05-04-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

பிராமண குழந்தைகளுக்கு எந்த விஷயம் சதா நினைவிருந்தால் ஒருபோதும் விகர்மம் நடைபெறாது?

பதில்:

எந்த கர்மத்தை நாம் செய்கிறோமோ நம்மை பார்த்து மற்றவர்களும் செய்வார்கள் என்ற நினைவிருந்தால் விகர்மங்கள் நடைபெறாது. ஒருவேளை யாராவது மறைந்திருந்து கூட பாவ கர்மம் செய்தால் தர்மராஜிடமிருந்து மறைக்க முடியாது. உடனே அதனுடைய தண்டனை கிடைக்கும். இன்னும் செல்ல செல்ல இராணுவ சட்டம் வந்துவிடும். இந்த இந்திர சபையில் எந்த ஒரு தூய்மையற்றவரும் மறைந்து அமர முடியாது.

பாடல்:

கள்ளம் கபடம் இல்லாதவர் அதிசயமானவர்.....

ஓம் சாந்தி. இப்போது ஆன்மீகத் தந்தை அனைவருக்கும் இந்த சிருஷ்டியின் முதல், இடை, கடை ஞானத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது இனிமையிலும் இனிமையான ஆன்மீக குழந்தை களுக்கு தெரியும். அவருடைய பெயரே போலாநாத் ஆகும். தந்தை மிகவும் கள்ளம் கபடம் இல்லாதவர் ஆவார். எவ்வளவு கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு படிக்க வைக்கிறார். வளர்க்கிறார். பிறகு பெரியவர்கள் ஆனதும் அனைத்தையும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு தான் வானபிரஸ்த நிலையை எடுத்துக் கொள்கிறார். நாம் கடமைகளை முடித்துவிட்டோம், இப்போது குழந்தைகள் பார்த்துக் கொள்ளட்டும் என நினைக்கிறார்கள். ஆகவே தந்தை கள்ளம் கபடம் அற்றவர் அல்லவா. இதை கூட இப்போது பாபா தான் புரிய வைக்கிறார். ஏனென்றால் அவர் கள்ளம் கபடம் அற்றவர் அல்லவா. எனவே தான் எல்லைக்குட்பட்ட தந்தையும் எவ்வளவு கபடம் அற்றவர் எனப் புரிய வைக்கிறார். அவர் எல்லைக்குட்பட்ட தந்தை இவர் எல்லைக்கப்பாற்பட்ட கள்ளம் கபடம் அற்ற தந்தை ஆவார். பரந்தாமத்தில் இருந்து வருகிறார், பழைய உலகம் பழைய உடலில். ஆகவே மனிதர்கள் பழைய பதீத உடலில் எப்படி வர முடியும் என நினைக்கிறார்கள். புரிந்துக் கொள்ளாத காரணத்தினால் தூய்மையான உடலை உடைய கிருஷ்ணரின் பெயரை போட்டுவிட்டார்கள். இதே கீதை, வேதங்கள், சாஸ்திரம் போன்றவைகளை மீண்டும் உருவாக்குவார்கள். சிவபாபா எவ்வளவு கபடம் அற்றவராக இருக்கிறார் பாருங்கள். வந்ததும் பாபா இங்கேயே அமர்ந்திருப்பது போன்று உணர்வை அளிக்கிறார். இந்த சாகார பாபா கூட கள்ளம் கபடம் அற்றவர் அல்லவா. எந்த அங்கவஸ்திரமும் இல்லை. திலகம் போன்ற எதுவும் இல்லை. மிகவும் சாதாரண பாபாவாக தான் பாபா இருக்கிறார். எவ்வளவு ஞானம் முழுவதை யும் சிவபாபா அளிக்கிறார். வேறு யாருக்கும் இதை அளிப்பதற்கான சக்தி இல்லை என்பதை குழந்தைகள் அறிகிறீர்கள். ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் ஈடுபாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. எவ்வளவு தந்தையை நினைக்கிறீர்களோ அவ்வளவு அன்பு அதிகரிக்கும். மிகவும் அன்பான தந்தை அல்லவா. இப்போது மட்டும் இல்லை. ஆனால் பக்தி மார்க்கத்தில் கூட நீங்கள் மிகவும் அன்பானவர் என்று தான் நினைத்திருந்தீர்கள். பாபா நீங்கள் எப்போது வருகிறீர்கள்? அப்போது எல்லோரிடமும் அன்பை விட்டு விட்டு ஒரு பாபாவிடம் தான் அன்பு வைப்போம் எனக் கூறினார்கள். இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். ஆனால் மாயை இவ்வளவு அன்பு வைக்கவிடுவதில்லை. தன்னை விட்டு விட்டு பாபாவை நினைப்பதை மாயை விடுவதில்லை. தேக உணர்விலிருந்து என்னை விரும்ப வேண்டும் என்று அது நினைக்கிறது. இதையே மாயை விரும்புகிறது. ஆகவே, எவ்வளவு தடைகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் தடைகளை கடந்துப் போக வேண்டும். குழந்தைகள் சிறிதாவது