06-04-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து எந்த ஒரு அறிவை கற்கிறீர்கள்?

பதில்:

தமோபிரதான நிலையிலிருந்து எப்படி சதோபிரதானமாக ஆகலாம், தங்களுடைய அதிர்ஷ்டத்தை உயர்ந்ததாக எப்படி ஆக்கலாம் என்ற இந்த அறிவை இப்பொழுது தான் நீங்கள் கற்கிறீர்கள். எந்த குழந்தை எந்த அளவிற்கு தனது உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொண்டி ருக்கிறது என்பதை தந்தை ஒவ்வொரு குழந்தையின் செயல்கள் மூலமாக அறிகிறார்.

பாடல்:

இறந்தாலும் உன்னிடமே .. .. .. ..

ஓம் சாந்தி. எல்லா குழந்தைகளும் இந்த பாடலை கேட்டீர்கள். குழந்தைகளே என்று கூறும்பொழுது எல்லா சென்டர்களின் குழந்தைகளும் குழந்தைகளே இந்த பாடலை கேட்டீர்களா என்று பாபா பிராமணர்களாகிய நமக்காகக் கூறுகிறார் என்பதைத் தெரிந்துக் கொண்டுவிடுகிறார்கள். உயிருடன் இருந்தே கழுத்தின் மாலையாக ஆவதற்காக அதாவது மூலவதனத்திற்கு போய் பாபாவின் வீட்டில் இருப்பதற்காக வந்துள்ளோம். அது சிவபாபாவின் வீடு அல்லவா? அங்கு எல்லா சாலிகிராம்கள் (ஆத்மாக்கள்) உள்ளன. உண்மையில் அதே பாபா வந்துவிட்டுள்ளார் என்பதை குழந்தைகள், பிராமண குல பூஷணர்கள், சுயதரிசன சக்கரதாரிகள் அறிந்துள்ளார்கள். இப்பொழுது நீங்கள் அசரீரி ஆக வேண்டும். அதாவது தேக உணர்வை மறக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த பழைய உலகமோ அழிந்துப் போய்விடும். இந்த சரீரத்தையோ விட வேண்டி உள்ளது. அதாவது எல்லாவற்றையும் விட வேண்டி உள்ளது. ஏனெனில் இந்த உலகமே முடியப் போகிறது. ஆகவே வீட்டிற்குத் திரும்பிப் போக வேண்டும். எல்லா குழந்தைகளுக்கும் இப்பொழுது குஷி ஏற்படுகிறது. ஏனெனில் அரைக் கல்பமாக வீடு செல்வதற்காக நிறைய அடி வாங்கினீர்கள் (முயற்சி செய்தீர்கள்). ஆனால் வழி கிடைக்க வில்லை. இன்னுமே பக்தி மார்க்கத்தின் வெளிப் பகட்டைப் பார்த்து மனிதர்கள் சிக்கிக் கொண்டுவிடு கிறார்கள். பாபா நாம் இந்த பழைய உடல் பழைய சரீரத்தை மறக்கிறோம் என்று இப்பொழுது குழந்தை கள் கூறுகிறார்கள். இப்பொழுது உங்களுடன் கூட அசரீரி ஆகி வீட்டிற்குச் செல்வோம். பரமபிதா பரமாத்மா பரந்தாமத்திலிருந்து நம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளார் என்பது அனைவருடைய புத்தியிலும் உள்ளது. நீங்கள் தூய்மையாக ஆகி என்னை நினைவு செய்யுங்கள் என்று மட்டுமே கூறுகிறார். உயிருடனிருந்தே இறக்க வேண்டும். அங்கு வீட்டில் ஆத்மாக்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதுவும் ஆத்மாவோ பிந்து ஆகும். நிராகாரி உலகத்திற்கு எல்லா ஆத்மாக்களும் சென்றுவிடுவார்கள். எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை ஆத்மாக்கள் அங்கு இருப்பார்கள். ஆத்மாக்களுக்கு அந்த மகாதத்துவத்தில் எவ்வளவு இடம் தேவைப்படும். சரீரமோ பெரியது அதற்கு எவ்வளவு இடம் தேவைப்படுகிறது. மற்றபடி ஆத்மாவிற்கு எவ்வளவு இடம் வேண்டும்? ஆத்மாக்களாகிய நாம் எவ்வளவு சிறிய இடத்தை எடுத்துக் கொள்கிறோம்? மிகவும் குறைவான இடம். குழந்தைகளுக்கு இந்த எல்லா விஷயங்களையும் தந்தை மூலமாக கேட்பதற்கான சௌபாக்கியம் இப்பொழுது தான் கிடைக்கிறது. நீங்கள் சரீரமின்றி தனியாக வந்தீர்கள் மற்றும் சரீரத்தைத் தரித்து பாகத்தை நடித்தீர்கள் என்பதை தந்தை தான் கூறுகிறார். இப்பொழுது மீண்டும் உயிருடன் இருந்தே இறக்க வேண்டும். அனைத்தையும் மறக்க வேண்டும். தந்தை வந்து இறப்பதற்குக் கற்பிக்கிறார். தனது தந்தையையும் தனது வீட்டையும் நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். நல்ல முறையில் முயற்சி செய்யுங்கள். யோகத்தில் இருப்பதால் பாவங்கள் அழிந்துப் போகும். பின்னர் ஆத்மா தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகிவிடும். எனவே தந்தை ஆலோசனை தருகிறார் - தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விடுத்து என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று முந்தைய கல்பத்திலும் கூறி இருந்தேன். அனைவருக்கும் ஒரே தந்தை அவரே ஆவார் இல்லையா? நீங்கள் பிரஜா பிதா பிரம்மாவின் முகவம்சாவளி குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் ஞானம் பெற்றுக் கொண்டே இருக்கிறீர்கள். சிவனுடைய குழந்தைகளாகவோ இருக்கவே இருக்கிறீர்கள். நாம் பகவானின் குழந்தைகள் ஆவோம் என்ற நிச்சயமோ அனைவருக்கும் உள்ளது. ஆனால் அவருடைய பெயர், ரூபம், தேசம் மற்றும் காலத்தை மறந்த காரணத்தினால் பகவானிடம் யாருக்குமே அந்த அளவு அன்பு இருப்பதில்லை. இப்படி யாரையும் குறை கூறுவதில்லை. இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது.

