05.06.22    காலை முரளி            ஓம் சாந்தி   17.03.91      பாப்தாதா,   மதுபன்


திருப்திமணியின் சிரேஷ்ட ஆசனத்தில் அமர்வதற்கு மகிழ்ச்சி நிறைந்தவராக, கவலையற்றவராக ஆகுங்கள்

இன்று பாப்தாதா தம்முடைய நாலாபுறமுள்ள திருப்திமணிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சங்கமயுகம் தான் திருப்தியாக இருப்பதற்கும் திருப்திப் படுத்துவதற்குமான யுகம். பிராமண வாழ்க்கையின் விசேஷ குணமே திருப்தி தான். திருப்திதான் பெரியதிலும் பெரிய கஜானா ஆகும். திருப்தி தான் பிராமண வாழ்க்கையின் தூய்மையினுடைய தனித் தன்மை அல்லது ஆளுமை (பர்சனாலிட்டி). இந்தத் தனித்தன்மை மூலம் விசேஷ ஆத்மாவாகச் சுலபமாகவே ஆகி விடுகின்றனர். திருப்தியின் தனித்தன்மை இல்லையென்றால் விசேஷ ஆத்மா என்று சொல்லிக்கொள்ள முடியாது. இன்றைய நாட்களில் இரண்டு விதமான ஆளுமைகள் மகிமை செய்யப் படுகின்றன - ஒன்று சரீரத்தின் ஆளுமை, இரண்டாவது பதவியின் (பொஸிஷன்) ஆளுமை. பிராமண வாழ்க்கை யில் எந்தப் பிராமண ஆத்மாவிடம் திருப்தி என்ற மகான் தன்மை உள்ளதோ, அவரது உருவத் தோற்றத்தில், அவரது முகத்திலும் கூடத் திருப்தியின் ஆளுமை காணப்படுகிறது. மேலும் சிரேஷ்ட ஸ்திதியின் பதவியின் ஆளுமை யும் காணப் படுகிறது. திருப்தியின் ஆதாரம், பாபா மூலம் கிடைத்துள்ள சர்வ பிராப்திகளின் திருப்தி, அதாவது நிறைவான ஆத்மா. அதிருப்தியின் காரணம், அப்ராப்தி (பிராப்தியின்மை). திருப்தியின் காரணம் சர்வ பிராப்திகள். அதனால் பாப்தாதா பிராமணக் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் பிராமணப் பிறவி எடுத்தவுடனே ஆஸ்தி முழுவதையும் கொடுத்து விட்டார் இல்லையா, அல்லது சிலருக்குக் கொஞ்சம், சிலருக்கு அதிகம் கொடுத்தாரா? பாப்தாதா எப்போதும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இதைத் தான் சொல்கிறார் - அதாவது பாபா மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். ஆஸ்தி என்பது அனைத்துப் பிராப்திகள். இதில் சர்வ சக்திகளும் வந்து விடுகின்றன. குணங்களும் வந்து விடுகின்றன, ஞானமும் வந்து விடுகிறது. சர்வ சக்திகள், சர்வ குணங்கள் மற்றும் சம்பூர்ண ஞானம். வெறும் ஞானம் இல்லை, ஆனால் சம்பூர்ண ஞானம். வெறும் சக்திகள் மற்றும் குணங்கள் இல்லை, ஆனால் சர்வ குணங்கள் மற்றும் சர்வ சக்திகள். ஆக, ஆஸ்தி என்பது சர்வம், அதாவது அனைத்தும் நிரம்பியது. எந்த ஒரு குறைவும் இல்லை. ஒவ்வொரு பிராமணக் குழந்தைக்கும் முழுமையான ஆஸ்தி கிடைக்கிறது. பாதி இல்லை. சர்வ குணங்களில் இரண்டு குணங்கள் உங்களுக்கு, இரண்டு குணங்கள் இவருக்கு என்று அந்த மாதிரி பங்கிடப் படவில்லை. முழு ஆஸ்தி என்றால் நிறைவானது, சம்பூர்ண நிலை. ஒவ்வொருவருக்கும் முழுமையான ஆஸ்தி கிடைக்கிற தென்றால், எங்கே சர்வ பிராப்தி உள்ளதோ, அங்கே திருப்தி இருக்கும். பாப்தாதா சர்வ பிராமணர்களின் திருப்தியின் ஆளுமையைப் பார்த்துக் கொண்டிருந்தார் -- எது வரை இந்த ஆளுமை வந்துள்ளது? பிராமண வாழ்க்கையில் அதிருப்தியின் பெயர்-அடையாளம் இருக்காது. பிராமண வாழ்க்கையின் மகிழ்ச்சி உள்ளது என்றால் இந்த ஆளுமையில் தான். இது தான் மகிழ்ச்சியின் வாழ்க்கை. சுவை நிறைந்த கேளிக்கையின் அனுபவ வாழ்க்கை.

