04.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! முதன் முதலில் அனைவருக்கும் தந்தையின் பாடத்தை உறுதி செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்.

 

கேள்வி:

எந்த ஒரு விஷயத்தில் ஸ்ரீமத் மனிதர்களின் வழிக்கு முற்றிலும் புறம்பாக இருக்கிறது?

 

பதில்:

நாம் மோட்சத்திற்கு சென்று விடுவோம் என்று மனிதர்களின் வழி கூறுகிறது. இந்த நாடகம் முதலும் முடிவுமற்றது அழிவற்றது, எனவே மோட்சம் யாருக்கும் கிடைக்காது என ஸ்ரீமத் கூறுகிறது. சிலர் இங்கே நடிப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை எனக் கூறலாம். ஆனால் இதில் எதுவுமே செய்ய முடியாது. நடிப்பதற்காக வந்து தான் ஆக வேண்டும். ஸ்ரீமத் தான் உங்களை உயர்ந்தவர்களாக மாற்றுகிறது. மனிதர்கள் சொல்லும் வழி பல விதமாக இருக்கும்.

 

ஓம் சாந்தி.

இப்போது நாம் பாபா முன்பு அமர்ந்திருக்கிறோம் என குழந்தைகளுக்குத் தெரியும். குழந்தைகள் தன் முன் இருக்கிறார்கள் என பாபாவும் அறிகிறார். பாபா நமக்கு பாடம் சொல்லித் தருகிறார். பிறகு அதை மற்றவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். முதன் முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அனைவரும் பாபாவையும் பாபாவின் படிப்பையும் மறந்திருக்கின்றனர். இப்போது பாபா படிக்க வைக்கக் கூடிய இந்த படிப்பு மீண்டும் 5000 வருடங்களுக்குப் பிறகு தான் கிடைக்கும். இந்த ஞானம் வேறு யாரும் கொடுக்க முடியாது. முக்கியமானது பாபாவின் அறிமுகம் ஆகும். பிறகு அனைத்தையும் புரிய வைக்க வேண்டும். நாம் அனைவரும் சகோதரர்கள். இந்த உலகம் முழுவதிலும் இருக்கக் கூடிய அனைத்து ஆத்மாக்களும் தங்களுக்குள் சகோதரர்கள். அனைவரும் அவரவருக்கென்று கிடைத்த நடிப்பை இந்த உடல் மூலமாக நடிக்கிறார்கள். இப்போது பாபா புது உலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார். அதற்கு சொர்க்கம் என்று பெயர். ஆனால் இப்போது சகோதரர்களாகிய நாம் அனைவரும் பதீதர்களாக இருக்கிறோம். ஒருவர் கூட தூய்மையாக இல்லை. அனைத்து தூய்மையற்றவர்களை தூய்மையாக்கக் கூடியவர் ஒரேயொரு தந்தையாவார். இது தூய்மையற்ற விகாரி இராவணனின் உலகம். இராவணன் என்பதன் பொருள் 5 விகாரங்கள் பெண்களுக்குள்ளும் இருக்கிறது, 5 விகாரங்கள் ஆண்களுக்குள்ளும் இருக்கிறது. பாபா மிகவும் எளிமையாகப் புரிய வைக்கிறார். நீங்களும் இவ்வாறு புரிய வைக்கலாம். ஆத்மாக்களாகிய நம் அனைவருக்கும் அவர் தந்தையாவார். அனைவரும் சகோதரர்கள் என்பதை முதலில் புரிய வைக்க வேண்டும். இது சரியா என கேளுங்கள். நாம் அனைவரும் சகோதரர்கள் என எழுதுங்கள். நமக்கு தந்தை ஒருவரே. நாம் அனைவரும் சோல்ஸ் (ஆத்மாக்கள்). அவர் சுப்ரீம் சோல். (பரம் ஆத்மா) அவருக்கு தந்தை என்று பெயர். இதை நன்கு புத்தியில் பதிய வைத்து விட்டால் சர்வ வியாபி என்ற குப்பை கூளம் விலகிப் போகும். தந்தை என்பதை முதலில் படிப்பிக்க வேண்டும். முன்பு சர்வ வியாபி என்று கூறினீர்கள். இப்போது சர்வவியாபி இல்லை எனப் புரிந்து கொண்டேன் என்பதை நன்கு எழுதும் படி கூறுங்கள். நாம் அனைவரும் சகோதரர்கள். அனைத்து ஆத்மாக்களும் காட்ஃபாதர், பரம்பிதா