05.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! இந்த கண்களுக்கு எதெல்லாம் தென்படுகிறதோ அதை பார்த்தும் பார்க்காதீர்கள். இவற்றின் மீதுள்ள பற்றை நீக்கி விடுங்கள். ஏனெனில் இவற்றிற்கு நெருப்பு பிடிக்க போகிறது.

 

கேள்வி:

ஈசுவரிய அரசாங்கத்தின் எந்த ஒரு மறைமுகமான காரியத்தை உலகம் அறியாமல் உள்ளது?

 

பதில்:

ஈசுவரிய அரசாங்கம் ஆத்மாக்களை பாவனமாக ஆக்கி தேவதையாக ஆக்குகிறது - இது மிகவும் இரகசியமான காரியம் ஆகும். இதை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளார்கள். மனிதன் தேவதையாக ஆகும் பொழுது தான் நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக ஆக முடியும். மனிதனின் முழு நடத்தையை விகாரங்கள் கெடுத்து விட்டுள்ளன. இப்பொழுது நீங்கள் அனைவரையும் முதன்மையான நடத்தை உடையவர்களாக ஆக்கும் சேவை செய்கிறீர்கள். இது தான் உங்களுடைய கடமை ஆகும்.

 

ஓம் சாந்தி.

ஓம் சாந்தி என்று கூறப்படும் பொழுது நமது சுய தர்மம் மற்றும் நமது வீடு நினைவிற்கு வருகிறது. பிறகு வீட்டிலேயே ஒன்றும் அமர்ந்து விடுவதில்லை. தந்தையின் குழந்தைகளாக ஆகி உள்ளீர்கள் என்றால் அவசியம் சொர்க்கத்தின் ஆஸ்தி கூட நினைவிற்கு வரும். ஓம் சாந்தி என்று கூறுவதால் கூட முழு ஞானம் புத்தியில் வந்து விடுகிறது. நான் ஆத்மா சாந்த சொரூபமானவன் ஆவேன். அமைதிக் கடலான தந்தையின் குழந்தை ஆவேன். எந்த தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறாரோ, அதே தந்தை நம்மை தூய்மையானவர் களாக அமைதியின் சொரூபமாக ஆக்குகிறார். முக்கியமான விஷயமே தூய்மையினுடையது தான். தூய்மையான உலகம் மற்றும் தூய்மையற்ற உலகம் என்று உள்ளது. தூய்மையான உலகத்தில் ஒரு விகாரம் கூட கிடையாது. தூய்மையற்ற உலகத்தில் 5 விகாரங்கள் உள்ளன. எனவே விகாரி உலகம் என்று கூறப்படுகிறது. அது நிர்விகாரி உலகம் ஆகும். நிர்விகாரி உலகத்திலிருந்து படி இறங்கி இறங்கி பிறகு கீழே விகாரி உலகத்திற்கு வருகிறீர்கள். அது பாவனமான (தூய்மையான) உலகம் ஆகும். இது பதீதமான (தூய்மையற்ற) உலகம் ஆகும். இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் ஆகும் அல்லவா? காலத்தைப் பொருத்து பகல் மற்றும் இரவு பாடப்பட்டுள்ளது. பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு பகல் என்றால் சுகம். இரவு என்றால் துக்கம். இரவில் அலைய வேண்டி இருக்கும். பார்க்கப்போனால் இரவில் ஒன்றும் அலைவது கிடையாது. ஆனால் பக்திக்கு அலைவது என்று கூறப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் சத்கதி அடைவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். உங்களுடைய ஆத்மாவில் 5 விகாரங்கள் காரணமாக பாவங்கள் இருந்தன. அதில்கூட முக்கியமானது காம விகாரம் ஆகும். அதனால் தான் மனிதர்கள் பாவ ஆத்மா ஆகிறார்கள். நாம் பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறோம் என்பதையோ ஒவ்வொருவரும் அறிந்துள்ளார்கள். பிரஷ்ட்டாச்சாரத்தினல் (விகாரத்தினால்) பிறந்துள்ளார்கள். ஒரே ஒரு காம விகாரத்தின் காரணமாக எல்லா தகுதிகளும் (குவாஃலிபிகேஷன்) கெட்டு விடுகிறது. எனவே இந்த காம விகாரத்தை வென்றீர்கள் என்றால் உலகத்தை வென்றவராகி புது உலகத்திற்கு அதிபதி ஆகி விடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். எனவே உள்ளுக்குள் அவ்வளவு குμ இருக்க வேண்டும். மனிதர்கள் பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகும் பொழுது