06-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் அஸ்திவாரம் நம்பிக்கை, நிச்சயபுத்தியுடன் முயற்சி செய்தால் இலட்சியத்தை அடைந்து விடுவீர்கள்.

கேள்வி:
எந்த ஒரு விசயம் மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் நம்பிக்கை வைக்க வேண்டிய விசயமாகும்?

பதில்:
இப்போது அனைத்து ஆத்மாக்களின் கணக்கு வழக்கு முடிவடையப் போகிறது. அனைவரும் கொசுக் கூட்டம் போன்று தனது இனிய வீட்டிற்குச் செல்வார்கள். பிறகு புது உலகிற்குக் குறைந்த ஆத்மாக்கள் தான் வருவார்கள். இந்த விசயம் மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் நம்பிக்கை வைக்க வேண்டிய விசயமாகும்.

கேள்வி:
தந்தை எந்தக் குழந்தைகளைப் பார்த்துக் குஷியடைகின்றார்?

பதில்:
எந்தக் குழந்தைகள் தந்தையிடம் முழுமையாகப் பலியாகிறார்களோ, யார் மாயையினால் பாதிப்படைய வில்லையோ அதாவது அங்கதனைப் போன்று ஆடாது, அசையாது இருக்கிறார் களோ அப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்த்து தந்தை குஷியடைகின்றார்.

பாடல்:
மனிதர்களே, பொறுமையாக இருங்கள் .......

ஓம் சாந்தி.
குழந்தைள் என்ன கேட்டீர்கள்? இவ்வாறு தந்தை மட்டுமே கூற முடியும். சந்நியாசியோ, சீடர்களோ வேறு யாரும் கூற முடியாது. பரலௌகீக எல்லையற்ற தந்தை மட்டுமே குழந்தைகளுக்குக் கூறுகின்றார். ஏனெனில் ஆத்மாவில் தான் மனம், புத்தி இருக்கிறது. இப்போது பொறுமையாக இருங்கள் என்று ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார். இப்போது உங்களது சுகமான நாட்கள் வந்து கொண்டிருக்கிறது. இது துக்கதாமம் ஆகும். இதற்குப் பிறகு சுகதாமம் வந்தே ஆக வேண்டும். சுகதாமத்தை தந்தை தான் ஸ்தாபனை செய்வார் அல்லவா! தந்தை தான் குழந்தைகளுக்குப் பொறுமையாக இருக்க அறிவுருத்துகின்றார். முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லவா! பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்களுக்குத் தான் நம்பிக்கை ஏற்படுகிறது. இல்லையெனில் இவ்வளவு பிராமணர்கள் எங்கிருந்து வந்தார்கள்? பி.கு என்பதன் பொருள் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள். இவ்வளவு பேர் பி.கு என்று கூறு கின்றனர் எனில் அவசியம் பிரஜாபிதா பிரம்மா இருப்பார் அல்லவா! இவ்வளவு பேருக்கும் ஒரே ஒரு தாய், தந்தை தான் இருக்கின்றார், மற்ற அனைவருக்கும் தனித்தனியாகத் தாய், தந்தை இருப்பர். இங்கு உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு தாய், தந்தை. புது விசயம் அல்லவா! நீங்கள் முன்பு பிராமணர்களாக இருக்கவில்லை, இப்போது ஆகியிருக்கிறீர்கள். அந்தப் பிராமணர்கள் விகார வம்சத்தினர்கள், நீங்கள் வாய்வழி வம்சத்தினர்கள். நமக்குப் புரிய வைப்பது யார்? என்று ஒவ்வொரு விசயத்திலும் நம்பிக்கை இருக்க வேண்டும். பகவான் தான் புரிய வைக்கின்றார், இப்போது கலியுகத்தின் கடைசியாகும், யுத்தம் எதிரில் இருக்கிறது. யாதவர்களாகிய ஐரோப்பியர்களும் இருக்கின்றனர், அவர்கள் தான் அணு குண்டு போன்ற வற்றைத் தயாரித்து இருக்கின்றனர். வயிற்றிலிருந்து உலக்கை வெளிப்பட்டது என்ற பாடல் உள்ளது. இது தற்கால ஏவுகணைகளைக் குறிப்பதாகும். அதன் மூலம் தனது குலமே விநாசம் ஆனது என்று கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் குலத்தை அவசியம் விநாசம் செய்வர். இருப்பதும் ஒரே ஒரு குலம். நாங்கள் விநாசம் செய்வோம் என்று ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருக்கின்றனர். இவ்வாறும் எழுதப் பட்டிருக்கிறது. ஆகக் குழந்தைகளே! பொறுமையாக இருங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். இப்போது இந்தப் பழைய உலகம் அழிய வேண்டும். கலியுகம் விநாசம் ஆகும் போது தான் சத்யுகம் வரும் அல்லவா? அதற்கு முன்பாகவே தான் அவசியம் ஸ்தாபனை ஆகியிருக்க வேண்டும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, சங்கர் மூலம் விநாசம் என்றும் பாடப்பட்டிருக்கிறது. முதலில் புதியதை ஸ்தாபனை செய்வார், பிறகு ஸ்தாபனை எப்போது முடிவடைகிறதோ அப்போது விநாசம் ஏற்படும். ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதுவோ தனிப்பட்ட பாதையாகும், இதை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. யாரும் ஒருபோதும் கூறியதும் கிடையாது. மற்ற மடங்கள் இருப்பது போன்று இந்தப் பி.கு வும் ஒரு மடம் என்று நினைக்கின்றனர். இது அவர்களது குற்றம் கிடையாது. கல்பத்திற்கு முன்பும் இவ்வாறு தடை போட்டிருந்தனர். இது ருத்ர ஞான யக்ஞமாகும். ருத்ரன் என்று சிவன் கூறப்படுகின்றார். அவரே இராஜயோகம் கற்பிக் கின்றார். இது பழமையான எளிய இராஜ யோகம் என்று கூறப்படுகிறது. பழமையான என்பதன் பொருளையும் புரிந்து கொள்வது கிடையாது. இந்தச் சங்கமயுகத்தின் விசயமாகும். தூய்மை யின்மை மற்றும் தூய்மை சங்கமம் ஆகிறது அல்லவா! சத்யுக ஆரம்பத்தில் ஒரே ஒரு தர்மம் தான் இருந்தது. அவர்கள் அசுர குடும்பத்தினர்கள், நீங்கள் தெய்வீக குடும்பத்தினர்கள். யுத்தத் திற்கான விசயம் ஏதுமில்லை. இதுவும் தவறாகும். சகோதர, சகோதரர்களாகிய நீங்கள் எப்படிச் சண்டையிட்டுக் கொள்ள முடியும்?

