05.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே - நீங்கள் இந்த பழைய உலகத்தில், பழைய சரீரத்தில் வாழ்ந்து கொண்டே இறந்து வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஆகையினால் தேக-அபிமானத்தை விட்டு விட்டு ஆத்ம-அபிமானிகளாக ஆகுங்கள்.

 

கேள்வி:

நல்ல-நல்ல முயற்சி செய்யக்கூடிய குழந்தைகளுடைய அடையாளம் என்னவாக இருக்கும்?

 

பதில்:-

யார் நல்ல முயற்சியாளர்களோ அவர்கள் அதிகாலையில் எழுந்து ஆத்ம-அபிமானிகளாக இருப்பதற்கு பயிற்சி செய்வார்கள். அவர்கள் ஒரு பாபாவை நினைவு செய்வதற்கு முயற்சி செய்வார்கள். எந்த தேகதாரியும் நினைவிற்கு வரக்கூடாது, நிரந்தரமாக பாபா மற்றும் 84 பிறவிகளின் சக்கரத்தின் நினைவு இருக்க வேண்டும் என்ற லட்சியம் அவர்களுக்கு இருக்கிறது. இது கூட மிக நல்ல சௌபாக்கியமாகும்.

 

ஓம் சாந்தி.

இப்போது குழந்தைகளாகிய நீங்கள் வாழ்ந்து கொண்டே இறந்தவர்களாவீர்கள். எப்படி இறந்துள்ளீர்கள்? தேகத்தின் அபிமானத்தை விட்டு விட்டீர்கள் என்றால் மீதம் இருப்பது ஆத்மா ஆகும். சரீரம் முடிந்து விடுகிறது. ஆத்மா இறப்பதில்லை. வாழ்ந்து கொண்டே தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் மற்றும் பரமபிதா பரமாத்மாவோடு யோகம் ஈடுபடுத்துவதின் (தொடர்பு கொள்வதின்) மூலம் ஆத்மா தூய்மையாகி விடும் என்று பாபா கூறுகின்றார். எதுவரை ஆத்மா முற்றிலும் தூய்மையாக ஆக வில்லையோ அதுவரை தூய்மையான சரீரம் கிடைக்க முடியாது. ஆத்மா தூய்மையாக ஆகி விட்டால் பிறகு இந்த சரீரம் தானாகவே விடுபட்டு விடும், எப்படி பாம்பினுடைய தோல் தானாகவே விடுபட்டு விடுகிறது, அதனிடமிருந்து பற்று நீங்கி விடுகிறது, நமக்கு பழைய தோல் உரிந்து விடும், புதிய தோல் கிடைக்கிறது என்பதை பாம்பு தெரிந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவருடைய புத்தி இருக்கிறது அல்லவா. நாம் வாழ்ந்து கொண்டே இந்த பழைய உலகத்திலிருந்து, பழைய சரீரத்திலிருந்து இறந்து விட்டோம் பிறகு ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரத்தை விட்டு விட்டு எங்கே செல்வீர்கள்? தங்களுடைய வீட்டிற்கு என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். முதலில் நான் ஆத்மா, சரீரம் இல்லை என்பதை உறுதியாக நினைவு செய்ய வேண்டும். பாபா, நாங்கள் தங்களுடையவர்களாக ஆகி விட்டோம், வாழ்ந்து கொண்டே இறந்து விட்டோம், என்று ஆத்மா சொல்கிறது. இப்போது தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள் என்று ஆத்மாவிற்கு கட்டளை கிடைத்திருக்கிறது. இந்த நினைவினுடைய பயிற்சி உறுதியாக இருக்க வேண்டும். பாபா, தாங்கள் வந்துள்ளீர்கள் எனும்போது