05.05.24 காலை முரளி
ஓம் சாந்தி 15.11.99 பாப்தாதா,
மதுபன்
பாபாவுக்கு சமமாக ஆவதற்கான சகஜமான புருஷார்த்தம் கட்டளைக்குக்
கீழ்ப்படிந்தவர் ஆகுங்கள்
இன்று பாப்தாதா தம்முடைய புனித அன்னப்பறவைகளின் சபையைப்
பார்த்துக் கொண்டிருக் கிறார். ஒவ்வொரு குழந்தையும் புனித
அன்னப்பறவை. சதா மனதில் ஞான ரத்தினங்களின் சிந்தனை செய்து
கொண்டே இருக்கின்றனர். புனித அன்னப்பறவையின் வேலையே வீணான
வற்றின் கூழாங்கல்லை விட்டு விடுவது மற்றும் ஞான ரத்தினங்களைச்
சிந்தனை செய்வதாகும். ஒவ்வொரு ரத்தினமும் எவ்வளவு விலைமதிக்க
முடியாதது! ஒவ்வொரு குழந்தையும் ஞானரத் தினங்களின் சுரங்கம் ஆகி
உள்ளனர். ஞான ரத்தினங்களின் கஜானாவினால் சதா நிறைந்துள்ளனர்.
இன்று பாப்தாதா குழந்தைகளிடம் ஒரு விசேˆமான விˆயத்தைச்
சோதித்துக் கொண்டிருந்தார். அது என்ன? ஞான-யோகத்தின் சுலபமான
தாரணைக்கான சுலபமான சாதனம், பாபா மற்றும் தாதாவின் கட்டளையை
ஏற்று நடப்பது (ஆக்ஞாக்காரி) தந்தையின் ரூபத்திலும் ஆக்ஞாக்காரி,
ஆசிரியர் ரூபத்திலும் மற்றும் சத்குரு ரூபத்திலும் ஆக்ஞாக்காரி.
மூன்று ரூபங்களிலும் ஆக்ஞாக்காரி ஆவது என்றால் சகஜ புருஷார்த்தி
ஆவது. ஏனென்றால் மூன்று ரூபங்களிலுமே குழந்தைகளுக்குக்
கட்டளைகள் கிடைத்துள்ளன. அமிர்தவேளை தொடங்கி இரவு வரை ஒவ்வொரு
நேரமும் ஒவ்வொரு காரியத்திற்காகவும் கட்டளை கிடைத்துள்ளது.
கட்டளைப்படி நடந்து கொண்டே இருந்தால் எந்த விதமான முயற்சி
அல்லது கஷ்டம் அனுபவமாகாது. ஒவ்வொரு நேரத்திலும் மனதின்
சங்கல்பம், வார்த்தை மற்றும் கர்மத்திற்காக மூன்று விதமான
கட்டளைகள் தெளிவாகக் கிடைத்துள்ளன என்று யோசிப்பதற்கான
அவசியமும் இல்லை - இதைச் செய்யவா, வேண்டாமா, இது சரியா அல்லது
தவறா? யோசிக்க முயற்சி கூடச் செய்ய வேண்டாம். பரமாத்ம கட்டளை
எப்போதும் சிரேஷ்டமானது. ஆக, குமார்கள் யாரெல்லாம்
வந்திருக்கிறீர்களோ, இது நல்ல குழுவாக உள்ளது. ஆக, ஒவ்வொருவரும்
தந்தையுடையவர் ஆனதும் தந்தைக்கு உறுதிமொழி கொடுத்து விட்டீர்களா?
