05.11.23    காலை முரளி            ஓம் சாந்தி  10.03.96      பாப்தாதா,   மதுபன்


செய்பவர் மற்றும் செய்விப்பவரின் நினைவு மூலம் கர்மாதீத் ஸ்திதியின் அனுபவம்

இன்று கல்யாண்காரி பாபா தம் துணைவர்களாகிய கல்யாண்காரி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன், அன்போடு உலக நன்மையின் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய துணைவர்களைப் பார்த்து பாப்தாதா, ஆஹா துணை யிலிருக்கும் குழந்தைகளே, ஆஹா! என்ற பாடலைப் பாடிக்கொண்டே இருக்கிறார். நீங்கள் அனைவரும் கூட ஆஹா ஆஹா என்ற பாடலைப் பாடிக் கொண்டே இருக்கிறீர்கள் இல்லையா? இன்று பாப்தாதா நாலாபுறத்தின் சேவையின் வேகத்தைப் பார்த்தார். அதோடு சுய புருஷார்த் தத்தின் வேகத்தையும் பார்த்தார். அப்போது சேவை மற்றும் சுய புருஷார்த்தம் இரண்டைப் பற்றியும் என்ன பார்த்திருப்பார்? உங்களுக்குத் தெரியுமா? சேவையின் வேகம் தீவிரமாக உள்ளதா, அல்லது சுய புருஷார்த்தத்தின் வேகம் தீவிரமாக உள்ளதா? என்னவாக உள்ளது? இரண்டின் சமநிலை உள்ளதா? இல்லையா? அப்போது உலக மாற்றத்திற்கான ஆத்மாக்களுக்கு மேலும் இயற்கைக்கு ஆசிர்வாதம் எப்போது கிடைக்கும்? ஏனென்றால் சமநிலை மூலம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆசிர்வாதம் மற்றவர்களுக்குக் கிடைக்கும். ஆக, வித்தியாசம் ஏன்? என்ன சொல்லிக் கொள்கிறீர்கள்? கர்மயோகி என்றா, வெறும் யோகி என்றா? நீங்கள் கர்மயோகி தான் இல்லையா? உறுதியா? ஆக, சேவை கூட கர்மம் தான் இல்லையா? கர்மத்தில் வருகிறீர்கள், சொல்கிறீர்கள் அல்லது திருஷ்டி கொடுக்கிறீர்கள், கோர்ஸ் எடுக்கிறீர்கள், மியுசியத்தில் புரிய வைக்கிறீர்கள் - இவை அனைத்தும் சிரேஷ்ட கர்மம். அதாவது சேவை. ஆக, கர்மயோகி என்றால் கர்மத்தின் சமயத்திலும் யோகத்தின் சமநிலை. ஆனால் நீங்களே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் - சமநிலை குறைந்து போய் விடுகிறது. இதற்கான காரணம் என்ன? நல்லபடியாக அறிந்து கொண்டும் இருக்கிறீர்கள். புதிய விஷயம் கிடையாது. மிகப் பழைய விஷயம். பாப்தாதா பார்த்தார் - சேவை அல்லது கர்மம் மற்றும் சுய புருஷார்த்தம், அதாவது யோகயுக்த் நிலை. ஆக, இரண்டின் சமநிலை வைப்பதற்காக விசேஷமாக ஒரு சொல்லை மட்டும் நினைவு வையுங்கள் - அது என்ன? பாபா செய்விப்பவர் மற்றும் நான் ஆத்மா (நான் இன்னார் இல்லை) ஆத்மா செய்பவன். ஆக, செய்பவர்-செய்விப்பவர் - இந்த இரண்டு சொற்கள் உங்கள் சம நிலையை மிகவும் சுலபமாக