04-10-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தையை நினைவு செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளை (யுக்தி) உருவாக்குங்கள். முயற்சி செய்து சார்ட் வையுங்கள். களைப்படையாதீர்கள். புயல்களின் போது அசையாதிருங்கள்.

கேள்வி:
குழந்தைகள் தங்களுடைய எந்த ஒரு அனுபவத்தை தங்களிடையே, ஒருவருக்கொருவர் கூறிக் கொள்ள வேண்டும்?

பதில்:
நாம் தந்தையை எவ்வளவு நேரம் மற்றும் எப்படி நினைவு செய்கிறோம்? உணவின் பொழுது தந்தையின் நினைவு இருக்கிறதா? இல்லை அநேகவிதமான சிந்தனைகள் வந்து விடு கின்றதா? குழந்தைகளே முயற்சி செய்து பாருங்கள் என்று பாபா கூறுகிறார். உணவின் பொழுது தந்தையைத் தவிர வேறு எதுவும் நினைவிற்கு வருவதில்லையே? பிறகு தங்களுக்குள் ஒருவருக் கொருவர் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள். (2) எந்த ஒரு வேதனைக்குரிய காட்சியையும் பார்க்கையில் நமது நிலை எவ்வாறு இருந்தது? இதனுடைய அனுபவத்தைக் கூட கூற வேண்டும்.

பாடல்:
இலட்சங்களை சேமிப்பவர்கள்.. ..

