04.11.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் நினைவு என்ற தூக்குக் (பாசக்) கயிற்றில் தன்னை மாட்டிக் கொள்ள வேண்டும் (சரீரம் மறந்த நிலை) நினைவின் மூலம் தான் ஆத்மாவானது உண்மையான தங்கமாக ஆகும்.

 

கேள்வி:

எந்த பலம் குற்றப் பார்வையை உடனேயே மாற்றிவிடும்?

 

பதில்:

ஞானம் என்ற மூன்றாவது கண்ணின் பலம் எப்பொழுது ஆத்மாவில் வந்து விடுகிறதோ அப்பொழுது குற்றப் பார்வை உடனேயே முடிவடைந்து விடுகிறது. தந்தை யின் ஸ்ரீமத் என்னவெனில், குழந்தைகளே! நீங்கள் அனைவரும் உங்களிடையே சகோதர, சகோதரர்களாக இருக்கிறீர்கள், உங்களது கண்கள் ஒருபொழுதும் குற்றம் நிறைந்ததாக ஆகவே முடியாது. நீங்கள் சதா நினைவின் போதையில் இருங்கள். ஆஹா! எனது அதிர்ஷ்டம் ஆஹா! எனக்கு பகவான் கற்பிக்கின்றார். இவ்வாறு சிந்தனை செய்யும் பொழுது போதையுடன் இருப்பீர்கள்.

 

ஓம்சாந்தி.