ஆக்கும். சுய புருஷார்த்தத்தின் சமநிலை அல்லது வேகம் ஒரு போதும் குறைவ தில்லை. அதன் காரணம் என்ன? செய்பவர் என்பதற்கு பதிலாகத் தன்னை செய்விப்பவர் எனப் புரிந்து கொள் கிறீர்கள். நான் செய்து கொண்டிருக்கிறேன். எந்த ஒரு மாயாவும் எந்த விதத்தில் வந்தாலும் அது வரக்கூடிய வழி (கேட்) எது? மாயாவின் அனைத்திலும் நல்ல சகஜமான வாசல் எது என அறிந்தே இருக்கிறீர்கள் - நான் என்பது தான் அது. ஆக, இந்த கேட் இப்போது முழுமையாக மூடப்பட வில்லை. அந்த மாதிரி மூடு கிறீர்கள் - மாயா லேசாகத் திறந்து விடுகிறது மற்றும் உள்ளே வந்து விடுகிறது. நான் செய்பவன் என்றால் செய்விப்பவர் அவசியம் நினைவில் வருவார். செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் செய்விப்பவர் பாபா. செய்விப்பவர் இல்லாமல் செய்பவர் ஆக முடியாது. இரட்டை ரூபத்தில் செய்விப்பவரின் நினைவு இருக்க வேண்டும். ஒன்று, பாபா செய்விப்பவர். மற்றும் இரண்டாவது, நான் ஆத்மாவும் இந்தக் கர்மேந்திரியங்களால் கர்மத்தைச் செய்விப்பவன். இதனால் என்ன ஆகும் - கர்மம் செய்யும் போதும் கர்மத்தின் நல்ல அல்லது கெட்ட பிரபாவத்தில் வர மாட்டோம். இதைத் தான் கர்மாதீத் அவஸ்தா எனச் சொல்வது.

உங்கள் அனைவரின் லட்சியம் என்ன? கர்மாதீத் ஆக வேண்டும் என்பது தான் இல்லையா? அல்லது கொஞ்சம்-கொஞ்சம் கர்ம பந்தனம் இருந்தால் பரவாயில்லையா? கர்ம பந்தனம் மிச்சம் இருக்க வேண்டுமா, அல்லது இருக்கக் கூடாதா? கர்மாதீத் ஆக வேண்டுமா? பாபாவிடம் அன்பு உள்ளது என்பதன் அடையாளம் - கர்மாதீத் ஆவது தான். ஆக, செய்விப்பவர் ஆகி (கர்மேந்திரி யங்களால்) கர்மத்தைச் செய்யுங்கள், செய்வியுங்கள், கர்மேந்திரியங்கள் உங்கள் மூலம் செய்விக்கக் கூடாது. ஆனால் நீங்கள் கர்மேந்திரியங்கள் மூலம் செய்வியுங்கள். முற்றிலும் தன்னைத் தனியாக (பற்றற்ற, விலகிய நிலையில்) புரிந்து கொண்டு கர்மம் செய்விக்க வேண்டும். இந்த உணர்வு (கான்ஷியஸ்நெஸ்) இமர்ஜ் ரூபத்தில் இருக்க வேண்டும். மர்ஜ் ரூபத்தில் அன்று. மர்ஜ் ரூபத்தில் சில நேரம் செய்விப்பவருக்கு பதிலாக கர்மேந்திரியங்களின், அதாவது மனதின், புத்தியின், சம்ஸ்காரத்தின் வசமாகி விடுகிறீர்கள். காரணம் என்ன? செய்விப்பவனாகிய ஆத்மா நான், நான் மாலிக், விசேஷ ஆத்மா, மாஸ்டர் சர்வசக்திவான் ஆத்மா நான், இந்த ஸ்மிருதி எஜமான் தன்மையின் ஸ்மிருதியைக் கொடுக்கும். இல்லையென்றால் சில நேரம் மனம் உங்களை நடத்தும் மற்றும் சில நேரம் நீங்கள் மனதை நடத்துவீர்கள். இதனால் சதா