06-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! கோபம் மிகவும்
துக்கம் கொடுக்கக்கூடியது. இது தனக்கும் துக்கம் அளிக்கிறது,
மற்றவர்களுக்கும் துக்கம் கொடுக்கின்றது. ஆகையால் ஸ்ரீமத் படி
இந்த பூதங்களை வெற்றி அடைய வேண்டும்.
கேள்வி:
கல்ப-கல்பத்தின் கறை எந்த குழந்தைகள் மீது படிந்துள்ளது,
அதனுடைய விளைவு என்ன?
பதில்:
யார் தன்னை மிகவும் புத்திசாலி என நினைக்கிறார்களோ, ஸ்ரீமத்படி
முழுமை யாக நடப்பதில்லையோ, உள்ளுக்குள் ஏதாவது ஒரு விகாரம்
குப்தமாகவோ, வெளிப் படையான ரூபத்திலோ இருக்கிறது, ஆனால் அதை
நீக்குவதில்லை, மாயை சூழ்ந்து கொண்டேயிருக்கிறது. இப்படிப்பட்ட
குழந்தைகளின் மீது கல்ப கல்பத்தின் கறை படிந்திருக்கின்றது.
அவர்கள் கடைசி யில் மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
அவர்கள் தனக்குத் தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
பாடல்:
இங்கே இருளில் இருக்கிறான் மனிதன்.....
ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை யாரை சொர்க்கத்தின் தந்தை என்று கூறப்படுகிறதோ
அவர் அனைவருக்கும் தந்தை என குழந்தைகள் அறிகிறீர்கள். அவர்
குழந்தைகளுக்கு முன்பு அமர்ந்து புரிய வைக்கின்றார். பாபா
அனைத்து குழந்தைகளையும் இந்த கண் களினால் பார்க்கின்றார்.
அவருக்கு குழந்தைகளைப் பார்ப்பதற்கு தெய்வீகப் பார்வை
அவசியமில்லை. பரந்தாமத் திலிருந்து குழந்தைகளிடம்
வந்திருக்கிறேன் என பாபா அறிகிறார். இந்த குழந்தைகள் கூட இங்கே
தேகதாரியாகி நடிப்பை நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த
குழந்தைகளுக்கு எதிரில் அமர்ந்து படிக்க வைக்கின்றேன்.
எல்லையற்ற தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர். மீண்டும்
அவர் நம்மை பக்தி மார்க்கத்தின் ஏமாற்றங்களிலிருந்து விடுவித்து
நம்முடைய ஜோதியை ஏற்றிக் கொண்டு இருக்கிறார் என குழந்தைகள்
அறிகிறார்கள். இப்போது நாம் ஈஸ்வரிய குலத்தினர் அல்லது பிராமண
குலத்தினர் என அனைத்து சென்டர் களில் உள்ள குழந்தைகளும்
புரிந்து கொள்கிறார்கள். பரம்பிதா பரமாத்மாவிற்கு சிருஷ்டியைப்
படைக்கக்கூடியவர் என்று கூறப்படுகிறது. சிருஷ்டி எவ்வாறு
படைக்கப் படுகிறது என்பதை பாபா புரிய வைக்கிறார். தாய் தந்தை
இல்லாமல் ஒரு போதும் மனித சிருஷ்டி படைக்கப்பட முடியாது என
குழந்தைகள் அறிகிறார்கள். தந்தை மூலமாக சிருஷ்டி
படைக்கப்படுகிறது என்று கூறமாட்டார்கள். இல்லை. தாயும் நீயே
தந்தையும் நீயே....... என பாடப்படுகிறது. இந்த தாய் தந்தை
சிருஷ்டியைப் படைத்து பிறகு அவர்களை தகுதி அடைய வைக்கின்றார்.
