04.07.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உயர்ந்தவர்களாக ஆக வேண்டுமெனில், தனது கணக்கு வழக்குகளை தினமும் பார்க்க வேண்டும், எந்த கர்மேந்திரியமும் ஏமாற்றி விடக் கூடாது, கண்கள் அதிகம் ஏமாற்றக் கூடியது, இதை பாதுகாப்பாக தன் வசத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

கேள்வி:

அனைத்தையும் விட மிகக் கெட்ட பழக்கம் எது? அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்க்கான உபாயம் என்ன?

 

பதில்:

நாக்கிக்கிற்கு அடிமையாவது (ருசி) தான் அனைத்தையும் மிகக் கெட்ட பழக்கமாகும். ஏதாவது நல்ல பொருளை பார்த்து விட்டால் மறைத்து வைத்து சாப்பிட்டு விடுகின்றனர். மறைப்பது என்பது திருட்டாகும். திருட்டு என்ற மாயையும் பலரது நாக்கு, காதை பிடித்து விடுகிறது. இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான சாதனம் என்னவெனில், எங்காவது புத்தி செல்கிறது எனில், தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்குவதற்காக தன்னை அதிகமாக நிந்தித்துக் கொள்ளுங்கள்.

 

ஓம் சாந்தி.

ஆத்ம அபிமானியாகி அமர்ந்திருக்கிறீர்களா? ஒவ்வொரு விசயமும் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் ஆத்ம அபிமானியாகி அமர்ந்திருக்கிறேனா? மற்றும் தந்தையை நினைவு செய்து கொண்டிருக்கிறேனா? சிவசக்தி பாண்டவசேனை என்றும் பாடப்பட்டிருக்கிறது. சிவபாபாவின் சேனை அமர்ந்திருக்கிறது அல்லவா! அந்த உலகாய சேனையில் இளைஞர்கள் மட்டுமே இருப்பர், வயோதிகர்கள் அல்லது குழந்தைகள் இருக்கமாட்டார்கள். இந்த சேனையில் வயோதிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் போன்ற அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். இது மாயாவை வெல்வதற்கான சேனையாகும். ஒவ்வொருவரும் மாயாவை வென்று தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியடைய வேண்டும். மாயை மிகவும் பிரபலமானது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். கர்மேந்திரியங்கள் தான் அனைத்தையும் விட அதிகம் ஏமாற்றுகிறது. இன்று எந்த கர்மேந்திரியம் ஏமாற்றியது? என்பதை சார்ட்டில் எழுதுங்கள். இன்று இன்னாரைப் பார்த்ததும், கை தொட்டு பார்க்க வேண்டும் என்று உள்ளம் விரும்பியது. கண்கள் மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கர்மேந்திரியத்தையும் பாருங்கள் - எந்த கர்மேந்திரியம் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது? இதற்கு சூர்தாஸ் உதாரணமும் கொடுக்கின்றனர். சுய சோதனை செய்து கொள்ள வேண்டும். கண்கள் மிகவும் ஏமாற்றக் கூடியதாகும். நல்ல நல்ல குழந்தைகளையும் மாயை ஏமாற்றி விடுகிறது. சேவை நன்றாக செய்கின்றனர், ஆனால் கண்கள் ஏமாற்றி விடுகிறது. இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் எதிரி அல்லவா! நமது பதவியை குறைவானதாக ஆக்கி விடுகிறது. யார் புத்திசாலி குழந்தைகளோ, அவர்கள் நல்ல முறையில் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். பையில் டைரி இருக்க வேண்டும். எவ்வாறு பக்திமார்க்கத்தில் புத்தி வேறு பக்கம் சென்றால் கிள்ளிக் கொள்வார்களோ அவ்வாறு நீங்களும் தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும். மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கர்மேந்திரியங்கள் ஏமாற்றவில்லை தானே! தூர விலகி விட வேண்டும். நின்று கொண்டு பார்க்கவும் கூடாது. கணவன் மனைவிக்குள் தான் மிகுந்த குழப்பம் ஏற்படுகிறது. பார்த்ததும் காம விகாரத்திற்கான திருஷ்டி ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் சந்நியாசிகள் கண்களை மூடிக் கொண்டு அமர்கின்றனர். சில சந்நியாசிகள் பெண்கள் வந்தால் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்கின்றனர். அந்த