04.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         அவ்யக்த பாப்தாதா,

ரிவைஸ்    29.03.1986    மதுபன்


 

இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுடன் பாப்தாதாவின் உரையாடல்

 

இன்று பாப்தாதா நாலாபுறத்தின் இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளை வதனத்தில் இமர்ஜ் செய்து, குழந்தைகள் அனைவரின் விசேசதாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் விசேச ஆத்மாக்கள், அதனால் தான் பாபாவுடையவர்களாக ஆகியிருக் கிறார்கள், அதாவது சிரேஷ்ட பாக்கியவான் ஆகியிருக்கிறார்கள். அனைவருமே விசேச மானவர்கள் தாம் என்றாலும் பிறகும் கூட நம்பர்வார் என்று தான் சொல்வார்கள். ஆக, இன்று பாப்தாதா இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளை விசேச ரூபத்தில் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்ச காலத்தில் நாலாபுறமும் உள்ள பலவிதமான பழக்க-வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் இருந்த போதும் ஒரு நம்பிக்கையின் ஒரே வழிமுறையைப் பின்பற்று பவர்களாக ஆகியிருக்கின்றனர். பாப்தாதா விசேசமாக இரண்டு விசேசதாக்களை பெரும்பான்மையினரிடம் பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்று, சிநேகத்தின் சம்மந்தத்தில் மிக விரைவாகக் கட்டுண்டு விட்டனர். சிநேகத்தின் சம்மந்தத்தில், ஈஸ்வரிய பரிவாரத்தவராக ஆவதில், பாபாவுடையவராக ஆவதில் நல்ல சகயோகம் கொடுத்துள்ளனர். ஆக, ஒன்று சிநேகத்தில் வருவதின் விசேசதா. இரண்டாவது சிநேகத்தின் காரணத்தால் பரிவர்த்தன்- சக்தியை சகஜமாக நடைமுறையில் கொண்டு வந்தனர். சுய மாற்றம் மற்றும் தன்னைச் சேர்ந்தவர்களின் மாற்றத்தில் நல்ல ஈடுபாட்டுடன் முன்னேறிக் கொண்டுள்ளனர். ஆக, சிநேகத்தின் சக்தி மற்றும் மாற்றுவதற்கான சக்தி என்ற இரண்டு விசேசதாக்களையும் தைரியமாக தாரணை செய்து நன்றாகவே நிரூபணம் காட்டிக் கொண்டுள்ளனர்.

 

இன்று வதனத்தில் பாப்தாதா தங்களுக்குள் குழந்தைகளின் விசேசதாவைப் பற்றி ஆன்மிக உரையாடல் செய்து கொண்டிருந்தனர். இப்போது இந்த ஆண்டிற்கான வ்யக்தத்தில் அவ்யக்தத்தைச் சந்திப்பதற்கான சீசன் என்றாலும் சரி, சந்திப்பின் திருவிழா என்றாலும் சரி, அது முடிவடைந்து கொண்டிருக்கிறது. ஆகவே பாப்தாதா அனைவரின் ரிஸல்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பொதுவாக அவ்யக்த ஸ்திதியின் மூலம் அவ்யக்த ரூபத்துடனான சந்திப்பு சதா காலத்திற்கும் இருக்கவே செய்கிறது, இனியும் இருக்கும். ஆனால் சாகார ரூபத்தின் மூலம் சந்திப்பதற்கான சமயத்தை நிச்சயம் செய்ய வேண்டி உள்ளது. மேலும் இதில் சமயத்தின் வரையறை வைக்க வேண்டி உள்ளது. அவ்யக்த ரூபத்தின் சந்திப்பில் சமயத்தின் வரையறை கிடையாது. யார் எந்த அளவுக்கு சந்திக்க விரும்புகிறாரோ, அவ்வளவு சந்திக்க முடியும். அவ்யக்த சக்தியின் அனுபவத்தை அடைந்து தன்னையும் சேவையையும் சதா முன்னேற்றத்தில் கொண்டு செல்ல முடியும். பிறகும் கூட நிச்சயிக்கப்பட்ட சமயத்தின் பிரகாரம் இந்த ஆண்டின் இந்த சீசன் முடிந்து கொண்டிருக்கிறது. ஆனால் முடியவில்லை, நிறைவு செய்து கொண்டிருக்கிறோம். சந்திப்பது என்றால் சமமாக ஆவது. சமமாக ஆகியிருக்கிறீர்கள் இல்லையா? ஆக, இது முடிவு இல்லை. சீசன் சமயமோ முடிந்து கொண்டிருக்கலாம். ஆனால் சுயம் சமமாகவும் சம்பன்ன மாகவும் ஆகி விட்டீர்கள். எனவே பாப்தாதா நாலாபுறமும் உள்ள இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார். ஏனென்றால் சாகாரத்திலோ யாராவது வர முடியும், சிலர் வர முடியாமலும் போகலாம். ஆகவே தங்களின் படம் அல்லது கடிதத்தை அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவ்யக்த ரூபத்தில் பாப்தாதா நாலாபுறத்தின் குழுக்களை சகஜமாக வெளிப்படுத்த முடியும். இங்கே அனைவரையும் அழைத்தால் பிறகு அவர்கள் தங்குவதற்கான சாதனங்கள் தேவைப்படும். அவ்யக்த வதனத்திலோ இந்த ஸ்தூல சாதனங்கள் எதுவும் தேவையில்லை. அங்கோ இரட்டை வெளிநாட்டினர் மட்டுமென்ன, முழு பாரதத்தின் குழந்தைகளும் ஒன்று சேர்ந்தாலும் கூட அது எல்லையற்ற அவ்யக்த வதனமாகத் தோன்றும். அங்கே எத்தனை லட்சம் பேர் இருந்தாலும் பிறகும் கூட அது சிறிய குழுவாகக் காணப்படும். ஆக, இன்று வதனத்தில் இரட்டை வெளிநாட்டினரை மட்டும் வெளிப்படுத்தியிருந்தார்.

