06.04.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! 21 ஜன்மத்திற்காக உங்களுடைய மனதை அந்த மாதிரி களிப்பூட்டுகின்றார், அதாவது உங்களுடைய மனம் மகிழ்ச்சியடைவதற்காக மேளா, திருவிழாக்கள் போன்றவற்றிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

கேள்வி:

எந்த குழந்தைகள் இப்பொழுது பாபாவுடைய உதவியாளராக ஆகுகின்றார்களோ அவர்களுக்கான உத்திரவாதம் என்ன?

 

பதில்:

ஸ்ரீமத் படி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்யக்கூடிய உதவியாளர் ஆகக் கூடிய குழந்தைகளுக்கான உத்திரவாதம் இது, அவர்களை ஒருபோதும் காலன் சாப்பிட முடியாது. சத்யுக இராஜதானியில் ஒருபோதும் திடீர் மரணம் ஏற்பட முடியாது. உதவியாளர் குழந்தைகளுக்கு பாபா மூலமாக அப்பேர்ப்பட்ட பரிசு கிடைக்கின்றது. அவர்கள் 21 தலை முறைக்கு அமரர்களாக (அழிவற்றவர்களாக) மாறி விடுகின்றார்கள்.

 

ஓம் சாந்தி:

ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிருஷ்டி சக்கரத்தின் அடிப்படையில் போன கல்பத்தைப் போலவே சிவபகவானுடைய வாக்கியம் இப்போது தன்னுடைய அறிமுகமானது குழந்தைகளுக்கு கிடைத்துள்ளது. பாபாவுடைய அறிமுகமும் கிடைத்துவிட்டது. எல்லையற்ற தந்தையையும் தெரிந்து விட்டீர்கள் மற்றும் எல்லையற்ற சிருஷ்டியினுடைய முதல்-இடை-கடையைப் பற்றியும் தெரிந்துவிட்டீர்கள். நம்பர்வார் முயற்சியின் அடிப்படையில் யார் நல்ல விதத்தில் தெரிந்துள்ளார்களோ அவர்களே புரிய வைக்கவும் முடியும். சிலர் அரை குறையாக, சிலர் குறைவாக எப்படி யுத்தத்தில் சிலர் படைத்தளபதி, சிலர் கேப்டன், சிலர் என்னவெல்லாம் ஆகின்றார்கள். இராஜ்யத்தின் மாலையில் சிலர் பணக்கார பிரஜை, சிலர் ஏழை பிரஜை, வரிசைக்கிரமம் உளளது. நாம் சுயமாக ஸ்ரீமத்படி சிருஷ்டியில் உயர்வான இராஜ்யத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கின்றோம். என்பதை குழந்தைகள் அறிவீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு யார் முயற்சி செய்கின்றார்களோ அவ்வளவிற்கு அவ்வளவு பாபாவிடமிருந்து பரிசு கிடைக்கின்றது. இன்றைய நிலையில் அமைதிக்கான வழியை காட்டுபவர் களுக்கு பரிசு கிடைக்கின்றது. குழந்தைகளுக்கான உங்களுக்கும் பரிசு கிடைக்கின்றது. உங்களுக்கு கிடைப்பதைப் போல அவர்களுக்குக் கிடைக்க முடியாது. அவர்களுக்கு ஒவ்வொரு பொருளும் அற்பகாலத்திற்காகத் தான் கிடைக்கின்றது. நீங்கள் தந்தையின் உயர்ந்த வழிப்படி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றீர்கள். அதுவும் 21 பிறவி, 21 தலைமுறைக்கான உத்திரவாதம். அங்கே குழந்தை பருவம் அல்லது இளமைப் பருவத்தில் காலன் சாப்பிட முடியாது. மனதிலும் இல்லை, உள்ளத்திலும் இல்லை. நாம் அப்பேர்ப்பட்ட இடத்தில் வந்து அமர்ந்துள்ளோம். அங்கே உங்களுடைய நினைவுச் சின்னமும் முன்னால் உள்ளது என்பதை அறிவீர்கள். அங்கே தான் 5 ஆயிரம் வருடத்திற்கு முன்பு சேவையும் நடந்திருந்தது. தில்வாடா கோயில், அச்சல்கர், குரு சிக்கர் போன்றவை. உங்களுக்கு உயர்ந்ததிலும் உயர்ந்த