05-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

தெய்வீக காரியம் மற்றும் சிரேஷ்ட தர்ம ஸ்தாபனைக்காக குழந்தைகளாகிய நீங்கள் என்ன முயற்சி செய்கிறீர்கள்?

பதில்:

5 விகாரங்களை விடுவதற்கான முயற்சி நீங்கள் இப்பொழுது செய்கிறீர்கள். ஏனெனில் இந்த விகாரங்கள் தான் அனைவரையும் கீழானவர்களாக ஆக்கியிருக்கிறது. இந்த நேரத்தில் அனைத்து தெய்வீக தர்மம் மற்றும் கர்மமும் கீழானதாக இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை தான் ஸ்ரீமத் கொடுத்து சிரேஷ்ட தர்மம் மற்றும் சிரேஷ்ட தெய்வீக காரியத்தை ஸ்தாபனை செய் கின்றார். நீங்கள் ஸ்ரீமத் படி நடந்து, தந்தையின் நினைவின் மூலம் விகாரங்களின் மீது வெற்றி அடை கிறீர்கள். படிப்பின் மூலம் தனக்குத் தானே இராஜ்ய திலகம் கொடுத்துக் கொள்கிறீர்கள்.

பாடல்:

உன்னை அடைந்ததால் ............

ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இந்த பாட்டைக் கேட்டீர்கள் அல்லவா! ஆன்மீகக் குழந்தைகள் தான் பாபா என்று கூறுகின்றனர். இந்த எல்லையற்ற தந்தை எல்லையற்ற சுகம் கொடுக்கக் கூடியவர், அதாவது அவர் அனைவருக்கும் தந்தை என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அவருக்கு அனைவரும் எல்லையற்ற குழந்தைகளாக இருக்கிறீர்கள், ஆத்மாக்கள் நினைவு செய்து கொண்டே இருக்கின்றன. ஏதாவது ஒரு ரூபத்தில் நினைவு செய்கிறது, ஆனால் நமக்கு அந்த பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து உலக இராஜ்யம் கிடைக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. தந்தை நமக்கு கொடுக்கும் உலக இராஜ்யமானது நிலையானதாக, உறுதியானதாக 21 பிறவிகளுக்கு இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். முழு உலகிலும் நமது இராஜ்யம் இருக்கும். அதை யாரும் அபகரிக்க முடியாது, கொள்ளையடிக்க முடியாது. நமது இராஜ்யம் உறுதியானதாக இருக்கும். ஏனெனில் அங்கு ஒரே ஒரு தர்மம் தான் இருக்கும், பிரிவினைகள் இருக்காது. அது பிரிவினை இல்லாத இராஜ்யமாகும். குழந்தைகள் எப்பொழுதெல்லாம் பாட்டு கேட்பீர்களோ அப்பொழுது தனது இராஜ்யத்தின் போதை வர வேண்டும். இப்படிப்பட்ட பாட்டுகள் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது அனைத்தும் குப்தமாக இருக்கிறது, மேலும் பெரிய பெரிய மனிதர்களிடத்தில் மிகுந்த ஆடம்பரம் இருக்கும். உங்களிடம் எந்த ஆடம்பரமும் கிடையாது. பாபா யாரிடம் பிரவேசம் ஆகியிருக்கிறாரோ அவரும் எவ்வளவு சாதாரணமாக இருக்கின்றார் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்! இங்கு ஒவ்வொரு மனிதனும் அதர்மமான, சீ சீ காரியங்கள் தான் செய்கின்றனர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அதனால் தான் புத்தியற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். புத்திக்கு முற்றிலும் பூட்டு போடப்பட்டிருக்கிறது. நீங்கள் எவ்வளவு புத்திசாலிகளாக இருந்தீர்கள்! உலகிற்கு எஜமானர்களாக இருந்தீர்கள்! இப்பொழுது மாயை எதற்கும் பயன்படாத வர்களாக, புத்தியற்றவர்களாக ஆக்கிவிட்டது. தந்தையிடம் செல்வதற்காக