உழைக்க வேண்டும் அல்லவா. முயற்சியினால் தான் நீங்கள் தங்களின் பிராப்திகளை அடைகிறீர்கள். உயர்ந்த பதவி அடைவதற்கு எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என குழந்தைகள் அறிகிறீர்கள். ஒன்று விகாரங்களை தானம் செய்ய வேண்டும். மற்றொன்று அழியக் கூடிய ஞான இரத்தினங்களின் செல்வம் கிடைக்கிறது. அதை தானம் செய்ய வேண்டும் அந்த அழியாத செல்வத்தினால் தான் நீங்கள் இவ்வளவு செல்வந்தர் ஆகிறீர்கள். ஞானம் தான் வருமானத்திற்கு மூல தனமாகும். அது சாஸ்திரங்களின் தத்துவ ஞானமாகும். இது ஆன்மீக ஞானம் ஆகும். சாஸ்திரம் போன்றவைகளை படித்து மிகவும் சம்பாதிக்கிறார்கள். ஒரு அறையில் கிரந்தம் போன்றவைகளை வைக்கிறார்கள். சிறிது அதை பற்றி சொல்கிறார்கள். அவ்வளவு தான் வருமானம் கிடைத்துவிடுகிறது. அது யதார்த்த ஞானம் கிடையாது. யதார்த்தமான ஞானத்தை ஒரு தந்தை தான் அளிக்கிறார். எதுவரை யாருக்கும் இந்த ஆன்மீக ஞானம் கிடைக்கவில்லையோ அது வரை அந்த சாஸ்திரங்களின் தத்துவம் தான் புத்தியில் இருக்கிறது. உங்களுடைய விஷயத்தை கேட்பதில்லை. நீங்கள் மிகச் சிலரே இருக்கிறீர்கள். இந்த ஆன்மீக ஞானத்தை குழந்தைகள் ஆன்மீக தந்தையிடம் தான் அடைகிறார்கள் என்பது 100 சதவீதம் நிச்சயம் ஆகும். ஞானம் வருமானத்திற்கு மூலதனம் ஆகும். நிறைய செல்வம் கிடைக்கிறது. யோகம் ஆரோக்கியத்திற்கு மூலதனம் ஆகும். அதாவது நோயற்ற உடல் கிடைக்கிறது. ஞானத்தினால் செல்வம். இது இரண்டும் முக்கியமான பாடங்கள் ஆகும். சிலர் நன்கு கடைபிடிக்கிறார்கள். சிலர் குறைவாக கடைபிடிக்கிறார்கள். எனவே, ஆரோக்கியம் கூட மிகக் குறைவாக வரிசைக்கிரமத்தில் கிடைக்கிறது. தண்டனை போன்றவைகளை அடைந்து பதவி அடைகிறார்கள். முழுமையாக நினைக்க வில்லை என்றால் விகர்மங்கள் வினாசம் ஆவதில்லை. பிறகு தண்டனைகள் அடைய வேண்டியிருக் கிறது. பதவியும் குறைந்துப் போகிறது. பள்ளிக் கூடத்தில் இருப்பது போன்றதாகும். இது எல்லையற்ற ஞானம் ஆகும். இதன் மூலம் படகு கடந்துப் போகிறது. அந்த அறிவால் வக்கீல், டாக்டர், இன்ஜினீயர் போன்றவைகளை படிக்க வேண்டியதாக இருக்கிறது. இதுவோ ஒரே படிப்பாகும். யோகா மற்றும் ஞானத்தினால் சதா ஆரோக்கியமாகவும் செல்வம் உடையவராகவும் மாறுகிறோம். இளவரசன் ஆகின்றோம். அங்கே சொர்க்கத்தில் யாரும் வழக்கறிஞர் நீதிபதி ஆவதில்லை. அங்கே தர்மராஜி னுடைய அவசியமும் இல்லை. கர்ப சிறையின் தண்டனையும் இல்லை, தர்மராஜ்புரியினுடைய தண்டனையும் இல்லை. கர்ப மாளிகையில் மிகவும் சுகமாக இருக்கிறார்கள். இங்கேயோ கர்ப சிறையில் தண்டனைகள் அடைய வேண்டியிருக்கிறது. கர்ப மாளிகையில் மிகவும் சுகமாக இருக்கிறார்கள். இங்கேயோ கர்ப சிறையில் தண்டனைகள் அடைய வேண்டியிருக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் தான் இப்போது புரிந்துக் கொள்கிறீர்கள். மற்றபடி சாஸ்திரங்கள், சமஸ்கிருதத்தில் சுலோகன் போன்றவைகளை மனிதர்கள் உருவாக்கியிருக் கிறார்கள். சத்யுகத்தில் என்ன மொழி இருக்கும் எனக் கேட்கிறார்கள். தேவதைகளின் மொழி என்ன இருக்குமோ அதுவே நடக்கும் என பாபா புரிய வைக்கிறார். அங்கே என்ன மொழி இருக்குமோ அது வேறு எங்கும் இருக்க முடியாது. அங்கே சமஸ்கிருத மொழி இருக்கும் எனக் கூற முடியாது. தேவதைகள் மற்றும் பதீத மனிதர்களின் மொழி ஒன்றாக இருக்க முடியாது. அங்கே என்ன மொழியோ அதுவே இருக்கும். இதை கேட்க வேண்டியதில்லை. முதலில் தந்தையிடமிருந்து சொத்து அடையுங்கள். போன கல்பத்தில் என்ன நடந்ததோ அதுவே நடக்கும். முதலில் சொத்து அடையுங்கள். வேறு எந்த விஷயமும் கேட்க வேண்டியதில்லை. சரி, 