06.01.2019           ஓம்சாந்தி         மதுபன்               அவ்யக்த பாப்தாதா   ரிவைஸ்    08.04.1984,


 

சங்கமயுகத்தில் பிராப்தி ஆகியிருக்கும் அதிகாரம் மூலமாக உலக இராஜ்ய அதிகாரி ஆவது

 

இன்று பாப்தாதா சுயராஜ்ய அதிகாரி சிரேஷ்ட ஆத்மாக்களின் தெய்வீக தர்பாரை (இராஜசபை) பார்த்துக்கொண்டிருக்கிறார். உலக இராஜ்ய சபை மற்றும் சுயராஜ்ய சபை இரண்டின் அதிகாரிகளாக நீங்கள் சிரேஷ்ட ஆத்மாக்கள் ஆகிறீர்கள். சுயராஜ்ய அதிகாரி தான் உலக இராஜ்ய அதிகாரி ஆகிறார்கள். இந்த இரட்டை போதை எப்பொழுதும் இருக்கிறதா? தந்தையின் குழந்தை ஆவது என்றால் அனேக அதிகாரங்களை பிராப்தி செய்வது. எத்தனை விதமான அதிகாரங்களை பிராப்தி செய்திருக்கிறீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களா? அதிகாரம் என்ற மாலையை நினைவு செய்யுங்கள். முதல் அதிகாரம் - பரமாத்மாவின் குழந்தையாக ஆகியிருக்கிறீர்கள் என்றால் மிக உயர்ந்த வந்தனத்திற்குரிய பூஜைக்குரிய ஆத்மா ஆவதற்கான அதிகாரத்தை அடைந்திருக்கிறீர்கள். தந்தையின் குழந்தை ஆகாமல் பூஜைக்குரிய ஆத்மா ஆவதற்கான அதிகாரம் பிராப்தி ஆக முடியாது. முதலில் அதிகாரம் பூஜைக்குரிய ஆத்மாவாக ஆகியிருக்கிறீர்கள். இரண்டாவது அதிகாரம் - ஞானத்தின் பொக்கிஷங்களின் அதிபதி ஆனீர்கள், அதாவது அதிகாரி ஆகியிருக்கிறீர்கள். மூன்றாவது அதிகாரம் - அனைத்து சக்திகளின் பிராப்தியின் அதிகாரி ஆகியிருக்கிறீர்கள். நான்காவது அதிகாரம் - அனைத்து கர்மேந்திரியங்களை வென்ற சுயராஜ்ய அதிகாரி ஆகியிருக்கிறீர்கள். இந்த அனைத்து அதிகாரங்கள் மூலமாக மாயாவை வென்றவர் ஆகி உலகை வென்ற உலகராஜ்ய அதிகாரி ஆகியிருக்கிறீர்கள். தன்னுடைய இந்த அனைத்து அதிகாரங்களை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பவர் சக்திசாலியான ஆத்மா ஆகிவிடுகிறார். நீங்கள் அந்த மாதிரி சக்திசாலியாக ஆகியிருக்கிறீர்கள் இல்லையா?

 

