06-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

குழந்தைகளிடம் எந்தவொரு தைரியம் இருந்தது என்றால் மிகவும் உயர்ந்த பதவியை அடைய முடியும்?

பதில்:

ஸ்ரீமத்படி நடந்து தூய்மையாவதற்கு தைரியம் வேண்டும். எவ்வளவு தான் கலகம், குழப்பம் வரட்டும், கொடுமைகளை பொறுத்துக் கொள்ள வேண்டியதாகவே இருக்கட்டும் ஆனாலும் பாபா கொடுத்திருக்கும் தூய்மையாவதற்கான உயர்ந்த வழிப்படி எப்போதும் சென்று கொண்டிருந்தீர்கள் என்றால் மிக உயர்ந்த பதவியை அடையலாம். எந்த ஒரு விசயத்திலும் பயப்படக் கூடாது, என்ன நடந்தாலும் - எதுவும் புதிதல்ல, அவ்வளவு தான்.

பாடல்:

கள்ளம் கபடமற்ற தன்மையினால் தனிப்பட்டவர்..........

ஓம் சாந்தி. இது பக்தி மார்க்கத்தவர்களின் பாடலாகும். ஞான மார்க்கத்தில் பாட்டு போன்றவற்றிற்கு அவசியம் இல்லை, ஏனென்றால் நமக்கு எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தி கிடைக்க வேண்டும் என்று பாடப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தின் பழக்க வழக்கங்கள் இதில் வர முடியாது. குழந்தைகள் கவிதை போன்றவற்றை படைக்கிறார்கள், அது மற்றவர்களுக்கு சொல்வதற் காக ஆகும். அதனுடைய அர்த்தத்தை கூட நீங்கள் புரிய வைக்காதவரை யாரும் புரிந்து கொள்ள முடியாது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை கிடைத்திருக்கிறார் எனும்போது குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும். பாபா 84 பிறவிகளின் சக்கரத்தின் ஞானத்தையும் கூறியுள்ளார். நாம் இப்போது சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகியுள்ளோம் என்று மகிழ்ச்சியடைய வேண்டும். தந்தை யிடமிருந்து விஷ்ணுபுரியின் ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறோம். நிச்சயபுத்தி யுடையவர் கள் தான் வெற்றிஅடைவார்கள். யாருக்கு நிச்சயம் ஏற்படுகிறதோ, அவர்கள் கண்டிப்பாக சத்யுகத் திற்குச் செல்லவே செல்வார்கள். எனவே குழந்தைகளுக்கு எப்போதும் குஷி இருக்க வேண்டும் - தந்தையைப் பின்பற்ற வேண்டும். நிராகார சிவதந்தை எப்போது இருவருக்குள் பிரவேசித்தாரோ, அப்போதிலிருந்து கலகம், குழப்பங்கள் நடக்கிறது என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்றால், விரைவாக திருமணம் செய்யுங்கள் என்று சொல்வார் கள், திருமணம் இல்லாமல் காரியம் எப்படி நடக்கும். மனிதர்கள் கீதையை என்னவோ படிக்கிறார்கள், ஆனால் அதில் எதையும் புரிந்து கொள்வதில்லை. அதிகமாக பாபாவிற்கு கீதை படிக்கும் பயிற்சி இருந்தது. ஒரு நாள் கூட கீதை படிப்பதை தவறவில்லை. கீதையின் பகவான் சிவன் என்று தெரிந்த பிறகு, நாம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகப்போகிறோம் என்ற போதை ஏறிவிட்டது. இது சிவபகவானுடைய மகாவாக்கியமாகும், பிறகு தூய்மைக்காகவும் பெரிய அடிதடி நடந்தது. இதில் தைரியம் வேண்டும். நீங்கள் மகாவீரர்கள்-மகாவீரனிகள் ஆவீர்கள். ஒருவரைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலையில்லை. ஆண் படைப்பவன், படைப்பவன் தானே தூய்மையாகிறான் எனும்போது படைப்பையும் தூய்மையாக்குகின்றான். இந்த விசயத்தின் மீது தான் சண்டை நடந்தது. பெரிய-பெரிய வீடுகளிலிருந்து வந்து விட்டார்கள். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ, அவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள். தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் இருங்கள், இல்லையென்றால் சென்று தங்களுடைய ஏற்பாட்டை செய்யுங்கள். அந்தளவிற்கு தைரியம் வேண்டும் அல்லவா. பாபாவிற்கு முன்னால் எவ்வளவு கலகம் நடந்தது. பாபா எப்போதாவது துன்பப்பட்டு பார்த்துள்ளீர்களா? அமெரிக்கா வரை நாளேடுகளில் வந்தன. எதுவும் புதிதல்ல. இது கல்பத்திற்கு முன்போலவே நடக்கிறது, இதில் பயப்படுவதற்கு என்ன விசயம் இருக்கிறது. நமக்கு நம்முடைய தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். நம்முடைய படைப்பைக் காக்க வேண்டும். அனைத்து படைப்புகளும் இந்த சமயத்தில் தூய்மையற்றதாக இருக்கிறது