ஆத்மாவாகிய நீங்கள் எவ்வளவு சிறிய பிந்து என்பதை தந்தைப் புரிய வைக்கிறார். அதில் 84 பிறவிகளின் பாகம் பொருந்தி உள்ளது. எவ்வளவு அதிசயம்! ஆத்மா எப்படி சரீரத்தை எடுத்து பாகத்தை நடிக்கிறது. இப்பொழுது உங்களுக்கு எல்லையில்லாத பாகம் பற்றி தெரிய வந்துள்ளது. இந்த ஞானம் வேறு யாருக்கும் இல்லை. நீங்கள் கூட தேக அபிமானியாக இருந்தீர்கள். இப்பொழுது எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளீர்கள். இது கூட ஒவ்வொருவரின் அதிர்ஷ்டத்தைப் பொருத்துள்ளது. முந்தைய கல்பத்தின் அதிர்ஷ்டத்தின் சாட்சாத்காரம் ஆகிக் கொண்டிருக்கிறது. உலகத்தில் எவ்வளவு அதிகம் மனிதர்கள் உள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் அவருக்கென்று பாக்கியம் உள்ளது. எப்படி எப்படி யார் கர்மம் செய்தார்களோ அதற்கேற்ப துக்கம் உடையவர்களாக, சுகம் உடையவர்களாக, பணக்காரர் களாக, ஏழையாக ஆகிறார்கள். அவ்வாறு ஆவது ஆத்மா ஆகும். ஆத்மா எப்படி சுகத்தில் வருகிறார். பிறகு துக்கத்தில் வருகிறார் என்பதை தந்தை வந்துப் புரிய வைக்கிறார். தமோபிரதான நிலை யிலிருந்து சதோபிரதானமாக ஆவதற்கான அறிவை தந்தை தான் முந்தைய கல்பத்தைப் போல புரிய வைக்கிறார். யார் எந்த அளவு அறிவைப் பெற்றார்களோ அந்த அளவே இப்பொழுது அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் ஒவ்வொருவருடைய அதிர்ஷ்டத்தையும் புரிந்து கொண்டுவிடு வார்கள். பிறகு கல்ப கல்பமாக இவ்வாறே ஒவ்வொருவரினுடைய அதிர்ஷ்டம் இருக்கும் என்று கூறுவார்கள். யார் மிகவும் நன்றாக யோகத்துடன் கூடியவராக ஞானம் நிறைந்தவராக இருப்பாரோ அவர் சேவையும் செய்துக் கொண்டிருப்பார். படிப்பில் எப்பொழுதும் முன்னேற்றம் ஆகிக் கொண்டே இருக்கும். ஒரு சில குழந்தைகள் சீக்கிரமாக முன்னேற்றம் அடைந்துவிடுகிறார்கள். ஒரு சிலர் மிகவும் தலையைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இங்கும் அவ்வாறே முந்தைய கல்பத்தைபோல யார் யார் முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்கள் மறைந்து இருக்க முடியாது. தந்தையோ அறிந்திருக்கிறார் அல்லவா? எல்லோருடைய தொடர்பும் சிவபாபாவிடம் உள்ளது. இவரும் குழந்தை களின் செயல்களைப் பார்த்து புரிந்துக் கொண்டுவிடுகிறார். பின் அவரும் பார்க்கிறார். இவரிடம் யாராவது வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் சிவபாபாவிடமோ மறைக்க முடியாது. பக்தி மார்க்கத்திலேயே பரமாத்மாவிடமிருந்து மறைக்க முடியாது என்றால் ஞான மார்க்கத்தில் எப்படி மறைக்க முடியும். தந்தைப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். படிப்போ மிகவும் சுலபம் ஆகும். கர்மமும் செய்ய வேண்டும். இருக்க வேண்டியதும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பழைய உலகத்தில் தான். இங்கு இருந்தபடியே முயற்சி செய்ய வேண்டும். இங்கு இருந்து உழைப்பவர்களை விட அங்கு