பரமாத்மா, அல்லா எனக் கூறுகிறார்கள். முதலில் நாம் ஆத்மா தான், பரமாத்மா இல்லை என்ற நிச்சயத்தை ஏற்படுத்த வேண்டும். நமக்குள்ளும் பரமாத்மா இல்லை. அனைவருக்குள்ளும் ஆத்மா தான் இருக்கிறது. ஆத்மா சரீரத்தை எடுத்து நடிக்கிறது. இதை உறுதி படுத்துங்கள். சரி, பிறகு அந்த தந்தை சிருஷ்டி சக்கரத்தின் முதல், இடை, கடை ஞானத்தை சொல்கிறார். தந்தையே ஆசிரியராக இருந்து படிக்க வைக்கிறார். இலட்சக் கணக்கான வருடங்களின் விஷயம் கிடையாது. இந்த சக்கரம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. சரிபாதி எப்படி? இதைப் புரிந்து கொள்ள வேண்டும். சத்யுகம், திரேதாயுகம் முடிந்து விட்டது. நோட் செய்து கொள்ளுங்கள். சொர்க்கம் மற்றும் பாதி சொர்க்கம் என்று கூறப்படுகிறது. அங்கே தேவி தேவதைகளின் ஆட்சி நடந்தது. சத்யுகத்தில் 16 கலைகள், திரேதாவில் 14 கலைகள் இருக்கிறது. சத்யுகத்தின் பிரபாவம் மிக மிக உயர்ந்தது. பெயரே சொர்க்கம், ஹெவன் ஆகும். சத்யுகத்திற்கு புது உலகம் என்று கூறப்படுகிறது. அதை தான் மகிமை செய்ய வேண்டும். புதிய உலகில் ஒரேயொரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருக்கிறது. உங்களிடம் நிச்சயத்தை ஏற்படுத்துவதற்காக சித்திரம் இருக்கிறது. இந்த சிருஷ்டி சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது. இந்த கல்பத்தின் ஆயுள் 5000 வருடம் ஆகும். இப்போது சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர் என்பது புத்தியில் இருக்கிறது. விஷ்ணுபுரி தான் இராம், சீதா புரியாக மாறுகிறது. அவர்களுடைய ஆட்சியும் நடக்கிறது அல்லவா! இரண்டு யுகங்கள் முடிந்த பிறகு துவாபரயுகம் வருகிறது. இராவணனின் இராஜ்யம் ஆரம்பம் ஆகிறது. தேவதைகள் வாம மார்க்கத்தில் சென்ற உடன் விகாரத்தின் வழி முறைகள் ஏற்படுகிறது. சத்யுகம் திரேதாவில் அனைவரும் நிர்விகாரியாக இருக்கிறார்கள். ஒரேயொரு ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருக்கிறது சித்திரங்களையும் காட்ட வேண்டும், வாய் வழியாகவும் புரிய வைக்க வேண்டும். பாபா நமக்கு ஆசிரியராக இருந்து படிக்க வைக்கிறார். பாபா தனது அறிமுகத்தை அவரே கொடுக்கிறார். நான் வருவதே பதீதர்களை தூய்மையாக்குவதற்காக என்றால் எனக்கு சரீரம் கூட அவசியம் தேவை என அவரே கூறுகிறார். இல்லையென்றால் நான் எப்படிப் பேசுவேன்? நான் சைத்தன்யமானவன், சத்தியமானவன் மேலும் அழிவற்றவன். சதோ, இரஜோ, தமோவில் ஆத்மா தான் வருகிறது. ஆத்மா தான் தூய்மையாகிறது. ஆத்மாவில் தான் அனைத்து சம்ஸ்காரங்களும் இருக்கிறது. கடந்த காலத்தின் கர்மம் மற்றும் விகர்மத்தின் சம்ஸ்காரங்களை ஆத்மா எடுத்து செல்கிறது. சத்யுகத்தில் விகர்மம் நடப்பத்தில்லை. கர்மம் செய்கிறார்கள், நடிக்கிறார்கள். ஆனால் அந்த கர்மம் அகர்மம் ஆகிறது. கீதையில் கூட இந்த வார்த்தைகள் இருக்கிறது. இப்போது நீங்கள் நடைமுறையில் புரிந்து கொள்கிறீர்கள். பாபா பழைய உலகத்தை புதிய உலகமாக மாற்ற வந்திருக்கிறார். அங்கே கர்மம் அகர்மம் ஆகிவிடும் என அறிகிறீர்கள். அதற்கு தான் சத்யுகம் என்று பெயர். இங்கே கர்மம் விகர்மம் ஆகிறது. இதற்கு கலியுகம் என்று