எப்போது தந்தையுடையவர் ஆகி விட்டீர்களோ, முதன் முதலில் எந்த
உறுதிமொழி கொடுத்தீர்கள்? பாபா, உடல்-மனம்-செல்வம் என்னவெல்லாம்
எங்களிடம் உள்ளனவோ, குமார் களிடம் செல்வம் அதிகம் இருக்காது,
பிறகும் கூட இவை அனைத்தும் உங்களுடையவை - இந்த உறுதிமொழி
கொடுத்திருக்கிறீர்களா? உடலும், மனமும், செல்வமும் மற்றும்
சம்பந்தமும் அனைத்தும் உங்களுடையவை. இந்த உறுதிமொழியையும்
பக்காவாக கொடுத்திருக்கிறீர்களா? எப்போது உடல்-மனம்-செல்வம்,
சம்பந்தம் அனைத்தும் உங்களுடையவை என ஆகிறதோ, அப்போது என்னுடையது
என்ன இருக்கிறது? பிறகு கொஞ்சம் எனது என்பது இருக்கிறதா? என்ன
தான் நடக்கிறது? உடல், மனம், செல்வம், மக்கள் அனைத்தையும்
தந்தையிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இல்லறத்தில் இருப்பவர்கள்
ஒப்படைத்து விட்டீர்களா? மதுபனைச் சேர்ந்தவர்கள் ஒப்படைத்து
விட்டீர்களா? பக்கா தான் இல்லையா? எப்போது மனமும்
தந்தையுடையதாக ஆகி விட்டதோ, அப்போது எனது மனமே இல்லை தானே?
அல்லது மனம் என்னுடையதா? எனது எனப் புரிந்து கொண்டு அதைப்
பயன்படுத்த வேண்டுமா? எப்போது மனதை பாபாவுக்குக் கொடுத்து
விட்டீர்களோ, இதுவும் நம்பிக் கொடுக்கப் பட்ட பொருள் ஆகிறது.
பிறகு யுத்தம் எதனோடு செய்கிறீர்கள்? எனது மனம் குழப்பமாக
உள்ளது, எனது மனதில் வீண் சங்கல்பங்கள் வருகின்றன. எனது மனம்
சஞ்சல மடைந்துள்ளது எப்போது என்னுடையது இல்லையோ, நம்பி ஒப்படைக்
கப்பட்ட பொருள் (அடகுப்பொருள்) என்று ஆகிறதோ, பிறகு அந்தப்
பொருளை எனது எனப் புரிந்து கொண்டு பயன்படுத்தினால், இது
பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பொருளைக் கையாடல் செய்வ தாக (நம்பிக்கை
துரோகம்) ஆகாதா? மாயாவுக்கான வாசல் - நான் மற்றும் எனது. ஆக,
உடலும் உங்களுடையது இல்லை. பிறகு தேக அபிமானத்தின் நான்
எங்கிருந்து வந்தது? மனமும் உங்களுடையது இல்லை. அப்போது எனது,
எனது என்பது எங்கிருந்து வந்தது? உன்னுடையதா என்னுடையதா?
பாபாவுடையதா, அல்லது வெறுமனே சொல்வது மட்டும் தான்,
செய்வதில்லையா? சொல்வது தந்தையுடையது. ஆனால் என்னுடையது என்று
நினைத்துக் கொள்வது! முதல் உறுதிமொழியை மட்டும் நினைவு
வையுங்கள் - உடல் உணர்வின் நான் என்பதும் இல்லை, எனது என்பதும்
இல்லை. ஆக, எது பாபாவின் கட்டளையாக உள்ளதோ, உடலையும் நம்மிடம்
நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள் (அமானத்) என உணருங்கள். மனதையும்
அமானத் எனப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு கடின உழைப்பிற்கான
அவசியம் இருக்குமா என்ன? எந்த ஒரு பலவீனம் வந்தாலும் இந்த
இரண்டு சொற்களில் இருந்து தான் வருகிறது - நான் மற்றும் எனது.
ஆக, உங்களது உடலும் இல்லை, உடல் உணர்வின் நான் என்பதும் இல்லை.
மனதில் என்ன சங்கல்பங்கள் வந்தாலும் கட்டளைப்படி நடப்பவர்
என்றால், பாபாவின் கட்டளை என்ன? நேர்மறை யாக யோசியுங்கள். சுப
பாவனையின் சங்கல்பம் செய்யுங்கள். தவறான சங்கல்பம் செய்யுங்கள்
என்பது பாபாவின் கட்டளையா என்ன? இல்லை. ஆக, உங்களது மனம் இல்லை
எனும் போது பிறகும் வீண் சங்கல்பம் செய்கிறீர்கள் என்றால்
பாபாவின் கட்டளையை நடைமுறையில் கொண்டு வரவில்லை இல்லையா? ஒரு
சொல்லை மட்டும் நினைவு வையுங்கள் - நான் பரமாத்ம கட்டளைப்படி
நடக்கும் குழந்தை. இது பாபாவின் கட்டளையா இல்லையா என்பதை யோசி
யுங்கள். கட்டளைப்படி நடக்கும் குழந்தை என்றால் அவருக்குத்
தானாகவே பாபா நினை விருக்கும். தானாகவே அன்பானவராக இருப்பார்.
