05-10-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஆத்மா மற்றும் சரீரம் தூய்மை அற்றதாகிவிட்டன. பாபாவின் நினைவின் மூலம் இவற்றை தூய்மையாக்குங்கள். ஏனென்றால் இப்போது தூய்மையான உலகத்திற்குச் செல்ல வேண்டும்.

கேள்வி:
பகவான் எந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறார்? தந்தை எந்த ஒரு கணக்கைச் சொல்லி யிருக்கிறார்?

பதில்:
யார் ஆரம்பத்தில் இருந்தே பக்தி செய்திருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் பகவான் கிடைக்கிறார். பாபா இந்தக் கணக்கைச் சொல்லியிருக்கிறார்-அதாவது முதல்-முதலில் நீங்கள் பக்தி செய்கிறீர்கள். அதனால் உங்களுக்குத் தான் முதல்-முதலில் பகவான் மூலமாக ஞானம் கிடைக்கிறது. இதன் மூலம் மீண்டும் நீங்கள் புது உலகில் இராஜ்யம் செய்கிறீர்கள். பாபா சொல் கிறார், நீங்கள் அரைக்கல்பமாக என்னை நினைவு செய்திருக் கிறீர்கள். இப்போது நான் உங்களுக்கு பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன்.

பாடல்:
இறந்தாலும் உன் மடியில், வாழ்ந்தாலும் உன் மடியில்.....

ஓம் சாந்தி.
குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். யாராவது இறந்து விட்டால் தந்தையிடம் ஜென்மம் எடுக்கின்றனர். நாம் ஆத்மாக்கள் என்பதை அறிவீர்கள். அது சரீரத்தின் விஷயம் ஆகின்றது. ஒரு சரீரத்தை விட்டுப் பிறகு வேறொரு தந்தையிடம் செல்கின்றனர். நீங்கள் எத்தனை சாகாரி தந்தையரை அடைந்திருக்கிறீர்கள்! அசலில் நீங்கள் நிராகாரி தந்தையின் குழந்தைகள். ஆத்மாக்கள் நீங்கள் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள். வசிப்பதும் அவர் இருக்கும் இடத்தில் தான். அது நிர்வாண்தாமம் அல்லது சாந்திதாமம் எனச் சொல்லப்படு கின்றது. தந்தையும் அங்கே தான் வசிக்கிறார். இங்கே நீங்கள் வந்து லௌகிக் தந்தையின் குழந்தையாக ஆகிறீர்கள். பிறகு அந்தத் தந்தையை மறந்து போகிறீர்கள். சுகத்தில் இருக்கும் போது அந்தத் தந்தையை நீங்கள் நினைவு செய்வதில்லை. துக்கத்தில் நினைவு செய்கிறீர்கள். ஆத்மா தான் நினைவு செய்கிறது. லௌகிக் தந்தையை நினைவு செய்யும் போது புத்தி சரீரத்தின் பக்கம் உள்ளது. அந்த பாபாவை நினைவு செய்தால் ஓ பாபா எனச் சொல்கின்றனர். இருவருமே பாபா தான். சரியான சொல் தந்தை என்பது தான். அவரும் தந்தை. இவரும் தந்தை. ஆத்மா ஆன்மிகத் தந்தையை நினைவு செய்கிறது என்றால் புத்தி அங்கே சென்று விடுகின்றது. இதைத் தந்தை அமர்ந்து குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் அறிவீர்கள், பாபா வந்துள்ளார், நம்மைத் தம்முடைய வர்களாக ஆக்கிக் கொண்டுள்ளார். தந்தை சொல்கிறார் - முதல்-முதலில் நான் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தேன். நீங்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து டிராமா பிளான் படி இப்போது நீங்கள் துக்கம் அடைந்திருக்கிறீர்கள். டிராமாவின் அனுசாரம் இந்த பழைய உலகம் முடிந்துவிடப் போகிறது. ஆத்மா நீங்களும் இந்த சரீரமாகிய ஆடையும் சதோபிரதானமாக இருந்தீர்கள். பிறகு தங்க யுகத்திலிருந்து ஆத்மா வெள்ளியுகத்திற்கு