யாகம், தவம் போன்றவை களை அதிகம் செய்து கொண்டிருக்கின்றனர், ஆனால் அடைவது எதுவும் கிடையாது. இவ்வாறே ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றனர். நாளுக்கு நாள் தீமைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எந்த அளவிற்கு மனிதர்கள் தமோ பிரதானமாக ஆகிறார்களோ அந்த அளவிற்கு தீமைகள் ஏற்பட்டே ஆக வேண்டும். எந்த ரிஷி, முனிவர்கள் மகிமைக்குரியவர்வகளோ இருந்தார் களோ அவர்கள் தூய்மையாக இருந்தனர். தெரியாது தெரியாது என்று கூறினர். இப்பொழுது தமோ பிரதானமாக ஆகிவிட்டபடியால் சிவோஹம், சர்வவியாபி, என்னிடத்தில், உன்னிடத்தில் அனைவரி டத்திலும் இருக்கின்றார் என்று கூறுகின்றனர். அவர்கள் பரமாத்மா என்று மட்டுமே கூறி விடுகின்றனர், ஒருபொழுதும் பரம்பிதா என்று கூறமாட்டார்கள். பரம்பிதாவை சர்வவியாபி என்று கூறுவது தவறாக ஆகிவிடுகிறது. அதனால் தான் ஈஸ்வரன் அல்லது பரமாத்மா என்று கூறிவிடு கின்றனர். பிதா (தந்தை) என்ற வார்த்தை புத்தியில் வருவது கிடையாது. யாராவது கூறினாலும் பெயரளவிற்குத் தான் கூறுகின்றனர். ஒருவேளை பரம்பிதா என்று புரிந்து கொண்டால் புத்தி ஒரேயடியாக ஜொலிக்க ஆரம்பித்து விடும். தந்தை சொர்க்கத்தின் ஆஸ்தி கொடுக்கின்றார், அவர் தான் சொர்க்கத்தை ஸ்தாபிக்கும் தந்தை ஆவார். பிறகு நாம் ஏன் நரகத்தில் விழுந்து கிடக்கிறோம்? இப்பொழுது நாம் முக்தி, ஜீவன்முக்தியை எப்படி அடைவது? இது யாருடைய புத்தியிலும் வருவது கிடையாது. ஆத்மா தூய்மையற்றதாக ஆகியிருக்கிறது. ஆத்மா முதலில் சதோ பிரதானமாக, புத்திசாலியாக இருந்தது, பிறகு சதோ, ரஜோ, தமோவிற்கு வருகிறது. புத்தியற்றதாக ஆகிவிட்டது. இப்பொழுது உங்களுக்கு புத்தி கிடைத்து விட்டது. பாபா நமக்கு இந்த நினைவை ஏற்படுத்தி இருக்கின்றார். பாரதம் புது உலகமாக இருந்த பொழுது நமது இராஜ்யம் இருந்தது. ஒரே வழி, ஒரே மொழி, ஒரே தர்மம், ஒரே மகாராஜா, மகாராணியின் இராஜ்யம் இருந்தது. பிறகு துவாபரயுகத்தில் விகார மார்க்கம் ஆரம்ப மாகிறது. பிறகு ஒவ்வொருவரின் செயல்கள் ஆதாரமாக ஆகிவிடுகிறது. செயல்களின் ஆதாரத்தில் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறது. 21 பிறவிகளுக்கு நீங்கள் இராஜ்யம் அடையும் படியான செயல்களை நான் உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். அங்கும் எல்லைக்குட்பட்ட தந்தை கிடைப்பார், ஆனால் இந்த இராஜ்ய ஆஸ்தி எல்லையற்ற தந்தை கொடுத்தது என்ற ஞானம் அங்கு இருக்காது. பிறகு துவாபர யுகத்திலிருந்து இராவண இராஜ்யம் ஆரம்ப மாகிறது, விகார சம்மந்தம் ஏற்பட்டு விடுகிறது. பிறகு செயல்களின் ஆதாரத்தில் பிறவி கிடைக்கும். பாரதத்தில் பூஜ்ய இராஜாக்களும் இருந்தனர், பூஜாரி இராஜாக்களும் இருந்தனர். சத்யுகம், திரேதாவில் அனைவரும் பூஜைக்குரியவர்களாக இருப்பர், அங்கு பூஜை அல்லது பக்தி இருக்காது. துவாபர யுகத்தில் பக்தி ஆரம்பமாகின்ற பொழுது இராஜா, ராணி எப்படியோ பிரஜைகளும் அவ்வாறே ஆகிவிடுகின்றனர், பக்தர்களாக ஆகிவிடுகின்றனர். உயர்ந்ததிலும் உயர்ந்த சூரியவம்சி இராஜாவாக இருந்தவரே பூஜாரியாக ஆகிவிடுகின்றார்.