இயல்பான மன்மனாபவ நிலை இருக்காது. நான் முற்றிலும் தனியாக இருக்கிறேன், வெறுமனே தனியாக இல்லை. ஆனால் மாலிக்காக இருக்கிறேன். பாபாவை நினைவு செய்வதால் நான் பாலகன். மற்றும் நான் ஆத்மா செய்விப்பவன் எனும் போது மாலிக். இப்போது இந்த அப்பியாசம் கவனத்தில் குறைவாக உள்ளது. சேவையில் மிக நன்றாக ஈடுபட்டிருக்கிறீர்கள். ஆனால் லட்சியம் என்ன? சேவாதாரி ஆவதற்கா அல்லது கர்மாதீத் ஆவதற்கா? அல்லது இரண்டும் சேர்ந்தாற்போல் ஆவீர்களா? அப்பியாசம் பக்காவாக உள்ளதா? அவ்வப்போது கொஞ்ச நேரத்துக்கு இந்த அப்பியாசத்தைச் செய்ய முடியுமா? தனியாக ஆக முடியுமா? அல்லது விலக (டிட்டேச்) முடியாத அளவுக்கு ஒன்றி (அட்டேச்) விட்டீர்களா? எவ்வளவு நேரத்தில் விலக முடியும்? 5 நிமிடம் வேண்டுமா அல்லது 5 நொடி வேண்டுமா? ஒரு நொடியில் ஆக முடியுமா?

பாண்டவர்கள் ஒரு நொடியில் முற்றிலும் தனியாகி விட முடியுமா? ஆத்மா தனி மாலிக் மற்றும் கர்மேந்திரியங்கள் என்ற வேலைக்காரர்கள் தனி. இந்த அப்பியாசம் எப்போது விரும்புகிறீர்களோ, அப்போது நடைபெற வேண்டும். நல்லது. அவ்வப்போது ஒரு விநாடியில் விலகியவராகவும் பாபாவுக்கு அன்பானவராகவும் ஆகி விடுங்கள். சக்திசாலி அப்பியாசம் செய்யுங்கள் - நான் விலகியவனாகவே இருக்கிறேன். இந்தக் கர்மேந்திரி யங்கள் நம்முடைய துணைவர்கள். ஆனால் நான் விலகியும் அன்பாகவும் இருக்கிறேன். இப்போது ஒரு விநாடியில் அப்பியாசத்தை மீண்டும் செய்யுங்கள். (டிரில்) சகஜமாக உள்ளதா, கஷ்டமாகத் தோன்றுகிறதா? சகஜமாக உள்ளதென்றால் நாள் முழுவதும் கர்மம் செய்யும் போது இந்த ஸ்மிருதியை இமர்ஜ் செய்யுங்கள், அப்போது கர்மாதீத் ஸ்திதியை சகஜமாக அனுபவம் செய்வீர்கள். ஏனென்றால் சேவை அல்லது கர்மத்தை உங்களால் விட முடியுமா? விட்டு விடுவீர்களா என்ன? செய்தே ஆக வேண்டும். தபஸ்யாவில் அமர்வதும் கர்மம் தான். ஆக, கர்மம் இல்லாமல் அல்லது சேவை இல்லாமலோ இருக்க முடியாது. இருக்க வேண்டியதும் இல்லை. ஏனென்றால் சமயம் குறைவாக உள்ளது. மற்றும் சேவை இப்போதும் அதிகமாக உள்ளது. சேவையின் வடிவம் மாறியுள்ளது. ஆனால் இப்போதும் கூட அநேக ஆத்மாக்களுக்குப் புகார் உள்ளது. அதனால் சேவை மற்றும் சுய புருஷார்த்தம் இரண்டின் சமநிலை வையுங்கள். சேவையில் மிகவும் பிஸியாக இருந்தேன், அதனால் சுய புருஷார்த்தம் குறைவாகி விட்டது என்று அப்படி இருக்கக் கூடாது. இன்னும் கூட சேவையில் சுய புருஷார்த்தத்தின் கவனம் அதிகம் இருக்க வேண்டும். ஏனென்றால் மாயா