05.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இது உருவாக்கப்பட்ட, உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற (அனாதி) ஆரம்பம் முடிவு என்று இல்லாத நாடகம். இந்நாடகத்தில் ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் தீர்மானிக்கப்பட்டதாகும். மோட்சம் யாருக்குமே கிடைக்க முடியாது.

 

கேள்வி :

சிவபாபா அசரீரியாக உள்ளார், அவர் சரீரத்தில் எதற்காக வருகிறார்? என்ன காரியம் செய்கிறார்? என்ன செய்வதில்லை?

 

பதில் :

பாபா சொல்கிறார் - குழந்தைகளே, நான் இந்த சரீரத்தில் உங்களுக்கு முரளி சொல்வதற்காக மட்டுமே வருகிறேன். நான் முரளி சொல்கிற வேலை மட்டுமே செய்கிறேன். நான் உண்பதற்கோ அருந்துவதற்கோ இங்கே வரவில்லை. உங்களுக்குப் புதிய ராஜதானியைத் தருவதற்காக நான் வந்துள்ளேன். மற்றபடி வாசனையை இவருடைய (பிரம்மா) ஆத்மா தான் எடுத்துக் கொள்கிறது.

 

பாடல் :

ஆகாச சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள் ........

 

ஓம் சாந்தி.

