ஓம் சாந்தி.
தந்தை மற்றும் தாதா (மூத்த சகோதரர்) இணைந்து குழந்தைகளுக்குப்
புரிய வைக்கின்றார்கள். சில நேரம் தந்தை புரிய வைக்கின்றார்,
சில நேரம் தாதாவும் புரிய வைக் கின்றார். ஏனெனில் இந்த சரீரம்
தாதாவின் வீடு ஆகும். பரமபிதா பரமாத்மா பரந்தாமத்தில்
இருக்கின்றார். அவசியம் சில காலம் இந்த பாரதம் தான் அவரது
வீடாக இருக்கிறது. ஆகையால் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சிவனுக்கு அதிக கோவில்களும் உள்ளன. எனவே, பதீத மானவர்களை பாவனம்
ஆக்குவதற்காக மற்றும் அனைத்து மனிதர்களை மாயை இராவணனின்
வலையிலிருந்து விடுவிப்பதற்காக அவரது வருகை பாரத கண்டத்தில்
தான் நடைபெறுகிறது என்பது நிரூபணம் ஆகிறது. ஏனெனில் இப்பொழுது
இராவணனின் இராஜ்யம் ஆகும். இராவணனை எரிப்பதும் பாரதத்தில் தான்
நடைபெறுகிறது. சிவராத்திரி மற்றும் கிருஷ்ண ஜெயந்தியைக் கூட
பாரதத்தில் தான் கொண்டாடுகின்றனர். இராவணனின் இராஜ்யம் கூட
அரைக்கல்பம் நடைபெறுகிறது. பின்னர் பதீதமானவர்களை பாவனம்
ஆக்குவதற்காக தந்தை வருகின்றார். ஒரே ஒரு முறை தான் பாவனம்
ஆக்குகின்றார், பிறகு, வருவதே இல்லை. தந்தையின் பெயர்
பாரதத்தில் பிரசித்தமாக உள்ளது. அவசியம் ஏதோ ஒரு தெய்வீகக்
காரியம் செய்திருப்பதனால் அவருக்குப் பெயர் உள்ளது. மனிதர்,
மனிதர் களை பாவனம் ஆக்க முடியாது. பதீதபாவனர் என்று ஒரு தந்தையை
மட்டும் தான் சொல்லப்படுகிறது. சொர்க்கம், நரகம் என்ற இந்த
பெயர்கள் கூட பாரதத்தைக் குறிப்ப தாகும். பாரதம் 5 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு சொர்க்கமாக இருந்தது. அதை கந்தர் வலோகம் (தேவதைகளின்
உலகம்) என்றும் கூறப்படுகிறது எனில், அவசியம் தந்தை யிடமிருந்து
ஆஸ்தி கிடைத்திருக்கிறது. தந்தை என்ற வார்த்தை மிகவும் இனிமை
யானதாக உள்ளது. அவரிடமிருந்து தான் எல்லையற்ற சுகம் என்ற ஆஸ்தி
கிடைக்கிறது. அந்த சுகம் அரைக்கல்பம் இருக்கிறது. சிலருக்கு
பொன்விழா, வெள்ளி விழா கொண்டாடுகிறார்கள். சத்யுகத்தை பொன்விழா
என்றும் திரேதாயுகத்தை வெள்ளி விழா என்றும் கூறுகிறார்கள். அது
சதோபிரதானம், மற்றொன்று சதோநிலை யாகும். இரண்டையும் இணைத்து
சுகதாமம் என்று சொல்லப்படுகிறது. சூரிய வம்சத்தினர் முதல் எண்
ஆவர், சந்திரவம்சத்தினர் இரண்டாம் எண் ஆவர். தந்தை எப்பொழுது
இந்த பாரத கண்டத்தில் வருகின்றாரோ அப்பொழுது பாரதத்தை பாவனம்
ஆக்குகின்றார். பின்னர், எப்பொழுது பக்தி ஆரம்பமாகிறதோ
அப்பொழுது கலைகள் குறைந்துகொண்டே போகிறது. மரமானது இற்றுப்போய்
தமோபிரதானம் ஆகிவிடு கிறது. அனைவரும் பக்தர்கள் ஆகிவிடு
கின்றனர். சாதுக்கள் கூட தந்தையை அடைவதற்காக அதாவது முக்தி,
ஜீவன்முக்திதாமம் செல்வதற்காக தவம் செய் கின்றனர். தந்தையை
அடைவதற்காக அரைக்கல்பம் பக்தி செய்கின்றனர். எப்பொழுது அந்த
சமயம் முடிவடைகிறதோ அப்பொழுது பக்தர்களை சுகம் நிறைந்தவர்கள்
ஆக்குவதற்காக தந்தை வருகிறார். சத்யுகத்திலோ சுகம், சாந்தி,
செல்வம் ஆகிய அனைத்தும் உள்ளன. அங்கே ஒருபொழுதும் அகாலமரணம்
ஏற்படுவதில்லை. ஒரு பொழுதும் அடித்துக்கொண்டு அழுவது கிடையாது.