சுயராஜ்யம் மற்றும் உலக இராஜ்யத்தை பிராப்தி செய்வதற்காக விஷேசமாக மூன்று விஷயங்களின் தாரணை மூலம் தான் வெற்றி அடைந்திருக்கிறீர்கள். எந்தவொரு சிரேஷ்ட காரியத்தின் வெற்றிக்கான ஆதாரம் தியாகம், தபஸ்யா. மற்றும் சேவை.. இந்த மூன்று விஷயங்களின் ஆதாரத்தில் வெற்றி இருக்குமா அல்லது இருக்காது என்ற இந்த கேள்வி எழ முடியாது. எங்கு இந்த மூன்று விஷயங்களின் தாரணைஇருக்குமோ, அங்கு ஒரு வினாடியில் வெற்றி கண்டிப்பாக இருக்கும். அது நிச்சயக்கப்பட்டது. எந்த விஷயத்தின் தியாகம்? ஒரு விஷயத்தின் தியாகம் மட்டும் மற்ற அனைத்து தியாங்களை சகஜமாக மற்றும் இயல்பாக செய்விக்கிறது. அந்த ஒரு தியாகம் - உடல் உணர்வின் தியாகம், அது எல்லைக்குட்பட்ட நான் என்பதின் தியாகத்தை சுலபமாக செய்வித்து விடுகிறது. இந்த எல்லைக்குட்பட்ட நான் என்பது தபஸ்யா மற்றும் சேவையில் இருந்து ஒருவரை வஞ்சிக்கப்பட்டவராக ஆக்கிவிடுகிறது. எங்கு எல்லைக்குட்பட்ட நான் என்பது இருக்கிறதோ, அங்கு தியாகம், தபஸ்யா மற்றும் சேவை இருக்க முடியாது. எல்லைக்குட்பட்ட நான், என்னுடையது என்ற இந்த ஒரு விசயத்தின் தியாகம் வேண்டும். நான் மற்றும் என்னுடையது இல்லையென்றால் வேறு என்ன மீதம் இருக்கிறது? எல்லைக்கு அப்பாற்பட்டது தான் இருக்கிறது. நான் ஒரு தூய்மையான சுத்தமான ஆத்மா மேலும் என்னுடையவரோ ஒரு தந்தையை தவிர வேறு யாருமில்லை. எங்கு எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை சர்வசக்திவான் இருக்கிறாரோ, அங்கு வெற்றி எப்பொழுது உடன் இருக்கும். இதே தியாகம் மூலமாக தபஸ்யாவும் வந்துவிட்டது இல்லையா! தபஸ்யா என்றால் என்ன? நான் ஒருவருடையவன். ஒருவரின் சிரேஷ்ட வழிப்படி நடப்பவன், இதன் மூலம் ஒரே சீரான நிலை இயல்பாக வந்துவிடும். எப்பொழுதும் ஒரு பரமாத்மாவின் நினைவு என்ற இதுதான் தபஸ்யா. ஒரே சீரான நிலை என்பது தான் சிரேஷ்ட ஆசனம். தாமரை மலருக்கு சமமான நிலை தான் தபஸ்யாவின் ஆசனம். தியாகம் மூலம் தபஸ்யாவும் இயல்பாகவே வந்து விடுகிறது. எப்பொழுது தியாகம் மற்றும் தபஸ்யா சொரூபம் ஆகிவிட்டீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? தன்னுடையது என்பதின் தியாகம் மற்றும் நான் என்பது முடிவடைந்து விட்டது. ஒருவரின் அன்பிலேயே மூழ்கியிருக்கும் தபஸ்வி ஆகிவிட்டீர்கள் என்றால், சேவையின்றி இருக்க முடியாது. இந்த எல்லைக்குட்பட்ட நான் மற்றும் என்னுடையது என்பது உண்மையான சேவை செய்ய விடாது. தியாகி மற்றும் தபஸ்வியாக இருப்பவர் உண்மையான சேவாதாரி. நான் இதைச் செய்தேன், நான் அப்படிப்பட்டவன் என்ற தேக உணர்வு கொஞ்சமாவது வந்து விட்டது என்றால், சேவாதாரிக்கு பதிலாக என்னவாகி விடுகிறார்? பெயரளவில் மட்டும் சேவாதாரி ஆகிவிடுகிறார், உண்மையான சேவாதாரி ஆவதில்லை. உண்மையான சேவாதாரியின் அஸ்திவாரம் தியாகம் மற்றும் தபஸ்யா. அந்த மாதிரி சேவாதாரி எப்பொழுதும் வெற்றி சொரூபமாக இருக்கிறார். வெற்றி அவருடைய கழுத்தின் மாலை ஆகிவிடுகிறது. பிறப்புரிமை உள்ளவராக ஆகிவிடுகிறார். எனவே உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தியாகி ஆகுங்கள், தபஸ்யா ஆகுங்கள். உண்மையான சேவாதாரி ஆகுங்கள் என்ற உயர்ந்த அறிவுரையை பாப்தாதா கொடுக்கின்றார்.