பெயர். இப்போது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். பாபா இரண்டு பக்கத்தின் விஷயங்களையும் கூறுகிறார். ஆசிரியராகிய தந்தை என்ன புரிய வைத்தார் என ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நல்லது. மற்ற அனைத்தும் சத்குருவின் கடமையாகும். பதீதமாகிய எங்களை பாவனமாக்குங்கள் என அவரை அழைத்துள்ளார்கள். ஆத்மா தூய்மையாகும் போது உடலும் தூய்மையாகிறது. தங்கம் எப்படியோ அப்படியே ஆபரணமும் உருவாகும். 24 கேரட் தங்கம் என்றால் கலப்படம் எதுவும் செய்ய மாட்டார்கள். நகையும் சதோபிரதானமாக இருக்கும். கலப்படம் செய்வதால் தமோபிரதானமாகி தரம் குறைந்து விட்டது. ஏனென்றால் கலப்படம் ஆகிறது அல்லவா! முதலில் பாரதம் 24 கேரட் உறுதியான தங்கப் பறவையாக (பொற்குருவி) இருந்தது. அதாவது சதோபிரதானமாக, புது உலகமாக இருந்தது. பிறகு இப்போது தமோபிரதானமாகி இருக்கிறது. முதலில் தூய்மையாக தங்கமாக இருக்கிறது. புது உலகம் பரிசுத்தமானது, பழைய உலகம் பரிசுத்தமற்றது. கலப்படம் சேர்ந்து கொண்டே போகிறது. இதை பாபா மட்டும் தான் புரிய வைக்கிறார். வேறு எந்த மனித குருக்களும் அறியவில்லை. தூய்மையாக்க வாருங்கள் என அழைக்கிறார்கள். வயோதிக நிலையில் மனிதர்களை குடும்பத்திலிருந்து கரை சேர்ப்பதே சத்குருவின் வேலையாகும். நாடகத்தின் திட்டப்படி இந்த ஞானம் அனைத்தையும் பாபா தான் வந்து கொடுக்கிறார். அவரே மனித சிருஷ்டியின் விதை வடிவமாக இருக்கிறார். அவரே முழு விருட்சத்தின் ஞானத்தைப் புரிய வைக்கிறார். சிவபாபாவின் பெயர் எப்போதும் சிவனே ஆகும். மற்ற ஆத்மாக்கள் அனைவரும் நடிப்பதற்காக வருகிறார்கள். விதவிதமான பெயர்களை ஏற்கிறார்கள். தந்தையை அழைக்கிறார்கள். ஆனால் அவர் உங்களை தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக எப்படிப்பட்ட பாக்கியசாலி இரதத்தில் வருகிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. யார் பல பிறவிகளின் முடிவில் 84ம் பிறவியில் இருக்கிறாரோ அவருடைய உடலில் வருகிறேன் என பாபா புரிய வைக்கிறார். இராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக மாற்றுவதற்காக இந்த பாக்கியசாலி இரதத்தில் பிரவேசம் ஆகிறார். முதல் நம்பரில் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறார். அவரே புது உலகத்திற்கு அதிபதியாக இருக்கிறார். பிறகு அவரே கீழே இறங்குகிறார். சூரிய வம்சம், சந்திர வம்சம், வைசிய, சூத்திர வம்சம் பிறகு பிரம்மா வம்சமாக மாறுகிறார்கள். தங்கத்திலிருந்து வெள்ளி..... பிறகு நீங்கள் இரும்பிலிருந்து தங்கமாகிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய தந்தையாகிய என் ஒருவனை மட்டுமே நினையுங்கள் என பாபா கூறுகிறார். நான் யாருக்குள் பிரவேசம் செய்தேனோ அந்த ஆத்மாவிற்குள் சிறிதளவு கூட ஞானம் இல்லை. இவருக்குள் நான் பிரவேசம் ஆகிறேன். ஆகவே இவருக்கு பாக்கியசாலி இரதம் என்று கூறப்படுகிறது. நான் இவருடைய பல பிறவிகளின் கடைசியில் வருகிறேன் என அவரே கூறுகின்றார். கீதையில் இந்த வார்த்தைகள் மிகச் சரியாக கூறப்பட்டிருக்கிறது. கீதைக்கு தான் அனைத்து சாஸ்திரங்களின் தாய் எனக் கூறப்படுகிறது.