சத்குரு கிடைத்துள்ளார். அதனுடைய நினைவு சின்னமும் உருவாக்கப்பட்டுள்ளது. அச்சல்கர் பற்றிய இரகசியத்தையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அது வீட்டினுடைய புகழ் ஆகும். நீங்கள் தன்னுடைய முயற்சியின் மூலமாக உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடைகின்றீர்கள். இது தான் உங்களுடைய அதிசயமான ஜடமான நினைவுச் சின்னம். அங்கு தான் நீங்கள் சைத்தன்யமாக வந்து அமர்கின்றீர்கள்; இவையனைத்தும் ஆன்மீகமான செயல்கள், போன கல்பத்திலும் நடந்தது. இவர்களுடைய முழு நினைவு சின்னமும் இங்கேதான் உள்ளது. முதல் நம்பர் - 1 நினைவு சின்னம் ஆகும். எப்படி ஒருவர் பெரிய பரிட்ச்சையில் தேர்ச்சியடைந்துவிட்டார்கள் என்றால் அவர்களுக்குள் குஷி, உற்சாகம் வந்து விடுகின்றது. வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் கூட எவ்வளவு நன்றாக வைத்துக் கொள்கின்றார்கள். நீங்கள் உலகத்திற்கே எஜமானனாக ஆகின்றீர்கள். உங்கள் கூட யாரையும் ஒப்பிட முடியாது. இதுவும் ஒரு கல்வி நிலையம். படிப்பிக்கின்றவரையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். பகவானுடைய வாக்கியம், பக்தி மார்க்கத்தில் யாரை நினைவு செய்கிறார்களோ, பூஜைகள் செய்தீர்களோ அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. பாபா தான் நேரடியாக வந்து அனைத்து இரகசியத்தையும் புரிய வைக்கின்றார். ஏனென்றால் இவையனைத்தும் உங்களுடைய இறுதி நிலையினுடைய நினைவுச் சின்னங்கள் ஆகும். இப்பொழுது ரிசல்ட் வெளி வராது. எப்போது உங்களுடைய நிலை சம்பூர்ணமாக ஆகின்றதோ அதுதான் பக்திமார்க்கத்தில் நினைவுச் சின்னமாக மாறுகின்றது. எப்படி இரக்ஷா பந்தனுடைய நினைவு சின்னம் உள்ளது. எப்பொழுது முழுமையான உறுதியான இராக்கியை அணிந்து நாம் தன்னுடைய இராஜ்ய பாக்கியத்தை அடைகின்றோமோ அப்போது மீண்டும் நினைவு சின்னங்களைக் கொண்டாடுவதில்லை. இந்த சமயத்தில் உங்களுக்கு அனைத்து மந்திரங்களுடைய அர்த்தமும் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஓம் இனுடைய அர்த்தம் நீளமானது இல்லை ஓம் இனுடைய அர்த்தம் நான் ஆத்மா, இது உடல். அஞ்ஞான காலத்தில் நீங்கள் தேக உணர்வில் இருந்ததால் தன்னை சரீரம் என்று புரிந்திருந்தீர்கள். நாளுக்கு நாள் தன்னை சரீரம் என்று புரிந்திருந்தீர்கள். நாளுக்கு நாள் பக்தி மார்க்கம் கீழேதான் போய்க் கொண்டிருக்கின்றது. தமோபிரதானமாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பொருளும் முதலில் சதோபிரதானமாகத் தான் உள்ளது. பக்தியும் கூட முதலில் சதோபிரதானமாகத் தான் இருந்தது. அப்போது ஒரே ஒரு சத்தியமான சிவபாபாவைத் தான் நினைத்தார்கள். மிகவும் சிலர் தான் நினைத்தார்கள். நாளுக்கு நாள் வளர்ச்சி அதிகரிக்கின்றது. வெளிநாடுகளில் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பரிசு கிடைக்கின்றது. பாபா சொல்கின்றார் காமம் மிகப்பெரிய எதிரி. சிருஷ்டியானது மிகவும் வளர்ந்துவிட்டது. இப்பொழுது தூய்மையாக மாறுங்கள்.