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் யாரிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தி கிடைக்கிறதோ அப்பேர்ப்பட்ட எல்லையில்லாத தந்தையை இப்பொழுது எப்படி மறப்பார்கள். அவரை அரைக் கல்பமாக நினைவு செய்து கொண்டிருந்தீர்கள். மனிதணை ஒரு பொழுதும் பகவான் என்று கூறப்படுவதில்லை என்பதைப் புரிய வைத்துள்ளார். எனவே இப்பொழுது எல்லை யில்லாத தந்தை கிடைத்திருக்கும் பொழுது அவருடைய நினைவில் தான் அற்புதம் உள்ளது. எந்த அளவிற்கு பதீத பாவன தந்தையை நினைவு செய்வீர் களோ, அந்த அளவிற்கு தூய்மையாக ஆகிக் கொண்டே செல்வீர்கள். கடைசி முடிவு வராதவரை நீங்கள் உங்களை பாவனம் என்று கூறிக் கொள்ள முடியாது. முழுமையாக பாவனமாக ஆகி விடும் பொழுது இந்த சரீரத்தை விட்டு விட்டு போய் முழுமையான பவித்திர சரீரத்தைப் பெறுவீர்கள். சத்யுகத்தில் புதிய உடல் கிடைக்கும் பொழுது தான் சம்பூர்ணம் என்று கூறுவார்கள். பிறகு இராவணனுக்கு அழிவு ஏற்பட்டு விடுகிறது. சத்யுகத்தில் இராவணனின் கொடும்பாவி எரிப்பதில்லை. எனவே குழந்தைகளாகிய நீங்கள் அமரும் பொழுதும், நடக்கும் பொழுதும், உலாவும் பொழுதும் புத்தியில் இது நினைவிருக்கட்டும். இப்பொழுது நாம் 84ன் சக்கரத்தை முடித்து விட்டுள்ளோம். பிறகு புதிய சக்கரம் ஆரம்பமாகிறது. அது இருப்பதே புதிய தூய்மையான உலகமாக. புதிய பாரதம், புதிய டில்லி. முதலில் யமுனை கரையோரம் இருந்தது. அங்கு தான் பரிஸ்தானம் (சொர்க்கம்) அமைய வேண்டி உள்ளது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். குழந்தைகளுக்கு மிகவும் நல்ல முறையில் புரிய வைக்கப் படுகிறது. முதன் முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். பகவான் தந்தை கற்பிக்கிறார். அவரே தந்தை, ஆசிரியர், குரு ஆவார். இதையாவது நினைவு செய்யுங்கள். நீங்கள் குட்டிக்கரணம் போடுகிறீர் கள் என்பதையும் பாபா புரிய வைத்திருந்தார். வர்ணங்களின் படம் கூட மிகவும் அவசியமானதாகும். எல்லோரையும் விட மேலே இருப்பவர் சிவபாபா ஆவார். பிறகு உச்சியில் பிராமணர்கள். இதைப் புரிய வைப்பதற்காக பாபா கூறுகிறார். நல்லது. நாம் 84 பிறவிகளின் குட்டிக்கரணம் போடுகிறோம் என்பதை புத்தி யிலிருத்துங்கள். இப்பொழுது சங்கமம் ஆகும். பாபா அதிகமான காலம் இருப்பதில்லை. பிறகும் 100 வருடங்கள் பிடிக்கிறது. சீர்க்கேடுகள், குழப்பங்கள் முடிந்து பிறகு இராஜ்யம் ஆரம்பமாகிறது. மகாபாரத போர் அதே தான். அதில் அநேக தர்மங்கள் அழிந்து ஒரு சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. உங்களுடைய குட்டிக் கரணம் (மே-ருந்து கீழே, கீழிருந்து மேலே பிறவிகள் எடுப்பது) மிகவும் அதிசயமானதாகும். துறவிகள் (யாசிப்போர்) தனது வித்தைகளை செய்தபடியே தீர்த்தங்களுக்கு செல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மனிதர்களுக்கு சிரத்தை (பாவனை) இருக்கிறது அல்லவா? எனவே அவர்களுக்கு ஏதாவது கொஞ்ச நஞ்சம் கொடுத்து விடுகிறார்கள். பாலனை அவர்களுக்கு ஆகிக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் அப்பேர்ப்பட்ட மனிதர்கள் தங்களுடன் என்ன எடுத்து செல்ல முடியும்? பாபா இந்த எல்லா விஷயங்களிலும் அனுபவம் உடையவராவார். பாபா அனுபவம் உடைய ரதத்தை எடுத்துள்ளார். குருமார்களிடமும் சென்றிருந்தார். நிறையவே பார்த்தார். தீர்த்தங்களுக்கும் சென்றார். குட்டிக்கரணத்தை உங்களால் நினைவு செய்ய முடியும் அல்லவா என்று இப்பொழுது பாபா கூறுகிறார். நாம் இப்பொழுது பிராமணர் ஆகியுள்ளோம், பிறகு தேவதை, க்ஷத்திரியர் ஆகி விடுவோம். இவை எல்லாமே முழுமையாக பாரதத்தின் விஷயம் ஆகும். தந்தை இவ்வாறு புரிய வைத்துள்ளார். மற்ற தர்மங்கள் உபகாட்சிகள் ஆகும். தந்தை உங்களுக்குத் தான் உங்களுடைய 84 பிறவிகளின் கதையைக் கூறி உள்ளார். அறிவுள்ளவர்களாக இருப்பவர்கள். இந்த கணக்கின் மூலம் புரிந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். இஸ்லாமியர்கள் வருகிறார்கள் என்றால் சராசரி எத்தனை பிறவிகள் எடுப்பார்கள். மிகச் சரியான கணக்கு அவசியம் இல்லை. இந்த விஷயங்களில் எந்த ஒரு கவலைக்குரிய விஷயமும் கிடையாது. நாம் பாபாவை நினைவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற இந்த கவலை எல்லாவற்றையும் விட அதிகமாக உள்ளது. அவ்வளவே ! ஒருவரை நினைவு செய்வதற்கான ஒரே ஒரு கவலை உள்ளது. அடிக்கடி மாயை வேறு கவலைகளில் சிக்க வைத்து விடுகிறது. இதில் மாயை மிகவுமே கவலைகளில் ஈடுபடுத்தி விடுகிறது. குழந்தைகள் நினைவு செய்யவே வேண்டும். இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இனிமையான இல்லம் யாருக்குத் தான் நினைவிற்கு வராது. சாந்தி தேவனே என்று வேண்டவும் செய்கிறார்கள். எங்களுக்கு அமைதி கொடுங்கள் என்று பகவானிடம் முறையிடுகிறார்கள்.