இதை யார் புரியவைக்கிறார்கள்? எல்லையற்ற தந்தை, அவருடைய பெயரும்
தேவை அல்லவா? கலியுகத்தில் இருப்பதோ காரிருள் ஆகும். பக்தி
மார்க்கத்தின் ஏமாற்றத்தை அடைந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சொர்க்கத்திலோ துக்கத்தின் வி‘யமே கிடையாது. அனைவரும் சுக
மானவர்களாக இருக் கின்றார்கள். எனவே, பகவானை அழைப்பதில்லை.
சத்யுகத்தை சுகதாமம் என்றும் கலி யுகத்தை துக்கதாமம் என்றும்
கூறப்படுகிறது. வல்லபாச்சாரி வைஷ்ணவர்கள் சத்யுகத்தில் இலட்சுமி
நாராயணரது இராஜ்யம் நடைபெற்றது என்று புரிந்திருக்கின்றனர்.
இராஜா இராணியைப் போல் பிரஜைகளும் சுகமானவர்களாக இருந்தார்கள்.
அதை பொன்னான யுகம் என்று சொல்லப்படுகிறது. சத்யுகத்திலிருந்து
யார் சக்கரத்தில் வருகின்றார்களோ அவர்களுடைய பிறவிகளே 84
பிறவிகளாக இருக்கும். இது மரம் ஆகும். அனைத்து இலை களும்
ஒன்றாகச் சேர்ந்து வராது என்பது குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப்பட்டிருக்கிறது. சத்யுகத்தில் ஒரே ஒரு ஆதி சனாதன தேவி
தேவதா தர்மம் இருந்தது, அதை ஹிந்து தர்மம் என்று கூற இயலாது.
தேவி தேவதைகளோ சர்வகுணங்களிலும் சம்பன்னமானவர்கள், 16
கலைகளிலும் சம்பூரணமானவர்கள் என்று பாடப்படுகின்றனர். யார்
அவர்களுடைய பூஜாரிகளோ அவர்கள் அவசியம் அந்த தர்மத்தைச்
சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்தவர் கள் கிறிஸ்துவை
நினைவு செய்கின்றனர் என்றால் அவர்கள் அந்த தர்மத்தைச்
சேர்ந்தவர்கள் ஆவார்கள் அல்லவா. பின்னர், பாரதவாசிகள் தன்னுடைய
தேவிதேவதா தர்மத்தின் பெயரை ஏன் மறைத்துவிட்டனர்?
நாம் தேவதைகளாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாமே
பிறப்பு இறப்புச் சக்கரத்தில் வருகிறோம். நாம் தேவதை,
சத்திரியர் ஆகின்றோம். 84 பிறவிகள் எடுத்து எடுத்து இறுதியில்
சூத்திரர்கள் ஆகின்றோம். சூத்திரனிலிருந்து பின்னர் பிராமணன்
ஆகவேண்டும். பிரம்மாவின் குழந்தைகளே பிராமணர்கள் ஆகின்றனர்.