சந்நியாசி போன்றவர்களுக்கு என்ன கிடைக்கிறது! அதிகப்பட்சமாக 10-20 லட்சம், கோடி சேர்த்து வைப்பார்கள். இறந்து விட்டால் அவ்வளவு தான்! பிறகு அடுத்த பிறவியில் மீண்டும் சேமிக்க வேண்டியிருக்கும். குழந்தைகளாகிய உங்களுக்கு என்ன வெல்லாம் கிடைக்கிறதோ அது அழிவற்ற ஆஸ்தியாக ஆகிவிடுகிறது. அங்கு செல்வத்திற்கான பேராசை இருக்கவே இருக்காது. தலையை உடைத்துக் கொள்ளும் அளவிற்கு அங்கு எந்த குறையும் இருக்காது. கலியுகத்தின் கடைசி மற்றும் சத்யுகத்தின் ஆரம்பம் இரண்டிற்கும் இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. அங்கு அளவற்ற சுகம் இருக்கும். இங்கு எதுவும் கிடையாது. சங்கம் (சங்கமயுகம்) என்ற வார்த்தையின் கூடவே புருஷோத்தம் என்ற வார்த்தையை அவசியம் எழுத வேண்டும் என்று பாபா எப்பொழுதும் கூறுகின்றார். தெளிவான வார்த்தைகள் பேச வேண்டும். புரிய வைப்பதற்கும் எளிதாகும். மனிதனை தேவதையாக ஆக்கினார் . எனில் அவசியம் சங்கமத்தில் தான் தேவதையாக்குவதற்கு, நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக ஆக்குவதற்கு வருவார் அல்லவா! மனிதர்கள் காரிருளில் இருக்கின்றனர். சொர்க்கம் என்றால் எப்படி இருக்கும்? என்பது தெரியாது. மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்கள் சொர்க்கத்தைப் பார்க்கவே முடியாது. அதனால் தான் உங்களது தர்மம் மிகுந்த சுகம் கொடுக்கக் கூடியது என்று பாபா கூறுகின்றார். அது தான் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. ஆனால் நாமும் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்று சிறிதும் புரிந்து கொள்வது கிடையாது. யாருக்கும் தெரியாது. பாரதவாசிகள் இதை மறந்து விட்டனர். சொர்க்கத்தை இலட்சம் ஆண்டுகள் என்று கூறிவிட்டனர். 3 ஆயிரம் ஆண்டிற்கு முன் சொர்க்கம் இருந்தது என்று கிறிஸ்துவர்கள் கூறுகின்றனர். லெட்சுமி நாராயணனை தேவ தேவதை என்று கூறுகின்றனர். அவசியம் இறைவன் தான் தேவி தேவதைகளை உருவாக்குவார்! ஆக முயற்சி செய்ய வேண்டும். தினமும் தனது கணக்கு வழக்குகளைப் பார்க்க வேண்டும். எந்த கர்மேந்திரியம் ஏமாற்றியது? நாக்கு ஒன்றும் குறைந்தது கிடையாது. ஏதாவது நல்ல பொருளைப் பார்த்து விட்டால் மறைத்து வைத்து சாப்பிட்டு விடுவர். இதுவும் பாவம் என்று புரிந்து கொள்வது கிடையாது. திருட்டு ஆகிவிடுகிறது அல்லவா! அதுவும் சிவபாபாவின் யக்ஞத்தில் திருடுவது மிகவும் கெட்டது. துளியளவு திருடினாலும், லட்சம் திருடினாலும் திருட்டு திருட்டு தான் என்று கூறப்படுகிறது. பலருக்கு மாயை காதைப் பிடித்து திருகிக் கொண்டே இருக்கிறது. இந்த அனைத்து கெட்ட பழக்கங்களையும் நீக்கி விட வேண்டும். தன்னையே நிந்தித்துக் கொள்ள வேண்டும். எதுவரை கெட்ட பழக்கம் உள்ளதோ அதுவரை உயர்ந்த பதவியடைய முடியாது. சொர்க்கத்திற்குச் செல்வது பெரிய விசயம் கிடையாது. ஆனால் இராஜா, ராணி எங்கே!, பிரஜைகள் எங்கே! (ஒப்பிடுதல்) ஆக கர்மேந்திரியங்களை அதிகம் பரிசோதனை செய்ய வேண்டும். எந்த கர்மேந்திரியம் ஏமாற்றுகிறது? கணக்கு எடுக்க வேண்டும். வியாபாரம் அல்லவா! தந்தை புரிய வைக்கின்றார் - என்னிடம் வியாபாரம் செய்யுங்கள். உயர்ந்த பதவி அடைய வேண்டுமெனில் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். தந்தை கட்டளையிடுகிறார், அதிலும் மாயை தடை போடுகிறது. செய்ய விடுவது கிடையாது. தந்தை கூறுகின்றார், தவறுகள் செய்தால் பிறகு அதிகம் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஒருபொழுதும் உயர்ந்த பதவி அடைய மாட்டீர்கள் இதை மறந்து விடாதீர்கள். நான் நரனிலிருந்து நாராயணன் ஆவேன் என்று இப்பொழுது மிகுந்த குஷியுடன் கூறுகிறீர்கள், ஆனால் தன்னிடத்தில் கேட்டுக் கொண்டே இருங்கள் - கர்மேந்திரியங்கள் எதுவும் ஏமாற்றி விடவில்லை தானே?

