்றும் மனதின் வழியில்
செல்லக் கூடாது. மோகத்தை வென்றவராகி, தைரியம் வைத்து சேவையில்
ஈடுபட வேண்டும்.
2. இப்போது நாம் பிறந்த வீட்டில் இருக்கிறோம், இங்கே எந்த
விதமான ஃபே‘ன் (நாகரீக அலங்காரம்) செய்யக் கூடாது. தன்னை ஞான
ரத்தினங்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். தூய்மையாய்
இருக்க வேண்டும்.