05-05-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் தந்தையின் ஸ்ரீமத் படி நடந்தீர்கள் என்றால் உங்களுக்கு யாருமே துக்கம் கொடுக்க முடியாது. துக்கம், கஷ்டம் கொடுப்பவன் இராவணன் ஆவான். அவன் உங்களுடைய இராஜ்யத்தில் இருப்பதில்லை.

கேள்வி:
இந்த ஞான வேள்வியில் குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஒரு ஆஹுதி போடு கிறீர்கள்?

பதில்:
இந்த ஞான வேள்வியில் நீங்கள் எள், சோளம் போன்றவற்றை ஒன்றும் ஆஹுதி கொடுப்பதில்லை. இதில் நீங்கள் தேகம் சகிதமாக எதெல்லாம் உள்ளதோ அவை அனைத்தை யும் ஆஹுதி கொடுக்க வேண்டும். அதாவது புத்தி மூலமாக அனைத்தையும் மறந்து விட வேண்டும். இந்த யக்ஞத்தை தூய்மையாக இருக்கும் பிராமணர்கள் மட்டுமே பராமரிக்க முடியும். யார் தூய்மையான பிராமணர்கள் ஆகிறார்களோ, அவர்களே பிறகு பிராமணரிலி ருந்து தேவதை ஆகிறார்கள்.

பாடல்:
உன்னை அடைந்து நாங்கள் உலகத்தை அடைந்து விட்டோம்.....

ஓம் சாந்தி.
குழந்தைகள் தந்தையிடம் வந்துள்ளார்கள். தந்தையைக் கண்டறிந்து, தந்தை என்று கூறும் பொழுது தான் குழந்தைகள் அவசியம் வருவார்கள். இல்லையென்றால் வர முடியாது. நாம் நிராகாரி எல்லையில்லாத தந்தையிடம் செல்கிறோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவருடைய பெயர் சிவபாபா என்பதாகும். அவருக்கு தனக்கென்று உடல் கிடையாது. அவருக்கு யாருமே எதிரி ஆக முடியாது. இங்கு எதிரிகளாக ஆகி விடும் பொழுது இராஜாக்களையே கொன்று விடுகிறார்கள். காந்தியைக் கொன்றார்கள். ஏனெனில், அவருக்கோ உடல் இருந்தது. தந்தைக்கோ அவருக்கென்று உடல் கிடையாது. கொல்ல விரும்பினாலும் கூட நான் யாருக்குள் பிரவேசம் செய்கிறேனோ அவருடைய உடலைத் தான் அழிக்க முடியும். ஆத்மாவை யாருமே வெட்டவோ, கொல்லவோ முடியாது. எனவே யார் என்னை சரியான முறையில் அறிந்திருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இராஜ்ய பாக்கியத்தைக் கொடுக் கிறேன். அவர்களுடைய இராஜ்ய பாக்கியத்தை எப்பேர்ப்பட்ட நிலையிலும் யாரும் எரிக்க முடியாது. தண்ணீரில் மூழ்கடிக்கவும் முடியாது.

குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து அழியாத இராஜதானியின் ஆஸ்தியைப் பெற வந்துள்ளீர்கள். அவர்களுக்கு யாருமே துக்கம் அல்லது கஷ்டம் கொடுக்க முடியாது. அங்கு கஷ்டம் கொடுப்பவர் யாரும் இருப்பதே இல்லை. துன்பம் கொடுப்பவன் இராவணன் ஆவான். இராவணனுக்கு 10 தலைகள் காண்பிக்கிறார்கள். இராவணனை மட்டும் காண்பிக் கிறார்கள். மண்டோதரியைக் காண்பிப்பது இல்லை. இராவணனுக்கு மனைவி இருந்தார் என்று பெயர் மட்டும் கூறியுள்ளார்கள். எனவே இங்கு இராவண இராஜ்யத்தில் உங்களுக்கு கஷ்டம் ஏற்படக் கூடும். அங்கோ இராவணன் இருப்பதில்லை. தந்தையோ நிராகாரமானவர் ஆவார். அவரை யாருமே கொல்லவோ, வெட்டவோ முடியாது. உங்களுக்கு உடல் இருந்தும் கூட எந்த ஒரு துக்கமும் ஏற்படாத வகையில் உங்களையும் அது போல ஆக்குகிறார். எனவே அப்பேர்ப்பட்ட தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும். பாபா தான் ஞானக் கடல் ஆவார். வேறு யாரும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. பிரம்மா