தந்தை அமர்ந்து பிரம்மாவின் மூலம் அனைத்து வேத சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கின்றார். உண்மையில் முக்கியத் தர்மங்கள் நான்கு. அவர்களது தர்ம சாஸ்திரங்களும் நான்கு. அவைகளில் முதன்மையானது ஆதி சநாதன தேவி, தேவதா தர்மம். அதன் சாஸ்திரம் அனைத்து சாஸ்திரங்களுக்கும் மேலானது (தலையானது) கீதையாகும். இது பாரதத்தின் முக்கியச் சாஸ்திரமாகும். இதன் மூலம் தான் ஆதி சநாதன தேவி, தேவதா தர்மம் அதாவது சூரியவம்சி மற்றும் சந்திரவம்சி தர்மம் ஸ்தாபனை ஆனது. அவசியம் சங்கமத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். இது கும்பம் என்றும் கூறப்படுகிறது. ஆத்மாலிபரமாத்மாவின் மேளா, கும்ப மேளா (விழா) என்றும் கூறப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது மங்களகரமான, கல்யாணகாரி மேளா ஆகும். கலியுகம் மாறி சத்யுகம் ஏற்பட்டே ஆக வேண்டும். அதனால் தான் கல்யாணகாரி என்று கூறப்படுகிறது. சத்யுகத்திலிருந்து திரேதா ஏற்படுகிறத, பிறகு திரேதாவிலிருந்து துவாபரம் ஏற்படும் போது கலைகள் குறைந்து கொண்டே செல்கிறது. தீங்கு ஏற்பட்டுக் கொண்டே செல்கிறது. பிறகு நன்மை செய்யக் கூடியவர் அவசியம் தேவை. எப்போது முழுமையாகத் தீங்கு ஏற்பட்டு விடுகிறதோ அப்போது அனைவருக்கும் நன்மை செய்வதற்காகத் தந்தை வருகின்றார். புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும். நன்மை செய்யும் பொருட்டுத் தந்தை அவசியம் சங்கமத்தில் வருகின்றார். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் தந்தை. அனைவரும் துவாபரத்தில் கிடையாது. சத்யுகம், திரேதாவிலும் அனைவரும் கிடையாது. கடைசியில் எப்போது அனைத்து ஆத்மாக்களும் வந்து விடுகிறார்களோ அப்போது தான் தந்தை வருவார். ஆகத் தந்தை வந்து தான் பொறுமையாக இருக்க அறிவுறுத்துக்கின்றார். பாபா, இந்தப் பழைய உலகில் அதிகத் துக்கம் இருக்கிறது, சீக்கிரம் அழைத்துச் செல்லுங்கள் என்று குழந்தைகள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார் லி இல்லை குழந்தைகளே! இது உருவாக்கப் பட்ட நாடகமாகும். உடனேயே கீழான நிலையிலிருந்து உயர்ந்த நிலை அடைந்து விடமாட்டீர்கள். நிச்சயபுத்தி யுடையவர்களாக ஆக வேண்டும், பிறகு முயற்சி செய்ய வேண்டும். விநாடியில் ஜீவன்முக்தி என்று கூறப் பட்டிருப்பது சரியே. குழந்தை ஆவது என்றால் ஆஸ்திக்கு உரிமையாளர் ஆவதாகும். பிறகு அங்கும் வரிசைக் கிரமமான பதவி இருக்கிறது அல்லவா! உயர்ந்த பதவி அடைவதற்காகப் படிப்பில் முயற்சி செய்ய வேண்டும். உடனேயே கர்மாதீத நிலை ஏற்பட்டுவிடும் என்பது கிடையாது. பிறகு சரீரமும் விட வேண்டி யிருக்கும். இவ்வாறு சட்டம் கிடையாது. மாயையிடம் நல்ல முறையில் யுத்தம் செய்ய வேண்டும். யுத்தம் 8-10-15 ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களது யுத்தம் மாயையிடத்தில் இருக்கிறது. எதுவரை தந்தையிருக்கிறாரோ அதுவரை யுத்தம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கடைசியில் யார், எந்த அளவிற்கு மாயாவை வென்றீர்கள்? எத்தனை பேர் கர்மாதீத் நிலை அடைந்திருக்கின்றனர்? என்ற ரிசல்ட் கடைசியில் வெளிப்படும். எவ்வளவு முடியுமோ தனது வீட்டை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். அது சாந்திதாமம் ஆகும். சப்தங்களைக் கடந்து இருக்கும் இடமாகும். இப்போது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் குஷியிருக்கிறது. இந்த