 

பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் - வெவ்வேறு பழக்க-வழக்கங்கள் இருந்த போதிலும் திட சங்கல்பத்தின் மூலம் நன்கு முன்னேறியிருக்கிறீர்கள். பெரும்பாலானோர் ஊக்கம்-உற்சாகத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். சிலர் விளையாட்டுக் காட்டுபவர்களாகவும் உள்ளனர். ஆனால் முடிவில் (ரிசல்ட்) இந்த வித்தியாசத்தைப் பார்த்தோம், அதாவது முந்தைய வருடம் வரையிலும் அதிகமாகக் குழப்பமடைந்திருந்தனர். ஆனால் இந்த வருடத்தின் முடிவில் அநேகக் குழந்தைகளிடம் முதலிலிருந்தே உறுதியாக இருப்பதைப் பார்த்தோம். சிலர் பாப்தாதாவுக்கு விளையாட்டுக் காட்டும் குழந்தைகளாகவும் இருந்தனர். குழப்பமடைவதாகவும் விளையாட்டுக் காட்டுகின்றனர் இல்லையா? அந்தச் சமயத்தின் வீடியோவை வெளிப்படுத்தி அமர்ந்து பார்ப்பீர்களானால் உங்களுக்கு முற்றிலும் டிராமாவாகவே இருக்கும். ஆனால் முதலில் இருந்ததற்கு இப்போது வேறுபாடு உள்ளது. இப்போது அனுபவி ஆகிவிட்ட, கம்பீரமானவர்களாகவும் ஆகிக் கொண்டுள்ளனர். ஆக, இந்த ரிசல்ட்டைப் பார்த்தோம், அதாவது படிப்பின் மீது அன்பு மற்றும் நினைவில் இருப்பதற் கான ஊக்கம் வெவ்வேறு பழக்க-வழக்கங்களின் நம்பிக்கையை சுலபமாக மாற்றி விட்டுள்ளது. பாரதவாசிகளுக்கு மாறுவதில் சுலபம். தேவதைகளைப் பற்றி அறிவார்கள். சாஸ்திரங்களின் கலப்பட ஞானத்தை அறிந்துள்ளனர் என்பதால் நம்பிக்கைகள் பாரதவாசி களுக்கு அவ்வளவு புதுமையாக இருப்பதில்லை. பிறகும் கூட மொத்தத்தில் நாலாபுறமும் உள்ள குழந்தைகளிடம் அந்த மாதிரி நிச்சயபுத்தி உள்ளவர்களாக, ஆடாத, அசையாத ஆத்மாக்களைப் பார்த்தோம். அந்த மாதிரி நிச்சயபுத்தி உள்ளவர்கள் மற்றவர்களையும் கூட நிச்சயபுத்தி உள்ளவர்களாக ஆக்குவதில் உதாரணமாக ஆகியிருக்கிறார்கள். இல்லறத்தில் இருந்தாலும் சக்திசாலி சங்கல்பத்தின் மூலம் திருஷ்டி, விருத்தியை மாற்றி விடுகின்றனர். அத்தகைய விசேச ரத்தினங்களையும் பார்த்தோம். அநேகம் அந்த மாதிரி குழந்தைகளும் உள்ளனர் - எவ்வளவு தான் தங்களின் வழக்கப்படி அல்பகால சாதனங்களில், அல்பகால சுகங்களில் மூழ்கியவர்களாக இருந்திருந்தாலும், அந்த மாதிரி இரவு-பகலாக மாற்றமடைவதில் நல்ல தீவிர புருஷார்த்தத்தின் வரிசையில் சென்று கொண்டுள்ளனர். அதிக எண்ணிக்கை இல்லையென்றாலும் கூட இது நன்றாக உள்ளது. எப்படி பாப்தாதா பலி கொடுப்பது பற்றிய உதாரணம் சொல்கிறார். அது போல் மனதால் தியாகத்திற்கான சங்கல்பம் செய்த பிறகு கண்களின் பார்வை கூட சென்றுவிடக் கூடாது. இன்று மொத்தமாக ரிசல்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சக்திசாலி ஆத்மாக்களைப் பார்த்து பாப்தாதா புன்சிரிப்புடன் ஆன்மிக உரையாடல் செய்து கொண்டிருந்தனர் - பிரம்மாவின் படைப்பு