 

இந்த சங்கமத்தில் தான் தந்தை வந்து பிராமண குலம் மற்றும் தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். மற்றவர்களைப் பற்றி அனைவருக்குமே தெரியும். இவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. பல பிறவிகளின் கடைசியில் அதாவது சங்கமத்தில் தான் தந்தை வருகிறார். நான் விதை வடிவமாக இருக்கிறேன் என பாபா கூறுகிறார். கிருஷ்ணரோ சத்யுகவாசியாவர். அவரை வேறு எங்கும் பார்க்க முடியாது. மறுபிறவி எடுக்கும் போது பெயர், தோற்றம், தேசம், காலம் அனைத்தும் மாறுகிறது. முதலில் சிறிய பிள்ளையாக அழகாக இருக்கிறார். பிறகு பெரியவராகிறார். பிறகு அந்த உடலை விட்டுவிட்டு இன்னொன்றை எடுக்கிறார். இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட விளையாட்டாகும். நாடகத்தில் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இன்னொரு உடலில் இருக்கும் போது அவரை கிருஷ்ணர் எனக் கூற முடியாது. இன்னொரு உடலில் வரும் போது பெயரும் வேறொன்றாக இருக்கும். நேரம், தோற்றம், தேதி, நாள் போன்ற அனைத்தும் மாறுகிறது. உலகத்தின் வரலாறு புவியியல் அப்படியே திரும்புகிறது எனக் கூறப்படுகிறது. எனவே இந்த நாடகம் மீண்டும் நடக்கிறது. சதோ, இரஜோ, தமோவில் வந்து தான் ஆக வேண்டும். சிருஷ்டியின் பெயர், யுகத்தின் பெயர் அனைத்தும் மாறிக் கொண்டே போகிறது. இப்போது இது சங்கமயுகம் ஆகும். நான் சங்கமத்தில் தான் வருகிறேன். இதை நாம் உள்ளுக்குள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். தந்தை நமக்கு தந்தையாகவும், ஆசிரியராகவும், குருவாகவும் இருக்கிறார். பிறகு அவர் சதோபிரதானமாக ஆவதற்கான வழி முறைகளை நன்றாக தெரிவிக்கிறார். கீதையில் கூட தேகம் உட்பட தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு தன்னை ஆத்மா என உணருங்கள் என இருக்கிறது. மீண்டும் வீட்டிற்குத் திரும்ப போக வேண்டும். பகவானிடம் செல்ல வேண்டும் என்பதற்காக பக்தியில் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள்! அது முக்தி தாமம் ஆகும். கர்மத்தில் இருந்து விடுபட்டு நாம் நிராகார உலகத்தில் சென்று அமர்கின்றோம். நடிகர்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள் என்றால் நடிப்பிலிருந்து விடுபட்டு விட்டார்கள். அனைவரும் முக்திக்குச் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். முக்தி யாருக்கும் கிடைக்காது. இந்த நாடகம் முதலும் முடிவும் இல்லாத அழிவற்றதாகும். யாராவது இந்த நடிப்பு நடிப்பது எங்களுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறலாம். ஆனால் இதில் யாரும் எதுவும் செய்ய முடியாது. இது தொன்று தொட்டு நிச்சயிக்கப்பட்டுள்ள நாடகம் ஆகும். ஒருவர் கூட முக்தியைப் பெற முடியாது. அது அனைத்தும் பலவிதமான மனிதர்களின் வழியாகும். இது சிரேஷ்டமாவதற்கான சிரேஷ்ட வழியாகும். மனிதர்களை சிரேஷ்டமானவர்கள் எனக் கூற முடியாது. தேவதைகளுக்குதான் சிரேஷ்டமானவர்கள் எனக் கூறப்படுகிறவர்களை அனைவரும் வணங்குகிறார்கள். எனவே அவர்கள் சிரேஷ்டமானவர்கள் அல்லவா! ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை. இப்போது நீங்கள் 84 பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்கிறீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் தேவதை, வைகுண்டத்தின் இளவரசன் ஆவார். அவர் இங்கே எப்படி வருவார்? அவர் கீதையைக் கூறவில்லை. தேவதையாக இருந்தார். ஆகவே அனைத்து மக்களும் அவரை பூஜிக்கிறார்கள். தேவதைகள் தூய்மையானவர்கள். அவர்களே பதீதமாகி விட்டனர். நாங்கள் நிர்குணமாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த குணமும் இல்லை..... எங்களை நீங்கள் அவ்வாறு குணவான்களாக மாற்றுங்கள் எனக் கூறுகிறார்கள். சிவனிடம் சென்று எங்களுக்கு முக்தி அளியுங்கள் எனக் கூறுகிறார்கள். அவர் ஒரு போதும் ஜீவன் முக்தி, ஜீவன் பந்தனத்தில் வருவதே கிடையாது. ஆகவே, அவரை முக்தி அளியுங்கள் என அழைக்கிறார்கள். அவரே தான் ஜீவன் முக்தியும் அளிக்கிறார்.

