06-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞானக்கடல் தந்தை மற்றும் பிரம்மபுத்ரா நதியின் இந்த சங்கமம் வைரத்திற்கு சமமானதாகும், இங்கே குழந்தைகளாகிய நீங்கள் சோழியிலிருந்து வைரமாக ஆவதற்காக வந்திருக்கிறீர்கள்.

கேள்வி:
சத்யுக இராஜ்யத்தின் ஸ்தாபனை எப்போது மற்றும் எப்படி ஏற்படும்?

பதில்:
எப்போது முழு தூய்மையற்ற உலகம் சுத்தம் செய்யப்படுகிறதோ அதாவது பழைய சிருஷ்டியின் வினாசம் ஏற்படுகிறதோ அப்போது சத்யுக இராஜ்யம் ஸ்தாபனை ஆகும். அதற்கு முன்பாக நீங்கள் தயாராக வேண்டும், தூய்மையடைய வேண்டும். தூய்மையற்றவர் ஒருவர் கூட இல்லாமல் போகும் போது புதிய இராஜ்யத்தின் வருடம் (சகாப்தம்) தொடங்கும். இங்கிருந்து வருடம் தொடங்காது. இராதா-கிருஷ்ணரின் பிறவி ஏற்பட்டு விடும், ஆனால் அந்த சமயத்திலிருந்து சத்யுகம் என சொல்ல மாட்டோம். எப்போது அவர்கள் இலட்சுமி-நாராயணரின் ரூபத்தில் இராஜ சிம்மாசனத் தில் அமர்கின்றனரோ அப்போது வருடம் தொடங்கும், அதுவரை ஆத்மாக்கள் வந்து சென்றபடி இருப்பார்கள். இவை அனைத்தும் ஞானக் கடலை கடைந்து சிந்தனை செய்ய வேண்டிய விஷயங் களாகும்

பாடல்:
இதுவே வசந்த காலம். . .

ஓம் சாந்தி.
குழந்தைகள் எங்கே வந்துள்ளனர்? ஞானக்கடலின் கரைக்கு. ஞான கங்கைகளின் கரையில் இருந்தனர், இப்போது ஞானக்கடலின் கரைக்கு வந்துள்ளனர். யார் வந்திருக்கின்றனர்? ஞான கங்கைகள். என்ன ஆகுவதற்கு? சோழியிலிருந்து வைரமாக அதாவது ஏழையிலிருந்து தலைக் கிரீடமாக ஆவதற்கு. பிரம்மா பிரம்மபுத்ராவாக இருக்கிறார் மற்றும் சிவன் ஞானக்கடலாக இருக்கிறார். இவர் பிரம்மபுத்திரா நதி ஆவார். குழந்தையாக இருக்கிறார் அல்லவா. பிரம்மாவின் தந்தை சிவன். நீங்கள் பேரன் மற்றும் பேத்திகளாக இருக் கிறீர்கள். கல்கத்தாவில் கடல் மற்றும் நதியின் சங்கமம் ஆகிறது. அங்கே கங்கையும், பிரம்மபுத்ராவும் கடலில் கலக்கின்றன. பிரம்ம புத்ராவில் வேறு சில நதிகளும் கலக்கின்றன. முக்கியமானது பிரம்மபுத்ரா மற்றும் கடலின் சங்கமம் ஆகும். அதனைத்தான் டைமண்ட் ஹார்பர் (வைரத் துறைமுகம்) என சொல்கின்றனர். இந்தப் பெயரை ஆங்கிலேயர்கள் வைத்தனர். அர்த்தம் புரியாமல் பெயரை மட்டும் வைத்து விட்டனர். தந்தை அர்த்தத்தைப் புரிய வைக்கிறார். நீங்கள் இந்த சமயத்தில் பிரம்மபுத்ரா மற்றும் கடலிடம் நேரில் வந்திருக்கிறீர்கள். அங்கேயும் (பக்தியில்) வைரமாக ஆவதற்காக கடலுக்கு முன்னால் செல்கிறீர்கள். ஆனால் வைரத்திற்குப் பதிலாக கல்லாக ஆகி விடுகிறீர்கள், ஏனென்றால் அது பக்தி மார்க்கமாகும். இது ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சங்கமம் ஆகும். இரு சாராரும் ஒன்றாக இருக்கிறோம், அது ஜடமாகும், இது சைதன்யமாகும். இவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆக, பிரம்மபுத்ரா