இந்த பழைய உலகம் முடியப் போகிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதுவும் உங்களுடைய புத்தியில் உள்ளது. பிற மனிதர்கள் கோரமான இருளில் உள்ளார்கள். அமைதி சத்யுகத்தில் தான் இருக்கும். ஒரு தர்மம், ஒரு மொழி, பழக்க வழக்கம் கூட ஒன்றே ஒன்று தான். அங்கு இருப்பது அமைதியின் இராஜ்யம் ஆகும். அத்வைதம் என்ற விஷயமே கிடையாது. அங்கு ஒரே ஒரு இராஜ்யம் இருக்கும். மேலும் சதோபிரதானமாக இருக்கும். யுத்தம் ஏற்படும் வகையில் இராவண இராஜ்யமே கிடையாது. எனவே குழந்தை களுக்கு அளவுகடந்த குஷி ஏறி இருக்க வேண்டும்.அதீந்திரிய சுகம் பற்றி கோப கோபியர்களிடம் கேளுங்கள் என்று சாஸ்திரங்களில் பாடல் உள்ளது. கோப கோபியர்கள் நீங்கள் தானே! நீங்கள் முன்னால் அமர்ந்துள்ளீர்கள். பாபா நமக்கு தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக் கிறார், குருவாகவும் இருக்கிறார் என்பது உங்களிடையேயும் வரிசைக்கிரமமாகத் தான் நினைவில் உள்ளது. இதுவோ மிக அதிசயமானது ! வாழும் வரை துணை அளிக்கிறார். மடியில் எடுத்துக் கொண்ட உடனேயே படிப்பை ஆரம்பித்து விடுகிறார். எனவே இது நினைவில் இருக்கும் பொழுது கூட நிறைய குஷி இருக்கும். ஆனால் மாயை பிறகும் மறக்க வைத்து விடுகிறது. மனிதர்களுக்கு இதுவும் புரிய வைக்கப்படுகிறது. இனி சிறிது காலம் தான் உள்ளது என்று கூறுகிறீர்களே, என்ன ஆதாரம் என்ன என்று மனிதர்கள் கேட்கிறார்கள். பாருங்கள் அதில் கீதையில் பகவானுவாச (பகவான் கூறுகிறார்) என்று எழுதப்பட்டுள்ளது என்று கூறுங்கள். வேள்வி கூட இயற்றப் பட்டுள்ளது. இது ஞான வேள்வி ஆகும். இப்பொழுது கிருஷ்ணர் வேள்வியை படைக்க முடியாது.