தானாகவே பாபாவுக்கு சமீபமானவராக இருப்பார். ஆகவே சோதித்துப்
பாருங்கள் - பாபாவின் சமீபமான, பாபா கட்டளைப்படி நடப்பவரா? ஒரு
சொல்லை அமிர்தவேளையில் நினைவு செய்ய முடியும் - நான் யார்?
கட்டளைப்படி நடப்பவனா அல்லது சில நேரம் கட்டளைப்படி நடப்பவர்
மற்றும் சில நேரம் கட்டளையிலிருந்து விலகி இருப்பவரா?
பாப்தாதா எப்போதுமே சொல்கிறார் -- எந்த ஒரு ரூபத்திலும் ஒரு
பாபாவின் சம்பந்தம் நினைவிருந்தால், மனதிலிருந்து (மனப்பூர்வமாக)
பாபா என்ற சொல் வெளிப்படுமானால், சமீபத்தின் அனுபவம்
செய்வீர்கள். மந்திரம் சொல்வது போல் சும்மா பாபா-பாபா என்று
சொல்லாதீர்கள். அவர்கள் ராம்-ராம் சொல்கிறார்கள், நீங்கள்
பாபா-பாபா என்று சொல்கிறீர்கள். ஆனால் மனதிலிருந்து பாபா என்பது
வெளிப்பட வேண்டும். ஒவ்வொரு கர்மம் செய்வதற்கு முன்பும் முதலில்
சோதித்துப் பாருங்கள் - மனதுக்காக, உடலுக்காக அல்லது
செல்வத்துக்காக பாபாவின் கட்டளை என்ன? குமார்களிடம் எவ்வளவு
கொஞ்சமாக செல்வம் இருந்தாலும், பாபா என்ன கட்டளை கொடுத்துள்ளார்
-- செல்வத்தின் கணக்கை எவ்விதமாக வைக்க வேண்டும் என்று
சொல்லியிருக்கிறார், அவ்வாறு வைத்திருக்கிறீர்களா? அல்லது
எவ்வாறு தோன்றுகிறதோ, அது போல் நடத்துகிறீர்களா? ஒவ்வொரு
குமாரும் பணத்தின் கணக்கையும் வைக்க வேண்டும். பணத்தை எங்கே,
எப்படிப் பயன்படுத்துவது, மனதையும் எங்கே எப்படிப்
பயன்படுத்துவது, உடலையும் எங்கே ஈடுபடுத்துவது - இந்த அனைத்துக்
கணக்கும் இருக்க வேண்டும். தாதிகள் நீங்கள் தாரணைக்கான வகுப்பு
நடத்தும் போது புரிய வைக்கிறீர்கள் இல்லையா - பணத்தை எப்படிப்
பயன்படுத்துவது என்பது பற்றி? என்ன கணக்கு வைப்பீர்கள்?
குமார்களுக்குத் தெரியும், எப்படிக கணக்கு வைப்பது, எங்கே
ஈடுபடுத்துவது என்பது. இது தெரியும் இல்லையா? சிலர் கை
உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். புதிது-புதிதாக வந்தவர்களும்
உள்ளனர். இவர்களுக்குத் தெரியாது. என்னென்ன செய்ய வேண்டும்
என்பதை இவர்களுக்கு அவசியம் சொல்ல வேண்டும். கவலையற்றவர் ஆகி
விடுவார்கள், சுமை தோன்றாது. ஏனென்றால் உங்கள் அனைவரின்
லட்சியம் - குமார் என்றால் ஒளி (லைட்). டபுள் லைட்.