 

குழந்தைகளாகிய நீங்கள் பாபா மூலமாக சிருஷ்டியினுடைய முதல்-இடை-கடையைத் தெரிந்து விட்டீர்கள். சத்யுகத்தில் பக்தியினுடைய பெயர், அடையாளங்கள் இல்லை. இப்போது எத்தனை கொண்டாட்டங்கள், மனிதர்கள் தங்களுடைய மனதைக் களிப்பூட்டுவதற்காக, மேளா திருவிழாக்களில் சென்று அதிகமாக ஈடுபடுகின்றார்கள். உங்களுடைய மனதை 21 பிறவிக்காக பாபா வந்து களிப்பூட்டுகின்றார். அதனால் நீங்கள் எப்போதும் களிப்புடனே இருப்பீர்கள், உங்களுக்கு மேளா போன்றவற்றிற்கு போவதற்கான எண்ணங்கள் ஒருபோதும் வராது. மனிதர்கள் சுகத்திற்காக எங்கெல்லாம் செல்கின்றார்கள். நீங்கள் மலை களுக்கெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை. இங்கே பாருங்கள் மனிதர்கள் எப்படியெல்லாம் இறக்கின்றார்கள். மனிதர்களுக்கு சத்யுகம், கலியுகம், சொர்க்கம், நரகம் பற்றித் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு முழுமையான ஞானம் கிடைத்துள்ளது. என்னுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பாபா சொல்வதில்லை. நீங்கள் வீடு வாசலையும் சம்பாலனை (கவனிக்க) செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போது வளர ஆரம்பிக்கின்றார்களோ அப்போதுதான் தொல்லைகள் ஏற்படுகின்றன. இருப்பினும் நீங்கள் பாபாவுடைய தொடர்பில் இருக்க முடிவதில்லை. சதோபிரதானமாக மாறுவதில்லை. சிலர் சதோ, சிலர் இரஜோ, சிலர் தமோ நிலையிலும் இருக்கின்றனர். அனைவரும் ஒன்றாக இருக்க முடியாது; இந்த இராஜ்ஜியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. யார் எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்கிறார்களோ அதன் அடிப்படையில் இராஜ்ஜியத்தில் பதவி அடைகின்றார்கள். முக்கியமான விசயமே பாபாவை நினைவு செய்வதுதான். பாபாவே உட்கார்ந்து பயிற்சி (டிரில்) கற்றுக் கொடுக்கின்றார். இதுதான் மயான அமைதி (டெட் சையிலன்ஸ்). இங்கு நீங்கள் எதை எல்லாம் பார்க்கின்றீர்களோ அவற்றைப் பார்க்கக் கூடாது. தேகம் உட்பட அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும். நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள்? ஒன்று தன்னுடைய வீடு மற்றும் படிப்பினுடைய அடிப்படையில் எந்த பதவி அடைகின்றீர்களோ அந்த சத்யுக இராஜ்ஜியத்தைப் பற்றி நீங்கள்தான் அறிந்துள்ளீர்கள். சத்யுகம் இருக்கும்பொழுது திரேதாயுகம் இருப்பதில்லை, திரேதாயுகம் இருக்கும்பொழுது துவாபர யுகம் இருப்பதில்லை, துவாபர யுகம் இருக்கும்பொழுது கலியுகம் இருப்பதில்லை. இப்பொழுது கலியுகம் உள்ளது. சங்கமயுகமும் உள்ளது. நீங்கள் பழைய உலகத்தில் இருக்கின்றீர்கள். நாம் சங்கமயுக வாசிகள் என்று புத்தியில் உணர்கின்றீர்கள். சங்கமயுகம் என்று எது அழைக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். புருஷோத்தம வருடம், புருஷோத்தம மாதம், புருஷோத்தம நாள் இவையாவும் இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் தான் ஏற்படுகின்றன. புருஷோத்தமர்களாக ஆவதற்கான நேரமும் இந்த புருஷோத்தம யுகத்தில்தான் உள்ளது. இது மிகவும் சிறிய இடைப்பட்ட யுகமாகும். நீங்கள் குட்டிக் கர்ண விளையாட்டு விளையாடுகின்றீர்கள். அதன் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். எப்படி சில சாதுக்கள் குட்டிக் கர்ணம் போட்டுக் கொண்டே யாத்திரை செய்வதை பாபா பார்த்துள்ளார். மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இப்பொழுது இதில் கஷ்டத்தின் பேச்சே கிடையாது. இது யோக பலத்தின் விசயம் ஆகும். நினைவு பயணம் என்பது உங்களுக்கு கடினமாக உள்ளதா என்ன? பெயர் என்னவோ மிகவும் எளிதாக வைக்கப்பட்டுள்ளது. கேட்டு பயந்து போய்விடக்கூடாது அல்லவா! பாபா, எங்களால் யோகா செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள். பிறகு பாபா இலேசாக்கிவிடுகின்றார் இது பாபாவின் நினைவு ஆகும். நினைவு