அனைத்து ஆத்மாக்களும் உண்மையில் சிவனுடைய குழந்தைகள் ஆவார்கள்.
அவர் எல்லையற்ற தந்தை ஆவார். அவர் பரமபிதா பரமாதமா, ஓ! காட் ஃபாதர்
(இறை தந்தை) மற்றும் சொர்க்கத்தைப் படைக்கும் இறை தந்தை என்று
கூறப்படுகிறார். அவர் சொர்க்கத்தின் படைப்பாளர் ஆவார்.
இப்பொழுது குழந்தைகள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். தந்தை
சொர்க்கத்தைப் படைக்கின்றார் எனில் நாம் ஏன் புது உலகத்தின்
வாரிசு ஆகக்கூடாது? இப்பொழுது அந்தப் புதுஉலகம் பழையதாகி
விட்டது, பிறகு, எவ்வாறு புது உலகமாக ஆகும்? புதிய இராம
இராஜ்யம், புதிய பாரதம் வர வேண்டும் என்று காந்திஜியும்
பாடினார் அல்லவா? இப்பொழுது அது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது
என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இப்பொழுது பிராமணர்களாகிய
உங்களுக்கு ஈஸ்வரனுடைய மடி கிடைத்துள்ளது. நடைமுறையில்
எல்லையற்ற தந்தையை தன்னுடையவர் ஆக்கியிருக்கிறீர்கள். ஓ! இறை
தந்தையே ! இரக்கம் காண்பியுங்கள் என்று அனைவரும் கூறிக்கொண்டே
இருக்கின்றனர். ஆனால், இந்த சமயம் தந்தை வந்து இந்த உடல் மூலம்
உங்களை தன்னுடையவர் ஆக்கியிருக் கின்றார். அந்த கலியுக
பிராமணர்கள் விகாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் ஆவர், நாம்
பிரம்மா வாய் வழிவம்சத்தினர் ஆவோம். பிரஜாபிதா பிரம்மா ஆவார்.
ஆகையினாலேயே, இத்தனை குழந்தைகளுக்கு பிறப்பு அளித்திருப்பார்
அல்லவா. எனவே, இது வாய்வழி வம்சம் ஆகும். பரமபிதா பரமாத்மா
பிரம்மா வாய் மூலம் தத்தெடுத்திருக்கின்றார் எனில் தாயும்
ஆகிவிட்டார். நீங்கள் தாயும், தந்தையும் ஆவீர்கள் ஓ பாபா!
நீங்கள் எங்களை பிரம்மா வாய் மூலமாக தன்னுடையவர் ஆக்கி
யிருக்கிறீர்கள். இவை யாவும் புரிந்து கொள்வதற்கான விசயங்கள்
ஆகும். ஞானக் கடலானவர் ஒரே ஒரு தந்தை ஆவார். ஞானத்தின் மூலம்
தான் சத்கதி அதாவது பகல் ஏற்படுகிறது. அஞ்ஞானத்தின் மூலம் இரவு
ஏற்படுகிறது. கலியுகம் என்பது இரவு அல்லவா, இதை பக்தி மார்க்கம்
என்று கூறப்படுகிறது. சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி
மார்க்கத்தைச் சேர்ந்தவை ஆகும். அதன் மூலம் தந்தையை
வந்தடைவதற்கான வழி எதுவும் கிடைப்ப தில்லை. தந்தை கல்ப கல்பமாக
வருகின்றார். சிவராத்திரி கொண்டாடுகின்றனர் என்றால் அவர்
அவசியம் வருகின்றார். அவருக்கு தனக்கென்ற சரீரம் எதுவும்
கிடையாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரையும் தேவதைகள் என்று
கூறப்படுகிறது. பிரம்மா தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ, பிறகு,
சிவபரமாத்மா நமஹ. பிரம்மா இந்த சாகார குலத்தின் மூத்தவர் ஆவார்.