என்பதை பாபா தெரிந்துள்ளார். நான் தான் அனைவரையும் தூய்மையாக்க வேண்டும். பாபாவைத் தான் அனைவரும் தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குபவர் என்று சொல்கிறார்கள், விடுவிப்பவரே வாருங்கள் என்று அழைக்கிறார்கள், எனும்போது அவருக்கு இரக்கம் ஏற்படுகிறது. இரக்கமனமுடையவர் அல்லவா. எனவே பாபா புரியவைக்கின்றார் - குழந்தைகளே எந்தவொரு விசயத்திலும் பயப்படாதீர்கள். பயப்படுவதினால் அந்தளவிற்கு உயர்ந்த பதவியை அடைய முடியாது. தாய்மார்களுக்குத் தான் கொடுமைகள் நடக்கின்றன. திரௌபதியை துகிலுரிந்தார்கள் என்பது கூட அடையாளமாகும். பாபா 21 பிறவிகளுக்கு துகிலுரிப்பதிலிருந்து காப்பாற்றுகிறார். உலகம் இந்த விசயங்களை தெரிந்திருக்கவில்லை. தூய்மையற்ற தமோபிரதான பழைய உலகமாகவும் ஆகத்தான் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பொருளும் புதியதிலிருந்து பழையதாக ஆகத்தான் வேண்டும். பழைய வீட்டை விட வேண்டி யிருக்கிறது. புதிய உலகம் சத்யுகமாகும், பழைய உலகம் கலியுகம்.... எப்போதும் இப்படி இருக்க முடியாது. இது நாடகச்சக்கரம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தேவி-தேவதைகளின் இராஜ்யம் மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் உங்களுக்கு கீதை ஞானத்தை கூறுகின்றேன் என்று பாபாவும் கூறுகின்றார். இங்கே இராவண ராஜ்யத்தில் துக்கம் இருக்கிறது. எதை இராம இராஜ்யம் என்று சொல்லப்படுகிறது என்பதைக் கூட யாரும் புரிந்து கொள்வதில்லை. நான் சொர்க்கம் அல்லது இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வந்திருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அனேக முறை இராஜ்யத்தை அடைந்துள்ளீர்கள் மற்றும் இழந்துள்ளீர்கள். இது அனைவருடைய புத்தியிலும் இருக்கிறது. 21 பிறவிகள் நாம் சத்யுகத்தில் இருக்கிறோம், அதனை 21 தலைமுறை என்று சொல்லப்படுகிறது அதாவது வயது முதிர்ந்த நிலை அடைந்த பிறகு சரீரத்தை விடுகிறார்கள். ஒருபோதும் அகால மரணம் நிகழ்வதில்லை. நீங்கள் இப்போது திரிகாலதரிசி ஆகி விட்டீர்கள். சிவபாபா யார்? என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சிவனுடைய கோயில்கள் நிறைய உருவாக்கியுள்ளார்கள். மூர்த்தியை வீட்டிலும் கூட வைத்துக் கொள்ளலாம் அல்லவா. ஆனால் பக்திமார்க்கம் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. புத்தியின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். கிருஷ்ணர் அல்லது சிவனுடைய மூர்த்தியை வீட்டிலும் கூட வைத்துக் கொள்ளலாம். ஒரே பொருள் தான். பிறகு இவ்வளவு தூரம்-தூரமாக ஏன் செல்கிறார் கள்? அவர்களிடம் செல்வதின் மூலம் கிருஷ்ணபுரி ஆஸ்தி கிடைக்குமா என்ன? நாம் பிறவி-பிறவி களாக பக்தி செய்து வந்துள்ளோம் என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர் கள். இராவண இராஜ்யத் தின் பகட்டைப் பாருங்கள் எவ்வளவு இருக்கிறது. இது கடைசி நேர பகட்டாகும். இராம இராஜ்யம் சத்யுகத்தில் இருந்தது. அங்கே இந்த விமானம் போன்ற அனைத்தும் இருந்தன பிறகு இவை யனைத்தும் மறைந்து விட்டன. பிறகு இந்த சமயத்தில் இவை அனைத்தும் வந்திருக்கின்றன. இப்போது இவையனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள், யார் கற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் சம்ஸ்காரத்தை (திறமையை) எடுத்துச் செல்வார்கள். அங்கே வந்து பிறகு விமானத்தை உருவாக்குவார்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு சுகம் கொடுக்கக்கூடிய பொருளாகும். இந்த அறிவியல் பிறகு உங்களுடைய காரியத்திற்கு வரும். இப்போது இந்த அறிவியல் துக்கத்திற்கானதாக இருக்கிறது பிறகு அங்கே சுகத்திற்கானதாக இருக்கும். இப்போது ஸ்தாபனை நடந்து கொண்டிருக் கிறது. பாபா புதிய உலகத்திற்காக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார் எனும்போது குழந்தை களாகிய நீங்கள் மகாவீரர்களாக ஆக வேண்டும். பகவான் வந்திருக்கின்றார் என்பது உலகத்தில் யாராவது தெரிந்திருக்கிறார்களா என்ன.

குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக தூய்மையாக இருங்கள் என்று பாபா கூறுகின்றார், இதில் பயப்படுவதற்கான விசயம் இல்லை. அதிகம் போனால் திட்டு வார்கள். இவருக்கு அதிக திட்டு கிடைத்திருக்கிறது. கிருஷ்ணர் திட்டு வாங்கினார் என்று காட்டு கிறார்கள். கிருஷ்ணர் திட்டு வாங்க முடியாது. கலியுகத்தில் தான் திட்டுகிறார்கள். இப்போது இருக் கின்ற இந்த ரூபம் கல்பத்திற்குப் பிறகு இதே நேரத்தில் தான் இப்படி இருக்கும். இடையில் ஒருபோதும் இப்படி இருக்க முடியாது. பிறவிக்கு பிறவி முகத்தோற்றம் மாறிக் கொண்டே செல்கிறது, இப்படி நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. 84 பிறவிகளில் எந்த முகத்தோற்றமுடையவர்களாக பிறவி எடுத்துள்ளார்களோ அதையே எடுப்பார்கள். இதே முகத்தோற்றம் மாறி அடுத்த பிறவியில் இந்த லஷ்மி - நாராயணனுடைய முகமாக ஆகி விடும் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உங்களுடைய புத்தியின் பூட்டு இப்போது திறந்திருக்கிறது. இது புதிய விசயமாகும். பாபாவும் புதியவர், விசயங்களும் புதியதாகும். இந்த விசயங்கள் யாருக்கும் சட்டென்று புரிவதில்லை. அதிர்ஷ்டத்தில் இருந்தால் தான் ஏதாவது புரிந்து கொள்ள முடியும். மற்றபடி எவ்வளவு தான் புயல் வந்தாலும் யார் அசையாமல் இருக்கிறார்களோ, அவர்களைத் தான் மகாவீர் என்று சொல்லப்படுகிறது. இப்போது அந்த நிலை ஏற்பட முடியாது. கண்டிப்பாக ஏற்படும். மகாவீரர்கள் எந்த புயலிலும் பயப்பட மாட்டார்கள். அந்த நிலை கடைசியில் ஏற்படும் ஆகையினால் அதீந்திரிய சுகத்தை பற்றி கோப-கோபியர்களிடம் கேளுங்கள் என்று பாடப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்களை சொர்க்கத்திற்கு தகுதியானவர் களாக ஆக்குவதற்கு பாபா வந்துள்ளார். கல்பத்திற்கு முன் போலவே நரகத்தின் வினாசம் நடக்கத் தான் வேண்டும். சத்யுகத்தில் ஒரு தர்மம் தான் இருக்கும். ஒற்றுமை வேண்டும் என்று விரும்பு கிறார்கள், ஒரு தர்மம் இருக்க வேண்டும். இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் இரண்டும் தனித்தனியானது என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. இப்போது பாபா மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்றால் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். ஒவ்வொருவருடைய நாடியையும் பார்க்கப் படுகிறது. அதன்படி பிறகு வழி காட்டப்படுகிறது. பாபா கூட குழந்தைக்கு கூறினார் - ஒருவேளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் போய் செய்து கொள். நிறைய நண்பர்கள்-உறவினர் கள் இருக்கிறார்கள், அவருக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். பிறகு யாரோ சிலர் வந்தார்கள். எனவே ஒவ்வொருவருடைய நாடியையும் பார்க்கப்படுகிறது. பாபா இது தான் நிலை, நாங்கள் தூய்மையாக இருக்க விரும்புகிறோம், எங்களுடைய உறவினர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள், இப்போது என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். அட இதையுமா கேட்கிறீர்கள், தூய்மையாக இருக்க வேண்டும், ஒருவேளை இருக்க முடியவில்லை என்றால் சென்று திருமணம் செய்யுங்கள். யாருக்காவது நிச்சயதார்த்தம் நடந்து விட்டது, ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும், கவலையில்லை. காப்பு கட்டும்போது, இந்த கணவன் தான் உன்னுடைய குரு என்று அந்த சமயத்தில் கூறுகிறார்கள். நீங்கள் அவரிடம் எழுதி வாங்குங்கள். நான் உன்னுடைய குரு, ஈஸ்வர் என்று ஏற்றுக் கொள்கிறார் என்றால் எழுது. இப்போது நான் கட்டளை இடுகின்றேன், தூய்மையாக இருக்க வேண்டும். தைரியம் வேண்டும் அல்லவா. மிகப்பெரிய குறிக்கோளாகும். மிகப்பெரிய பலன் ஆகும். பலன் பற்றி அறியாதபோது தான் காமம் எனும் தீ பிடிக்கிறது. இவ்வளவு பெரிய பலன் (இலாபம்) கிடைக்கிறது, இந்த ஒரு பிறவி தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் என்ன பெரிய விசயமா என்ன என்று பாபா கேட்கிறார். நான் உன்னுடைய கணவன் ஈஸ்வரன். என்னுடைய கட்டளைப் படி தூய்மையாக இருக்க வேண்டும். பாபா யுக்திகளை கூறி விடுகின்றார். பாரதத்தில் இந்த விதி இருக்கிறது - உன்னுடைய கணவன் ஈஸ்வரன் என்று மனைவிக்கு கூறுவார்கள். அவருடைய சொல்படி நடக்க வேண்டும். கணவனுடைய கால்களை பிடித்து விட வேண்டும் ஏனென்றால் லஷ்மி நாராயணனுடைய கால்களை பிடித்து விட்டார் என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த வழக்கம் எங்கிருந்து வந்தது? பக்தி மார்க்கத்தின் சித்திரங்களிலிருந்து வந்தது. சத்யுகத்தில் இப்படிப்பட்ட விசயங்கள் நடப்பதில்லை. நாராயணன் களைப்படைந்து விடுகிறாரா என்ன லஷ்மி கால் பிடித்து விடுவதற்கு! அங்கே களைப்பு என்ற விசயமே இருக்க முடியாது. களைப்பு என்பது துக்கத்தின் விசயமாகி விடுகிறது. அங்கே துக்கம் சரீரத்திற்கு வ- எங்கிருந்து வந்தது. ஆகையினால் தான் பாபா போட்டோவிலிருந்து லஷ்மியின் சித்திரத்தை எடுத்து விட்டார். போதை ஏறுகிறது அல்லவா. சிறுவயதிலிருந்தே வைராக்கியம் இருந்தது ஆகையினால் தான் அதிக பக்தி செய்தார். எனவே பாபா நிறைய யுக்திகளை கூறுகின்றார். நாம் ஒரு தந்தையின் குழந்தைகள் என்றால் சகோதர-சகோதரிகளாகி விட்டோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தாத்தாவிடம் இருந்து ஆஸ்தியை அடைகின்றோம். பாபாவை தூய்மையற்ற உலகத்தில் தான் அழைக்கின்றோம். ஹே தூய்மை யற்றவர்களை தூய்மையாக்கும் அனைத்து சீதைகளுக்கும் இராமனே என்று அழைக்கிறார்கள். பாபாவை சத்தியமானவர், உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்பவர் என்று சொல்லப் படுகிறது. அவர் தான் முழு உலகத்தின் முதல்-இடை-கடைசியின் சத்தியமான ஞானத்தை உங்களுக்கு கொடுக்கின்றார். உங்களுடைய ஆத்மா இப்போது ஞானக்கடலாக ஆகிக் கொண்டி ருக்கிறது.