வீட்டில் இருந்து முயற்சி செய்பவர்கள் வேகமாகப் போக முடியும், அந்த அளவிற்கு ஈடுபாடு இருந்தது என்றால். சாஸ்திரங்களில் அர்ஜுனன் மற்றும் ஏகலைவனின் உதாரணம் உள்ளது அல்லவா? ஏகலைவன் (தாழ்ந்த குலத்தவன்) வெளியில் இருப்பவன். ஆனால் அப்பியாசம் செய்து அர்ஜுனனை விடவும் அம்பு எய்வதில் புத்திசாலி ஆகிவிட்டார். ஆக இல்லறத்தில் இருந்தபடியே தாமரை மலர்போல வாழ வேண்டும். இதிலும் நீங்கள் உதாரணத்தைப் பார்க்கப் போகிறீர்கள். இல்லறத்தில் இருந்தபடியே மிகவும் நல்ல சேவை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் அதிகமாக விருத்தியை அடைந்துக் கொண்டே இருப்பார்கள். இங்கு இருப்பவர்களையும் மாயை விடுவது இல்லை. அப்படியின்றி பாபாவிடம் வந்து விடுவதால் விடுபட்டு விடுவார்கள் என்பதல்ல. அப்படி கிடையாது! ஒவ்வொருவருடைய முயற்சியும் தனித் தனி ஆகும். இல்லறத்தில் இருப்பவர்கள் இங்கு இருப்பவர்களை விட நன்றாக முயற்சி செய்ய முடியும். மிகவும் நல்ல துணிச்சலை வெளிப்படுத்த முடியும். அவர்களைத் தான் மகாவீர் என்று கூற முடியும். இல்லறத்தில் இருந்து தாமரை மலர்போல ஆகிக் காண்பிப்பார்கள். பாபா நீங்களோ விட்டு விட்டீர்கள் என்று கூறுவார்கள். பாபா கூறுகிறார் - நான் எங்கே விட்டேன், என்னை தான் விட்டு விட்டு சென்றுள்ளார்கள். பாபாவோ யாரையுமே விட்டு விட்டு வரவில்லை. வீட்டில் இன்னுமே அதிகமான குழந்தைகள் வந்துவிட்டார் கள். மற்றபடி கன்னியர்களுக்கோ பாபா நீங்கள் இந்த ஈஸ்வரிய சேவை செய்யுங்கள் என்பார். இவரும் பாபா ஆவார். அவரும் பாபா ஆவார். குமாரர்களும் நிறைய பேர் வந்தார்கள். ஆனால் நடக்க முடியவில்லை. கன்னியர்கள் பிறகும் நன்றாக இருக்கிறார்கள். ஒரு கன்னிகை 100 பிராமணர்களை விட உத்தமமானவர் என்று கணக்கிடப்படுகிறார். எனவே கன்னிகை என்றால் 21 குலத்திற்கு முன்னேற்றம் செய்பவர்கள். ஞான அம்பு எய்துபவர்கள். மற்றபடி யார் இல்லறத்தில் இருக்கிறார் களோ அவர்களும் பி.கே. ஆவார்கள். இனி முன்னால் போகப் போக அவர்களுடைய பந்தனம் கூட முடிந்துப் போய்விடும். சேவையோ செய்ய வேண்டி உள்ளது அல்லவா? சேவை செய்யக் கூடிய நிறைய குழந்தைகள் பாப்தாதாவின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆயிரக்கணக் கானோருக்கு நன்மை செய்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அப்பேர்ப்பட்ட சேவை செய்யும் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் கூட வந்துக் கொண்டே இருக்கும். அவர்கள் இதயத்தில் இடம் பெற்றிருப்பார்கள். யார் இதயத்தில் இருக்கிறார்களோ அவர்களே சிம்மாசனத்தில் அமருவார்கள். தங்களுக்குள் ஒன்று சேர்ந்து அனைவருக்கும் வழி காண்பிப்பதற்கான யுக்திகளை இயற்றிக் கொண்டே இருங்கள் என்று பாபா கூறுகிறார். படங்கள் கூட புதிது புதிதாய் தயாராகிக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் நடைமுறை விஷயங்கள் ஆகும்.

