06.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! இப்பொழுது விகாரங்களை தானம் செய்வதால் கிரஹணம் நீங்கும் மேலும் இந்த தமோபிரதான உலகம் சதோபிரதானமாகும்,

 

கேள்வி:

குழந்தைகள் நீங்கள் எந்த விஷயத்தில் ஒருபொழுதும் தொல்லைகளுக்கு ஆளாகக் கூடாது?

 

பதில்:

நீங்கள் தன்னுடைய வாழ்க்கையில் (சோர்ந்து போய்) ஒரு பொழுதும் தொல்லைகளுக்கு ஆளாகக் கூடாது. ஏனென்றால் இந்த பிறவி வைரத்திற்கு சமமாக மகிமை செய்யப் படுகிறது, இந்த வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும், அப்பொழுது தான் ஞானத்தை கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். இங்கு நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கின்றீர்களோ, வருமானம் செய்கின்றீர்களோ, அந்தளவு கணக்கு, வழக்குகள் முடிந்துவிடும.;

 

பாடல்:

ஓம் நமச்சிவாய.

 

ஓம் சாந்தி:

இன்று வியாழக்கிழமை, குழந்தைகள் நீங்கள் இதனை சத்குருவார் என கூறுவீர்கள் ஏனென்றால் சத்யுகத்தை படைப்பவர், சத்ய நாரயாணர் கதையை நடைமுறையில் கூறுகின்றார், நரனிலிருந்து நாராயணராக ஆக்குகின்றார். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் என மகிமை செய்யப்படுகிறது, மேலும் விருட்சபதியாகவும் இருக்கிறார். இது மனித உலக மரமாக இருக்கிறது, இதனை கல்ப விருட்சம் என கூறப்படுகிறது. கல்பம் என்றால் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மிகச்சரியாக திரும்பவும் நடக்கிறது. மரமும் கூட திரும்பவும் வளர்கிறதல்லவா! 6 மாதம் கழித்து பூக்கள் மலரும் பிறகு தோட்டக்காரர்கள் வேரோடு எடுத்து விடுகின்றனர் மீண்டும் நடுகின்றனர். அதன் மூலம் மலர்கள் மலர்கின்றன. தந்தையின் ஜெயந்தியை அரைக்கல்பம் கொண்டாடுகின்றனர். பிறகு அரைக்கல்பம் மறந்து விடுகின்றனர். பக்திமார்க்கத்தில் அரைக்கல்பமாக நினைவு செய்கின்றனர். பாபா எப்பொழுது வந்து மலர்த் தோட்டத்தை உருவாக்குகின்றார்? தசைகளும் (கிரகங்கள்) அதிகம் உள்ளன. பிரகஸ்பதி தசை ஏற்படுகிறது, பிறகு இறங்கும் கலையின் தசை ஏற்படுகிறது. இந்த நேரம் பாரதத்தில் இராகுவின் கிரஹணம் பிடித்திருக்கிறது. சந்திரனுக்கும் கூட கிரஹணம் ஏற்படுகிறதல்லவா! எனவே தானம் கொடுத்தால் கிரஹணம் நீங்கும் என கூறுகின்றனர். இந்த பஞ்ச விகாரங்களை தானம் கொடுங்கள் கிரஹணம் நீங்கும் என தந்தை கூறுகின்றார். இப்பொழுது முழு உலகிலும், பஞ்ச தத்துவங்களின் மீதும் கிரஹணம் பிடித்திருக்கிறது, ஏனென்றால், தமோ பிரதானமாக இருக்கிறது. ஒவ்வொரு பொருளும் முதலில் புதியதாக பிறகு பழையதாக அவசியம் ஏற்படும். புதியதை சதோபிரதானம் என்றும் பழையதை தமோபிரதானம் என்றும் கூறுகின்றனர். சிறிய குழந்தைகளை சதோபிரதானமாக, மகாத்மாவாக கருதப்படுகிறது, ஏனென்றால், அவர்களிடம் பஞ்ச விகாரங்கள் இல்லை. பக்தியை சந்நியாசிகள் சிறு வயதில் செய்கின்றனர், இராம தீர்த்தர் கிருஷ்ணருடைய பூஜாரியாக இருந்தார், சந்நியாசம் செய்த பிறகு பூஜை நின்று விட்டது, இவ்வுலகிற்கு தூய்மை வேண்டுமல்லவா! பாரதம் முதலில் அனைத்தையும் விட தூய்மையாக இருந்தது, எப்போது தேவதைகள் நேர் எதிரான (விகார) வழியில் நடக்க ஆரம்பித்தார்களோ அதன் பிறகு நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சொர்க்கத்தின் பொருட்கள், தங்க மாளிகைகள் போன்றவை அழிந்து விட்டது, பிறகு புதியதாக உருவாகும். அழிவு அவசியம் ஏற்படும். இராவண இராஜ்யம் ஆரம்பமானது முதல் தொல்லைகள் ஏற்படுகின்றன, இந்த நேரம் அனைவரும் தூய்மையற்றவர்களாகி விட்டனர், சத்யுகத்தில் தேவதைகள் இராஜ்யம் செய்தனர். அசுரர்களுக்கும், தேவதைகளுக்கும் இடையே சண்டையை காட்டியுள்ளனர், ஆனால் தேவதைகள் சத்யுகத்தில் இருந்தனர். அங்கு சண்டை எவ்வாறு ஏற்படும்? சங்கமயுகத்திலும் தேவதைகள் இல்லை. உங்களுடைய பெயர் பாண்டவர்கள் ஆகும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் சண்டை ஏற்பட்டதில்லை. இவையெல்லாம் கட்டுக் கதைகள். எவ்வளவு பெரிய (உலக) மரமாக (மனித சிருஷ்டி) இருக்கிறது, இதில் எவ்வளவு இலைகள் கணக்கில்லாமல் இருக்கிறது, இதனை யாராவது கணக்கிட முடியுமா! சங்கமயுகத்தில் தேவதைகள் இல்லை. தந்தை வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார், ஆத்மா இதனைக் கேட்டு தலையசைக்கின்றது. நான் ஆத்மா, பாபா நமக்கு கற்ப்பிக்கின்றார், இதனை உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும். தந்தை நம்மை தூய்மையில்லாத நிலையிருந்து தூய்மையாக்குகின்றார். நல்ல மற்றும் கெட்ட சம்ஸ்காரங்கள் ஆத்மாவில் மட்டுமே இருக்கிறதல்லவா! ஆத்மா தனது உடலின் வாய் மூலமாக பாபா நமக்கு படிப்பிக்கின்றார் என கூறுகிறது. எனக்கும் புரிய வைப்பதற்கு உடல் வேண்டும் என தந்தை கூறுகின்றார். பாபா ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு ஞானத்தைக் கூற வருகின்றார் என்ற மகிழ்ச்சி ஆத்மாவில் இருக்கிறது. நீங்கள் இப்பொழுது எதிரில் அமர்ந்துள்ளீர்கள், மதுபனுக்கு மகிமை இருக்கிறது. அவர் தான் ஆத்மாக்களின் தந்தையாக இருக்கின்றார் அல்லவா! அனைவரும் அவரை அழைக்கின்றனர். உங்களுக்கு இங்கு அவருக்கு முன்பாக அமர்ந்திருப்பதில் ஆனந்தம் ஏற்படுகிறது. ஆனால் அனைவரும் இங்கு வந்திருக்க முடியாது, தன்னுடைய வேலை, சேவை இவற்றைக் கவனிக்க வேண்டும். ஆத்மாக்கள் கடலின் அருகில் வந்து,தாரணை செய்து பிறகு சென்று மற்றவர்களுக்குக் கூற வேண்டும். இல்லையெனில் மற்றவர்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும்? யோகி மற்றும் ஞானி ஆத்மாக்களுக்கு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இப்பொழுது சிவ ஜெயந்தி கொண்டாடப்படுகிறதல்லவா! பகவான் வாக்கியம், கிருஷ்ணருக்காக பகவானின் வாக்கியம் என்று சொல்லப்படுவதில்லை, அவர் தெய்வீக குணங்கள் நிறைந்த மனிதர் ஆவர். தெய்வீக தர்மம் என அழைக்கப்படுகிறது. இப்பொழுது தேவி-தேவதை தர்மம் இல்லை, படைக்கப்படுகிறது என குழந்தைகள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் தன்னை தேவி-தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என கூறமாட்டீர்கள் இப்பொழுது நீங்கள் பிராமண தர்மத்தைச் சேர்ந்தவர்கள், தேவி-தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். தேவதைகளின் நிழல் கூட இந்த அழுக்கான உலகில் பட முடியாது, இங்கு தேவதைகள் வர முடியாது. உங்களுக்காக புதிய உலகம் வேண்டும். இலட்சுமி பூஜை செய்வதற்கு முன் வீட்டை எவ்வளவு சுத்தம் செய்கின்றனர். ஆக இந்த உலகம் எவ்வளவு சுத்தமாக வேண்டும். முழு உலகமும் அழியத் தான் வேண்டும். இலட்சுமியிடம் மனிதர்கள் செல்வத்தை கேட்கின்றனர், இலட்சுமி பெரியவரா அல்லது ஜெகதம்பா பெரியவரா? அம்பாளுக்கு நிறைய கோவில்கள் உள்ளன. மனிதர்களுக்கு இதெல்லாம் தெரியாது. இலட்சுமியை சொர்க்கத்தின் எஜமானியாக மற்றும் ஜெகதம்பாவை சரஸ்வதி தேவியாக கூறுகின்றனர், ஜெகதம்பாவே பிறகு இலட்சுமியாக ஆகின்றார். உங்களுடைய நிலை தேவதைகளை விட உயர்ந்தது. தேவதைகளுடையது குறைந்தது. உயர்ந்ததிலும் உயர்ந்தது பிராமண குலம் அல்லவா! நீங்கள் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவர் சரஸ்வதி, ஜெகதம்பா என மகிமை செய்யப்படுகிறது, அவர்கள் மூலம் என்ன கிடைக்கிறது? உலக அரசாட்சியாகும். அங்கு நீங்கள் செல்வந்தராக இருப்பீர்கள் அங்கு உலக இராஜ்யம் கிடைக்கும், பிறகு ஏழ்மையாகி பக்திமார்க்கம் ஆரம்பமாகும், பிறகு இலட்சுமியை நினைவு செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இலட்சுமிக்கு பூஜை செய்கின்றனர். மேலும் அழைக்கின்றனர். ஜெகதம்பாவை ஒவ்வொரு ஆண்டும் அழைப்பதில்லை. ஆனால் எப்பொழுதும் பூஜை நடைபெறுகிறது, எப்பொழுது வேண்டுமானாலும் ஜெகதம்பா கோவிலுக்குச் செல்வார்கள், இங்கு கூட எப்பொழுது விரும்பினாலும் ஜெகதம்பாவை சந்திக்க முடியும், நீங்களும் கூட ஜெகதம்பா அல்லவா! அனைவருக்கும் உலகத்தின் எஜமானராக ஆவதற்கான வழிகாட்டுபவர்கள், ஜெகதம்பாவிடம் அனைவரும் நிறைய வேண்டுகின்றனர். இலட்சுமியிடம் செல்வத்தை மட்டும் வேண்டுகின்றனர். ஜெகதம்பாவிடம் நிறைய வேண்டுதல் செய்கின்றனர், எனவே அனைவரைக் காட்டிலும் உயர்ந்த அந்தஸ்து இப்பொழுது உங்களுடைய தாகும், இப்பொழுது தந்தையிடம் வந்து குழந்தைகளாக ஆகிவிட்டீர்கள், தந்தை பிராப்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 

இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய வம்சத்தில் இருக்கின்றீர்கள், பிறகு தெய்வீக வம்சத்திற்குச் செல்வீர்கள். இந்த நேரம் உங்களுடைய மனதின் விருப்பங்கள் எதிர்காலத்திற்காக நிறைவேறுகிறது, மனிதர்களுக்கு விருப்பங்கள் இருக்குமல்லவா! உங்களுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகின்றன. இது அசுர உலகமாக இருக்கிறது. இக்காலத்தில் குழந்தைகளை எவ்வளவு பெற்றுக்கொள்கின்றனர். குழந்தைகளுக்கு சத்யுகத்தில் கிருஷ்ணருடைய ஜென்மம் எப்படி ஏற்படும் என்ற காட்சி காட்டப்பட்டது, அங்கு அனைத்தும் விதிப் பூர்வமாக நடக்கும், துக்கத்தின் பெயரே கிடையாது, அதற்குப் பெயர் சுகதாமம். நீங்கள் பல முறை சுகத்தைக் கடந்து வந்திருக்கிறீர்கள், அநேக முறை தோல்வியும் வெற்றியும் அடைந்தீர்கள். நமக்கு பாபா கற்பிக்கின்றார் என்ற நினைவு இப்பொழுது வந்துவிட்டது. பள்ளியிலும் ஞானத்தைப் படிக்கின்றனர், நல்ல தன்மைகளைக் கற்றுக்கொள்கின்றனர், ஆனால் அங்கு இலட்சுமி-நாராயணர் போன்ற நல்ல நல்ல பண்புகளைக் கற்பதில்லை. இப்பொழுது நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்கின்றீர்கள். சர்வ குண சம்பன்ன என்ற மகிமையும் செய்யப்படுகிறது, ஆக நீங்கள் அவ்வாறு ஆக வேண்டும். குழந்தைகள் நீங்கள் வாழ்வில் ஒரு போதும் தொந்தரவுக்குள்ளாகக் கூடாது, ஏனென்றால், வைரம் போன்ற வாழ்க்கை என மகிமை செய்யப்படுகிறது, இதனை நன்றாக பாதுகாக்க வேண்டும், ஆரோக்கியமாக இருந்தால் தான் ஞானம் கேட்பீர்கள், வியாதி இருந்தாலும் ஞானம் கேட்க முடியும், தந்தையை நினைவு செய்ய முடியும். இங்கு எவ்வளவு காலம் வாழ்கின்றீர் களோ அவ்வளவு சுகமாக இருப்பீர்கள், வருமானம் ஏற்படும், கர்மத்தின் கணக்கு முடியும். பாபா சத்யுகம் எப்பொழுது வரும்? இந்த உலகம் கெட்டுப் போய் விட்டது என குழந்தைகள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்- அட, முதலில் கர்மாதீத் நிலையை அடையுங்கள். எவ்வளவு முடியுமோ நன்றாக முயற்சி செய்யுங்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள், இது தான் முறையான நினைவாகும். ஒரு சிவனை பக்தி செய்வதே முறையான, சதோபிரதானமான பக்தியாகும். பிறகு தேவதைகளை நினைப்பது சதோ நிலையான பக்தியாகும். நடந்தாலும் அமர்ந்தாலும் என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை கூறுகின்றார். ஹே! பதீத பாவனரே, விடுவிப்பவரே, வழிகாட்டியே, என குழந்தைகள் அழைக்கின்றனர். இவ்வாறு ஆத்மா தானே கூறுகின்றது. இல்லையா?

