05-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சமயம் மிகக் குறைவாக உள்ளது. அதனால் ஆன்மீகத் தொழில் செய்யுங்கள், அனைத்திலும் நல்ல தொழில் - தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதாகும். மற்ற அனைத்தும் குற்றம் குறையுள்ள தொழில்கள் ஆகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்குள் எந்த ஓர் ஆர்வம் இருக்க வேண்டும்?

பதில்:
எப்படி நாம் கெட்டுப்போன ஆத்மாக்களை சீர்திருத்துவது, அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவித்து 21 பிறவிகளுக்கு சுகத்திற்கான வழியை எப்படிச் சொல்வது? அனைவருக்கும் தந்தையின் உண்மை யிலும் உண்மையான அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும் - இந்த ஆர்வம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும்.

பாடல்:
கள்ளம் கபடற்ற அவரை விடவும் தனிப்பட்டவர் வேறு யாரும் இல்லை...

ஓம் சாந்தி.
போலாநாத் (கள்ளம் கபடற்றவர்) குழந்தைகளுக்கு ஓம் சாந்தி என்பதன் அர்த்தத்தையும் புரிய வைக்கிறார். தாமே ஓம் சாந்தி எனச் சொல்கிறார் என்றால் குழந்தைகளும் சொல்கின்றனர், ஓம்சாந்தி. இது தன்னுடைய அறிமுகம் கொடுப்பதாகும் - அதாவது நான் ஆத்மா சாந்த சொரூபம், சாந்திதாம நிவாசி. நம்முடைய தந்தையும் அங்கே வசிப்பவர். பக்தி மார்க்கத்திலும் கூட பாபா-பாபா என சொல்கின்றனர். மனிதர்கள் பாடுகின்றனர் - ஆனால் இராவணனின் வழிப்படி. இராவணனின் வழி மனிதர்களைக் கெடுக்கிறது. பாபா வந்து கெட்டுப் போனவர்களை சீர்திருத்துகின்றார். இராவணனும் ஒருவன், இராமரும் ஒருவர். 5 விகாரங்களையும் சேர்த்து இராவணன் என சொல்கின்றனர். இராவணன் தனது இராஜ்யத்தை, சோகவனத்தில் அமர்த்துவதற்கான இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறான். இவன் கெடுக்கிறான், அவர் சீர்திருத்துகிறார். இராவணனை மனிதன் என சொல்வ தில்லை. ஆனால் ஆணுக்குள்ள 5 விகாரங்களையும், பெண்ணுக்குள்ள 5 விகாரங்களையும் காண்பிக் கின்றனர். இராவண இராஜ்யத்தில் இருவரிடமும் விகாரங்கள் உள்ளன. நீங்கள் அறிவீர்கள், 5 விகாரங்கள் நமக்குள்ளும் இருந்தன. இப்போது நாம் ஸ்ரீமத்படி நிர்விகாரி ஆகிக் கொண்டே செல்கிறோம். கெட்டுப் போனவர்களை சீர்திருத்திக் கொண்டிருக்கிறோம். எப்படி பாபா கெட்டுப்போன அனைவரையும் சீர்திருத்துகிறாரோ, குழந்தைகளிடமும் இதே உத்வேகம் இருக்க வேண்டும் - எப்படி நாம் கெட்டுப் போனவர்களை சீர்திருத்துவது? மனிதர்கள் அனைவருமே ஒருவர் மற்றவரைக் கெடுத்துக் கொண்டே இருக்கின்றனர். கெட்டுப் போனவர்களை சீர்திருத்துபவர் ஒரே ஒரு தந்தை தான். ஆக, எப்படி நீங்கள் சீர்திருந்தி இருக்கிறீர்களோ, அவ்வாறே ஈடுபாடும் இருக்க வேண்டும் - அதாவது எப்படி நாம் போய் துக்கத்திலிருக்கும் ஆத்மாக்களுக்கு உதவி செய்வது? பாபாவின் தீவிர விருப்பத்தை நல்ல குழந்தைகள் தான் நிறைவேற்ற முடியும். குழந்தைகளின் புத்தியில் ஆர்வம் இருக்க வேண்டும், எப்படி நாம் கெட்டுப் போனவர்களை சீர்திருத்துவது? உற்றார் உறவினர்க்கும் புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கும் வழி சொல்ல வேண்டும். துக்கத்தில் இருக்கும் ஜீவாத்மாக்களை 21 பிறவிகளுக்கு சுகமானவராக ஆக்க வேண்டும், இருந்தாலும் நம்முடைய சகோதர-சகோதரிகள், மிகுந்த துக்கம் அசாந்தியில் உள்ளனர். நாமோ தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்றால் சிந்தனை வர வேண்டும் - எப்படி போய் மற்றவர்களுக்கு புரிய வைப்பது, சொற்பொழிவு செய்வது? வீடு-வீடாக செல்ல வேண்டும், கோவில்களுக்கு செல்ல வேண்டும். பாபா வழிமுறை தருகிறார், கோவில்களில் அதிக சேவை செய்ய முடியும். பக்தர்கள் அநேகர் உள்ளனர். குருட்டு நம்பிக்கையோடு சிவனுடைய சோவில்களுக்கு அநேகர் செல்கின்றனர். உள்ளுக்குள் ஏதேனும் ஓர் ஆசை வைத்துக் கொண்டு செல்கின்றனர். இதை புரிந்து கொள்வதில்லை - சிவன் நம்முடைய தந்தை. அவருக்கு இவ்வளவு மகிமை உள்ளதென்றால் நிச்சயமாக எப்போதோ ஏதோ செய்து விட்டு சென்றிருக்க வேண்டும். சிவனுடைய கோவில்களுக்கு ஏன் செல்கின்றனர்? அமர்நாத்திற்கு யாத்திரையாக ஏன் செல்கின்றனர்? ஏராளமான யாத்திரிகர்களை பிராமணர்கள் அல்லது சந்நியாசிகள் அழைத்து செல்கின்றனர். இது பக்தி மார்க்கத்தின் தொழில். இதன் மூலமோ சீர்திருந்த மாட்டார்கள். போலாநாத் தந்தை தான் வந்து கெட்டுப் போனவர்களை சீர்திருத்துகிறார். அவர் உலகத்தின் படைப்பாளர் அல்லது எஜமானர். ஆனால் தாம் (எஜமானராக) ஆவதில்லை. குழந்தைகளாகிய உங்களை எஜமானர்களாக ஆக்குகிறார். ஆனால் அவர் உயர்ந்தவர். அவரிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு மனதில் தோன்ற வேண்டும் - எப்படி நாம் சகோதர-சகோதரிகளுக்கு வழி சொல்வது? யாரையாவது துக்கத்தில் அல்லது நோயில் இருப்பதாகப் பார்த்தாலோ இரக்கம் வருகிறது இல்லையா? பாபா சொல்கிறார், இப்போது நான் உங்களை அந்த மாதிரி சுகம் நிறைந்தவர்களாக ஆக்குகிறேன், அரைக்கல்பத்திற்கு நோயாளி