 

பாபா மற்றும் மம்மாவின் குழந்தைகள் நாம் எனப் புரிந்துக் கொள்கிறீர்கள். அவர்களிடமிருந்து நமக்கு அளவற்ற செல்வம் கிடைக்கிறது. மனிதர்கள் இதைப் புரியாமல் யாசித்துக் கொண்டிருக்கிறார்கள். முட்டாள் என்றால் நிச்சயமாக துக்கப்படுவார்கள் அல்லவா! அளவு கடந்த துக்கத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. எனவே இந்த விஷயங்கள் அனைத்தையும் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு எல்லையற்ற தந்தையை தெரிந்துக் கொள்ளாத காரணத்தால் எவ்வளவு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்! அனாதைகளாகி இருக்கிறார்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட அனாதைகள். இவர்கள் எல்லைக்கப்பாற்பட்ட அனாதைகள். பாபா புது உலகத்தை ஸ்தாபனை செய்கிறார். இப்போது இது பதீத ஆத்மாக்களின் பதீதமான உலகம் . சத்யுகத்திற்கு பரிசுத்தமான உலகம், கலியுகத்திற்கு பழைய உலகம் என்று கூறப்படுகிறது. புத்தியில் இந்த விஷயங்கள் அனைத்தும் இருக்கிறது அல்லவா! பழைய உலகம் அழிந்து போகும். பிறகு புது உலகத்திற்கு செல்வீர்கள். இப்போது நாம் தற்காலிகமாக சங்கம யுகத்தில் இருக்கிறோம். பழைய உலகத்திலிருந்து புது உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. புது உலகத்தைப் பற்றி தெரிகிறது. இப்போது உங்களுடைய புத்தி புது உலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். உட்காரும் போதும், எழும் போதும் நாம் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறோம், பாபா நம்மை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது புத்தியில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இது நினைவில் இருக்க வேண்டும். ஆனாலும் இந்த நினைவு வரிசைக் கிரமத்தில் தான் இருக்கிறது. பாபாவும் வரிசைக் கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப அன்பு நினைவுகளைக் கொடுக்கிறார். நன்கு படிக்க கூடியவர்களிடம் நிச்சயமாக டீச்சர் அதிக அன்பு காட்டுவார்கள். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! இப்போது பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் வழிமுறைகளைக் கடை பிடிக்க வேண்டும். ஒரு தந்தையைத் தவிர வேறு யாரிடமும் புத்தி செல்லக் கூடாது. பாபாவை நினைக்கவில்லை என்றால் பாவங்கள் எப்படி விலகும்? மாயை அடிக்கடி உங்கள் புத்தி யோகத்தை துண்டிக்கிறது. மாயை மிகவும் ஏமாற்றுகிறது. பாபா எடுத்துக் காட்டு கூறுகிறார் - பக்தி மார்க்கத்தில் நான் (பிரம்மா) நிறைய