இனிமையிலும் இனிய, ஆன்மீகக் குழந்தைகளுக்காக ஆன்மீகத் தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். ஆன்மீகத் தந்தையும் ஆத்மா தான், ஆனால் அவர் முழுமையானவர், குறைகளற்றவர், (டங்ழ்ச்ங்ஸ்ரீற்) அவரிடம் எந்த கறையும் (துரு) ஏற்படு வது கிடையாது. என்னிடம் கறை இருக்கிறது என்று சிவபாபா கூறுவாரா? முற்றிலும் கிடையாது. இந்த தாதா (பிரம்மா) முழு கறையுடன் இருந்தார். இவரிடத்தில் தந்தை பிரவேசம் செய்ததால் உதவியும் கிடைத்தது. மூல விசயம் என்னவெனில், 5 விகாரங் களின் காரணத்தினால் ஆத்மாவில் கறை படிந்தது அசுத்தமாக ஆகிவிட்டது. ஆக எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்வீர்களோ துரு நீங்கிக் கொண்டே செல்லும். பக்தி மார்க்கத்தின் கதைளை பல பிறவிகளாகக் கேட்டுக் கொண்டே வந்தீர்கள். இங்கு கூறப்படும் விசயங்கள் முற்றிலும் தனிப்பட்டது. உங்களுக்கு இப்பொழுது ஞானக் கடலிடமிருந்து ஞானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உங்களது புத்தியில் இலட்சியம் இருக்கிறது. மற்ற எந்த சத்சங்கங்களிலும் இலட்சியம் கிடையாது. நாடகப்படி ஈஸ்வரன் சர்வவியாபி என்று கூறி என்னை நிந்தித்துக் கொண்டே இருக்கின்றனர். இது நாடகம் என்று கூட மனிதர்கள் புரிந்து கொள்வது கிடையாது. டைரக்டர், தயாரிப்பாளரும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கின்றனர். சர்வசக்திவான் என்று பாடப்பட்டாலும் அவரும் நாடகம் என்ற சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா சுயம் வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், எனது ஆத்மாவில் அழிவற்ற பாகம் பதிவாகியிருக்கிறது, அதன் படி கற்பிக்கிறேன் என்று கூறுகின்றார். எதையெல்லாம் கற்பிக்கிறேனோ அவை நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. இப்பொழுது நீங்கள் இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் புருஷோத்தமர்களாக ஆக வேண்டும். பகவானின் மகா வாக்கியம் அல்லவா! குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து இந்த லெட்சுமி நாராயணனாக ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆக வேண்டும் என்று வேறு எந்த மனிதனும் கூற முடியாது. நாம் வந்திருப்பதே உலகிற்கு எஜமானர்களாக ஆவதற்கு, நரனிலிருந்து நாராயணன் ஆவதற் காக என்பதை நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் பல பிறவிகளாக கதைகள் கேட்டுக் கொண்டே வந்தோம், எதையும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது புரிந்து கொண்டோம், உண்மையில் இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் சொர்க்கத்தில் இருந்தது, இப்பொழுது கிடையாது. திரிமூர்த்தி பற்றியும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டிருக்கிறது. பிரம்மாவின் மூலம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நான் கல்ப கல்பமாக சங்கமயுகத்தில் வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். இது பாடசாலை அல்லவா! இங்கு குழந்தைகள் நடத்தைகளை சீர்திருத்தம் செய்துக் கொள்ள வேண்டும். 