84 பிறவிகள் இல்லை, 80 அல்லது 82 இருக்கும். இந்த விஷயங்களை நீங்கள் விட்டு விடுங்கள். அப்பாவை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். சொர்க்கத்தின் சொத்து நிச்சயம் கிடைக்கிறது அல்லவா. பல முறை நீங்கள் சொர்க்கத்தின் சொத்து அடைந்திருக்கிறீர்கள். ஏற்றத்திலிருந்து இறங்கவும் வேண்டும் அல்லவா. இப்போது நீங்கள் மாஸ்டர் ஞானக் கடல், மாஸ்டர் சுகக் கடல் ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் முயற்சியாளர்கள். பாபா முழுமை யானவர். பாபாவிடம் என்ன ஞானம் இருக்கிறதோ, அது குழந்தைகளிடமும் இருக்கிறது. ஆனால் உங்களை கடல் என்று கூற முடியாது. கடல் ஒருவர் தான். பல பெயர்கள் மட்டும் வைக்கப் பட்டிருக்கிறது. மற்றபடி நீங்களோ ஞானக் கடலிலிருந்து தோன்றிய நதிகள். நீங்கள் மானசரோவர், நதிகள் ஆவீர். நதிகளுக்கு பெயர் இருக்கிறது. பிரம்ம புத்திரா மிகப் பெரிய நதியாகும். கல்கத்தாவில் நதி மற்றும் கடல் சங்கமம் ஆகிறது. அதனுடைய பெயர் டைமண்ட் துறைமுகம் ஆகும். நீங்கள் பிரம்மாவின் வாய் வழி வம்சம், வைரம் போன்று மாறிக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே மிகப் பெரிய திருவிழா நடக்கிறது. பாபா இந்த பிரம்மா உடலில் வந்து குழந்தைகளை சந்திக்கிறார். இந்த விஷயங்கள் அனைத்தும் புரிந்துக் கொள்ள வேண்டியதாகும். இருப்பினும் பாபா மன்மனாபவ என்கிறார். பாபாவை நினைத்துக் கொண்டே இருங்கள். அவர் மிகவும் அன்பானவர். அனைத்து உறவுகளிலும் சாக்ரீனாக இருக்கிறார். அந்த உறவுகள் அனைத்தும் விகாரத்தினுடையது. அதனால் துக்கம் தான் கிடைக்கிறது. பாபா உங்களுக்கு அனைத்து பலனும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அனைத்து உறவுகளின் அன்பையும் கொடுக்கின்றார். எவ்வளவு சுகம் கொடுக்கிறார். வேறு யாரும் இவ்வளவு சுகம் கொடுக்க முடியாது. சிலர் அல்ப காலத்திற்காக கொடுக்கிறார்கள். அதற்கு சன்னியாசிகள் காகத்தின் எச்சிலுக்கு சமமான சுகம் என்கிறார்கள். துக்கதாமத்தில் நிச்சயம் துக்கம் தான் இருக்கும். நாம் பல முறை பாகத்தை நடித்திருக்கிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். ஆனால் எப்படி நாம் உயர்ந்த பதவி அடைவது என்ற கவலை இருக்க வேண்டும். நாம் அங்கே தோல்வி அடைந்துவிடாமல் இருக்க மிகவும் முயற்சி செய்ய வேண்டும். நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தால் தான் உயர்ந்த பதவி பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு குஷியும் ஏற்படும். அனைவரும் ஒரே சமமாக இருக்க முடியாது. எவ்வளவு யோகத்தில் இருக்கிறார்களோ அதற்கேற்ப தான் நிலை இருக்கும். நிறைய கோபிகைகள் ஒருபோதும் சந்தித்தது கூட கிடையாது. அப்பாவை சந்திப்பதற்காக துடிக்கிறார்கள். சாது சன்னியாசிகளிடம் துடிக்கக் கூடிய விஷயம் எதுவும் கிடையாது. இங்கேயோ சிவபாபாவை சந்திப்பதற்காக வருகிறார்கள். அதிசயமாக இருக்கிறது அல்லவா. வீட்டில் அமர்ந்து நினைக்கிறார்கள் சிவபாபா, நாங்கள் உங்களுடைய குழந்தைகள் என நினைக்கிறார்கள். ஆத்மாவிற்கு நினைவு வருகிறது. நாம் சிவபாபாவிடமிருந்து கல்ப கல்பமாக சொத்து அடைகிறோம் என குழந்தைகள் அறிகிறீர்கள். அதே தந்தை கல்பத்திற்குப் பிறகு வந்திருக்கிறார். எனவே பாôக்காமல் இருக்க முடியாது. பாபா வந்துவிட்டார் என்பதை ஆத்மா அறிகிறது. சிவஜெயந்தி கூட கொண்டாடு கிறார்கள். ஆனால் எதையும் அறியவில்லை. சிவபாபா வந்து படிக்க வைக்கிறார். எதையும் அறியவில்லை. பெயருக்காக சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள். விடுமுறை கூட