தபஸ்யாவின் அர்த்தம் திருப்தியின் தனித்தன்மை கண்களில், தோற்றத்தில், முகத்தில், நடத்தையில் காணப்பட வேண்டும். அத்தகைய திருப்தி மணிகளின் மாலையைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். எத்தனை மாலைகள் தயாராகி இருக்கும்? திருப்தி மணி என்றால் கறையற்ற மணி. திருப்தியின் அடையாளம் - திருப்தியான ஆத்மா சதா மகிழ்ச்சி நிறைந்த ஆத்மாவாகத் தன்னையும் அனுபவம் செய்வார் மற்றும் மற்றவர்களும் மகிழ்ச்சியடைவார்கள். மகிழ்ச்சி நிறைந்த ஸ்திதியில் கேள்வி கேட்பவராக இருக்க மாட்டார். ஒன்று மகிழ்ச்சி நிறைந்த (பிரசன்ன) நிலை, இன்னொன்று கேள்வி கேட்கும் (பிரஸ்ன) நிலை. பிரஸ்ன என்றால் கேள்வி. மகிழ்ச்சி நிறைந்தவர் டிராமாவின் ஞானம் நிறைந்தவராக இருக்கும் காரணத்தால் மகிழ்ச்சியாக இருப்பார், கேள்வி கேட்க மாட்டார். தனக்காகவோ மற்றவர்களுக்காகவோ என்னென்ன கேள்விகள் எழுகின்றனவோ, அதன் பதில் தனக்கு முதலில் வரும். இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறோம். வாட் (என்ன) ஒய் (ஏன்) இல்லை, ஆனால் டாட் (முற்றுப் புள்ளி). என்ன, ஏன் என்பது கிடையாது, முற்றுப்புள்ளி, பிந்து. ஒரு விநாடியில் விஸ்தாரம், ஒரு விநாடியில் சாரம். அத்தகைய மகிழ்ச்சி நிறைந்தவர் சதா கவலையற்று இருப்பார்கள். ஆக, சோதித்துப் பாருங்கள் - அத்தகைய அடையாளங்கள் திருப்திமணியாகிய என்னிடம் உள்ளனவா? பாப்தாதாவோ அனைவருக்கும் டைட்டில் கொடுத்துள்ளார் - திருப்தியின் மணி என்று. ஆகவே பாப்தாதா கேட்டுக் கொண்டிருக் கிறார் - ஹே திருப்தி மணிகளே! திருப்தியாக இருக்கிறீர்களா? பிறகு கேள்வி உள்ளது - தனக்குத் தான், அதாவது தனது புருஷார்த்தத்தில், தனது சம்ஸ்கார மாற்றத்தின் புருஷார்த்தத்தில், தனது புருஷார்த்தத்தின் சதவிகிதத்தில், ஸ்டேஜில் சதா திருப்தியாக இருக்கிறீர்களா? நல்லது, அடுத்தக் கேள்வி - தனது மனம், சொல் மற்றும் செயல், அதாவது சம்பந்தம், தொடர்பின் மூலம் சேவையில் சதா திருப்தியாக இருக்கிறீர்களா? மூன்று சேவைகளிலும், ஒரு சேவை மட்டுமில்லை, மூன்று சேவைகளிலும் மற்றும் சதா திருப்தியாக இருக்கிறீர்களா? யோசிக்கிறார்கள், தங்களைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள் - எது வரை திருப்தியாக இருக்கிறோம்? நல்லது, மூன்றாவது கேள்வி - சர்வ ஆத்மாக்களின் சம்பந்தம்-தொடர்பில் தன் மூலமாக அல்லது அனைவரின் மூலமாகச் சதா திருப்தியாக இருக்கிறீர்களா? ஏனென்றால் தபஸ்யா வருடத்தில் தபஸ்யாவின், வெற்றியின் பலனாக இதைத் தான் பெற வேண்டும். சுயத்தில், சேவையில் மற்றும் அனைத்திலும் திருப்தி. நான்கு மணி நேரம் யோகா செய்தோம், மிக நன்று. மேலும் நான்கிலிருந்து