வந்த போது சரீரமும் வெள்ளி யுகத்திற்கு வந்தது, பிறகு செம்புயுகத்தில் வந்தது. இப்போதோ ஆத்மா நீங்கள் முற்றிலும் தூய்மை இல்லாதவர்களாகி விட்டீர்கள். ஆக, சரீரமும் தூய்மை இல்லாதாக ஆகிவிட்டது. எப்படி 14 கேரட் தங்கத்தை யாரும் விரும்பு வதில்லை, கருப்பாகி விடுகின்றது. நீங்களும் கூட இப்போது கருப்பான இரும்புயுகத்தவராக ஆகி விட்டிருக்கிறீர்கள் என்றால் பிறகு எப்படி தூய்மை ஆவது ? ஆத்மா தூய்மையானால் சரீரமும் தூய்மையானதாகக் கிடைக்கும். அது எப்படி ஆகும்? கங்கா ஸ்நானம் செய்வதாலா? இல்லை, அழைக்கவும் செய்கின்றனர்-ஹே பதீத-பாவனா வாருங்கள் என்று. இதை ஆத்மா சொல்கிறது என்றால் புத்தி பரலௌகிகத் தந்தையின் பக்கம் சென்று விடு கின்றது. ஹே பாபா ! பாருங்கள், பாபா என்ற சொல்லே எவ்வளவு இனிமையாக உள்ளது. பாரதத்தில் தான் பாபா-பாபா எனச் சொல்கின்றனர். இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆகி பாபாவுடையவர்களாக ஆகியிருக் கிறீர்கள். பாபா சொல் கிறார், நான் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பியிருந்தேன். புதிய சரீரத்தை தாரணை செய்திருந் தீர்கள். இப்போது நீங்கள் என்னவாக ஆகி விட்டிருக்கிறீர்கள்! இவ்விஷயங்கள் எப்போதும் உள்ளுக்குள் இருக்க வேண்டும். பாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். அனைவரும் நினைவு செய்கின்றனர் அல்லவா. - ஹே பாபா ! ஆத்மாக்கள் நாங்கள் தூய்மை இல்லாதவர் களாகி விட்டோம். இப்போது வாருங்கள், வந்து எங்களை தூய்மை ஆக்குங்கள். டிராமாவில் அவருக்கு இந்த பாகமும் உள்ளது, அதனால் தான் அழைக்கின்றனர். டிராமா பிளான் படி எப்போது பழைய உலகத்திலிருந்து புதியதாக ஆக வேண்டுமோ, அப்போது தான் வருவார். ஆக, நிச்சயமாக சங்கமயுகத்தில் தான் வருவார். குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம் உள்ளது-அனைவரையும் விட மிக அன்பானவர் பாபா. சொல்லவும் செய்கின்றனர், இனிமையானவர், அனைவரிலும் மிக இனிமையானவர்.... இப்போது இனிமையானவர் யார்? லௌகிக் சம்மந்தத்தில் முதலில் தந்தை, அவர் பிறவி கொடுப்பவர். பிறகு ஆசிரியர். ஆசிரியரிடம் படித்து நீங்கள் பதவி பெறுகிறீர்கள். ஞானம் என்பது வருமானத்திற்கு ஆதாரம் எனச் சொல்லப்படுகின்றது. ஞானம் என்பது நாலெட்ஜ் (தன்னைப்பற்றிய அறிவு), யோகம் என்பது தந்தையின் நினைவு. ஆக, எல்லையற்றதைப் பற்றி யாருக்கும் தெரியாது. சித்திரங்களில் தெளிவாகக் காட்டப் பட்டும் உள்ளது, பிரம்மா மூலம் ஸ்தாபனை சிவபாபா செய்விக்கிறார். கிருஷ்ணர் எப்படி இராஜயோகம் கற்பிப்பார்? சத்யுகத் திற்காகவே இராஜ யோகத்தைக் கற்பிக்கிறார். ஆக, நிச்சயமாக பாபா சங்கமயுகத் தில் தான் கற்பித்திருப்பார். சத்யுகத்தை ஸ்தாபனை செய்பவர் பாபா. பிரம்மா மூலம் செய்விக்கிறார். செய்பவர்- செய்விப்பவர் அவரல்லவா? அந்த மனிதர்களோ, திரிமூர்த்தி பிரம்மா எனச் சொல்லி விடுகின்றனர். ஆனால் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் சிவன். இவர் சாகார், அவர் நிராகார். சிருஷ்டியும் இதே தான். இந்த சிருஷ்டியின் சக்கரம் தான் சுற்றுகிறது, ரிப்பீட் ஆகிக் கொண்டே