நமக்குத் தொடர்புள்ள பாடல்கள் தான் இங்கே இசைக்கப்படுகின்றன. ஆகாயத்தில் ஆசனம் எதுவும் கிடையாது. ஆகாயம் என்று இந்தப் போலார் (துருவம்) தான் சொல்லப் படுகின்றது. மற்றப்படி ஆகாய தத்துவத்திலோ ஆசனம் கிடையாது. பரமபிதா பரமாத்மாவும் இந்த ஆகாயத்திலுள்ள ஆசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - பரமபிதா பரமாத்மாவாகிய நானும், ஆத்மாக்களாகிய குழந்தைகள் நீங்களும் இருவருமே இந்த சூரிய, சந்திர, நட்சத்திரங்களுக்கெல்லாம் அப்பால் வசிக்கிறோம். அது மூலவதனம் எனச் சொல்லப்படுகின்றது. எப்படி இங்கே ஆகாயத்தில் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் உள்ளனவோ, அப்படியே மரத்தைப் போல் மகா தத்துவத்தில் ஆத்மாக்கள் இருக்கின்றனர். எப்படி நட்சத்திரங்கள் ஆகாயத்தில் நிற்கின்றன, எந்த ஒரு பொருளின் ஆதாரமும் இல்லை. ஆத்மாக்களாகிய நாம், மற்றும் பரமாத்மா தந்தை, நாம் அனைவரும் மகா தத்துவத்தில் வசிப்பவர்கள். நட்சத்திரங்களைப் போலவே தான். ஞான சூரியன், ஞான சந்திரன், ஞான நட்சத்திரங்கள். இப்போது இது புரிய வைக்கப்பட்டுள்ளது, எப்போதெல்லாம் துக்கம் ஏற்படுகிறதோ, அப்போது நான் வருகிறேன். பழையதை அவசியம் புதியதாக்க வேண்டும். பழையதில் துக்கம் ஏற்படுகின்றது. கலியுகத்தில் துக்கத்தின் மேல் துக்கம். சொர்க்கத்திலோ சுகத்தின் மேல் சுகம். மீண்டும் நான் வந்து சகஜ இராஜயோகத்தைக் கற்பிக்க வேண்டி உள்ளது. அனைவரும் அழைக்கின்றனர், வாருங்கள் என்று. சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள் என்று கிருஷ்ணருக்குச் சொல்ல மாட்டார்கள். கிருஷ்ணருக்கு சிம்மாசனம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அழகாயில்லை. அவரோ இளவரசராக இருந்தார் இல்லையா? இராஜ சிம்மாசனம் கிடைத்த பிறகு தான் சிம்மாசனம் எனச் சொல்வார்கள். ஆம், சின்னக் குழந்தையை தந்தை மடியில் அல்லது கைகளில் அமர்த்த முடியும். ஆக, பாபா புரிய வைக்கிறார், ஆத்மாக்கள் மூலவதனத்தில் நட்சத்திரங்களைப் போல் உள்ளன. பிறகு அங்கிருந்து நம்பர்வார் வந்து கொண்டே இருக்கின்றன. காண்பிக்கின்றனர் இல்லையா, நட்சத்திரம் எப்படி விழுகிறது என்று? அங்கிருந்தும் கூட ஆத்மாக்கள் வந்து நேராக கர்ப்பத்தினுள் செல்கின்றன. இதை நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் - ஒவ்வோர் ஆத்மாவும் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும். எப்படி முதலில் லட்சுமி-நாராயணர் வருகிறார்கள் என்றால் அவர்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து மறுபிறவி எடுத்து-எடுத்தே பிறகு தமோபிரதான நிலையை அடைந்தேயாக வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதுபோல் உள்ளது. திரும்பிச் செல்ல முடியாது. இப்ராஹிம், புத்தர் வருகின்றனர், அவர்களும் கூட சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்தாக வேண்டும், மறுபிறவி எடுக்க வேண்டியுள்ளது. துவாபரயுகத்தில் தர்ம ஸ்தாபகர்கள் வருகின்றனர். அங்கிருந்து மறுபிறவி எடுப்பது ஆரம்பமாகின்றது. பிறகு தமோ பிரதானம் ஆக வேண்டும். என்னைப்போல் யாராலும் காரியங்கள் செய்ய இயலாது. நான் தேவி-தேவதா தர்மத்தையும் ஸ்தாபனை செய்கிறேன். உங்களுக்கு இராஜயோகம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன். கதி மற்றும் சத்கதி அளிக்கும் வள்ளலோ நான் தான். எப்போது நீங்கள் தூய்மையாகி விடுகிறீர்களோ, பிறகு நான் திரும்ப அழைத்துச் சென்று விடுகிறேன். உங்களுக்கும் கூட சத்கதி அளிக்கின்றேன். உங்களோடு கூட அநேக தர்மத்தினர் உள்ளனர், அந்த தர்ம ஸ்தாபகர்களுடன் கூடவே அனைவருக்கும் உயர்வளிக்கிறேன். உங்களுக்கு ஞானத்தினால் அலங்காரம் செய்து சொர்க்கத்தின் எஜமானர் லட்சுமி அல்லது நாராயணரை மணப்பதற்குத் தகுதி உள்ளவர்களாக ஆக்குகிறேன். பிறகு உங்களைத் திரும்ப அழைத்துச் செல்கிறேன். அனைவரையும் முதலில் முக்திதாமத்திற்கு அனுப்பி வைக்கிறேன். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலாகவும் இருக்கிறேன். மற்ற தர்ம ஸ்தாபகர்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் சத்கதி அளிப்பதில்லை. அவர்கள் தங்கள் தர்மத்தை ஸ்தாபனை செய்து அதனை விரிவடைய செய்வார்கள், அவ்வளவு தான். தங்களின் தர்மத்தில் மறுபிறவி எடுத்து சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்வார்கள். இப்போது அனைவரும் தமோ பிரதானமாக உள்ளனர். இப்போது இவர்களை தூய்மையாக, சதோபிரதானமானவர்களாக யார் ஆக்குவார்? தந்தை தானே வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். பகவான் வந்து அனைவருக்கும் சத்கதியும் அளிக்கிறார், பாரதத்தை சொர்க்கமாகவும் ஆக்குகின்றார். ஜீவன் முக்திக்காக இராஜயோகம் கற்பிக்கிறார். அதனால் பாபாவுக்கு இவ்வளவு மகிமை. கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாகும். ஆனால் கிருஷ்ணரின் பெயரை எழுதியதன் மூலம் பகவானை மறந்து விட்டுள்ளனர். பகவானோ அனைவருக்கும் சத்கதி அளிப்பவர். அதனால் கீதை அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்காகவும் தர்ம சாஸ்திரமாகும். அனைவரும் இதனை மதிக்க வேண்டும். சத்கதிக்கான சாஸ்திரம் வேறு எதுவும் கிடையாது. சத்கதி அளிப்பவர் ஒருவர் தான். அவருடையது தான் கீதை. குழந்தைகளாகிய உங்களுக்கு சத்கதிக்கான ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கீதையில் சிவனுடைய பெயர் இருந்திருந்தால் அனைத்து தர்மத்தினருக்கும் இது சாஸ்திரமாக இருந்திருக்கும். பாபா அனைவருக்கும் சொல்கிறார் - தன்னை ஆத்மா என உணர்ந்து என்னுடன் யோகம் (நினைவின் தொடர்பை) வையுங்கள். அப்போது விகர்மங்கள் விநாசமாகும். மேலும் நீங்கள் என்னுடைய இருப்பிடத்திற்கு வந்து விடுவீர்கள். அனைத்து தர்மத்தினருக்கும் சத்கதி அளிப்பதும் நான் தான். மற்றவர்களோ தங்களின் தர்மங்களை ஸ்தாபனை செய்வதற்காகவே வருகின்றனர். மனிதர்கள் கேட்கின்றனர், மோட்சம் கிடைக்காதா என்று. இல்லை, அது கிடைக்காது என்று பாபா சொல்கிறார். ஆத்மாக்கள் அனைவருக்குமான பாகம் நாடகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. யாருடைய பாத்திரமும் (நடிப்பின் பாகம்) மாறாது. ஒவ்வொருவரின் முழு நடிப்பினுடைய அனாதி டிராமா உருவாக்கப்பட்டுள்ளது. டிராமா அனாதியானது. அதற்கு முதல்-இடை-கடை என்பது கிடையாது. சிருஷ்டியின் ஆரம்பம் என்று சத்யுகம் தான் சொல்லப்படுகின்றது. மற்றப்படி டிராமாவுக்கு ஆதி அந்தம் கிடையாது. டிராமா எப்போது உருவானது என்பதைச் சொல்ல முடியாது. இந்தக் கேள்வியே எழ முடியாது.