நாடகம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது? என்பதை நீங்கள் அறிவீர்கள். மூன்று லோகங்களையும் நீங்கள் அறிவீர்கள், வேறு யாருடைய புத்தியிலும் கிடையாது. பாபாவும் சாஸ்திரம் போன்றவைகளை அதிகம் படித்திருக்கின்றார். ஆனாலும் இந்த விசயங்கள் புத்தியில் இல்லை. கீதை படித்திருந்தார், ஆனாலும் நாம் தூர தேசமாகிய பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள் என்பது புத்தியில் இல்லை. பரம்பிதா பரமாத்மா என்று அழைக்கப்படக் கூடிய நமது பாபா பரந்தாமத் தில் இருக்கின்றார் என்பதை இப்போது தெரிந்து கொண்டார். அவரைத் தான் பதீத பாவனனே வாருங்கள் என்று அனைவரும் நினைவு செய்கின்றனர். திரும்பி யாரும் செல்ல முடியாது. எவ்வாறு ஞாபக மறதிக்கான விளையாட்டு இருக்கிறது அல்லவா! எங்குச் சென்றாலும் மூடிய கதவு எதிரில் வந்து விடுகிறது, இலக்கை அடைய முடிவது கிடையாது. களைப்படைகின்ற போது யாராவது வழி கூற வேண்டும் என்று புலம்புவர். இங்கும் எவ்வளவு தான் வேத சாஸ்திரங்கள் படித்தாலும், தீர்த்த யாத்திரைக்குச் சென்றாலும் நாம் எங்குச் செல்கிறோம்? என்று எதுவும் தெரியாது. இன்னார் ஜோதி ஜோதியுடன் கலந்து விட்டார் என்று மட்டும் கூறி விடுகின்றனர். தந்தை கூறுகின்றார் லி யாரும் திரும்பி செல்ல முடியாது. நாடகம் முடிவடை கின்ற போது அனைத்து நடிகர்களும் மேடைக்கு வந்து விடுவர். இது நியமமாகும். அனைவரும் அந்த ஆடையில் நின்று விடுவர். அனைவருக்கும் முகத்தைக் காண்பித்த பிறகு ஆடையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குச் சென்று விடுவர். பிறகு அதே பாகத்தைத் திரும்பவும் நடிப்பர். இது எல்லையற்ற நாடகமாகும். இப்போது நீங்கள் ஆத்ம அபிமானிகளாக ஆகிறீர்கள், நாம் ஆத்மாக்கள் இந்தச் சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுப்போம் என்பதை அறிவீர்கள். மறுபிறவி இருக்கிறது அல்லவா! 84 பிறவிகளில் 84 பெயர்களை நாம் சூட்டிக்கொண்டிருக் கிறோம். இப்போது இந்த நாடகம் முடிவடைந்து விட்டது. அனைவரும் இற்றுப் போன நிலையாகி விட்டனர். இப்போது திரும்பவும் நடை பெறும். உலகச் சரித்திர, பூகோளம் திரும்பவும் நடைபெறும். இப்போது நமது பாகம் முடிவடையும், திரும்பிச் செல்வோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையின் கட்டளையும் ஒன்றும் குறைந்தது கிடையாது. பதீத பாவனாகிய தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார் லி குழந்தைகளே! உங்களுக்கு மிக எளிய வழியைக் கூறுகிறேன். அமர்ந்தாலும், எழுந்தாலும், நடந்தாலும் நான் நடிகன் என்பதை நினைவில் வையுங்கள். 84 பிறவிகள் இப்போது முடித்து விட்டேன். இப்போது தந்தை மலர் களாக ஆக்குவதற்காகவும், மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குவதற்காகத் தந்தை வந்திருக் கின்றார். தூய்மையற்றவர்களாகிய நம்மைத் தூய்மையாக்கிக் கொண்டிருக்கின்றார். தூய்மை யற்ற நிலையிலிருந்து பிறகு தூய்மையாக நாம் பல முறை ஆகியிருக்கிறோம் மற்றும் மீண்டும் ஆவோம். சரித்திர, பூகோளம் திரும்பவும் நடைபெறும். முதலில் தேவி தேவதா தர்மத்தினர் தான் வருவார்கள். இப்போது நாற்று நடப் படுகிறது. நாம் குப்தமாக இருக்கிறோம். நாம் கொண்டாட்டம் போன்றவைகள் ஏன் செய்ய வேண்டும்? நமக்குள் ஞானம் இருக்கிறது, மனதுள் குஷியிருக்கிறது. நமது தேவி, தேவதா