குமார்களுக்கு லட்சியம் உள்ளது இல்லையா - நம்பர் ஒன்னில் வர
வேண்டும் என்று? ஆகவே லட்சியத்துடன் கூடவே லட்சணமும் இருக்க
வேண்டும். லட்சியம் மிக உயர்ந்ததாக உள்ளது, ஆனால் லட்சணம் இல்லை
என்றால் லட்சியம் வரை சென்றடைவது கடினமாகி விடும். எனவே
பாபாவின் கட்டளையை சதா புத்தியில் வைத்துப் பிறகு காரியத்தில்
வாருங்கள்.
பாப்தாதா இதற்கு முன்பும் புரிய வைத்திருக்கிறார் - பிராமண
வாழ்க்கையின் முக்கிய கஜானாக்கள் - சங்கல்பம், சமயம் மற்றும்
சுவாசம். உங்களது சுவாசமும் கூட மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.
ஒரு சுவாசம் கூட சாதாரணமானதாக இருக்கக் கூடாது. வீணானதாகப்
போகக் கூடாது. பக்தியில் சொல்கிறார்கள் -- ஒவ்வொரு
சுவாசத்திலும் தங்களின் இஷ்ட தெய்வத்தை நினைவு செய்யுங்கள். ஒரு
சுவாசம் கூட வீணாகக் கூடாது. ஞானத்தின் கஜானா, சக்திகளின் கஜானா
இவை இருக்கவே செய்கின்றன. ஆனால் முக்கியமான இந்த மூன்று
கஜானாக்கள் - சங்கல்பம், சமயம் மற்றும் சுவாசம் - கட்டளைப்படி
பயனுள்ளதாக ஆகின்றனவா? வீணாகப் போகவில்லையே? ஏனென்றால் வீணாகப்
போவதால் சேமிப்பாவதில்லை. மேலும் சேமிப்புக் கணக்கை இந்த
சங்கமயுகத்தில் தான் சேமிக்க வேண்டும். சத்யுக-திரேதாவில்
சிரேஷ்ட பதவி பெற வேண்டுமானாலும், துவாபர-கலியுகத்தில் பூஜ்ய
பதவி பெற வேண்டுமானாலும் இரண்டுக்குமான சேமிப்பை இந்த
சங்கமயுகத்தில் செய்ய வேண்டும். இந்தக் கணக்கின் படி
யோசியுங்கள் - சங்கமயுக சமயத்தின் வாழ்க்கையின் சிறிய
ஜென்மத்தின் சங்கல்பம், சமயம், சுவாசம் எவ்வளவு விலைமதிப்பற்றவை!
இதில் கவனக்குறைவாக ஆகக் கூடாது. எப்படி வந்ததோ, அப்படியே நாள்
கழிந்து சென்றது என்றால் நாள் கழிந்தது என்பதில்லை. ஆனால் ஒரு
நாளில் அதிகம் இழந்தீர்கள். எப்போதாவது ஏதாவது தவறான சங்கல்பம்
தவறாக சமயம் செல்கிறது என்றால், அப்போது இது போல் புரிந்து
கொள்ளாதீர்கள் - 5 நிமிடம் தான் சென்றது, பரவாயில்லை என்று
அந்த மாதிரி நினைக்காதீர்கள். சமயத்தின் அனுசாரம் பாருங்கள் -
இயற்கை தனது காரியத்தில் எவ்வளவு தீவிரமாக உள்ளது! ஏதாவது
விளையாட்டைக் காட்டிக் கொண்டே இருக்கிறது. எங்கெங்கோ
விளையாட்டைக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால்
இயற்கையின் தலைவர்களாகிய பிராமணக் குழந்தைகளின் விளையாட்டு
ஒன்று தான் -- பறக்கும் கலையின் விளையாட்டு. ஆக, இயற்கையோ
விளையாட்டுக் காட்டுகிறது. ஆனால் பிராமணர்கள் தங்கள் பறக்கும்
கலையின் விளையாட்டைக் காட்டிக் கொண்டிருக்கிறீர்களா?