இப்பொழுது நீங்கள் விகாரமற்றவர்களாக ஆகிறீர்கள், அதன் பலன் 21 பிறவிகளுக்கு கிடைக்கிறது. பிறகு பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது. தேவதைகளின் கோயில் கட்டி பூஜை செய்து கொண்டிருக் கின்றனர். இது பாரதத்தில் தான் நடைபெறுகிறது. தந்தை கூறக் கூடிய 84 பிறவிக் கதையும் பாரதவாசிகளுக்குத் தான். மற்ற தர்மத்தைச் சார்ந்தவர்கள் வருவதே தாமதமாகத் தான். பிறகு வளர்ச்சி அடைந்து அடைந்து எண்ணிக்கை அதிகமாகிவிடுகிறது. வித விதமான தர்மத்தினர்களின் முகம், ஒவ்வொரு விசயத்திலும் வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. சடங்குகளிலும் வேறுபாடு இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் பொருட்களும் தேவை. எவ்வாறு விதை சிறியதாக இருக்கிறது, மரம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! மரத்தின் இலைகளை கணக்கிட முடியாது. அதே போன்று பக்தியும் பலவிதமாக விரிவாகிவிட்டது. அதிக சாஸ்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கின்றனர். பக்தி மார்க்கத்தின் பொருட்கள் அனைத்தும் அழிந்து விடும் என்று குழந்தைகளுக்கு தந்தை கூறுகின்றார். இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். பக்தியின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கிறது அல்லவா! பாட்டுக்கள், நடனம், அலங்காரம் என்று எவ்வளவு செலவு செய்கின்றனர்! இப்பொழுது தந்தையாகிய என்னை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆதி சநாதன தனது தர்மத்தை நினைவு செய்யுங்கள். பல பிறவிகளாக நீங்கள் பல வகையான பக்தி செய்து வந்தீர்கள். சந்நியாசிகளும் ஆத்மாக்கள் வசிக்கும் இடத்தை அதாவது தத்துவத்தை பரமாத்மா என்று புரிந்து கொண்டனர். பிரம்மம் அல்லது தத்துவத்தை மட்டுமே நினைவு செய்கின்றனர். உண்மையில் சந்நியாசிகள் சதோ பிரதானமாக இருக்கின்றனர் எனில் அவர்கள் அமைதியாக சென்று காட்டில் இருக்க வேண்டும். அவர்கள் பிரம்மத்திற்கு சென்று ஐக்கியமாகி விடுவர் என்பது கிடையாது. பிரம்மத் தின் நினைவில் இருந்து சரீரத்தை விடும் பொழுது பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்று அவர்கள் நினைக்கின்றனர். யாரும் ஐக்கியமாகி விட முடியாது என்று தந்தை கூறுகின்றார். ஆத்மா அழிவற்றது அல்லவா! அது எப்படி ஐக்கியமாக முடியும்? பக்தி மார்க்கத்தில் எப்படியெல்லாம் கூறியிருக்கின்றனர்! பிறகு பகவான் ஏதாவது ஒரு ரூபத்தில் வருவார் என்றும் கூறுகின்றனர். யார் கூற்று சரியானது? நாம் பிரம்மத்தை நினைத்து பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். பகவான் ஏதாவது ஒரு ரூபத்தில் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்கு வருவார் என்று இல்லற தர்மத்தினர் கூறுகின்றனர். மேலிருந்து தூண்டுதல் மூலமாகவே கற்றுக் கொடுப்பார் என்று என்பது கிடையாது. ஆசிரியர் வீட்டில் அமர்ந்த படியே தூண்டுதல் கொடுப்பாரா என்ன? தூண்டுதல் என்ற வார்த்தையே கிடையாது. தூண்டுதல் (பிரேரனை) மூலம் எந்த காரியமும் நடைபெறாது. சங்கரின் தூண்டுதல் மூலம் விநாசம் என்று கூறப்படுகிறது, ஆனால் இது (அழிவு என்பது) நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. அவர்கள் இந்த அணு ஆயுதங்களை உருவாக்கியே ஆக வேண்டும். மகிமைக்காக இது பாடப்பட்டிருக்கிறது. யாரும் தங்களது