இது மிகவும் சிறப்பானதாகும். கிறிஸ்து வந்து கிறிஸ்தவ தர்மத்தை
ஸ்தாபனை செய்வது போல மேலிருந்து தேவதைகள் வந்து தர்மத்தை
ஸ்தாபனை செய்ய மாட்டார்கள். கிறிஸ்துவைக் கூட தந்தை
என்கிறார்கள். ஒரு வேளை தந்தை என்றால் தாய் கூட அவசியம்
வேண்டும். அவர்கள் மேரியை மதர் என வைத்திருக்கிறார்கள். இப்போது
மேரி யார்? கிறிஸ்து அவர் மூலமாக குழந்தையை படைத்தாரா அல்லது
தானே தந்தையாகவும் தாயாகவும் இருக்கிறாரா? கிறிஸ்து விற்குள்
புதிய ஆத்மா வந்து உடலில் பிரவேசமாகிறது. யாருக்குள்
பிரவேசமாகியதோ அவர் மூலமாக பிரஜைகளை படைக்கிறார். அவர்கள்
கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டனர். புதிய ஆத்மா எது மேலிருந்து
வருகிறதோ அது தண்டனையை அனுபவிக்கக்கூடிய வகையில் அதனுடைய
கர்மங்கள் இல்லை. தூய்மையான ஆத்மா வருகிறது. பரம்பிதா பரமாத்மா
ஒரு போதும் துக்கத்தை அனுபவிக்க முடியாது. துக்கம் மற்றும்
திட்டு போன்ற அனைத்தும் இந்த சாகார உடலில் இருப்பவருக்குக்
கொடுக்கிறார்கள். கிறிஸ்துவைக் கூட சிலுவையில் ஏற்றுகிறார்கள்
என்றால் நிச்சயமாக எந்த உடலில் கிறிஸ்துவின் ஆத்மா
பிரவேசமாகியதோ அவர்தான் அந்த துக்கத்தைப் பொறுத்துக் கொள்கிறார்.
கிறிஸ்துவின் தூய்மையான ஆத்மா துக்கத்தை பொறுத்துக் கொள்ள
முடியாது. எனவே கிறிஸ்து தந்தையாகி விட்டார். தாயை எங்கிருந்து
கொண்டு வருவது. பிறகு மேரியை தாயாக்கி விட்டார்கள். மேரி
குமாரியாக இருந்தார். அவர் மூலமாக கிறிஸ்து பிறந்தார் என
காண்பிக்கிறார்கள். இப்போது குமாரி மூலமாக குழந்தை பிறந்தது
என்பது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது. இது அனைத்தும்
சாஸ்திரங் களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது. குந்தி
கன்னியாவாக இருந்தார். அவர் மூலமாக கர்ணன் பிறந்தார் என
காண்பிக்கப்பட்டிருக்கின்றது. இப்போது இது தெய்வீக திருஷ்டியின்
விஷயம் ஆகும். ஆனால் அவர்கள் காப்பியடித்திருக்கிறார்கள்.
எப்படி இந்த பிரம்மா தாயாக இருக் கின்றார். வாய் மூலமாக
குழந்தைகளைப் படைத்து பார்த்துக் கொள் வதற்காக மம்மாவிடம்
கொடுத்துள்ளார். எனவே கிறிஸ்துவிற்கும் அப்படியே ஆகும்.
கிறிஸ்து பிரவேஷமாகி தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார்.
அவர்களுக்கு கிறிஸ்துவின் வாய் வழி வம்ச சகோதர சகோதரிகள் எனக்
கூறுவார்கள். கிறிஸ்துவர்களின் பிரஜா பிதாவாக கிறிஸ்து
ஆகின்றார். யாருக்குள் பிரவேசமாகி குழந்தைகளைப் படைத்தாரோ அவர்
தாயாகி விட்டார். பிறகு பார்த்துக் கொள்வதற்காக மேரியிடம்
கொடுத்தார். அவர்கள் மேரியை தாய் என புரிந்து கொண்டனர். நான்
இவருக்குள் பிரவேசமாகி வாய்வழி சந்ததியை படைக்கிறேன் என பாபா
கூறுகின்றார். இந்த மம்மாவும் கூட வாய் வழி சந்ததி ஆவார். இது
விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.