வருவதற்கான இடைவெளி சேவையில் அநேக விதமாக உள்ளது. பெயர் தான் சேவை, ஆனால் அதில் சுயநலம் உள்ளது. தன்னை முன்னேற்ற வேண்டும், ஆனால் முன்னேறச் செய்து கொண்டு, சமநிலையை மறந்து விடக் கூடாது. ஏனென்றால் சேவையில் தான் சுபாவம், சம்பந்தத்தின் விஸ்தாரம் உள்ளது. மேலும் மாயா வாய்ப்பையும் எடுத்துக் கொள்கிறது. கொஞ்சம் சமநிலை குறைந்தது மற்றும் மாயா புதுப்புது ரூபத்தை தாரணை செய்கிறது. பழைய ரூபத்தில் வராது. புதுப்புது ரூபத்தில் புதுப்புது பரிஸ்திதியின் ரூபத்தில், தொடர்பின் ரூபத்தில் வருகிறது. ஆக, தனியாக சேவையை விட்டு, பாப்தாதா அமர வைக்கிறார், ஒரு மாதம் அமர வைத்தால், 15 நாள் அமர வைத்தால் கர்மாதீத் ஆகி விடுவீர்களா? ஒரு மாதம் எதுவும் செய்ய வேண்டாம், அமர்ந்தே இருங்கள், உண்பதற் கும் ஒரு வேளை சமையல் செய்யுங்கள், போதும். பிறகு கர்மாதீத் ஆகி விடுவீர்களா? ஆக மாட்டீர்களா?

சமநிலையின் அப்பியாசம் இல்லை என்றால் எவ்வளவு தான், ஒரு மாதம் என்ன, இரண்டு மாதம் கூட அமர்ந்து விடுங்கள், ஆனால் மனம் அமராது. உடல் அமர்ந்து விடும். அமர்த்தி வைக்க வேண்டியது மனம் தானே தவிர உடலை மட்டும் இல்லை. உடலோடு கூடவே மனதையும் அமர்த்தி வைக்க வேண்டும். பாபாவும் நானும் என்பது அமர்ந்து விட வேண்டும், வேறு யாரும் இல்லை. அப்போது ஒரு மாதம் அந்த மாதிரி தபஸ்யா செய்ய முடியுமா, அல்லது சேவை நினைவு வருமா? பாப்தாதா மற்றும் டிராமா தென்பட்டுக் கொண்டே இருக்கிறார்களா, நாளுக்கு நாள் சேவை அதிகரிக்கத் தான் வேண்டும். பிறகு எப்படி அமர்ந்து விடுவீர்கள்? எது ஒரு வருடத்துக்கு முன்னால் உங்களுடைய சேவையாக இருந்ததோ, மற்றும் இந்த வருடம் என்ன சேவை செய்தீர்களோ, அது பெரிதாகியிருக்கிறதா அல்லது குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளது இல்லையா? விரும்பாமலே சேவையின் பந்தனத்தில் கட்டுண்டு இருக்கிறீர்கள். ஆனால் சமநிலையுடன் சேவையின் பந்தனம், பந்தனம் இல்லை, சம்பந்தமாக இருக்கும். எப்படி லௌகிக சம்பந்தத்தில் புரிந்து கொள்கிறீர்கள் -- ஒன்று கர்ம பந்தனம் மற்றும் சேவையின் சம்பந்தம் என்பது வேறு. ஆக, பந்தனத்தின் அனுபவம் இருக்காது, சேவையின் இனிய சம்பந்தமாக இருக்கும். ஆக, என்ன கவனம் கொடுப்பீர்கள்? சேவை மற்றும் சுய புருஷார்த்தத்தின் சமநிலை. சேவையின் அதிகபட்சத்தில் செல்ல வேண்டாம். நான் தான் செய்ய வேண்டும், நான் தான் செய்ய முடியும் - அப்படி இல்லை. செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார். நான் நிமித்த