 

சுய முன்னேற்றம் செய்து கொள்ள வேண்டுமெனில், தந்தை என்ன கட்டளையிடுகின்றாரோ அதனை நடைமுறையில் கொண்டு வாருங்கள். முழு நாளின் கணக்கைப் பாருங்கள். பல தவறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கண்கள் மிகவும் ஏமாற்றுகிறது. இவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், பரிசு கொடுக்க வேண்டும் என்று கருணை ஏற்படும். தனது அதிகமான நேரத்தை வீணாக்கி விடுகின்றனர். மாலையின் மணியாக ஆவதில் அதிக உழைப்பு இருக்கிறது. முக்கியமானது 8 இரத்தினங்கள். 9 இரத்தினங்கள் என்று கூறுகின்றனர். ஒன்று பாபா, மற்றவர்கள் 8 பேர். பாபாவின் அடையாளம் நடுவில் இருக்க வேண்டும் அல்லவா! யாருக்காவது கிரஹச்சாரம் ஏற்பட்டு விட்டால் 9 இரத்தினங்களின் மோதிரத்தை அணிந்து கொள்கின்றனர். இவ்வளவு முயற்சி செய்பவர்களில் 8 பேர் தான் நேர்மையுடன் தேர்ச்சி பெறுபவர்களாக ஆகின்றனர். 8 இரத்தினங்களுக்கு மிகுந்த மகிமை இருக்கிறது. தேக அபிமானத்தில் வருவதன் மூலம் கர்மேந்திரியங்கள் அதிகம் ஏமாற்றி விடுகிறது. தலையில் அதிகம் பாவங்கள் உள்ளது, தானம், புண்ணியம் செய்தால் பாவங்கள் அழிந்து விடும் என்ற கவலை பக்தியிலும் இருக்கிறது அல்லவா! சத்யுகத்தில் கவலைக்கான விசயம் எதுவுமில்லை. ஏனெனில் அங்கு இராவண இராஜ்யம் கிடையாது. அங்கும் இப்படிப்பட்ட விசயம் இருந்தால் பிறகு நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. நீங்கள் அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவதற்காக பகவானே வந்து கற்பிக்கின்றார். பாபாவின் நினைவு வரவில்லையெனில் படிப்பு கற்பிக்கும் ஆசிரியரை நினைவு செய்யுங்கள். ஒரே ஒரு பாபா சத்குருவாக இருக்கின்றார் என்பதை நினைவு செய்யுங்கள். மனிதர்கள் அசுர வழியினால் தந்தையை எவ்வளவு நிந்தனை செய்து விட்டனர். இப்பொழுது தந்தை அனைவருக்கும் உபகாரம் செய்கின்றார். குழந்தைகளாகிய நீங்களும் உபகாரம் செய்ய வேண்டும். யாருக்கும் அபகாரம் செய்யக் கூடாது, கெட்ட பார்வை கூடாது. அது தனக்குத் தானே நஷ்டப்படுத்திக் கொள்வதாகும். அந்த அதிர்வலைகள் (வைப்ரேஷன்) மற்றவர்களையும் பாதிக்கிறது. மிக உயர்ந்த இலட்சியம் என்று தந்தை கூறுகின்றார். தினமும் தனது கணக்கு வழக்குகளைப் பாருங்கள் - எந்த விகர்மமும் செய்யவில்லை