இனிமையான குழந்தைகள் தைரியம் கொள்ள வேண்டும், நாம் பாபாவினுடைய ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற படைப்புகளை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குகின்றார். எனவே முயற்சி செய்து முழுமையான ஆஸ்தியை அடைய வேண்டும். பலியாக வேண்டும். நீங்கள் அவரை உங்களுடைய வாரிசாக ஆக்கினீர்கள் என்றால் அவர் உங்களை 21 பிறவிகளுக்கு ஆஸ்தியை அளிப்பார். தந்தை குழந்தைகளுக்கு பலி ஆகின்றார். பாபா இந்த உடல்-மனம்-பொருள் அனைத்தும் உங்களுடையது என்று குழந்தைகள் கூறுகிறார்கள். நீங்கள் தந்தை யாகவும் இருக்கிறீர்கள் என்றால் குழந்தையாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் தாயும் தந்தையும் நீங்களே...... என்று பாடுகிறார்கள். ஒருவருடைய மகிமை எவ்வளவு பெரியதாக இருக்கிறது. அனைவருடைய துக்கத்தையும் போக்கி சுகத்தை வழங்குபவர் என்று அவரை சொல்லப்படுகிறது. சத்யுகத்தில் 5 தத்துவங்கள் கூட சுகம் கொடுப்பவைகளாக இருக்கின்றன. கலியுகத்தில் 5 தத்துவங்கள் கூட தமோபிரதானமாக இருக்கின்ற காரணத்தினால் துக்கம் கொடுக்கின்றன. அங்கு சுகம் தான் இருக்கிறது. இப்படி நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே தான் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நடந்த சண்டையாகும். இப்போது சொர்க்கத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. எனவே குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியில் இருக்க வேண்டும். பகவான் உங்களை தத்தெடுத்திருக்கிறார் பிறகு குழந்தைகளாகிய உங்களை பாபா அலங்கரிக்கவும் செய்கின்றார், படிப்பிக்கவும் செய்கின்றார். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) எப்போதும் பாபாவிற்கு சமமாக ஆவதற்கான தைரியம் வைக்க வேண்டும். பாபாவிற்கு முழுமையாக பலியாக வேண்டும்.