அளிப்பதில்லை. அதை பற்றிய மகத்துவமும் இல்லை. யாருக்கு சொத்து கொடுத்தாரோ (கிருஷ்ணருக்கு) அவருடைய பெயரை பிரசித்தமாக்கி விட்டார்கள். முக்கியமாக பாரதத்தில் வந்து சொர்க்கமாக மாற்றியிருக்கிறார். மற்ற அனைவருக்கும் முக்தி கொடுக்கிறார். அனைவரும் விரும்புகிறார்கள். முக்திக்கு பிறகு ஜீவன் முக்தி கிடைக்கும் என நீங்கள் அறிகிறீர்கள். தந்தை வந்து மாயாவின் பந்தனத்திலிருந்து விடுவிக்கிறார். பாபாவிற்கு அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் எனக் கூறப்படுகிறது. அனைவருக்கும் ஜீவன் முக்தி வரிசைக் கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கிறது. இது அழுக்கான உலகம், துக்கதாமம் என பாபா கூறுகின்றார். சத்யுகத்தில் உங்களுக்கு எவ்வளவு சுகம் கிடைக்கிறது. அதை சொர்க்கம் என்கிறார்கள். அல்லா சொர்க்கத்தை எதற்காக படைத்தார். முஸ்லீம்களுக்காகவா படைத்தார். அவரவர் மொழியில் சிலர் சொர்க்கம் என்கிறார்கள், சிலர் பகிஷித் என்கிறார்கள். சொர்க்கத்தில் பாரதம் மட்டும் தான் இருக்கிறது என உங்களுக்கு தெரியும். இந்த விஷயங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் வரிசைக்கிரமத்தில் வருகிறது. ஒரு முஸ்லீம் கூட நான் அல்லாவின் தோட்டத்திற்கு சென்றேன் என்றார். இதுபோல அனைத்தும் காட்சிகளாக கிடைக்கிறது. நாடகத்தில் முதலிலேயே நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தில் என்ன நடந்தாலும் ஒரு நொடி கடந்தாலும் போன கல்பத்தில கூட நடந்தது என்பர். நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது. நாடகத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். இதில் எந்த கவலையும் கூடாது. என்னை மட்டும் நினையுங்கள். மேலும் உங்களுடைய ஆஸ்தியை நினையுங்கள் என்று பாபா கட்டளை இட்டு இருக் கின்றார். அனைத்தும் அழியத்தான் வேண்டும். ஒருவர் மற்றொருவருக்காக அழக் கூட முடியாது. மரணம் வந்தது, முடிந்தது. அழுவதற்கு நேரம் இல்லை. சத்தமே வெளியே வராது. இன்றோ மனிதர்கள் சாம்பலை எடுத்துக் கொண்டு கூட ஊர்வலம் வருகிறார்கள். பாவனை இருக்கிறது. அனைத்தும் நேரத்தை வீணடித்தல்...... இதில் என்ன தான் இருக்கிறது. மண் மண்ணோடு கலந்துப் போகிறது. இதனால் பாரதம் தூய்மை ஆகுமா? அழுக்கான உலகத்தில் எந்த வேலையை செய்தாலும் அழுக்காக தான் செய்வார்கள். தானம் புண்ணியம் போன்றவைகளை செய்து வந்திருக்கிறார்கள். பாரதம் தூய்மையாகியதா? படியில் இறங்கத்தான் வேண்டும். சத்யுகத்தில் சூரிய வம்சத்தினர் ஆனார்கள். பிறகு படியில் இறங்கி மெல்ல மெல்ல விழுகிறார்கள். பிறகு எவ்வளவு தான் தியாகம், தவம் போன்றவைகளை செய்தாலும் அடுத்த பிறவியில் அரைக் கல்பத்திற்கு பலன் கிடைக்கிறது. யாராது தவறான கர்மம் செய்கிறார்கள் என்றால் அதனுடைய பலன் அவர்களுக்கு கிடைக்கிறது. எல்லையற்ற தந்தைக்குத் தெரியும் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக வந்துள்ளோம் என்று. சாதாரணமான உடலை கடனாக எடுத்திருக்கிறார். திலகம் போன்றவைகளை எதுவும் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பக்தர்கள் தான் பெரிய பெரிய திலகங்களை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எவ்வளவு ஏமாற்றுகிறார்கள். நான் சாதாரண உடலில் வருகிறேன் வந்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன் என பாபா கூறுகிறார். வானபிரஸ்த நிலை ஆகிவிட்டது. கிருஷ்ணரின் பெயரை ஏன் போட்டனர். இங்கே தீர்மானிப்பதற்கான புத்தி கூட இல்லை. இங்கே பாபா சரி எது தவறு எது என்பதை தீர்மானிக்கும் புத்தியை கொடுக்கிறார்.

