04-09-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இப்போது இந்த உலகத்தின் நிலை நம்பிக்கையற்றதாக இருக்கிறது, அனைவரும் இறந்து விடுவார்கள், ஆகையால் இதிலிருக்கும் பற்றுதலை நீக்கி விடுங்கள், தந்தையாகிய என் ஒருவரை நினைவு செய்யுங்கள்.

கேள்வி:

சேவையில் ஆர்வம் ஏற்படாததற்கு காரணம் என்ன?

பதில்:

1) இலட்சணம் சரியாக இல்லையெனில், தந்தையை நினைவு செய்ய வில்லையெனில் சேவையில் ஆர்வம் ஏற்படாது. ஏதாவது தவறான காரியங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், ஆகையால் சேவை செய்ய முடிவதில்லை. 2) தந்தையின் முதல் கட்டளையாகிய நீங்கள் இறந்து விட்டால் உலகம் இறந்தது போல என்பதை நடை முறைவடுத்துவது கிடையாது. புத்தியானது தேகம் மற்றும் தேக சம்பந்தங்களிடம் மாட்டிக் கொண்டிருந்தால் சேவை செய்ய முடியாது.

பாடல்:
ஓம் நமச் சிவாய .....

ஓம் சாந்தி.
பக்தி மார்க்கத்தின் இந்த பாடலை கேட்டீர்கள். சிவாய நமஹ என்று கூறுகின்றனர். சிவனின் பெயரை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். தினமும் சிவனின் கோயிலுக்குச் செல்வர், மேலும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடுவர். புருஷோத்தம மாதமும் இருக்கிறது, புருஷோத்தம ஆண்டும் இருக்கிறது. சிவாய நமஹ என்று தினமும் கூறிக் கொண்டே இருக்கின்றனர். சிவ பூஜாரிகள் பலர் இருக்கின்றனர். படைப்பவர் சிவன், உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான். பதீத பாவன், பரம்பிதா பரமாத்மா சிவன் என்றும் கூறுகின்றனர். தினமும் பூஜையும் செய்கின்றனர். இது சங்கமயுகம், புருஷோத்தம் (உத்தம புருஷோத்தமர்) ஆகக் கூடிய யுகம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உலகாய படிப்பின் மூலம் ஏதாவது உயர்ந்த பதவி அடைவார்கள் அல்லவா! இந்த லெட்சுமி நாராயணன் இந்த பதவியை எப்படி அடைந்தனர்? உலகிற்கு எஜமானர்களாக எப்படி ஆனார்கள்? என்பது யாருக்கும் தெரியாது. சிவாய நமஹ என்றும் கூறுகின்றனர். நீங்கள் தான் தாய், தந்தையாக ........ தினமும் மகிமை பாடுகின்றனர். ஆனால் அவர் எப்போது வந்து தாய், தந்தையாக ஆகி ஆஸ்தி கொடுக்கின்றார்? என்பது தெரியாது. உலக மனிதர்கள் எதையும் அறியவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு ஏமாற்றம் அடைகின்றனர். அமர்நாத்திற்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். எவ்வளவு ஏமாற்றம் அடைகின்றனர்! யாரிடமாவது இப்படி கூறினால் கோபப்படுவார்கள். மிகச் சில குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளுக்குள் அதிக குஷியிருக்கிறது. பாபா! எப்போது உங்களை அறிந்து கொண்டேனோ அப்போதிலிருந்து குஷிக்கு அளவே கிடையாது என்று எழுதுகின்றனர். சில அசௌகரியங்கள் நடந்தாலும் கூட குஷியுடன் இருக்க வேண்டும். நான் தந்தை யினுடையவனாக ஆகிவிட்டேன் என்பதை மறந்து விடக் கூடாது. நாம் சிவபாபாவை அடைந்து விட்டேன் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆக அளவற்ற குஷியுடன் இருக்க வேண்டும். மாயை அடிக்கடி மறக்க வைத்து விடுகிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது, பாபாவை நான் அறிவேன் என்று எழுதவும் செய்கின்றனர், இருப்பினும் நாளடைவில் குளிர்ச்சியாகி விடுகின்றனர். 6-8 மாதம், 2-3 ஆண்டுகள் வர வில்லையெனில் முழு நிச்சய புத்தியில்லை, முழு போதை ஏற்படவில்லை என்று பாபா புரிந்து கொள்வார். எல்லையற்ற தந்தையிடமிருந்து 21 பிறவி களுக்கான ஆஸ்தி கிடைக் கிறது என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டால் குஷிக்கான போதை அதிகம் இருக்க வேண்டும். அரசர் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறார், என்னை அரசர் வாரிசாக்க விரும்பு கின்றார், அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது அந்த குழந்தைக்குத் தெரிந்து விட்டால் அந்த குழந்தைக்கு அதிக குஷி இருக்கும் அல்லவா! நான் அரசரின் குழந்தையாகப் போகிறேன், அல்லது ஏழை குழந்தையை செல்வந்தர் தத்தெடுக்கும் போது குஷி ஏற்படும் அல்லவா! இன்னார் என்னை தத்தெடுக்கிறார் என்று