2) எந்தவொரு விசயத்திலும் பயப்படக் கூடாது. கண்டிப்பாக தூய்மையாக வேண்டும்.

வரதானம்:

சதா கருணை மற்றும் நன்மை நிறைந்த பார்வை மூலம் விஷ்வத்தின் சேவை செய்யக்கூடிய விஷ்வ பரிவர்த்தக் (உலகை மாற்றம் செய்யக் கூடியவர்) ஆகுக.

விஷ்வ பரிவர்த்தக் (விஷ்வத்தை மாற்றுபவர்) மற்றும் விஷ்வ சேவாதாரி ஆத்மாக்களுடைய முக்கியமான இலட்சணமே-தன்னுடைய கருணை மற்றும் நன்மை நிறைந்த பார்வை மூலம் விஷ்வத்தை சம்பன்னமாக, சுகம் நிறைந்ததாக ஆக்குவது ஆகும். கிடைக்காத பொருட்கள் ஈஸ்வரிய சுகம், சாந்தி மற்றும் ஞான செல்வத்தால், சர்வ சக்திகளால் அனைத்து ஆத்மாக்களையும் பிச்சைக்கார நிலையிலிருந்து அதிகாரி ஆக்கவேண்டும். அத்தகைய சேவாதாரி தன்னுடைய ஒவ்வொரு விநாடி, வார்த்தை மற்றும் கர்மம், சம்பந்தம், தொடர்பை சேவையில் தான் ஈடுபடுத்துவார்கள். அவர்களது பார்வை, நடத்தை, உண்ணும் விதம் ஆகிய அனைத்திலும் சேவை அடங்கி இருக்கும்.