மாத்திரம் இருந்து செய்பவன். ஆக, பொறுப்பு இருந்த போதிலும் களைப்பு குறைந்து விடும். அநேகம் குழந்தைகள் சொல்கிறார்கள் -- அதிக சேவை செய்து விட்டேன், களைத்துப் போகவும் இல்லை, தலை பாரமாகவும் இல்லை. ஆக, தலை பாரமாகாது. இன்னும் கூட செய்விப்பவர் பாபா மிக நன்றாக மசாஜ் செய்வார். தலை (மூளை) இன்னும் ஃப்ரெஷ் ஆகி விடும் (புத்துணர்ச்சி பெறும்). களைப்பு ஏற்படாது. அதிகப்படியான சக்தி வரும். விஞ்ஞானத்தின் மருந்துகளால் சக்தி வர முடியும் என்றால் பாபாவின் நினைவினால் ஆத்மாவுக் குள் சக்தி வராதா என்ன? மேலும் ஆத்மாவுக்குள் சக்தி வந்ததென்றால் சரீரத்தில் பிரபாவம் தானாகவே ஏற்படும். அனுபவஸ்தராகவும் இருக்கிறீர்கள். எப்போதாவது அனுபவம் ஏற்படுகிறது. பிறகு போகப்போக லைன் மாறி விடுகிறது மற்றும் அது தெரிவதில்லை. எப்போது ஏதாவது சோர்வு, களைப்பு அல்லது தலை பாரமாகி விடுகிறது இல்லையா, பிறகு ஆவேசம் வருகிறது, என்னவாயிற்று, ஏன் ஆயிற்று? ஆனால் ஒரே சொல் - செய்பவர் மற்றும் செய்விப்பவர் என்பதை நினைவு வையுங்கள். கஷ்டமா? அல்லது சுலபமா? ஹாஞ்ஜீ சொல்லுங்கள். நல்லது.

இப்போது 9 லட்சம் பிரஜைகளை உருவாக்கி விட்டீர்களா? வெளி நாடுகளில் எவ்வளவு உருவாக்கி யிருக்கிறீர்கள்? 9 லட்சம் உருவாக்கி விட்டீர்களா? மற்றும் பாரதத்தில் உருவாக்கி விட்டீர்களா? உருவாகவில்லையா? ஆக, நீங்கள் தாம் சமாப்திக்கான முள்ளை முன்னால் செல்ல விடாமல் செய்கிறீர்கள். சமநிலை வையுங்கள். வைரவிழா (டைமண்ட் ஜுபிலி) இல்லையா? எனவே நன்றாக சேவை செய்யுங்கள். ஆனால் சமநிலை வைத்து சேவை செய்வீர்களானால் பிரஜைகள் விரைவாக உருவாகி விடுவார்கள். நேரம் பிடிக்காது. இயற்கையும் கூட அதிகம் களைத்துப் போய் விட்டது. ஆத்மாக்களும் நம்பிக்கையற்றவர்களாக ஆகி விட்டார்கள். மற்றும் நம்பிக்கை இழக்கும் போது யாரை நினைவு செய்கிறார்கள்? பகவான், தந்தையை நினைவு செய்கிறார்கள். ஆனால் அவரைப் பற்றிய முழுமையான அறிமுகம் இல்லாத காரணத்தால் தேவி-தேவதைகளாகிய உங்களை அதிகம் நினைவு செய்கிறார்கள். ஆக, நம்பிக்கை இழந்த ஆத்மாக்களின் அழைப்பு உங்களுக்குக் கேட்க வில்லையா? கேட்க வருகிறதா அல்லது தன்னுடைய போதையிலேயே இருக்கிறீர்களா? இரக்க மனம் உள்ளவர்கள் தாமே நீங்கள்? பாபாவையும் கூட என்ன சொல்கிறீர்கள்? அவர் கருணை உள்ளம் கொண்டவர் எனச் சொல்கிறீர்கள் இல்லையா? மற்ற தர்மங்களைச் சேர்ந்தவர்கள் நிச்சயமாகக் கருணை வேண்டுகிறார்கள். சுகம் கேட்பதில்லை. ஏனென்றால் கருணை