தர்மம் அதாவது மரத்தின் கிளைகள் அனைத்தும், தர்மமும் கீழானதாக ஆகிவிட்டது, கர்மமும் (செயல்களும்) கீழானதாக ஆகி விட்டது. இதே பாரதவாசிகளின் தர்மம், செயல்கள் சிரேஷ்ட மானதாக இருந்தது. ஒருபோதும் மாயை பாவம் செய்ய வைக்கவில்லை. புண்ணிய ஆத்மாக் களின் உலகமாக இருந்தது. அங்கு இராவணன் கிடையவே கிடையாது. அங்குக் காரியங்களால் எதிர்விளைவுகள் இல்லாமலி ருக்கும். பிறகு இராவண இராஜ்யத்தில் காரியங்களில் எதிர்விளைவுகள் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. அங்குத் தீயகர்மங்கள் ஏற்படவே முடியாது. கீழானவர்கள் யாரும் இருக்கவே முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத் மூலம் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். புஜ பலத்தின் மூலம் யாரும் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிட முடியாது. இவர்கள் தங்களுக்குள் ஒருவேளை சேர்ந்து விட்டால் உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிட முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நாடகத்தில் பாகம் கிடையாது. இரண்டு பூனைகள் வெண்ணெய்க்காகச் சண்டையிடும் போது இடையில் வந்த குரங்கு சாப்பிட்டு விட்டது என்று காண்பிக்கின்றனர். கிருஷ்னரின் வாயில் வெண்ணெய் இருப்பதாகச் சாட்சாத் காரமும் செய்கின்றனர். இந்தச் சிருஷ்டிக்கான இராஜ்யம் என்ற வெண்ணெய் கிடைக்கிறது. மற்றபடி யுத்தம் என்பது யாதவர் களுக்கும் கௌரவர்களுக்கும் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட இடத்தில் மிகப் பெரிய ஹிம்சை ஏற்பட்டது ஆக உடனேயே யாரையாவது கொலை செய்து விடுகின்றனர். என்பதைச் செய்தித்தாள்களில் படிக்கிறீர்கள். பாரதத்தில் முதல் ஒரே ஒரு தர்மம் மட்டுமே இருந்தது. பிறகு மற்ற தர்மங்களின் இராஜ்யம் எங்கிருந்து வந்தது? கிறிஸ்தவர் கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர், அப்போது இராஜ்யம் செய்தனர். இப்போது உண்மையில் முழு உலகின் மீதும் இராவணன் அதிகாரம் செலுத்தி யிருக்கிறது. இது குப்தமான விசயமாகும். சாஸ்திரங்களில் இந்த விசயம் கிடையாது. இந்த விகாரங்கள் அரைக் கல்பத்திற்கான உங்களது எதிரியாகும், இதன் மூலம் நீங்கள் முதல், இடை, கடை துக்கம் அடைந்திருக்கிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். அதனால் தான் காக்கையின் எச்சலுக்குச் சமமான சுகம் என்று சந்நியாசிகளும் கூறுகின்றனர். சொர்க்கத்தில் சதா சுகமோ சுகம் தான் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. பாரதவாசிகளுக்குத் தெரியும், அதனால் தான் யாராவது இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச் சென்று விட்டதாகக் கூறுகின்றனர். சொர்க்கத்திற்கு எவ்வளவு மகிமை இருக்கிறது! ஆக இது ஒரு விளையாட்டாகும். ஆனால் நீங்கள் நரகவாசிகளாக இருக்கிறீர்கள் என்று யாரிடத் திலாவது கூறினால் கோபித்துக் கொள்வர். எவ்வளவு ஆச்சரியமான விசயமாகும்! சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று வாயில் கூறுகின்றனர் எனில் அவசியம் நரகத்திலிருந்து தான் சென்றிரு பார் அல்லவா! பிறகு நீங்கள் ஏன் அவர்களை அழைத்து நரகத்தின் பொருட்களைச் சாப்பிட கொடுக்கிறீர்கள்? சொர்க்கத்தில் அவர்களுக்கு மிகவும் நல்ல உணவுகள் கிடைக்கும் அல்லவா! அதாவது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை அல்லவா! அங்கு என்ன