பெரியவர்களின் மகிமையையே அறியவில்லை. தர்ம ஸ்தாபகர்களையும் குரு என்று கூறிவிடுகின்றனர். ஆனால் அவர்கள் தர்மத்தை மட்டுமே ஸ்தாபனை செய்கின்றனர். சத்கதி செய்பவர்கள் தான் குரு என்று அழைக்கப்படு கின்றனர். அவர்கள் தர்மத்தை ஸ்தாபனை செய்ய வருகின்றனர். அவர்களுக்குப் பின்னால் அவர்களது வம்சத்தினர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். யாருக்கும் (சத்கதி) ஜீவன் முக்தி அடையச் செய்வதே கிடையாது. ஆக அவர்களை எப்படி குரு என்று கூற முடியும்? குரு ஒரே ஒருவர் தான், அவர் தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் என்று கூறப்படுகின்றார். பகவான், தந்தை வந்து தான் அனைவருக்கும் சத்கதி செய்கின்றார். முக்தி, ஜீவன்முக்தி கொடுக்கின்றார். அவரை நினைக் காமல் யாரும் இருப்பது கிடையாது. கணவன் மீது எவ்வளவு தான் அன்பு இருந்தாலும் ஹே பகவான், ஹே ஈஸ்வரா என்று அவசியம் கூறுவர். ஏனெனில் அவர் தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஆவார். தந்தை வந்து புரிய வைக்கின்றார். இவை அனைத்தும் படைப்புகள் ஆகும். படைக்கும் தந்தை நான் ஆவேன். அனைவருக்கும் சுகம் கொடுப்பவர் அந்த ஒரே ஒரு தந்தை மட்டுமே. சகோதரன் சகோதரனுக்கு ஆஸ்தி கொடுக்க முடியாது. ஆஸ்தி எப்பொழுதும் தந்தையிடமிருந்து தான் கிடைக்கும். எல்லையற்ற குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தி கொடுக்கிறேன், அதனால் தான் ஹே பரம்பிதா, கருணை காட்டுங்கள், இறக்கம் காட்டுங்கள் என்று என்னை நினைவு செய்கின்றனர். எதுவும் புரிந்து கொள்வது கிடையாது. பக்தி மார்க்கத்தில் பல வகையில் மகிமை செய்கின்றனர். இதுவும் நாடகப்படி அவர்களது நடிப்பு நடித்துக் கொண்டிருக்கின்றனர். நான் இவர்கள் அழைப்பதனால் வருவது கிடையாது என்று தந்தை கூறுகின்றார். இது நாடகத்தில் பதிவாகியிருக் கிறது. நாடகத்தில் நான் வருவது பதிவாகியிருக்கிறது. பல தர்மங்களை அழிப்பது, ஒரே தர்மத்தை ஸ்தாபனை செய்து அல்லது கலியுகத்தை விநாசம் செய்து சத்யுகத்தை ஸ்தாபனை செய்ய வேண்டி யிருக்கிறது. நான் எனது நேரத்தில் தானாகவே வருகிறேன். இந்த பக்தி மார்க்கமும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. எப்பொழுது பக்தி மார்கத்தின் பாகம் முடிவடைகிறதோ அப்பொழுது நான் வருகிறேன். நாம் இப்பொழுது உங்களை அறிந்து கொண்டோம், 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறோம் என்று குழந்தைகளும் கூறுகிறீர்கள். கல்பத்திற்கு முன்பு பாபா நீங்கள் பிரம்மாவின் உடலில் தான் வந்திருந்தீர்கள். இந்த ஞானம் உங்களுக்கு இப்பொழுது கிடைக்கிறது. பிறகு ஒருபொழுதும் கிடைக்காது. இது ஞானம், அது பக்தியாகும். ஞானத்தின் பலன் முன்னேற்றம், முன்னேறும் கலையாகும். விநாடியில் ஜீவன்முக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. ஜனகருக்கு விநாடியில் ஜீவன்முக்தி கிடைத்தது அல்லவா? இராதை அனுராதாவாகவும், ஜனகர் சீதையின் தந்தை அநுஜனக் ஆகவும் அந்த ஞானத்தின் மூலம் ஆகின்றனர் என்ற வார்த்தையும் இருக்கிறது. இதையும் ஒரு உதாரணமாக கூறியிருக்கின்றனர். எதையும் புரிந்து கொள்வது கிடையாது. ஜனகர் விநாடியில் ஜீவன்முக்தி அடைந்ததாக கூறுகின்றனர். ஒரே ஒரு ஜனகர் தான் ஜீவன்முக்தி அடைந்தாரா? ஜீவன்முக்தி என்றால் இந்த இராவண இராஜ்யத்திலிருந்து ஜீவன் முக்தி ஆகுவதாகும்.