இலஷ்மியின் பூஜையை செய்தேன். இலஷ்மி காலை பிடித்து விடுவது போன்ற படத்தைப் பார்த்தேன். அதை மாற்றிவிடும்படி செய்தேன். தந்தை நினைவில் அமரும் போது புத்தி எங்காவது சென்றால் தன்னையே அடித்துக் கொண்டார். புத்தி ஏன் எங்கோ செல்கிறது? கடைசியில் அழிவையும் பார்த்தார், ஸ்தாபனையையும் பார்த்தார், காட்சிகள் பார்க்கவேண்டும் என்ற ஆசை முடிந்து விட்டது. இப்போது புது உலகம் வருகிறது. நாம் இப்படி மாறுவோம் எனப் புரிந்து கொண்டார். மற்றபடி இந்த பழைய உலகம் அழியப் போகிறது. உறுதியாக நிச்சயம் ஏற்பட்டு விட்டது. தன்னுடைய இராஜ்யத்தின் காட்சி கிடைத்தது. சொர்க்கத்தின் காட்சி கிடைத்த பிறகு இந்த இராவணனின் இராஜ்யத்தை என்ன செய்வது? இது தான் ஈஸ்வரிய புத்தி. ஈஸ்வரன் பிரவேசம் ஆகி இந்த புத்தியை அளிக்கிறார். ஞானக் கலசம் தாய்மார்களுக்கு கிடைக்கிறது. எனவே தாய்மார்களிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டார். நீங்கள் அனைவருக்கும் கற்பியுங்கள். பாடத்தை கற்பித்து கற்பித்து இங்கு வரை வந்து விட்டனர். ஒருவருக்கொருவர் கூறி எவ்வளவு பேர் ஆகிவிட்டார்கள் பாருங்கள்! ஆத்மா தூய்மையாகிக் கொண்டே போகிறது. பிறகு ஆத்மாவிற்கு உடலும் தூய்மையாக வேண்டும் புரிந்து கொள்கிறார்கள். இருப்பினும் மாயை மறக்க வைக்கிறது. நீங்கள் 7 நாள் (கோர்ஸ்) படியுங்கள் எனக் கூறினால் நாளை வருகிறோம் என்கிறார்கள். அடுத்த நாள் மாயை பிடித்துக் கொள்கிறது. வருவதே இல்லை. பகவான் படிக்க வைக்கிறார் என்றால் பகவானிடம் வந்து படிப்பதில்லை. நிச்சயம் வருவோம் என்பார்கள். ஆனால் மாயை மாற்றி விடுகிறது. ஒழுங்காக வர விடுவதில்லை. யார் போன கல்பத்தில் முயற்சி செய்தார்களோ அவர்கள் நிச்சயம் செய்வார்கள். வேறு எந்த கடையும் இல்லை. நீங்கள் நிறைய முயற்சி செய்கிறீர்கள். மிகப் பெரிய பெரிய மியூசியம் கட்டுகிறீர்கள். போன கல்பத்தில் புரிந்துக் கொண்டவர்களே புரிந்துக் கொள்வார்கள். அழியத்தான் போகிறது. ஸ்தாபனையும் நடந்து கொண்டிருக்கிறது. ஆத்மா படித்து நல்ல உடலை எடுக்கும். குறிக்கோள் இது தான் அல்லவா!. இந்த நினைவு ஏன் இல்லாமல் போய்விடுகிறது? இப்போது நம்முடைய முயற்சிக்கு ஏற்ப நாம் புது உலகத்திற்கு செல்கிறோம். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இப்போது நாம் சிறிது காலத்திற்கு மட்டுமே சங்கமயுகத்தில் இருக்கிறோம், பழைய உலகம் அழிந்து போனால் நாம் புது உலகத்திற்கு சென்றுவிடுவோம். எனவே இதிலிருந்து புத்தியோகத்தை நீக்க வேண்டும் என்பது சதா புத்தியில் இருக்க வேண்டும்.