ஆக மாட்டீர்கள். ஆக, குழந்தைகள் நீங்கள் மற்றவர் களுக்கும் சுகதாமத்திற்கான வழி சொல்ல வேண்டும். சேவைக்கான ஆர்வம் உள்ளவர்கள் ஓரிடத்தில் இருக்க முடியாது. நாமும் போய் யாருக்காவது சுகதாமத்திற்கான வழி சொல்ல வெண்டும் எனப் புரிந்து கொள்வார்கள். பாபாவோ மிகவும் சவால் விடுகிறார். அழிவற்ற ஞானரத்தினங்கள் முழுமை யாக தாரணை ஆகுமானால் அநேகருக்கு நன்மை செய்ய முடியும். இந்த இராஜ்யத்தின் ஸ்தாபனையில் பணத்திற்கான தேவை கிடையாது. அந்த மனிதர்களோ தங்களுக்குள்ளேயே சண்டை, சச்சரவு செய்து கொண்டிருக்கின்றனர், இராவணனின் வழிப்படி. நாம் இராவணனிடமிருந்து இராஜ்யத்தை பறிக்கின்றோம். இராமராஜ்யம் இராமர் மூலமாகத் தான் கிடைக்கிறது. சத்யுகத்தில் இராம ராஜ்யம் ஆரம்பமாகிறது. இங்கே கலியுகத்தில் இராம ராஜ்யம் எங்கிருந்து வந்தது? இதுவோ இராவண ராஜ்யம். அனைவரும் துக்கத்தில் உள்ளனர். இந்த விசயத்தை நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்க முடியும். யார் ஏழைகளாக, வியாபாரிகளாக உள்ளனரோ, அவர்களுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும். மற்றப்படி பெரிய மனிதர்களோ, எங்களுக்கு நேரமில்லை, நாங்கள் பிஸியாக உள்ளோம் என சொல்வார்கள். அவர்கள் தாம், பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கின்றனர். திட்டங்களை வகுத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் நீங்கள் அறிவீர்கள், சிவபாபாவைத் தவிர வேறு யாரும் சொர்க்கத்தை உருவாக்க முடியாது. இப்போது நேரம் குறைவாக உள்ளது. இராம ராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில் மந்தமாகி விடக் கூடாது. இரவும் பகலும் அக்கறை இருக்க வேண்டும் - எப்படி யாரை துக்கத்தில் இருந்து விடுவிப்பது? குழந்தைகளுக்கு இது மனதில் வர வேண்டும் - எப்படி சகோதர-சகோதரிகளுக்கு வழி சொல்வது? இப்போது அனைவரும் இராவணனின் வழிப்படி நடக்கின்றனர். தந்தையோ தந்தை தான், அவர் குழந்தைகளுக்கு வந்து ஆஸ்தி தருகிறார். மனிதர்கள் நீதிமன்றதிற்குப் போய் சொல்கின்றனர், ஈஸ்வரனை இங்கிருப்பதாக உணர்ந்து உண்மையை சொல்கிறேன். ஆனால் அவர் சர்வவியாபி என்றால் பிறகு யாரை பிரார்த்தனை செய்கின்றனர்? அவர்களுக்கு எதுவுமே தெரியாது. பாபா அடிக்கடி புரிய வைக்கிறார், உற்றார் உறவினரை விழித்தெழச் செய்யுங்கள். குழந்தைகள் நீங்கள் மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். கோபத்தின் அம்சம் கூட இருக்கக் கூடாது. ஆனால் அனைத்து குழந்தைகளுமோ இது போல் ஆக முடியாது. அநேகக் குழந்தைகளை மாயா ஒரேயடியாக மூக்கைப் பிடித்து விடுகிறது. எவ்வளவு தான் புரிய வைத்தாலும் கேட்பதே இல்லை. பாபாவும் புரிந்து கொள்கிறார் - ஒரு வேளை நேரம் பிடிக்கலாம். அனைவரும் பாபாவின் சேவையில் நன்கு ஈடுபட வேண்டும். ஆர்வமும் இருக்க வேண்டும் இல்லையா? வந்து கேட்க வேண்டும், பாபா, எங்களை சேவைக்காக அனுப்புங்கள். நாங்கள் போய் மற்றவர்களுக்கு நன்மை செய்கின்றோம். ஆனால் கேட்பதில்லை. குழந்தைகளின் தொழிலே உண்மையான கீதை சொல்வது தான். வார்த்தைகள் இரண்டு தான் - அலஃப் மற்றும் பே (அப்பா மற்றும் ஆஸ்தி). பாபா நல்லவிதமாக யுக்தியைப் புரிய வைத்துள்ளார். முதல் விசயமே இது தான் - பரமபிதா பரமாத்மாவோடு உங்களுக்கு என்ன சம்பந்தம்? கீழே பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் என்ற பெயர் எழுதப்பட்டுள்ளது. பாபா மிகவும் புதிய முறையை, மிக எளிமையாக சொல்கிறார். பாபாவுக்கு ஆர்வம் உள்ளது - இப்படி இப்படி போர்டு எழுதி வைக்க வேண்டும். பாபா வழிகாட்டுதல் தருகிறார். பாபாவை கருணை உள்ளம் கொண்டவர், ஆனந்தக்கடலாக இருப்பவர் என சொல்கின்றனர் என்றால் குழந்தை களும் கூட பாபாவுக்கு சமமாகக் கருணை உள்ளம் உடையவர்களாக ஆக வேண்டும். இந்தச் சித்திரங்களிலோ மிகப்பெரிய கஜானா உள்ளது. சொர்க்கத்தின் எஜமானன் ஆவதற்கான யுக்தி இதில் உள்ளது. பாபாவோ அநேக யுக்திகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். கல்பத்திற்கு முன்பும் கூட வெளிப்படுத்தியுள்ளார். மனிதர்களுக்கு டச் ஆகும் - இந்த விசயமோ மிக நல்லது. தந்தையிடமிருந்து கண்டிப்பாக ஆஸ்தி கிடைக்கும். இதையும் எழுதி வையுங்கள் - சொர்க்கத்தின் ஆஸ்திக்கு நீங்கள் உரிமை உள்ளவர்கள். வந்து புரிந்து கொள்ளுங்கள், மிகவும் சுலபமான விசயம். போர்டு மட்டும் தயார் செய்து நல்ல, நல்ல இடங்களில் வைக்க வேண்டும். 10-20 இடங்களில் போர்டு வையுங்கள். இந்த விளம்பரமும் வைக்க முடியும். நம்மிடமிருந்து பிரிந்து சென்றுள்ள குழந்தைகள் யார் இருப்பார்களோ, அவர்களுக்கும் இந்த வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர்கள் என்ன புரிய வைக்கின்றனர் என்று தெரிந்தால் வெளிப்படுத்துங்கள் என சொல்வார்கள். இதுவும் எழுதப்பட்டிருக்க வேண்டும் - இந்தப் புதிரைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் முக்தி-ஜீவன் முக்தியை ஒரு விநாடியில் அடைய முடியும்.