எட்டு மணி நேரம் வரை கூடச் சென்று சேர்ந்து விடுவீர்கள். இதுவும் மிக நல்லது. யோகத்தின் சித்தி சொரூபமாக இருக்கிறீர்கள். யோக விதி உள்ளது. ஆனால் இந்த விதி மூலம் சித்தி என்ன கிடைத்தது? யோகா செய்வது என்பது விதி. யோகத்தின் பிராப்தி என்பது சித்தி. ஆக, எப்படி 8 மணி நேரத்தின் லட்சியம் வைத்திருக்கிறீர்களோ, அப்போது குறைந்தது இந்த மூன்று விதமான திருப்தியின் சித்திக்கான தெளிவான சிரேஷ்ட லட்சியம் வையுங்கள். அநேகக் குழந்தைகள் தங்களை அனைத்தும் அறிந்தவர் (மியா மிட்டு) என்பது போலவும் திருப்தியாக இருப்பதாக நினைக்கின்றனர். அந்த மாதிரி திருப்தியானவராக ஆகக் கூடாது. திருப்தி என்றால் இதயம் மற்றும் புத்தி இரண்டும் சதா ஓய்வில் இருக்கும். புத்தியால் தான் திருப்தியாக இருப்பதாக நினைக்கிறீர்கள். என்ன கவலை? நாமோ கவலையற்று இருக்கிறோம். ஆக, புத்தியால் தன்னைத்தான் திருப்தியாக இருப்பதாக நினைப்பது - அந்த மாதிரி திருப்தி இல்லை. யதார்த்த மாக உணர்ந்து அனுபவம் செய்ய வேண்டும். திருப்தியின் அடையாளங்கள் தனக்குள் அனுபவ மாக வேண்டும். உள்ளம் சதா மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும், தனித்தன்மை (அகத்தோற்றப் பொலிவு) இருக்க வேண்டும். தன்னை ஆளுமையாகப் புரிந்து கொள்வது மற்றும் மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இது மியா மிட்டு (தனக்குத் தான் எல்லாம் தெரியும் என நினைப்பது) என்று சொல்லப் படும். அந்த மாதிரி திருப்தி கூடாது. ஆனால் யதார்த்த அனுபவத்தின் மூலம் திருப்தியான ஆத்மா ஆகுங்கள். திருப்தி என்றால் மனம்-புத்தி சதா ஓய்வாக இருக்கும். சுகம்-நிம்மதியின் ஸ்திதியில் இருப்பார்கள். நிம்மதியற்ற நிலை இருக்காது. சுகம்-நிம்மதி இருக்கும். அத்தகைய திருப்தி மணிகள் சதா பாபாவின் நெற்றியில் நெற்றி மணிகளாக ஜொலிப்பார்கள். ஆக, தன்னைச் சோதித்துப் பாருங்கள். திருப்தி பாபாவின் மற்றும் அனைவரின் ஆசிர்வாதங்களைத் தருகிறது. திருப்தியான ஆத்மா ஒவ்வொரு சமயமும் சதா தன்னை, பாபா மற்றும் அனைவரின் ஆசிர்வாதங்கள் என்ற விமானத்தில் பறந்து கொண்டிருப்பதாக அனுபவம் செய்வார்கள். இந்த ஆசிர்வாதங்கள் அவர்களுக்கு விமானமாகும். சதா தன்னை விமானத்தில் பறந்து கொண்டிருப்பதாக அனுபவம் செய்வார்கள். ஆசிர்வாதங்களைக் கேட்க மாட்டார்கள். ஆனால் ஆசிர்வாதங்கள் சுயம் தாமாகவே அவர்களுக்கு முன்னிலையில் வரும். அத்தகைய திருப்தி மணி, அதாவது சித்தி சொரூப தபஸ்வி. அல்ப காலத்தின் சித்திகள் அல்ல, இவை அவிநாசி மற்றும் ஆன்மிகச் சித்திகள். அத்தகைய திருப்தி மணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ளுங்கள் - நான் யார்?