இருக்கிறது. சூட்சும வதனத்தின் சிருஷ்டிச் சக்கரம் எனப் பாடப் படுவதில்லை. உலகத்தின் சரித்திர-பூகோளம் ரிப்பீட் ஆகின்றது. சத்யுக-திரேதா-துவாபர கலியுகம் என்று பாடவும் செய்கின்றனர். இடையில் கண்டிப்பாக சங்கமயுகம் வேண்டும். இல்லையென்றால் கலியுகத்தை சத்யுகமாக யார் ஆக்குவார்? நரகவாசிகளை சொர்க்கவாசி ஆக்குவதற்காக பாபா சங்கமயுகத்தில் தான் வருகிறார். எவ்வளவு பழைய உலகமோ, அவ்வளவு துக்கம் அதிகமாக உள்ளது. ஆத்மா எவ்வளவு தமோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்கிறதோ, அவ்வளவு துக்கம் நிறைந்ததாக ஆகின்றது. தேவதைகள் சதோபிரதானமானவர்கள். இதுவோ ஹையஸ்ட் அத்தாரிட்டி காட் ஃபாதர்லி கவர்ன்மென்ட். சர்வ வல்லமை படைத்த இறை தந்தையின் அரசாங்கம் கூடவே தர்மராஜரும் உள்ளார். பாபா சொல்கிறார்-நீங்கள் சிவாலயத்தில் வசிப்பவர்களாக இருந்தீர்கள். இப்போது உள்ளது வேசியாலயம். நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். இப்போது தூய்மையற்ற வர்களாகி விட்டீர்கள் என்பதால் நாங்களோ பாவிகள் எனச் சொல்கிறீர்கள். ஆத்மா சொல்கிறது, நிர்குணவானாகிய என்னிடம் எந்த ஒரு நற்குணமும் இல்லை என்று. எந்த ஒரு தேவதையின் கோவிலுக்குச் சென்றாலும் அவர்களின் முன்னிலை யில் இது போல் சொல்வார்கள். தந்தைக்கு முன்னிலையில் இதைச் சொல்ல வேண்டும். அவரை விட்டுவிட்டு சகோதரர்களுக்குச் சொல்கின்றனர். இந்த தேவதைகள் சகோதரர்கள் ஆகின்றனர் இல்லையா? சகோதரர்களிடமோ எதுவும் கிடைக்காது. சகோதரர்களுக்குப் பூஜை செய்து-செய்து கீழே இறங்கியே வந்துள்ளனர். மற்றப்படி மனிதர்களோ தந்தையை அறிந்து கொள்ளவே இல்லை. சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர். சிலர் பிறகு அகண்ட ஜோதி தத்துவம் எனச் சொல்கின்றனர். சிலர் சொல்கின்றனர், அவர் பெயர் வடிவத்திற்கு அப்பாற் பட்டவர் என்று. அட, நீங்கள் சொல்கிறீர்கள், அகண்ட ஜோதி சொரூபம் என்று, பிறகு பெயர்-வடிவத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? தந்தையை அறிந்திராத காரணத்தால் தான் தூய்மை இழந்து விட்டனர். தமோபிரதானமாகவும் ஆகத் தான் வேண்டும். பிறகு எப்போது பாபா வருகிறாரோ, அப்போது அனைவரையும் பாவன மாக்குவார். ஆத்மாக்கள் அனைவரும் நிராகாரி உலகத்தில் தந்தையுடன் கூட உள்ளனர். பிறகு இங்கே வந்து சதோ, ரஜோ, தமோவின் பார்ட்டை நடிக்கின்றனர். ஆத்மா தான் தந்தையை நினைவு செய்கின்றது. தந்தை வரவும் செய்கிறார், சொல்கிறார்-பிரம்மாவின் உடலை ஆதாரமாக எடுக்கிறேன். இது பாக்கியசாலி ரதம். ஆத்மா இல்லாமல் ரதம் இருக்காது. பாகீரதன் கங்கையைக் கொண்டு வந்ததாகச் சொல்கின்றனர். இப்போது இந்த விஷயமோ இருக்க முடியாது. ஆனால் நாம் என்ன சொல்கிறோம் என்று எதையுமே அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப் படுகின்றது - இது ஞான மழையாகும். இதனால் என்ன நடக்கிறது? தூய்மை இல்லாமலிருந்து தூய்மையாகின்றனர். கங்கை யமுனை சத்யுகத்திலும் உள்ளன. கிருஷ்ணர் யமுனையின் கரையில் விளையாடினார் எனச் சொல் கின்றனர். அந்த மாதிரி எந்த ஒரு விஷயமும் கிடையாது. அவரோ சத்யுகத்தின் இளவரசர். அவரை மிகவும் பத்திரமாகப் பராமரிக்கின்றனர். ஏனென்றால் மலர் இல்லையா? மலர்கள் எவ்வளவு நல்ல அழகாக உள்ளன! மலர்களிடம் அனைவரும் வந்து மணத்தை நுகர்கின்றனர். முட்களிடம் இருந்து யாரும் மணத்தை நுகர மாட்டார்கள். இப்போதோ முட்களின் உலகம். காட்டை பாபா வந்து மலர்களின் தோட்டமாக ஆக்குகிறார். அதனால் அவரது பெயர் பபுல் நாத் என்றும் வைக்கப் பட்டுள்ளது. முள்ளில் இருந்து மலராக்குகிறார். அதனால் மகிமை பாடு கின்றனர்- முட்களை மலராக மாற்றுகின்ற பாபா என்று. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபாவிடம் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்! இப்போது நீங்கள் அறிவீர்கள், இப்போது நாம் எல்லையற்ற தந்தையுடையவர்களாக ஆகி யிருக்கிறோம். இப்போது உங்களுடைய சம்மந்தம் அவரிடமும் உள்ளது அதேபோல் லௌகிக் தந்தையிடமும் உள்ளது. பரலௌகிக் தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையாவீர்கள். ஆத்மா அறிந்து கொண்டுள்ளது, அவர் நம்முடைய லௌகிக் தந்தை, இவர் நம்முடைய பரலௌகிக் தந்தை. பக்தி மார்க்கத்திலும் கூட ஆத்மா அறிந்து கொண்டுள்ளது- அவர் நம்முடைய லௌகிக் தந்தை, இவர் காட் ஃபாதர். அவிநாசி தந்தையை நினைவு செய்கின்றனர். அந்தத் தந்தை எப்போது வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார்? இது யாருக்கும் தெரியாது. தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்காகவே பாபா வருகிறார். ஆக, நிச்சயமாக சங்கமயுகத்தில் தான் வருவார். சாஸ்திரங்களிலோ கல்பத்தின் ஆயுள் இலட்சக் கணக்கான வருடங்கள் என எழுதி மனிதர்களை முற்றிலும் பயங்கர இருளில் வைத்துள்ளனர். யார் அதிக பக்தி செய்திருக்கிறார்களோ அவர்களுக்கு பகவான் கிடைப்பார் எனச் சொல்கின்றனர். ஆக, அனைவரிலும் அதிக பக்தி செய்பவர்களுக்கு அவசியம் முதலில் கிடைக்க வேண்டும். பாபா கணக்கையும் சொல்லியிருக்கிறார். அனைவரைக் காட்டிலும் முதலில் நீங்கள் பக்தி செய்கிறீர்கள். உங்களுக்குத் தான் முதல்-முதலில் பகவான் மூலம் ஞானம் கிடைக்க வேண்டும். அதனால் நீங்கள் தான் முதலில் புது உலகில் இராஜ்யம் செய்வீர்கள். எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதில் கஷ்டத்திற்கான எந்த ஒரு விஷயமும் கிடையாது. பாபா சொல்கிறார், நீங்கள் அரைக்கல்பமாக நினைவு செய்தீர்கள். சுகத்திலோ யாரும் நினைவு செய்வதே இல்லை. கடைசியில் துக்கம் நிறைந்தவர்களாக ஆகும் போது தான் நான் வந்து சுகம் நிறைந்தவர்களாக ஆக்குகிறேன். இப்போது நீங்கள் மிகப்பெரிய மனிதர்களாக ஆகிறீர்கள். முதலமைச்சர், பிரதம அமைச்சர் முதலா னவர்களின் பங்களாக்கள் எவ்வளவு முதல் தரமானவையாக உள்ளன! ஃபர்னிச்சர் முழுவதும் அது போல் முதல் தரமான வையாக இருக்கும். நீங்களோ எவ்வளவு பெரிய மனிதர்களாக (தேவதை) ஆகிறீர்கள்! தெய்விக குணங்கள் உள்ள தேவதையாக, சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆகிறீர்கள். அங்கே உங்களுக்காக மாளிகையும் வைரம்- வைடூரியங்களால் ஆனதாக இருக்கும். அங்கே உங்கள் ஃபர்னிச்சர் தங்கம் பதிக்கப்பட்ட முதல் தரமானதாக இருக்கும்.