 

இன்றைய உலகம் மரண பயம் உள்ள உலகம். (புயல், சூறாவளி வந்தது) இயற்கை குழப்பத்தில் வந்திருக்கிறது, நீங்களோ உறுதியாக இருக்கிறீர்கள் இல்லையா! மிகவும் தமோகுண இயற்கையின் வேலை குழப்பம் செய்வது மேலும் உறுதியான ஆத்மாக்கள் உங்களுடைய வேலை இயற்கையையும் பரிவர்த்தனை செய்வது. ஒன்றும் புதிதல்ல. இவை அனைத்தும் நடந்தே தீரும். குழப்பம் இருந்தால் தானே நீங்கள் உறுதியானவர் ஆவீர்கள். எனவே சுயராஜ்ய அதிகாரி தர்பாரில் இருக்கும் ஆத்மாக்கள் புரிந்துக்கொண்டீர்களா? இதுவும் அதாவது இராஜ்ய சபை தான் இல்லையா! இராஜயோகி என்றால் சுயத்தின் இராஜா. இராஜயோகி சபை என்றால் சுயராஜ்ய சபை. நீங்களும் அனைவரும் கூட அரசியல் தலைவர்கள் ஆகிவிட்டீர்கள் இல்லையா! அவர்கள் தேசத்தின் அரசியல் தலைவர்கள், நீங்களோ சுயராஜ்யத்தின் தலைவர்கள். தலைவர் என்றால் நீதிப்படி நடப்பவர்கள், அதேமாதிரி நீங்கள் தர்ம நீதி, சுயராஜ்ய நீதிப்படி நடக்கும் சுயராஜ்ய தலைவர்கள். யதார்த்த சிரேஷ்ட நீதி என்றால் ஸ்ரீமத். ஸ்ரீமத் தான் யதார்த்த (சரியான) நீதி. இந்த நீதிப்படி நடப்பவர்கள் வெற்றியடையும் தலைவர்கள்.

 

பாப்தாதா தேசத்தின் தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறுகிறார், ஏனென்றால் இருந்தும் கடுமையாக உழைக்கவோ செய்கிறார்கள் தான் இல்லையா! விதவிதமானவர்களோ இருக்கிறார்கள். இருந்தும் தேசத்திற்காக முழு ஈடுபாடு இருக்கிறது. நம்முடைய இராஜ்யம் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்ற இந்த ஈடுபாட்டுடன் கடுமை உழைப்பையோ செய்கிறார்கள் தான் இல்லையா? நம்முடைய பாரதம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற இந்த ஈடுபாடு இயல்பாகவே உழைக்க வைத்துவிடும். இப்பொழுது அந்த மாதிரி நேரமும் வரும் எப்பொழுது அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் இருவரும் உடன் இருப்பார்கள், அப்பொழுது உலகில் பாரதத்தின் வெற்றி முழக்கம் ஏற்படும். பாரதம் தான் கலங்கரை விளக்காக இருக்கும். பாரதத்தின் பக்கம் அனைவரின் பார்வை இருக்கும். பாரதத்தைத் தான் முழு உலகமும் பிரேரணை கொடுக்க கூடியது என்ற அனுபவம் செய்வார்கள். பாரதம் அழியாத தேசம். அழியாத தந்தையின் அவதார பூமி எனவே பாரதத்தின் மகத்துவம் எப்பொழுதும் மகான் ஆனது. நல்லது.

 

அனைவரும் தன்னுடைய இனிமையான இல்லத்திற்கு வந்து சேர்ந்து விட்டீர்கள். பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் வந்ததற்காக வாழ்த்துகள் தெரிவிக்கிறார். வருக வருக, என்று வரவேற்கிறார். தந்தையின் வீட்டின் அலங்காரங்கள் உங்களை வரவேற்கிறோம். நல்லது.

