06-10-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த பழைய உலகின் மீது எல்லையற்ற வைராக்கியமுள்ளவர் ஆகுங்கள், ஏனென்றால் தந்தை உங்களுக்காக சொர்க்கம் என்ற புதிய வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்.

கேள்வி:

இந்த அழிவற்ற ருத்ர யக்ஞத்தில் எந்த எந்த விஷயங்களின் காரணமாக தடைகள் எற்படு கின்றன?

பதில்:

இது சிவபாபாவால் உருவாக்கப்பட்ட அழிவற்ற ருத்ர யக்ஞமாகும், இதில் நீங்கள் மனிதரி லிருந்து தேவதை ஆவதற்காக தூய்மை அடைகிறீர்கள், பக்தி முதலானவைகளை விடுகிறீர்கள், இதன் காரணமாக தடைகள் ஏற்படுகின்றன. உலகினர் சொல்கின்றனர் - அமைதி வேண்டும், வினாசம் வேண்டாம், மற்றும் தந்தை இந்த ருத்ர ஞான யக்ஞத்தை படைத்திருப்பதே பழைய உலகின் வினாசத்திற்காக. இதன் பிறகே அமைதியின் உலகம் வரும்.

ஓம் சாந்தி.
ஓம் சாந்தியின் அர்த்தத்தை தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்திருக்கிறார். ஆத்மாவாகிய என்னுடைய சுயதர்மம் அமைதியாகும். சாந்திதாமத்திற்குச் செல்வதற்காக எதுவும் முயற்சி செய்ய வேண்டிய தில்லை. ஆத்மா சுயம் அமைதியின் சொரூபமானது, சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியதாகும். இங்கே சிறிது காலத்திற்கு அமைதியாய் இருக்க முடியும். என்னுடைய கர்மேந்திரியம் எனும் வாத்தியம் (கருவி) களைத்து விட்டது என ஆத்மா சொல்கிறது. நான் என்னுடைய சுயதர்மத்தில் நிலைத்து விடுகிறேன், சரீரத்திலிருந்து தனிப்பட்டு சென்று விடுகிறேன். ஆனால் கர்மங்களை செய்துதான் ஆக வேண்டும். அமைதியாக எதுவரை அமர்ந்து கொண்டிருக்க முடியும். நான் அமைதி தேசத்தில் வசிக்கக் கூடியவன் என ஆத்மா சொல்கிறது. இங்கே சரீரத்தில் வருவதால் மட்டுமே நான் பேசக் கூடியவனாக ஆகியுள்ளேன். நான் ஆத்மா இது சரீரம். ஆத்மாதான் தூய்மையற்றதாகவும் தூய்மையானதாகவும் ஆகிறது. ஆத்மா தூய்மை யற்றதாக ஆகும்போது சரீரமும் கூட தூய்மையற்றதாக ஆகிறது ஏனென்றால் சத்யுகத்தில் 5 தத்துவங்களும் கூட சதோபிரதானமாக இருக்கின்றன, இங்கே 5 தத்துவங்களும் தமோபிரதானமாக உள்ளன. தங்கத்தில் கலப்பு ஏற்படுவதன் மூலம் தங்கம் தூய்மையற்றதாக ஆகிவிடுகிறது. பிறகு அதனை தூய்மைப்படுத்துவதற்காக நெருப்பில் போடப்படுகிறது. அது யோக அக்னி என சொல்லப்படுவதில்லை. யோகம் அக்னியாகவும் உள்ளது, அதன் மூலம் பாவங்கள் எரிந்து போகின்றன. ஆத்மாவை தூய்மையற்றதிலிருந்து தூய்மையாய் ஆக்கக் கூடியவர் பரமாத்மா ஆவார். பெயரே ஒருவருடையதாகும். ஓ பதித பாவனா (தூய்மையற்றவர்களை தூய்மைப்படுத்து பவரே) என்று அழைக் கின்றனர். நாடகத்தின் திட்டப்படி அனைவரும் தூய்மையின்றி தமோபிர தானமாக ஆகத்தான் வேண்டும். இது மரம் அல்லவா. அந்த மரத்தின் விதை கீழே இருக்கும், இந்த (சிருஷ்டி) மரத்தின் விதை மேலே உள்ளது. தந்தையை அழைக்கும்போது புத்தி மேலே சென்றுவிடுகிறது. யாரிடமிருந்து நீங்கள் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவர் இப்போது கீழே வந்து விட்டிருக்கிறார். நான் வர வேண்டியுள்ளது என சொல்கிறார். என்னுடைய இந்த மனித சிருஷ்டியின் மரம் பல விதமான தர்மங்களாலானதாகும். இப்போது அது தமோபிரதானமாக தூய்மையற்று உளுத்துப் போன நிலையை அடைந்து விட்டுள்ளது. தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - சத்யுகத்தில் முதன் முதலில் தேவதைகள் இருப்பார்கள். இப்போது கலியுகத்தில் அசுரர்கள் இருக்கின்றனர். மற்றபடி அசுரர்களுக்கும் தேவதைகளுக்கும் இடையில் சண்டை நடக்க வில்லை. நீங்கள் இந்த அசுரகுணமாகிய 5 விகாரங்களின் மீது யோகபலத்தின் மூலம் வெற்றியடைகிறீர்கள். மற்றபடி எந்த வன்முறை நிறைந்த சண்டையின் வியமும் கிடையாது. நீங்கள் எந்த விதமான இம்சையும் செய்வதில்லை. நீங்கள் யார் மீதும் கை வைப்பதில்லை. நீங்கள் இரட்டை அஹிம்சையாளர்கள். காமக் கோடாரியை வீசுவது அனைத்தினும் பெரிய பாவமாகும். தந்தை சொல்கிறார் - இந்த காமக் கோடாரி முதல்-இடை-கடைசியும் துக்கம் தருவதாகும். விகாரத்தில் செல்லக் கூடாது. தேவதைகளுக்கு முன்பாக மகிமை பாடுகின்றனர் - நீங்கள் அனைத்து குணங்களிலும் நிறைந்த, சம்பூரண நிர்விகாரி. ஆத்மா இந்த கர்மேந்திரியங்களின் மூலம் தெரிந்து கொள்கிறது. நாங்கள் தூய்மையற்றவராகி விட்டோம் என சொல்கின்றனர் எனும்போது முன்னர் தூய்மையானவராக இருந்தோம், நாங்கள் இப்போது தூய்மையற்றவராகி விட்டோம் என சொல்கின்றனர். ஓ பதித பாவனா வாருங்கள் என சொல்கின்றனர். தூய்மையாக இருக்கும்போது அழைப்பதே இல்லை. அது சொர்க்கம் எனப்படுகிறது. இங்கே சாது சன்னியாசி முதலானவர்கள் எவ்வளவு மகிமை பாடியபடி இருக்கின்றனர் - பதீத பாவன சீதாராம். . . எங்கே சென்றாலும் பாடிக்கொண்டிருக்கின்றனர். முழு உலகமும் தூய்மையின்றி உள்ளது என தந்தை புரிய வைக்கிறார். இராவண இராஜ்யம் அல்லவா, இராவணனை எரிக்கின்றனர். ஆனால் அவருடைய இராஜ்யம் எப்போதிலிருந்து தொடங்கியது என்பது யாருக்கும் தெரியாது. பக்தி மார்க்கத்திற்கான பொருட்கள் (சாதனம்) மிக அதிகமாக இருக்கின்றன. சிலர் எதையோ செய்கின்றனர், வேறு சிலர் வேறெதையோ செய்கின்றனர். சன்னியாசிகள் கூட எத்தனை விதமான யோகங்கள் கற்பிக்கின்றனர். உண்மையில் யோகம் என எதற்கு சொல்லப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. இது யாருடைய குற்றமும் அல்ல. இந்த நாடகம் உருவாகி உருவாக்கப்பட்டுள்ளது. நான் வரும்வரை இவர்கள் தம்முடைய நடிப்பை நடித்துக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் மற்றும் பக்தி, ஞானம் என்பது பகல் சத்யுகம், திரேதா, பக்தி என்பது இரவு துவாபர, கலியுகம், பிறகு வைராக்கியம். பழைய உலகின் மீது வைராக்கியம். அவர் களுடையது எல்லைக்குட்பட்ட வைராக்கியம். இந்த பழைய உலகம் இப்போது முடியப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். புதிய வீடு கட்டும்போது பழைய வீட்டின் மீது வைராக்கியம் ஏற்பட்டு விடுகிறது.