அறிந்து கொண்டால் ஏழ்மைக் கான கவலை மறந்து விடுகிறது. அது ஒரே ஒரு பிறப்பிற்கான விசயமாகும். இங்கு குழந்தை களுக்கு 21 பிறவிகளுக்கான குஷி இருக்கிறது. எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும், மேலும் மற்றவர்களுக்கும் வழி கூற வேண்டும். சிவபாபா, பதீத பாவன் வந்திருக் கின்றார். நான் உங்களது தந்தை என்று புரிய வைக்கின்றார். நான் உங்களது எல்லையற்ற தந்தை என்று வேறு எந்த மனிதனும் கூற முடியாது. நான் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு வந்திருந்தேன், என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்ற இதே வார்த்தையைத் தான் கூறியிருந்தேன் என்று புரிய வைக்கின்றார். பதீத பாவன் தந்தையாகிய என்னை நினைவு செய்தால் நீங்கள் தூய்மை யில்லாத நிலையிலிருந்து தூய்மை யாக ஆவீர்கள். தூய்மை ஆவதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. ஒரே ஒரு தந்தை தான் பதீத பாவன் ஆவார். கிருஷ்ணரை பகவான் என்று கூற முடியாது. கீதையின் பகவான் பதீத பாவனராகிய, பிறப்பு இறப்பற்ற ஒரே ஒருவர் தான். முதன் முதலில் இந்த விசயத்தை எழுதி வையுங்கள். பெரிய பெரிய மனிதர்கள் எழுதி யிருப்பதைப் பார்க்கின்ற பொழுது இது சரியே என்று புரிந்து கொள்வர். சாதாரண மனிதன் எழுதியதைப் பார்க்கின்ற போது பிரம்மா குமாரிகள் இவரை மந்திரம் போட்டு விட்டனர், அதனால் எழுதியிருக் கிறார் என்று கூறுவர். பெரிய மனிதர்களுக்கு இவ்வாறு கூற மாட்டார்கள். நீங்கள் என்ன கூறினாலும் வாய் சிறியதாக இருந்தாலும் பகவான் வந்து விட்டார் என்ற பெரிய விசயத்தை கூறுகின்றனர் என்று புரிந்து கொள்வர். பகவான் வந்து விட்டார் என்று குழந்தைகளாகிய நீங்கள் வெறுமனே கூறி விடக் கூடாது, இதன் மூலம் யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள், அதிகம் கேலி செய்வார்கள். இரண்டு தந்தைகள் இருக்கின்றனர் என்று புரிய வைக்க வேண்டும். முதலிலேயே பகவான் வந்து விட்டார் என்று வெளிப்படையாக கூறி விடக் கூடாது. ஏனெனில் இன்றைய நாட்களில் பகவான் என்று கூறிக் கொள்பவர்கள் பலர் உருவாகி விட்டனர். அனைவரும் தன்னை பகவானின் அவதாரம் என்று நினைக் கின்றனர். ஆக யுக்தியாக இரண்டு தந்தையின் இரகசியத்தைப் புரிய வைக்க வேண்டும். ஒருவர் எல்லைக்குட்பட்ட தந்தை, மற்றொருவர் எல்லையற்ற தந்தை. தந்தையின் பெயர் சிவன். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை எனில் அவசியம் குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுத்திருக்க வேண்டும். சிவஜெயந்தியும் கொண்டாடுகிறீர்கள். அவர் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார் எனில் அவசியம் நரகம் விநாசம் ஆக வேண்டும். அதற்கான அடையாளம் தான் இந்த மகாபாரத யுத்தமாகும். மற்றபடி பகவான் வந்திருக்கிறார் என்று கூறுவதன் மூலம் யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள். தண்டோரா போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். இவ்வாறு தலை கீழான சேவை செய்வதன் மூலம் சேவையில் மேலும் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. ஒருபுறம் பகவான் வந்து விட்டார், பகவான் கற்பிக்கிறார் என்று கூறுகிறீர்கள், பிறகு சென்று திருமணம் செய்து கொள்கிறீர்கள். உங்களுக்கு என்ன ஆனது? என்று மனிதர்கள் கேட்பார்கள். பகவான் கற்பிக்கிறார் என்று நீங்கள் கூறினீர்கள். நாம் என்ன கேட்டோமோ அதை கூறிவிட்டோம் என்று கூறுவர். தனது குழந்தைகள் மூலமாகவே பல விதமான தடைகள் ஏற்படுகின்றன, எவ்வாறு இந்து தர்மத்தினர்கள் தன்னையே சவுக்கால் அடித்துக் கொண்டனர் அல்லவா! உண்மையில் தேவி தேவதை தர்மத்தைச் சார்ந்தவர்கள், ஆனால் நாம் இந்துக்கள் என்று கூறிக் கொண்டனர். தன்னையே அடித்துக் கொண்டனர் அல்லவா! நாம் தான் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், அப்போது உயர்வான செயல், உயர்ந்த தர்மத்துடன் இருந்தோம் என்பதை இப்போது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அசுர வழியினால் தர்மமும் கீழானதாக, செயல்களும் கீழானதாக ஆகிவிட்டது. மாயையின் அசுர வழியினால் நாம் நமது தர்மத்தை நிந்திக்க ஆரம்பித்து விட்டோம். அதனால் தான் அவர்கள் அசுர வம்சத்தினர்கள் என்று சுயம் பாபா கூறியிருக்கின்றார். இவர்கள் தெய்வீக வம்சத்தினர்கள், இவர்களுக்குத் தான் நான் இராஜயோகம் கற்பிக்கிறேன். இப்போது கலியுகமாகும். யார் வந்து இந்த ஞானத்தை கேட்கிறார்களோ அவர்கள் அசுரனிலிருந்து தேவதைகளாக ஆகிறார்கள். இந்த ஞானம் தேவதை ஆவதற்காகத் தான். 