தபஸ்யா வருடத்தின் ஊக்கம்-உற்சாகமோ நன்றாக உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கேற்றவாறு செய்து கொண்டும் இருக்கிறார்கள். மேலும் இனி வருங்காலத்திற்காகவும் உற்சாகம் உள்ளது. இந்த உற்சாகம் மிக நன்று. இப்போது தபஸ்யா மூலம் பிராப்திகளைச் சுயம் தன்னுடைய வாழ்க்கையில் மற்றும் அனைவரின் சம்பந்தம்-தொடர்பில் பிரத்தியட்சம் செய்யுங்கள். தனக்குள் தானே அனுபவம் செய்கிறீர்கள், ஆனால் அனுபவத்தை வெறுமனே மனம்-புத்தியால் அனுபவம் செய்தீர்கள், இது வரை மட்டும் வைக்காதீர்கள். அதை நடத்தை மற்றும் முகம் வரை கொண்டு வாருங்கள். அப்போது முதலில் தனக்குள் பிரத்தியட்சமாகும், பிறகு சம்பந்தத்தில் பிரத்தியட்சம் ஆகும். பிறகு உலகத்தின் ஸ்டேஜ் மீது பிரத்தியட்சம் ஆகும். அப்போது பிரத்தியட்சதாவின் முரசு ஒலிக்கும். எப்படி உங்கள் நினைவுச்சின்னம் சாஸ்திரங்களில் சொல்கிறார்கள் - சங்கர் மூன்றாவது கண்ணைத் திறந்தார் மற்றும் விநாச மாயிற்று. ஆக, சங்கர் என்றால் அசரீரி தபஸ்வி ரூபம். விகாரங்களாகிய பாம்பைக் கழுத்து மாலையாக ஆக்கி விட்டார். சதா அதே ஸ்திதி மற்றும் உயர்ந்த ஆசனதாரி. இந்த மூன்றாவது கண் என்றால் சம்பூர்ண நிலையின் கண். தபஸ்வியாகிய நீங்கள் சம்பன்ன, சம்பூர்ண ஸ்திதியில் உலக மாற்றத்திற்கான சங்கல்பம் செய்யும் போது இந்த இயற்கையும் கூடச் சம்பூர்ண குழப்பத்தின் நடனத்தை ஆடும். உபத்திரவங்களை உருவாக்குவதற்கான நடனத்தை ஆடும். நீங்கள் அசையாமல் இருப்பீர்கள் மற்றும் அவர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். ஏனென்றால் இவ்வளவு உலகம் முழுவதையும் யார் தூய்மைப் படுத்துவார்? மனித ஆத்மாக் களால் செய்ய முடியுமா? இந்தக் காற்று, பூமி, கடல், நீர் - இவற்றின் கொந்தளிப்பு தான் சுத்தம் செய்யும். ஆகவே அத்தகைய சம்பூர்ண நிலையின் ஸ்திதியை இந்தத் தபஸ்யா மூலம் உருவாக்க வேண்டும். எப்போது முதலில் உங்களுடைய சுயத்தின், சதா காலத்தின் சகயோகி கர்மேந்திரியங்கள் மனம்-புத்தி-சம்ஸ்காரம் கட்டளையை ஏற்று நடக்குமோ, அப்போது இயற்கையும் கூட உங்கள் சங்கல்பத்தின் மூலம் கட்டளையை ஏற்று அதன்படி நடக்கும். சுயத்தின், சதா காலச் சகயோகி கட்டளையை ஏற்று நடக்கவில்லை என்றால் இயற்கை எப்படிக் கட்டளையை ஏற்று நடக்கும்? அவ்வளவு சக்திசாலி தபஸ்யாவின் உயர்ந்த ஸ்திதி இருக்க வேண்டும் - அது அனைவரின் ஒரே சங்கல்பம், ஒரே சமயத்தில் உருவாக வேண்டும். ஒரு விநாடியின் சங்கல்பம் இருக்க வேண்டும் - மாற்றம் - உடனே இயற்கை ஆஜராகி விட வேண்டும். எப்படி உலகத்தின் பிராமண ஆத்மாக்கள் அனைவரும் ஒரே சமயத்தில் உலக அமைதிக்காக யோகா செய்கிறீர்கள் இல்லையா? ஆகவே அனைவரின் ஒரே சமயம் மற்றும் ஒரே சங்கல்பத்தின் நினைவுச்சின்னம் உள்ளது. அந்த மாதிரி அனைவரின் ஒரே சங்கல்பத்தின் மூலம் இயற்கை குழப்பத்தின் நடனத்தை ஆரம்பித்து விடும். அதனால் தான் சொல்கிறீர்கள் - சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றம். இந்தப் பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்திற் கான மாற்றம் எப்படி ஏற்படும்? உங்கள் அனைவரின் சக்திசாலி சங்கல்பத்தின் மூலம் முழு ரூபத்தில் அனைவருக்கும் ஒரே சங்கல்பம் உருவாகும். புரிந்ததா, என்ன செய்ய வேண்டும் என்று? தபஸ்யா எனச் சொல்லப் படுவது இது தான்.

