05.02.19    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே ! பாபா முட்களை மலர்களாகுவதற்கு வந்துள்ளார் , பாபாவின் அன்பு முட்கள் மீதும் இருக்கிறது , மலர்களின் மீதும் இருக்கிறது . முட்களைத் தான் மலர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்

கேள்வி:
எந்த குழந்தைகளிடத்தில் ஞானத்தின் தாரணை ஏற்படுமோ அவர்களின் அடையாளத்தைச் சொல்லுங்கள் ?

பதில்:
அவர்கள் அதிசயங்களை செய்து காட்டுவார்கள். அவர்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யாமல் இருக்க முடியாது. ஞான அம்பு தைத்து விட்டால் நஷ்டமோகா (பற்றில்லாதவர்) ஆகி ஆன்மீக சேவையில் ஈடுபட்டு விடுவார்கள். அவர்களுடைய நிலை ஏக்ரஸ் ஆடாததாகவும்- அசையாததாகவும் இருக்கும். ஒருபோதும் முட்டாள் தனமான காரியங்களை செய்ய மாட்டார்கள். யாருக்கும் துக்கம் கொடுக்க மாட்டார்கள். அவகுணங்கள் எனும் முட்களை நீக்கிக் கொண்டே செல்வார்கள்.

ஓம் சாந்தி .
பாபா பெரிய லிவர் கடிகாரம் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். சரியாக வர வேண்டிய நேரத்தில் முட்களை மலர்களாக்குவதற்கு வருகின்றார். ஒரு வினாடி கூட கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க முடியாது. கொஞ்சம் கூட வித்தியாசம் ஏற்பட முடியாது. இந்த சமயத்தில் கலியுகம் முட்கள் நிறைந்த காடாக இருக்கிறது என்பதையும் குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். எனவே மலர்களாக ஆகக் கூடியவர்களுக்கு நாம் மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு வர வேண்டும். முதலில் நாம் அனைவரும் முட்களாக இருந்தோம், சிலர் சிறியதாகவும், சிலர் பெரியதாகவும் இருந்தோம். சிலர் அதிக துக்கம் கொடுக் கிறார்கள், சிலர் கொஞ்சம் கொடுக்கிறார்கள். இப்போது பாபாவின் அன்பு அனைவர் மீதும் இருக்கிறது. முட்களின் மீதும் அன்பு, மலர்களின் மீதும் அன்பு என்று பாடப்பட்டும் இருக்கிறது. முதலில் யார் மீது அன்பு? கண்டிப்பாக முட்களின் மீது தான் அன்பு இருக்கிறது. முயற்சி செய்து அவர்களை முள்ளிலிருந்து மலராக மாற்றும் அளவிற்கு அன்பு இருக்கிறது. வருவதே முட்கள் நிறைந்த உலகத்திலாகும். இதில் சர்வவியாபி என்ற விஷயமே இருக்க முடியாது. ஒருவருக்குத் தான் மகிமை இருக்கிறது. ஆத்மா சரீரத்தை எடுத்து நடிப்பை நடிக்கும்போது ஆத்மாவிற்குத் தான் மகிமை இருக்கிறது. ஆத்மா தான் உயர்ந்ததாகவும் ஆகிறது ஆத்மா தான் கீழானதாகவும் ஆகிறது. ஆத்மா சரீரத்தை எடுத்து எப்படி-எப்படி கர்மம் செய்கிறதோ, அதைப் பொருத்து இது கெட்ட கர்மம் செய்யக்கூடியது, இது நல்ல கர்மம் செய்யக்கூடியது என்று சொல்லப்படுகிறது. ஆத்மா தான் நல்ல அல்லது கெட்ட கர்மத்தை செய்கிறது. சத்யுகத்தின் தெய்வீக மலரா அல்லது கலியுகத்தின் அசுர முள்ளாக இருக்கின்றேனா என்று தங்களிடத்தில் கேளுங்கள். சத்யுகம் எங்கே, கலியுகம் எங்கே. தேவதை எங்கே, சாத்தான் எங்கே! நிறைய வித்தியாசம் இருக்கிறது. யார் முள்ளாக இருக்கிறார்களோ, அவர்கள் தங்களை மலர் என்று சொல்லிக் கொள்ள முடியாது. மலர்கள் சத்யுகத்தில் இருக்கும், கலியுகத்தில் இருப்பதில்லை. இப்போது இது சங்கமயுகமாகும், இப்போது நீங்கள் முள்ளிலிருந்து மலராக ஆகின்றீர்கள். ஆசிரியர் பாடம் (வழி முறை) அளிக்கின்றார், குழந்தைகளுடைய வேலை அதை தெளிவுபடுத்தி சொல்வதாகும். அதில் இதையும் எழுதுங்கள், ஒருவேளை மலர்களாக ஆக விரும்புகிறீர்கள் என்றால் தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் மேலும் மலர்களாக மாற்றக் கூடிய பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய அவகுணங்கள் நீங்கி விடும் மற்றும் நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். பாபா கட்டுரை (ஞானம்) கொடுக்கின்றார். குழந்தைகளுடைய வேலை அதை திருத்தி அச்சிடுவதாகும். அப்போது மனிதர்கள் அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது படிப்பாகும். பாபா உங்களுக்கு எல்லையற்ற வரலாறு-புவியியலை கற்பிக்கின்றார். அந்த பள்ளிகளில் பழைய உலகத்தின் வரலாறு-புவியியலை கற்பிக்கப் படுகிறது. புதிய உலகத்தின் வரலாறு-புவியியலை யாரும் தெரிந்திருக்கவே இல்லை. இது படிப்பாகவும் இருக்கிறது, ஞானமாகவும் இருக்கிறது. எந்தவொரு மோசமான காரியத்தை செய்வதும் முட்டாள்தனமாகும். இந்த விகார காரியம் துக்கம் தரக்கூடியது, இதை செய்யக்கூடாது என்று புரிய வைக்கபடுகிறது. துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவர் என்பது பாபாவின் மகிமை அல்லவா. யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது என்பதை இங்கே நீங்களும் கூட கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். எப்போதும் சுகத்தை கொடுத்துக் கொண்டே இருங்கள் என்று பாபா அறிவுரை கூறுகின்றார். இந்த நிலை ஒன்றும் உடனே உருவாவதில்லை. ஒரு வினாடியில் பாபாவின் ஆஸ்தியை அடைய முடியும். மற்றபடி தகுதியானவர்களாக ஆவதற்கு நேரம் பிடிக்கிறது. எல்லையற்ற தந்தையின் ஆஸ்தி சொர்க்கத்தின் இராஜ்யம் என்பதை புரிந்து கொள்கிறார்கள். பரலௌகீக தந்தையிடமிருந்து பாரதத்திற்கு உலகத்தின் இராஜ்யம் கிடைத்தது என்று நீங்கள் புரிய வைத்தும் இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் உலகத்திற்கு எஜமானர்களாக இருந்தீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் இந்த குஷி இருக்க வேண்டும். நேற்றைய விஷயமாகும், அப்போது நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தீர்கள். மனிதர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகள் என்று சொல்லி விட்டார்கள். ஒவ்வொரு யுகத்தின் ஆயுள் லட்சக்கணக்கானது என்பது எங்கே? உண்மையாக முழு கல்பத்தின் ஆயுள் 5 ஆயிரம் ஆண்டுகள் என்பது எங்கு? நிறைய வித்தியாசம் இருக்கிறது.