5 விகாரங்களை வெல்வதன் மூலம் தேவதைகளாக ஆவீர்கள், மற்றபடி அசுரர்கள் மற்றும் தேவதை களுக்குள் எந்த யுத்தமும் நடைபெற வில்லை. இதிலும் தவறு செய்து விட்டனர், யார் பக்கம் பகவான் இருந்தாரோ அவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்று காண்பிக்கின்றனர். அதில் கிருஷ்ணரின் பெயர் கொடுத்து விட்டனர். உண்மையில் நீங்கள் மாயையிடம் யுத்தம் செய்கிறீர்கள். தந்தை எத்தனை விசயங்களை அமர்ந்து புரிய வைக்கின்றார், ஆனால் அந்த அளவிற்கு தமோபிரதானமாக இருப்பதால் முற்றிலும் புரிந்து கொள்வதே கிடையாது. தந்தையை நினைவு செய்ய முடிவது கிடையாது. எனது புத்தி தமோபிரதானமாக இருக்கிறது, அதனால் தான் நினைவு நிலைத் திருப்பது கிடையாது என்பதையும் புரிந்து கொள்கின்றனர், அதனால் தான் தலைகீழான காரியம் செய்து கொண்டே இருக்கின்றனர். நல்ல நல்ல குழந்தைகளும் கூட முற்றிலும் நினைவு செய்வது கிடையாது. இலட்சணங்கள் மாறுவதே கிடையாது. ஆகையால் சேவை யில் ஆர்வம் ஏற்படுவது இல்லை. தந்தை கூறுகின்றார் - தேக சகிதமாக தேகத்தின் சம்மந்தங்களை கொன்றுவிடுங்கள் அதாவது மறந்து விடுங்கள். கொன்றுவிடுங்கள் என்ற வார்த்தை உண்மையிலேயே கிடையாது. நீங்கள் இறந்து விட்டால் உலகமே இறந்து விடும் என்று கூறப்படுகிறது. இதை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். புத்தியினால் மறந்து விட வேண்டும், நீங்கள் என்னுடையவர்களாக ஆகிவிட்டபடியால் இவை அனைத் தையும் மறந்து விடுங்கள், ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள். யாருக்காவது நோய் முற்றி விட்டால் வாழ்வதில் நம்பிக்கை இழந்து விடுவர், பிறகு அவர்கள் மீதிருக்கும் பற்றையும் போக்க வேண்டியிருக்கும். இராம் இராம் என்று கூறுங்கள் என்று அவருக்கு கூறுவர். இந்த உலகின் நிலையும் நம்பிக்கையற்றதாக ஆகிவிட்டது என்ற தந்தையும் கூறுகின்றார். இது அழிந்தே தீரும், அனைவரும் இறந்து விடுவர், ஆகையால் அவர்கள் மீதிருக்கும் பற்றுதலை நீக்கி விடுங்கள். அவர்கள் ராம் ராம் என்பதில் மூழ்கியிருப்பர். இங்கு ஒருவருக்கான விசயம் கிடையாது. முழு உலகமும் அழிந்து போய்விடும். ஆகையால் உங்களுக்கு என் ஒருவரை நினைவு செய்யுங்கள் என்ற ஒரே ஒரு மந்திரம் கொடுக்கிறேன். வித விதமான முறையில் எவ்வளவு புரிய வைத்துக் கொண்டே இருக்கிறேன்! இப்போது புருஷோத்தம மாதம் வந்திருக்கிறது எனில் புருஷோத்தம யுகத்தைப் பற்றியும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். புரிய வைப்பதில் மிகுந்த புத்திசாலித்தனம் தேவை. நல்ல தாரணை தேவை. எந்த பாவ காரியமும் செய்யக் கூடாது. கேட்காமல் எந்த பொருளாவது எடுத்தால், சாப்பிட்டால் இதுவும் மிக குப்தமான பாவமாகும். மிகக் கடுமையான நியமம் இருக்கிறது, பாவம் செய்து விட்டு கூறாமல் இருந்தால் பாவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இங்கு குழந்தை களாகிய நீங்கள் புண்ணிய ஆத்மாக்களாக ஆக வேண்டும். நமக்கு புண்ணிய ஆத்மாக்களின் மீது அன்பும், பாவ ஆத்மாக்களின் மீது விரோதமும் இருக்கிறது. நல்ல செயல் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை பக்தி மார்க்கத்திலும் அறிவர். அதனால் தான் தானம், புண்ணியம் போன்ற நல்ல காரியங்கள் செய்கின்றனர் அல்லவா! இது நாடகமாகும், இருப்பினும் நல்ல செயல்களின் பலனாக பகவான் நல்லதையே கொடுப்பார் என்று கூறுகின்றனர். நான் இந்த தொழிலை மட்டுமே செய்வது கிடையாது என்று தந்தை கூறுகின்றார். இவை அனைத்தும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. நாடகப்படி தந்தை அவசியம் வர வேண்டியிருக்கிறது.