என்ன இருக்கும்? என்பதைக் குழந்தைகள் பார்த்திருக்கின்றனர். நரகத்தில் என்ன என்ன செய்து கொண்டிரு கின்றனர்? என்பதையும் பார்க்கிறீர்கள். குழந்தைகள் தந்தையைக் கொல்வதற்கும் தயங்குவது கிடையாது. மனைவிக்கு வேறு யார் மீதாவது காதல் ஏற்பட்டு விட்டால் கணவரையும் கொன்று விடுகிறாள். பாரதத்தில் ஒரு பாட்டும் இருக்கிறது லி இன்றைய மனிதர்களுக்கு என்ன ஆகிவிட்டது என்று ஒருபுறம் கூறுகின்றனர், பிறகு நமது பாரதம் அனைத்தையும் விட நல்ல தங்கம் போனற தேசமாகும் என்று கூறுகின்றனர். அரே, பாரதம் அனைத்தையும் விட நன்றாக இருந்தது, இப்போது கிடையாது. இப்போது ஏழையாக இருக்கிறது. எந்தப் பாதுகாப்பும் கிடையாது. நாமும் அசுர குடும்பத்தினர்களாக இருந்தோம். இப்போது பாபா நம்மை ஈஸ்வரிய குடும்பத்தினர்களாக ஆக்குவதற்கு முயற்சித்துக் கொண்டி ருக்கின்றார். ஒன்றும் புதிய விசயமில்லை. கல்ப கல்பம், கல்பத்தின் சங்கமத்தில் நாம் மீண்டும் நமது ஆஸ்தியை அடைகிறோம். தந்தை ஆஸ்தி கொடுப்பதற்காக வருகின்றார். பிறகு மாயை சாபம் கொடுக்கிறது. எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது! மாயா! நீ எவ்வளவு சாதுர்யமாக இருக்கிறாய், நல்ல நல்ல குழந்தைகளையும் வீழ்த்தி விடுகிறாய் என்று தந்தை கூறுகின்றார். அந்தச் சேனைகளில் இறப்பது மற்றும் கொல்வதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.. அடி வாங்கிய பிறகு கூட மைதானத்திற்கு மீண்டும் வந்து விடுவர். அவர்களது தொழிலே இது தான். அவர்களுக்குப் பரிசும் கிடைக்கும். இங்குக் குழந்தைகள் நீங்கள் சிவபாபாவிடத்தில் சக்தி அடைகிறீர்கள், மாயாவை வெல்கிறீர்கள். தந்தை வழக்கறிஞராக இருக்கின்றார், உங்களை மாயையிடமிருந்து விடுவித்து விடுகின்றார். நீங்கள் சிவசக்தி சேனைகளாக இருக்கிறீர்கள், தாய்மார்களை உயர்வாக வைக்கின்றார், வந்தே மாதரம். என்று கூறியது யார்? தந்தை. ஏனெனில் நீங்கள் தந்தையிடத்தில் பலியாகிறீர்கள். இவர் நன்றாக நின்றிருக்கிறார், அசைவது கிடையாது என்று பாபா குஷியடைகிறார். அங்கதனின் உதாரணம் இருக்கிறது அல்லவா! இராவணனால் அவரை அசைக்க முடியவில்லை. இது கடைசி நேரத்திற்கான விசயமாகும். கடைசியில் அந்த நிலை ஏற்படும். அந்த நேரத்தில் உங்களுக்கு மிகுந்த குஷி ஏற்படும், எதுவரை விநாசம் ஏற்பட வில்லையோ, பூமி தூய்மையாக ஆகவில்லையோ அதுவரை தேவதைகள் வர முடியாது. முள் காடு அவசியம் தீப் பற்றி எறிய வேண்டும். அனைத்து ஆத்மாக் களும் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு கொசுக் கூட்டம் போன்று இனிய வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆயிரக் கணக்கான கொசுக்கள் இறக்கின்றன, அதனால் தான் பாடப் பட்டுள்ளதுலி இராமரும் சென்றார், இராவணனும் சென்றான்....... திரும்பி செல்ல வேண்டும் அல்லவா! பிறகு நீங்கள் புது உலகிற்கு வருவீர்கள். அங்கு மிகக் குறைவான வர்கள் இருப்பர். இது புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் நம்பிக்கை வைக்க வேண்டிய விசயமாகும். இந்த ஞானம் பாபா தான் கொடுக்க முடியும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும் தன்னை நடிகர் என்று புரிந்து கொள்ள வேண்டும். நான் 84 பிறவிக்கான பாகம் முடித்து விட்டேன், இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது உள்ளத்தில் இருக்க வேண்டும். ஆத்ம அபிமானியாக இருக்க வேண்டும்.