சுலோகன்:

மரியாதை, கௌரவத்தை தியாகம் செய்து தனது சமயத்தை எல்லையற்ற சேவையில் வெற்றிகரமானதாக ஆக்குவதே பரோபகாரி ஆகுவதாகும்.

 

மாதேஷ்வரி அவர்களுடைய விலைமதிப்பற்ற மகாவாக்கியம்

பரம அர்த்தத்தைப் (பரமார்த்தம்) புரிந்து கொள்வதால் செயல் தானாகவே பலன் தரக்கூடியதாக ஆகிறது.

நீங்கள் என் மூலம் பரம அர்த்தத்தை (ஆத்மா, பரமாத்மா, நாடகம், …) அறிந்திருப்பதால் தன்னுடைய பரம பதவியை அடைவீர்கள் அதாவது பரமார்த்தத்தை அறிந்து கொள்வதனால் செயல் பலன் தரக்கூடியதாக ஆகிறது என்பது பகவானுடைய மகாவாக்கியம் ஆகும். பாருங்கள், தேவதைகளுக்கு முன்பு இயற்கையோ பாதங்களின் அருகில் சேவகராகி (தாசி) இருக்கின்றது, இந்த பஞ்ச தத்துவங்கள் சுக சொரூபமாகி மனம் விரும்பும் சேவை செய்கின்றன. இந்த சமயம் பாருங்கள் மனம் விரும்பும் சுகம் கிடைக்காத காரணத்தினால் மனிதர்களுக்கு துக்கம், அசாந்தி கிடைத்துக்கொண்டு இருக்கின்றது. சத்யுகத்திலோ இந்த இயற்கையானது ஒழுங்குமுறையுடன் இருக்கும். பாருங்கள், தேவதைகளின் ஜடச்சித்திரங்களின் மீதும் கூட அவ்வளவு வைர வைடூரியங் களைப் பதிக்கின்றார்கள் எனில், எப்பொழுது சைத்தன்யத்தில் பிரத்யட்சம் ஆவார்களோ, அந்த சமயத்தில் எத்தனை வைபவங்கள் இருக்கும்? இந்த சமயத்தில் மனிதர்கள் பசியால் இறக்கின்றனர், ஆனால், ஜடச்சித்திரங்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்துகொண்டு இருக் கின்றனர். இந்த வித்தியாசம் ஏன்? அவசியம் அவர்கள் அத்தகைய சிரேஷ்ட கர்மம் செய்திருக் கின்றார்கள், ஆகையினாலேயே, அவர்களுடைய நினைவுச்சின்னங்கள் உருவாக்கப்பட்டிருக் கின்றன. அவர்களுக்கு பூஜையும் கூட எவ்வளவு நடக்கின்றது! அவர்கள் விகாரமற்ற இல்லறத்தில் இருந்துகொண்டு தாமரை மலருக்கு சமமான நிலையில் இருந்தார்கள். ஆனால், இப்பொழுது அவர்கள் விகாரமற்ற இல்லறத்திற்குப் பதிலாக விகாரி இல்லறத்தில் சென்றுவிட்டார்கள். அதன் காரணத்தினால் அனைவரும் பரமார்த்தத்தை மறந்து இல்லற காரிய விவகாரத்தின் பக்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆகையினால், ரிசல்ட் தலைகீழாக சென்று கொண்டிருக்கின்றது. இப்பொழுது விகாரி இல்லறத்தில் இருந்து விடுவித்து நிர்விகாரி இல்லறத்தைப் பற்றி நமக்குக் கற்பிப்பதற்காகவே சுயம் பரமாத்மா வந்திருக்கின்றார். இதன் மூலம் நம்முடைய வாழ்க்கை சதா காலத்திற்காக சுகம் நிறைந்ததாக ஆகின்றது. ஆகையினால், முதலில் தேவை பரமார்த்தம், அதன் பிறகே நடத்தை, செயல் முக்கியமானது. பரமார்த்தத்தில் இருப்பதனால் நடத்தை, செயல் தானாகவே பலன் தரக்கூடியதாக ஆகின்றது. ஓம் சாந்தி.