ஞானக்கடல் ஒரு எல்லையற்ற தந்தையே ஆவார். அவரிடமிருந்து தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். இந்த உலகத்தின் மனிதர்கள் நாளுக்கு நாள் தமோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்கிறார்கள். அதிகம் அவகுணங்களை கற்றுக் கொண்டே செல்கிறார்கள். முன்பு இந்தளவிற்கு ஊழல், கலப்படம், கீழான தன்மைகள் இருக்கவில்லை, இப்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்போது நீங்கள் பாபாவின் நினைவு பலத்தின் மூலம் சதோபிரதானமாகிக் கொண்டே செல்கிறீர்கள். எப்படி (ஏணிப்படியில்) இறங்குகிறீர்களோ, அப்படித் தான் நடைமுறையும் இருக்கும். முதலில் பாபா கிடைத்திருக்கிறார் என்ற குஷி இருக்கும், தொடர்பு ஏற்பட்டது பிறகு இருப்பது நினைவு யாத்திரையாகும். யார் அதிகமாக பக்தி செய்திருப் பார்களோ அவர்களுடைய நினைவு யாத்திரை அதிகமாக இருக்கும். பாபா நினைவு நிற்பதில்லை என்று நிறைய குழந்தைகள் சொல்கிறார்கள். பக்தியிலும் கூட அப்படி நடக்கிறது. கதை கேட்க அமருகிறார்கள் எனும்போது புத்தி வேறு-வேறு பக்கம் ஓடுகிறது. சொல்லக்கூடியவர் பார்க்கின்றார் பிறகு திடீரென்று நான் என்ன சொன்னேன் என்று கேட்டால் குழம்பி விடுகிறார்கள். சிலர் உடனே சொல்வார்கள். அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இங்கே அமர்ந்திருக்கிறார்கள் ஆனால் எதுவும் தாரணை ஆவதில்லை. ஒருவேளை தாரணை ஆனது என்றால் அதிசயம் செய்து காண்பிப்பார்கள். அவர்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யாமல் இருக்க முடியாது. யாருக்காவது வீட்டில் நிறைய சுகம் இருக்கலாம், வீடு கார் போன்றவைகள் இருக்கலாம் ஆனால் ஒருமுறை ஞான அம்பு தைத்து விட்டால் அவ்வளவு தான், கணவனிடம் நான் ஆன்மீக சேவை செய்ய விரும்புகிறேன் என்று சொல்வார்கள். ஆனால் மாயை மிகவும் பலம் வாய்ந்தது, செய்ய விடாது. பற்று இருக்கிறது அல்லவா. இத்தனை வீடுகள், இவ்வளவு சுகத்தை எப்படி விடுவது. அட எவ்வளவு பேர் முதலில் ஓடி வந்தவர்கள். பெரிய-பெரிய லட்சாதிபதி, கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்தையும் விட்டு விட்டு வந்தார்கள். இது அதிர்ஷ்டத்தைக் காட்டுகிறது, அந்தளவிற்கு சக்தி இல்லை பற்றை விடுவதற்கு. இராவணனுடைய சங்கிலிகளில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது புத்தியின் சங்கிலியாகும். பாபா புரிய வைக்கின்றார் - அட, நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக பூஜிக்கத்தக்கவர் களாக ஆகின்றீர்கள். 21 பிறவிகளுக்கு நீங்கள் ஒருபோதும் நோயுறமாட்டீர்கள், எப்போதும் ஆரோக்கிய மானவர்களாக 21 பிறவிகள் வரை இருப்பீர்கள் என்று பாபா உத்திரவாதம் அளிக்கின்றார். நீங்கள் கணவனோடு கூடவே இருங்கள் அவரிடம் தூய்மையாவேன் மற்றும் தூய்மையாக்குவேன் என்ற அனுமதி மட்டும் பெற்று வாருங்கள். பாபாவை நினைவு செய்வது உங்களுடைய கடமையாகும், அதன்மூலம் அளவற்ற சுகம் கிடைக் கிறது. நினைவு செய்து-செய்து தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். எவ்வளவு புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது. சரீரத்தின் மீது நம்பிக்கை இல்லை. பாபாவினுடையவர் களாக ஆகி விடுங்கள். அவரைப் போல பிடித்தமான பொருள் வேறு எதுவும் இல்லை. பாபா உலகத்திற்கு எஜமானர்களாக மாற்று கின்றார், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சதோபிரதானமாக ஆகுங்கள். நீங்கள் அளவற்ற சுகத்தை பார்ப்பீர்கள். பாபா சொர்க்கத்தின் நுழை வாயிலை இந்த பெண்களின் மூலம் திறக்க வைக்கின்றார். தாய் மார்களின் தலையில் தான் ஞானக்கலசம் வைக்கப்படுகிறது. பாபா தாய்மார்களைத் தான் டிரஸ்டியாக்கி உள்ளார், அனைத்தையும் தாய்மார்களாகிய நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். இவரின் (பிரம்மா) மூலம் கலசம் வைத்தார் அல்லவா. கடலை கடைந்தார்கள், அமிர்த கலசம் லஷ்மிக்கு கொடுக்கப் பட்டது என்று அவர்கள் எழுதி விட்டார்கள். பாபா சொர்க்கத்தின் நுழை வாயிலை திறந்து கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அப்படி எனும்போது நான் ஏன் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடையக்கூடாது. ஏன் வெற்றிமாலையில் மணியாக கோர்க்கப்படக் கூடாது, மகாவீராக ஆகக்கூடாது. எல்லையற்ற தந்தை குழந்தைகளை மடியில் ஏந்துகிறார் - எதற்காக? சொர்க்கத்திற்கு எஜமானர்களாக மாற்றுவதற்கு. ஒரேயடியாக முட்களுக்கு அமர்ந்து படிப்பினை கொடுக்கின்றார். எனவே முட்களின் மீது அன்பு இருக்கிறது அல்லவா அப்போது தான் அவர்களை மலர்களாக மாற்றுகின்றார். பாபாவை அழைப்பதே தூய்மையற்ற உலகத்தில் மற்றும் தூய்மையற்ற சரீரத்திலாகும், நிர்வாண தாமத்தை விட்டு விட்டு இங்கே வாருங்கள் என்று. நாடகத்தின் படி நான் முட்கள் நிறைந்த உலகத்தில் தான் வர வேண்டியதாக இருக்கிறது என்று பாபா கூறுகின்றார். எனவே கண்டிப்பாக அன்பு இருக்கிறது அல்லவா. அன்பு இல்லாமல் எப்படி மலர்களாக மாற்ற முடியும்? இப்போது நீங்கள் கலியுக முள்ளிலிருந்து சத்யுக தேவதை சதோபிரதான உலகத்திற்கு எஜமானர்களாக ஆகுங்கள். எவ்வளவு அன்போடு புரிய வைக்கப்படுகிறது. குமாரி மலராக இருக்கின்றார் ஆகையினால் தான் அனைவரும் அவரது காலில் விழுகிறார்கள். அவர்கள் தூய்மையற்றவர்களாக ஆகிறார்கள் எனும்போது அனைவருக்கும் தலை வணங்க வேண்டியிருக்கிறது. ஆகவே என்ன செய்ய வேண்டும்? மலர் மலராக இருக்க வேண்டும் அப்போது எப்போதைக்கும் மலராகவே இருக்க முடியும். குமாரி விகாரமற்றவர் அல்லவா, பிறவி என்னவோ விகாரத்தின் மூலம் தான் எடுத்திருக்கிறார். எப்படி சன்னியாசிகள் விகாரத்தின் மூலம் தான் பிறவி எடுக்கிறார்கள் அல்லவா. திருமணம் செய்து விட்டு பிறகு வீடு வாசலை துறந்து விடுகிறார்கள். பிறகு அவர்களை மகான் ஆத்மாக்கள் என்று சொல்கிறார்கள். சத்யுகத்தின் மகான் ஆத்மா உலகத்திற்கு எஜமானர்கள் எங்கே, இந்த கலியுகத்தின் மகாத்மாக்கள் எங்கே! ஆகையினால் தான், கலியுகத்து முட்களா அல்லது சத்யுகத்தின் மலர்களா? கீழானவர்களா அல்லது உயர்ந்தவர்களா? என்ற கேள்வியை எழுதுங்கள் என்று பாபா கூறினார்.