அனை வருக்குமே தேவைப்படுகிறது. அதை யார் கொடுப்பார்கள்? கொடுப்பவர்கள் நீங்கள் தாம் இல்லையா? அல்லது பெற்றுக் கொள்பவர்களா? பெற்றுக் கொண்டு கொடுப்பவர்கள். நீங்கள் கொடுக்கக்கூடிய வள்ளலின் குழந்தைகள் இல்லையா? எனவே தங்கள் சகோதர-சகோதரிகள் மீது இரக்க மனம் உள்ளவர் ஆகுங்கள். இரக்க மனம் உள்ளவராகி சேவை செய்வீர்களானால் அதில் நிமித்த உணர்வு தானாகவே இருக்கும். யார் மீதும், அவர் எவ்வளவு தான் கெட்டவராக இருந்தாலும் உங்களுக்கு அந்த ஆத்மா மீது இரக்கம் இருக்குமானால் உங்களுக்கு அவர் மீது ஒரு போதும் வெறுப்பு அல்லது பொறாமை அல்லது கோபத்தின் பாவனை வராது. இரக்க பாவனை எளிதாக நிமித்த பாவனையை இமர்ஜ் செய்து விடும். சும்மா பெயருக்கு இரக்கம் என்பதில்லை, உண்மையான இரக்கம். பெயருக்கு இரக்கமும் இருக்கிறது, எந்த ஓர் ஆத்மாவுக்காகவும் உள்ளுக் குள் பற்றுதல் உள்ளது, எந்த ஒரு தேக உணர்வும் இல்லை, ஆத்மா, ஆத்மா மீது இரக்கம் கொள்கிறது. தேக அபிமானம் அல்லது தேகத்தின் எந்த ஒரு கவர்ச்சியின் பெயர்-அடையாளமும் கிடையாது. சிலருக்குப் பற்றுதல் தேகத்தின் மீது உள்ளது மற்றும் சிலருக்கு குணங்களின் மீது, விசேத்தன்மை மீது உள்ளது. ஆனால் விசேத்தன்மையின் குணத்தைத் தருபவர் யார்? ஆத்மாவோ பிறகும் கூட எவ்வளவு தான் பெரியவராக இருந்தாலும் பாபாவிடம் பெறுபவர் தாம். தன்னுடையது இல்லை, பாபா கொடுத்திருக்கிறார். அப்போது ஏன் நேரடியாக வள்ளலிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடாது? எனவே சொல்லப்படுகிறது - சுயநலத்தின் இரக்கம் இல்லை. குழந்தைகள் அநேகர் அந்த மாதிரி குறும்புகளைக் காட்டு கின்றனர் - சுயநலம் இருக்கும், ஆனால் எனக்கு இரக்கம் வருகிறது எனச் சொல்வார்கள். வேறு எதுவும் இல்லை, ஆனால் வெறும் இரக்கம் தான். ஆனால் சோதித்துப் பாருங்கள் - சுயநலமற்ற இரக்கமா? பற்றற்ற இரக்கமா? எந்த ஒரு பிராப்தியின் காரணத்தாலோ இரக்கம் இல்லையே? பிறகு சொல்வார்கள், மிகவும் நல்லவர் இல்லையா? அதனால் கொஞ்சம் என்பார்கள். கொஞ்சம் என்பதற்கும் அனுமதி இல்லை. கர்மாதீத் ஆக வேண்டும் என்றால் இந்த அனைத்துத் தடைகளும் உள்ளன. அவை தேக உணர்வில் கொண்டு வந்து விடும். நல்லது, ஆனால் ஆக்குபவர் யார்? நல்லதை தாராளமாக தாரணை செய்யுங்கள். ஆனால் நல்லதின் மீது பிரபாவம் ஆகாதீர்கள். விலகியும் பாபாவுக்கு அன்பானவராகவும் இருங்கள். யார் பாபாவுக்கு அன்பானவர்களோ, அவர்கள் சதா பாதுகாப்பாக இருப்பார்கள். புரிந்ததா?