எதையும் புரிந்து கொள்வதில்லை. இந்த காமத்தின் காரணமாகத் தான் எவ்வளவு குழப்பங்கள் ஏற்படுகின்றன. எவ்வளவு அசாந்தி (அமைதியின்மை) கதறுதல் ஆகியவை ஆகி விடுகின்றது. இச்சமயம் உலகத்தில் இப்பேர்ப்பட்ட கதறல் ஏன் உள்ளது? ஏனெனில், எல்லோருமே பாவ ஆத்மாக்கள் ஆவார்கள். விகாரங்களின் காரணமாகத் தான் அரக்கர்கள் என்று கூறப்படுகின்றது. நாமோ முற்றிலும் சோழிக்குச் சமமாக ஒரு காசுக்கும் உதவாதவராக இருந்தோம் என்பதை இப்பொழுது தந்தை மூலமாகப் புரிந்துள்ளீர்கள். பயன்படாத எந்த ஒரு பொருளும் நெருப்பில் எரிக்கப்பட்டு விடுகிறது. உலகத்தில் பயன்படக் கூடிய எந்த ஒரு பொருளும் இல்லை என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். அனைத்து மனிதர்களுக்குமே நெருப்பு பிடிக்கப்போகிறது. இந்த கண்களால் எதெல்லாம் பார்க்கிறீர்களோ அனைத்திற்கும் நெருப்பு பிடித்து விடும். ஆத்மாவையோ நெருப்பு பிடிக்காது. ஆத்மாவோ "இன்ஷ்யூர்" (காப்பீடு) செய்யப்பட்டது போல. ஆத்மாவை எப்பொழுதாவது இன்ஷ்யூர் செய்கிறார்களா என்ன? இன்ஷ்யூரோ சரீரத்திற்கு செய்விக்கிறார்கள். இது ஒரு நாடகம் ஆகும் என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஆத்மாவோ 5 தத்துவங்களுக்கும் மேலே இருக்கிறது. 5 தத்துவங்களால் தான் முழு உலகத்தின் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. ஆத்மாவோ உருவாக்கப்படுவதில்லை. ஆத்மாவோ என்றைக்குமே இருக்கவே இருக்கிறது. புண்ணிய ஆத்மா, பாவ ஆத்மா என்று மட்டும் ஆகிறது. 5 விகாரங்கள் காரணமாக ஆத்மா எவ்வளவு அசுத்தமாக ஆகி விடுகிறது.இப்பொழுது தந்தை பாவங்களிலிருந்து விடுவிக்க வந்துள்ளார். விகாரத்தினால் முழு நடத்தையும் கெட்டு விடுகிறது. "கேரக்டர்ஸ்" நன்னடத்தை என்று எதற்கு கூறப்படுகிறது என்பது கூட யாருக்குமே தெரியாது. பாண்டவ இராஜ்யம், கௌரவ இராஜ்யம் என்றும் பாடப்பட்டுள்ளது. இப்பொழுது பாண்டவர்கள் யார் என்பது கூட யாருக்கும் தெரியாது. நாம் ஈசுவரிய அரசாங்கத்தினர் ஆவோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தை இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வந்துள்ளார். இச்சமயத்தில் ஈசுவரிய அரசாங்கம் என்ன செய்கிறது?ஆத்மாக்களை பாவனமாக ஆக்கி தேவதையாக ஆக்குகிறது. இல்லை என்றால் பின் தேவதைகள் எங்கிருந்து வந்தார்கள் - இது யாருக்குமே தெரியாது. இதற்கு இரகசியமான அரசாங்கம் என்று கூறப்படுகிறது. இவர்களும் மனிதர்கள் தான். ஆனால் தேவதைகளாக எப்படி ஆனார்கள்? யார் ஆக்கினார்? தேவி தேவதைகளோ இருப்பதே சொர்க்கத்தில். எனவே அவர்களை சொர்க்கவாசியாக ஆக்கியது யார்? சொர்க்கவாசியிலிருந்து பிறகு நாரகவாசியாக ஆகிறார்கள். மீண்டும் நரகவாசியே சொர்க்கவாசியாக ஆகிறார்கள். இதை நீங்கள் கூட அறியாமல் இருந்தீர்கள். பின் மற்றவர்கள் எப்படி அறிந்திருக்க முடியும்? சொர்க்கம் என்று சத்யுகத்திற்கும், நரகம் என்று கலியுகத்திற்கும் கூறப்படுகிறது. இதுவும் நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். இது நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு இருப்பதே பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆவதற்கானது. ஆத்மா தான் பதீதமான (தூய்மையற்றதாக) ஆகிறது. பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்கும் இந்த தொழிலை தந்தை உங்களுக்கு கற்பித்துள்ளார். பாவனமாக ஆனீர்கள் என்றால் பாவனமான உலகிற்குச் செல்வீர்கள். ஆத்மா தான் பாவனமாக (தூய்மையாக) ஆக வேண்டும். அப்பொழுது தான் சொர்க்கத்திற்கு தகுதி உடையவராக ஆக முடியும். இந்த ஞானம் உங்களுக்கு இந்த சங்கமத்தில் தான் கிடைக்கிறது. தூய்மையாக ஆவதற்கான ஆயுதம் கிடைக்கிறது. பதீத பாவனர் என்று ஒரு பாபாவிற்குக் கூறப்படுகிறது. எங்களை பாவனமாக ஆக்குங்கள் என்று கூறுகிறார்கள். இந்த இலட்சுமி நாராயணர் சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தார்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி உள்ளார்கள். "ஷியாம் மற்றும் சுந்தர்" - இவருடைய பெயரும் இது போல வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதர்கள் அதன் பொருளைப் புரிந்து கொள்கிறார்களா என்ன? கிருஷ்ணர் பற்றிக் கூட தெளிவான விளக்கவுரை கிடைக்கிறது. இதில் இரண்டு உலகங்கள் என்றாக்கி விட்டுள்ளார்கள். உண்மையில் உலகமோ ஒன்றே ஒன்று தான். அது புதியதாகவும் மற்றும் பழையதாகவும் ஆகிறது. முதலில் சிறிய குழந்தைகள் பிறகு பெரியவர்களாக ஆகி முதியவர்களாக ஆகிறார்கள். உலகம் கூட புதியதாக இருந்து அதே உலகம் பழையதாக ஆகிறது. நீங்கள் புரிய வைப்பதற்காக எவ்வளவு தலையிலடித்துக் கொள்கிறீர்கள். உங்களுடைய இராஜாங்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? இவர்கள் கூட புரிந்திருக்கிறார்கள் அல்லவா? அறிவின் மூலமாக எவ்வளவு இனிமையானவராக ஆகி உள்ளார்கள்! யார் புரிய வைத்தது? பகவான். யுத்தங்கள் ஆகியவை பற்றிய விஷயமே கிடையாது. பகவான் எவ்வளவு அறிவாளியாக நாலேஜ் ஃபுல் (ஞானம் நிறைந்தவர்களாக) ஆக்குகிறார்! சிவனுடைய கோவிலுக்குச் சென்று வணங்குகிறார்கள். ஆனால் அவர் யார், என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. சிவ காசி விஷ்வநாத் கங்கா.. அவ்வளவு தான் கூறிக் கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். சிறிதளவும் பொருள் புரியாமல் உள்ளார்கள். புரிய வைத்தீர்கள் என்றால் நீங்கள் எங்களுக்கு என்ன புரிய வைப்பீர்கள், நாங்களோ வேத சாஸ்திரங்கள் ஆகியவை அனைத்தும் படித்துள்ளோம் என்பார்கள். இதை தாரணை செய்வதில் குழந்தைகளாகிய உங்களிலும் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். ஒரு சிலரோ மறந்து விடுகிறார்கள். ஏனெனில் முற்றிலும் கல் புத்தி உடையவராக ஆகி விட்டுள்ளார்கள். எனவே இப்பொழுது யாரெல்லாம் தங்க புத்தியாக ஆகி உள்ளார்களோ அவர்களுடைய வேலையாவது மற்றவர்களையும் தங்க புத்தியாக ஆக்குவது. கல்புத்தியினரின் செயல்களே அவ்வாறு தான் நடக்கும். ஏனெனில் அன்னம், கொக்குகளாக ஆகிறார்கள் அல்லவா? அன்னமாக இருப்பவர்கள் ஒரு பொழுதும் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. கொக்காக இருப்பவர்கள் துக்கம் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு அரக்கர்கள் என்று கூறப்படுகிறது. அடையாளம் தெரிவதில்லை. நிறைய சென்டர்களில் கூட இது போல விகாரிகள் நிறைய பேர் வந்து விடுகிறார்கள். நாம் தூய்மையாக இருக்கிறோம் என்று சாக்கு கூறுகிறார்கள். ஆனால் அது பொய். பொய்யான உலகம் என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது இருப்பது சங்கமம் ஆகும். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! யார் பொய் பேசுகிறார்களோ, பொய்யான காரியம் செய்கிறார்களோ அவர்களே மூன்றாவது நிலை அடைகிறார்கள். முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகள் உள்ளன அல்லவா? இவர் மூன்றாவது நிலையினர் ஆவார் என்பதை தந்தையால் கூற முடியும்.