பாபா சொல்கிறார், தனது வாழ்க்கையை சிறந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டுமானால் சேவை செய்யுங்கள். கடலின் அருகில் வந்து புத்துணர்ச்சி பெற்று பிறகு சேவை செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்திலோ அரைக்கல்பமாக அடி வாங்கியிருக்கிறீர்கள். இங்கோ ஒரு விநாடியில் பாபாவிட மிருந்து ஆஸ்தி பெற வேண்டும். அனைவருக்கும் இப்போது வானப்ரஸ்த நிலை. மரணம் முன்னாலேயே நின்று கொண்டுள்ளது. அனைத்திலும் நல்ல தொழில் இது தான். மற்றப்படி மனிதர்கள் என்னென்ன தொழில் செய்கின்றனரோ, அவை போலியானவை. ஒரு தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் - தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். கல்லூரிகளுக்குச் சென்று முதல்வருக்குப் புரிய வைப்பீர்களானால் அங்கே படிக்கிறவர்களும் புரிந்து கொள்வார்கள். நீங்கள் எவ்வளவு சுலபமாக ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள்! எவ்வளவு முடியுமோ பாபாவை நினைவு செய்யுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மிக மிக இனிமையானவராக ஆக வேண்டும். கோபத்தின் அம்சத்தையும் கூட வெளியேற்றி விட வேண்டும். பாபாவுக்கு சமமாக இரக்க மனம் உள்ளவராகி சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