இப்பொழுது இது நடைமுறையில் (பிராக்டிக்கலில்) உள்ளது. தந்தை
வருவதே சங்கமயுகத்தில் தான். இப்பொழுது யாதவர்களும் உள்ளனர்,
கௌரவர்களும் உள்ளனர் மற்றும் பாண்டவர்களோ யோக சக்தி உடைய சக்தி
சேனை ஆவார்கள். சிவபாபா பிராக்டிக் கலில் பிரம்மா உடலில்
வந்திருக்கின்றார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அந்த நிராகார சிவனுடைய கோவிலும் உள்ளது.
சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆனால், அரசாங்கம்
சிவஜெயந்திக்காக விடுமுறை அளிப்பதைக் கூட நீக்கிவிட்டது.
பிறருடைய ஜெயந்திகளை கொண்டாடிக் கொண்டே இருக்கின்றனர்.
தர்மத்தின் சக்தி இல்லை. ஆகையால் நேர்மையற்ற, நியாயமற்ற,
ஏழ்மையானவர்கள் ஆகிவிட்டனர். தூய்மையும் இல்லை, அமைதியும் இல்லை,
செழிப்பும் இல்லை. இதே பாரதத்தில் 5 ஆயிரம் வருடங்களுக்கு
முன்பு பொன்னான யுகம் இருந்தபொழுது தூய்மை, அமைதி, செழிப்பும்
இருந்தது. ஒருபொழுதும் அகால மரணம் ஏற்பட்டதில்லை. பாரதம் போன்ற
உயர்ந்த செல்வந்த பூமியாக வேறு எதுவும் இருக்க இயலாது. பாரத
கண்டம் அனைத்தையும் விட உயர்ந்தது ஆகும். அதனுடைய வரலாறும்
உருவாகியுள்ளது. இந்த பாரதமே துய்மையானதாகவும் மற்றும் தூய்மை
யற்றதாகவும் ஆகிறது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினரே இந்த
சக்கரத்தைச் சுற்றி சூத்திர குலத்தில் வந்திருக்கின்றனர். பிறகு,
சூத்திர குலத்திலிருந்து இப்பொழுது பிராமண குலத்தில்
வந்திருக்கிறீர்கள். தேவதைகளை விட பிராமண குலம் உயர்ந்த
உச்சியில் உள்ளது. சத்யுக தேவதைகளின் மகிமை, தந்தையின் மகிமையை
விட தனிப்பட்டது ஆகும். தந்தையை ஞானக்கடல், ஆனந்தக் கடல் என்று
கூறுகின்றனர். பிறகு, தேவதைகளை சர்வகுண சம்பன்னம் என்று
கூறுவார்கள். அங்கே விகாரத் திற்கான விசயமே கிடையாது.
கிருஷ்ணபுரியில் கூட கம்சன், இராவணன் போன்றோர் இருந்ததாக
சாஸ்திரங்களில் அதிக பொய்கள் கூறிவிட்டனர். உண்மையில் இந்த
சமயமே கம்சபுரி ஆகும். பிறகு, சத்யுகத்தில் கிருஷ்ணபுரி
இருக்கும். இதுவோ சங்கமம் ஆகும். ஆகையினாலேயே, அவர்கள் கம்சன்,
ஜராசந்தி, இராவணன் போன்றோரை சத்யுக தேவதைகளோடு இணைத்து விட்டனர்.
இது அசுர இராவண சம்பிரதாயம் ஆகும். இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய
சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியிருக் கிறீர்கள். ஈஸ்வரிய
மடியில் வந்து தூய்மை ஆகி பிறகு 21 பிறவி களுக்கு தெய்வீக
மடிக்குச் செல்கிறீர்கள். 8 பிறவிகள் தெய்வீக மடி பிறகு, 12
பிறவிகள் சத்திரிய மடி கிடைக்கிறது. 21 குலங்களை முன்னேற்றம்
அடையச் செய்பவரே கன்னிகை ஆவார் என்று பாரதத்தில் மட்டும் தான்
பாடப்பட்டிருக்கிறது. அந்தக் குமாரிகள் நீங்களே ஆவீர்கள்.
இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய குலத்தைச் சேர்ந்தவர்கள்! சிவபாபா
தாத்தா ஆவார், பிரம்மா தந்தை ஆவார். நீங்கள் பிரம்மாகுமாரர்கள்,
குமாரிகள் ஆவீர்கள். அந்த எல்லை யற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி
கிடைக்கிறது. கொடுக்கக்கூடியவர் அவர். அவரோ நிராகாரமானவர், அவர்
எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிப்பார், நரனிலிருந்து நாராயணர்
ஆக்குவதற்காக அவசியம் சாகார சரீரம் தேவை. எனவே, யார் 84
பிறவிகள் எடுத்திருக்கின்றனரோ, அந்த பதீத உடலில் வருகின்றார்.
இது பெரியதிலும் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கே சுயம் இறைவன்
வந்து இராஜாக்களுக்கெல்லாம் இராஜா ஆக்குவதற்காக இராஜயோகத்தைக்
கற்பிக்கின்றார். கீதையின் படைப்பாளர் கிருஷ்ணர் அல்ல. தாயான
கீதையே கிருஷ்ணருக்கு பிறப்பு அளித்தது. யார் தேவதை ஆனார்களோ,
அவர்களுக்கு சிவபாபா மூலம் பிறப்பு கிடைத்தது.
கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவால் சொல்லப்பட்ட பைபிள் மூலம்
பிறப்பு கிடைத்தது. உங்களைக் கூட பிராமணரிலிருந்து தேவதையாக
ஆக்கியது யார்? சிவபாபா, பிரம்மா வாய் மூலம் ஆக்கினார்.
உங்களுடையது எல்லையற்ற சந்நியாசம் ஆகும். அது எல்லைக்குட்பட்ட
ரஜோகுண சந்நியாசம் ஆகும். அதாவது நிவிருத்தி மார்க்கத்தின்
சந்நியாச மாகும். உங்களுக்கு இந்த பழைய சீ, சீ உலகத்தின் மீது
வைராக்கியம் வந்திருக்கிறது. இது இப்பொழுது முடியப்போகிறது
என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். இதை விடுத்து
நாம் ஏன் சொர்க்கத்தின் படைப்பாளர் தந்தையை நினைவு
செய்யக்கூடாது? செல்ல மான குழந்தைகளே, நீங்கள் அனேகப்
பிறவிகளுக்குப் பிறகு சந்திக்கிறீர்கள் என்று தந்தை
கூறுகின்றார். நீங்கள 84 பிறவிகள் முழுமையாக எடுத்து
விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் தேவதா குலத்திற்குச் செல்ல
வேண்டும். இதில் பத்தியமும் அதிகம் உள்ளது, அசுத்த பொருட் களை
சாப்பிடக் கூடாது. நான் சங்கம யுகத்தில் வருவதே அழுக்கான
துணிகளை தூய்மையாக ஆக்குவதற்காகத் தான் என்று தந்தை
கூறுகின்றார். இப்பொழுது மரணம் எதிரிலேயே நிற்கின்றது.
யாதவர்கள், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களும் இருக்கின்றனர்
எனில் அவசியம் பாண்டவ பதியும் இருப்பார். பாண்டவபதி என்று பிதா
பரமாத்மாவை கூறுவார்கள். நீங்கள் வழிகாட்டிகள் ஆவீர்கள்.
சுகதாமம், சாந்திதாமம் செல்வதற்கான வழியைக் கூறு கிறீர்கள்.
ஆகையால், உங்களை பாண்டவ சிவசக்தி சேனை என்று கூறப்படுகிறது.