பரமபிதா பரமாத்மா நிராகாரமானவர் ஆவார். அவரும் பிந்து ஆவார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிய வைக்கிறீர்கள். ஆனால் அவர் ஞானக் கடல் பதீத பாவனர் ஆவார். ஆத்மாவும் பிந்து ஆகும். குழந்தை பிறகும் பெரியவராக ஆகிறார். தந்தை மற்றும் குழந்தைகளுக்கிடையே வித்தியாசமோ இருக்கும் அல்லவா? இன்றைய காலத்திலோ 15 - 16 வருடத்தினர் கூட தந்தையாக ஆகிவிடு கிறார்கள். அப்பொழுதும் கூட குழந்தை அவரை விட சிறியவராகத் தான் இருப்பார் இல்லையா? இங்கு ஆச்சரியம் பாருங்கள் - தந்தையும் ஆத்மா, குழந்தையும் ஆத்மா. அவர் சுப்ரீம் ஆத்மா! ஞானம் நிறைந்தவர் (நாலேஜ்ஃபுல்) ஆவார். மற்றபடி அனைவரும் தங்கள் படிப்பிற்கேற்ப தாழ்ந்த அல்லது உயர்ந்த பதவியை அடைகிறார்கள். எல்லாமே படிப்பை பொருத்தது தான். நல்ல கர்மம் செய்வதால் உயர்ந்த பதவி அடைந்துவிடுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடம் சிருஷ்டியின் முதல் இடை கடை பற்றிய ஞானம் உள்ளது.சொர்க்கத்தில் பாரதம் மட்டுமே இருந்தது வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. எனவே சிறிய புது இந்தியாவில் நமது சொர்க்கத்தைக் காண்பிக்க வேண்டும். எப்படி துவாரகை என்ற பெயர் அல்ல, இலட்சுமி நாராயணரின் பரம்பரையினுடைய இராஜ்யம் என்று எழுத வேண்டும். சத்யுகத்தில் முதலில் தேவதா பரம்பரையினருடைய இராஜ்யம் இருந்தது என்று புத்தியும் கூறுகிறது. அவர்களுடைய கிராமங்கள் இருக்கும். சிறு சிறு இலாக்காக்கள் இருக்கும். இதுவும் சிந்தனைக் கடலைக் கடைவது ஆகும். கூடவே சிவபாபாவிடம் புத்தியின் யோகத்தையும் இணைக்க வேண்டும். நாம் நினைவினால் தான் அரசாட்சி பெறுகிறோம். நினைவினால் தான் துரு நீங்குகிறது. இதில் தான் முழு உழைப்பு தேவை. அநேகருடைய புத்தி வெளியில் மோதிக் கொண்டே இருக்கிறது. இங்கு அமர்ந்திருந்தாலும் கூட முழு நேரமும் நினைவில் இருக்க முடிவதில்லை. புத்தி வேறு பக்கம் சென்றுவிடுகிறது. பக்தி மார்க்கத்தில் கூட அவ்வாறே ஆகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் பக்தி செய்து செய்து புத்தி வேறு பக்கம் சென்றுவிடுகிறது. நௌதா பக்தி (தீவிர பக்தி) செய்பவர்கள் தரிசனத்திற்காக மிகவும் முயற்சி செய்கிறார்கள். கிருஷ்ணரைத் தவிர வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது என்று எவ்வளவு மணிநேரம் அமர்ந்துவிடுகிறார்கள். மிகவும் உழைப்பு உள்ளது. இதில் 8 மற்றும் பிறகு 16108இன் மாலை ஆகிறது. அவர்களோ இலட்சங்களின் மாலையும் காண்பிக்கிறார்கள். ஆனால் ஞானமார்க்கத்தின் மாலை மிகவுமே விலைமதிப்பு வாய்ந்தது. பக்தி மார்க்கத்தினுடையது மலிவானது. ஏனெனில் இதில் ஆன்மீக உழைப்பு உள்ளது. கிருஷ்ணரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்கள். பக்தி மற்றும் ஞானத்திற்கிடையே இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. பக்தியில் கிருஷ்ணரை நினைவு செய்வதால் துரு நீங்கும் என்று புரிய வைக்கப்படுவது இல்லை. இங்கோ எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு பாவங்கள் நீங்கும் என்பது புரிய வைக்கப்படுகிறது.