2. மரணம் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. இப்போது வானப்ரஸ்த நிலை, அதனால் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். பாரதத்தை இராமராஜ்யம் ஆக்குவதற்கான சேவையில் தன்னிடமுள்ள அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.

வரதானம்:
தேக அபிமானத்தின் அம்சத்தையும் பலி கொடுக்கக் கூடிய மகா பலசாலி ஆகுக.

மிகப் பெரிய பலவீனம் தேக அபிமானமாகும். தேக அபிமானத்தின் சூட்சும வம்சம் மிகப் பெரியதாகும். தேக அபிமானத்தை பலி கொடுப்பது என்றால் அம்சம் மற்றும் வம்ச சகிதமாக சமர்ப்பணம் ஆவதாகும். இவ்வாறு பலி கொடுப்பவர்கள் தான் மகா பலசாலிகளாக ஆகின்றனர். ஒருவேளை தேக அபிமானத்தின் அம்சம் துளியளவு மறைந்து இருந்தாலும், அபிமானத்தையே சுவமானமாக நினைத்தால் அதில் அல்ப கால வெற்றி தென்படலாம், ஆனால் நீண்ட கால தோல்வி அடங்கியிருக்கிறது.

சுலோகன்:
இச்சை கிடையாது, ஆனால் பிடித்திருந்தது - இதுவும் ஜீவன்பந்தனம் ஸ்திதி ஆகும்