அனைத்து குழந்தைகளுக்கும் எவ்வளவு துர்கதி ஏற்பட்டு விட்டது என்பதை தந்தை அறிவார். அவர்களுக்கு சத்கதி கிடைக்க வேண்டும். துர்கதியிலிருந்து உயர்ந்த கதி, முக்தி, ஜீவன்முக்தியை அடைகிறீர்கள். முதலில் முக்திக்குச் செல்வீர்கள், பிறகு ஜீவன்முக்திக்கு வருவீர்கள். சாந்தியிலிருந்து பிறகு சுகதாமத்திற்கு வருவீர்கள். இந்த சக்கரத்தின் முழு ரகசியத்தையும் தந்தை புரிய வைத்திருக் கின்றார். உங்கள் கூடவே மற்ற தர்மமும் வந்து கொண்டே இருக்கிறது. மனித சிருஷ்டியானது வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. இந்த நேரத்தில் மனித சிருஷ்டி தமோ பிரதானமாக, இற்றுப் போனதாக ஆகிவிட்டது என்று தந்தை கூறுகின்றார். ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தின் அஸ்திவாரம் முழுவதும் அழிந்து விட்டது. மற்ற அனைத்து தர்மங்களும் நின்று கொண்டிருக்கிறது. பாரதத்தில் ஒருவர் கூட தன்னை ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவன் என்று நினைப்பது கிடையாது. தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் தான், இருப்பினும் இந்த நேரத்தில் நான் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவனாக இருந்தேன் என்று நினைப்பது கிடையாது. ஏனெனில் தேவதைகள் தூய்மையாக இருந்தனர். நாம் தூய்மையானவர்கள் கிடையாது என்று நினைக்கின்றனர். அசுத்தமான, தூய்மையற்றவர்களை தன்னை தேவதை என்று எப்படி கூறிக் கொள்ள முடியும்? இந்து என்று கூறிக் கொள்வதும் நாடகத்தின் திட்டப்படி வழக்கமாகி விட்டது. மக்கள் தொகை கணக் கெடுப்பதிலும் இந்து தர்மம் என்ற எழுதி விடுகின்றனர். குஜராத்தியாக இருந்தாலும் இந்து குஜராத்தி என்று கூறிவிடுவர். இந்து தர்மம் எங்கிருந்து வந்தது? என்று அவர்களிடம் கேளுங்கள். யாருக்கும் தெரியாது. நமது தர்மத்தை கிருஷ்ணர் ஸ்தாபனை செய்தார் என்று மட்டும் கூறிவிடுவர். எப்பொழுது? துவாபர யுகத்தில். துவாபரத்திலிருந்தே இவர்கள் தங்களது தர்மத்தை மறந்து இந்து என்று கூறிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். அதனால் தான் இவர்கள் தங்களது தெய்வீக தர்மத்தை அசுத்தப்படுத்தி விட்டனர் என்று கூறப்படுகிறது. அங்கு அனைவரும் நல்ல காரியங்கள் செய்வர். இங்கு அனைவரும் சீ சீ காரியங்களை செய்கின்றனர். அதனால் தான் தேவி தேவதா தர்மமும் அசுத்தமாகி விட்டது, காரியங்களும் அசுத்தமாகி விட்டது என்று கூறப் படுகிறது. இப்பொழுது மீண்டும் சிரேஷ்ட தர்மம், சிரேஷ்ட தெய்வீக காரியம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த 5 விகாரங்களை விட்டுக் கொண்டே செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இந்த விகாரங்கள் அரைக் கல்பமாக இருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது ஒரே ஒரு பிறவியில் இதை விட்டு விட்டுங்கள், இதில் தான் முயற்சி ஏற்படுகிறது. முயற்சியின்றி உலக இராஜ்யம் கிடைத்து விடாது. தந்தையை நினைவு செய்யும் பொழுது தான் நீங்கள் உங்களை இராஜ்ய திலகம் கொடுத்துக் கொள்வீர்கள், அதாவது இராஜ்யத்திற்கு அதிகாரியாக ஆவீர்கள். எந்த அளவிற்கு நல்ல முறையில் நினைவு செய்வீர்களோ, ஸ்ரீமத் படி நடப்பீர்களோ நீங்கள் இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆவீர்கள். படிப்பு கற்பிக்கும் ஆசிரியர் கற்பிப்பதற்காக வந்திருக்கின்றார். இது மனிதனிலிருந்து தேவதையாக ஆகக் கூடிய பாடசாலையாகும். நரனிலிருந்து நாராயணன் ஆக்கக் கூடிய கதை கூறுகிறீர்கள். இந்த கதை எவ்வளவு பிரபலமாக இருக்கிறது! இது அமரக்கதை, சத்திய நாராயணன் கதை, மூன்றாவது கண் கொடுக்கும் கதை என்றும் கூறப்படுகிறது. மூன்றின் பொருளையும் தந்தை புரிய வைக்கின்றார். பக்தி மார்க்கத்தில் பல கதைகள் உள்ளன. ஆக பாட்டு எவ்வளவு நன்றாக இருக்கிறது பாருங்கள்! பாபா நம்மை முழு உலகிற்கும் எஜமானர்களாக ஆக்குகின்றார், அந்த அதிகாரத்தை யாரும் அபகரிக்க முடியாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) நாம் ஒரே வழி, ஒரே இராஜ்யம், ஒரே தர்மம் ஸ்தாபனை செய்வதற்கு நிமித்தமாக இருக்கிறோம், ஆகையால் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை சதா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2) தனக்குத் தானே இராஜ்ய திலகம் வைத்துக் கொள்வதற்கு விகாரங்களை விடுவதற்கான முயற்சி செய்ய வேண்டும். படிப்பின் மீது முழு கவனம் கொடுக்க வேண்டும்.