இரண்டு விதம் எனப் பாடப்பட்டுள்ளது. ஒரு பிரம்மாவின் முகத்தின் மூலம் பிராமணர்கள் வெளிப்பட்டனர். மற்றும் இரண்டாவது படைப்பு - பிரம்மா சங்கல்பத்தின் மூலம் சிருஷ்டியைப் படைத்தார். ஆக, பிரம்மா எவ்வளவு காலமாக சிரேஷ்ட சக்திசாலி சங்கல்பம் செய்தார்! பாப்தாதா இருவருமே உள்ளனர் என்றாலும் படைப்பை சிவபாபாவின் படைப்பு எனச் சொல்ல மாட்டார்கள். சிவவம்சி எனச் சொல்வார்கள். சிவகுமார் சிவகுமாரி எனச் சொல்ல மாட்டார்கள். பிரம்மாகுமார் பிரம்மாகுமாரி எனச் சொல்வார்கள். ஆக, பிரம்மா விசேஷ சிரேஷ்ட சங்கல்பத் தின் மூலம் ஆவாஹனம் செய்தார், அதாவது படைப்பைப் படைத்தார். ஆக, இந்த பிரம்மா வின் சக்திசாலி சங்கல்பத்தின் மூலம், ஆவாஹனத்தின் மூலம் சாகாரத்தில் வந்து சேர்ந்திருக் கிறீர்கள்.

 

சங்கல்பத்தின் படைப்பும் கூட குறைவானதில்லை. எப்படி சங்கல்பம் சக்திசாலியாக இருந்தால் தூரத்திலிருந்தே பலவிதமான திரைகளின் உள்ளேயிருந்து குழந்தைகளைத் தங்களின் பரிவாரத்தில் கொண்டு வர வேண்டி இருந்தது, சிரேஷ்ட சக்திசாலி சங்கல்பத்தின் தூண்டுதலால் சமீபத்தில் கொண்டு வந்தீர்கள். அதனால் இந்த சக்திசாலி சங்கல்பத்தின் படைப்பும் கூட சக்திசாலி தான். அநேகருக்கு அனுபவமும் உள்ளது - புத்தியை விசேச மாக யாரோ தூண்டி சமீபத்தில் கொண்டு வருகிறார்கள். பிரம்மாவின் சக்திசாலி சங்கல்பத் தினால் பிரம்மாவின் சித்திரத்தைப் பார்த்ததுமே சைதன்யத்தின் அனுபவம் ஏற்படுகிறது. சைதன்ய சம்மந்தத்தின் அனுபவத்தின் மூலம் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். ஆக, பாப்தாதா இந்தப் படைப்பினைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். இனிமேலும் கூட இன்னும் சக்திசாலி படைப்பின் பிரத்தியட்ச நிரூபணத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். இரட்டை வெளிநாட்டினரின் சேவை சமயத்தின் கணக்கின்படி இப்போது குழந்தைப் பருவத்தின் சமயம் முடிவடைந்தது. இப்போது அனுபவி ஆகி, மற்றவர்களையும் கூட ஆடாத, அசையாதவராக ஆக்குவதற்கான அனுபவம் செய்வதற்கான சமயமாகும். இப்போது விளையாடுவதற்கான சமயம் முடிந்து விட்டது. இப்போது சதா சக்திசாலி ஆகி, பலமற்ற ஆத்மாக்களை சக்திசாலி ஆக்கிக் கொண்டே செல்லுங்கள். உங்களிடம் பலமற்ற தன்மை யின் சம்ஸ்காரம் இருக்குமானால் மற்றவர்களையும் கூட பலமற்றவராக ஆக்குவீர்கள். சமயம் குறைவாக உள்ளது. படைப்புகள் இன்னும் அதிகத்திலும் அதிகமாக வரப் போகிறார்கள். இவ்வளவு எண்ணிக்கையிலேயே நிறைய பேர் வந்து விட்டார்கள் என்று குஷியடைந்து விடக் கூடாது. இப்போதோ எண்ணிக்கை அதிகமாகத் தான் போகிறது. ஆனால் எப்படி நீங்கள் இவ்வளவு காலமாகப் பாலனை பெற்றீர்களோ, அது இப்போது மாற்றமடைந்து கொண்டே போகும்.