சேவையை அதிகரிக்கிறீர்கள் என்றால், அதிகரிக்கத் தான் வேண்டும். அப்போது ஸ்தாபனை யையும் அருகில் கொண்டு வர வேண்டுமா இல்லையா? யார் கொண்டு வருவார்கள்? பாபா கொண்டு வருவாரா? அனைவரும் கொண்டு வருவார்களா? துணைவர்கள் இல்லையா? குழந்தைகள் உங்கள் துணை இல்லாமல் தனியாக பாபாவும் எதுவும் செய்ய இயலாது. பாருங்கள், பாபா புரிய வைக்க வேண்டுமானாலும் சரீரத்தின் துணையை எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது. சரீரத்தின் துணை இல்லாமல் பேச முடியுமா? பழைய வண்டியாக இருந்தாலும் சரி, நல்ல வண்டியாக இருந்தாலும் சரி, ஆதாரமோ எடுக்கத் தான் வேண்டி உள்ளது. ஆதாரம் இல்லாமல் செய்ய இயலாது. பிரம்மா பாபாவின் துணையை எடுத்துக் கொண்டுள்ளார் இல்லையா? அதனால் தான் பிராமணர்கள் நீங்கள் உருவானீர்கள். பிரம்மாகுமார் எனச் சொல்லிக் கொள்கிறீர்கள். ஏனென்றால் நிராகார் பாபாவுக்கும் கூட சாகார் பாபாவின் ஆதாரம் எடுக்க வேண்டி உள்ளது. எப்படி சாகார் பிரம்மாவின் ஆதாரம் எடுத்தாரோ, அது போல் இப்போதும் பிரம்மாவின் அவ்யக்த ஃபரிஸ்தாவின் ரூபத்தில் ஆதாரம் எடுக்காமல் உங்களைப் பாலனை செய்ய முடியாது. சாகாரத் தில் எடுத்தாலும் சரி, ஆகார ரூபத்தில் எடுத்தாலும் சரி, ஆனால் ஆத்மாவின் ஆதாரம், துணையை எடுக்க வேண்டியதாகத் தான் உள்ளது. அவ்வாறே அவர் சர்வ சக்திவான். மந்திரவாதிகள் விநாசி விளையாட்டை ஒரு விநாடியில் காண்பிக்க முடியும் என்றால் சர்வ சக்திவான் என்ன விரும்புகிறாரோ, அதைச் செய்ய முடியாதா என்ன? செய்ய முடியுமா? அவ்வப்போது விநாசத்தைக் கொண்டு வர முடியுமா? தனியாகக் கொண்டு வர முடியுமா? தனியாகக் கொண்டு வர முடியாது. சர்வ சக்திவானாகவும் இருக்கிறார். ஆனால் துணையில் இருக்கும் உங்களுடைய சம்பந்தத்தில் கட்டுப் பட்டவராக இருக்கிறார். ஆக, பாபாவுக்கு உங்கள் மீது எவ்வளவு அன்பு! செய்யக்கூடிய வராக இருக்கலாம், ஆனால் செய்ய முடியாது. மந்திரக்கோலைச் சுழற்ற முடியாதா என்ன? ஆனால் பாபா சொல்கிறார் -- இராஜ்ய அதிகாரியாக யார் ஆவார்? நீங்கள் ஆவீர்கள். ஸ்தாபனையோ செய்தாயிற்று, விநாசமும் செய்தாயிற்று, ஆனால் இராஜ்யம் யார் செய்வார்? நீங்கள் இல்லாமல் காரியம் நடக்குமா? எனவே பாபாவுக்கு உங்கள் அனைவரையும் கர்மாதீத் ஆக்கியே தீர வேண்டும். ஆகத் தான் வேண்டுமா அல்லது பாபா வலுக்கட்டாயமாக ஆக்க வேண்டுமா? பாபா செய்விக்க வேண்டும் மற்றும் நீங்கள் அனைவரும் ஆகத் தான் வேண்டும். இது தான் இனிய டிராமா. டிராமா பிடித்திருக்கிறது இல்லையா? அல்லது அவ்வப்போது சலிப்படைந்து விடுகிறீர்களா? என்ன இது (இந்த டிராமா) இப்படி