மற்றும் கடல் இருவரும் ஒன்றாக சைதன்யத்தில் இருக்கின்றனர் என குழந்தைகள் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டும். இது வைரம் போல ஆகுவதற்கான சங்கமமாக ஆகி விட்டது. நீங்கள் வைரத்திற்கு சமமாக ஆகுங்கள். இவர்கள் பிரம்மபுத்ரா மற்றும் தத்தெடுக்கப்பட்ட ஞான கங்கைகள். இந்த நதிகள் கணக்கற்றவை. அந்த நதிகள் பற்றி அனைவருக்கும் தெரியும் அதாவது பாரதத்தில் இத்தனை நதிகள் உள்ளன. இவர்கள் கணக்கற்றவர்கள். இந்த ஞான நதிகளின் எல்லையை காண முடியாது. கடலிலிருந்து நதிகள் இந்த சமயத்தில்தான் வெளிப்படுகின்றன. முதலில் பிரம்மபுத்ரா வெளிப்படுகிறது, பிறகு அதிலிருந்து சிறு சிறு நதிகள் வெளிப்படுகின்றன. நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சியின்படி தெரிந்திருக்கிறீர்கள். சில நதிகள் பெரியவை, சில சிறியவை, இவையனைத்தும் மனிதர்களை வைரத்திற்குச் சமமாக ஆக்குகின்றன. சூரிய வம்சத்தின் மகாராஜா மகாராணியாகத்தான் ஆகின்றனர் என்பதும் அல்ல, இல்லை. இராஜா, இராணியைப் போல் பிரஜைகள். உங்கள் அனைவரின் வாழ்க்கை வைரத்திற்கு சமமாக ஆகிறது. யாரானாலும் சொர்க்கத் திற்காக கொஞ்சம் முயற்சி செய்தாலும் கூட அவர்கள் வைரத்திற்கு சமமாக ஆகின்றனர். இந்த பிரம்மபுத்ரா நதி மற்றும் கடல் இருவரும் ஒன்றாக இருக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் வரும்போது உள்ளுக்குள் புரிந்து கொள்கிறீர்கள் - நாம் பாப்தாதாவிடம் செல்கிறோம். தந்தை ஞானக் கடலாக இருக்கிறார், பிறகு இந்த பிரம்மபுத்ரா அதாவது பிரம்மாவுக்குள் பிரவேசம் செய்கிறார். இவர் மூலமாக நம்மை வைரத்திற்கு சமமாக ஆக்குகிறார். இப்போது யார் எவ்வளவு முயற்சி செய்து ஸ்ரீமத்படி செல்கின்றனரோ அந்த அளவு ஆவார்கள். எது வரை வாழ்கின்றோமோ அது வரை முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் அறிவீர்கள். அறிவுரைகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. பரீட்சையின் முடிவுகள் வினாசத்தின் சமயத்தில் தான் வெளிப்படும். ஒரு பக்கம் முடிவுகள் வெளியாகும், மற்றொரு பக்கம் வினாசம் தொடங்கும், பிறகு ஐயோ என்ற அலறல்கள் உண்டாகும். கேட்கவே வேண்டாம், ஆகையால் வினாசம் ஏற்படுவதற்கு முன்பாக, சண்டை ஏற்படுவதற்கு முன்பாக தயாராக வேண்டும். இன்னும் எவ்வளவு நேரம் இருக்கப் போகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும், மேலும் நம்முடைய இராஜ்யத்தின் ஸ்தாபனை ஏற்படும் போது சுத்தப்படுத்துவதும் நடக்கும் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் தூய்மையடைந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் தூய்மை யற்றவர்கள். தூய்மையற்றவர்கள் அனைவரும் அழிந்து போய் கணக்கு வழக்கை முடித்துக் கொண்டு அனைவரும் சென்று விடுவார்கள். தூய்மை