பிராமணர்களாகிய நாம் இந்த எல்லையில்லாத வேள்வியினுடையவர்கள் ஆவோம் என்பது கூட குழந்தை களுடைய புத்தியில் இருக்க வேண்டும். பாபா நம்மை கருவியாக ஆக்கி உள்ளார். நீங்கள் நல்ல முறையில் ஞானம் மற்றும் யோகத்தைத் தாரணை செய்யும் பொழுது ஆத்மா சம்பூர்ணமாக (முழுமையான நிலை) ஆகி விடும் பொழுது பிறகு இந்த மூங்கில் காட்டில் நெருப்பு பிடித்து விடும். இது எல்லையில்லாத கர்மக்ஷேத்திரம் ஆகும். இங்கு எல்லோரும் வந்து நாடகத் தில் நடிக்கிறார்கள் என்பது மனிதர்களுக்குத் தான் தெரிந்திருக்கும் அல்லவா? அமைந்தது, அமைக் கப்பட்டது, அமைந்து கொண்டு இருக்கிறது.. குழந்தைகளே இனி மேற்கொண்டு நடக்கப் போவதைப் பற்றி கவலைப்படுங்கள் என்று தந்தை கூறுகிறார். நடந்து விட்டது என்பது நாடகத்தில் இருந்தது. பிறகு அது பற்றி எதற்காக கவலைப்பட வேண்டும். நாம் நாடகத்தை பார்க்கி றோம். நாடகத்தில் ஏதாவது ஒரு வேதனைக்குரிய காட்சியை பார்க்கிறார்கள் என்றால் மனிதர்கள் பார்த்து அழுகிறார்கள். இப்பொழுது அது பொய்யான நாடகமாகும். இது உண்மையான நாடகம் ஆகும். உண்மையிலும் உண்மையாக நடிக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு எந்த ஒரு துக்கத்தின் கண்ணீரும் வரக் கூடாது. சாட்சியாகி (பார்வையாளர்) நீங்கள் பார்க்க வேண்டும். இது நாடகம் ஆகும் என்பதை அறிந்துள்ளீர்கள். இதில் அழ வேண்டிய விஷயம் என்ன உள்ளது. நடந்தது நடந்து முடிந்து விட்டது. ஒரு பொழுதும் சிந்தனை கூட செய்யக் கூடாது. நீங்கள் முன்னேறிக் கொண்டு தந்தையை நினைவு செய்துக் கொண்டே இருங்கள். மேலும் அனைவருக்கும் வழி கூறிக் கொண்டே இருங்கள். பாபா ஆலோசனை வழங்கிக் கொண்டே இருக்கிறார். திரிமூர்த்தியின் படங்கள் உங்களிடம் நிறைய உள்ளது. அவர் சிவபாபா, இது ஆஸ்தி என்று தெளிவாக எழுதப் பட்டுள்ளது. இந்த படத்தைப் பார்க்கும் பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். பாபாவிட மிருந்து நமக்கு விஷ்ணுபுரியின் ஆஸ்தி கிடைக்கிறது. பழைய உலகம் முடியப் போகிறது. இந்த படத்தை முன்னால் வைத்து விடுங்கள். அவ்வளவே ! இதில் செலவு எதுவும் கிடையாது. விருட்சம் கூட மிகவும் நன்றாக உள்ளது. தினமும் அதிகாலை எழுந்து சிந்தனைக் கடலைக் கடையுங்கள். உங்களுக்கு நீங்களே ஆசிரியராகி படியுங்கள். புத்தி எல்லோருக்கும் இருக்கிறது. படங்களை உங்கள் வீட்டில் வைத்து விடுங்கள். ஒவ்வொரு படத்திலும் முதல்தரமான ஞானம் உள்ளது. விநாசம் ஆகும் என்கிறார்கள். ஆக உங்களுக்கு தந்தையிடம் அன்பு உள்ளதல்லவா? சிவபாபா தரகராகி, நமக்கு நிச்சயதார்த்தம் செய்விக்கிறார். சத்குரு தரகர் ரூபத்தில் கிடைக்கும் பொழுது எவ்வளவு நல்ல விஷயங்கள் புரிந்து கொள்வதற்கும் புரிய வைப்பதற்கும் கிடைத்துள்ளது. பிறகும் மாயையின் பகட்டு நிறைய உள்ளது. 100 வருடங்களுக்கு முன்பு இந்த மின்சாரம், கேஸ் ஆகியவை இருந்ததா என்ன? முன்பெல்லாம் (வைஸ்ராய்) ராஜ பிரதிநிதிகள் எல்லாம் 4 குதிரை பூட்டிய வண்டி, 8 குதிரை பூட்டிய வண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். முன்பெல்லாம் பணக்காரர்கள் (சாராட்டு) வண்டியில் ஏறுவார்கள். இப்பொழுது விமானம் ஆகியவை வந்துவிட்டன. முன்பெல்லாம் இவை எதுவும் கிடையாது. 100 வருடங்களுக்குள் என்னவெல்லாம் வந்து விட்டது! மனிதர்கள் இது தான் சொர்க்கம் என்று நினைக்கிறார்கள். சொர்க்கம் என்றால் சொர்க்கம் தான் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இவை எல்லாமே ஒரு பைசா மதிப்புள்ள பொருட்கள் தான். இதற்கு செயற்கையான பகட்டு என்று கூறப்படுகிறது. நாம் தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்ற இதே ஒரு கவலை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். அதில் தான் மாயை தடையை ஏற்படுத்துகிறது. பாபா தனது உதாரணத்தையும் கூறுகிறார். உணவு உட்கொள் கிறேன். நினைவில் இருந்து சாப்பிட வேண்டும் என்று மிகவும் முயற்சி செய்கிறேன். பிறகும் மறந்து விடுகிறேன். ஆக குழந்தைகளுக்கு மிகவும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். நல்லது. குழந்தைகளே! நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். பாபாவின் நினை வில் இருந்து காண்பியுங்கள். முழு நேரமும் நினைவில் நிலைக்க முடிகிறதா? என்று பாருங்கள். அனுபவத்தைக் கூற வேண்டும். பாபா முழு நேரமும் நினைவு நிலைப்பதில்லை. அனேக விதவித மான விஷயங்கள் நினைவிற்கு வருகின்றன. சுயம் பாபா தனது அனுபவத்தைக் கூறுகிறார். பாபா யாருக்குள் பிரவேசம் செய்தாரோ இவர் கூட முயற்சியாளர் ஆவார். இவருக்கோ அனேக தொந்தரவுகள் ! பெரியவராக இருந்தாலே பெரிய துக்கத்தை அடைவது தான். எவ்வளவு சமாச் சாரம் வருகிறது. விகாரங்கள் காரணமாக எவ்வளவு அடிக்கிறார்கள். வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறார்கள். நான் இறைவனின் அடைக்கலத்தில் வந்துள்ளேன் என்று பெண் குழந்தைகள் கூறுகிறார்கள். எவ்வளவு தடைகள் ஏற்படுகின்றன. யாரிடமும் அமைதி இல்லை. இங்கோ குழந்தை களாகிய உங்களுக்கு உபசாரம் கிடைக்கிறது. இப்பொழுது முயற்சி செய்து ஸ்ரீமத் படி நடந்து அமைதியாக இருக்கிறீர்கள். இந்த பாபா இங்கு கூட நிறைய அப்பேர்ப்பட்ட வீடுகளைப் பார்த்திருக்கிறார், அங்கு அனைவரும் தங்களுக்குள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எல்லோருமே பெரியவர்களின் கட்டளைப்படி நடக்கிறார்கள். எங்கள் வீடு சொர்க்கம் போலவே இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இப்பொழுது பாபா உங்களை அப்பேர்ப்பட்ட சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சுகங்கள் எல்லா விதத்திலும் இருக்கும். தேவதைகளின் 36 விதமான உணவு வகைகள் பாடப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை எடுக்கிறீர் கள். அங்கோ எவ்வளவு சுவையான உணவு வகைகள் உட்கொண்டு இருப்பீர்கள். மேலும் தூய்மை யாக இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் அந்த உலகத்தின் அதிபதி ஆகிறீர்கள். ராஜா ராணி பிரஜை களுக்கிடையே வித்தியாசம் இருக்கும் அல்லவா? முன்பெல்லாம் ராஜாக்கள் மிகவும் ஆடம்பரமாக இருந்தார்கள். இவர்களோ பதீதமானவர்களாக இருந்தார்கள். மேலும் இராவண இராஜ்யத்தில் இருந்தார்கள். அப்படியானால் சத்யுகத்தில் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். முன்னால் இலட்சுமி நாராயணரின் படம் வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் பற்றி பொய்யான விஷயங்களை எழுதி அவப்பெயர் ஏற்படுத்தி விட்டுள்ளார்கள். பொய்யோ பொய் தான். இம்மியளவு கூட உண்மை இல்லை. நாம் சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தோம். பின் 84 பிறவிகள் எடுத்து முற்றிலும் சூத்திர புத்தியுடையவராக ஆகி உள்ளோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். எப்படிப்பட்ட நிலைமை ஆகி விட்டுள்ளது. இப்பொழுது மீண்டும் முயற்சி செய்து என்னவாக ஆகிறீர்கள். நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்று பாபா கேட்கவும் செய்கிறார் அல்லவா? பின் எல்லோரும் சூரிய வம்சத்தினர் ஆகப்போகிறோம் என்று கை உயர்த்து கிறார்கள். நாங்கள் தாய் தந்தையரை முழுமையாக பின்பற்றுவோம். குறைவான முயற்சி செய்வோமா என்ன? முழு உழைப்பே நினைவு மற்றும் தனக்கு சமமாக ஆக்குவதில் உள்ளது. எனவே கூடுமானவரை சேவை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகிறார். மிகவுமே சுலபம் ஆகும். இவர் சிவபாபா இது விஷ்ணுபுரி. இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் வரப்போகிறது. இவர் மிகவும் அனுபவம் உடையவர் ஆவார். ஏணிப்படி பற்றி நீங்கள் புரிய வைக்கலாம்.

குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த கல்ப விருட்சம் காலச் சக்கரத்தைப் பார்த்த உடனேயே புத்தியில் முழு ஞானம் வந்து விட வேண்டும். இந்த இலட்சுமி நாராயணரின் இராஜதானி எங்கே போய் விட்டது. யார் போர் தொடுத்தார்கள். யாரால் தோற்கடிக்கப்பட்டார்கள். இப்பொழுது அந்த இராஜ்யம் இல்லை. இந்த ஈசுவரிய விஷயங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இது கூட சாட்சாத்காரம் (காட்சி தியானத்தில்) ஆகி உள்ளது. எப்படி குகைகள், சுரங்கங்கள் ஆகியவற்றிற்குள் சென்று தங்கம் வைரம் ஆகியவற்றை எடுத்து வருகிறார்கள். இந்த விஞ்ஞானம் உங்களுடைய சுகத்திற்காக உள்ளது. இங்கு இருப்பது துக்கத் திற்காக. அங்கு விமானம் கூட (ச்ர்ர்ப்ல்ழ்ர்ர்)ஃபூல் ப்ரூஃப்பாக (யார் வேண்டுமானாலும் கையாள முடியும்) இருக்கும். குழந்தைகள் முதன் முதலில் இவை அனைத்தையுமே சாட்சாத்காரம் செய்திருக்கிறார்கள். கடைசியில் கூட உங்களுக்கு நிறைய சாட்சாத்காரம் ஆகும். இதுவும் நீங்கள் சாட்சாத்காரம் செய்துள்ளீர்கள். திருடர்கள் கொள்ளையடிக்க வருகிறார்கள். பிறகு உங்களுடைய சக்தி ரூபத்தைப் பார்த்து ஓடி விடுகிறார்கள். இந்த எல்லா விஷயங்களும் கடைசியினுடையது ஆகும். திருடர்கள் கொள்ளையடிக்க வரத்தான் செய்வார்கள். நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்து விட்டீர்கள் என்றால், ஒரேயடியாக ஓடிப் போய் விடுவார்கள்.