 

பாபா புரிய வைத்துள்ளார், வேறு என்னென்ன சாஸ்திரங்கள் உள்ளனவோ, அவற்றின் மூலம் ஒவ்வொருவரும் அவர்களுடைய தர்மத்தை ஸ்தாபனை செய்துள்ளனர். சத்கதி அளிக்கவில்லை. அவர்களோ தர்மத்தை ஸ்தாபனை செய்தனர், அவர்களின் பின்னால் வளர்ச்சி ஆகிக்கொண்டே சென்றது. எத்தனை-எத்தனை ஆழமான பாயின்ட்டுகள்! இப்படி கட்டுரை எழுதுவதற்கான விஷயங்கள் உள்ளன. இங்கே பொய்யின் விஷயம் எதுவுமில்லை. வெற்றி-தோல்வியின் நாடகம் இது. சத்யுகத்தில் பரமாத்மாவை நினைவு செய்வதற்கான தேவை இல்லை. பரமாத்மாவை நினைவு செய்தால் பிறகு இந்த விஷயங்களையும் புரிந்து கொள்ளலாம், பிராமணர்களாகிய நம்மை அவர் படைத்துள்ளார். உங்களுக்கோ முன்னிலையில் சொல்கிறார்-நான் படைக்கிறேன் என்று. இது பிராமணர்களின் சங்கமயுகத்தின் புது உலகமாகும். குடுமி (பிராமணர்கள்) பற்றியோ யாருக்கும் தெரியாது. விராட ரூபத்தைத் தயார் செய்கின்றனர். அதில் தேவதா, சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரரைக் காட்டுகின்றனர். பிராமணர்களை மறந்து விட்டனர். சத்யுகத்தில் தேவதைகள், கலியுகத்தில் சூத்திரர்கள். சங்கமயுகத்தின் பிராமணர்களைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இந்த ரகசியத்தை பாபா வந்து புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார் - தூய்மை என்பது இல்லாமல் ஒருபோதும் தாரணை ஆகாது. பாபா புரிய வைக்கிறார் - எவ்வளவு ஏராளமான வேத-சாஸ்திரங்கள்! சுற்றி (பிரதட்சணம்) எடுத்து வருகின்றனர். கோவில்களில் இருந்து உருவங்களை வெளியில் எடுத்துச் சுற்றி வந்து மீண்டும் கோவிலுக்குள் எடுத்து வருகின்றனர். பாபா (பிரம்மா) இதில் அனுபவஸ்தர். சாஸ்திரங்களால் வாகனத்தை நிரப்பி சுற்றி வருகின்றனர். இப்படியே பிறகு தேவதைகளின் உருவங்களையும் தேரில் வைத்துச் சுற்றி வருகின்றனர். இவை அனைத்தும் பக்தி மார்க்கம்.