 

அனைத்து வெற்றி நட்சத்திரங்களுக்கு, எப்பொழுதும் ஒரே சீரான நிலை என்ற ஆசனத்தில் நிலைத்திருக்கும் தபஸ்வி குழந்தைகளுக்கு, எப்பொழுதும் ஒரு பரமாத்மாவின் சிரேஷ்ட நினைவில் இருக்கக் கூடிய மகான் ஆத்மாக்களூக்கு, சிரேஷ்ட பாவனை, சிரேஷ்ட விருப்பங்கள் வைக்கக் கூடிய உலக நன்மை செய்யும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

அவ்யக்த பாப்தாதாவுடன் குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சர் சந்திப்பு:

தந்தையின் வீட்டிற்கு மற்றும் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். சேவையில் உள்ள ஈடுபாடு மிக நன்றாக இருக்கிறது என்று தந்தை தெரிந்திருக்கிறார். கோடியில் சிலர் தான் அந்த மாதிரி சேவாதாரிகளாக இருக்கிறார்கள் எனவே சேவையின் உழைப்பினால் மனதில் ஏற்படும் குஷி பிரத்யக்ஷ பலனின் ரூபத்தில் எப்பொழுதும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். இந்த உழைப்பு வெற்றிக்கான ஆதாரம். ஒருவேளை அனைத்து பொறுப்பிலிருக்கும் சேவாதாரிகள் நன்றாக உழைத்தார்கள் என்றால், பாரத அரசாங்கம் எப்பொழுதுமே வெற்றி அடைந்து கொண்டேயிருக்கும். வெற்றியோ கண்டிப்பாக கிடைக்கும். இது உறுதியானது, ஆனால் யார் பொறுப்பாளர் ஆகிறார்களோ, பொறுப்பாளர் ஆபவருக்கு சேவையின் பிரத்யக்ஷ பலன் மற்றும் எதிர்கால பலன் பிராப்தி ஆகிறது. அப்படி நீங்கள் சேவையின் பொறுப்பாளர். பொறுப்புணர்வு வைத்து எப்பொழுதும் சேவையில் முன்னேறி சென்று கொண்டேயிருங்கள். எங்கு பொறுப்பாளர் என்ற உணர்வு, கருவி என்ற உணர்வு இருக்கிறதோ, நான் என்ற உணர்வு இல்லையோ, அங்கு எப்பொழுதும் முன்னேற்றத்தை அடைந்து கொண்டேயிருப்பார்கள். இந்த பொறுப்புணர்வு இயல்பாகவே சுபபாவணை மற்றும் சுப விருப்பங்களை விழிப்படைய வைக்கிறது, இன்று சுபபாவனை, சுப விருப்பங்கள் இல்லை அதன் காரணமாக பொறுப்புணர்விற்கு பதிலாக நான் என்பது வந்துவிட்டது. ஒருவேளை கருவி என்று புரிந்துக்கொண்டார்கள் என்றால் செய்விப்பவர் தந்தை என்று புரிந்து கொள்வார். செய்பவர் செய்விப்பவர் சுவாமி எப்பொழுதுமே உயர்ந்தாகத் தான் செய்விப்பார். தான் ஒரு டிரஸ்டி என்பதற்குப் பதிலாக இராஜ்யத்தின் குடும்பத்தின் குடும்பஸ்தன் ஆகிவிட்டால், குடும்பஸ்தனுக்கு சுமையிருக்கும் மேலும் டிரஸ்டி என்பதில் இலேசான நிலை இருக்கும். எதுவரை சுமையற்று இலேசானவராக இல்லையோ, அதுவரை முடிவெடுக்கும் சக்தியும் இருக்காது. டிரஸ்டியாக இருந்து சுமையற்றவராக இருக்கிறார் என்றால், முடிவெடுக்கும் சக்தி சிரேஷ்டமானதாக இருக்கும், எனவே எப்பொழுதும் நான் டிரஸ்டி. கருவி என்ற பாவனை பலன் கொடுக்கும். பாவனைக்கான பலன் கிடைக்கிறது. இந்த கருவி என்ற பாவனை எப்பொழுதும் சிரேஷ்ட பலனைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். எனவே உங்கள் உடன் இருக்கும் சக அமைச்சர் களுக்கும் நான் ஒரு கருவி என்ற உணர்வை, டிரஸ்டி என்ற உணர்வை வையுங்கள் என்ற நினைவூட்டுங்கள். இந்த அரசு கடமைகள் செய்யும் முறை உலகிற்காக உயர்ந்த வழி காட்டுதல் ஆகிவிடும். முழு உலகமும் பாரதத்தின் இந்த அரசு கடமை செய்யும் முறையை அப்படியே பின்பற்றி செய்வார்கள். ஆனால் இதற்கான ஆதாரம் டிரஸ்டி என்ற உணர்வு அதாவது கருவி என்ற உணர்வு.