5 விகாரங் களை நீக்க வேண்டும். நீங்கள் தேவதைகளின் முன் சென்று, நீங்கள் அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள்... நாங்கள் பாவிகள் என்று கூறினீர்கள். பாரதவாசிகள் தான் தேவதைகளாக இருந்தனர். சத்யுகத்தில் இந்த லெட்சுமி நாராயணன் பூஜைக் குரியவர்களாக இருந்தனர், பிறகு கலியுகத்தில் பூஜாரிகளாக ஆகிவிட்டனர். இப்பொழுது மீண்டும் பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கின்றனர். பூஜைக்குரியவர்கள் சதோ பிரதான ஆத்மாக்களாக இருந்தனர். அவர்களது சரீரமும் சதோ பிரதானமாக இருந்தது. ஆத்மா எப்படியோ அப்படித் தான் சரீரம். தங்கத்தில் கலப்படம் செய்கின்ற பொழுது அதன் மதிப்பு எவ்வளவு குறைந்து விடுகிறது! உங்களது மதிப்பும் மிக உயர்வாக இருந்தது. இப்பொழுது மதிப்பு எவ்வளவு குறைவாக ஆகிவிட்டது! நீங்கள் பூஜைக்குரியவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது பூஜாரிகளாக ஆகிவிட்டீர்கள். இப்பொழுது எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு கறைகள் நீங்கும், மேலும் தந்தை யின் மீது அன்பு ஏற்பட்டுக் கொண்டே செல்லும், குஷியும் ஏற்படும். பாபா தெளிவாகக் கூறுகின்றார் - குழந்தைகளே! முழு நாளும் நான் எவ்வளவு நேரம் நினைவு செய்கிறேன்? என்று சார்ட் வையுங்கள். நினைவு யாத்திரை என்ற வார்த்தை மிகவும் சரியானது. நினைவு செய்து செய்து, கறைகள் நீங்கி நீங்கி, கடைசி நிலை நல்ல நிலையாக ஆகிவிடும். அந்த வழிகாட்டிகள் யாத்திரைக்கு அழைத்துச் செல்கின்றனர். இங்கு ஆத்மா சுயம் யாத்திரை செய்கிறது. தனது பரந்தாமத்திற்குச் செல்ல வேண்டும், ஏனெனில் இப்பொழுது நாடகச் சக்கரம் முடிவடைகிறது. இது மிகவும் அசுத்தமான உலகம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பரமாத்மாவை யாரும் அறியவில்லை, அறியவும் மாட்டார்கள். அதனால் தான் விநாச கால விபரீத புத்தி என்று பாடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இந்த நரகமே சொர்க்கமாகும். அவர்களது புத்தியில் இந்த விசயங்கள் பதிய முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த விசயங்கள் அனைத்தையும் சிந்தனை செய்வதற்கு ஏகாந்தம் தேவை. இங்கு மிக நல்ல ஏகாந்தம் இருக்கிறது. அதனால் தான் மதுவனத்திற்கு மகிமை இருக்கிறது. குழந்தைகளுக்கு மிகுந்த குஷி ஏற்பட வேண்டும். ஜீவ ஆத்மாக்களாகிய நமக்கு பரமாத்மா கற்பித்துக் கொண்டிருக்கின்றார். கல்பத்திற்கு முன்பும் இவ்வாறு கற்பித்திருந்தார். கிருஷ்ணருக்கான விசயம் கிடையாது. அவர் சிறு குழந்தை. அவர் ஆத்மா, இவர் பரமாத்மா ஆவார். முதல் நம்பரில் வந்த ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா பிறகு கடைசி நம்பரில் வந்து விட்டது. ஆக பெயரும் மாறி விட்டது. பல பிறவிகளின் கடைசி பிறவியின் பெயரும் மாறிவிடும் அல்லவா! இவர் தாதா லேக்ராஜ் என்று கூறுகின்றார். இது தான் பல பிறவி களின் கடைசிப் பிறவியாகும். நான் இவரிடத்தில் பிரவேசம் செய்து உங்களுக்கு இராஜ யோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகின்றார். தந்தை யார் சரீரத்திலாவது வருவார் அல்லவா! சாஸ்திரங்களில் இந்த விசயம் கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை கற்பிக்கின்றார், நீங்கள் தான் படிக்கிறீர்கள். பிறகு சத்யுகத்தில் இந்த ஞானம் இருக்காது. அங்கு பலன் கிடைக்கும். தந்தை சங்கமத்தில் வந்து இந்த ஞானம் கூறுகின்றார், பிறகு நீங்கள் பதவி அடைந்து விடுகிறீர்கள். இந்த நேரமே எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை அடையக் கூடிய நேரமாகும். ஆகையால் குழந்தைகள் எந்த தவறும் செய்யக் கூடாது. மாயை அதிக தவறுகளை செய்விக்கிறது. அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை முயற்சி செய்விக்கின்றார். ஆனால் அதிர்ஷ்டத்தில் எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது! சிலர் தேர்ச்சி அடைகின்றனர், சிலர் தோல்வி அடைந்து விடுகின்றனர். இரட்டை கிரீடதாரிகளாக ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