யாரோ பாப்தாதாவுக்கு ஒடிசாவின் சமுத்திரப் புயலின் விளைவை
எழுதிக் கொடுத்திருந்தார். இந்த மாதிரி ஆயிற்று என்று அப்போது
அந்த இயற்கையின் விளையாட்டையோ பார்த்து விட்டீர்கள். ஆனால்
பாப்தாதா கேட்கிறார் - நீங்கள் இயற்கையின் விளையாட்டைப்
பார்த்தீர்களா, அல்லது தங்கள் பறக்கும் கலையின் விளையாட்டில்
பிஸியாக இருந்தீர்களா? அல்லது வெறுமனே செய்தியைக் கேட்டுக்
கொண்டிருந்தீர்களா? செய்தியோ அனைவரும் கேட்கத் தான் வேண்டி
இருக்கிறது. ஆனால் எவ்வளவு செய்தி கேட்பதில் ஆர்வம் உள்ளதோ,
அந்த அளவு பறக்கும் கலையின் விளையாட்டில் இருப்பதற்கு ஆர்வம்
இருந்ததா? குழந்தைகள் அநேகர் குப்தமான யோகியாகவும் உள்ளனர்.
அந்த மாதிரி குப்த யோகி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் உதவியும்
அதிகம் கிடைத்துள்ளது. மேலும் அத்தகைய குழந்தைகள் தாங்களும்
ஆடாத, சாட்சி நிலையில் இருந்தார்கள். வாயுமண்டலத்திலும்
சமயத்தில் சகயோகம் கொடுத்தார்கள். எப்படி ஸ்தூல சகயோகம்
கொடுப்பவர்கள், அரசாங்கமாக இருந்தாலும், மற்றும்
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சகயோகம் தருவதற்குத் தயாராகி
விடுகிறார்கள், அது போல் பிராமண ஆத்மாக்களும் தங்களின் சகயோகம்
- சக்தி, சாந்தி கொடுப்பதற்கான, சுகம் கொடுப்பதற்கான ஈஸ்வரிய
சிரேஷ்ட காரியம் என்ன உள்ளதோ, அதைச் செய்தீர்களா? எப்படி அந்த
அரசாங்கம் இதைச் செய்தது, இன்ன தேசம் இதைச் செய்தது உடனே
அறிவித்து விடுகிறார்கள். ஆக, பாப்தாதா கேட்கிறார் --
சகயோகிகளாகிய நீங்களும் தங்களின் காரியத்தைச் செய்தீர்களா?
நீங்களும் விழிப்போடு இருக்க வேண்டும். ஸ்தூல சகயோகம் கொடுக்க
வேண்டியதும் அவசியமாக உள்ளது. இதில் பாப்தாதா தடை செய்வதில்லை.
ஆனால் எது பிராமண ஆத்மாக்களின் விசேˆ காரியமாக உள்ளதோ, எதற்கு
வேறு யாரும் சகயோகம் கொடுக்க முடியாதோ, அத்தகைய சகயோகத்தை
விழிப்போடு இருந்து நீங்கள் கொடுத் தீர்களா? கொடுக்க வேண்டும்
இல்லையா? அல்லது அவர்களுக்கு வெறும் ஆடை வேண்டும், தானியம்
வேண்டும் என்று அந்த மாதிரியா? ஆனால் முதலில் மனதில் அமைதி
வேண்டும். எதிர்கொள்வதற்கான சக்தி வேண்டும். ஆக, ஸ்தூல
விˆயங்களுடன் கூடவே சூட்சும சகயோகம் பிராமணர்கள் தாம் கொடுக்க
முடியும். வேறு யாரும் தர முடியாது. ஆக, இது ஒன்றுமே இல்லை, இது
ஒத்திகை தான். உண்மையானதோ இனி வரப்போகிறது. அதன் ஒத்திகையை,
உங்களையும் கூட பாபா அல்லது சமயம் செய்ய வைத்துக்
கொண்டிருக்கிறது. ஆக, என்ன சக்திகள், என்ன கஜானாக்கள் உங்களிடம்
உள்ளனவோ, அவற்றை சமயத்தில் பயன்படுத்த வருகிறதா?
குமார்கள் என்ன செய்வீர்கள்? சக்திகள் சேமிப்பாக இருக்கின்றனவா?
சாந்தி சேமிப்பாக இருக்கிறதா? பயன்படுத்த வருகிறதா? மிக
நன்றாகவே கை உயர்த்துகிறீர்கள். இப்போது நடைமுறையில் செய்து
காட்ட வேண்டும். சாட்சியாக இருந்து பார்க்கவும் வேண்டும்.