 

குமாரர்களுடன் சந்திப்பு:

குமார் என்றால் அனைத்து சக்திகளை, அனைத்து பொக்கிஷங்களை சேமிப்பு செய்து மற்றவர்களையும் சக்தி நிறைந்தவராக ஆக்கும் சேவை செய்பவர். எப்பொழுதுமே இதே சேவையில் பிஸியாக இருக்கிறீர்கள் தான் இல்லையா? பிஸியாக இருந்தீர்கள் என்றால் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். ஒருவேளை கொஞ்சமாவது ஒய்வாக இருக்கிறீர்கள் என்றால் வீணானவை இருக்கும், சக்திசாலியாக இருப்பதற்காக பிஸியாக இருங்கள். தன்னுடைய கால அட்டவணையைத் தயாரியுங்கள். எப்படி உடலுக்கான கால அட்டவணை தயாரிக்கிறீர்கள் அதேபோன்று புத்தியின் கால அட்டவணையைத் தயாரியுங்கள். புத்தியால் பிஸியாக இருப்பதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். பிஸியாக இருப்பதினால் எப்பொழுதும் முன்னேற்றத்தை அடைந்து கொண்டேயிருப்பீர்கள். இன்றைய காலத்திற்கு ஏற்றப்படி குமார வாழ்க்கையில் சிரேஷ்டமாக ஆவது மிகப் பெரிய பாக்கியம். நான் சிரேஷ்ட பாக்கியம் நிறைந்த ஆத்மா என்ற இதையே எப்பொழுதும் நினையுங்கள். நினைவு மற்றும் சேவைக்கான சமநிலையை எப்பொழுதும் வையுங்கள். சமநிலை வைப்பவர்களுக்கு எப்பொழுதும் ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டேயிருக்கும். நல்லது.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட விசேஷ அவ்யக்த மகாவாக்கியம் :