நான் வந்து அனைவருக்கும் வழி கூற வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். மற்றபடி இதில் கருணை போன்ற எந்த விசயங்களும் கிடையாது. பாபா, உங்களது கருணை இருந்தால் நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று சிலர் எழுதுகின்றனர். நான் ஒருபோதும் கருணை காட்டுவது கிடையாது, இது பக்தி மார்க்கத்தின் விசயமாகும் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் தன் மீது கருணை காட்டிக் கொள்ள வேண்டும். தந்தையை நினைவு செய்தால் விகர்மங்கள் விநாசம் ஆகும். பக்தி மார்க்கத்தின் விசயங்கள் ஞான மார்க்கத்தில் இருக்காது. ஞான மார்க்கம் என்றாலே படிப்பு. ஆசிரியர் யார் மீதும் கருணை காண்பிக்கமாட்டார். ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். தந்தை ஸ்ரீமத் கொடுக் கின்றார் எனில் அதன்படி நடக்க வேண்டும் அல்லவா! ஆனால் தனது வழிப்படி நடக்கின்ற காரணத்தினால் எந்த சேவையும் செய்வது கிடையாது. குழந்தைகள் முற்றிலும் புண்ணிய ஆத்மாவாக ஆக வேண்டும். சிறிதும் எந்த பாவமும் ஏற்படக் கூடாது. சில குழந்தைகள், தான் செய்த பாவத்தை கூறுவதே கிடையாது. அவர்கள் ஒருபோதும் உயர்ந்த பதவி அடையவே முடியாது என்று தந்தையும் கூறுகின்றார். மேலே ஏறினால் ......... என்று பாடப்பட்டிருக்கிறது. மிக உயர்ந்த பதவியிருக்கிறது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். கீழே விழுந்து விட்டால் எந்த வேலைக்கும் உதவாதவர்களாக ஆகிவிடுவர். முதல் நம்பரில் வருவது அசுத்த அகங்காரமாகும், பிறகு காமம், கோபம், பேராசையும் குறைந்தது கிடையாது. பேராசை, பற்று தலும் கூட முற்றிலுமாக அழித்து விடுகிறது. குழந்தைகளின் மீது பற்றுதல் இருந்தால் அவர்களது நினைவு வந்து கொண்டே இருக்கும். எனக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்று ஆத்மா கூறுகிறது, வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது - அதற்கான முயற்சி செய்ய வேண்டும். இவை அனைத்தும் அழியப் போகிறது. விநாசம் எதிரில் இருக்கிறது, ஆஸ்தி அடைய முடியாமல் போய் விடும். ஆகையால் இதன் மீது ஏன் பற்று வைக்க வேண்டும்? இவ்வாறு தனக்குள் உரையாடிக் கொள்ள வேண்டும். முழு உலகையும் புத்தியினால் மறக்க வேண்டும். இவை அனைத்தும் அழிந்தே ஆக வேண்டும். ஒரே அடியாக அழிந்து விடும் அளவிற்கு புயல்கள் வரும். எங்காவது தீ பற்றிக் கொண்டால், காற்றும் வேகமாக அடிக்கும் போது உடனேயே முற்றிலும் அழித்து விடுகிறது. அரை மணி நேரத்தில் 100 - 150 குடிசைகளை அழித்து விடுகிறது. முள் காடு தீ பற்றி எரிந்து போக வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இல்லையெனில் இவ்வளவு மனிதர்கள் எப்படி இறப்பார்கள்? நல்ல குழந்தைகள், நல்ல இலட்சணமுடைய குழந்தை கள் எனில் சேவையும் நன்றாக செய்வார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குள் போதை இருக்க வேண்டும். முழு போதையும் கடைசியில் கர்மாதீத நிலையின் போது இருக்கும். இருப்பினும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறீர்கள். காசி சிவன் கோயிலுக்கு பலர் செல்கின்றனர். ஏனெனில் அவர் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான், அங்கு சிவ பக்தி அதிகம் இருக்கிறது. அங்கு சென்று அவர்களுக்குப் புரிய வையுங்கள் என்று பாபா கூறிக் கொண்டே இருக்கிறார். சிவபகவான் தான் இந்த லெட்சுமி நாராயணனுக்கு இந்த ஆஸ்தியை கொடுக்கிறார். சங்கமத் தில் தான் இந்த ஆஸ்தியை அவரிடமிருந்து அடைந்திருக்கின்றனர். இதை புரிய வைக்கும் போது பிரம்மா, சரஸ்வதி பற்றியும் புரிய வைக்க வேண்டியிருக்கும். சித்திரங்களின் மூலம் மிகத் தெளிவாக புரிய வைக்க முடியும். இவர்களுக்கு இந்த இராஜ்யம் எப்படி கிடைத்தது? இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யத்தில் பக்தி மார்க்கம் கிடையாது. பக்தி அநாதி (தொன்று தொட்டு உள்ளது) என்று கூறுவர். இப்போது உங்களுக்கு எவ்வளவு ஞானம் கிடைக்கிறது எனில் போதை அதிகரிக்க வேண்டும் அல்லவா! நமக்கு 21 பிறவிகளுக்கான இராஜ்ய பாக்கியம் கொடுப்பதற்காக பகவான் கற்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் மாணவர் கள் அல்லவா! இந்த பிரம்மா குமாரிகள் நமக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள் என்ற நிச்சயம் உடையவர்களின் நிலை எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட தந்தையை முதலில் சந்திக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். எதுவரை முழு நிச்சயம் இல்லையோ அதுவரை முன்னேறமாட்டார்கள். நிச்சயமுடையவர்கள் உடனேயே ஓடி வந்து விடுவார்கள். இப்படிப் பட்ட தந்தையிடம் நாம் சென்று சந்திக்க வேண்டும், விடவே மாட்டேன். பாபா, நாங்கள் உங்களுடையவராக ஆகிவிட்டோம், நாங்கள் எங்கும் செல்லமாட்டோம்! அன்பு செலுத்தினாலும் சரி, அடித்தாலும் சரி என்ற பாடலும் இருக்கிறது அல்லவா! இந்த பைத்தியம் உங்களது வாசலை விடவே மாட்டேன். இருந்தாலும் அமர வைக்க முடியாது. சேவைக்கு அனுப்ப வேண்டியிருக்கும். இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று இருக்க வேண்டும். இவ்வாறு எழுதியும் கொடுக்கின்றனர், வெளியில் சென்ற பிறகு மாயையின் சக்கரத்தில் வந்து விடுகின்றனர். மாயை அந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறது. மாயையின் அதிக தடைகள் ஏற்படுகின்றன. சிறிய தீபத்திற்கு மாயையின் எவ்வளவு புயல்கள் வருகின்றன! இந்த பாடல்களின் சாரத்தையும் தந்தை வந்து புரிய வைக்கின்றார். உங்களுக்கு புருஷோத்தம யுகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்களுக்கு புருஷோத்தம மாதம் கடந்து விட்டது. தூய்மை இழந்தவர்களை தூய்மை ஆக்குவதற்காக நான் இந்த சங்கம யுகத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார்.