கேட்கவும் வேண்டும். சகயோகம் கொடுக்கவும் வேண்டும். கடைசியில்
உண்மையாக எப்போது பார்ட் நடிக்கப் படுகிறதோ, அதில் சாட்சியாக
மற்றும் பயமற்று இருந்து பார்க்கவும் வேண்டும். தனது பார்ட்டை
நடத்தவும் வேண்டும். எந்தப் பார்ட்? வள்ளலின் குழந்தைகள்,
வள்ளல் ஆகி, ஆத்மாக்களுக்கு வேண்டியதைக் கொடுத்துக் கொண்டே
இருக்க வேண்டும். ஆக, நீங்கள் மாஸ்டர் வள்ளல் இல்லையா? ஸ்டாக்கை
சேமியுங்கள். எவ்வளவு ஸ்டாக் உங்களிடம் இருக்குமோ, அவ்வளவு
நீங்கள் கொடுக்கும் வள்ளலாக முடியும். கடைசி வரை தனக்காக
மட்டுமே சேமித்துக் கொண்டிருப் பீர்களானால் வள்ளல் ஆக முடியாது.
அநேக ஜென்மங்கள் சிரேஷ்ட பதவி பெற வேண்டுமே, அதைப் பெற முடியாது.
எனவே, ஒரு விˆயம், தன்னிடம் ஸ்டாக் சேமித்து வையுங்கள். சுப
பாவனை, சிரேஷ்ட விருப்பத்தின் கஜானா சதா நிறைந்திருக்க வேண்டும்.
இரண்டாவது, விசேˆ சக்திகள் என்னென்ன உள்ளனவோ, அந்த சக்திகளை
எந்தச் சமயம் யாருக்கு வேண்டுமோ, அவருக்குக் கொடுக்கக்
கூடியவராக நீங்கள் இருக்க வேண்டும். இப்போது சமயத்தின் அனுசாரம்
தனது புருஷார்த்தத்தில் சங்கல்பம் மற்றும் சமயத்தைக் கொடுங்கள்.
அதோடு கூடவே வள்ளல் ஆகி, உலகத்துக்கும் சகயோகம் கொடுங்கள். தனது
புருஷார்த்தம் பற்றியோ சொல்லப் பட்டு விட்டது -
அமிர்தவேளையிலேயே இதை யோசியுங்கள் - நான் கட்டளைக்குக்
கீழ்ப்படிந்த குழந்தையாக இருக்கிறேன். ஒவ்வொரு கர்மத்திற்கும்
கட்டளை கிடைத்துள்ளது. எழுவதற்கு, உறங்குவதற்கு, உண்பதற்கு,
கர்மயோகி ஆவதற்கு -- அனைத்திற்கும் கட்டளை கிடைத்துள்ளது.
ஒவ்வொரு கர்மத்திற்கான கட்டளையும் கிடைத்துள்ளது. கட்டளைப்படி
நடப்பவராக ஆவது தான் பாபாவுக்கு சமமாக ஆவதாகும். ஸ்ரீமத் படி
நடக்க வேண்டும். மனதின் வழியும் கூடாது, மற்றவர்களின் வழியும்
கூடாது. வேறு வழிமுறை எதையும் சேர்க்கக் கூடாது. சில நேரம்
மனதின் வழிப்படியும், சில நேரம் மற்றவர்கள் வழிப்படியும்
செல்வீர்களானால் கடின உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும்.
சுலபமாக இருக்காது. ஏனென்றால் மனதின் வழியும் மற்றவர்களின்
வழியும் பறக்க விடாது. மனதின் வழியும் மற்றவர் வழியும் சுமை
உள்ளதாக இருக்கும். சுமை பறக்க விடாது. ஸ்ரீமத் டபுள் லைட்
ஆக்கி விடும். ஸ்ரீமத் படி நடப்பது என்றால் சகஜமாக பாபாவுக்கு
சமமாக ஆவதாகும். ஸ்ரீமத் படி நடப்பவர்களை எந்த ஒரு
பரிஸ்திதியும் கீழே கொண்டு வர முடியாது. எனவே ஸ்ரீமத் படி
நடக்க வருகிறதா?
நல்லது, இப்போது குமார்கள் என்ன செய்வீர்கள்? அழைப்பு கிடைத்தது.