 

குடும்ப விவகாரத்தில் இருங்கள் என்று தந்தை கூறுகின்றார். லௌகீகத் தந்தையின் சுமைகளை குழந்தைகள் இறக்க (குறைக்க) வேண்டும். சட்டப்படி நடக்க வேண்டும். இங்கு அனைத்தும் நியமத்திற்குப் புறம்பாக இருக்கிறது. நாம் தான் இந்த அளவிற்கு உயர்ந்த, தூய்மையானவர்களாக இருந்தோம், பிறகு கீழே விழுந்து வந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது மீண்டும் தூய்மையாக ஆக வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் அனைவரும் பி.கு வாக இருக்கிறீர்கள், ஆகையால் குற்றப் பார்வை இருக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் சகோதரன், சகோதரிகளாக ஆகிவிட்டீர்கள் அல்லவா! இந்த யுக்தியை தந்தை கூறுகின்றார். நீங்கள் அனைவரும் பாபா, பாபா என்று கூறிக் கொண்டே இருக்கிறீர்கள் எனில், சகோதரன், சகோதரிகளாக ஆகிவிட்டீர் கள். பகவானை அனைவரும் பாபா என்று கூறுகின்றனர் அல்லவா! நாம் சிவபாபாவின் குழந்தைகள் என்று ஆத்மாக்கள் கூறுகின்றன. பிறகு சரீரத்தில் வருகின்ற பொழுது சகோதரன், சகோதரிகளாக ஆகிவிடுகிறீர்கள். பிறகு எப்படி குற்றப்பார்வை ஏற்பட முடியும்? நீங்கள் மிகப் பெரிய பெரிய சபைகளிலும் இதைப் புரிய வைக்க முடியும். நீங்கள் அனைவரும் சகோதரன், சகோதரனாக இருக்கிறீர்கள், பிறகு பிரஜாபிதா பிரம்மா வின் மூலம் படைப்புகள் படைக்கப்பட்டன எனில் சகோதரன், சகோதரிகளாக ஆகிவிடு கிறீர்கள், வேறு எந்த சம்மந்தமும் கிடையாது. நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள், விகாரத்தில் எப்படி செல்ல முடியும்? சகோதரன் சகோதரனாகவும் இருக்கிறோம், சகோதரன் சகோதரிகளாகவும் இருக்கிறோம். இந்த கண்கள் மிகவும் ஏமாற்றக் கூடியது என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். கண்களால் நல்ல பொருளைப் பார்த்ததும் அடைய வேண்டும் என்று உள்ளம் விரும்புகிறது. ஒருவேளை கண்கள் பார்க்கவேயில்லை எனில் பொறாமையும் ஏற்படாது. இந்த குற்றப் பார்வையை மாற்ற வேண்டும். சகோதரன், சகோதரி விகாரத்தில் செல்ல முடியாது. அப்படிப்பட்ட பார்வையை நீக்கி விட வேண்டும். ஞானம் என்ற மூன்றாவது கண்ணில் பலம் இருக்க வேண்டும். அரைக் கல்பமாக இந்த கண்களினால் காரியங்கள் செய்தீர்கள், இப்பொழுது இந்த கறை அனைத்தையும் எப்படிப் போக்குவது? என்று தந்தை கேட்கின்றார். தூய்மை யாக இருந்த ஆத்மாக்களாகிய நம்மிடம் கறை ஏற்பட்டு விட்டது. எந்த அளவிற்கு தந்தையை நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு தந்தையின் மீது அன்பு ஏற்படும். படிப்பின் மூலம் அல்ல, நினைவின் மூலம் அன்பு அதிகரிக்கும். பாரதத்தின் யோகா மிகப் பழமையான யோகா ஆகும், இதன் மூலம் ஆத்மா தூய்மையாகி தனது இருப்பிடத்திற்குச் சென்று விடும். அனைத்து சகோதரர்களுக்கும் தங்களது தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். சர்வவியாபி என்ற ஞானத்தின் மூலம் மிக முற்றிலு மாக கீழே விழுந்து விட்டனர். நாடகத்தில் உங்களது பாகம் இவ்வாறு இருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். இராஜ்யம் அவசியம் ஸ்தாபனை ஆக வேண்டும். கல்பத் திற்கு முன்பு யார் எவ்வளவு முயற்சி செய்தார்களோ அவ்வளவு அவசியம் செய்வார்கள். நீங்கள் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த கண்காட்சி போன்றவைகளை பலர் பார்த்துச் செல்வார்கள். உங்களுடையது ஈஸ்வரிய இயக்கமாகும். இது நிராகார இறை தந்தையின் இயக்கமாகும். அவர்களுடையது கிறிஸ்தவ இயக்கமாகும், பௌத்த இயக்கமாகும். இது நிராகார ஈஸ்வரிய இயக்கமாகும். நிராகாரமானவர் அவசியம் யாருடைய சரீரத்திலாவது வருவார் அல்லவா! நிராகார ஆத்மாக்களாகிய நீங்களும் என் கூடவே வசிக்கக் கூடியவர்களாக இருந்தீர்கள் அல்லவா! இந்த நாடகம் எப்படி இருக்கிறது? என்பது யாருடைய புத்தியிலும் கிடையாது. இராவண இராஜ்யத்தில் அனைவரும் விபரீத புத்தியுடையவர்களாக ஆகிவிட்டனர். இப்பொழுது தந்தையின் மீது அன்பு செலுத்த வேண்டும். எனக்கு ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை என்பது தான் உங்களது உறுதி மொழியாகும். பற்றற்றவர்களாக ஆக வேண்டும். மிகுந்த முயற்சி இருக்கிறது. இது தூக்குக் கயிறில் தொங்குவது போன்றதாகும். தந்தையை நினைவு செய்வது என்றால் தூக்கில் தொங்குவதாகும். சரீரத்தை மறந்து தந்தையின் நினைவில் ஆத்மா சென்று விட வேண்டும். தந்தையின் நினைவு மிகவும் அவசியமானது. இல்லை யெனில் பாவங்கள் எப்படி அழியும்? சிவபாபா நமக்குக் கற்பிக்கின்றார் என்ற குஷி குழந்தைகளுக்குள் இருக்க வேண்டும். யாராவது கேட்டால், இவர்கள் என்ன கூறு கின்றனர்? என்று கேட்பர். ஏனெனில் அவர்கள் கிருஷ்ணரைத் தான் பகவான் என்று நினைக்கின்றனர்.