 

எப்படி 50 ஆண்டுகளின் பாலனை பெற்றதின் பொன்விழாவுக்கும் வெள்ளி விழாவுக்கும் வித்தியாசம் உள்ளது இல்லையா? அது போல் பின்னால் வருபவர்களிடம் வித்தியாசம் இருந்து கொண்டே போகும். ஆக, குறைந்த சமயத்தில் அவர்களை சக்திசாலி ஆக்க வேண்டும். சுயம் அவர்களுக்கு சிரேஷ்ட பாவனை இருக்கவே செய்யும். ஆனால் உங்களனைவருக்கும் கூட அந்த மாதிரி குறைந்த சமயத்தில் முன்னேறக் கூடிய குழந்தை களுக்குத் தங்களின் சம்மந்தம் தொடர்பின் சகயோகம் கொடுக்கத் தான் வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு சகஜமாக முன்னேறுவதற்கான ஊக்கம் மற்றும் தைரியம் வரும். இப்போது இந்த சேவை அதிகம் நடைபெற வேண்டும். தனக்காக மட்டும் சக்தி களைச் சேமிப்பதற்கான சமயம் இல்லை. ஆனால் தனக்காக மட்டுமல்லாமல் மற்றவர் களுக்காகவும் கூட சக்திகளை அவ்வளவு சேமிக்க வேண்டும் -- இதன் மூலம் மற்றவர் களுக்கும் கூட சகயோகம் கொடுக்க முடிய வேண்டும். சகயோகம் பெறுபவர்களாக மட்டும் இல்லாமல் கொடுப்பவர்களாகவும் ஆக வேண்டும். யாருக்கு இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளனவோ, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கூட குறைவானதில்லை. குறைந்த சமயத்தில் அதிக அனுபவம் பெற வேண்டும். எப்படி கல்ப விருட்சத்தில் காட்டுகிறீர்கள் இல்லையா - கடைசியில் வரும் ஆத்மாக்களும் கூட நான்கு நிலைகளை அவசியம் கடந்தாக வேண்டும். பிறகு 10-12 பிறவிகள் இருந்தாலும் சரி, எத்தனை இருந்தாலும் சரி. ஆக, பின்னால் வருபவர்களும் குறைந்த சமயத்தில் சர்வ சக்திகளின் அனுபவம் செய்யத் தான் வேண்டும். மாணவ வாழ்க்கையினுடைய மற்றும் அதனுடன் சேவாதாரியின் அனுபவமும் கூடப் பெற வேண்டும். சேவாதாரி என்றால் வெறுமனே கோர்ஸ் கொடுப்பது அல்லது சொற்பொழிவு செய்வது மட்டுமில்லை. சேவாதாரி என்றால் சதா ஊக்கம்- உற்சாகத்தின் சகயோகம் கொடுக்க வேண்டும். குறைந்த சமயத்தில் அனைத்துப் பாடங் களிலும் பாஸ் ஆக வேண்டும். அவ்வளவு தீவிர வேகத்தில் செய்தால் தான் சென்று சேர்வார்கள் இல்லையா? ஆகவே ஒருவர் மற்றவரின் சகயோகி ஆக வேண்டும். ஒருவர் மற்றவரின் யோகி ஆகக் கூடாது. ஒருவர் மற்றவர் மீது யோகா வைப்பதற்கு ஆரம்பிக்கக் கூடாது. சகயோகி ஆத்மா சதா சகயோகத்தின் மூலம் பாபாவுக்கு சமீபமாகவும் சமமாகவும் ஆக்கி விடுகின்றனர். தங்களுக்கு சமமாக இல்லை, ஆனால் பாபாவுக்கு சமமாக ஆக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் பலவீனங்கள் அனைத்தையும் இங்கேயே விட்டுச் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டாம். சக்திசாலி ஆத்மா ஆகி, மற்றவர்களையும் சக்திசாலி ஆக்க வேண்டும். இந்த விசேசமான திடசங்கல்பம் சதா ஸ்மிருதியில் இருக்க வேண்டும். நல்லது.