இல்லாதவர் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள், அப்போது தான் தூய்மையான உலகம் என சொல்வோம். இந்த சமயத்தில் நீங்கள் தூய்மையாய் இருக்கிறீர்கள், ஆனால் முழு உலகமும் தூய்மையாய் இல்லை. கண்டிப்பாக தூய்மையடைவார்கள். வினாசம் ஆகும்போது முழு உலகமும் தூய்மை யடையும், அதனை புதிய உலகம் என சொல்வோம். புதிய உலகத்தின் (வருடம்) சகாப்தத்தின் ஆரம்பம் எது என யாராவது கேட்டால் சொல்லுங்கள் - மகாராஜா, மகாராணி சிம்மாசனத்தில் அமரும்போது புதிய வருடம் தொடங்கும். புதிய வருடம் தொடங்கும் வரை பழைய வருடம் கண்டிப்பாக நிலைத்திருக்கும். இப்போதிலிருந்தே வருடம் தொடங்காது. பிராமணர்களாகிய நாம் புதியவர்கள்தான். ஆனால் உலகம் அல்லது முழு பூமியும் புதியது அல்ல. இப்போது சங்கமயுகமாக உள்ளது. கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும். முதல் இளவரசன் - இளவரசி, இராதா-கிருஷ்ணர் என்றாலும் அந்த சமயத்தை சத்யுகம் என சொல்ல மாட்டோம் என நீங்கள் சொல்கிறீர்கள். இலட்சுமி-நாராயணர் சிம்மாசனத்தில் அமராதவரை ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டபடி இருக்கும், இராதா - கிருஷ்ணர் வந்து விடுவார்கள். பாருங்கள் இது மனன சிந்தனை செய்ய வேண்டிய விஷயம் ஆகும். சத்யுகம் தொடங்கும்போது வருடம் தொடங்கும். இன்னது சூரிய வம்சத்தின் இராஜ்யத்தின் காலம். ஆனால் இளவரசன்-இளவரசியின் பெயரால் வருடம் ஒருபோதும் இருக்காது. மற்றபடி இடைப்பட்ட காலத்தில் வருவதும் போவதுமாக நடந்து கொண்டிருக்கும். கீழான மனிதர்களும் போக வேண்டும். ஒரு சிலர் மிஞ்சியிருப்பார்கள் அல்லவா. மிகுந்திருப்பவர்களும் திரும்பிப் போகவேண்டும் என்றால் நேரம் எடுக்கும். இதனை யார் புரிய வைக்கிறார்? ஞானக்கடலும் புரிய வைக்கிறார், பிரம்மபுத்ரா ஞான நதியும் இருக்கிறார், இருவரும் ஒன்றாக புரிய வைக்கின்றனர். அந்த கும்ப மேளா வருடா வருடம் நடக்கிறது. இந்த கும்ப மேளா கடலும் நதிகளும் சந்திக்கும் விழா சங்கமயுகத்தில் மட்டும்தான் நடக்கிறது. நாங்கள் தாய்-தந்தை அதாவது ஞானக்கடல் மற்றும் பெரிய நதியிடம் செல்கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் சொல்வீர்கள். பாபா, நமக்கு இந்த பெரிய நதி (பிரம்மா) மற்றும் ஞான நதிகளின் மூலமாக ஆஸ்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறார் அதாவது வைரத்திற்கு சமமாக ஆக்குகிறார். கும்பமேளாவில் எவ்வளவு குஷியுடன் மிகவும் சுத்தமாக செல்கின்றனர் மற்றும் அங்கே மனம்-சொல்-செயலால் தூய்மையாக இருக்கின்றனர். அது ஸ்தூலமான யாத்திரை யாகும். யாத்திரீகர்கள் தமக்கு நன்மை செய்து கொள்ள விரும்புகின்றனர். யாத்திரீகர்களுக்கு நன்மை ஆகும் அளவு வழிகாட்டிகளுக்கு நன்மை நடப்பதில்லை. வழிகாட்டிகளோ பணத்தை சேர்ப்பதற்காக செல்கின்றனர். அவர்களுக்கு யாத்திரீகர்கள் அளவுக்கு