2) நிச்சயபுத்தியுடையவராகி முள்ளிலிருந்து மலர் ஆகக் கூடிய முயற்சி செய்ய வேண்டும். மாயையிடம் யுத்தம் செய்து வெற்றியடைந்து கர்மாதீத நிலை அடைய வேண்டும். எவ்வளவு முடியுமோ தனது வீட்டை நினைவு செய்ய வேண்டும்.

வரதானம்:
தனது இலேசானத்தன்மை என்ற மனநிலையின் மூலம் ஒவ்வொரு காரியத்தையும் இலேசாக ஆக்கக்கூடிய பாபாவிற்குச் சமமான விடுபட்டவர் லி அன்பானவர் ஆகுக

மனம்-புத்தி மற்றும் சம்ஸ்காரம் - ஆத்மாவின் சூட்சம சக்திகளாக இருக்கின்றன, மூன்றிலும் இலேசானத் தன்மையை அனுபவம் செய்ய வேண்டும். இது தான் பாபாவிற்குச் சமமான விடுபட்ட - அன்பானவர் ஆவதாகும். ஏனெனில் நேரத்திற்கு ஏற்றாற்போல் வெளி யுலகத்தின் தமோபிரதானமான சூழ்நிலையில், மனித ஆத்மாக்களின் உள்ளுணர்வு சுமையாக (பாரமாக) இருக்கிறது. எந்தளவு வெளியுலகத்தின் சூழ்நிலை சுமையாக இருக்கிறதோ, அந்தளவு குழந்தை களாகிய உங்களின் எண்ணம், செயல், சம்மந்தம் இலேசாக மாறிவிடும். மேலும் இலேசானத் தன்மையின் காரணத்தினால் அனைத்து காரியங்களும் இலேசானதாக ஆகிவிடும். வேலை பளுவின் தாக்கம் உங்கள் மீது ஏற்படாது, இது தான் பாபாவிற்குச் சமமான மன நிலையாகும்.

சுலோகன்:
இந்த அலௌகீக நஷாவில் இருங்கள் - ஆஹா நான் ! இதனால் மனம் மற்றும் உடல் இயல்பாகவே நடனம் ஆடிக்கொண்டேயிருக்கும்.