என்பது எல்லா பொருளையும் செய்யப்படுகிறது. தங்களை ஆத்மா என்று உணருங்கள் என்று பாபா கூறுகிறார். நீங்கள் குழந்தைகள் அல்லவா! இவர் உங்களது தந்தையாகவும் இருக்கின்றார், பிரிய தர்ஷனாகவும் இருக்கின்றார். எல்லா பிரிய தர்ஷினிகளும் அவரை நினைவு செய்கின்றார்கள். பாபா என்கிற ஒரு வார்த்தைக் கூட போதுமானது. பக்தி மார்க்கத்தில் நீங்கள் உற்றார் உறவினர்களை நினைவு செய்கின்றீர்கள், கூடவே ஹே பிரபு! ஹே ஈஸ்வர்! என்றும் கட்டாயம் கூறுகின்றீர்கள். ஆனால் அது என்ன என்பது அவர்களுக்குத் தெரிவது இல்லை. ஆத்மாக்களின் தந்தை பரமாத்மா ஆவார். இந்த சரீரத்தின் தந்தை தேகதாரி ஆவார். ஆத்மாக்களின் தந்தை அசரீரி ஆவார். அவர் ஒருபோதும் மறு பிறவி எடுப்பதில்லை. மற்ற அனைவரும் மறு பிறவியில் வருகின்றனர். எனவே தந்தையை நினைவு செய்கின்றனர். நிச்சயம் எப்பொழுதோ அவர் சுகத்தைத் தந்திருக்க வேண்டும். துக்கத்தை நீக்குபவர் என்று அவர் அழைக்கப்படு கின்றார். சுகத்தை வழங்குபவரும் அவர்தான் ஆனால் அவரது பெயர் , ரூபம், தேசம், காலம் இவைகளை அறிவதில்லை. எவ்வளவு மனிதர்கள் இருக்கின்றார்களோ அவ்வளவு கருத்துக்கள், அநேக வழிகள் ஆகிவிட்டன. பாபா எவ்வளவு அன்போடு கற்பிக்கின்றார். அவர் ஈஸ்வர், சாந்தியை அளிக்கக்கூடியவர். எவ்வளவு சுகம் அவரிமிருந்து கிடைக்கின்றது. ஒரு கீதையைக் கூறி தூய்மையற்றவர்களை (அழுக்கானவர்களை) தூய்மைப்படுத்திவிடுகின்றார். இல்லற மார்க்கமும் வேண்டுமல்லவா! மனிதர்கள் கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடம் என்று கூறிவிட்டனர், அவ்வாறு இருந்தால் கணக்கிட முடியாத மனிதர்கள் ஆகியிருப்பார்கள். எத்தனை பெரிய தவறு இது. இப்பொழுது உங்களுக்கு கிடைக்கின்ற ஞானம் பிறகு மறைந்துவிடும், சித்திரங்கள் உள்ளன, அவற்றிற்கு பூஜைகள் நடக்கின்றன. ஆனால் தன்னை தேவதா தர்மத்தைச் சேர்ந்தவன் என்பதை புரிந்துக் கொள்வதில்லை. யார், யாரை பூஜை செய்கின்றார்களோ அவர்கள் அந்த தர்மத்தை சேர்ந்தவர்கள் அல்லவா! நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை சேர்ந்தவர்கள் என்பதை புரிந்துக் கொள்வதில்லை. அவர்களுடைய வம்சத்தை சேர்ந்தவர்கள்தான், இதை பாபாதான் புரிய வைக்கின்றார். பாபா சொல்கின்றார்; நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள்; பிறகு தமோ பிரதானமாக மாறி விட்டீர்கள். இப்பொழுது தூய்மையாக சதோ பிரதானமாக மாற வேண்டும். கங்கையில் நீராடினால் தூய்மையாக மாற முடியுமா என்ன? பதீத பாவனர் பாபா தான். எப்பொழுது அவர் வந்து வழிகாட்டுகின்றாரோ அப்பொழுது தான் தூய்மையாக முடியும். கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் ஆனால் ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. ஹே பதீத பாவனரே, பாபா! வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று கர்மேந்திரியங்கள் மூலமாக ஆத்மா கூக்குரலிடுகின்றது. அனைவரும் தூய்மையற்றவர்கள், காமச் சிதையில் எரிந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விளையாட்டு அவ்வாறுதான் உருவாக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாபா வந்து அனைவரையும் தூய்மையாக மாற்றிவிடுகின்றார். இதை பாபா சங்கமயுகத்தில்தான் புரியவைக்கின்றார். சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம் தான் இருக்கின்றது, மற்ற அனைவரும் திரும்பச் சென்றுவிடுகின்றனர். நீங்கள் நாடகத்தை புரிந்து கொண்டீர்கள், வேறு யாரும் தெரிந்திருக்க வில்லை. இந்த படைப்பில் முதல்-இடை-கடை என்ன கால அளவு (டியூரேஷன்) எவ்வளவு? இதை நீங்கள் தான் அறிவீர்கள். அவர்கள் அனைவரும் சூத்திரர்கள், நீங்கள் பிராமணர்கள். நீங்களும் வரிசைக்கிரமமாக முயற்சியின் அடிப்படையில்தான் அறிந்துள்ளீர்கள். யாராவது தவறு இழைத்துவிட்டால் அவர்களுடைய பதிவேட்டை (ரிஜிஸ்டரை) பார்த்தே