பாவனை இருப்பதில்லை. யாத்திரீகர்கள் மிகவும் சுத்தமான பாவனையுடன் செல்கின்றனர், அப்போது பலருக்கு காட்சிகள் கிடைக்கின்றன. அமர்நாத்தில் பனி லிங்கம் உருவாகி இருக்கிறது. முன்னால் செல்லும்போது எங்கும் பனியாக தெரிகிறது. பாவனையுடையவர்கள் இதை பார்த்து எவ்வளவு குஷி யடைகின்றனர், இது இயற்கையாகும். பனியில் லிங்கம் உருவாகி விடுகிறது, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட பாவனை ஏற்பட்டுவிடுகிறது. உண்மையில் ஒன்றுமே இல்லை. உண்மையான யாத்திரை இப்போது உங்களுடையது நடந்து கொண்டிருக்கிறது. பகவானை தேடி, அவரை சந்திப்பதற்காக மிகவும் ஏமாற்றங்கள் அடைந்தோம், ஆனால் பகவான் கிடைப்பதாகவே இல்லை என மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர். பகவானுடைய புகைப்படத்தை எடுக்க முடியாது என பாபா புரிய வைத்திருக்கிறார். புள்ளிக்கு என்ன புகைப்படம் இருக்கப் போகிறது. அவர் நட்சத்திரம் போல இருப்பார் என புரிய வைப்பதற்காக சொல்லப்படுகிறது. புருவ மத்தியில் ஜொலிக்கிறது. . . பல குழந்தைகள் புருவ மத்தியில் திலகம் இடுகின்றனர். ஆத்மாவின் இருப்பிடம் புருவ மத்தியில் இருக்கிறது என கேட்டிருக்கின்றனர் அல்லவா, எனவே நட்சத்திரத்தை இடுகின்றனர், அது (ஆத்மா) தான் உண்மையான திலகம் ஆகும். இராஜ்யத்தின் திலகம் பெரிதாக இருக்கும். அது ஸ்தூலமான இராஜ திலகமாக கிடைக்கிறது. ஆத்மாக்களாகிய நமக்கு இப்போது இராஜதிலகம் கிடைக்கிறது என குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் வந்து விடுகிறது. இப்போது நமக்கு பரமபிதா பரமாத்மா விடமிருந்து இராஜதிலகம் கிடைக்கிறது என ஆத்மா புரிந்து கொள்கிறது. புருவ மத்தியில் மிக நன்றாக நட்சத்திரத்தை வைக்கின்றனர். தங்கத்தாலானதையும் வைக்கின்றனர். இப்போது உங்களுக்கு முழு ஞானமும் கிடைத்திருக்கிறது, நட்சத்திரமாகிய நாம் இப்போது வைரம் போல ஆகிக் கொண்டிருக் கிறோம். ஆத்மாக்களாகிய நாம் நட்சத்திரம் போன்றவர்கள். பரமபிதா பரமாத்மாவும் கூட நட்சத்திரத் தின் அளவே சிறியதாக இருக்கிறார், ஆனால் அவருக்குள் முழு ஞானமும் இருக்கிறது, இந்த விஷயங்கள் மிகவும் ஆழமானவை ஆகும். உங்களுக்கு ஞானம் அதாவது வெளிச்சம் கிடைத் திருக்கிறது. பரமபிதா பரமாத்மாவின் ரூபத்தையும் பார்த்தோம், புரிந்திருக்கிறோம். ஆத்மாவின் காட்சி தெரிவது போல பரமாத்மாவுடையதும் தெரிகிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித் தான் நானும் என சொல்வார். மற்றபடி குழந்தைகளுக்கு தந்தையின் காட்சி என்ன தெரிய வேண்டியிருக்கிறது? ஆத்மா சிறிது, பெரியதாக ஆவதில்லை. எப்படி நீங்களோ அப்படி தந்தையும் கூட இருக்கிறார். மகிமை மற்றும் நடிப்பு மட்டும் வேறு வேறு, மற்றவர்களை விட வேறு வேறு விதமாக உள்ளன, ஒன்று போல மற்றொன்று இருப்ப