 

நாலாபுறமும் உள்ள குழந்தைகள் அனைவர்க்கும் விசேச சிநேகம் நிறைந்த அன்பு நினைவுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சதா சிநேகி, சதா சகயோகி மற்றும் சக்திசாலி அத்தகைய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

 

அனைருக்கும் இந்தக் குஷி உள்ளது இல்லையா - பலவிதமாக இருந்த போதும் ஒருவருடையவர்களாக ஆகி விட்டோம். இப்போது தனித்தனி வழிமுறை கிடையாது. ஒரே ஈஸ்வரிய வழிமுறைப்படி நடக்கும் சிரேஷ்ட ஆத்மாக்கள். பிராமணர்களின் மொழியும் ஒன்று தான். ஒரு தந்தையுடையவர்கள் மற்றும் தந்தையின் ஞானத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து அனைவரையும் ஒரு தந்தையுடையவர்களாக ஆக்க வேண்டும். எவ்வளவு பெரிய சிரேஷ்ட பரிவாரம்! எங்கே சென்றாலும், எந்த தேசத்திற்குச் சென்றாலும் இந்த நஷா உள்ளது - இது நம்முடைய சொந்த வீடு, சேவாஸ்தானம், அதாவது நம் வீடு. இத்தனை வீடுகளை உடையவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. உங்களிடம் யாராவது உங்களுக்குத் தெரிந்தவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனக் கேட்டால், உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள். எங்கே சென்றாலும் நம்முடைய பரிவாரம். எவ்வளவு எல்லையற்ற அதிகாரி ஆகி விட்டீர்கள்! சேவாதாரி ஆவது என்றால் அதிகாரி ஆவதாகும். இது எல்லையற்ற ஆன்மிகக் குஷி. இப்போது ஒவ்வோர் இடமும் தனது சக்திசாலி ஸ்திதி மூலம் விஸ்தாரத்தை அடைந்து கொண்டிருக்கிறது. முதலில் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டி உள்ளது. பிறகு சிலர் உதாரணமாக ஆகி விட்டனர் என்றால் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் சகஜமாக முன்னேறிக் கொண்டே செல்வார்கள்.

 

பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் இந்த சிரேஷ்ட சங்கல்பத்தைத் தான் நினைவு படுத்துகிறார் - சதா தானும் நினைவு மற்றும் சேவையின் ஊக்கம்-உற்சாகத்தில் இருங்கள், குஷி-குஷியோடு தீவிர வேகத்தில் முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள் மற்றும் மற்றவர்களையும் இதே போல் ஊக்கம்-உற்சாகத்துடன் முன்னேறச் செய்து கொண்டே இருங்கள். மேலும் நாலாபுறமும் சாகாரத்தில் (மதுபன்) வந்து சேராதவர்களிடம் இருந்தும் கூட சித்திரங்கள் மற்றும் கடிதங்கள் வந்து சேர்ந்துள்ளன. அதற்கு பதிலாக பாப்தாதா அனைவருக்கும் பல கோடி மடங்கு மனதார அன்பு நினைவுகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது எவ்வளவு ஊக்கம்-உற்சாகம், குஷி உள்ளதோ, அதை விடவும் பல மடங்கு அதிகப் படுத்துங்கள். சிலர் தங்களின் பலவீனங்கள் பற்றிய தகவலையும் எழுதியுள்ளனர். அவர்களுக்கு பாப்தாதா சொல்கிறார் - எழுதி விட்டீர்கள் என்றால் பாபாவுக்குக் கொடுத்து விட்டீர்கள். கொடுத்து விட்ட பொருளைப் பிறகு தன்னிடம் எடுத்து வைத்துக் கொள்ள முடியாது. பலவீனங்களைக் கொடுத்தாயிற்று என்றால் அதைப் பிறகு சங்கல்பத்தில் கூடக் கொண்டு வரக் கூடாது. மூன்றாவது விசயம், ஒரு போதும் தனது எந்த ஒரு சம்ஸ்காரம் அல்லது குழுவின் சங்கல்பங்கள் அல்லது வாயுமண்டலத்தின் குழப்பத்தால் மனச்சோர்வடையக் கூடாது. சதா பாபாவை இணைந்த ரூபத்தில் அனுபவம் செய்து, மனச்சோர்விலிருந்து விடுபட்டு சக்திசாலியாகி முன்னேறிக் கொண்டே செல்லுங் கள். கணக்கு-வழக்கு முடிந்து விட்டது -- அதாவது சுமையை இறக்கி வைத்து விட்டீர்கள். குஷி-குஷியோடு பழைய சுமையை பஸ்பம் செய்து கொண்டே செல்லுங்கள். பாப்தாதா சதா குழந்தைகளின் சகயோகியாகவே இருக்கிறார். அதிகம் யோசிக்கவும் வேண்டாம். வீணான சிந்தனையும் கூட பலவீனமாக ஆக்கி விடும். யாருக்காவது வீண் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தால் இரண்டு-நான்கு முறை முரளியைப் படியுங்கள். படித்ததைச் சிந்தனை செய்யுங்கள். படித்துக் கொண்டே செல்லுங்கள். ஏதாவதொரு பாயின்ட் புத்தியில் பதிந்து விடும். சுத்த சங்கல்பங்களின் சக்தியைச் சேமித்துக் கொண்டே செல்வீர்களானால் வீணானவை முடிந்து போகும். புரிந்ததா?

 

பாப்தாதாவின் விசேச பிரேரணைகள் (தூண்டுதல்)

 