இன்னொரு விஷயம், இன்று ஒரு குழுவினர் சைவ உணவைப் பற்றி
பிரச்சாரம் செய்வதற்காக அபுவில் வர இருக்கின்றனர். எனவே
அவர்களுக்கு எல்லையற்ற தந்தை இப்போது தேவி தேவதா தர்மத்தை
ஸ்தாபனை செய்து கொண்டு இருக்கின்றார். அவர்கள் உறுதியான
வெஜிடேரியனாக இருந்தனர், வேறு எந்த தர்மத்தினரும் இவ்வளவு
வெஜிடேரி யனாக இல்லை என பாபா புரிய வைக்கின்றார். இப்போது
வைஷ்ணவராக மாறுவதில், எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என்று
கூறுவார்கள். ஆனால் அனைவரும் மாற முடியாது. ஏனென்றால் பலருக்கு
பழக்கமாகி விட்டது. விடுவது மிகவும் கடினமாகும். ஆனால்
இதைப்பற்றி புரிய வைக்க வேண்டும். எல்லையற்ற தந்தை சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்தார். அதில் அனைவரும் வைஷ்ணவர்களாக அதாவது
விஷ்ணுவின் வம்சத்தினராக இருந்தனர். தேவதை கள் முற்றிலும்
நிர்விகாரியாக இருந்தனர். இன்றைய வெஜிடேரியனோ விகாரிகளாக
இருக்கிறார்கள். கிறிஸ்துவிலிருந்து 3000 வருடத்திற்கு முன்பு
பாரதம் சொர்க்கமாக இருந்தது. எனவே இவ்வாறெல்லாம் புரிய வைக்க
வேண்டும். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எந்த
மனிதர்களுக்கும் சொர்க்கம் என்றால் என்ன? எப்போது உருவாகியது?
அங்கே யார் இராஜ்யம் செய்தனர்? என்பது தெரியாது. லட்சுமி
நாராயணரின் கோவிலுக்குச் செல்கிறார்கள். பாபாவும் சென்றார்.
ஆனால் சொர்க்கத்தில் இவர்களுடைய இராஜ்யம் இருந்தது என்பது
தெரியாது. மகிமையை மட்டும் பாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு
யார் இராஜ்யத்தைக் கொடுத்தனர் என்பது தெரிய வில்லை. இது வரை
நிறைய கோவில்களைக் கட்டுகிறார்கள். ஏனென்றால் லட்சுமி செல்வத்தை
அளித்தார் என நினைக்கிறார்கள். ஆகவே தீபாவளி அன்று வியாபாரிகள்
லட்சுமி பூஜை செய்கிறார்கள். இந்த கோவில்களைக்
கட்டுபவர்களுக்குக் கூட புரிய வைக்க வேண்டும். வெளிநாட்டவர்கள்
வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பாரதத்தின் மகிமையைப் புரிய
வைக்க வேண்டும். கிறிஸ்துவிற்கு 3000 வருடத்திற்கு முன்பு
பாரதம் வெஜிடேரியனாக இருந்தது. இது போன்று வேறு யாரும் இருக்க
முடியாது. சங்கரர் மூலமாக வினாசம் என்று பாடப்பட்டு
இருக்கின்றது. பிறகு விஷ்ணுவின் இராஜ்யம் இருக்கும். பாபாவின்
மூலமாக சொர்க்கத்தின் ஆஸ்தியை எடுக்க வேண்டும் என்றால், வந்து
எடுத்துக் கொள்ளுங்கள். ரமேஷ் உஷா இருவருக்கும் சேவையில்
மிகவும் ஆர்வம் இருக்கிறது. இது அதிசயமான ஜோடி யாகும். மிகவும்
சேவை செய்யக்கூடியவர்கள் ஆவர். பாருங்கள் புதிது புதிதாக
வருபவர்கள் பழையவர்களை விட கூர்மையாகச் செல்கிறார்கள். பாபா
நிறைய யுக்திகளை தெரிவிக்கிறார். ஆனால் ஏதாவது ஒரு விகாரத்தின்
போதை இருக்கிறது என்றால் மாயை உற்சாகமாக இருக்க விடுவதில்லை.
சிலருக்குள் காமத்தின் சிறிய அம்சம் இருக்கின்றது, கோபமோ
பலருக்குள் இருக்கின்றது. பரிபூரணமாக யாரும் மாறவில்லை.
மாறிக்கொண்டு இருக்கிறார்கள். மாயாவும் உள்ளுக்குள் கடித்துக்
கொண்டே யிருக்கிறது. இராவண இராஜ்யம் ஆரம்பமாகியதிலிருந்து இந்த
எலிகள் கடிக்க ஆரம்பிக்க விட்டது. இப்போதோ பாரதம் முற்றிலும்
ஏழையாகி விட்டது. மாயை அனைவரையும் கல் புத்தியாக்கி விட்டது.
நல்ல நல்ல குழந்தைகளைக் கூட மாயை முற்றுகையிட்டு விடுகிறது.