 

நீங்கள் சிவசக்திகள். நீங்கள் முழு உலகத்திற்கும் சத்கதி அளிக்கிறீர்கள். ஆனால் இதை யாரும் அறிந்து கொள்ளவில்லை, அதாவது தில்வாடா கோவில் அப்படியே இவர்களின் ஞாபகார்த்தமாக உள்ளது. இதுபோன்ற கோவில் வேறெங்கும் கிடையாது. ஜெகதம்பா இருக்கிறார், சிவபாபாவும் இருக்கிறார். சக்திகளின் மேடையும் உருவாக்கப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில் மீண்டும் இதுபோன்ற கோவில்களைக் கட்டுவார்கள். பிறகு விநாசம் ஏற்படும். ஆக, இவையனைத்தும் முடிந்து போகும். சத்யுகத்தில் எந்த ஒரு கோவிலும் இருக்காது. இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஸ்தாரமாகும். ஞானத்திலோ பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். சிவபாபாவை மறந்து மற்றவர்களை நினைவு செய்வீர்களானால் கடைசியில் ஃபெயிலாகி விடுவீர்கள். ஃபெயிலாகக் கூடாது. மனிதர்கள் இறக்கிறார்கள் என்றால் அவர்களுக்குச் சொல்கின்றனர், ராம்-ராம் சொல்லுங்கள் என்று. ஆனால் அப்படியே நினைவு வந்து விடாது. பிறகும் பாடப்படுகின்றது, கடைசி நேரத்தில் நாராயணனை நினைப்பவர்கள்........... இவ்விஷயம் இப்போதைய சமயத்தினுடையதாகும். சரீரத்தை நெருப்புப் பற்றிக் கொள்ளப்போகிறது. கடைசி காலத்தில் நாராயணனை நினைப்பார்கள். நிச்சயமாக இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் நாராயணனை அல்லது லட்சுமியை மணப்போம். சொர்க்கத்திற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். பாபாவைத் தவிர இந்த ஞானத்தை வேறு யாராலும் தர இயலாது. இந்த பாபாவும் (பிரம்மா) சொல்கிறார், இப்போது நமக்கு சிவபாபா சொல்கிறார். இவர்கள் சக்தி சேனை அல்லது பாண்டவ சேனை எனச் சொல்லப்படுகின்றது. பாண்டவர் என்ற பெயரே மகாரதிகளுக்குச் சொல்லப் படுவது. சக்திகளை சிங்கத்தின் மீது சவாரி என்பதாகக் காட்டுகின்றனர். ஆக, பாபா சொல்கிறார், எப்படி கல்பத்திற்கு முன் சகஜ இராஜயோகம் கற்பித்தேனோ, அப்படியே இப்போதும் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். என்னென்ன நடிப்பு (மனிதர்களின் நடைமுறை செயல்பாடு) இப்போது நடைபெறுகிறதோ, கல்ப-கல்பமாக அது தான் நடைபெறும். இதில் வேறுபாடு இருக்காது. பிறகு கல்ப-கல்பமாக இந்த பாகமே நடைபெறும். பாபா சொல்கிறார், உங்களுக்கு மிக ஆழமான விஷயங்களைச் சொல்கிறேன். பின்னால் என்ன நடைபெற இருக்கிறதோ, அதைப் பின்னால் சொல்வேன் இல்லையா? இப்போதே அனைத்தையும் சொல்லிவிட்டால், போதுமா? நான் திரும்பிச் சென்று விடவா? கடைசி வரை புதிய பாயின்ட்டுகளைச் சொல்லிக் கொண்டே இருப்பேன். நாம் கீதைக்கு அதிக மகிமை செய்கிறோம். ஆனால் அந்த கீதை அல்லது மகாபாரதத்திலோ இம்சையின் யுத்தம் முதயலியவற்றை க் காட்டியுள்ளனர். இப்போது யுத்தமோ கிடையாது. உங்களுடையதோ யோக பலத்தின் விஷயம். அஹிம்சை என்பதன் அர்த்தத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. வெறுமனே பெண்ணை நரகத்தின் வாசல் என்று மட்டும் சொல்லிவிட்டனர். உண்மையில் நரகத்தின் வாசலோ (ஆண்-பெண்) இருவருமே தான். இப்போது அவர்களை சொர்க்கத்தின் வாசலாக யார் ஆக்குவது? அதுவோ பகவானுடைய சக்தி தான். இந்தப் பாடலை பாபா உருவாக்கச் செய்துள்ளார். பிறகு உருவாக்குபவர்கள் யாரோ சிலர் சரியாக உருவாக்கியுள்ளனர். வேறு சிலர் தவறாக அமைத்துள்ளனர். கலப்படம் செய்து விட்டுள்ளனர். இரவு நேரப் பயணி களைத்துப் போகக் கூடாது......... இப்படி-இப்படிப் பாடல்களை நான் உருவாக்கச் செய்துள்ளேன். ஆக, இங்கே உள்ள விஷயங்கள் வேறு. கௌசாலாவும் (பசுக்களின் தொழுவம்) உள்ளது, வனவாசமும் உள்ளது, ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நான் யாரையாவது விரட்டினேனா என்ன? யாருக்காவது எப்போதாவது சொல்லியிருக்கிறேனா-கராச்சி சென்று வாருங்கள் என்று? கேளுங்கள் இந்த சக்திகளிடம். இது டிராமாவில் பாகம் அப்படி இருந்தது. யாருக்குக் கஷ்டமாக இருந்ததோ, சென்று விட்டார்கள். ஆக, சரியானது எது என்பதை பாபா அமர்ந்து சொல்கிறார். சாஸ்திரங்களிலோ, என்ன எழுதப் பட்டுள்ளதோ, அது பக்தி மார்க்கம். அவற்றாலோ என்னுடன் சந்திக்க முடியாது. என்னிடம் வர முடியாது. நானே வழிகாட்டி ஆகி இங்கே வரவேண்டியுள்ளது. அவர்கள் கேட்கின்றனர், இல்லறவாசி அல்லாத ஒருவரின் சரீரத்தை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை? அட, நானோ இல்லறவாசியின் உடலில் தான் வந்து அவருக்கு ஞானம் கொடுக்க வேண்டும் என்று உள்ளது. அவருடைய 84 பிறவிகள் பற்றித் தான் சொல்கிறேன். ஆக, எவ்வளவு ஆழமான விஷயங்கள்! இது புதிய தர்மத்திற்காக புதிய விஷயங்கள், ஞானமும் புதியது. பாபா சொல்கிறார், கல்ப-கல்பமாக நான் இந்த ஞானத்தைச் சொல்கிறேன். வேறு யாரும் இதுபோல் சொல்ல மாட்டார்கள் - நான் கல்ப-கல்பமாக தர்ம ஸ்தாபனை செய்வதற்காக வருகிறேன் என்பதாக. லட்சுமி-நாராயணர் இருவரும் சொல்ல மாட்டார்கள், நாங்கள் மீண்டும் ராஜ்யம் செய்வதற்காக வந்துள்ளோம் என்று. அங்கே இந்த ஞானமே மறைந்து போகும். சாஸ்திரங்களோ பின்னால் அநேகம் உருவாக்கியுள்ளனர். பிராமணர்களாகிய நமக்கு ஒரே ஒரு கீதை. தர்மத்தையும் ஸ்தாபனை செய்கிறேன், சத்கதியும் அனைவருக்கும் அளிக்கின்றேன். இரட்டைக் காரியம் ஆகின்றது இல்லையா? இப்போது நான் சொல்வது சரியா, அல்லது அவர்கள் சொல்வது சரியா? அதையோ நீங்கள் அறிவீர்கள். நான் யார்? நான் சத்தியமாக இருக்கிறேன். நான் எந்த ஒரு வேத-சாஸ்திரத்தையும் சொல்லவில்லை. இவர் (பிரம்மா) படித்திருப்பதோ அநேகம், ஆனால் அவர் சொல்வதில்லை. இதுவோ சிவபாபா புதுப்புது விஷயங்கள் சொல்கிறார். அவரோ அசரீரி. இந்த முரளி சொல்வதற்காக மட்டுமே வருகிறார், உண்பதற்கோ அருந்தவதற்கோ அல்ல. நான் வந்திருப்பதே குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ராஜதானியைத் தருவதற்காக. பலனை எடுத்துக் கொள்வது இவருடைய ஆத்மா. ஒவ்வொருவரின் தர்மமும் தனித்தனி. அவர்கள் தங்களின் தர்ம சாஸ்திரத்தைப் படிக்க வேண்டும். இங்கோ அநேக சாஸ்திரங்களைப் படித்துக் கொண்டேயிருக்கின்றனர். சாரம் எதுவும் இல்லை. எவ்வளவு படித்துக் கொண்டே இருக்கின்றனரோ, அந்த அளவு சாரமற்ற உலகமாக ஆகிக்கொண்டே செல்கிறது. தமோபிதானமாக ஆகித் தான் தீர வேண்டும். முதல்-முதலில் சிருஷ்டியில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். பிராமணர்கள் நீங்கள் தாய்-தந்தையிடம் ஜென்மம் எடுத்திருக்கிறீர்கள். அந்தப் பக்கம் உள்ளது அசுர குடும்பம். இங்கே உள்ளது ஈஸ்வரிய குடும்பம். பிறகு போய் தெய்வீக மடியைப் பெறுவீர்கள். சொர்க்கத்தின் எஜமானராக ஆவீர்கள். தாய்-தந்தையின் வழிப்படி நடப்பீர்களானால் சொர்க்கத்தின் அளவற்ற சுகம் கிடைக்கும். மற்றப்படி ருத்ர ஞான யக்ஞத்தில் விக்னங்களோ நிச்சயமாக வரும். பாபா சொல்கிறார் - குழந்தைகளே, விகாரங்கள் மீது வெற்றி கொள்வதன் மூலம் தான் நீங்கள் உலகை வென்றவராக ஆக முடியும். திருமணம் செய்யவில்லை என்றால் பலவீனமாக இருந்து விடுவீர்கள் என்பதெல்லாம் கிடையாது. சந்நியாசிகள் தூய்மையாக இருக்கின்றனர், பிறகு அவர்கள் எவ்வளவு நல்ல ஆரோக்கியம் நிறைந்தவர்களாக உள்ளனர்! இங்கோ மூளையின் வேலை, முயற்சி உள்ளது. ததீச்சி முனிவரின் உதாரணம் உள்ளது இல்லையா? சந்நியாசிகளுக்கோ அதிக செல்வம் கிடைக்கின்றது. பாபா தாமே அதிகமான செல்வத்தை சந்நியாசிகளுக்குக் கொடுத்திருந்தார். இங்கோ அதிகமான பத்தியம் இருக்க வேண்டியுள்ளது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) ஞானம் நன்கு தாரணை ஆவதற்கு தூய்மையாக இருப்பதற்கான விரதத்தைக் கடை பிடிக்க வேண்டும். இப்போது கடைசிக் காலம், அதனால் ஒரு பாபாவைத் தவிர வேறு யாருடைய நினைவும் வராத அளவிற்கு அப்பியாசம் செய்ய வேண்டும்