 

குழந்தைகள் நினைவு செய்கின்றனர், தந்தை இப்பொழுது நினைவுபடுத்துகிறார், ஹே! துக்கத்தை போக்கி சுகத்தை தருபவரே வாருங்கள், எங்களை துக்கத்திலிருந்து விடுதலை செய்யுங்கள் காப்பாற்றுங்கள், அமைதியான உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள் என நீங்கள் நினைத்து வந்தீர்கள். உங்களை சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்வேன், பிறகு சுகதாமத்தில் நான் உங்களோடு கூட இருக்கமாட்டேன், இப்பொழுது தான் உங்களுடன் இருக்கிறேன், அனைத்து ஆத்மாக்களையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது கல்வியைத் தருவதன் கூடவே வீட்டிற்கும் என்னோடு அழைத்துச் செல்கிறேன், நான் எனது அறிமுகத்தை குழந்தைகள் உங்களுக்கு நல்ல முறையில் கூறுகிறேன். யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ அதன் ஆதாரத்தில் அங்கு பிராப்தியடைவார்கள். ஞானத்தையோ தந்தை மிகவும் அதிகம் கற்பிக்கின்றேன். எவ்வளவு முடியுமோ என்னை நினைவு செய்யுங்கள், இதனால் பாவங்கள் அழியும், மேலும் பறப்பதற்கு இறக்கை கிடைக்கும். ஆத்மாவிற்கு ஸ்தூலமான இறக்கைகள் கிடையாது. ஆத்மா ஒரு சிறிய புள்ளியாக இருக்கிறது, ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் பதிவாகி உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆத்மா மற்றும் பரமாத்மாவின் அறிமுகம் யாருக்கும் இல்லை. நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் இதனை யாரும் அறியவில்லை என தந்தை கூறுகின்றார். என்மூலமாக என்னைப் பற்றியும், எனது படைப்பைப் பற்றியும் புரிந்து கொள்வார்கள். நான் மட்டுமே வந்து குழந்தைகளுக்கு எனது அறிமுகத்தைத் தருகின்றேன். ஆத்மா என்றால் என்ன அதையும் புரிய வைக்கின்றேன், இதைத்தான் ஆத்மா தன்னை உணர்தல் என கூறப்படுகிறது. ஆத்மா புருவத்தின் மத்தியில் இருக்கிறது. புருவத்தின் மத்தியில் பிரகாசமாக ஜொலிக்கும் நட்சத்திரம் போன்றது என கூறுகின்றனர், ஆனால் ஆத்மா என்றால் என்ன? இதனை முற்றிலும் புரிந்து கொள்ளவில்லை. ஆத்மாவுடைய காட்சி கிடைத்தது என யாரேனும் கூறினால் அவர்களுக்குப் புரிய வையுங்கள், நீங்கள் புருவத்தின் மத்தியில் நட்சத்திரம் போன்று இருக்கிறது என கூறுகின்றீர்கள், பிறகு நட்சத்திரத்தில் என்ன காண்பீர்கள்? திலகம் கூட நட்சத்திரம் போன்று இடுகின்றனர், சந்திரனிலும் கூட நட்சத்திரம் காட்டுகின்றனர், உண்மையில் ஆத்மா உருவத்தில் நட்சத்திரம் போன்றது. நீங்கள் ஞான நட்சத்திரங்கள், மற்றபடி வானத்தில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இந்த பூமிக்கு வெளிச்சம் தருகின்றன, அவைகள் யாரும் தேவதைகள் இல்லை, என தந்தை புரிய வைக்கின்றார். பக்திமார்க்கத்தில் சூரியனுக்கு தண்ணீர் தருவதாக காட்டுகின்றனர், பக்திமார்க்கத்தில் இந்த பாபாவும் அனைத்தையும் செய்து வந்தார். சூரிய தேவதாய நமஹ, சந்திர தேவதாய நமஹ என கூறி