 

நாம் இப்பொழுது கிருஷ்ணரின் இராஜ்யத்திற்குச் செல்கிறோம் என்ற மிகுந்த குஷி உங்களுக்குள் ஏற்படுகிறது. நாமும் இளவரசன், இளவரசியாக ஆக முடியும். அவர் முதல் இளவரசர். புது கட்டிடத்தில் இருப்பார். பிறகு எந்த குழந்தைகள் பிறப்பு எடுப்பார் களோ அவர்கள் தாமதமாக வருகின்றனர் அல்லவா! பிறப்பு சொர்க்கத்தில் தான் இருக்கும். நீங்களும் சொர்க்கத்தில் இளவரசராக ஆக முடியும். அனைவரும் முதல் நம்பரில் வந்து விட முடியாது. வரிசைக் கிரமமாக மாயை உருவாகும் அல்லவா! தந்தை கூறுகின்றார். குழந்தைகளே! அதிகமாக முயற்சி செய்யுங்கள். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக இங்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். சத்திய நாராயணன் கதையாகும். சத்திய லெட்சுமியின் கதை என்று ஒருபொழுதும் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். அனைவரும் கிருஷ்ணரின் மீது தான் அன்பு செலுத்துகின்றனர். கிருஷ்ணரைத் தான் ஊஞ்சலில் ஆட்டுவிக்கின்றனர். ஏன் இராதைக்கு செய்வதில்லை? நாடகப்படி அவரது பெயர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்களது நண்பனாக இராதையும் இருக்கின்றார், இருப்பினும் அன்பு கிருஷ்ணர் மீது இருக்கிறது. அவரது பாகமும் நாடகத்தில் இவ்வாறு இருக்கிறது. குழந்தைகள் எப்பொழுதும் பிரியமானவர்களாகத் தான் இருப்பர். தந்தை குழந்தைகளைப் பார்த்து எவ்வளவு குஷி அடைவார். ஆண் குழந்தை பிறந்து விட்டால் குஷி அடைவார், பெண் குழந்தை பிறந்து விட்டால் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். சிலர் கொலையும் செய்து விடுகின்றனர். இராவண ராஜ்யத்தில் நடத்தைகளில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டு விடுகிறது! நீங்கள் அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள் ... என்று பாடவும் செய் கின்றனர். நாம் குணங்களற்றவர்கள். இப்பொழுது மீண்டும் இவ்வாறு குணவான்களாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நாம் பல முறை இந்த உலகிற்கு எஜமானர்களாக ஆகியிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது மீண்டும் ஆக வேண்டும். குழந்தைகளுக்கு மிகுந்த குஷியிருக்க வேண்டும். ஆஹா, சிவபாபா ! எனக்கு படிப்பு கற்பித்துக் கொண்டிருக்கின்றார். இதையே அமர்ந்து சிந்தனை செய்யுங்கள். பகவான் எனக்கு கற்பிக்கின்றார், ஆஹா எனது அதிர்ஷ்டமே ஆஹா! இவ்வாறு சிந்தனை செய்து போதையில் மூழ்கி விட வேண்டும். ஆஹா அதிர்ஷ்டசாலி ஆஹா! எல்லையற்ற தந்தை எனக்கு கிடைத்து விட்டார், நாம் பாபாவை மட்டுமே நினைவு செய்கிறேன்,. தூய்மையைக் கடைபிடிக்கிறேன்,. நான் இவ்வாறு ஆகிறேன், தெய்வீக குணங்களை தாரணை செய்கிறேன் - இதுவும் மன்மனாபவ அல்லவா! பாபா என்னை இவ்வாறு ஆக்குகின்றார். இது நடைமுறையில் அனுபவ விசயமாகும்.

 

தந்தை இனிமையிலும் இனிய குழந்தைகளுக்கு வழிமுறை கூறுகின்றார் - சார்ட் எழுதுங்கள் மற்றும் ஏகாந்ததத்தில் அமர்ந்து இவ்வாறு தனக்குள் உரையாடல் செய்யுங் கள். இந்த பேட்ஜை அணைத்துக் (மார்பு பக்கம் அணிந்து) கொள்ள வேண்டும். பகவானின் ஸ்ரீமத்படி நான் இவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறேன். இதைப் (பேட்ஜ்) பார்த்து அவர் மீது அன்பு செலுத்திக் கொண்டே இருங்கள். பாபாவின் நினைவின் மூலம் நான் இவ்வாறு ஆகிறேன். பாபா, இது உங்களுடையது அதிசயமாகும், பாபா நீங்கள் எங்களை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குவீர்கள் என்பது எங்களுக்கு முன்பு தெரியாது. தீவிர பக்தியில் கழுத்தை அறுத்துக் கொள்வதற்கும், உயிர் தியாகமும் செய்கின்றனர். அப்பொழுது தான் தரிசனம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்குத் தான் பக்த மாலை உருவாக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு மரியாதையும் இருக்கிறது. கலியுக பக்தர்கள் சக்கரவர்த்திகள் போன்று இருக்கின்றனர். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற தந்தையின் மீது அன்பு இருக்கிறது. ஒரு தந்தையைத் தவிர வேறு யாருடைய நினைவும் இருக்கக் கூடாது. முற்றிலும் லைன் (புத்தியின் கோடு) தெளிவாக இருக்க வேண்டும். இப்பொழுது நமது 84 பிறவிகள் முடித்து விட்டது. தந்தையின் கட்டளைப்படி முழுமையாக நடந்துக் கொள்ள வேண்டும். காமம் மிகப் பெரிய எதிரி. அதன் மீது வெற்றி அடைய வேண்டும். தோல்வி அடைந்து பிறகு பட்சாதப்பட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? எலும்பு முற்றிலுமாக உடைந்து விடும். மிகப் பெரிய தண்டனை கிடைத்து விடும். கறை நீங்குவதற்குப் பதிலாக மேலும் அதிக மாகி விடும். யோகாவே வராது. நினைவில் இருப்பதில் தான் மிகுந்த முயற்சி இருக்கிறது. நான் தந்தையின் நினைவில் தான் இருக்கிறேன் என்று பலர் பொய் கூறுகின்றனர். இருக்க முடியாது என்பது பாபாவிற்குத் தெரியும். இதில் மாயையின் புயல்கள் அதிகம் வருகின்றன. கனவுகளும் அவ்வாறு வரும், முழுமையாகத் தொந்தரவு செய்யும். ஞானம் மிகவும் எளிது. சிறிய குழந்தையும் புரிய வைத்து விடும். மற்றபடி நினைவு யாத்திரையில் தான் மிகுந்த சண்டை இருக்கிறது. நான் அதிக சேவை செய்கிறேன் என்ற குஷியடைந்து விடாதீர்கள். தனது குப்தமான சேவை (நினைவு) செய்து கொண்டே இருங்கள். நான் சிவபாபாவின் முதல் குழந்தை என்ற போதை இவருக்கு இருந்தது. பாபா உலகை படைக்கக் கூடியவர் எனில், நாமும் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவோம். இளவரசர் ஆகக்கூடியவன், இந்த உள்ளார்ந்த குஷியிருக்க வேண்டும். ஆனால் குழந்தை களாகிய நீங்கள் எந்த அளவிற்கு நினைவில் இருப்பீர்களோ