நாங்கள் தங்களுடையவர்களாகவே ஆவோம், என்று ஆத்மா சொல்கிறது. ஆத்மா ஆண்பாலாகும், பெண்பால் அல்ல. எப்போதும் நாங்கள் சகோதர-சகோதரர்கள் என்று தான் சொல்கிறார்கள், நாங்கள் அனைவரும் சகோதரிகள், அனைவரும் குழந்தைகள் என்றா சொல்கிறார்கள்! குழந்தைகள் அனைவருக்கும் ஆஸ்தி கிடைக்க வேண்டும். ஒருவேளை தங்களை பெண் குழந்தைகள் என்று சொன்னால் எப்படி ஆஸ்தி கிடைக்கும்? ஆத்மாக்கள் அனைத்தும் சகோதர-சகோதரர்களாகும். ஆன்மீகக் குழந்தைகளே என்னை நினைவு செய்யுங்கள், என்று பாபா அனைவருக்கும் கூறுகின்றார். ஆத்மா எவ்வளவு சிறியதாக இருக்கிறது. இது மிகவும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். குழந்தைகளுக்கு நினைவு நிற்பதே இல்லை. நான் எருமையாக இருக்கின்றேன், எருமையாக இருக்கின்றேன்.... என்று சன்னியாசிகள் உதாரணம் கொடுக்கிறார்கள். இப்படி சொல்வதின் மூலம் எருமையாக ஆகிவிடுகிறார்கள். உண்மையில் யாரும் எருமையாக ஆகின்றார்களா என்ன! தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பாபா கூறுகின்றார். இந்த ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ஞானம் யாருக்கும் இல்லை ஆகையினால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லி விடுகிறார்கள். இப்போது நீங்கள் ஆத்ம-அபிமானிகளாக ஆக வேண்டும், நான் ஆத்மா, இந்த பழைய சரீரத்தை விட்டு விட்டுச் சென்று புதியதாக எடுக்க வேண்டும். ஆத்மா நட்சத்திரம் போன்று இருக்கிறது, இருபுருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது என்று மனிதர்கள் வாயின் மூலம் சொல்லவும் செய்கிறார்கள் பிறகு பெறுவிரலைப் போல் இருக்கிறது என்று சொல்லி விடுகிறார்கள். நட்சத்திரம் எங்கே, கட்டை விரல் அடையாளம் எங்கே! பிறகு மண்ணினால் ஆன சாலிகிராமம் அமைக்கிறார்கள். ஆத்மா இவ்வளவு பெரியதாக இருக்க முடியாது. மனிதர்கள் தேக-அபிமானிகளாக இருக்கிறார்கள் அல்லவா எனவே உருவாக்குவதையும் பெரியதாகவே உருவாக்குகிறார்கள். இது மிகவும் சூட்சுமமான ஆழமான விஷயங்களாகும். பக்தியையும் கூட மனிதர்கள் பூஜையறையில் தனிமையில் அமர்ந்து செய்கிறார்கள். நீங்கள் இல்லறத்தில் இருந்தாலும் தொழில் போன்றவைகளைச் செய்து கொண்டே புத்தியில் நான் ஆத்மா என்பதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். உங்களுடைய தந்தையாகிய நானும் மிகவும் சிறிய புள்ளியாக இருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். நான் பெரிய உருவத்தில் இருக்கின்றேன் என்பது கிடையாது. என்னிடத்தில் ஞானம் முழுவதுமாக இருக்கிறது. ஆத்மா மற்றும் பரமாத்மா இரண்டுமே ஒரே மாதிரி தான் இருக்கின்றது, அவரை பரம (சுப்ரீம்) என்று மட்டும் கூறுகிறார்கள். இது நாடகத்தில் அடங்கியுள்ளது. நான் அமரனாக இருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். நான் (அமர்) இல்லையென்றால் உங்களை எப்படி தூய்மையாக்குவேன். உங்களை இனிமையான குழந்தைகளே என்று எவ்வாறு கூறுவேன். ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது. பாபா வந்து ஆத்ம-அபிமானியாக மாற்றுகின்றார், இதில் தான் உழைப்பு இருக்கிறது. என்னை நினைவு செய்யுங்கள், வேறு யாரையும் நினைவு செய்யாதீர்கள் என்று பாபா கூறுகின்றார். உலகில் யோகிகள் அனேகர் இருக்கிறார்கள். ஒரு கன்னியாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்த பிறகு கணவனோடு யோகம்(தொடர்பு) ஏற்பட்டுவிடுகிறது அல்லவா. முதலில் இருந்ததா என்ன! கணவனைப் பார்த்த பிறகு அவருடைய நினைவிலேயே இருக்கிறார். பாபா கூறுகின்றார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். இதில் மிகுந்த பயிற்சி தேவை. யார் மிக நல்ல முயற்சி செய்யக் கூடிய குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்கள் அதிகாலையில் எழுந்து ஆத்ம-அபிமானியாக இருப்பதற்கான பயிற்சி செய்வார்கள். பக்தியும் கூட காலையில் செய்கிறார்கள் அல்லவா. அவரவருடைய இஷ்ட தேவதையை நினைவு செய்கிறார்கள். ஹனுமாருக்கும் கூட எவ்வளவு புஜை செய்கிறார்கள் ஆனால் அவரைப் பற்றி எதையும் தெரிந்திருக்க வில்லை. பாபா வந்து புரிய வைக்கின்றார் - உங்களுடைய புத்தி குரங்கு போல் ஆகி விட்டது. இப்போது நீங்கள் தேவதையாக ஆகின்றீர்கள். இப்பொழுது இது தூய்மையற்ற தமோபிரதான உலகமாகும். இப்போது நீங்கள் எல்லயற்ற தந்தையிடம் வந்துள்ளீர்கள். நான் புனர்ஜென்மம் அற்றவனாக இருக்கின்றேன். இந்த சரீரம் இந்த தாதாவினுடையதாகும். எனக்கு சரீரத்தினுடைய பெயர் எதுவும் இல்லை. என்னுடைய பெயரே நன்மை செய்யக்கூடிய சிவன் என்பதாகும். நன்மை செய்யக்கூடிய (கல்யாணகாரி) சிவபாபா வந்து நரகத்தை சொர்க்கமாக ஆக்குகின்றார் என்பது குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். எவ்வளவு நன்மை செய்கின்றார். நரகத்தை ஒரேயடியாக அழிக்கச் செய்து விடுகிறார். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் இப்போது ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது. இவர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாய் வம்சாவழியினர். நடந்தாலும் சுற்றினாலும் ஒருவருக்கு ஒருவர் எச்சரிக்கையூட்ட வேண்டும் - மன்மனாபவ. என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும் என்று பாபா