பரமாத்மா அன்பில் எப்பொழுதும் மூழ்கியிருங்கள். பரமாத்மாவின் அன்பு ஆனந்தம் நிறைந்த ஊஞ்சல், இந்த சுகம் நிறைந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டே எப்பொழுதும் பரமாத்மாவின் அன்பில் முழ்கியிருந்தீர்கள் என்றால் ஒருபொழுதும் ஏதாவது பிரச்சினையோ அல்லது மாயாவின் குழப்பமோ வர முடியாது. பரமாத்மாவின அன்பு அளவற்றது, இடைவிடாது கிடைப்பது, அந்தளவு இருக்கிறது, அது அனைவருக்கும் கிடைக்க முடியும். ஆனால் பரமாத்மாவின் அன்பைப் பெறுவதற்கான விதி - விலகியிருப்பவராக ஆவது. யார் எந்தளவு விலகியிருக்கிறரோ, அந்தளவிற்கு பரமாத்மாவின் அன்பிற்கு உரியவர் ஆகிறார். பரமாத்மாவின் அன்பில் மூழ்கியிருக்கும் ஆத்மாக்கள் ஒருபொழுதும் எல்லைக்குட்பட்ட பிராவத்தில் வர முடியாது, எப்பொழுதும் எல்லைக்கப்பாற்பட்ட பிராப்தியில் மூழ்கியிருப்பார். அவரிடமிருந்து எப்பொழுதும் ஆன்மீகத்தின் நறுமணம் வரும். அன்பின் அடையாளமே யார் மேல் அன்பு ஏற்படுகிறதோ, அவர் மீது அனைத்தையும் அர்ப்பணம் செய்துவிடுவர். தந்தைக்கு குழந்தைகள் மேல் அந்தளவு அன்பு இருக்கிறது, அதனால் தினசரி அன்பிற்கான பிரதிபலன் கொடுப்பதற்காக இவ்வளவு பெரிய கடிதம் எழுதுகிறார். அன்பு நினைவு கொடுக்கிறார் மற்றும் துணைவன் ஆகி எப்பொழுதும் துணையை வைத்து நடந்துகொள்கிறார். எனவே இந்த அன்பில் தன்னுடைய அனைத்து பலஹீனங்களை அர்ப்பணம் செய்து விடுங்கள். தந்தைக்கு குழந்தைகள் மேல் அன்பு இருக்கிறது, எனவே குழந்தைகளை நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, எப்படி இருக்கிறீர்களோ, என்னுடைய குழந்தைகள் என்று எப்பொழுதும் கூறுகிறார். அதேபோல் நீங்களும் எப்பொழுதும் அன்பில் மூழ்கியிருங்கள் மேலும் உள்ளப்பூர்வமாக பாபா நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ எனக்கு அனைத்தும் நீங்கள் தான் என்று கூறுங்கள். ஒருபொழுதும் அசத்தியத்தின் இராஜ்யத்தின் பிரபாவத்தில் வராதீர்கள். யார் அன்பானவராக இருப்பரோ, அவரை நினைவு செய்யப்படுவதில்லை, அவரின் நினைவு இயல்பாக வரும். ஆனால் அன்பு உள்ளபூர்வமானதாக, உண்மை யானதாக மற்றும் சுயநலமற்றதாக இருக்க வேண்டும். எப்பொழுது நீங்கள் என்னுடைய பாபா, அன்பான பாபா என்று கூறுகிறீர்களோ, அன்பானவரை ஒருபொழுதும் மறக்க முடியாது, மேலும் சுயநலமற்ற அன்பு தந்தையிடமிருந்து தவிர வேறு எந்த ஆத்மாவிடமிருந்தும் கிடைக்க முடியாது, எனவே ஒருபொழுதும் ஏதாவது தேவைக்காக நினைவு செய்யாதீர்கள். சுயநலமற்ற அன்பில் மூழ்கியிருங்கள். பரமாத்மாவின் அன்பின் அனுபவசாஆனீர்கள் என்றால், இதே அனுபவம் மூலம் சகஜயோகி ஆகி பறந்து கொண்டேயிருப்பீர்கள். பரமாத்மாவின் அன்பு பறப்பதற்கான சாதனம். பறப்பவர் ஒருபொழுதும் பூமியின் கவர்ச்சியில் வரமுடியாது. மாயாவின் எவ்வளவுதான் கவர்ச்சி செய்யும் ரூபமாக இருந்தாலும், ஆனால் அந்தக் கவர்ச்சி பறக்கும் கலை உள்ளவரைச் சென்றடைய முடியாது. இந்த பரமாத்மாவின் அன்பு என்ற கயிறு தூரத்திலிருந்தே இழுத்து வந்து விடுகிறது. இது அந்த மாதிரி சுகம் அளிக்கும் அன்பு, இந்த அன்பில் ஒரு வினாடியாவது யாராவது மூழ்கி விட்டார் என்றால், அவருடைய துக்கம் மறந்து விடும், மேலும் எப்பொழுதும் சுகத்தின் ஊஞ்சலில் ஆடத்தொடங்கி விடுவார். வாழ்க்கையில் எது வேண்டுமோ, ஒருவேளை அதை யாராவது கொடுத்துவிட்டார் என்றால், அது தான் அன்பின் அடையாளமாக இருக்கும். எனவே தந்தைக்கு குழந்தைகள் உங்கள் மீது அந்தளவு அன்பு இருக்கிறது, அவர் வாழ்க்கையின் சுகம், சாந்திக்கான அனைத்து மன விருப்பங்களை நிறைவேற்றி விடுகிறார். தந்தை சுகம் மட்டும் கொடுக்கவில்லை, ஆனால் சுகத்தின் களஞ்சியத்தின் அதிபதியாக ஆக்கிவிடுகிறார். கூடவே சிரேஷ்ட பாக்கிய ரேகையை போடுவதற்கான எழுதுகோலையும் கொடுக்கிறார். எந்தளவு விரும்புகிறீர்களோ, அந்தளவு பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். இது தான் பரமாத்மாவின் அன்பு. எந்தக் குழந்தைகள் பரமாத்மாவின் அன்பில் எப்பொழுதும் மூழ்கி தன்னை மறந்து இருக்கிறார்களோ அவர்களுடைய பொலிவு மற்றும் ஜொலிப்பு, அனுபவங்களின் கிரணங்கள் அந்தளவு சக்திசாலியாக இருக்கும், அதன் காரணமாக எந்தவொரு பிரச்சனையும் அருகில் வருவதோ, தூரமான விஷயம் ஆனால் கண்ணா ஏறிட்டுக் கூட பார்க்க முடியாது. அவருக்கு ஒருபொழுதும் எந்த விதமான கடின உழைப்பும் இருக்க முடியாது.