இது கீழான உலகம் இப்போது இராவண இராஜ்யமாகும். அசுர இராஜ்யம், ராட்சஸ இராஜ்யம் என்று சொல்கிறார்கள். ஆனால் தங்களை யாரும் அப்படி புரிந்து கொள்கிறார்களா என்ன? இப்போது குழந்தை களாகிய நீங்கள் யுக்தியோடு கேள்வி கேட்கிறீர்கள் என்றால் அவர்கள், உண்மையில் நாம் காமுகர்களாக, கோபக்காரர்களாக, பேராசை கொண்டவர்களாக இருக்கிறோம் என்று தாங்களாகவே புரிந்து கொள்கிறார்கள். கண்காட்சியில் கூட அப்படி எழுதினீர்கள் என்றால் அவர்களுக்கு, நாம் கலியுக முட்களாக இருக்கிறோம் என்ற உணர்வு வரும். இப்போது நீங்கள் மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபா எப்போதும் மலராக இருக்கின்றார். அவர் ஒருபோதும் முள்ளாக ஆவதில்லை. மற்றவர்கள் அனைவரும் முள்ளாக ஆகிறார்கள். அந்த மலர் (சிவபாபா) கூறுகின்றார் - உங்களை கூட முள்ளிலிருந்து மலராக மாற்றுகின்றேன். நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். மாயை எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. நீங்கள் மாயையினுடையவர்களாக ஆக வேண்டுமா என்ன? பாபா உங்களை தன்னுடைய பக்கம் இழுக்கின்றார், மாயை தன்னுடைய பக்கம் இழுக்கிறது. இது பழைய செருப்பாகும். ஆத்மாவிற்கு முதலில் புதிய செருப்பு கிடைக்கிறது பிறகு பழையதாக ஆகிறது. இந்த சமயத்தில் அனைத்து செருப்புகளும் தமோபிரதானமாக இருக்கிறது. நான் உங்களை வெல்வெட் துணியைப்போல் மாற்றி விடுகின்றேன். அங்கே ஆத்மா தூய்மையாக இருக்கின்ற காரணத்தினால் சரீரமும் வெல்வெட்டைப் போல் இருக்கிறது. எந்த குறையும் கிடையாது. இங்கே நிறைய குறைபாடுகள் இருக்கின்றன. அங்கே இருக்கும் முகத்தைப் பாருங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது. அந்த முக அமைப்பை இங்கே யாரும் உருவாக்க முடியாது. இப்போது பாபாவும் கூறுகின்றார் நான் எவ்வளவு உயர்ந்தவர்களாக மாற்றுகின்றேன். வீடு குடும்பத்தில் (இல்லறம்) இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக ஆகுங்கள் மற்றும் பிறவி-பிறவிகளுக்குமாக ஏறியிருக்கும் துருவை நீக்குவதற்கு யோக அக்னி இருக்கிறது. இதில் பாவங்கள் அனைத்தும் பஸ்மமாகி விடும். நீங்கள் உண்மையான தங்கமாக ஆகி விடுவீர்கள். அழுக்கை நீக்குவதற்கு மிகவும் நல்ல யுக்தியை கூறுகின்றார், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். உங்களுடைய புத்தியில் இந்த ஞானம் இருக்கிறது. ஆத்மாவும் கூட மிகவும் சிறியதாக இருக்கிறது. பெரியதாக இருந்தால் இவருக்குள் பிரவேசிக்க முடியாது. எப்படி பிரவேசிக்கும்? ஆத்மாவை பார்ப்பதற்காக டாக்டர்கள் அதிகம் மண்டை உடைத்துக் கொள்கிறார்கள், ஆனால் பார்ப்பதற்கு தெரிவதில்லை. காட்சி கிடைக்கிறது. ஆனால் சாட்சாத்காரத்தின் மூலம் எந்த பயனும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு வைகுண்டத்தின் காட்சி கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அதனால் என்ன பயன்! பழைய உலகம் முடிந்தால் தான் வைகுண்டவாசிகளாக ஆக முடியும். இதற்கு நீங்கள் யோகப் பயிற்சி செய்யுங்கள்.