மூலமாக எல்லா சாஸ்திரங்களின் சாரத்தையும் புரிய வைக்கிறார். பிரம்மா, சிவபாபாவின் குழந்தை ஆவார். அப்படியின்றி விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வெளிப்பட்டார் என்பதல்ல. நாபி என்று கூறுவதாக இருந்தால் சிவபாபாவின் கமல நாபியிலிருந்து வெளிப்பட்டுள்ளீர்கள். மற்ற படங்களோ எல்லாமே தவறு ஆகும். ஒரே ஒரு பாபா சத்தியமானவர் ஆவார். இராவணன் சரியில்லாதவராக ஆக்கி விடு கிறான். இது நாடகம் ஆகும். இந்த நாடகத்தை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். எப்பொழு திலிருந்து இராவண இராஜ்யம் ஆராம்பமாகியது. எப்படி மனிதர்கள் கீழே விழுந்து விழுந்து விழுந்தே விட்டார்கள். மேலே யாருமே ஏற முடியவில்லை. தந்தை யிடம் செல்வதற்காக என்ன வழி கூறுகிறார்களோ அதனால் இன்னுமே காட்டிற்குள் தள்ளி விடுகிறார்கள். ஏனெனில், பாபாவின் வீடு மற்றும் சொர்க்கத்திற்கான வழியை அறியாமலே உள்ளார்கள். யாரெல்லாம் குருமார்கள் ஆகியோர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஹடயோகி ஆவார்கள். வீடு வாசலை விட்டு விடுகிறார்கள். பாபா விடுவிப்பது இல்லை. தூய்மை ஆகுங்கள் என்று கூறுகிறார். குமார் மற்றும் குமாரி பவித்திரமாக இருக்கிறார்கள். பாபா எங்களைக் காப்பாற்றுங்கள் என்று திரௌபதி கூப்பிடுகிறார். நாங்கள் தூய்மையாக ஆகி கிருஷ்ணபுரியில் செல்ல விரும்புகிறோம் கன்னியர்கள் அழைக்கிறார்கள் - தாய் தந்தை தொல்லைப்படுத்துகிறார்கள். திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று அடிக்கிறார்கள். முதலில் தாய் தந்தை கன்னிகையின் பாதங்களில் விழுகிறார்கள். ஏனெனில் சுயம் தங்களை பதீதமானவராக (தூய்மையற்றவராக) மற்றும் கன்னிகையை பாவனமானவர் என்று நினைக் கிறார்கள். ஹே, பதீத பாவனரே! வாருங்கள் என்று முறையிடவும் செய்கிறார்கள். குமாரிகளே பதீதமாக ஆகாதீர்கள் என்று இப்பொழுது பாபா கூறுகிறார். இல்லையென்றால், பின் முறையிட வேண்டி வரும். நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாபா வந்திருப்பதே பாவனமாக ஆக்குவதற்கும், சொர்க்கத்தின் அரசாட்சியின் ஆஸ்தியை அளிப்பதற்காகவும், எனவே தூய்மையாக ஆக வேண்டி உள்ளது என்று கூறுகிறார். பதீதமாக ஆனீர்கள் என்றால் பதீதமாக ஆகி இறப்பீர்கள். சொர்க்கத்தின் சுகத்தை பார்க்க முடியாமல் போய் விடுவீர்கள். சொர்க்கத்திலோ நிறைய ஆனந்தம் உள்ளது. வைரம் வைடூரியங்களின் அரண்மனை இருக்கும். அதே இராதை கிருஷ்ணர் பிறகு இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். எனவே இலட்சுமி நாராயணரைக் கூட அவ்வளவு அன்பு செய்ய வேண்டும். நல்லது. கிருஷ்ணரை அன்பு செய்கிறார்கள். பிறகு இராதையை ஏன் இல்லாமல் செய்து விட்டார்கள்? கிருஷ்ண ஜன்மாஷ்ட மியின் பொழுது கிருஷ்ணரை ஊஞ்சலில் ஊஞ்சலாட்டுகிறார்கள். தாய்மார்கள் கிருஷ்ணரை மிகவும் அன்பு செய்கிறார்கள். இராதையை அவ்வாறு செய்வதில்லை. மேலும் பின் கிருஷ்ணராக ஆகப் போகிற பிரம்மாவிற்குக் கூட அந்த அளவு பூஜை இல்லை. ஜகதம்பாவிற்கோ நிறைய பூஜை செய்கிறார்கள். அவர் சரஸ்வதி. பிரம்மாவின் மகள் ஆவார். ஆதி தேவன் பிரம்மாவிற்கு அஜ்மீரில் மட்டும் கோவில் உள்ளது. இப்பொழுது மம்மா ஞான ஞானேஸ்வரி ஆவார். அவர் பிராமணி ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவர் ஒன்றும் சொர்க்கத்தின் ஆதி தேவி கிடையாது. 