உருவாக்கப் பட்டுள்ளது இது மாற வேண்டும் - இது போல் யோசிக்கிறீர்களா? பாபாவும் சொல்கிறார் - ஏற்கனவே உருவாக்கப்பட்ட டிராமா, இது மாற முடியாது. ரிப்பீட் ஆக வேண்டும். ஆனால் மாறாது. டிராமா வில் இந்தக் கடைசிப் பிறவியில் உங்களுக்கு சக்திகள் இருக்கின்றன. டிராமா தான், ஆனால் டிராமாவில் இந்த சிரேஷ்ட பிராமணப் பிறவியில் அதிகமாகவே சக்திகள் கிடைத்துள்ளன. பாபா வில் (உயில்) செய்துள்ளார். அதனால் வில் பவர் உள்ளது. ஆக, எந்த வார்த்தையை நினைவில் வைப்பீர்கள்? செய்பவர்-செய்விப்பவர். பக்காவா, அல்லது விமானத்தில் போகும் போது மறந்து போவீர்களா? மறக்கக் கூடாது.

இப்போது மீண்டும் தங்களை சரீரத்தின் பந்தனத்தில் இருந்து விலகிய கர்மாதீத் நிலை, கர்மம் செய்வித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் விலகிய நிலையில், பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் விடுபட்ட நிலையில். எஜமான் மற்றும் பாபா மூலம் நிமித்த ஆத்மா நான். இந்த ஸ்மிருதியில் மீண்டும் மனம்-புத்தியை நிலை நிறுத்துங்கள். (டிரில்). நல்லது.

நாலாபுறமும் உள்ள சதா சேவையின் ஊக்கம்-உற்சாகத்தில் இருக்கக் கூடிய சேவாதாரி ஆத்மாக் களுக்கு, சதா சுய புருஷார்த்தம் மற்றும் சேவை இரண்டிலும் சமநிலை வைக்கக் கூடிய ஆனந்தம் நிறைந்த ஆத்மாக் களுக்கு, சதா சுயநலமற்ற, இரக்க மனம் உள்ளவராகி, சர்வ ஆத்மாக் களுக்காகவும் உண்மையான கருணை காட்டக் கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா ஒரு விநாடியில் தன்னை, கர்ம பந்தனம் அல்லது அநேக ராயல் பந்தனங்களில் இருந்து விடுவித்துக் கொள்ளக் கூடிய தீவிர புருஷார்த்தி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

வரதானம்:
கீழ்ப்படிதலுள்ளவர் (கட்டளைப்படி நடப்பவர்) ஆகி பாபாவின் உதவி மற்றும் ஆசிர்வாதங்களை அனுபவம் செய்யக்கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.

பாபாவின் கட்டளை - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். ஒரு பாபா மட்டுமே உலகம். எனவே மனதில் ஒரு பாபா தவிர வேறெதுவும் நிறைந்திருக்கக் கூடாது. ஒரே வழி, ஒரே பலம், ஒரே நம்பிக்கை எங்கே ஒருவர் இருக்கிறாரோ, அங்கே ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி இருக்கும். அவர்களுக்கு எந்த ஒரு பரிஸ்திதியையும் கடந்து செல்வது சுலபமாகும். கட்டளையைப் பின்பற்றும் குழந்தைகளுக்கு பாபாவின் ஆசிர்வாதங்கள் கிடைக்கின்றன. எனவே கஷ்டமானதும் சுலபமானதாகி விடும்.

சுலோகன்:
புதிய பிராமண வாழ்க்கையின் நினைவில் இருப்பீர்களானால் எந்த ஒரு பழைய சம்ஸ்காரமும் இமர்ஜ் ஆகாது.