குழந்தைகளே நிறைய முயற்சி செய்யுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். முக்கியமான விஷயம் தூய்மையினுடையது ஆகும். இந்த ஒரு பிறவியில் தூய்மையாக ஆக வேண்டும். மரணம் எதிரிலேயே நின்றுள்ளது. மிகவும் கடுமையான இயற்கையின் ஆபத்துக்கள் வரும். அதில் எல்லாமே அழிந்து போய் விடும். சிவபாபா இவர் மூலமாக புரிய வைக்கிறார். இவருடைய ஆத்மா கூட கேட்கிறது. இந்த பாபா எல்லாமே கூறுகிறார். சிவபாபாவிற்கு (உலகாய) அனுபவம் இல்லை. குழந்தைகளுக்கு அனுபவம் ஆகிறது. மாயையின் புயல்கள் எப்படி வருகின்றன. முதல் நம்பரில் இவர் இருக்கிறார். எனவே இவருக்கு எல்லா அனுபவங்களும் ஆகும். எனவே இதில் பயப்படக் கூடாது. ஆடிப் போகாமல் இருக்க வேண்டும். தந்தையின் நினைவில் இருப்பதால் தான் சக்தி கிடைக்கிறது. ஒரு சில குழந்தைகள் சார்ட் எழுதுகிறார்கள். பிறகு போகப் போக எழுதுவதை நிறுத்தி விடுகிறார்கள். களைத்து விட்டார்கள் என்று பாபா புரிந்து கொண்டு விடுகிறார். எந்த ஒரு பரலோகத் தந்தையிடமிருந்து இவ்வளவு பெரிய ஆஸ்தி கிடைக்கிறதோ அப்பேர்ப்பட்ட தந்தைக்கு ஒரு பொழுதும் கடிதம் கூட எழுதுவதில்லை. நினைவே செய்வதில்லை. அப்பேர்ப்பட்ட தந்தையை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும். சிவபாபா நாங்கள் உங்களை நிறைய நினைவு செய்கிறோம். பாபா உங்களுடைய நினைவின்றி நாம் எப்படி இருக்க முடியும்? எந்த தந்தை யிடமிருந்து உலக அரசாட்சி கிடைக்கிறதோ, அப்பேர்ப்பட்ட தந்தையை எவ்வாறு மறக்க முடியும்? ஒரு கார்டு எழுதினீர்கள் என்றால் அது கூட நினைவு செய்ததாகும் தானே! லௌகீக தந்தை கூட குழந்தைகளுக்கு கண்மணியே ! என்று கடிதம் எழுதுகிறார். மனைவி கணவனுக்கு எப்படி கடிதம் எழுதுவார். இங்கு இரண்டு சம்மந்தம் உள்ளது. இது கூட நினைவு செய்வதற்கான வழிமுறை (யுக்தி) ஆகும். எவ்வளவு இனிமையான பாபா ஆவார்? நம்மிடம் என்ன கேட்கிறார்? எதுவும் இல்லை. அவரே வள்ளல், கொடுப்பவர் அல்லவா? இவர் பெறுபவர் அல்ல ! இனிமையான குழந்தைகளே நான் வந்துள்ளேன். பாரதத்தை நறுமணமுள்ள தோட்டமாக ஆக்கிச் செல்கிறேன் என்று கூறுகிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சூரிய வம்சத்தினர் ஆக வேண்டும் என்றால், தாய் தந்தையரை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். நினைவில் இருப்பதற்கான மற்றும் தனக்கு சமமாக ஆக்கும் முயற்சி செய்ய வேண்டும்.