எனவே பாபா புரிய வைக்கின்றார் குழந்தைகளே, முதலில் முட்களின் மீது அன்பு ஏற்படுகிறது. அனைத்திலும் அதிகமான அன்புக்கடல் பாபா ஆவார். குழந்தைகளாகிய நீங்களும் கூட இனிமை யானவர்களாக ஆகிக் கொண்டே செல்கிறீர்கள். தங்களை ஆத்மா என்று புரிந்து சகோதர-சகோதரர்களை பார்த்தீர்கள் என்றால் குற்றமுடைய சிந்தனை முற்றிலும் நீங்கி விடும் என்று பாபா கூறுகின்றார். சகோதர-சகோதரி என்ற சம்மந்தத்தின் மூலம் கூட புத்தி ஓடி விடுகிறது ஆகையினால் சகோதர - சகோதரனை பாருங்கள். அங்கே சரீரமே இல்லை எனும்போது உணர்வும் வராது அல்லது மோகமும் இருக்காது. பாபா ஆத்மாக்களுக்குத் தான் படிப்பிக்கின்றார். எனவே நீங்களும் தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். இந்த சரீரம் அழியக்கூடியது, இதன் மீது மனதின் மீது பற்று வைக்கலாமா? சத்யுகத்தில் இதன்மீது அன்பு ஏற்படுவதில்லை. மோகத்தை வென்ற ராஜாவின் கதையை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டுவிட்டு சென்று மற்றொன்றை எடுக்கிறது. நடிப்பு கிடைத்திருக்கிறது, ஏன் பற்று வைக்க வேண்டும்? ஆகையினால் பாபாவும் கூறுகின்றார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அம்மா இறந்தாலும், மனைவி இறந்தாலும் அல்வா(முரளி கேட்க வேண்டும்) சாப்பிட வேண்டும். யார் இறந்தாலும் நான் அழ மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள். நீங்கள் தங்களுடைய தந்தையை நினைவு செய்யுங்கள், சதோபிரதானமாக ஆகுங்கள். சதோபிர தானமாக ஆவதற்கு வேறு எந்த வழியும் இல்லை. முயற்சியின் மூலம் தான் வெற்றி மாலையின் மணியாக ஆக முடியும். முயற்சியின் மூலம் என்னவாக ஆக வேண்டுமோ அப்படி ஆகலாம். கல்பத்திற்கு முன்னால் என்ன முயற்சி செய்திருப்பீர்களோ அதையே தான் செய்வீர்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். பாபா ஏழைப்பங்காளன் ஆவார். ஏழைகளுக்கு தான் தானமும் கொடுக்கப்படுகிறது. பாபா அவரே கூறுகின்றார், நானும் கூட சாதாரண உடலில் வருகின்றேன். ஏழையினுடைய சரீரத்திலோ அல்லது செல்வந்தருடைய சரீரத்திலோ வருவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தான் பாபாவை தெரிந்துள்ளீர்கள், மற்றபடி முழு உலகமும் சர்வவியாபி என்று சொல்லி விடுகிறது. அங்கே துக்கத்தின் பெயர் கூட இல்லாத தர்மத்தை பாபா ஸ்தாபனை செய்கின்றார்.