 

தந்தைக்கு குழந்தைகள் மீது அந்தளவு அன்பு இருக்கிறது, அதன் காரணமாக அவர் அமிர்தவேளையில் இருந்தே குழந்தைகளை பாலனை செய்கிறார். நாளின் ஆரம்பமே எவ்வளவு சிரேஷ்டமாக இருக்கிறது! சுயம் பகவான் சந்திப்பதற்காக அழைக்கிறார், ஆன்மீக உரையாடல் செய்கிறார், சக்திகளை நிரப்புகிறார். தந்தையின் அன்பின் பாடல் உங்களை எழுப்புகிறது. எவ்வளவு அன்பாக அழைக்கிறார், எழுப்புகிறார்- இனிமையான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே வாருங்கள்.. இந்த அன்பின் பாலனையின் நடைமுறை சொரூபம் சகஜயோகி வாழ்க்கை. யார் மேல் அன்பு இருக்கிறதோ, அவருக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் செய்வார்கள். தந்தைக்கு குழந்தைகள் நிலைகுலைந்து போவது பிடிப்பதில்லை, எனவே ஒருபொழுதும் என்ன செய்வது, விசயமே அப்படி இருந்தது, எனவே நிலைகுலைந்து போய்விட்டேன் என்று கூறாதீர்கள். ஒருவேளை நிலைகுலையும் விசயம் வந்தாலும் கூட நீங்கள் நிலைகுலைந்த நிலையில் வராதீர்கள்.

 

பாப்தாதாவிற்கு குழந்தைகள் மேல் அந்தளவு அன்பு இருக்கிறது, அதனால் ஒவ்வொரு குழந்தையும் தன்னை விடவும் முன்னுக்கு செல்லட்டும் என்று நினைக்கிறார். உலகத்தில் கூட யார் மேல் அதிக அன்பு இருக்குமோ, அவரை தன்னை விடவும் முன்னேறச் செய்வார். இது தான் அன்பின் அடையாளம். பாப்தாதாவும் என்னுடைய குழந்தைகளில் இப்பொழுது எந்தக் குறையும் இருக்க கூடாது, அனைவரும் சம்பூர்ணமாக, சம்பன்னமாக மேலும் சமமாக ஆகிவிட வேண்டும் என்று கூறுகிறார். தொடக்க காலம் அமிர்தவேளையில் தன்னுடைய இதயத்தில் பரமாத்மாவின் அன்பை சம்பூர்ண ரூபத்தில் தாரணை செய்துவிடுங்கள். ஒருவேளை இதயத்தில் பரமாத்மாவின் அன்பு, பரமாத்மாவின் சக்திகள், பரமாத்மாவின் ஞானம் முழுமையாக இருக்கிறது என்றால் ஒருபொழுதும் எந்தப் பக்கத்திலும் பற்றுதலும் மற்றும் அன்பும் செல்ல முடியாது.