 

2) ததீச்சி முனிவர் போல் சேவை செய்துகொண்டே விகாரங்கள் மீது வெற்றி கொண்டு உலகத்தை வென்றவராக ஆக வேண்டும்.

 

வரதானம் :

புத்தியைக் கட்டளைப்படி உயர்வான ஸ்திதியில் நிலைநிறுத்தி வைக்கக்கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

 

அநேகக் குழந்தைகள் யோகத்தில் அமரும் போது ஆத்ம-அபிமானி ஆகி இருப்பதற்கு பதிலாக அவர்களுக்கு சேவை பற்றிய நினைவு வருகிறது. ஆனால் அவ்வாறு இருக்கக் கூடாது. ஏனென்றால் கடைசி சமயத்தில் அசரீரி ஆவதற்கு பதிலாக சேவை பற்றிய சங்கல்பம் வந்தாலும் கூட ஒரு விநாடியின் சோதனைத் தாளில் ஃபெயிலாகி விடுவார்கள். அந்தச் சமயத்தில் பாபா, நிராகாரி, நிர்விகாரி, நிரகங்காரி -- இதைத் தவிர வேறு எந்த ஒரு நினைவும் இருக்கக் கூடாது. சேவையில் பிறகும் கூட சாகாரில் வந்து விடுவீர்கள். ஆகவே இந்த அப்பியாசத்தைச் செய்யுங்கள் -- எந்தச் சமயம் எந்த ஸ்திதியில் நிலைத்திருக்க விரும்புகிறீர்களோ, அதில் நிலைத்து விடுங்கள் -- அப்போது தான் மாஸ்டர் சர்வசக்திவான், கண்ட்ரோலிங் பவர், ரூலிங் பவர் உள்ளவர் எனச் சொல்லப் படுவீர்கள்.

 

சுலோகன்:

எந்த ஒரு சூழ்நிலையையும் சகஜமாகக் கடந்து செல்வதற்கான சாதனம் -- ஒரே பலம், ஒரே நம்பிக்கை.

 

ஓம்சாந்தி