8 புஜங்களும் கிடையாது. கோவிலில் 8 புஜங்கள் காண்பித்துள்ளார்கள். மாயையின் இராஜ்யத்தில் பொய்யே பொய் தான்! என்று தந்தை கூறுகிறார். ஒரு தந்தை தான் சத்தியமானவர் ஆவார். அவர் மனிதனிலிருந்து தேவதை யாக ஆக்குவதற்காக உண்மையைக் கூறுகிறார். அந்த உலகியல் பிராமணர்கள் மூலமாக நீங்கள் கதைகள் ஆகியவை களைக் கேட்டு கேட்டு இந்த நிலைமைக்கு வந்து சேர்ந்துள்ளீர்கள். இப்பொழுது அழிவு எதிரிலேயே உள்ளது. விருட்சத்திற்கு பட்டுப் போன நிலை ஏற்பட்டு விடும் பொழுது கலியுகக் கடைசியில் கல்பத்தின் சங்கமயுகத்தில் நான் வருகிறேன். நான் யுகே, யுகே அதாவது ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் வருவதில்லை. நான் ஆமை, மீன், பன்றி போன்ற அவதாரங்களையும் எடுப்பதில்லை. நான் ஒவ்வொரு அணு அணுவிலும் இருப்பதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் அணு அணுவிற்குள் செல்வதில்லை. பின் நான் எப்படி செல்வேன்? மனிதர்களுக்காக அவர்கள் மிருகங்களாக கூட ஆகிறார்கள் என்று கூறுகிறார்கள். அதுவோ அநேக ஜீவராசிகள் உள்ளன. கணக்கிட்டுப் பார்க்கவே முடியாது. சரியான விஷயத்தை இப்பொழுது நான் உங்களுக்கு புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். 84 இலட்சம் பிறவிகள் என்பது உண்மையா, இல்லை பொய்யா? என்பதை இப்பொழுது தீர்மானியுங்கள். இந்த பொய்யான உலகத்தில் உண்மை எங்கிருந்து வந்தது? உண்மையோ ஒன்றாகத் தான் இருக்கும். தந்தை தான் வந்து சத்தியம் அசத்தியம் பற்றி நிர்ணயம் செய்கிறார். மாயை எல்லோரையுமே அசத்தியமாக ஆக்கி விட்டுள்ளது. தந்தை வந்து அனைவரையும் சத்திய மானவர் களாக ஆக்குகிறார். இப்பொழுது சரி யார் என்பதைத் தீர்மானியுங்கள். உங்களுடைய இத்தனை குருமார்கள் சரியா? இல்லை ஒரு தந்தை சரியா? ஒரு சத்தியமான பாபா தான் சத்தியமான உலகத்தை ஸ்தாபனை செய்கிறார். அங்கு முறையற்ற எந்த காரியமும் ஆவதே இல்லை. அங்கு யாருக்குமே விஷம் கிடைப்பதில்லை. பாரதவாசிகளாகிய நாம் உண்மையில் தேவி தேவதைகளாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது பதீதமாக ஆகி விட்டுள்ளீர்கள். ஹே, பதீத பாவனரே வாருங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள். இராஜா இராணி எப்படியோ அப்படியே பிரஜைகள். எல்லோருமே பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள். அதனால் தான் இலட்சுமி நாராயணர் ஆகியோரை பூஜிக்கிறார்கள் அல்லவா? பாரதத்தில் தான் பவித்திர இராஜாக்கள் இருந்தார்கள். இப்பொழுது அபவித்திரமாக உள்ளார்கள். தூய்மையாக இருப்பவர்களைப் பூஜிக்கிறார்கள். இப்பொழுது பாபா வந்து உங்களை மகாராஜா மகாராணியாக ஆக்குகிறார். எனவே முயற்சி செய்ய வேண்டும். மற்றபடி 8 புஜங்கள் உடையவர் யாருமே கிடையாது. இலட்சுமி நாராயணருக்குக் கூட 2 புஜங்கள் தான் உள்ளன. படங்களில் பின் நாராயணரை கருமை யாகவும், இலட்சுமியை வெண்மையாகவும் காண்பிக் கிறார்கள். இப்பொழுது ஒருவர் தூய்மை