வரதானம்:

திரிகாலதர்சி (ஸ்திதியின்) நிலையின் மூலம் மாயையின் யுத்தத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கக் கூடிய அதீந்திரிய சுகத்திற்கு அதிகாரி ஆகுக.

சங்கமயுகத்தின் விசேஷ வரதானம் மற்றும் பிராமண வாழ்க்கையின் விசேஷதா லி அதீந்திரிய சுகம். இந்த அனுபவம் வேறு எந்த யுகத்திலும் ஏற்படுவது கிடையாது. ஆனால் இந்த சுகத்தின் அனுபவத்திற்காக திரிகாலதர்சி ஸ்திதியின் மூலம் மாயையின் யுத்தத்திலிருந்து பாதுகாப்பாக இருங்கள். அடிக்கடி மாயையிடம் யுத்தம் நடந்து கொண்டே இருந்தால் விரும்பினாலும் கூட அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்ய முடியாது. யார் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்து விடு கிறார்களோ, அவர்களுக்கு இந்திரிய சுகம் ஈர்க்க முடியாது. ஞானம் நிறைந்தவராக இருக்கின்ற காரணத்தினால் அவர் முன் அது துச்சமாகத் தென்படும்.

சுலோகன்:

கர்மா மற்றும் மனம் லி இரண்டும் சேவையில் சமமாக இருந்தால்

 

சக்திசாலியான வாயுமண்டலத்தை உருவாக்க முடியும்.