அந்த அளவிற்கு எனக்கு கிடையாது. பாபா அதிக சிந்தனை செய்ய வேண்டியிருக்கிறது. பாபா, பெரிய மனிதர்களை ஏன் கவனிக்கின்றார்? என்ற பொறாமை குழந்தைகளுக்கு வந்து விடக் கூடாது. தந்தை ஒவ்வொரு குழந்தையின் நாடியைப் பார்த்து அவருக்கு நன்மை செய்யும் பொருட்டு ஒவ்வொருவரையும் அவ்வாறு நடத்துகின்றார். ஒவ்வொரு மாணவனையும் எப்படி நடத்த வேண்டும்? என்று ஆசிரியர் அறிவார். குழந்தைகளுக்கு இதில் சந்தேகம் வரக்கூடாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஏகாந்தத்தில் அமர்ந்து தனக்குள் உரையாடிக் கொள்ள வேண்டும். ஆத்மாவிற்குள் படிந்திருக்கும் கறையை நீக்குவதற்காக நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும்.

 

2) எந்த ஒரு விசயத்திலும் சந்தேகம் வரக் கூடாது, பொறாமையும் கூடாது. உள்ளார்ந்த குஷியுடன் இருக்க வேண்டும். தனது குப்த (மறைமுக) சேவை செய்ய வேண்டும்.

 

வரதானம்:

சேவை செய்யும் போதும் விடுபட்ட ஸ்திதியில் இருக்கக் கூடிய யோகயுக்த், யுக்தியுக்த் சேவாதாரி ஆகுக.

 

யார் யோகத்துடன் கூடிய, யுக்தியுடன் கூடிய சேவாதாரியாக இருக்கிறாரோ, அவர் சேவை செய்யும் போதும் கூட சதா விடுபட்டவராக இருப்பார். அதிக சேவை உள்ளது, அதனால் அசரீரி ஆக முடியவில்லை என்பது கிடையாது. ஆனால் நினைவிருக்க வேண்டும் -- எனது சேவை இல்லை, இதை பாபா கொடுத்துள்ளார். எனவே நிர்பந்தனமாக இருப்பேன். டிரஸ்டியாக இருக்கிறேன், பந்தனத்திலிருந்து விடுபட்டு இருக்கிறேன் -- அந்த மாதிரி பயிற்சி செய்யுங்கள். இறுதி கால கட்டத்தில் கடைசி நிலையாகிய கர்மாதீத் அவஸ்தாவை அப்பியாசம் செய்யுங்கள். எப்படி இடையிடையே சங்கல்பங்களின் ஓட்டத்தைக் கட்டுப் படுத்துகிறீர்களோ, அது போல் அதிக பட்சமாக இறுதி சமயத்தில் கடைசி ஸ்டேஜின் அனுபவம் செய்யுங்கள். அப்போது கடைசி சமயத்தில் நீங்கள் பாஸ் வித் ஆனர் ஆக முடியும்.

 

சுலோகன் :

சுப பாவனையானது, காரணத்தை நிவாரணமாக மாற்றி விடும்.

 

ஓம்சாந்தி