யாகவும் மற்றொருவர் தூய்மையற்றவராகவும் எப்படி இருக்க முடியும்? எனவே படங்கள் பொய்யானதாக ஆகியது அல்லவா? இராதை கிருஷ்ணர் இருவரும் வெண்மையாக (தூய்மையாக) இருந்தார்கள். பின் காம சிதையில் அமர்ந்து இருவருமே கருப்பாகி விட்டார்கள். ஒருவர் வெண்மையாக, ஒருவர் கருப்பாகவோ இருக்க முடியாது. கிருஷ்ணருக்கு ஷியாம் சுந்தர் என்று கூறுகிறார்கள். இராதையை ஷ்யாம் சுந்தர் என்று ஏன் கூறுவதில்லை. இந்த வித்தியாசம் ஏன் வைத்துள்ளார்கள்? ஜோடியோ ஒன்று போல இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் ஞானச்சிதை மீது அமர்ந்துள்ளீர்கள். நீங்கள் பிறகு காமச் சிதை மீது ஏன் அமருகிறீர்கள். குழந்தைகளையும் இந்த முயற்சி செய்விக்க வேண்டும். நாங்கள் ஞானச் சிதையில் அமர்ந்துள்ளோம். நீங்கள் பிறகு காமச் சிதையில் அமரும் சேஷ்டை ஏன் செய்கிறீர்கள்? கணவன் ஞானம் எடுக்கிறார், மனைவி எடுப்பதில்லை என்றாலும் கூட சண்டை ஏற்பட்டு விடுகிறது. யக்ஞத்தில் தடைகளோ நிறைய ஏற்படுகின்றன. இந்த ஞானம் எவ்வளவு நீட்டி முழக்கி உள்ளது. எப்பொழுது பாபா வந்தாரோ அப்பொழுது முதல் ருத்ர யக்ஞம் ஆரம்பமாகி உள்ளது. பிராமணர் ஆகாதவரை தேவதை ஆக முடியாது. சூத்திரர் பதீத நிலையிலிருந்து பாவன தேவதை ஆக வேண்டும் என்றால் பிராமணர் ஆக வேண்டி உள்ளது. பிராமணர்கள் தான் வேள்வியை பராமரிக்கிறார்கள். இதில் தூய்மையாக ஆக வேண்டும். மற்றபடி ஒன்றும் எள், சோளம் ஆகியவற்றை மற்றவர்கள் செய்வது போல சேர்த்து வைக்க வேண்டியதில்லை. ஆபத்துக்களின் பொழுது வேள்வி படைக்கிறார்கள். பகவான் கூட இவ்வாறு வேள்வியைப் படைக்கிறார் என்று நினைக்கிறார்கள். தந்தையோ இது ஞான யக்ஞம் ஆகும் என்று கூறுகிறார். இதில் நீங்கள் ஆஹுதி போடுகிறீர்கள். தேக சகிதம் எதெல்லாம் உள்ளதோ அவை அனைத்தையும் ஆஹுதி (சமர்ப்பிக்க) கொடுக்க வேண்டும். பைசா ஆகியவை போட வேண்டியது இல்லை. இதில் எல்லாவற்றையும் ஸ்வாஹா செய்ய வேண்டும். இது பற்றி ஒரு கதை உள்ளது. தட்ச பிரஜாபிதா யக்ஞத்தை படைத்தார் (கதை). இப்பொழுது பிரஜாபிதாவோ ஒருவர் ஆவார். பிரஜாபிதா பிரம்மா பின் தட்ச பிரஜாபிதா எங்கிருந்து வந்தார்? தந்தை பிரஜாபிதா பிரம்மா மூலமாக வேள்வியை படைக்கிறார். நீங்கள் எல்லோரும் பிராமணர்கள் ஆவீர்கள். உங்களுக்கு பாட்டனாரின் ஆஸ்தி கிடைக்கிறது. நாம் சிவபாபாவிடம் பிரம்மா மூலமாக வருகிறோம் என்றே நீங்கள் கூறுகிறீர்கள். இவர் சிவபாபா வினுடைய தபால் நிலையம் ஆவார். கடிதம் எழுதினால் சிவபாபா/பிரம்மா மூலமாக என்று எழுதுங்கள். இவருக்குள் பாபாவின் நிவாசம் ஆகிறது. இந்த எல்லா பிராமணர்களும் பாவனமாக ஆவதற்காக ஞான யோகம் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பதீதமாக (தூய்மை யற்றவராக) இல்லை என்று நீங்கள் அவ்வாறு கூற மாட்டீர்கள். நாங்கள் பதீதர்கள் ஆவோம். ஆனால் பதீத பாவனர் நம்மை பாவனமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். வேறு எந்த மனிதர் களும் பாவனம் கிடையாது. அதனால் தானே கங்கையில் ஸ்நானம் செய்ய செல்கிறார்கள். ஒரே ஒரு சத்குரு பாபா தான் நம்மை பாவனமாக ஆக்குகிறார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். குழந்தைகளே