மாதேஸ்வரியின் விலைமதிப்பற்ற மகாவாக்கியங்கள் - 1956

1) பரமாத்ம ஞானத்தின் அர்த்தம் உயிரோடு இந்து கொண்டே இறந்து விடுவது

இந்த அவிநாசி ஞானத்தை பரமாத்ம ஞானம் எனச் சொல்கின்றனர். இந்த ஞானத்தின் அர்த்தம் உயிருடன் இருந்து கொண்டே இறந்து விடுதல். அதனால் கோடியில் அபூர்வமாக யாரோ ஒரு சிலர் தான் இந்த ஞானத்தைப் பெறுவதற்கு தைரியம் வைக்கின்றனர். இதையோ நாம் அறிவோம், இந்த ஞானம் நடைமுறை வாழ்க்கையை உருவாக்குகிறது. நாம் என்ன கேட்கிறோமோ, அதுவாக நடைமுறையில் ஆகின்றோம். இது போன்ற ஒரு ஞானத்தை எந்த ஒரு சாது-சந்நியாசி, மகாத்மாவாலும் கொடுக்க முடியாது. மன்மனாபவ என்று அந்த மனிதர்கள் சொல்ல மாட்டார்கள். இப்போது இந்தக் கட்டளையை பாபா மட்டும் தான் தர முடியும். மன்மனாபவ என்பதன் அர்த்தம் - என்னிடம் யோகம் வையுங்கள். என்னிடம் யோகம் வைப்பீர்களானால் நான் உங்களைப் பாவங்களில் இருந்து விடுவித்து, வைகுண்டத்தின் இராஜ பதவியைக் கொடுப்பேன். அங்கே போய் நீங்கள் இராஜ்யம் செய்வீர்கள். அதனால் இந்த ஞானம் இராஜாவுக்கெல்லாம் மேலான ராஜா எனச் சொல்லப் படுகின்றது. இப்போது இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்வது மிகவும் விலை உயர்ந்த வியாபாரமாகும். ஞானத்தைப் பெறுவது என்றால் ஒரேயடியாக உயிருடன் இருந்தவாறே இறந்து விடுவது. சாஸ்திரங்கள் முதலானவற்றின் ஞானத்தைப் பெறுவதோ முற்றிலும் மலிவான வியாபாரமாகும். அதிலோ அடிக்கடி இறந்துபோக வேண்டியதிருக்கும், ஏனென்றால் அவர்கள் பரமாத்ம ஞானம் தருவதில்லை. அதனால் பாபா சொல்கிறார், இப்போது என்ன செய்ய வேண்டுமோ, அதை இப்போதே செய்து விடுங்கள். பிறகு இந்த வியாபாரம் இருக்காது.

2) பரமாத்மா சத் சித் ஆனந்த சொரூபமானவர்

பரமபிதா பரமாத்மாவை சத் சித் ஆனந்த சொரூபமானவர் என்றும் சொல்கின்றனர். இப்போது பரமாத்மாவை சத் (உண்மை) என்று ஏன் சொல்கின்றனர்? ஏனென்றால் அவர் அவிநாசி, என்றென்றும் அழியாதவர். அவர் ஒரு போதும் அசத் (பொய்யாக) ஆவதில்லை. அவர் அஜர் (மூப்படைவதில்லை), அமர் (என்றும் இருப்பவர்- அழியாதவர்). மேலும் பரமாத்மாவை சைதன்ய சொரூபம் என்றும் சொல்கின்றனர். சைதன்யம் என்பதன் அர்த்தம் பரமாத்மாவும் கூட மனம், புத்தியுடன் உள்ளார். அவரை ஞானம் நிறைந்தவர், அமைதி நிறைந்தவர் எனச் சொல்கின்றனர். அவர் ஞானம் மற்றும் யோகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால் பரமாத்மாவை சைதன்யமானவர் என்றும் சொல்கின்றனர். அவர் பிறப்பற்றவராகவும் (அஜன்மா) உள்ளார். அவர் ஆத்மாக்களாகிய நம்மைப் போல் ஜன்மம் எடுப்பதில்லை. பரமாத்மாவும் கூட இந்த ஞானம் மற்றும் சாந்தியைக் கொடுப்பதற்காக பிரம்மாவின் சரீரத்தைக் கடனாகப் பெற வேண்டியுள்ளது. ஆக, அவர் சைதன்யமாக இருப்பதால் தான் (பிரம்மாவின்) வாயின் மூலமாக நமக்கு ஞான யோகத்தைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். பிறகு பரமாத்மாவை சத் சித் ஆனந்த சொரூபம் என்றும் சொல்கின்றனர். இந்த குணங்கள் அனைத்தும் பரமாத்மாவுக்குள் நிறைந்துள்ளன. அதனால் பரமாத்மாவை சுக, துக்கத்திற்கு அப்பாற் பட்டவர் எனச் சொல்கின்றனர். பரமாத்மா துக்கம் தருபவர் என்றெல்லாம் நாம் சொல்ல மாட்டோம். அவர் எப்போதுமே சுகம் ஆனந்தத்தின் பொக்கிஷமாக இருப்பவர். அவருடைய குணங்களே சுகம், ஆனந்தம் தருபவையாக உள்ளன என்றால், பிறகு ஆத்மாக்களாகிய நமக்கு அவர் எப்படி துக்கம் தர முடியும்?