தில்லை. நடிகர்களின் நடிப்பு ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இது ஈஸ்வரனின் இயற்கை என சொல்லப் படுகிறது. உண்மையில் நாடகத்தின் இயல்பு என சொல்ல வேண்டும், ஏனென்றால் நான் நாடகத்தை உருவாக்கினேன் என்று பாபா சொல்வதில்லை. பிறகு எப்போது உருவாக்கினீர்கள்? என கேள்வி எழும். இது இயற்கை என்றே சொல்லப்படுகிறது. இந்த சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள். ஆத்மா நட்சத்திரமாக உள்ளது, அதில் எவ்வளவு பாகம் அடங்கியுள்ளது. பரமபிதா பரமாத்மா சர்வ சக்திவான், வேர்ல்ட் ஆல்மைட்டி அத்தாரிட்டி (உலகின் சர்வ சக்திவான்) ஆவார். ஞானக்கடல் என சொல்லப் படுகிறார். இங்கே வேறு யாரையும் ஞானக்கடல் என சொல்லப்படுவதில்லை. வேத சாஸ்திரங்களைப் படிப்பவர் கள் சாஸ்திரங்களின் ஞானத்தைத்தான் சொல்கின்றனர். மற்றபடி தந்தைக்குள் இருக்கும் ஞானம் வேறு யாருக்குள்ளும் இல்லை. பகவான்தான் வந்து சகஜ இராஜயோகத்தின் ஞானத்தைக் கற்பிக்கிறார். அவரைத் தான் ஞானக்கடல் என சொல்வார்கள். ஆக, இந்த நதிகளின் சங்கமம் நடக்கிறது. கடலிடமிருந்துதான் நதிகள் பிறக்கின்றன என்பதையும் நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். பல குழந்தைகளுக்கு இது கூட தெரிந்திருப்பதில்லை. அதே போல்தான் உங்களின் விசயங்கள் யாருக்கும் தெரியாது. ஞானக்கடல் எப்படி வருவார் அவரிடமிருந்து ஞான கங்கைகள் எப்படி ஞானத்தைப் பெற்றிருப்பார்கள்? இது ஞான சம்மந்தப்பட்ட விசயங்கள். மனிதர்கள் மூலமாக புத்தியில் பதிந்த விசயங்களைத் தவிர உண்மையான விசயங்கள் யாருக்கும் தெரியாது. நீங்கள் இப்போது அந்த கடல் மற்றும் இந்த ஞானக்கடலைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள். இப்போது அந்த கடல் மற்றும் நதிகள் துக்கத்தைக் கொடுத்தபடி இருக்கின்றன. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டால் எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இப்போது ஞானக்கடல், பதித பாவனரை அனைவரும் நினைவு செய்கின்றனர், அந்தக் கடல் அல்லது நதிகளை யாரும் நினைவு செய்வதில்லை. பதித பாவனர், ஞானக்கடலை நினைவு செய்கின்றனர். அந்தக் கடலிலிருந்துதான் இந்த நதிகள் வெளிப் பட்டன. அவர்களின் பெயர், உருவம், தேசம், காலத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. சிவன் என்ற பெயரை சொல்லவும் செய்கின்றனர், லிங்கத்துக்குப் பெயர் வைத்து விட்டனர். பாபாவின் பெயர் அழிவற்றது அல்லவா. படைப்பவரான சிவபாபா ஒருவர் ஆவார், அவருடைய படைப்பும் கூட ஒன்று மற்றும் அனாதியானது ஆகும். எப்படி அனாதி என்பதை தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். சத்யுகத்தில் இந்த பண்டிகைகள் முதலானவை எதுவும் இருக்காது. அனைத்தும் காணாமல் போய் விடும். பிறகு பக்தி மார்க்கத்தில் தொடங்கும்.