நீங்கள் ஒருவனாகிய என்னுடன் உங்களுடைய புத்தி யோகத்தை இணையுங்கள் என்பது அவருடைய ஸ்ரீமத் ஆகும். தீர்மானியுங்கள். வேண்டு மானால் அந்த குருக்களிடம் செல்லுங்கள். அல்லது என் வழிப் படி நடவுங்கள். உங்களுக்கோ ஒரே ஒருவர் தான் தந்தை ஆசிரியர் சத்குரு ஆவார். ஆத்ம உணர்வுடையவராக ஆகுங்கள் என்று அனைத்து மனிதர்களுக்கும் எல்லையில்லாத தந்தை கூறுகிறார். தேவதை கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பார்கள். இங்கோ இந்த ஞானம் யாரிடமும் கிடையாது. சந்நியாசிகளோ ஆத்மாவே பரமாத்மா என்று கூறி விடுகிறார்கள். ஆத்மா பிரம்ம தத்துவத்தில் கலந்து போய் விடுகிறது. இது போன்ற விஷயங்களைக் கேட்டு கேட்டு நீங்கள் எவ்வளவு துக்கமுடையவர்களாக, பதீதமாக ஆகி விட்டுள்ளீர்கள். யார் விகாரத்தினால் பிறக்கிறார்களோ அவர்களுக்கு ப்ரஷ்டாச்சாரி - பதீதமானவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் இராவண இராஜ்யத்தில் இழிந்த செயல்களைத் தான் செய்கிறார்கள். மீண்டும் மலர் போல ஆக்குவதற் காக தந்தை தான் வர வேண்டி உள்ளது. பாரதத்தில் தான் வருகிறார். உங்களுக்கு ஞானம் மற்றும் யோகத்தைக் கற்பிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயும் உங்களுக்கு கற்பித்து சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்கி இருந்தேன். மீண்டும் ஆக்குகிறேன். கல்ப கல்பமாக நான் வந்து கொண்டே இருக்கிறேன். இதற்கு ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை. சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. பிரளயத்தின் வியமோ கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் இச்சமயத்தில் அழிவற்ற ஞான இரத்தினங்களால் பையை நிரப்புகிறீர்கள். சிவபாபாவிற்கு பம் பம் மகாதேவ் என்று கூறுகிறார்கள். பம் பம் என்றால் சங்கொலி எழுப்பி எங்கள் பையை நிரப்பி விடுங்கள். ஞானம் புத்தியில் இருக்கிறது அல்லவா? ஆத்மாவில் தான் சம்ஸ்காரம் இருக்கிறது. ஆத்மா தான் படித்து பொறியியல் வல்லுநர், வழக்கறிஞர் ஆகியோராக ஆகிறார். இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் என்ன வாகப் போகிறீர்கள்? பாபாவிடமிருந்து ஆஸ்தி பெற்று இலட்சுமி நாராயணர் ஆகிடுவோம் என்று கூறுகிறீர்கள். ஆத்மா மறு பிறவியோ நிச்சயம் எடுக்கிறது. இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்! எவரொருவருக்கும் இந்த 2 வார்த்தைகளை மட்டும் காதில் போட்டு விடுங்கள் - நீங்கள் ஆத்மா ஆவீர்கள். சிவபாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் சொர்க்கத்தின் அரசாட்சி கிடைக்கும். எவ்வளவு சுலபமானது! ஒரே ஒரு தந்தை தான் சத்தியத்தைக் கூறுகிறார். அனைவருக்கும் சத்கதி அளிக்கிறார். மற்ற எல்லோரும் பொய்யைக் கூறி துர்க்கதி தான் செய்வார்கள். இந்த சாஸ்திரங்கள் ஆகியவை எல்லாம் பின்னால் உருவானது. பாரதத்தின் சாஸ்திரம் ஒரே ஒரு கீதை ஆகும். இது பரம்பரையாக வந்து கொண்டி ருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் எப்பொழுதிலிருந்து? சிருஷ்டிக்கு இலட்சக்கணக் கான வருடங்கள் ஆகியது என்று நினைக்கிறார்கள். நல்லது.

குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிற்காக திராட்சைப் பழம் எடுத்து கொண்டு வருகிறீர்கள். நீங்கள் தான் சாப்பிடுகிறீர்கள். நான் சாப்பிடுவதில்லை. நானோ (அபோக்தா) எதையும் உட்கொள்ளாதவன் ஆவேன். சத்யுகத்தில் உங்களுக்காக மாளிகை அமைக்கிறார். இங்கும் உங்களை புதிய மாளிகையில் இருத்துகிறேன். நானோ பழையதிலேயே தான் இருக்கிறேன். இவர் அதிசயமான பாபா ஆவார். இவர் தந்தையும் ஆவார். பின் விருந்தாளியும் ஆவார். மும்பைக்கு செல்கிறார் என்றால், விருந்தாளி என்று கூறுவார்கள் அல்லவா? பார்க்கப்போனால் இவர் மிகப் பெரிய முழு உலகத்திற்கான விருந்தாளி ஆவார். இவருக்கு வருவது மற்றும் போவதற்கு நேரம் ஆவதில்லை. விருந்தாளியும் அதிசயமானவர் ஆவார். தூர தேசத்திலிருப் பவர், அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். எனவே விருந்தாளி ஆகிறார் அல்லவா? வருவதே உங்களை அழகாக (மலர் போல) ஆக்கி ஆஸ்தி அளிப்பதற்காக, சோழியிலிருந்து வைரம் போல ஆக்குவதற்காக. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அழியாத ஞான இரத்தினங்களை தாரணை செய்து சங்கொலி எழுப்ப வேண்டும். அனைவருக்கும் இந்த ஞான இரத்தினங்களைக் கொடுக்க வேண்டும்.

2. சத்தியம் மற்றும் அசத்தியத்தைப் புரிந்துக் கொண்டு சத்திய வழிப்படி நடக்க வேண்டும். எந்த ஒரு சட்டத்திற்குப் புறம்பான செயலையும் செய்யக் கூடாது.

வரதானம்:
புத்தியை பிஸியாக வைப்பதற்கான விதியின் மூலம் வீணானதை முடிக்கக்கூடிய சதா சக்திசாலியானவர் ஆகுக.

யார் புத்தியை பிஸியாக வைப்பதை தன்னுடையதாக மாற்றியுள்ளார்களோ அவர்கள் தான் ஆற்றல் மிக்கவர் அதாவது சக்திசாலியானவராக இருக்கிறார்கள். வீணானதை சமாப்தி செய்து சக்திசாலியாக மாற்றுவதற்கான எளிய சாதனம் - பிஸியாக வைத்துக் கொள்வது, ஆகையால் எவ்வாறு தினந்தோறும் காலையில் அன்றாடம் செய்யும் ஸ்தூலமான வேலை களை அட்டவணைப்படுத்துகிறீர்களோ, அதுபோல தனது புத்தியை பிஸியாக வைத்துக் கொள்வதற் கான அட்டவணையை (டைம்-டேபில்) உருவாக்குங்கள் - இந்தந்த நேரத்தில் புத்தியில் சக்திசாலியான எண்ணங்களை உருவாக்கி வீணானதை முடித்து விடுங்கள். பிஸியாக இருந்தீர்கள் என்றால் மாயா தொலைவிலிருந்தவாறே திரும்ப சென்றுவிடும்.

சுலோகன்:
துக்கம் நிறைந்த உலகத்தை மறக்க வேண்டுமென்றால் பரமாத்மாவின் அன்பில் சதா முழ்கியிருங்கள்.