தண்ணீர் கொடுக்கின்றனர், இவையெல்லாம் பக்திமார்க்கமாகும். இவர் நிறைய பக்தி செய்து வந்தார். முதல் நம்பர் பூஜிக்கத்தகுந்த நிலையிலிருந்து முதலில் நம்பர் பூஜாரியாக ஆகிவிட்டார். நம்பர் கணக்கிடப்படுமல்லவா! ருத்ர மாலையிலும் நம்பர் இருக்கிறதல்லவா! இவர் அனைவரையும் விட அதிகமாக பக்தி செய்தார். இப்பொழுது சிறியோர், பெரியோர் அனைவருக்கும் வானப்பிரஸ்த நிலையாகும். இப்பொழுது நான் அனைவரையும் அழைத்துச் செல்வேன், பிறகு நீங்கள் திரும்ப கலியுகத்தில் வரமாட்டீர்கள். மற்றபடி பிரளயம் ஏற்பட்டது, தண்ணீல் மூழ்கியது, பிறகு ஆலையில் கிருஷ்ணர் வந்தார் என சாஸ்திரத்தில் காட்டியுள்ளனர். கடல் சம்மந்தமான விசயமில்லை என தந்தை புரிய வைக்கின்றார். அங்கு கர்ப்ப மாளிகையாக இருக்கும், அங்கு குழந்தைகள் மிகவும் சுகமாக இருப்பார்கள், இங்கு கர்ப்ப ஜெயிலாக இருக்கிறது, பாவத்தின் தண்டனையை கர்ப்பத்தில் அனுபவிக்கின்றனர். இருந்தாலும் தந்தை கூறுகின்றார்- மன்மனாபவ, என்னை நினைவு செய்யுங்கள். கண்காட்சியில் சிலர் கேட்கின்றனர், ஏணிப்படி சித்திரத்தில் வேறு தர்மங்களை ஏன் காட்டவில்லை? மற்றவர்களுக்கு 84 பிறவிகள் இல்லை எனக் கூறுங்கள். அனைத்து தர்மங்களும் கல்ப மரத்தில் காட்டப்பட்டு இருக்கிறது, அதன் மூலம் நீங்கள் எத்தனை பிறவிகள் எடுப்போம் என கணக்கு பாருங்கள். ஏணிப்படியில் 84 பிறவிகளை மட்டுமே காட்ட முடியும். மற்ற அனைத்தும் காலச்சக்கரம் மற்றும் கல்ப மரத்தில் காட்டப்பட்டுள்ளன, இதில் அனைத்து விசயங்களும் புரிய வைக்கப்பட்டுள்ளன. இலண்டன் எங்கிருக்கிருக்கிறது, மற்ற நகரங்கள் எங்கிருக்கிறது என்பதை வரைபடத்தை பார்க்கும் பொழுது புத்தியில் வருகிறதல்லவா! தந்தை எவ்வளவு சகஜமாகப் புரிய வைக்கின்றார். 84 பிறவிச்சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என கூறுங்கள், இப்பொழுது தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக வேண்டுமானால், எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள், இதனால் தூய்மையாகி தூய்மையான உலகிற்குச் செல்வீர்கள். எந்தவித கஷ்டமும் கிடையாது. எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ தந்தையை நினைவு செய்யுங்கள். பிறகு இந்த பழக்கம் உறுதியாகி விடும். தந்தையின் நினைவில் நீங்கள் டெல்லிவரை நடந்து சென்றாலும் களைப்பு ஏற்படாது. உண்மையான நினைவு இருந்தால் தேகத்தின் உணர்வு நீங்கும், பிறகு களைப்பு ஏற்படாது. ஞானத்தில் காலதாமதமாக வருபவர்கள் கூட இன்னும் வேகமாக நினைவில் முன்னேறிச் செல்வார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஒரு தந்தையின் முறையான ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை என்ற நினைவில் இருந்து தேக உணர்வை நீக்க வேண்டும். தன்னுடைய கர்மாதீத் நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும். இந்த சரீரத்தில் இருந்து கொண்டே அழியாத வருமானத்தை சேமிக்க வேண்டும்.