நாலாபுறமும், தேசத்தில் என்றாலும் சரி, வெளிநாட்டில் என்றாலும் சரி, நிறைய அந்த மாதிரி சின்னச் சின்ன இடங்கள் உள்ளன - இந்தச் சமயத்தின் பிரமாணம் சாதாரணமாக உள்ளன. ஆனால் பெரும் செல்வம் நிறைந்த குழந்தைகள். ஆக, இப்படியும் கூட அநேகர் உள்ளனர் -- நிமித்தமாகியுள்ள குழந்தைகள் தங்களின் பக்கம் சுற்றிவர வேண்டும் என்ற ஆசை வைப்பதை நீண்ட நாளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆசை பூர்த்தியா வதில்லை. அந்த ஆசையையும் பாப்தாதா நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். விசேசமாக மகாரதிக் குழந்தைகளுக்கு திட்டத்தை உருவாக்கி நாலாபுறமும் யாருடைய நம்பிக்கை தீபமாக ஆக்கி வைத்துள்ளனரோ, அந்த தீபத்தை ஒளி பெறச் செய்வதற்காகச் செல்ல வேண்டும். ஆசையின் தீபத்தை ஏற்றுவதற்காக பாப்தாதா விசேஷமாக சமயம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மகாரதிகள் அனைவரும் சேர்ந்து பலவித இடங்களைப் பகிர்ந்து கொண்டு, கிராமத்தின் குழந்தைகள் - அவர்களிடம் சமயத்தின் காரணத்தால் செல்ல முடியவில்லை என்றால் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். முக்கியமான இடங்களுக்கோ, முக்கியமான நிகழ்ச்சிகள் என்ற காரணத்தால் போகவே செய்கிறீர்கள். ஆனால் சின்னச் சின்ன இடங்களில் முடிந்த அளவு செய்தாலே அது பெரிய நிகழ்ச்சி ஆகி விடும். அவர்களின் பாவனையே அனைத்திலும் பெரிய ஃபங்சன் ஆகும். பாப்தாதா விடம் அத்தகைய குழந்தைகள் அநேகருடைய நீண்ட கால வேண்டுதல்களின் கோப்பு (ஃபைல்) உள்ளது. இந்த ஃபைலையும் கூட பாப்தாதா பூர்த்தி செய்ய விரும்புகிறார். மகாரதிக் குழந்தைகளுக்கு, சக்கரவர்த்தி ஆவதற்கான விசேச வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிறகு எல்லா இடங்களுக்கும் தாதி வர வேண்டும் என்று அந்த மாதிரி சொல்லக் கூடாது. ஒரு தாதி எல்லா இடங்களுக்கும் சென்றால் பிறகு 5 ஆண்டுகளாகி விடும். மேலும் பிறகு 5 ஆண்டுகளுக்கு பாப்தாதா வர மாட்டார். இதை ஏற்றுக் கொள்வீர் களா? பாப்தாதாவின் சீசன் இங்கே நடைபெற வேண்டும் மற்றும் தாதி சுற்றி வருவதற்காகச் செல்ல வேண்டும் -- இதுவும் நன்றாக இருக்காது. அதனால் மகாரதிகளின் நிகழ்ச்சியைத் தயார் செய்யுங்கள். எங்கே யாருமே செல்லவில்லையோ, அங்கே போவதற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும். மேலும் விசேசமாக இந்த ஆண்டு எங்கே சென்றாலும், ஒரு நாள் வெளியிடங்களுக்கான சேவை, ஒரு நாள் பிராமணர்களுக்கான தபஸ்யா நிகழ்ச்சி நிரல் - இவ்விரண்டும் அவசியம் இருக்க வேண்டும். ஃபங்சனுக்கு மட்டும் போய்விட்டு ஓடோடி வரக் கூடாது. எவ்வளவு முடியுமோ, அந்த மாதிரி நிகழ்ச்சியைத் தயார் செய்யுங்கள் - அதில் பிராமணர்களின் விசேசமான புத்துணர்ச்சி இருக்க வேண்டும். மேலும் கூடவே அத்தகைய நிகழ்ச்சி இருக்க வேண்டும் - அதன் மூலம் வி.ஐ.பி.க்களின் தொடர்பும் ஏற்பட வேண்டும். ஆனால் அது குறுகிய கால நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். முதலில் இருந்தே அத்தகைய நிகழ்ச்சியை உருவாக்க வேண்டும் - அதில் பிராமணர்களின் விசேச ஊக்கம்-உற்சாகத்தின் சக்தி சேர வேண்டும். நிர்விக்னம் ஆவதற்கான தைரியம், உற்சாகம் நிறைந்திருக்க வேண்டும். ஆக, நாலாபுறமும் சுற்றி வருவதற்கான நிகழ்ச்சியைத் தயார் செய்வதற்காகவும் கூட விசேச சமயம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் சமயத்தின் பிரமாணம் சூழ்நிலைகளும் கூட மாறிக் கொண்டிருக்கின்றன. மேலும் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் ஃபைலை முடிக்க வேண்டும். நல்லது.

 

வரதானம்:

ஆன்மிகத்தின் சிரேஷ்ட ஸ்திதி (மனநிலை) மூலம் சூழ்நிலையை ஆன்மிகமாக ஆக்கக்கூடிய சகஜ புருஷார்த்தி ஆகுக.

 

ஆன்மிகத்தின் ஸ்திதி மூலம் தனது சேவா கேந்திரத்தின் சூழ்நிலையை அந்த மாதிரி ஆன்மிகத் தன்மையுள்ளதாக ஆக்குங்கள் - அதன் மூலம் தன்னுடைய மற்றும் வரக்கூடிய ஆத்மாக்களின் சகஜ முன்னேற்றம் ஏற்பட வேண்டும். ஏனென்றால் வெளியிலுள்ள சூழ்நிலையால் களைத்துப் போயிருப்பவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு அதிகப்படியான சகயோகத்தின் அவசியம் உள்ளது. எனவே அவர்களுக்கு ஆன்மிக வாயு மண்டலத்தின் சகயோகம் கொடுங்கள். சகஜ புருஷார்த்தி ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள். இந்த இடம் சகஜமாகவே முன்னேற்றத்தை அடைய வைக்கிறது என்பதை வரக்கூடிய ஒவ்வோர் ஆத்மாவும் அனுபவம் செய்ய வேண்டும்.

 

சுலோகன்:

வரதானி ஆகி சுப பாவனை மற்றும் சுப விருப்பத்தின் வரதானத்தைக் கொடுத்துக் கொண்டே இருங்கள்.

ஓம்சாந்தி