 

தூய்மையினுடைய முழுமையான நிரூபணம் அளிக்க வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். நீங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து தூய்மையாக இருக்கிறீர்கள். இது இயலாத காரியம் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால் குழந்தைகளிடம் யோகபலம் இல்லாத காரணத்தினால் இவ்வளவு சுலபமான விஷயத்தைக் கூட முழுமையான வகையில் புரிய வைக்க முடியாமல் இருக்கிறார்கள். இங்கு எங்களுக்கு பகவான் படிப்பிக்கிறார் என்ற இந்த விஷயத்தை அவர்களுக்குப் புரிய வைப்பதில்லை. தூய்மை ஆகி விடும் பொழுது நீங்கள் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் அதிபதி ஆகி விடுவீர்கள் என்று அவர் கூறுகிறார். வலுவான லாட்டரி கிடைக்கிறது.நமக்கு இன்னுமே குஷி ஆகிறது. ஒரு சில குழந்தைகள் கந்தர்வ விவாகம் செய்து தூய்மையாக இருந்து காண்பிக்கிறார்கள். தேவி தேவதைகள் தூய்மையானவர்கள் அல்லவா? தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையானவராக ஒரே ஒரு தந்தை தான் உருவாக்குவார். ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்பது பற்றியும் புரிய வைத்துள்ளார். ஞானம் மற்றும் பக்தி பாதிப் பாதி ஆகும். பிறகு பக்திக்குப் பின்னால் இருப்பது வைராக்கியம். இப்பொழுது இந்த பதீதமான உலகத்தில் இருக்க வேண்டியதில்லை. இந்த ஆடையைக் களைந்து வீடு செல்ல வேண்டும். 84ன் சக்கரம் இப்பொழுது முடிவடைந்தது. இப்பொழுது நாம் சாந்தி தாமம் செல்கிறோம். முதன் முதலில் தந்தையின் விஷயத்தை மறக்கக் கூடாது. இந்த பழைய உலகம் அவசியம் முடியப்போகிறது என்பதையும் குழந்தைகள் புரிந்துள்ளார்கள். தந்தை புதிய உலகத்தை ஸ்தாபனை செய்கிறார். தந்தை அநேக முறை புதிய உலகத்தை ஸ்தாபனை செய்ய வந்துள்ளார். பிறகு நரகத்தின் விநாசம் ஆகி விடுகிறது. நரகம் எவ்வளவு பெரியதாக உள்ளது! சொர்க்கம் எவ்வளவு சிறியதாக உள்ளது! புதிய உலகத்தில் இருப்பது ஒரு தர்மம். இங்கோ எத்தனை ஏராளமான தர்மங்கள் உள்ளன.சங்கரன் மூலமாக விநாசம் என்றும் எழுதப்பட்டுள்ளது. அநேக தர்மங்களின் விநாசம் ஆகிறது. பிறகு பிரம்மா மூலமாக ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது. இந்த தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார்? பிரம்மாவோ ஸ்தாபனை செய்யவில்லை. பிரம்மா தான் பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆகிறார். என்னை பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆகுபவர்" என்று கூற மாட்டார்கள். பாவனமாக இருக்கும் பொழுது இலட்சுமி நாராயணர் என்ற பெயர் உள்ளது. (பதீதமாக) தூய்மையற்று இருக்கும் பொழுது பிரம்மா என்ற பெயர் உள்ளது. பிரம்மாவின் பகல் மற்றும் பிரம்மாவின் இரவு. அவருக்கு (சிவ பாபாவிற்கு) அனாதி (கிரியேட்டர்) படைப்பவர் என்று கூறப்படுகிறது. ஆத்மாக்களோ இருக்கவே இருக்கிறார்கள். ஆத்மாக்களின் படைப்பு கர்த்தா என்று கூற மாட்டார்கள். எனவே அனாதி என்று கூறப்படுகிறது. தந்தை அனாதி எனவே ஆத்மாக்களும் அனாதி ஆவார்கள். நாடகமும் அனாதி ஆகும். இது அனாதி அமைந்த அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். சுயம் ஆத்மாவிற்கு சிருஷ்டி சக்கரத்தின் முதல், இடை, கடையின் கால அளவு பற்றிய ஞானம் கிடைக்கிறது. இதை அளித்தது யார்? தந்தை ஆவார். நீங்கள் 21 பிறவிகளுக்கு தலைவனுடையவர் ஆகி விடுகிறீர்கள். பிறகு இராவணனின் இராஜ்யத்தில் அனாதையாக ஆகி விடுகிறீர்கள். பிறகு கேரக்டர்ஸ்" நன்னடத்தை கெட்டு