பாப்தாதா இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளைப் பார்த்து சதா மகிழ்ச்சியடைந்து கொண்டிருக் கிறார். பாரதவாசிகளைப் பார்த்து மகிழ்ச்சியடையவில்லை என்று அர்த்தமில்லை. இப்போது இரட்டை வெளிநாட்டினருக் கான வாய்ப்பு. அதனால் சொல்கிறோம். பாரதத்தைப் பற்றியோ பாபா சதா மகிழ்ச்சியடைகிறார். அதனால் தான் பாரதத்தில் வந்துள்ளார். மேலும் நீங்கள் அனைவரும் கூடப் பாரதவாசிகளாக ஆக்கப்பட்டு விட்டீர்கள். இச்சமயம் நீங்கள் அனைவரும் வெளிநாட்டினரா? அல்லது பாரதவாசிகளா? பாரதவாசியிலும் மதுபன் வாசி. மதுபன் வாசி ஆவது பிடித்திருக்கிறதா? இப்போது சீக்கிரம்-சீக்கிரம் சேவையை நிறைவு செய்வீர்களானால் மதுபன் வாசியாக ஆகியே விடுவீர்கள். வெளிநாடுகள் முழுவதிலும் செய்தியை சீக்கிரம்-சீக்கிரம் கொடுத்து சேவையை நிறைவு செய்யுங்கள். பிறகு இங்கே வந்து விடுவீர்களானால் திரும்ப உங்களை அனுப்ப மாட்டோம். அது வரை இருப்பிடமும் ஆகி விடும். பாருங்கள் மைதானமோ (பீஸ் பார்க்) மிகப்பெரியதாக உள்ளது. அங்கே முதலிலேயே ஏற்பாடு செய்யப் படும். பிறகு உங்களுக்குக் கஷ்டம் இருக்காது. ஆனால் எப்போது அந்த மாதிரி நேரம் வருமோ, அப்போது உங்கள் பெட்டியைத் தலைக்கு வைத்துக்கூடத் தூங்கிப்போய் விடுவீர்கள். கட்டில் வேண்டும் எனச் சொல்ல மாட்டீர்கள். அந்தச் சமயமே வேறாக இருக்கும். இந்தச் சமயம் வேறு. இப்போதோ சேவைக்கான ஒரே சமயத்தில் மனம்-சொல்-செயல் ஒன்றாகச் சங்கல்பம் செய்ய வேண்டும், அப்போது சேவையின் தீவிர வேகம் வரும். மனதின் மூலம் சக்திசாலி, வாய்மொழி மூலம் ஞானம் நிறைந்தவர், சம்பந்தம், தொடர்பு, அதாவது கர்மத்தின் மூலம் அன்பு நிறைந்தவர். இந்த மூன்று அனுபவங்களும் ஒரே சமயத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்க வேண்டும். இது தான் தீவிர வேகத்தின் சேவை எனச் சொல்லப் படும்.