 

இந்த பரமாத்மாவின் அன்பு இந்தவொரு ஜென்மத்தில் தான் பிராப்தி ஆகிறது..83 ஜென்மங்கள் தேவ ஆத்மாக்கள் மற்றும் சாதாரண ஆத்மாக்கள் மூலமாகத் தான் அன்பு கிடைத்தது, இப்பொழுது மட்டும் தான் பரமாத்மாவின் அன்பு கிடைக்கிறது. ஆத்மாவின் அன்பு இராஜ்ய பாக்கியத்தை இழக்க வைக்கிறது, மேலும் பரமாத்மாவின் அன்பு இராஜ்ய பாக்கியத்தை கொடுக்கிறது. எனவே இந்த அன்பில் மூழ்கி இருங்கள். தந்தை மீது உண்மையான அன்பு இருக்கிறது என்றால் அன்பின் அடையாளம் சமமானவராக, கர்மாதீத் ஆனவராக ஆகுங்கள். செய்விப்பவர் ஆகி காரியம் செய்யுங்கள். செய்வியுங்கள். கர்மேந்திரியங்கள் உங்கள் மூலம் செய்விக்க வேண்டாம், ஆனால் நீங்கள் கர்மேந்திரியங்கள் மூலம் செய்வியுங்கள். ஒருபொழுதும் மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் வசமாகி எந்தவொரு காரியமும் செய்யாதீர்கள்.

 

வரதானம்:

பலமற்றவரிலிருந்து பலம் நிறைந்தவர் ஆகி நடக்க முடியாததையும் நடத்திக் காட்டக் கூடிய தைரியம் நிறைந்த ஆத்மா ஆகுக.

 

தைரியம் உள்ள குழந்தைகளுக்கு தந்தையின் உதவி இருக்கிறது. என்ற இந்த வரதானத்தின் ஆதாரத்தில் தைரியத்தின் முதல் திட எண்ணமாக நான் கண்டிப்பாக தூய்மை ஆக வேண்டும் என்பதை வைத்தீர்கள், மேலும் தந்தை நீங்கள் ஆத்மாக்கள் அனாதி - ஆதி தூய்மையானவர்கள் - அனேக தடவைகள் தூய்மையாகி இருக்கிறீர்கள், மேலும் ஆகிக் கொண்டேயிருப்பீர்கள் என்ற உதவி செய்தார். அனேக தடவையின் நினைவு மூலம் சக்திசாலி ஆகி விட்டீர்கள். பலமற்றவரிலிருந்து அந்தளவு பலம் நிறைந்தவராக ஆகிவிட்டீர்கள், அதனால் உலகத்தை அவசியம் தூய்மையாக்கி காண்பிப்போம் என்று சவால் விடுகிறீகள். எதை இல்லறத்தில் இருந்துக்கொண்டே தூய்மையாக இருப்பது கடினம் என்று ரிஷி, முனி, மகான் ஆத்மாக்கள் நினைக்கிறார்களோ, அதை நீங்கள் மிக சுலபம் என்று கூறுகிறீர்கள்.

 

சுலோகன்:

திட எண்ணம் வைப்பது தான் விரதம் இருப்பது, உண்மையான பக்தன் ஒருபொழுதும் விரதத்தை துண்டிப்பதில்லை.

 

பிரம்மா பாபாவிற்கு சமமாக ஆவதற்காக விசேஷ முயற்சி

 

எப்படி பிரம்மா பாபா சாதாரண ரூபத்தில் இருந்தும் அசாதாரண மற்றும் ஆன்மீக நிலையில் இருந்தார். அந்தமாதிரி தந்தையைப் பின்பற்றி செய்யுங்கள். எப்படி நட்சத்திரங்களின் கூட்டத்தில் விசேஷ நட்சத்திரமாக இருப்பதின் ஜொலிப்பு மற்றும் மின்மினுப்பு தூரத்தில் இருந்தே வேறுபட்டதாகவும், மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும், அதேபோல் நட்சத்திரங்களாகிய நீங்களும் சாதாரண ஆத்மாக்களின் மத்தியில் விசேஷ ஆத்மாக்களாகத் தென்படுங்கள்.

 

ஓம்சாந்தி