சொர்க்கம் இருந்தது, மீண்டும் சொர்க்கம் வரப்போகிறது என மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர், ஆனால் இந்த சமயத்தில் நரகமாக உள்ளது. இதன் ஆயுள் குறித்து யாருக்கும் தெரியாது, அடர்ந்த காரிருளாக இருக்கிறது. கல்பத்தின் ஆயுளைப் பற்றியும் யாருக்கும் தெரியாது. இந்த நாடகம் மீண்டும் மீண்டும் நடக்கிறது என சொல்லவும் செய்கின்றனர். ஆனால் ஆயுளைப் பற்றி தெரியாத காரணத்தால் எதையும் புரிந்து கொள்வதில்லை. பிரம்மாவின் வாய் மூலமாக அனைத்து வேதங்கள், சாஸ்திரங் களின் சாரத்தைப் புரிய வைக்கிறார் என்றால் அவர்கள் பிரம்மாவின் கைகளில் சாஸ்திரங்களைக் கொடுத்து விட்டனர். அதுவும் கூட அனைத்து சாஸ்திரங் களையும் கையில் பிடிக்க முடியாது அதாவது பிரம்மாவின் மூலம் யாரும் அனைத்து சாஸ்திரங்களையும் சொல்வதில்லை. இவை யனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையது என தெரிந்துள்ளனர். இவைகளை படித்துக் கொண்டு தான் வந்தனர். ஆனால் எப்போதிலிருந்து படித்து வந்தோம் என்பது கொஞ்சமும் தெரியாது. இவ்வாறு மட்டும் சொல்லி விடுகின்றனர் இவை அனாதியானது. வேதங்களை வியாசர் படைத்துள்ளார். வேதங்கள் உயர்வானது என்று ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் வேத சாஸ்திரங்கள் முதலானவை கீதையின் படைப்புகள் என எழுதப்பட்டுள்ளது. இந்த வேத, சாஸ்திரங்கள் முதலானவைகள் மீண்டும் உருவாகும் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மீண்டும் அதே பெயர்களை வைப்பார்கள். இப்போது நீங்கள் அறிவீர்கள் நாம் மீண்டும் பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம், பிறகு பூஜாரிகளாகவும் ஆகுவோம், அப்போது கோவில்களை கட்டுவோம். இராஜா, இராணி கட்டினார்கள் என்றால் பிரஜைகளும் கட்டுவார்கள். பக்தி மார்க்கம் ஆரம்பம் ஆகும்போது அனைவருமே கோவில்களை கட்டத்தொடங்கி விடுகின்றனர். வீடுகள் தோறும் கூட உருவாக்குவார்கள். இலட்சுமி-நாராயணரின் இராஜ்யத்தில் இராதா கிருஷ்ணரின் கோவில் உருவாக முடியாது. கோவில்கள் பக்தி மார்க்கத்தில் உருவாகின்றன. எப்படியெல்லாம் கீழே படியில் இறங்கிக் கொண்டே செல் கின்றனரோ அதற்கேற்றாற்போல் கோவில்களை கட்டியபடி இருப்பார்கள். சூரிய வம்சத்தின் மற்றும் சந்திர வம்சத்தின் சொத்துக்களை வைசிய வம்சத்தினரும், சூத்திர வம்சத்தினரும் அனுபவிப்பார்கள். இல்லாவிட்டால் இந்த இராஜ்யம் எங்கிருந்து வந்தது? சொத்துக்கள் (பரம்பரையாக) வந்தபடி