கூறுகின்றார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் பாபா அல்லவா. அவர்கள் தவறுதலாக பகவானுடைய மகாவாக்கியம் என்பதற்கு பதிலாக கிருஷ்ண பகவானுடைய மகாவாக்கியம் என்று எழுதி விட்டார்கள். பகவான் நிராகாரமாக இருக்கிறார், அவரை பரமபிதா என்று சொல்லப்படுகிறது. அவருடைய பெயர் சிவன் ஆகும். சிவனுடைய பூஜையும் அதிகம் நடக்கிறது. சிவ காசி, சிவ காசி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் அனேக விதமான பெயர்களை வைத்து விட்டார்கள். வருமானத்திற்காக அனேக கோயில்களை உருவாகியுள்ளார்கள். உண்மையான பெயர் சிவன் என்பதாகும். பிறகு சோமநாதர் என்று பெயர் வைத்துள்ளார்கள், சோமநாதர், சோமரசத்தை குடிக்க வைக்கின்றார், ஞான செல்வத்தை கொடுக்கின்றார். பிறகு பூஜாரியாகும்போது அவருடைய கோயில்களை உருவாக்க எவ்வளவு செலவு செய்கிறார்கள், ஏனென்றால் சோமரசத்தை கொடுத்திருக்கிறார் அல்லவா. சோமநாதரின் கூடவே சோமநாதனியும் இருப்பார்! எப்படி ராஜா ராணியோ அப்படி பிரஜைகள் அனைவரும் சோமநாதர் மற்றும் சோமநாதனிகளாவர். நீங்கள் பொன்னுலகத்திற்குச் செல்கிறீர்கள். அங்கே தங்க செங்கற்கள் இருக்கின்றன. இல்லையென்றால் சுவர் போன்றவைகள் எப்படி உருவாகும்! நிறைய தங்கம் இருக்கிறது ஆகையினால் தான் அதை பொன்னுலகம் என்று சொல்லப்படுகிறது. இது இரும்பு, கற்களின் உலகமாகும். சொர்க்கம் என்ற பெயரை கேட்டதும் வாயில் நீர் ஊறுகிறது. விஷ்ணுவின் இரண்டு ரூபம் லஷ்மி - நாராயணன் தனித்தனியாக ஆவார்கள் அல்லவா. நீங்கள் விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். இப்போது நீங்கள் இராவணபுரியில் இருக்கிறீர்கள். எனவே இப்போது பாபா கூறுகின்றார், தங்களை ஆத்மா என்று மட்டும் புரிந்து கொண்டு தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். பாபாவும் பரந்தாமத்தில் இருக்கின்றார், ஆத்மாக்களாகிய நீங்களும் கூட பரந்தாமத்தில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு எந்த கஷ்டமும் கொடுப்பதில்லை, மிகவும் சகஜமானது என்று பாபா கூறுகின்றார். மற்றபடி இந்த எதிரியான இராவணன் உங்கள் முன் நிற்கின்றான். இந்த இராவணன் தடையை ஏற்படுத்துகின்றான். ஞானத்தில் தடை ஏற்படுவதில்லை, நினைவில் தான் தடை ஏற்படுகிறது. மாயை அடிக்கடி நினைவை மறக்கச் செய்து விடுகிறது. தேக-அபிமானத்தில் கொண்டு வருகிறது. பாபாவை நினைவு செய்ய விடுவதில்லை, இந்த யுத்தமானது நடக்கிறது. நீங்கள் கர்மயோகிகளாகவே இருக்கின்றீர்கள் என்று பாபா கூறுகின்றார். நல்லது, பகலில் நினைவு செய்ய முடியவில்லை என்றால் இரவில் நினைவு செய்யுங்கள். இரவில் செய்த பயிற்சி பகலில் உதவி புரியும்.