தானே? இது விகர்மம் நிறைந்த உலகமாகும், விகர்மம் செய்பவர்களின் வம்சமாகும். விகர்மாஜீத் தேவதைகளின் வம்சம் பற்றி யாருக்கும் தெரியாது. விகர்மாஜீத் வம்சம் இருந்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது, மீண்டும் விகர்ம வம்சம் ஆரம்பமாகிறது என்று தந்தை புரிய வைக்கின்றார். இராஜாக்களும் விகர்மங்கள் செய்து கொண்டே இருக்கின்றனர். அதனால் தான் தந்தை கூறுகின்றார் - கர்மம், அகர்மம், விகர்மத்தின் ரகசியங்களை நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன். இராவண, இராஜ்யத்தில் உங்களது கர்மம் விகர்மமாக ஆகிவிடுகிறது. சத்யுகத்தில் உங்களது கர்மம் அகர்மமாக இருக்கும். விகர்மமாக ஆவது கிடையாது. அங்கு விகாரத்தின் பெயரே கிடையாது. ஞானம் என்ற இந்த மூன்றாவது கண் இப்பொழுது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் மூலம் திரிநேத்திரி (மூன்று கண்களுடையவர்கள்), திரிகாலதர்சிகளாக மூன்று காலத்தையும் அறிந்தவர் ஆகியிருக்கிறீர்கள். எந்த மனிதர்களாலும் ஆக்க முடியாது. உங்களை ஆக்கக் கூடியவர் தந்தை ஆவார். முதலில் ஆஸ்திகர்களாக ஆகின்ற பொழுது தான் திரிநேத்திரி, திரிகாலதர்சிகளாக ஆக முடியும். முழு நாடகத்தின் ரகசியமும் புத்தியில் இருக்கிறது. மூலவதனம், சூட்சுமவதனம், 84 பிறவிச் சக்கரம் அனைத்தும் புத்தியில் இருக்கிறது. பிறகு மற்ற மதங்கள் வருகின்றன. வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றன. அந்த மத ஸ்தாபகர்களை குரு என்று கூற முடியாது. அனைவருக்கும் சத்கதி கொடுக்கக் கூடிய சத்குரு ஒரே ஒருவர் தான். மற்றபடி அவர்கள் சத்கதி செய்வதற்காக வருவது கிடையாது. அவர்கள் தர்ம ஸ்தாபகர்கள் ஆவர். கிறிஸ்துவை நினைப்பதால் சத்கதி கிடைத்து விடாது. விகர்மங்கள் விநாசம் ஆகிவிடாது. எதுவும் ஆகாது. அவர்கள் அனைவரையும் பக்தியின் வரிசையில் வருபவர்கள் என்று கூறலாம். ஞான வரிசையில் நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். நீங்கள் வழிகாட்டிகள். அனைவருக்கும் சாந்திதாமம், சுகதாமத்தின் வழி கூறுகிறீர்கள். தந்தையும் விடுவிப்பவராக, வழிகாட்டியாக இருக்கின்றார். அந்த தந்தையை நினைவு செய்வதன் மூலம் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும்.