நீங்கள் யாகம்-தவம், தானம்-புண்ணியம் செய்கிறீர்கள், சாஸ்திரங்களைப் படித்து வந்துள்ளீர்கள் என பாபா கூறுகின்றார். அந்த சாஸ்திரங்களில் ஏதாவது இருந்ததா? நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து விஷ்வத்தின் இராஜ்ய பதவியை அளித்தேனா? அல்லது கிருஷ்ணர் அளித்தாரா? தீர்மானியுங்கள். பாபா நீங்கள் தான் கூறினீர்கள் என கூறுகிறார்கள். கிருஷ்ணரோ சிறிய இளவரசன் அவர் எப்படி கூறுவார். பாபா தங்களின் இராஜயோகத்தினால் தான் நாங்கள் இவ்வாறு மாறுகிறோம். சரீரத்தின் மீது நம்பிக்கை கிடையாது என பாபா கூறுகிறார். நன்கு முயற்சி செய்ய வேண்டும். பாபாவிற்கு இன்னார் மிகவும் நல்ல நிச்சயபுத்தி உடையவர்கள் என செய்திகளை கூறுகிறார்கள். நான் கூறுகிறேன். முற்றிலும் நிச்சயம் இல்லை. யார் மீது மிகவும் அன்பு காட்டப் பட்டதோ அவர்கள் இன்று இல்லை. பாபா அனைவருடனும் அன்போடு நடக்கிறார். நான் எப்படி செயல்களை செய்கிறேனோ என்னை பார்த்து மற்றவர்கள் செய்வார்கள். சிலர் விகாரத்தில் ஈடுபடு கின்றனர். பிறகு மறைத்து வந்து அமர்கிறார்கள். பாபா உடனே செய்தியாளருக்கு தெரிவிக்கின்றார். இவ்வாறு கர்மங்களை செய்கிறவர்கள் மிகவும் நாசூக்காக இருக்கிறர்கள். முன்னேற முடியாது. பின்னால் வரக் கூடிய இக்கட்டான நேரத்தில் யாரும் எதுவும் செய்ய முடியாது. ஒரேயடியாக இராணுவ சட்டத்தின் படி நடப்பார்கள். இன்னும் போக போக நீங்கள் நிறைய பார்ப்பீர்கள். பாபா என்னென்ன செய்கிறார். பாபா தண்டனை அளிக்கமாட்டார். தர்மராஜ் மூலமாக கொடுக்க வைப்பார். ஞானத்தில் தூண்டுதல் விஷயம் எதுவும் இல்லை. பதீத பாவனா வாருங்கள். வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என அனைவரும் பகவானிடம் கூறுகிறார்கள். அனைத்து ஆத்மாக்களும் உடல் மூலமாக அழைக்கிறது. பாபா ஞானக் கடல் ஆவார். அவரிடம் பல்வேறு விதமான பொருட்கள் இருக்கிறது. இதுபோன்ற பொருட்கள் வேறு யாரிடமும் இல்லை. கிருஷ்ணரின் மகிமைகள் முற்றிலும் தனியாகும். பாபாவின் படிப்பினால் இவ்வாறு (இலஷ்மி நாராணனாக) எப்படி மாற முடியும். மாற்றக் கூடியவர் பாபாதான். தந்தை வந்து கர்மம், அகர்மம், விகர்மத்தின் விளைவுகளைப் புரிய வைக்கிறார். இப்போது உங்களுக்கு மூன்றாவது கண் கிடைக்கிறது. 5000 வருடத்தின் விஷயம் என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது வீட்டிற்குப் போக வேண்டும். நடிக்க வேண்டும். இது சுயதரிசன சக்கரம் அல்லவா. உங்களின் பெயர் சுயதரிசன சக்கரதாரி, பிராமண குல பூஷணம், பிரஜா பிதா பிரம்மாகுமாரர்கள்-குமாரிகள் ஆகும். இலட்சக்கணக்கானவர்கள் சுயதரிசன சக்கரதாரி ஆவார்கள். நீங்கள் எவ்வளவு ஞானத்தை படிக்கிறீர்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த நேரம் மிகவும் ஆபத்தானது. ஆகவே எந்த ஒரு தவறான செயலும் செய்யக் கூடாது. கர்மம், அகர்மம், விகர்மத்தின் விளைவுகளை கவனத்தில் வைத்து எப்போதும் உயர்ந்த கர்மங்களை செய்ய வேண்டும்.