விட ஆரம்பிக்கிறது. விகாரங்கள் உள்ளன அல்லவா? மனிதர்கள் நரகம் சொர்க்கம் எல்லாமே ஒன்றாக நடக்கும் என்று நினைக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கப்படுகிறது! இப்பொழுது நீங்கள் மறைமுகமாக உள்ளீர்கள். சாஸ்திரங்களில் என்னவெல்லாம் எழுதி விட்டுள்ளார்கள்! எவ்வளவு நூலுருண்டை சிக்கலாக ஆகி விட்டுள்ளது. நாங்கள் எதற்கும் உதவாதவர்களாக இருக்கிறோம் என்று தந்தையைத் தான் அழைக்கிறார்கள். வந்து தூய்மையாக ஆக்கி எங்கள் நடத்தைகளை திருத்துங்கள். உங்களது நடத்தை எவ்வளவு திருந்துகிறது. ஒரு சிலரோ திருந்துவதற்குப் பதிலாக இன்னுமே கெட்டு விடுகிறார்கள். நடத்தை மூலமாகவே தெரிய வந்து விடுகிறது. இன்று அன்னம் என்று அழைத்துக் கொள்கிறார்கள். நாளைக்கு கொக்காக ஆகி விடுகிறார்கள். தாமதம் ஏற்படுவதில்லை. மாயை கூட மிகவும் ரகசியமாக உள்ளது. இங்கு ஏதாவது தென்படுகிறதா என்ன? வெளியில் வெளிப்படும் பொழுது தென்படுகிறது. பிறகு ஆச்சரியப்படும் வகையில் கேட்டார்கள்.. ஓடி விடுபவர்களாக ஆகி விடுகிறார்கள். எவ்வளவு பலமாக விழுந்து விடுகிறார்கள் என்றால் எலும்புகளே நொறுங்கி விடுகின்றன. இந்திர பிரஸ்தத்தின் விஷயம் ஆகும். தெரிந்தே விடுகின்றது. அப்பேர்ப்பட்டவர்கள் மீண்டும் சபையில் வரக் கூடாது. சிறிதளவு ஞானம் கேட்டிருந்தார்கள் என்றால் சொர்க்கத்தில் வந்தே விடுகிறார்கள். ஞானம் அழிந்து போவதில்லை. முயற்சி (புருஷார்த்தம்) செய்து உயர்ந்த பதவியை அடையுங்கள் என்று தந்தை கூறுகிறார். விகாரத்தில் சென்றார்கள் என்றால் பதவி கீழானதாக ஆகி விடும். இந்த சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தி எவ்வளவு மாற்றம் அடைகிறது.பிறகும் மாயை அவசியம் ஏமாற்றுகிறது இச்சா மாத்ரம் அவித்யா - இச்சை என்றால் என்னவென்றே தெரியாத நிலை. ஏதாவது விருப்பம் (இச்சை) கொண்டார்கள் என்றால் அவ்வளவு தான். ஒரு காசுக்கும் உதவாதவர்களாக ஆகி விடுகிறார்கள். நல்ல நல்ல மகாரதிகளை கூட மாயை ஏதாவதொரு விதத்தில் ஏமாற்றி விடுகிறது. பிறகு அவர்களால் இதயத்தில் இடம் பெற முடியாது.ஒரு சில குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்றால் தந்தையைக் கூட முடித்து விடுவதற்கு (கொன்று விடுவதற்கு) தாமதிப்பதில்லை. குடும்பத்தைக் கூட அழித்து விடுகிறார்கள். மகான் பாவ ஆத்மாக்களாக இருக்கிறார்கள். இராவணன் என்னவெல்லாம் செய்வித்து விடுகிறான்! மிகவும் வெறுப்பு ஏற்படுகிறது. எவ்வளவு அசுத்தமான உலகமாக உள்ளது! இதன் மீது ஒரு பொழுதும் மனதை ஈடுபடுத்தக் கூடாது. தூய்மையாக ஆவதற்கு மிகுந்த துணிவு வேண்டும். உலகத்தின் அரசாட்சி என்ற பரிசு பெறுவதற்கு தூய்மை முக்கியமானது. தூய்மை காரணமாக எவ்வளவு குழப்பங்கள் ஏற்படுகின்றன! ஹே! பதீத பாவனரே வாருங்கள் என்று காந்தியும் கூறி கொண்டிருந்தார். சரித்திரம் மற்றும் பூகோளம் மீண்டும் திரும்ப நடைபெறும் (ரிபீட்) என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். எல்லோரும் திரும்ப வந்தே ஆக வேண்டும். அப்பொழுது தான் ஒன்றாகச் செல்ல முடியும். தந்தையும் கூட அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகத் தானே வந்துள்ளார் அல்லவா? தந்தை வராமல் யாருமே திரும்பிச் செல்ல முடியாது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மாயையின் ஏமாற்றத்திலிருந்து தப்பித்திருக்க எந்த ஒரு விதமான இச்சையும் (விருப்பம்) கொள்ளக் கூடாது. இச்சா மாத்ரம் அவித்யா (ஆசை என்றால் என்னவென்றே அறியாதவராக) ஆக வேண்டும்.