இருக்கும். பெரிய பெரிய சொத்துக்கள் குறைந்துக் கொண்டே வந்து பிறகு ஒன்றுமே இல்லாமல் போய் விடும். தங்களுக்குள் பகிர்ந்தபடி செல்வர். ஆக நாம் எப்படி பூஜைக்குரியவர்களாக ஆகிறோம். எவ்வளவு காலத்திற்கு ஆகிறோம், பிறகு எப்படி பூஜாரிகளாக ஆகிறோம் என்பது குழந்தைகளுக்கு இப்போது புரிய வந்துள்ளது. பரமபிதா பரமாத்மாவின் பெயர், உருவம், தேசம், காலம் மற்றும் அவருடைய நடிப்பு என்ன என்பதை இப்போது புரிந்து கொண்டீர்கள் அல்லவா. பக்தி மார்க்கத்தில் கூட பக்தர்களின் சுத்த பாவனைகளை தந்தையே நிறைவேற்றுகிறார். அசுத்த பாவனைகளை இராவணன் நிறைவேற்றுகிறான். இப்போது உங்களுக்கு ஞானக்கடல் அனைத்து ஞானத்தையும் புத்தியில் பதிய வைத்துவிட்டார். அனைவருமே புரிந்து கொள்ள மாட்டார்கள். யார் கல்பத்திற்கு முந்தையவர்களோ அவர்கள் வெளிப்பட்டபடியே இருப்பார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உயிரோடு வாழும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். தந்தையின் படிப்பினைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தந்தைக்குச் சமமாக மாஸ்டர் ஞானக்கடலாக ஆக வேண்டும்.

2. ஆன்மீக வழிகாட்டியாகி அனைவரையும் உண்மையான யாத்திரையை செய்விக்க வேண்டும். வைரத்திற்குச் சமமாக ஆக வேண்டும் மற்றவர்களையும் அதுபோல் ஆக்க வேண்டும்.

வரதானம்:
சிரேஷ்டமான மற்றும் சுபமான உள்ளுணர்வு மூலம் பேச்சு மற்றும் கர்மத்தை சிரேஷ்டமானதாக ஆக்கக்கூடிய உலகத்தை மாற்றுபவர் ஆகுக.

எந்தக் குழந்தைகள் தன்னுடைய பலவீனமான உள்ளுணர்வுகளை அழித்துவிட்டு சுபமான மற்றும் சிரேஷ்டமான உள்ளுணர்வை தாரணை செய்வதற்கான விரதம் எடுத்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு இந்த சிருஷ்டி கூட சிரேஷ்டமானதாகத் தெரியும். உள்ளுணர்வோடு பார்வை மற்றும் செயலுக்கும் தொடர்பு உள்ளது. எந்தவொரு நல்ல விசயமோ அல்லது தீய விசயமோ முதலில் உள்ளுணர்வில் தாரணை ஆகிறது, பிறகு, பேச்சு மற்றும் கர்மத்தில் வருகிறது. உள்ளுணர்வு சிரேஷ்டமானதாக ஆகுவது என்றால் பேச்சு மற்றும் கர்மம் தானாகவே சிரேஷ்டமானதாக ஆகுவதாகும். உள்ளுணர்விலிருந்தே அதிர்வலைகள், வாயுமண்டலம் உருவாகிறது. சிரேஷ்டமான உள்ளுணர்வின் விரதத்தை தாரணை செய்பவர்கள் உலகத்தை மாற்றுபவர்களாகத் தானாகவே ஆகிவிடுகிறார்கள்.

சுலோகன்:
விதேஹி, அதாவது அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்தீர்கள் என்றால், யாருடைய மனதின் உணர்வையும் அறிந்து கொள்வீர்கள்.