 

நிரந்தரமாக நினைவிருக்க வேண்டும் - எந்த தந்தை நம்மை உலகத்திற்கு எஜமானர்களாக மாற்றுகின்றாரோ, அவரை நாம் நினைவு செய்கிறோமா! பாபாவின் நினைவு மற்றும் 84 பிறவிகளின் சக்கரத்தின் நினைவு இருந்தால் சௌபாக்கியமாகும். சகோதர-சகோதரிகளே, இப்போது கலியுகம் முடிந்து சத்யுகம் வருகிறது என்று மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும். பாபா வந்திருக்கின்றார், சத்யுகத்திற்காக இராஜயோகத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது. யார் வானப்பிரஸ்திகளாக(வயதானவர்கள்) இருக்கிறார்களோ, அவர்கள் சென்று சன்னியாசிகளோடு சேர்க்கை வைத்துக் கொள்கிறார்கள். வானப்பிரஸ்தம், அங்கே(சாந்தி தாமத்தில்) பேச்சிற்கு வேலை இல்லை. ஆத்மா அமைதியாக இருக்கிறது. பிரம்ம தத்துவத்தில் கலந்து விட முடியாது. நாடகத்திலிருந்து எந்தவொரு நடிகரும் விலக முடியாது. ஒரு பாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது என்பதையும் பாபா புரிய வைத்திருக்கின்றார். பார்த்துக் கொண்டிருந்தாலும் நினைவு செய்யாதீர்கள். இந்த பழைய உலகம் வினாசம் ஆகப்போகிறது, சுடுகாடு அல்லவா. பிணங்களை நினைவு செய்யப்படுகிறதா என்ன! இவர்கள் அனைவரும் இறந்தவர்கள் என்று பாபா கூறுகின்றார். நான் வந்திருக்கின்றேன், தூய்மையற்றவர் களை தூய்மையாக்கி அழைத்துச் செல்கின்றேன். இங்கே இவையனைத்தும் அழிந்து போய்விடும். இன்றைக்கு அணுகுண்டுகள் போன்ற எதையெல்லாம் உருவாக்குகிறார்களோ, அவற்றை மிக வேக-வேகமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அமர்ந்து கொண்டு யார் மீது போடுகிறோமோ, அவர்கள் மீது தான் விழும் என்று சொல்கிறார்கள். மீண்டும் வினாசம் ஆக வேண்டும் என்பது நாடகத்தில் அடங்கியுள்ளது. ஸ்தாபனை மற்றும் வினாசத்தை செய்வதற்கு பகவான் வந்துள்ளார். சித்திரமும் தெளிவாக இருக்கிறது. நாம் இப்படி(லஷ்மி - நாராயணனாக) ஆவோம் என்பதை நீங்கள் காட்சியாக பார்க்கின்றீர்கள். இங்கே படிக்கக் கூடிய இந்த படிப்பு அழிந்து விடும். அங்கே வக்கீல், டாக்டர் போன்றவர்களுக்கு அவசியம் இருப்பதில்லை. நீங்கள் சங்கமயுகத்தின் ஆஸ்தியை எடுத்துச் செல்கின்றீர்கள். கலைகள் அனைத்தையும் கூட இங்கிருந்து எடுத்துச் செல்வீர்கள். முதல்தரமான கட்டிடம் போன்றவற்றை கட்டுபவர்கள் இருந்தால் அங்கேயும் அப்படி உருவாக்குவார்கள். கடைவீதி போன்றவைகளும் இருக்கும் அல்லவா. வேலை என்பது நடக்கும். இங்கே கற்றுக் கொண்ட புத்தியை கொண்டு செல்கிறார்கள். அறிவியலின் மூலம் கூட நல்ல கலைகளை கற்றுக் கொள்கிறார்கள். அவையனைத்தும் அங்கே வேலைக்கு உதவும். பிரஜைகளின் வரிசையில் செல்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பிரஜைகளின் வரிசையில் வரக் கூடாது. நீங்கள் பாபா-மம்மாவின் சிம்மாசனதாரியாக ஆவதற்குத் தான் வந்துள்ளீர்கள். பாபா என்ன ஸ்ரீமத் கொடுக்கின்றாரோ, அதன்படி நடக்க வேண்டும். ஒரேயொரு முதல் தரமான ஸ்ரீமத்தைத் தான் கொடுக்கின்றார் - என்னை நினைவு செய்யுங்கள். சிலருடைய பாக்கியம் சிரமமின்றி எளிதாகத் திறந்து கொள்கிறது. ஏதாவது ஒரு காரணம் அதற்கு பொறுப்பாகி விடுகிறது. திருமணம் செய்து கொண்டால் நாசம் என்று பாபா குமாரிகளுக்கும் கூறுகின்றார். இந்தக் குழியில் விழாதீர்கள். நீங்கள் பாபா சொல்வதைக் கேட்க மாட்டீர்களா. சொர்க்கத்தின் மகாராணிகளாக ஆக மாட்டீர்களா. நாங்கள் அந்த (விஷ) உலகத்திற்கு ஒருபோதும் செல்ல மாட்டோம் என்று தங்களிடம் சத்தியம் செய்ய வேண்டும். அந்த உலகத்தை நினைக்கக் கூட மாட்டோம். சுடுகாட்டை எப்போதாவது நினைவு செய்கிறார்களா என்ன! இந்த சரீரம் அழிந்து விட்டல் நாங்கள் எங்களுடைய சொர்க்கத்திற்குச் செல்வோம் என்று நீங்கள் இங்கே கூறுகிறீர்கள். இப்போது 84 பிறவிகள் முடிந்திருக்கிறது, இப்போது நாம் நம்முடைய வீட்டிற்கு செல்கிறோம். மற்றவர்களுக்கும் இதை சொல்ல வேண்டும். பாபாவைத் தவிர வேறு யாரும் சத்யுகத்தின் இராஜ்யத்தை கொடுக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள்.