அவர் குறைவாகப் படித்துள்ளார் என்பது தெரியவரும். ஒழுக்கம் பற்றிய பதிவேடு (ரிஜிஸ்டர்) பொதுவாக உள்ளது. இங்கும் கூட அம்மாதிரி குறிப்பேடு வேண்டும். இது நினைவு பயணம், ஆனால் அதைப் பற்றி எவருக்கும் தெரியாது. அனைத்திலும் முக்கிய பாடம் நினைவுப் பயணம். தன்னை ஆத்மா என உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். நாம் ஒரு சரீரத்தை விட்டு அடுத்ததை எடுக்கின்றோம் என்று ஆத்மா வாய் மூலமாகக் கூறுகின்றது. இந்த அனைத்து விசயங்களையும் பிரம்மா பாபா புரிய வைப்பதில்லை. ஆனால் ஞானக் கடலான பரம தந்தை பரமாத்மா இந்த இரதத்தில் வந்து புரிய வைக்கின்றார். நந்தியின் வாய் என்று கூறப்படுகின்றது. நீங்கள் எங்கே அமர்ந்துள்ளீர்களோ அங்கே கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே எப்படி ஏணிப்படி உள்ளதோ அதே போல அங்கும் உள்ளது. உங்களுக்கு ஏறிச் செல்வதில் எந்தவித களைப்பும் ஏற்படுவதில்லை. பாபாவிடம் கற்றுத் தெளிவடைய நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். அங்கு தொழில் வியாபாரங்கள் நிறைய உள்ளன. அமைதியாக அமர்ந்து (வாணி) கேட்கக் கூட முடியாது. யாரும் பார்த்துவிடக் கூடாது, சீக்கிரம் சீக்கிரமாக எழுந்து செல்ல வேண்டும். இந்த மாதிரி எல்லாம் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். இம்மாதிரி எவ்வளவு கவலை இருக்கிறது. ஆனால் இங்கு (மதுபனில்) எவ்வித கவலையும் கிடையாது. விடுதியில் தங்கியிருப்பது போல தங்கியுள்ளீர்கள். இது ஈஸ்வரிய குடும்பம். சாந்தி தாமத்தில் சகோதர, சகோதரர்களாக வசிக்கின்றனர். இங்கு சகோதர, சகோதரி, ஏனெனில் இங்கு தம் தம் பாகத்தை நடிக்க சகோதரன், சகோதரி தேவை. சத்யுகத்தில் கூட உங்களிடையே சகோதரன், சகோதரிகளாக இருந்தீர்கள். இது அத்வைத இராஜாங்கம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லை. நாம் 84 பிறவிகளை எடுக்கின்றோம். என்பது பற்றி குழந்தைகளாகிய உங்களுக்கு முழு ஞானம் கிடைத்துள்ளது. யார் அதிக பக்தி செய்துள்ளாரோ அவருடைய கணக்குப் பற்றி பாபா கூறியுள்ளார். நீங்களே சிவனுடைய ஒரு நிலையான பக்தி செய்வதை ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அதிகரித்துக் கொண்டே போகிறது. அவை அனைத்தும் பக்தி. ஞானம் என்பது ஒன்றே ஒன்றுதான்; நமக்கு சிவ பாபா கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த பிரம்மா கூட எதுவும் அறியாமல் இருந்தார். சிருஷ்டியில் கடைசி குழந்தை இவர் என்று கூறுவோம். யார் (கிரேட் கிரேட் கிராண்ட் பாதர்) மிக மிகப் பழமையான தாத்தாவாக இருந்த அவரே இவராக (பிரம்மா) ஆகியுள்ளார், பிறகு எஜமானர் ஆகின்றார். தத்தத்வம் (அவரே இவர்) ஒருவர் மட்டும் எஜமானன் ஆவதில்லை தானே! நீங்கள் கூட புருஷார்த்தம் (முயற்சி) செய்கிறீர்கள். இது எல்லையற்ற கல்விக் கூடம். இதனுடைய கிளைகள் அநேகம் இருக்கும். சந்து சந்தாக, ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்பட்டுவிடும். எங்கள் வீட்டில் பாடம் வைத்திருக்கின்றோம்; உற்றார் உறவினர் வந்தால் அவர்களுக்குப் புரிய வைக்கின்றோம் என்று கூறுகிறார்கள். யார் யார் இந்த மரத்தின் இலைகளாக இருப்பார்களோ அவர்கள் வந்துவிடுவர். அவர்களுக்கு நன்மை நீங்கள் செய்கின்றீர்கள். சித்திரங்களை விளக்கிச் சொல்வது எளிதாக இருக்கும். சாஸ்திரங்கள் போன்றவற்றை மிக அதிகம் படித்துள்ளீர்கள். இப்பொழுது அவை அனைத்தையும் மறக்க வேண்டும். பாபா கற்பிக்கக்கூடியவர், அவரே உண்மையான ஞானம் கூறுகின்றார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. ஆழ்ந்த அமைதியின் பயிற்சி (டிரில்) செய்வதற்காக இந்த கண்களால் எவை எவை தென்படுகின்றதோ அவைகளைப் பார்க்கக்கூடாது. தேக சகிதமாக புத்தியிலிருந்து அனைத்தையும் விலக்கிவிட்டு உங்களுடைய வீடு மற்றும் இராஜ்யத்தினுடைய நினைவிலேயே இருத்தல் வேண்டும்.