இது ருத்ர ஞான யக்ஞம். சிவனை ருத்ரன் எனவும் அழைக்கின்றனர். எப்போது பக்தி முடிவடைகிறதோ, அப்போது பகவான் ருத்ர யக்ஞத்தைப் படைக்கிறார். சத்யுகத்தில் யக்ஞம் அல்லது பக்தியின் விஷயமே கிடையாது. இச்சமயம் தான் பாபா இந்த அவிநாசி ருத்ர ஞான யக்ஞத்தைப் படைக்கிறார். இதற்குப் பிறகு பின்னாளில் மகிமை நடைபெறுகின்றது. பக்தியோ சதா காலமும் நடைபெற்றுக் கொண்டே இருக்காது. பக்தி மற்றும் ஞானம் - பக்தி என்பது இரவு, ஞானம் என்பது பகல். பாபா வந்து பகலை உருவாக்குகிறார். ஆக, குழந்தைகளுக்கும் பாபாவிடம் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்! பாபா நம்மை உலகத்தின் எஜமானர் ஆக்குகிறார். அனைவரைக் காட்டிலும் மிக அன்பான பாபா இல்லையா? அவரைக் காட்டிலும் பிரியமானவர் வேறு யாரும் இருக்க முடியாது. அரைக்கல்பமாக நினைவு செய்தே வந்துள்ளனர். பாபா, வந்து எங்கள் துக்கத்தைப் போக்குங்கள் என்று அழைத்தனர். இப்போது பாபா வந்துவிட்டுள்ளார். அவர் புரிய வைக்கிறார்- குழந்தைகளே, நீங்கள் உங்களுடைய இல்லற விவகாரங்களில் இருக்கத் தான் வேண்டும். இங்கே பாபாவின் அருகில் எது வரை அமர்ந்திருப்பீர்கள்? பரந்தாமத்தில் தான் அவருடன் கூடவே இருக்க முடியும். இங்கோ இருக்க முடியாது. இங்கோ ஞானம் படிப்பதற் கானது. ஞானத்தைப் படிப்பவர்கள் கொஞ்சமாக உள்ளனர். ஒலிபெருக்கியில் எப்போதாவது படிப்பு நடைபெறுகிறதா என்ன? ஆசிரியர் கேள்வியை எப்படிக் கேட்பார்? ஒலிபெருக்கியில் பதில் எப்படிக் கொடுக்க முடியும்? அதனால் கொஞ்சம்-கொஞ்சம் மாணவர்களுக்குப் படிப்பு சொல்லித் தருகின்றனர். கல்லூரிகளோ அநேகம் உள்ளன. பிறகு அனைவருக்கும் பரீட்சை நடைபெறு கின்றது. முடிவு வெளியாகின்றது. இங்கோ ஒரு தந்தை மட்டுமே கற்பிக்கிறார். இதையும் புரிய வைக்க வேண்டும் - லௌகிக் மற்றும் பரலௌகிக். துக்கத்தில் இருக்கும் போது அந்தப் பரலௌகிகத் தந்தையைத் தான் நினைவு செய்கின்றனர். இப்போது அந்தத் தந்தை வந்துள்ளார். மகாபாரத யுத்தமும் முன்னால் நின்று கொண்டுள்ளது. அவர்கள் நினைக்கின்றனர், மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் வந்தார் என்று. இதுவோ நடக்க முடியாதது. பாவம் குழப்பமடைந்துள்ளனர். பிறகும் கிருஷ்ணா, கிருஷ்ணா எனச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். இப்போது அனைவரிலும் மிக அன்பான சிவனும் உள்ளார் என்றால் கிருஷ்ணரும் உள்ளார். ஆனால் அவர் நிராகார், இவர் சாகார். நிராகார் தந்தை அனைத்து ஆத்மாக்களின் தந்தையாக இருப்பவர். இருவருமே மிக அன்பானவர்கள் தான். கிருஷ்ணரும் உலகத்தின் எஜமானர் இல்லையா? இப்போது நீங்கள் தீர்மானிக்க முடியும்-அதிக அன்பானவர் யார்? சிவபாபா தான் அது போல் தகுதி யுள்ளவராக ஆக்குகிறார் இல்லையா? கிருஷ்ணர் என்ன செய்கிறார்? தந்தை தான் அவரை இது போல் ஆக்குகிறார் இல்லையா? ஆக, மகிமைப் பாடலும் அதிகமாக