2. முயற்சி செய்து ஸ்ரீமத் படி நடந்து அமைதியாக இருக்க வேண்டும். பெரியவர்களின் கட்டளையை ஏற்று நடந்துக் கொள்ள வேண்டும்.

வரதானம்:

தன்னை சேவாதாரி எனப் புரிந்துக் கொண்டு தலைவணங்கி மற்றவர்களையும் தலைவணங்க வைக்கக் கூடிய நிமித்தமானவர் (கருவி) மற்றும் பணிவானவர் ஆகுக

யார் தனது ஒவ்வொரு எண்ணம் மற்றும் ஒவ்வொரு செயலையும் பாபாவிற்கு முன்னால் அர்ப்பணம் செய்கிறார்களோ, அவர்களைத் தான் நிமித்தமானவர் (கருவி) என்று சொல்லப் படுகிறது. நிமித்தமானவர் ஆவது என்றால் அர்ப்பணம் ஆவது மற்றும் பணிவாக இருப்பது, யார் தனது சம்ஸ்காரங்களில், எண்ணங்களில் தலை வணங்குகிறார்களோ (விட்டு கொடுப்பவர்கள்), அந்தளவு அவர்களுக்கு முன்னால் உலகம் தலை வணங்கும். தலைவணங்குவது என்றாலே தலை வணங்க வைப்பதாகும். மற்றவர்களும் கூட சிறிதளவாவது தலைவணங்கட்டும் என்ற எண்ணத் திலும் கூட வரக்கூடாது. யார் உண்மையான சேவாதாரிகளாக இருக்கிறார்களோ - அவர்கள் எப்பொழுதும் தலைவணங்கியிருப்பார்கள். ஒருபொழுதும் தனது ஆவேசத்தை காட்ட மாட்டார்கள்.

சுலோகன்:

இப்பொழுது பிரச்சனை சொரூபம் ஆகாதீர்கள், சமாதானம் சொரூபம் ஆகுங்கள்.