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது யோக பலத்தினால் உலகத்தின் அதிபதி ஆகிறீர்கள். இது பற்றி எவருக்கும் கனவில் கூட சிந்தனை இருக்காது. இலட்சுமி நாராயணர் சண்டை ஒன்றும் செய்ய வில்லை. பிறகு எவ்வாறு உலகத்திற்கு அதிபதி ஆனார்கள். இதுவோ குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். யோக பலத்தினால் உங்களுக்கு இராஜ்யம் கிடைக்கும் என்பதை தந்தை கூறுகிறார். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் முயற்சியே செய்வதில்லை. சேவை செய்யக் கூடியவர் களாக ஆவது இல்லை. பாபாவோ உத்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதுபோல கண்காட்சிகள் நடத்துங்கள். ஒரு நாளில் குறைந்தது 150 - 200 கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு சென்டரிலும் கண்காட்சி இருந்தது என்றால் புரிய வைப்பதில் சுலபமாக ஆகிவிடும். சென்டர்கள் கூட நாளுக்கு நாள் படங்கள் ஆகியவை எல்லாமே வைக்கக் கூடிய வகையில் பெரியதாகிக் கொண்டே போகும். படங்களில் கூட கண்டுபிடிப்புக்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வைகுண்டத்தின் படங்கள் பாரதத்தின் மிக அழகான அரண்மனைகளுடன் கூடியவை யாக மிக அழகாக அமைக்க வேண்டும். இனி போகப் போக புரிய வைப்பதற்காக நல்ல நல்ல படங்கள் வெளிப்பட்டு கொண்டே போகும். வானப்பிரஸ்த நிலை உடையவர்கள் நடந்தாலும் சென்றாலும் கூட சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும். யாருடைய பாக்கியம் உதயம் ஆகுமோ அவர்கள் வெளிவருவார்கள். ஒரு சில குழந்தைகள் தீய செயல் செய்து தங்களுடைய மதிப்பை இழக்கிறார்கள். ஆக யக்ஞத்தின் மதிப்பையும் இழக்கச் செய்கிறார்கள். எப்படி நடத்தையோ அப்படியே பதவி. யார் அநேகருக்கு சுகம் கொடுக்கிறார்களோ அவர்களுடைய பெயர் பாடப்படுகிறது அல்லவா? இப்பொழுது சர்வ குணங்களில் நிறைந்தவர்களாக ஆகவில்லை அல்லவா? ஒரு சிலர் மிகவுமே நல்ல சேவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்களின் பெயரைக் கேட்டு பாபா குஷி அடைகிறார். சேவை செய்யும் குழந்தைகளைப் பார்த்து பாபா குஷி அடைவார் அல்லவா? நன்றாக சேவையில் உழைப்பு செய்துக் கொண்டே இருக்கிறார்கள். சென்டர்களும் திறந்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு நன்மை ஆகப் போகிறது. அவர்கள் மூலமாக பின் நிறைய பேர் வெளி வந்துக் கொண்டே செல்வார்கள். சம்பூர்ணமாகவோ யாருமே ஆகவில்லை. தவறுகள் கூட ஏதாவது ஆகிக் கொண்டே இருக்கிறது. மாயை விடுவதில்லை. எவ்வளவு சேவை செய்து தங்களை முன்னேற்றம் அடைவார்களோ அந்த அளவே மனதில் இடம் பெறுவார்கள். அந்த அளவிற்கே உயர்ந்த பதவி அடைவார்கள். பிறகு கல்ப கல்பமாக அவ்வாறே பதவி ஆகும். சிவபாபாவிடமிருந்தோ யாருமே மறைந்திருக்க முடியாது. கடைசியில் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய கர்மங்களின் சாட்சாத் காரம் ஆகும். பிறகு என்ன செய்ய முடியும். விசும்பி விசும்பி அழ வேண்டி வரும். எனவே கடைசியில் தண்டனைக்குள்ளாகும் வகையில், பச்சாதாபப்பட வேண்டி வரும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த செயலையும் செய்யாதீர்கள் என்று பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் எவ்வளவு தான் புரிய வைத்தாலும் அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் முயற்சியும் செய்வதே இல்லை. தற்காலத்தினுடைய மனிதர்களோ தந்தையை அறியாமலே உள்ளார்கள். பகவானை நினைவு செய்கிறார்கள். ஆனால் அறியாமல் உள்ளார்கள். அவர் கூறுவதை ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது அந்த எல்லையில்லாத தந்தையிடமிருந்து உங்களுக்கு சத்யுக சுயராஜ்யத்தின் ஆஸ்தி ஒரு நொடியில் கிடைக்கிறது. சிவபாபாவின் பெயரையோ எல்லோரும் விரும்புகிறார்கள் அல்லவா? அந்த எல்லையில்லாத தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று குழந்தைகள் அறிந்துள்ளார்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தங்களது நடத்தையினால் தந்தையினுடைய அல்லது யக்ஞத்தின் பெயரை புகழடையச் செய்ய வேண்டும். தந்தையினுடைய மதிப்பு போய்விடும் அளவிற்கு அப்பேர்ப்பட்ட எந்த செயலையும் செய்யக் கூடாது. சேவையினால் தங்களுடைய பாக்கியத்தை தாங்களே அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. தந்தைக்கு சமமாக (கல்யாணகாரி) நன்மை செய்பவராக ஆகி அனைவருடைய ஆசிகளை பெற்று முன்னால் நம்பர் பெற வேண்டும். இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தாமரை மலர்போல இருப்பதற்கான நல்ல துணிவை வெளிப்படுத்த வேண்டும்.