அந்தத் தந்தைக்குத் தான் இருக்க வேண்டும் இல்லையா? பாபா புரிய வைத்துள்ளார் - நீங்கள் அனைவரும் பார்வதிகள். இந்த சிவன் அமர்நாத் உங்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அனைவருமே அர்ஜுனர்கள். நீங்கள் அனைவருமே திரௌபதிகள். இந்த விகாரி உலகம் இராவண இராஜ்யம் எனச் சொல்லப் படுகின்றது. அது விகாரமற்ற (நிர்விகாரி) உலகம். விகாரத்தின் விஷயமே அங்கே கிடையாது. நிராகாரி தந்தை விகாரி உலகத்தைப் படைப்பாரா என்ன? விகாரத்தில் தான் துக்கம் உள்ளது. சந்நியாசிகளுடையது ஹடயோகம், துறவற மார்க்கம். கர்ம சந்நியாசமோ ஒரு போதும் நடைபெறுவதில்லை. எப்போது ஆத்மா சரீரத்தில் இருந்து தனியாகச் சென்று விடுமோ, அப்போது தான் இது நடக்க முடியும். கர்ப்ப சிறையில் கர்மங்களின் கணக்கு ஆரம்பமாகிறது. மற்றப்படி கர்ம சந்நியாசம் எனச் சொல்வது தவறாகும். ஹடயோகம் முதலியவற்றை அதிகமாகக் கற்றுக் கொள்கின்றனர். குகைகளில் சென்று அமர்ந்து கொள்கின்றனர். நெருப்பிலும் நடந்து விடுகின்றனர். ரித்தி-சித்தியும் அதிகம் உள்ளது. மாயாஜாலத்தினால் அநேகப் பொருள்களையும் வெளிப்படுத்து கின்றனர். பகவானையும் கூட மந்திரவாதி, இரத்தின வியாபாரி என்றும் சொல்கின்றனர். ஆனால் அவற்றால் எந்த ஒரு கதி-சத்கதியும் கிடைக்காது. அவரோ ஒரே ஓர் உண்மையான சத்குரு, வந்து அனைவர்க்கும் கதி-சத்கதி அளிக்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) முள்ளில் இருந்து மலராக ஆக்குபவர் மிக-மிக அன்பான ஒரே தந்தை. அவரை மிகுந்த அன்போடு நினைவு செய்ய வேண்டும். மணமுள்ள தூய்மையான மலராக ஆகி அனைவருக்கும் சுகம் தர வேண்டும்.

2) இந்த ஞானம் (படிப்பு) வருமானத்துக்கு ஆதாரம். இதனால் 21 பிறவிகளுக்கு நீங்கள் மிகப் பெரிய மனிதராக (தேவதை) ஆகிறீர்கள். அதனால் இதை நல்லபடியாகப் படிக்கவும் கற்பிக்கவும் வேண்டும். ஆத்ம அபிமானி ஆக வேண்டும்.

வரதானம்:
பாப்தாதாவை தனது துணையாக உணர்ந்து (டபிள் ஃபோர்ஸ்) இரட்டை சக்தியுடன் செயல்படக் கூடிய சகஜ யோகி ஆவீர்களாக.

எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும், பாப்தாதாவை தனது துணையாக ஆக்கிக் கொண்டீர்கள் என்றால், டபிள் ஃபோர்ஸ் - இரண்டு மடங்கு சக்ததியுடன் காரியம் நடக்கும், மேலும் நினைவு கூட மிகவும் எளிதாக இருக்கும். ஏனெனில் யார் எப்பொழுதும் கூட இருக்கிறாரோ, அவரது நினைவு இயல்பாகவே அமைந்து இருக்கும். எனவே இப்பேர்ப்பட்ட துணை இருக்கும் பொழுது அல்லது புத்தி மூலமாக நிரந்தரமாக சத்தியத்தின் தொடர்பு கொண்டிருக்கும் பொழுது, சகஜயோகி ஆகி விடுவீர்கள், மேலும் (பவர் ஃபுல்) சக்திசாலி சேர்க்கை இருக்கும் காரணத்தால், ஒவ்வொரு காரியத்திலும் உங்களுடைய (டபிள் ஃபோர்ஸ்) இரட்டிப்பு சக்தி இருக்கும். அதன் காரணமாக ஒவ்வொரு செயலிலும் வெற்றியின் அனுபவம் ஏற்படும்.

சுலோகன்:
யார் ஒரு பொழுதும் மாயையின் தாக்கத்திற்கு வசப்பட்டு விடுவதில்லையோ,