 

2. உலக அரசாட்சியின் பரிசு பெறுவதற்காக முக்கியமானது தூய்மை ஆகும். எனவே தூய்மையானவராக ஆவதற்கான துணிவு கொள்ள வேண்டும். தங்களது நடத்தைகளை (கேரக்டர்ஸ்) திருத்த வேண்டும்.

 

வரதான் :

கருணையின் பாவனை மூலம் நிமித்த உணர்வோடு சேவை செய்யக் கூடிய அனைத்து பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆகுக !

 

தற்சமயத்தில் அனைத்து ஆத்மாக்களும் களைப்படைந்து தன்னம்பிக்கை இழந்து கருணையை யாசிக்கிறார்கள். ஆகையால் வள்ளலின் குழந்தைகளாகிய நீங்கள், தன்னுடைய சகோதர, சகோதரிகள் மீது கருணை மனமுடையவர் ஆகுங்கள். யார் எவ்வளவு தீயவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கருணையின் உணர்வு இருந்தது என்றால், ஒருபொழுதும் வெறுப்பு, பொறாமை மற்றும் கோபத்தின் உணர்வு வராது. கருணையின் பாவனை எளிதாகவே நிமித்த உணர்வை வெளிப்படுத்தி விடுகிறது. பற்றுதலுடன் கூடிய கருணை அல்ல, ஆனால் உண்மையான கருணை, பற்றுதலிலிருந்து விடுபட்டவராக மாற்றி விடுகிறது. ஏனெனில் அதில் தேகத்தின் உணர்வு இல்லை.

 

சுலோகன் :

மற்றவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது தான் தன்னுடைய கணக்கை சேமிப்பு செய்வதாகும்.

 

ஓம்சாந்தி