பக்திமார்க்கத்தில் மனிதர்கள் ஆசீர்வாதம் கேட்கிறார்கள். இங்கே கருணையின் விஷயம் கிடையாது. யாருக்கு தலை வணங்குவீர்கள்? புள்ளி அல்லவா. பெரிய பொருளாக (உருவமாக) இருந்தால் தலை வணங்கலாம். சிறிய பொருளுக்கு தலை வணங்கவும் முடியாது. யாரை கும்பிடுவீர்கள். இந்த பக்திமார்க்கத்தின் அடையாளங்கள் அனைத்தும் மறைந்து விடுகிறது. கையெடுத்து கும்பிடுவது பக்தி மார்க்கமாகி விடுகிறது. சகோதரி - சகோதரன் இருக்கிறார்கள், வீட்டில் கும்பிடுகிறார்களா என்ன? வாரிசாக்குவதற்காகத் தான் குழந்தை களை கேட்கிறார்கள். குழந்தை வாரிசு அல்லவா ஆகையினால் தான் பாபா குழந்தைகளை நமஸ்கரிக்கின்றார். பாபா குழந்தைகளுக்கு சேவகன் ஆவார். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும் . ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.


தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அழியக்கூடிய சரீரத்தின் மீது மனதை ஈடுபடுத்தல் கூடாது. மோகத்தை வென்றவர்களாக ஆக வேண்டும், யாராவது சரீரத்தை விட்டு விட்டால், நான் ஒருபோதும் அழமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்.

2) பாபாவிற்குச் சமமாக இனிமையானவர்களாக ஆக வேண்டும், அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. முட்களை மலர்களாக்கும் சேவை செய்ய வேண்டும். தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.

வரதானம்:
தேக உணர்விலிருந்து ( நியாரா ) விலகியவராக ஆகி , பரமாத்ம ( ப்யாரா ) அன்பின் அனுபவம் செய்யக் கூடிய தாமரை மலரின் ஆசனத்தில் ( கமல ஆசனம் ) அமர்ந்திருப்பவர் ஆகுக !.

கமல ஆசனம் பிராமண ஆத்மாக்களின் உயர்வான நிலையின் அடையாளம் ஆகும். அப்பேர்ப்பட்ட கமல ஆசனதாரி ஆத்மாக்கள் இந்த தேக உணர்வி-ருந்து இயல்பாகவே விலகி இருப்பார்கள். அவர்களை சரீரத்தின் உணர்வு தன் பால் கவருவதில்லை. எப்படி பிரம்மா தந்தைக்கு நடந்தாலும் சென்றாலும் ஃபரிஷ்தா ரூபம் அல்லது தேவதை ரூபம் எப்பொழுதும் நினைவில் இருந்தது அதே போல இயல்பாகவே (தேஹி அபிமானி ஸ்திதி ) ஆத்ம உணர்வின் நிலை எப்பொழுதுமே இருத்தல். இதற்கு தான் தேக உணர்விலிருந்து விலகியவர் என்று கூறுவார்கள். இது போல தேக உணர்வி-ருந்து நி(யாரா) விலகி இருப்பவர்களே (பரமாத்மா ப்யாரே) பரமாத்மாவிற்கு பிரியமானவர்களாக ஆகி விடுகிறார்கள்..


சுலோகன்:
சுலோகன்: உங்களுடைய விசேஷ தன்மைகள் ( சிறப்புகள் ) மற்றும் குணங்கள் ஆகியவை பிரபு பிரசாதம் ஆகும் . அவற்றை தனது என்று ஏற்றுக் கொள்வது தான் தேக அபிமானம் ஆகும் .