 

2. தனது ஒழுக்கம் பற்றிய பதிவேடு வைக்க வேண்டும். படிப்பில் எந்த விதத் தவறும் செய்யக் கூடாது. இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில் புருஷோத்தமர்களாக ஆக வேண்டும். மேலும் பிறரையும் மாற்ற வேண்டும்.

 

வரதானம்:

தந்தையின் கட்டளைப்படி புத்தியை காலியாக வைத்திருக்கக்கூடிய வீணான மற்றும் விகாரமான கனவுகளிலிருந்தும் கூட விடுபட்டவர் ஆகுக.

 

தூங்கும் சமயத்தில் சதா தன்னுடைய புத்தியை தெளிவாக வைத்திடுங்கள், நல்லவைகளோ அல்லது கெட்டவைகளோ அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்துத் தன்னுடைய புத்தியை காயாக்குங்கள் என்பது தந்தையின் கட்டளை ஆகும். தந்தைக்குக் கொடுத்துவிட்டு தந்தையுடன் தூங்குங்கள், தனியாக அல்ல. தனியாகத் தூங்குகிறீர்கள் அல்லது வீண் விசயங்களை வர்ணனை செய்துகொண்டே தூங்குகிறீர்கள், ஆகையினாலேயே, வீணான அல்லது விகாரமான கனவுகள் வருகின்றன. இது கூட கவனக்குறைவு ஆகும். இந்த கவனக்குறைவை விடுத்து கட்டளைப்படி நடந்தீர்கள் என்றால் வீணான மற்றும் விகாரமான கனவுகளிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள்.

 

சுலோகன்:

அதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள் தான் உண்மையான சேவை மூலம் அனைவருடைய ஆசீர்வாதங்களையும் பிராப்தியாக அடைகின்றனர்.

 

ஓம்சாந்தி