அவர்களுக்கு நாம் எவ்வளவு பின்னால் சென்று கொண்டு இருக்கிறோம்
என்று கூடத் தெரிவதில்லை. பிறகு சஞ்சீவினி மூலிகையை முகரச்
செய்து உணர்வில் கொண்டு வரு கின்றார். கோபம் கூட துக்கத்தை
அளிக்கக் கூடியதாகும். தனக்கும் துக்கத்தை கொடுக் கின்றது.
பிறருக்கும் துக்கத்தைக் கொடுக்கிறது. சிலருக்குள் குப்தமாக
இருக்கின்றது. சிலருக்குள் வெளிப்படையாக இருக்கின்றது. எவ்வளவு
தான் புரிய வைத்தாலும் புரிந்து கொள்வதில்லை. இப்போது தன்னை
மிகவும் புத்திசாலி என நினைக்கிறார்கள். பின்னால் மிகவும்
வருத்தப்பட வேண்டியிருக்கும். கல்ப கல்பத்தின் கறை
படிந்திருக்கின்றது. ஸ்ரீமத்படி நடந்தால் நிறைய நன்மை இருக்கும்.
இல்லையென்றால் நஷ்டமும் நிறைய ஏற்படும். இருவரின் வழியும்
பிரசித்தமானது. ஸ்ரீமத் மற்றும் பிரம்மாவின் வழி. பிரம்மாவே
வந்தாலும் இவர் ஏற்றுக் கொள்ளமாட்டார்........ என்கிறார்கள்.
கிருஷ்ணரின் பெயரை எடுப்ப தில்லை. இப்போதோ பரம்பிதா பரமாத்மாவே
வந்து வழியைக் கொடுக்கின்றார். பிரம்மாவிற்கு கூட அவரிடத்தில்
தான் வழி கிடைக்கின்றது. பாபாவிற்கு குழந்தைகள் மீது அன்பு
இருக்கின்றது. குழந்தைகளை தலை மீது வைத்துக் கொள்கிறார். பிள்ளை
உயர்ந்த நிலைக்குச் சென்றால் குலத்தின் பெயர் வெளிப்படும் என
தந்தையின் குறிக்கோள் இருக்கின்றது. ஆனால் குழந்தைகளோ
தந்தையுடையதையும் ஏற்பதில்லை. தாதாவினுடையதையும் ஏற்பதில்லை
என்றால் பெரிய அம்மாவினுடையதையும் ஏற்பதில்லை. அவர்கள் நிலைமை
என்ன ஆகும். கேட்காதீர்கள், மற்றபடி சேவை செய்யக்கூடிய
குழந்தைகள் பாபாவின் இதயத்தில் இருக்கிறார்கள். பாபாவே
அவர்களின் மகிமையை செய்கிறார். இப்போது பாபா மீண்டும் அதே
பாரதத்தை விஷ்ணு புரியாக மாற்றுகின்றார்.
உங்களுக்கு மிகவும் போதை இருக்க வேண்டும். அந்த மக்களோ
தங்களுடைய பெயரை வெளிப்படுத்துவதற்காக தலையை உருட்டிக்
கொள்கிறார்கள். அரசாங்கத்திடம் இருந்து செலவு கிடைத்து
விடுகிறது. சந்நியாசிகளுக்கு கூட நிறைய பணம் கிடைக்கிறது.
இப்போது கூட பாரதத்தின் பழமையான யோகத்தைக் கற்பிப்பதற்காகப்
போகிறார்கள் என்றால் உடனே பணம் அளிப்பார்கள் என்கிறார்கள்.
பாபாவிற்கு யாருடைய பணமும் அவசியம் இல்லை. இவரே முழு
உலகத்திற்கும் உதவி செய்யக்கூடிய கள்ளம் கபடமற்ற பண்டாரி ஆவார்.
குழந்தைகளுக்கு உதவி கிடைக்கிறது. குழந்தைகள் தைரியம் வைத்தால்
பாபா உதவி செய்வார். யாராவது வெளியிலிருந்து வந்தால் இது
ஆசிரமம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற பழக்கம் இருக்கும். ஆனால்
நீங்கள் ஞானம் கேட்கவில்லை. ஏன் கொடுக்கிறீர்கள்? எதுவும்
தெரிய வில்லை. நாம் விதை விதைக்கிறோம் என்றால் சொர்க்கத் தில்
பலன் கிடைக்க வேண்டும். எப்போது ஞானத்தைக் கேட்கிறார்களோ
அப்போது தான் தெரியும். இப்படி கோடிக் கணக்கானவர்கள் வருவார்கள்.