3) பரமாத்மா செய்பவர், செய்விப்பவர்

அநேக மனிதர்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநாதி, உருவாக்கப்பட்ட சிருஷ்டி டிராமா முழுவதும் பரமாத்மா தான் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டுள்ளனர். அதனால் மனிதர்களின் கையில் எதுவும் இல்லை, செய்பவர் செய்விப்பவர் ஸ்வாமி, அனைத்தும் பரமாத்மாவே செய்கிறார் என்று அவர்கள் சொல்கின்றனர். சுகம், துக்கம் இரண்டு பாகமுமே பரமாத்மாவே உருவாக்கியிருக்கிறார் என்றும் சொல்கின்றனர். இப்போது அப்படிப்பட்ட புத்தி உள்ளவர்களை என்ன புத்தி எனச் சொல்வது? முதல்-முதலில் அவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் - அதாவது இந்த அநாதி உருவாக்கப்பட்ட சிருஷ்டியின் விளையாட்டு - தானாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பிறகு பரமாத்மாவுக்காக சொல்லப்படுகிறது, அனைத்தும் பரமாத்மாவே செய்கிறார் என்பதாக. இப்போது பிறகு எந்தத் தகுதியை வைத்து பரமாத்மாவை செய்பவர், செய்விப்பவர் என்று சொல்கின்றனர்,மேலும் இந்தப் பெயர் எந்த பிரபலத்தின் மீது வைக்கப் பட்டுள்ளது? இப்போது இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலிலோ இதைப் புரிந்து கொள்ள வேண்டும் - அதாவது இந்த சிருஷ்டியின் அநாதி நியமம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி பரமாத்மா அநாதியாக உள்ளார், அப்படி இந்தச் சக்கரம் கூட ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அநாதி, அழிவற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது. விதையில் விருட்சத்தின் ஞானம் உள்ளதென்பதும் விருட்சத்தில் விதை உள்ளதென்பதும், இரண்டும் இணைந்தது. அழிவற்றது என்பதும் புரிந்து கொள்ளப்படுகிறது. மற்றபடி விதைக்கு என்ன வேலை? விதைத்தால் மரம் வெளிப்படும். விதை போடவில்லை என்றால் மரம் உற்பத்தி ஆகாது. ஆக, பரமாத்மாவும் தானே இந்த முழு சிருஷ்டியின் விதை வடிவமாக உள்ளார். மேலும் பரமாத்மாவின் பாகம் விதையைப் விதைப்பது. பரமாத்மா தான் சொல்கிறார், நான் விதையைப் போடுவதால் தான் பரமாத்மாவாக இருக்கிறேன். இல்லையென்றால் விதையும் மரமும் அநாதி, விதை போடவில்லை என்றாலோ மரம் எப்படி வெளிவரும்? எனது காரியம் பரம (உயர்ந்த) காரியமாக இருப்பதால் தான் நான் பரமாத்மா. எனது சிருஷ்டி அதே தான் - அதில் நான் தானாகவே நடிப்பவன் ஆகி விதையை விதைக்கிறேன். சிருஷ்டியின் ஆரம்பமும் செய்கிறேன், முடிக்கவும் செய்கிறேன். நான் செய்பவராகி விதை விதைக்கிறேன். விதை விதைக்கும் சமயத்தில் ஆரம்பம் செய்கிறேன். பிறகு இறுதியிலும் விதை வருகிறது. பிறகு மரம் முழுவதும் விதையின் சக்தியைப் பிடித்துக் கொள்கிறது. விதை என்றால் படைப்பைப் படைப்பது. பிறகு அதனை முடிப்பது. பழைய சிருஷ்டியை முடிப்பது மற்றும் புது சிருஷ்டியின் ஆரம்பம் செய்வது - இதைத் தான் பரமாத்மா அனைத்தையும் செய்கிறார் என்று சொல்கின்றனர். நல்லது. ஓம் சாந்தி.