 

இந்த ரதத்திற்கும் கர்மசுமை இருக்கிறது அல்லவா. பாப்தாதாவிற்கும் தங்களுக்குள் சில நேரங்களில் ஆன்மீக உரையாடல் நடக்கிறது - இந்த பிரம்மா பாபா கூறுகின்றார், பாபா ஆசிர்வாதம் செய்து விடுங்கள். இருமலுக்கு எதாவது வைத்தியம் செய்யுங்கள் அல்லது சூ மந்திரம் போட்டு தூக்கி விடுங்கள். சிவபாபா கூறுகின்றார், இல்லை, இதை அனுபவிக்கத் தான் வேண்டும். இந்த உன்னுடைய ரதத்தை எடுக்கின்றேன், அதற்கு பதிலாக (பிரதிபலன்) கொடுக்கத்தான் செய்கின்றேன், மற்றபடி இது உங்களுடைய கணக்கு- வழக்காகும். கடைசி வரை ஏதாவது நடந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு ஆசிர்வாதம் செய்தேன் என்றால் அனைவருக்கும் செய்ய வேண்டும். இன்று இந்த குழந்தை இங்கே அமர்ந்திருக்கிறது, நாளை ரயிலில் விபத்து நடந்து விடுகிறது, இறந்து விடுகிறார், என்றால் பாபா நாடகம் என்று சொல்வார். பாபா முன்பாகவே ஏன் சொல்லவில்லை என்று கேட்க முடியுமா. அப்படி விதியே இல்லை. நான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்க வருகின்றேன். இதை சொல்வதற்கா வந்துள்ளேன். இது உங்களுடைய கணக்கு - வழக்கு, இதை நீங்கள் முடிக்க வேண்டும். இதில் ஆசிர்வாதத்தின் விஷயம் எதுவும் இல்லை. அதற்கு சன்னியாசிகளிடம் செல்லுங்கள். பாபா ஒரு விஷயத்தைத் தான் கூறுகின்றார். வந்து எங்களை நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தான் என்னை அழைத்தீர்கள். பதீத்த பாவன சீத்தாராம் என்று பாடவும் செய்கிறார்கள். ஆனால் தலைகீழான அர்த்தத்தை எடுத்துக் கொண்டு விட்டார்கள். பிறகு ரகுபதி ராகவ ராஜா ராம்................... என்று இராமனின் மகிமை பாடுகிறார்கள். நீங்கள் இந்த பக்தி மார்க்கத்தில் எவ்வளவு பணத்தை இழந்து விட்டீர்கள் என்று பாபா கேட்கின்றார். ஒரு பாடல் கூட இருக்கிறது அல்லவா - உங்களுடைய லீலைகளை எவ்வளவு பார்த்திருக்கிறோம்........ தேவிகளின் மூர்த்தியை உருவாக்கி பூஜை செய்து பிறகு சமுத்திரத்தில் மூழ்கடித்து விடுகிறார்கள். எவ்வளவு பணத்தை வீணடிக்கிறார்கள் என்று இப்போது புரிய வருகிறது, இருந்தாலும் இது நடக்கும். சத்யுகத்தில் இது போன்ற வேலைகள் நடப்பதே இல்லை. வினாடிக்கு வினாடி பதிவாகியுள்ளது. கல்பத்திற்கு பிறகு இதே விஷயம் திரும்பவும் நடக்கும். நாடகத்தை மிகவும் நல்ல விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும். நல்லது, யாராவது அதிகம் நினைவு செய்ய முடியவில்லை என்றால் அல்ஃப் மற்றும் பே, பாபா மற்றும் இராஜ்யத்தை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். உள்ளுக்குள் ஆத்மாக்களாகிய நாம் எப்படி 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளோம் என்ற இந்த ஈடுபாட்டையே வைத்து விடுங்கள். சித்திரங்களை வைத்து புரியவையுங்கள், மிகவும் சகஜமாகும். இது ஆன்மீக குழந்தைகளுடனான ஆன்மீக உரையாடலாகும். பாபா குழந்தைகளோடு தான் ஆன்மீக உரையாடல் புரிகின்றார். வேறு யாரோடும் செய்ய முடியாது. பாபா கூறுகின்றார் - தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது. நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்று பாபா நினைவூட்டுகின்றார். மனிதர்களாகத் தான் ஆகினீர்கள். எப்படி பாபா விகாரத்தில் செல்லக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளாரோ, அதேபோல் யாரும் அழக்கூடாது என்று இவரும் விதியை உருவாக்குகின்றார். சத்யுகம்-திரேதாவில் ஒருபோதும் யாரும் அழுவதில்லை, சிறிய குழந்தை கூட அழுவதில்லை. அழுவதற்கான கட்டளையே இல்லை. அந்த உலகமே சிரிப்பதற்கானதாகும். அதனுடைய பயிற்சி அனைத்தையும் இங்கே செய்ய வேண்டும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) பாபாவிடமிருந்து ஆசிர்வாதத்தை கேட்பதற்கு பதிலாக நினைவு யாத்திரையின் மூலம் தங்களுடைய அனைத்து கணக்கு வழக்குகளையும் முடிக்க வேண்டும். தூய்மையாக ஆவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்த நாடகத்தை யதார்த்தமான(உள்ளது உள்ளபடி) விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