 

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தனது விகர்மங்களை விநாசம் செய்வதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதால் ஒருபுறம் முயற்சியும் மற்றொருபுறம் விகர்மம் ஏற்படாமல் இருப்பதிலும் கவனம் கொடுக்க வேண்டும். முயற்சியின் கூடவே விகர்மங்களும் செய்தால் நூறு மடங்கு ஆகிவிடும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விகர்மங்கள் செய்யாமல் இருங்கள். இல்லையெனில் அதிகரித்துக் கொண்டே செல்லும். பெயரையும் கெடுத்து விடுவீர்கள். பகவான் நமக்குக் கற்பிக்கின்றார் என்பதை அறிவீர்கள் என்பதால் எந்த விகர்மமும் செய்யக் கூடாது. சிறிய திருட்டோ அல்லது பெரிய திருட்டோ, பாவம் ஆகிவிடுகிறது அல்லவா! இந்த கண்கள் மிகவும் ஏமாற்றி விடுகிறது. குழந்தைகளின் நடத்தைகளைப் பார்த்து தந்தை புரிந்து கொள்கின்றார், இவர் எனது மனைவி என்ற எண்ணம் ஒருபொழுதும் வரவே கூடாது. நாம் பிரம்மா குமார், குமாரிகள், சிவபாபாவின் பேரன்களாக இருக்கிறோம். நாம் பாபாவிடம் உறுதி எடுத்திருக்கிறோம், ராக்கி அணிந்திருக்கிறோம், பிறகு ஏன் கண்கள் ஏமாற்றுகிறது? நினைவு பலத்தின் மூலம் கர்மேந்திரியங்களின் எந்த ஏமாற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும். அதிக முயற்சி தேவை. தந்தையின் கட்டளைகளை அமல்படுத்தி சார்ட் எழுத வேண்டும். கணவன் மனைவியும் தங்களுக்குள் இந்த உரையாடல் மட்டுமே செய்ய வேண்டும் - நாம் பாபா விடமிருந்து முழு ஆஸ்தி அடைவோம், ஆசிரியரிடத்தில் முழுமையாக படிப்போம். எல்லையற்ற ஞானம் கொடுக்கும் இப்படிப்பட்ட ஆசிரியர் ஒருபொழுதும் கிடைக்கமாட்டார். லெட்சுமி நாராயணனே அறியவில்லை என்கிறபொழுது, அவர்களுக்குப் பின்னால் வருபவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இந்த சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானத்தை சங்கமத்தில் நீங்கள் மட்டுமே அறிவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இதை செய்யுங்கள், இவ்வாறு செய்யுங்கள் என்று பாபா அதிகம் புரிய வைக்கின்றார். ஆனாலும் இங்கிருந்து எழுந்ததும் அவ்வளவு தான்! சிவபாபா எனக்குக் கூறுகின்றார் என்பதைப் புரிந்து கொள்வது கிடையாது. சிவபாபா தான் கூறுகின்றார் என்று எப்பொழுதும் நினையுங்கள். இவரது (பிரம்மாவின்) போட்டோ கூட வைத்துக் கொள்ளாதீர்கள். இந்த ரதத்தை கடனாக எடுத்திருக்கின்றார். இவரும் முயற்சியாளர் ஆவார், நான் பாபா விடமிருந்து ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறேன் என்று இவரும் கூறுகின்றார். உங்களைப் போன்று இவரும் மாணவ வாழ்க்கையில் இருக்கின்றார். நாளடைவில் உங்களுக்கு மகிமை ஏற்படும். இப்பொழுது நீங்கள் பூஜ்ய தேவதைகளாக ஆவதற்காக படிக்கிறீர்கள். பிறகு சத்யுகத்தில் நீங்கள் தேவதைகளாக ஆவீர்கள். இது போன்ற விசயங்களை தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. அதிர்ஷ்டத்தில் இல்லையெனில், சிவபாபா எப்படி வந்து படிப்பு கற்பிக்க முடியும்? நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்ற சந்தேகம் எழுகிறது. ஏற்றுக் கொள்ளவில்லையெனில், பிறகு எப்படி நினைவு செய்ய முடியும்? விகர்மங்கள் விநாசம் ஆகாது. இவையனைத்தும் வரிசைக்கிரமமாக இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தாச தாசிகளும் தேவை அல்லவா! இராஜாக்களின் தாசிகளுக்கும் சீதனம் கிடைக்கும். இங்கேயே எவ்வளவு தாசிகளை வைத்துக் கொள்கின்றனர் எனில், சத்யுகத்தில் எவ்வளவு