நல்லது. நாளுக்கு நாள் சேவைக்காக புதுப் புது யுக்திகள் உருவாகிக் கொண்டே இருக்கும். நல்ல நல்ல சித்திரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஒரு காரியத்திற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டால் அது நல்லதாகத் தான் இருக்கும் என்று கூறப்படு கிறது அல்லவா! தயாராக சாதனங்கள் கிடைக்கின்ற படியால் உடனேயே மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஏணிப் படி மிகவும் நன்றாக இருக்கிறது. நான் தூய்மையாக இருக்கிறேன் என்று இந்த நேரத்தில் யாரும் சொல்ல முடியாது. தூய்மையான உலகம் என்று சத்யுகத்தை கூறலாம். தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக இந்த லெட்சுமி நாராயணன் இருக்கின்றனர். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) எந்தவொரு பெரிய அல்லது சூட்சுமமான பாவமும் செய்து விடக் கூடாது என்பதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒருபோதும் எந்த பொருளும் மறைத்து எடுத்து விடக கூடாது. பேராசை, பற்றுதல் மீதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2) முழுமையாக அழிவை (நாசம்) ஏற்படுத்தும் அசுத்த அகங்காரத்தை தியாகம் செய்ய வேண்டும். ஒரு தந்தையைத் தவிர வேறு யார் நினைவும் வரக் கூடாது - இதே முயற்சியை செய்ய வேண்டும்.