நல்லது, உடலால் சரியாக இருக்கிறீர்கள். மனதால் சரியாக இருக்கிறீர்களா? பிறகும் கூடத் தூர-தூரத்திலிருந்து வருகிறீர்கள் என்றால் பாப்தாதாவும் தூரத்திலிருந்து வந்திருக்கும் குழந்தை கள் குஷியாக இருப்பதைப் பார்த்துக் குஷியடைகிறார். பிறகும் தூரத்திலிருந்து வந்திருப்பவர்கள் நன்றாகத் தான் இருக்கிறீர்கள். ஏனென்றால் விமானத்தில் வருகிறீர்கள். யார் இந்தக் கல்பத்தில் முதல் தடவையாக வந்திருக்கிறார்களோ, அவர்களுக்குப் பாப்தாதா விசேஷ மாக அன்பு நினைவு களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிறகும் கூடத் தைரியம் உள்ளவர்களாக இருப்பது நல்லது. இங்கிருந்து போனதுமே டிக்கெட்டுக்காகச் சேர்த்து வைக்கிறீர்கள் மற்றும் வந்து விடுகிறீர்கள். இதுவும் ஒரு நினைவுக்கான விதியாகும். போக வேண்டும், போக வேண்டும், போக வேண்டும் இங்கே வருகிறீர்கள் என்றால் யோசிக்கிறீர்கள் - வெளிநாடு போக வேண்டுமே! பிறகு போவதோடு கூடவே வருவது பற்றி யோசிக்கிறீர்கள். அந்த மாதிரி நேரமும் வரப்போகிறது - அரசாங்கமும் புரிந்து கொள்ளும் - அபுவிற்கு அழகு இந்தப் பிராமண ஆத்மாக்கள் தாம். நல்லது.

நாலாபுறமுள்ள சர்வ மகான் ஆத்மாக்களுக்கு, சதா மகிழ்ச்சி நிறைந்த, கவலையற்று இருக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா ஒரே சமயத்தில் மூன்று சேவைகள் செய்யக்கூடிய தீவிர வேக சேவாதாரி ஆத்மாக்களுக்கு, சதா சிரேஷ்ட ஸ்திதியின் ஆசனதாரி தபஸ்வி ஆத்மாக்களுக்குப் பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

பார்ட்டிகளோடு அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு: அனைவரும் தங்களைப் புனித அன்னப்பறவை என உணர்ந்திருக்கிறீர்களா? புனித அன்னப்பறவையின் விசேஷ கர்மம் எது? (ஒவ்வொருவரும் சொன்னார்கள்) என்ன விசேஷதா சொல்லப்பட்டதோ, அது நடைமுறையில் கர்மத்தில் வருகிறதா? ஏனென்றால் பிராமணர்களாகிய உங்களைத் தவிரப் புனித அன்னப்பறவையாக வேறு யார் இருக்க முடியும்? எனவே பெருமிதத்துடன் சொல்லுங்கள். எப்படிப் பாபா தூய்மையானவராக இருக்கிறாரோ, சர்வசக்திகளைக் கர்மத்தில் கொண்டு வரு கிறாரோ, அதே போல் புனித அன்னப்பறவைகளாகிய நீங்களும் சர்வசக்திகளை நடைமுறை யில் கொண்டுவரக் கூடியவர்கள் மற்றும் சதா பவித்திரமாக இருப்பவர்கள். இருந்தீர்கள் மற்றும் சதா இருப்பீர்கள். மூன்று காலங்களும் நினைவிருக் கிறது இல்லையா? பாப்தாதா குழந்தைகளினுடைய அநேக தடவை நடித்துள்ள பார்ட்டைப் பார்த்து மகிழ்ச்சி யடைகிறார். எனவே கஷ்டமாகத் தோன்றுவதில்லை இல்லையா? மாஸ்டர் சர்வ சக்திவானுக்கு முன்னால் ஒரு போதும் கஷ்டம் என்ற வார்த்தை கனவில் கூட வர முடியாது. பிராமணர்களின் அகராதியில் கஷ்டம் என்ற வார்த்தை உள்ளதா என்ன? எங்காவது சிறிய எழுத்துகளில் கூட இல்லை தானே? மாயாவைப் பற்றியும் ஞானம் நிறைந்தவர்களாக ஆகி விட்டீர்கள் தானே? எங்கே ஃபுல் உள்ளதோ, அங்கே ஃபெயில் ஆக முடியாது. ஃபெயில் ஆவதற்கான காரணம் என்ன? அறிந்திருந்தும் கூட ஏன் ஃபெயில் ஆகிறீர்கள்? யாராவது அறிந்திருந்தும் ஃபெயிலா கிறார்கள் என்றால் அவர்களை