சிறப்பான உபசாரம் ஆயிற்று. பாருங்கள், எவ்வளவு செல்லமானவர்களாக
ஆகியிருக்கிறீர்கள்! இப்போது அனைவரும் இனி என்ன செய்யப்
போகிறீர்கள்? பதில் கொடுங்கள் அல்லது அங்கே போய் விட்டால் அங்கே
அப்படியே இருந்து விடுவீர்கள், இங்கே வந்தால் இங்கே இருக்கும்
வரை தான் என அப்படியா? அந்த மாதிரி இல்லை தானே? இங்கோ மிகுந்த
மஜாவில் இருக்கிறீர்கள். மாயாவின் போராட்டத் திலிருந்து
பாதுகாப்பாக இருக்கிறீர்கள். மதுபனில் கூட மாயா வருகிறது என்று
அந்த மாதிரி யாராவது இருக்கிறீர்களா? மதுபனில் கூட முயற்சி
செய்ய வேண்டி உள்ளது என்று அந்த மாதிரி யாராவது இருக்கிறீர்களா?
பாதுகாப்பாக இருக்கிறீர்கள், நல்லது. பாப்தாதாவும் குஷியடை
கிறார். சமயம் வரும் -- அப்போது இளைஞர்களின் குரூப் மீது
அரசாங்கத்தின் பார்வையும் செல்லும். ஆனால் எப்போது நீங்கள்
விக்ன-விநாசக் ஆகி விடுகிறீர்களோ, அப்போது தான் அவ்வாறு
செல்லும். விக்ன-விநாசக் என்பது யாருடைய பெயர்? உங்களுடையது
தான் இல்லையா? யாராவது குமாரை எதிர் கொள்வதற்கு விக்னங்களுக்கு
தைரியம் கிடையாது என்று இருக்க வேண்டும். அப்போது தான் உங்களை
விக்ன-விநாசக் எனச் சொல்வார்கள். விக்னங்கள் தோல்வியடையலாம்.
ஆனால் அவை உங்களோடு போராடக் கூடாது. விக்ன-விநாசக் ஆவதற்கு
தைரியம் உள்ளதா? அல்லது அங்கே போய்க் கடிதம் எழுதுவீர்களா --
தாதி, மிக நன்றாக இருந்தது, ஆனால் என்ன வாயிற்று எனத்
தெரியவில்லை. அந்த மாதிரி எழுத மாட்டீர்களே? இந்த மகிழ்ச்சி
தரும் செய்தியையே எழுதுங்கள் - ஓ.கே, வெரி குட் (மிக நல்லது)
நான் விக்ன விநாசக். ஒரு வார்த்தை எழுதுங்கள் போதும். அதிகம்
நீண்ட கடிதமாக எழுத வேண்டாம். ஓ.கே. நல்லது.
மதுபனின் விசேˆதா கூட பாப்தாதாவிடம் வந்து சேர்ந்துள்ளது.
மதுபன்-வாசிகள் தங்களின் சார்ட் அனுப்பியுள்ளனர். பாப்தாதாவிடம்
வந்து சேர்ந்துள்ளன. பாப்தாதா குழந்தைகள் அனைவரையும், கட்டளையை
ஏற்றுக் கொள்ளும், கட்டளைப்படி நடக்கும் குழந்தைகள் என்ற
பார்வையோடு பார்க்கிறார். விசேˆ காரியம் கிடைத்தது என்றால்
எவர்-ரெடி ஆகி அதைச் செய்தார்கள் -- இதற்காக விசேˆ வாழ்த்துகள்
கொடுத்துக் கொண்டிருக்கிறார். நல்லது, ஒவ்வொருவரும் தங்களுடைய
நிலை பற்றித் தெளிவாக எழுதியுள்ளனர். (தாதியிடம்) நீங்களும்
ரிசல்ட்டைப் பார்த்து வகுப்பு நடத்த வேண்டும். தங்கள் அவஸ்தா
பற்றிய சார்ட் நன்றாக எழுதியுள்ளனர். பாபாவோ வாழ்த்துகள்
கொடுத்துக் கொண்டே இருக்கிறார். உண்மையான மனதில் உண்மையான பிரபு
திருப்தியடைவார். நல்லது.