வரதானம்:

சூட்சும எண்ணங்களின் பந்தனத்தில் இருந்தும் விடுபட்டு உயர்ந்த நிலையின் அனுபவத்தை செய்யக்கூடிய பந்தனமற்றவர் ஆகுக.

குழந்தைகள் எந்தளவு பந்தனமற்றவர்களாக இருக்கின்றார்களோ, அந்தளவு உயர்ந்த நிலையில் நிலைத்திருக்க முடியும். ஆகையினால், எண்ணம், சொல் மற்றும் செயலில் சூட்சுமத் தில் கூட ஏதாவது நூலிழை மாட்டியிருக்கவில்லை தானே என்று சோதனை செய்யுங்கள். ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் நினைவு வரக்கூடாது. தன்னுடைய தேகம் நினைவில் வந்தது என்றால் தேகத்துடன் தேகத்தின் சம்பந்தம், பொருள், உலகம் ஆகிய அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வந்துவிடும். நான் பந்தனமற்றவர் - இந்த வரதானத்தை நினைவில் வைத்து முழு உலகத்தை மாயாவின் வலையில் இருந்து விடுவிக்கும் சேவை செய்யுங்கள்.

சுலோகன்:

ஆத்ம அபிமானி ஸ்திதி மூலம் உடல் மற்றும் மனதின் குழப்பத்தை சமாப்தி செய்யக் கூடியவர்களே அசையாத நிலையில் இருப்பார்கள்.