வரதானம்:

ஒத்துழைப்பு (சகயோகம்) மூலமாக சுயம் தங்களை சகஜயோகி ஆக்கிக் கொண்டு விடக் கூடிய நிரந்தர யோகி ஆவீர்களாக.

சங்கமயுகத்தில் தந்தைக்கு (சகயோகி) ஒத்துழைப்பு அளிப்பவராக ஆவது - இதுவே சகஜயோகி ஆவதற்கான விதி ஆகும். யாருடைய ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் செயல் தந்தையினுடைய மற்றும் தங்களது இராஜ்ஜிய ஸ்தாபனையின் காரியத்தில் சகயோகியாக இருப்பதற்கானதாக இருக் கிறதோ, அவருக்கு ஞானி யோகி ஆத்மா, நிரந்தர உண்மையான சேவாதாரி என்று கூறப்படுகிறது. மனதால் முடியவில்லை என்றால் உடலால், உடலால் முடியவில்லை என்றால் செல்வத்தால், செல்வத்தால் கூட முடியவில்லை என்றால் எதில் சகயோகி ஆக முடியுமோ, அதில் சகயோகி ஆகுங்கள். ஆக இதுவும் யோகம் ஆகும். நீங்கள் இருப்பதே தந்தையினுடையவராக, தந்தை மற்றும் நீங்கள் - மூன்றாவது என்று யாருமே இல்லை - இவ்வாறு இருந்தீர்கள் என்றால் நிரந்தர யோகி ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:

ஸ்லோகன்: சங்கமத்தில் சகித்து கொள்வது அதாவது இறப்பதே சொர்க்கத்தின் இராஜ்ஜியம் பெறுவது ஆகும்.