பாபா குப்த ருபத்தில் வந்திருக்கிறார். இது நல்லது. கிருஷ்ணரின்
ரூபத்தில் வருகின்றார் என்றால், மணல் போன்று ஒன்றாகச் சேர்ந்து
விடுவார்கள். ஒரேயடியாக ஒட்டிக் கொள்வார்கள். யாரும் வீட்டில்
அமர மாட்டார்கள். நீங்கள் ஈஸ்வரிய சந்ததியினர். இதை
மறக்காதீர்கள். பாபாவிற்கோ மனதில் குழந்தைகள் முழு சொத்தும்
அடைய வேண்டும் என்று இருக்கின்றது. சொர்கத்தில் நிறைய பேர்
வருவார்கள். ஆனால் தைரியம் வைத்து உயர்ந்த பதவி பெறுபவர்கள்
கோடியில் ஒரு சிலரே வெளிப்படுவார்கள். நல்லது.
தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் இனிமையிலும் இனிமையான
காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக்
குழந்தைகளுக்கு நமஸ்தே.
இரவு வகுப்பு 15.06.1968
முடிந்து போனவைகளைத் திரும்ப நினைப்பதால் யாருடைய மனம்
பலகீனமாக இருக் கின்றதோ அவர்களுடைய பலகீனமும், ரிவைஷ் ஆகிறது.
ஆகவே குழந்தைகள் நாடகம் என்ற தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு
இருக்கிறார்கள். முக்கியமான நன்மை நினைவினால் தான் ஏற்படும்.
நினைவினால் தான் ஆயுள் அதிகரிக்கிறது. நாடகத்தை குழந்தைகள்
புரிந்து கொண்டால் எப்போதும் கவலையில்லை. டிராமாவில் இச்சமயம்
ஞானத்தைக் கற்பது மற்றும் கற்பிப்பதன் பாகம் நடந்து கொண்டு
இருக்கின்றது. பிறகு பாகம் முடிந்து விடும். பாபா வினுடைய
நடிப்பும் இருக்காது. குழந்தைகளினுடையதும் இருக்காது. அவருடைய
கொடுக்கக்கூடிய பாகமும் இல்லை. நம்முடைய எடுக்கக்கூடிய பாகமும்
இருக்காது. அப்படி என்றால், ஒன்றாகி விடும் அல்லவா? நம்முடைய
பாகம் புதிய உலகத்தில் ஆரம்பமாகி விடும். பாபாவினுடைய பாகம்
சாந்திதாமத்தில் இருக்கும். நடிப்பினுடைய ரீல்
பதிவாகியிருக்கின்றது அல்லவா? நம்முடையது பிராப்தியினுடைய
பாகமாகும். பாபாவினுடையது சாந்திதாமத் தினுடைய பாகமாகும்.
கொடுத்தல் மற்றும் எடுத்தலின் பாகம் முடிவடைகிறது, டிராமாவும்
நிறைவடைகிறது. பிறகு நாம் இராஜ்யம் செய்வதற்காக வருவோம். இந்த
பாகம் மாறும். ஞானம் முடிந்து போகும். நாம் அவ்வாறு
மாறிவிடுவோம். பாகமே முடிந்து விட்டால் பிறகு வித்தியாசம்
இருக்காது. குழந்தைகளுடன் அப்பாவின் நடிப்பு இருக்காது.
குழந்தைகள் ஞானத்தை முழுமையாக எடுத்து விடுகிறார்கள். எனவே
அவரிடம் எதுவும் இருப்பதில்லை. கொடுக்கக் கூடியவரிடமும்
இருப்பதில்லை, எடுக்கக் கூடியவரிடமும் குறை இருக்காது. எனவே
இருவரும் ஒருவருக்கொருவர் சமமாகி விட்டனர். இதில் நன்கு சிந்தனை
செய்யக் கூடிய புத்தி வேண்டும். முக்கியமான முயற்சி நினைவு
யாத்திரை ஆகும். பாபா புரிய வைக் கின்றார். கூறும் பொழுது
பெரிய விஷயமாக இருக்கிறது. புத்தியில் சூட்சுமமாக இருக்கிற
தல்லவா? சிவபாபாவின் ரூபம் என்ன என்பது உள்ளுக்குள் புரிகிறது.