 

2. ஞானம் நிறைந்த ஆத்மாவாகி மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும், தந்தையிடம் கேட்டதை தாரணை செய்து மற்றவர்களுக்குக் கூற வேண்டும். 5 விகாரங்களை தானம் செய்து இராகுவின் கிரகணத்திலிருந்து விடுபட வேண்டும்.

 

வரதானம்:

மனதின் சக்தியின் அனுபவத்தின் மூலம் (விசாலமான) எல்லையற்ற காரியத்தில் எப்போதும் சகயோகியாக ஆகுக.

 

இயற்கையை, தமோ குணமான ஆத்மாக்களின் அதிர்வலைகளை மாற்றம் செய்வது மற்றும் வன்முறை நிறைந்த சுற்றுச் சூழலில்,அதிர்வலைகளில் தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது,, பிற ஆத்மாக்களுக்கு சகயோகம் கொடுப்பது, புதிய சிருஷ்டியில் புதிய படைப்பை யோக பலத்தின் மூலம் தொடங்குவது இந்த மிகப்பெரிய காரியங்கள் அனைத்திற்கும் மனதின் சக்தி தேவைப்படுகிறது. மனதின் சக்தியின் மூலம் தான் சுயத்தின் முடிவு (இறுதிக்காலம்) இனிமையானதாக ஆகும். மனதின் சக்தி அதாவது உயர்வான சங்கல்பத்தின் சக்தி, ஒருவருடன் (ஒரு தந்தையுடன்) தெளிவான தடையற்ற தொடர்பு - இப்போது இதில் அனுபவம் நிறைந்தவராக ஆகுங்கள், அப்போது எல்லைக்கப்பாற்பட்ட காரியத்தில் சகயோகியாகி எல்லைக்கப்பாற்பட்ட உலகின் இராஜ்ய அதிகாரியாக ஆவீர்கள்.

 

சுலோகன்:

பயமற்ற தன்மை மற்றும் பணிவுத்தன்மை தான் யோகி மற்றும் ஞானி ஆத்மாவின் சொரூபம் ஆகும்.

 

ஓம்சாந்தி