 

2. அனைத்து ஆத்மாக்களுக்கும் பாபாவின் அறிமுகத்தைக் கொடுத்து கர்மம், அகர்மம், விகர்மத்தின் ஆழமான விளைவுகளைக் கூற வேண்டும். முதலில் அல்ஃப் (தந்தை) என்ற பாடத்தை தான் உறுதி படுத்த வேண்டும்.

 

வரதானம்:

காரியம் மற்றும் நினைவின் சமநிலை மூலம் கர்மாதீத் ஸ்திதியை (மனநிலையை) அனுபவம் செய்யக் கூடிய கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகுக.

 

காரியத்தின் கூட கூடவே யோகத்தின் (நினைவு) சமநிலை இருந்தால், ஒவ்வொரு காரியத்திலும் தானாகவே வெற்றி கிடைக்கும். கர்மயோகி ஆத்மா ஒருபொழுதும் கர்மத்தின் பந்தனத்தில் மாட்ட மாட்டார்கள். கர்மபந்தனத்திலிருந்து விடுபடுவது தான் கர்மாதீத் என்று சொல்லப் படுகிறது. கர்மத்தில் மூழ்கி விடுவது என்பது கர்மாதீத் என்பது அல்ல. கர்மத்திலிருந்து விடுபடுவதல்ல, கர்மத்தின் பந்தனத்தில் சிக்கிக் கொள்ளவதிலிருந்து விடுபட்டு இருப்பது. அப்படிப்பட்ட கர்மயோகி ஆத்மா தன்னுடைய கர்மத்தின் மூலம் பலருடைய கர்மம் சிரேஷ்டமாக மாற்றக்கூடியதாக இருப்பார். அதனால் ஒவ்வொரு காரியமும் மனதிற்கு இதமானதாக இருக்கும், கடினத் தன்மை அனுபவம் ஆகாது.

 

சுலோகன்:

பரமாத்மா அன்பு தான் சமயத்தினுடைய அலாரமாக இருக்கிறது, அது அமிர்தவேளையில் எழுப்பி விடுகிறது.

 

ஓம்சாந்தி