என்னவென்று சொல்வார்கள்? எந்த ஒரு பிரச்சினை என்றாலும் ஃபெயில் ஆவதற்கான காரணம் - ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி ஃபீல் பண்ணுகிறீர்கள். ஃபீலிங் ஃப்ளு ஆகி விடுகிறது. ஃப்ளு என்ன செய்கிறது தெரியுமா? பலவீனமாக்கி விடுகிறது. அதன் மூலம் பிரச்சினை சிறியதாகி விடுகிறது. ஆனால் பெரிதாகி விட்டாலோ, இப்போது ஃபுல் ஆகுங்கள். ஃபெயில் ஆகக் கூடாது. பாஸ் ஆக வேண்டும். எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் அதைக் கடந்து சென்று கொண்டே இருப்பீர் களானால் பாஸ் வித் ஆனர் ஆகி விடுவீர்கள். ஆகவே கடந்து செல்ல (பாஸ்) வேண்டும், பாஸ் ஆக வேண்டும், அருகில் (பாஸ்) இருக்க வேண்டும். பாப்தாதாவிடம் எனக்கு எவ்வளவு அன்புள்ளதோ, அவ்வளவு வேறு யாருக்கும் இல்லை என்று எப்போது பெருமிதத்துடன் சொல்கிறீர்களோ, அப்போது அன்பு உள்ளது என்றால் அருகில் இருக்க வேண்டுமா? அல்லது தூரத்தில் இருக்க வேண்டுமா? யு.கே. காரர்களோ பாப்தாதாவின் அனைத்து ஆசைகளையும் பூர்த்திச் செய்பவர்களாக இருக்கிறீர்கள் இல்லையா? அனைத்திலும் நமபர் ஒன் பாபாவின் சுப ஆசை எது? குறிப்பாக யு.கே. காரர்களுக்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பெரிய-பெரிய மைக்குகளைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் பாபாவைப் பிரத்தியட்சம் செய்வதற்கு நிமித்தம் ஆக வேண்டும் மற்றும் பாபாவுக்கு அருகில் வர வேண்டும். இப்போது யு.கே.யில், அமெரிக்காவில், வெளிநாடுகளில் மைக்குகள் வெளிப்பட்டே இருக்கிறார்கள் என்றாலும் ஒருவர் சகயோகி, இன்னொருவர் சகயோகி, சமீபத்தில் இருப்பவர். ஆக, அந்த மாதிரி மைக் தயார் செய்யுங்கள். அவ்வாறு சேவையில் விருத்தி நன்றாக ஆகிக் கொண்டிருக்கிறது. இனியும் ஆகிக் கொண்டே இருக்கும். நல்லது, ரஷ்யாக்காரர்கள் சின்னக் குழந்தைகள், ஆனால் அதிர்ஷ்டசாலிகள். உங்களுக்குப் பாபாவிடம் எவ்வளவு அன்பு உள்ளது! பாப்தாதாவும் குழந்தை களின் தைரியத்தைப் பார்த்துக் குஷியடைகிறார் என்பதும் நல்லது தான். இப்போது கடின உழைப்பு மறந்து விட்டது இல்லையா? நல்லது.

வரதானம்:
ஒவ்வொரு சங்கல்பம், வார்த்தை மற்றும் செயல் மூலம் புண்ணியக் காரியம் செய்யக்கூடிய ஆசிர்வாதங்களுக்கு உரிமையுள்ளவர் ஆகுக.

தனக்குத் தான் இந்தத் திட சங்கல்பம் செய்யுங்கள் - நாள் முழுவதிலும் சங்கல்பத்தின் மூலம், பேசும் வார்த்தை மூலம், கர்மத்தின் மூலம் புண்ணிய ஆத்மா ஆகி, புண்ணியத்தை மட்டுமே செய்வேன். புண்ணியத்தின் உடனடி பலன் ஒவ்வோர் ஆத்மாவின் ஆசிர்வாதங்களாகும். ஆகவே ஒவ்வொரு சங்கல்பத்திலும், பேச்சிலும் ஆசிர்வாதங்கள் சேமிப்பாக வேண்டும். சம்பந்தம்-தொடர்பின் மூலம் மனப்பூர்வமாகச் சகயோகத்திற்கான நன்றி வெளிப்பட வேண்டும். அத்தகைய ஆசிர்வாதங்களுக்கு உரிமை உள்ளவர் தான் உலக மாற்றத்திற்கு நிமித்த மாகிறார்கள். அவர்களுக்குத் தான் பரிசு கிடைக்கும்.

சுலோகன்:
சதா ஒரு தந்தையின் துணையில் இருங்கள் மற்றும் தந்தையைத் தங்களின் துணைவராக ஆக்கிக் கொள்ளுங்கள் - இது தான் உயர்ந்த தன்மை ஆகும்.