2. யோகத்தினால் சதா காலத்திற்கும் தங்களின் உடலை நோயற்றவராக மாற்றிக் கொள்ள வேண்டும் மிகவும் அன்பான அந்த ஒரு தந்தையை மட்டுமே நினைக்க வேண்டும். பாபாவிடமிருந்து கிடைக்கும் அழிவற்ற ஞான செல்வத்தை தானம் செய்ய வேண்டும்.

வரதானம்:

சுயமரியாதையில் நிலைத்திருந்து உலகத்தின் மூலம் மரியாதையை அடையக் கூடிய, தேக அபிமானத்திலிருந்து விடுபட்டவர் ஆகுக.

படிப்பின் முக்கிய இலட்சியம் - தேக அபிமானத்திலிருந்து விடுபட்ட ஆத்ம அபிமானி ஆவது. இந்த தேக அபிமானத்திலிருந்து விலகியிருப்பது அதாவது விடுபடுவதற்கான விதி -சதா சுயமரியாதையில் இருப்பது. சங்கமயும் மற்றும் எதிர்காலத்திற்காக யார் பலதரப்பட்ட சுயமரியாதைகள் இருக்கின்றன, அதில் ஏதாவதொரு சுயமரியாதையில் நிலைத்திருப்பதின் மூலம் அவர்களுக்கு தானாகவே நீங்கி விடுகிறது, யார் சுயமரியாதையில் நிலைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு தானாகவே மரியாதை கிடைக்கும். சதா சுயமரியாதையில் இருக்கக் கூடியவர் தான் விக்ஷ்வ மகாராஜா ஆகிறார்கள் மற்றும் உலகத்தின் அவர்களுக்கு மரியாதையை பெறுகிறார்கள்.

சுலோகன்:

எப்படி நேரமோ அப்படி தன்னை மோல்ட் ஆகிக் (வளைத்துக்) கொள்வது - இது தான் உண்மையான கோல்ட் (தங்கம்) ஆவது.