2) இந்த பழைய உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட இதை நினைவு செய்யக் கூடாது. கர்மயோகியாக ஆக வேண்டும். எப்போது மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும். ஒருபோதும் அழக்கூடாது.

 

வரதானம் :

அனைவருக்காக சுப பாவனை  மேலும் சிரேஷ்ட பாவனை  வைக்க கூடிய  தூய்மையான புத்தி உடைய அன்னப் பறவை ஆகுங்கள்.

 

தூய்மையான புத்தியின் அர்த்தம்  அனைத்து  ஆத்மாகளுக்காக சிரேஷ்ட  மற்றும்  சுபத்தை யோசிக்க  கூடியவர்கள். முதலில்  ஒவ்வொரு  ஆத்மாவின்  பாவனையை புரிந்து கொண்டு பிறகு  தாரணை  செய்ய கூடிய வர்கள்  ஒரு போதும் எந்த  ஓரு  ஆத்மாவினுடைய  அசுபமான  (கெட்ட ) அல்லது  சாதாரண  பாவனையை  தாரணை  செய்து விடக் கூடாது. எப்போதும்  சுப மான  பாவனையை  வைக்கக் கூடியவர்களே  அன்னப்  பறவை  ஆவார்கள். அவர்கள்  எப்போதுமே  ஒரு  ஆத்மாவின்  தீயதை  பார்த்தாலும், கேட்டாலும்  கூட  தீமையை நன்மைக்காண  உள்உணர்வினால்  மாற்றிவிடுவார்கள். அவர்களுடைய திருஷ்டி  அனைத்து ஆத்மாக்களின்  பக்கம் சிரேஷ்ட  சுத்தமான அன்புடையதாக இருக்கும்.

 

சுலோகன் :

அன்பினால் நிறைந்த  அப்படிப்பட்ட கங்கை  ஆகுங்கள். உங்கள்  மூலமாக  அன்புக் கடல்  தந்தை வெளிப்படட்டும்.

 

ஓம்சாந்தி