யாதவர்களாகிய ஐரோப்பியர்களோ தன்னுடைய குலத்தையே நாசம்
செய்கின்றனர். பாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள்
இருக்கின்றனர். இதையே அசுரர்கள் மற்றும் தேவதைகளின் யுத்தம்
நடைபெற்றதாகக் கூறுகின்றனர். நீங்கள் இப்பொழுது தேவதை கிடையாது,
ஆகவேண்டும். ஸ்ரீமத் மூலம் நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர்
ஆகிறீர்கள். மற்ற அனைவருடையதும் அசுர இராவண வழியாகும்.
அரைக்கல்பமாக இராவணனுடைய வழி இருந்து வருகிறது. இப்பொழுதோ முழு
உலகமும் தமோபிரதானமாக உள்ளது. இது ருத்ர ஞான யக்ஞம் ஆகும்.
இங்கே தந்தை அமர்ந்து இராஜயோகம் கற்பிக்கின்றார். எப்பொழுது
இராஜ்யம் ஸ்தாபனை ஆகிவிடுகிறதோ, அப்பொழுது இந்த வினாச ஜூவாலை
கொழுந்துவிட்டு எரியும், இந்த ஞானம் மறைந்துவிடும். பின்னர்,
நாடகத்தின் அனுசாரமாக பக்திமார்க்கத்தின் சாஸ்திரங்கள்
என்னவெல்லாம் உள்ளனவோ அவையே வெளிப்படும். சந்நியாசிகளைப்
பின்பற்று பவர்கள் அதிகமாக இருப்பார்கள். அனைவரும் பாவத்தை
கழுவுவதற்காக கங்கைக்குச் செல்கின்றனர். இப்பொழுது கங்கை நதியோ
யாரையும் பாவனம் ஆக்க இயலாது. அது தண்ணீராலான கடலிலிருந்து
வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் ஞானக் கடலிலிருந்து வெளிப்பட்ட
ஞான கங்கைகள் ஆவீர்கள். மற்றபடி கங்கை ஒன்றும் பதீதபாவனி
கிடையாது. குழந்தைகளுக்கு மீண்டும் பக்தியின் பலனாக எல்லையற்ற
சுகத்தின் ஆஸ்தியை அளிப்பதற்காக வந்திருக் கின்றேன். யார்
தந்தையிடம் வந்து படிப்பார்களோ அவர்களே சொர்க்கத்தில்
வருவார்கள். மற்ற அனைவரும் அவரவர் பிரிவிற்கு சென்றுவிடுவார்கள்.
இந்த நாடகச் சக்கரத்தைப் பற்றிக் புரிந்துகொள்ள வேண்டும்.
சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சக்கர வர்த்தி இராஜா
ஆகிறீர்கள். அரசாங்கமும் சக்கரத்தை உருவாக்கி உள்ளது. மூன்று
சிங்கங்களைக் காண்பித்துவிட்டு பிறகு கீழே வாய்மையே வெல்லும்
என எழுதியுள்ளார்கள்
இப்பொழுது சிவபாபா வந்து பார்வதிகளாகிய உங்கள் அனைவரையும்
அமரபுரியின் எஜமானர்கள் ஆக்குவதற்காக அமரகதையைக் கூறிக்
கொண்டிருக்கின்றார். இதையே சத்திய நாராயணரின் கதை மற்றும்
அமரகதை என்று கூறப்படுகிறது. இந்தக் கதையை ஒரே ஒரு முறை
கேட்டுவிட்டு நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர்கள் ஆகிறீர்கள்.
மற்ற அனைத்தும் கட்டுக்கதைகள் ஆகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தேவதை குலத்தில் செல்வதற்காக உணவில் மிகுந்த
பத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு அசுத்த பொருளையும்
உண்ணக்கூடாது.
2. இப்பொழுது அழிந்து போகக்கூடிய இந்த பழைய சீ, சீ உலகத்தின்
மீது எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் வைத்து சொர்க்கத்தின்
படைப்பாளரான தந்தையை நினைவு செய்ய வேண்டும்.