புரிய வைப்பதில் பெரிய ரூபமாக இருக்கிறது. பக்தி மார்க்கத்தில்
பெரிய லிங்கத்தை உருவாக்கி விடுகிறார்கள். ஆத்மாவோ சிறியதல்லவா!
இது இயற்கை யாகும். எங்கே முடிவை அடையும். பிறகு கடைசியில்
முடிவற்றது என்று கூறிவிடுகிறார்கள். அனைத்து நடிப்பும்
ஆத்மாவில் பதிவாகி யிருக்கிறது என பாபா புரிய வைத்துள்ளார். இது
இயற்கையாகும். முடிவைப் பெற முடியாது. சிருஷ்டிச் சக்கரத்தின்
முடிவை அடைகிறார்கள். படைக்கக்கூடியவர் மற்றும் படைப்பினுடைய
முதல் இடை கடையை நீங்கள் அறிகிறீர்கள். பாபா நாலேட்ஜ்புல் ஆவார்.
இருப்பினும் நாம் முழுமையடைந்து விடுவோம். பெறுவதற்கு எதுவும்
இருக்காது. பாபா இவருக்குள் பிரவேசமாகி படிக்க வைக்கின்றார்.
அவரே பிந்துவாக இருக்கின்றார். ஆத்மா அல்லது பரமாத்மாவின்
காட்சி கிடைப்பதால் குஷி ஏற்படாது. முயற்சி செய்து பாபாவை
நினைத்தால் தான் விகர்மங்கள் அழியும். எனக்குள் ஞானம் முடிந்து
போய் விட்டால் உங்களுக்குள்ளும் முடிந்து போகும் என பாபா
கூறுகின்றார். ஞானத்தை அடைந்து உயர்ந்தவர் ஆகி விடு கிறார்கள்.
அனைத்தையும் எடுத்துக் கொண்டாலும் பாபாவோ பாபா தான் அல்லவா?
ஆத்மாக் களாகிய நீங்களோ ஆத்மாக்களாகத் தான் இருப்பீர்கள்.
பாபாவாக மாறியிருக்க மாட்டீர்கள். இது ஞானம் ஆகும். பாபா பாபா
ஆவர். குழந்தைகள் குழந்தைகள் ஆவர்கள். இது அனைத்தும் விசார
சாகர் மந்தனம் செய்து ஆழமாக (எண்ணங்களின் கடலை கடைந்து)
செல்லக்கூடிய விசயங்கள் ஆகும். அனைவரும் செல்ல வேண்டும் என்பதை
அறிகிறார்கள். அனைவரும் போகக்கூடியவர்கள் தான். மற்றபடி ஆத்மா
மட்டும் சென்று இருக்கும். முழு உலகமும் அழிந்து போய் விடும்.
இதில் பயமற்று இருக்க வேண்டும். பயமற்று இருப்பதற்கு முயற்சி
செய்ய வேண்டும். சரீரம் போன்றவற்றின் உணர்வு சிறிதும் இருக்கக்
கூடாது. பாபா தனக்குச் சமமாக மாற்றுகிறார். குழந்தைகளாகிய
நீங்களும் தனக்கு சமமாக மாற்றுகிறீர்கள். ஒரு தந்தையின்
நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இப்போது நேரம்
இருக்கிறது. இந்த ஒத்திகை வேகமாக செய்ய வேண்டும். பயிற்சி இல்லை
என்றால் நின்று விடுவீர்கள். கால்கள் தடுமாற ஆரம்பிக்கும்.
மேலும் திடீரென்று இதயம் நின்று விடும். தமோபிரதானமான உடலில்
இதயம் நின்று போக தாமதம் ஆகாது. எவ்வளவு அசரீரி ஆகிக் கொண்டே
போகிறீர்களோ பாபாவை நினைவு செய்வீர்களோ அவ்வளவு நெருக்கத்தில்
வந்து கொண்டே இருப்பீர்கள். யோகம் செய்யக்கூடியவர்கள் தான்
பயமற்று இருப்பார்கள். யோகத்தினால் தான் சக்தி கிடைக் கின்றது.
ஞானத்தினால் செல்வம் கிடைக் கின்றது. குழந்தைகளுக்கு சக்தி
வேண்டும். எனவே சக்தியைப் பெறுவதற்கு பாபாவை நினைத்துக்
கொண்டேயிருங்கள். பாபா தான் அழிவற்ற சர்ஜன் ஆவார். அவர் ஒரு
போதும் நோயாளி ஆக முடியாது. நீங்கள் தங்களுடைய அழிவற்ற மருந்தை
எடுத்துக் கொண்டேயிருங்கள் என பாபா கூறுகின்றார். நான் ஒரு
போதும் நோயே ஏற்படாத வகையில் சஞ்ஜீவனி மூலிகையை கொடுக்கிறேன்.