பேர் இருப்பர்! ஆக தாச தாசி ஆகுமளவிற்கு லேசான முயற்சிகள் செய்யக் கூடாது. பாபா, இப்பொழுது நான் இறந்து விட்டால் என்ன பதவி கிடைக்கும்? என்று பாபாவிடத்தில் கேளுங்கள். பாபா உடனேயே கூறிவிடுவார். தனது கணக்கை தானே பார்த்துக் கொள்ளுங்கள். கடைசியில் வரிசைக்கிரமமாக கர்மாதீத் நிலை ஏற்பட்டு விடும். இது உண்மையான வருமானமாகும். அந்த வருமானத்தில் இரவு பகல் எவ்வளவு பிசியாக இருக்கின்றனர்! வணிகர்கள் ஒரு கையில் சாப்பிட்டுக் கொண்டே மறு கையில் போனில் பேசிக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். இப்படிப்பட்ட மனிதன் ஞானத்திற்கு வர முடியுமா? என்று கூறுங்கள். எங்களுக்கு எங்கு நேரம் இருக்கிறது? என்று கேட்கின்றனர். அட, உண்மையான இராஜ்யம் கிடைக்கிறது. தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள் போதும், விகர்மம் விநாசம் ஆகிவிடும். அஷ்ட தேவதைகளை நினைவு செய்கின்றனர் அல்லவா! அவர்களது நினைவின் மூலம் எதுவும் கிடைத்து விடாது. பாபா அடிக்கடி ஒவ்வொரு விசயத்தையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். இந்த விசயத்தைப் பற்றி புரிய வைக்கவில்லை என்று யாரும் கூறிவிடக் கூடாது. குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் செய்தி கூற வேண்டும். விமானத்திலிருந்தும் நோட்டீஸ் போடுவதற்கான முயற்சி செய்ய வேண்டும். சிவபாபா இவ்வாறு கூறுவதாக அதில் எழுதுங்கள். பிரம்மாவும் சிவபாபாவின் குழந்தை ஆவார். பிரஜாபிதா எனில், அவரும் தந்தை ஆகிவிடுகிறார், இவரும் தந்தை ஆவார். சிவபாபா என்று கூறியதும் பல குழந்தைகளுக்கு ஆனந்தக் கண்ணீர் வந்து விடுகிறது. ஒருபொழுதும் பார்த்திருக்கவும் மாட்டார்கள். பாபா, எப்பொழுது வந்து உங்களை சந்திப்பது? என்று எழுதுகின்றனர், பாபா பந்தனத்திலிருந்து விடுவியுங்கள். பலருக்கு பாபாவின், பிறகு இளவரசரின் சாட்சாத்காரம் ஏற்படுகிறது. நாட்கள் செல்லச்செல்ல பலருக்கு சாட்சாத்காரம் ஏற்படும், இருப்பினும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பகவானை நினைவு செய்யுங்கள் என்று மனிதர்களுக்கு இறக்கும் தருவாயிலும் கூறுகின்றனர். கடைசியில் அதிகம் முயற்சி செய்வீர்கள், நினைவில் மூழ்கிவிடுவீர்கள், இதையும் நீங்கள் பார்ப்பீர்கள். குழந்தைகளே! நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் முயற்சி செய்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று தந்தை வழி கூறுகின்றார். தந்தையை நினைவு செய்து விகர்மங்களை விநாசம் செய்தால் கடைசியில் வந்தாலும் முன்னால் செல்ல முடியும். எவ்வாறு இரயில் வண்டி தாமதாக சென்று கொண்டிருத்தாலும் வேகமாகச் சென்று ஈடு செய்து விடுகிறது அல்லவா! உங்களுக்கும் இங்கு நேரம் கிடைக்கிறது, ஆகையால் வேகமாக முயற்சி காலதாமத்தை ஈடு செய்து கொள்ளுங்கள். இங்கு வந்து வருமானம் செய்வதில் ஈடுபட்டு விடுங்கள். இவ்வாறு செய்யுங்கள், தனக்கு நன்மை செய்து கொள்ளுங்கள் என்று பாபா வழியும் கூறுகின்றார். தந்தையின் ஸ்ரீமத் படி நடங்கள். விமானத்திலிருந்து நோட்டீஸ் போடுங்கள். இவர்கள் சரியான செய்தியைத் தான் கூறிக் கொண்டிருக் கின்றனர் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாரதம் எவ்வளவு உயர்ந்தது! பாபா எங்களுக்கு தெரியாமல் போய் விட்டது என்று யாரும் கூறிவிடக் கூடாத அளவிற்கு அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்காண முக்கிய சாரம்:

1) புத்திசாலிகளாகி தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும் - கண்கள் ஏமாற்றுவது இல்லை தானே? எந்த கர்மேந்திரியத்திற்கும் வசமாகி தலைகீழான அ(தவறான) காரியம் செய்யக்கூடாது. நினைவு பலத்தின் மூலம் கர்மேந்திரியங்களின் ஏமாற்றத்திலிருந்து விடுபட வேண்டும்.

2) இந்த உண்மையான வருமானத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும். கடைசியில் வந்தாலும் தீவிர முயற்சி செய்து முன்னேற்றம் அடைய வேண்டும். இது விகர்மங்களை விநாசம் செய்யக் கூடிய நேரமாகும். ஆகையால் எந்த விகர்மமும் செய்யக் கூடாது.

 

வரதானம்:

ஒவ்வொரு நிலையிலும் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஏர்கண்டிசன் டிக்கெட்டினுடைய அதிகாரி ஆகுக.

 

எந்தக் குழந்தைகள் இங்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருக்கின்றார்களோ, அவர்களுக்கே ஏர்கண்டிசன் டிக்கெட் கிடைக்கின்றது. என்ன சூழ்நிலை வந்தாலும், என்ன பிரச்சனை வந்தாலும் சரி, ஆனால், ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு விநாடியில் கடந்து செல்வதற்கான சான்றிதழ் பெற வேண்டும். எவ்வாறு அந்த டிக்கெட்டிற்காக பணம் கொடுக்கின்றீர்களோ, அவ்வாறு இங்கு சதா வெற்றியாளர் ஆகக்கூடிய பணம் தேவை. இதன் மூலமே டிக்கெட் பெற முடியும். இந்த பணத்தை அடைவதற்கு உழைக்க வேண்டிய அவசியமில்லை, சதா தந்தையின் துணையில் இருங்கள், அப்பொழுது அளவற்ற வருமானம் சேமிப்பு ஆகிக்கொண்டே இருக்கும்.

 

சுலோகன்:

எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் சரி, சூழ்நிலை கடந்துவிடும், ஆனால் குஷி மறைந்து விடக்கூடாது.

 

ஓம்சாந்தி