நாலாபுறம் உள்ள பாப்தாதாவின் கட்டளைப்படி நடக்கும்
குழந்தைகளுக்கு, சதா விக்ன-விநாசக் குழந்தைகளுக்கு, சதா ஸ்ரீமத்
படி சகஜமாக நடக்கக் கூடிய, கடின உழைப்பிலிருந்து விடுபட்டு
இருககக் கூடிய, சதா மகிழ்ச்சியில் பறக்கக் கூடிய, பறக்க வைக்கக்
கூடிய, சர்வ கஜானாக்களின் பொக்கிஷத்தால் நிரம்பியவராக இருக்கக்
கூடிய, அத்தகைய பாபாவின் சமீப மற்றும் சமமாக இருக்கக் கூடிய
குழந்தைகளுக்கு மிக-மிக அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே!
குமார்களுக்கும் விசேˆ களைப்பற்ற மற்றும் எவர்-ரெடி, சதா
பறக்கும் கலையில் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு பாப்தாதாவின்
விசேஷ அன்பு நினைவுகள்.
(பாப்தாதா டையமண்ட் ஹாலில் அமர்ந்துள்ள சகோதர-சகோதரிகள்
அனைவருக்கும் திருஷ்டி கொடுப்பதற்காக ஹாலைச் சுற்றி வந்தார்.)
பாப்தாதாவுக்கு ஒவ்வொரு குழந்தையிடமும் மிக-மிக-மிக அன்பு
உள்ளது. நம் மீது பாப்தாதாவின் அன்பு குறைவானது என்று அந்த
மாதிரி புரிந்து கொள்ள வேண்டாம். நீங்கள் மறந்து போனாலும் சரி,
ஆனால் பாபா நிரந்தரமாக ஒவ்வொரு குழந்தையின் மாலையை ஜெபித்துக்
கொண்டே இருக்கிறார். ஏனென்றால் பாப்தாதாவுக்கு ஒவ்வொரு
குழந்தையின் விசேˆதா சதா முன்னால் உள்ளது. எந்த ஒரு குழந்தையும்
விசேஷதா இல்லை என்று அப்படி இல்லை. ஒவ்வொருவரும் விசேˆமான
குழந்தை. பாபா ஒரு போதும் ஒரு குழந்தையைக் கூட மறப்பதில்லை. ஆக,
அனைவரும் தங்களை விசேˆ ஆத்மா, மற்றும் விசேˆ காரியத்திற்காக
நிமித்தமாக இருக்கிறோம் எனப் புரிந்து கொண்டு முன்னேறிச்
செல்லுங்கள். நல்லது.
வரதானம்:
சதா ஆன்மிக ஸ்திதியில் இருந்து, மற்றவர்களிடமும் ஆத்மாவைப்
பார்க்கக் கூடிய ஆன்மிக ரோஜா மலர் ஆகுக.
ஆன்மிக ரோஜா என்றால் அவர்களிடம் சதா ஆன்மிக நறுமணம் இருக்கும்.
ஆன்மிக நறுமணம் உள்ளவர்கள் எங்கே பார்த்தாலும், யாரைப்
பார்த்தாலும் ஆத்மாவைப் பார்ப்பார்கள், சரீரத்தைப் பார்க்க
மாட்டார்கள். எனவே தானும் சதா ஆன்மிக ஸ்திதியில் இருங்கள்
மற்றும் மற்றவர் களிடமும் ஆத்மாவைப் பாருங்கள். எப்படி தந்தை
உயர்ந்தவரிலும் உயர்ந்தவரோ, அது போல் அவருடைய தோட்டமும்
உயர்ந்ததிலும் உயர்ந்ததாகும். அந்தத் தோட்டத்தின் விசேˆ
அலங்காரம் ஆன்மிக ரோஜாக்களாகிய குழந்தைகள் நீங்கள் தாம்.
உங்களது ஆன்மிக நறுமணம் அநேக ஆத்மாக்களுக்கு நன்மை செய்யக்
கூடியதாகும்.
சுலோகன்:
விதிமுறைகளுக்குப் புறம்பாக யாருக்காவது சுகம் கொடுத்தீர்கள்
என்றால், அதுவும் துக்கத்தின் கணக்கில் சேமிப்பாகி விடும்.