பதீத பாவனர் பாபாவை மட்டும் நினைவு செய்து கொண்டேயிருந்தால்
தூய்மையாகி விடலாம். தேவதைகள் எப்போதும் தூய்மையானவர்களாக
இருக்கிறார்கள் அல்லவா? குழந்தைகளுக்கு நாம் கல்பகல்பமாக ஆஸ்தி
அடைகிறோம் என்ற நிச்சயம் உருவாகி விட்டது. இப்போது வந்திருப்பது
போல கணக்கற்ற முறை பாபா வந்திருக்கிறார். பாபா என்ன
கற்பிக்கின்றாரோ, புரிய வைக் கின்றாரோ அதுவே இராஜயோகம் ஆகும்.
இந்த கீதை போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத் தினுடையதாகும்.
இந்த ஞான மார்க்கத்தை பாபா தான் தெரிவிக்கிறார். பாபா தான்
வந்து கீழேயிருந்து மேலே உயர்த்துகின்றார். யார் உறுதியான
நிச்சய புத்தி உடையவர் களாக இருக்கிறார்களோ அவர்களே மாலையில்
மணியாகிறார்கள். பக்தி செய்து செய்து நாம் கீழே விழுந்து
விட்டோம் என குழந்தைகள் புரிந்து கொள்கிறீர்கள். இப்போது பாபா
வந்து உண்மையான வருமானத்தை செய்விக்கிறார். எவ்வளவு வருமானத்தை
பாரலௌகீக தந்தை அடைய வைக்கிறாரோ அவ்வளவு வருமானத்தை லௌகீக தந்தை
அடைய வைப்பதில்லை. நல்லது, குழந்தைகளுக்கு இரவு வணக்கம் மற்றும்
நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சேவை செய்யக்கூடியவர்களாக ஆவதற்கு விகாரங்களின்
அம்சத்தைக் கூட முடிக்க வேண்டும். சேவைக்காகத் துள்ளி எழ
வேண்டும்.
2. நாம் ஈஸ்வரிய வாரிசு, ஸ்ரீமத் படி பாரதத்தை விஷ்ணு
புரியாக மாற்றிக் கொண்டு இருக்கிறோம், அங்கே அனைவரும் உறுதியான
வைஷ்ணவர்களாக இருப்பார்கள், இந்த பெருமிதத்தில் இருக்க வேண்டும்.
வரதானம்:
துக்கத்தின் சக்கரத்திலிருந்து சதா விடுபட்டு இருக்கும் மற்றும்
அனைவரையும் விடுவிக்கக் கூடிய சுவதரிசன சக்கரதாரி ஆகுக.
எந்தக் குழந்தைகள் கர்மேந்திரியங்களுக்கு வசமாகி இன்று கண்கள்,
வாய் அல்லது திருஷ்டி ஏமாற்றி விட்டது என்று கூறுகிறார்களோ,
ஏமாற்றம் அடைவது என்றால் துக்கத்தின் அனுபவம் செய்வதாகும்.
விரும்பவில்லை, ஆனால் குழப்பம் என்ற சக்கரத்தில் மாட்டிக்
கொண்டேன் என்று உலகத்தினர் கூறுகின்றனர். ஆனால் சுவதரிசன
சக்கரதாரிக் குழந்தைகள் ஒருபோதும் ஏமாற்றம் என்ற சக்கரத்தில்
வரவே முடியாது. அவர்கள் துக்கம் என்ற சக்கரத்திலிருந்து
விடுபட்டு இருப்பவர்கள், மேலும் அனைவரையும் விடுவிக்கக்
கூடியவர்கள். எஜமானர்களாகி அனைத்து கர்மேந்திரியங்களின் மூலம்
காரியங்கள் செய்விக்கக் கூடியவர்களாக இருப்பர்.
சுலோகன்:
அழிவற்ற சிம்மாசனமாரி ஆகி தனது சிரேஷ்ட பெருமையில் இருக்கும்
போது ஒருபோதும் குழப்பம் அடைய மாட்டீர்கள்.
|
|
|