எல்லையற்ற தந்தையைப் பாருங்கள் எப்படிப்பட்டவராக இருக்கிறார்! உங்களுக்கு சொர்க்கம் எனும் வீட்டை கட்டித் தருகிறார். பழைய உலகம் நரகமாகும். புதியதிலிருந்து பழையதாகி பிறகு மீண்டும் புதியதாக ஆகிறது. புதிய உலகின் ஆயுள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. இப்போது பழைய உலகில் இருந்தபடி நாம் புதிய உலகை உருவாக்குகிறோம். பழைய சுடுகாட்டின் மீது நாம் பரிஸ்தானத்தை (தேவதைகளின் இருப்பிடம்) உருவாக்குவோம். இதே யமுனை நதிக்கரை இருக்கும், அங்கே மாளிகைகள் உருவாகும். இதே டில்லி யமுனை நதிக்கரையில் இருக்கும். மற்றபடி பாண்டவர்களின் கோட்டை இருந்தது என்றெல்லாம் காட்டியிருப்பது அனைத்தும் நாடகத்தின் திட்டப்படி கண்டிப்பாக மீண்டும் நடக்கும். எப்படி நீங்கள் ஜபம், தவம் முதலானவைகளை செய்திருப்பீர்களோ அவற்றை மீண்டும் செய்யப் போகிறீர்கள். முதலில் சிவன் மீது பக்தி செலுத்துகிறீர்கள். முதல் தரமான கோவில்களை கட்டுகிறீர்கள், அது அவிபசாரி (கலப்படமற்ற) பக்தி எனப்படுகிறது. இப்போது நீங்கள் ஞான மார்க்கத்தில் இருக்கிறீர்கள். இது அவிபசாரி ஞானம். ஒரு சிவபாபா விடமிருந்தே நீங்கள் கேட்கிறீர்கள், அவருடைய பக்தியை முதலில் செய்தீர்கள், அந்த சமயத்தில் வேறு எந்த தர்மமும் இருப்பதில்லை. அந்த சமயம் நீங்கள் மிகவும் சுகம் மிக்கவர்களாக இருக்கிறீர்கள். தேவதா தர்மம் மிகவும் சுகத்தைத் தரக்கூடிய தர்மம் ஆகும். பெயரைச் சொன்னாலே வாய் இனிக்கிறது. நீங்கள் ஒரு தந்தையிடமிருந்தே ஞானத்தைக் கேட்கிறீர்கள். வேறு யாரிடமும் நீங்கள் கேட்காதீர்கள் என தந்தை சொல்கிறார். இது உங்களுடைய கலப்படமற்ற (அவிபசாரி) ஞானமாகும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையுடையவர் களாக நீங்கள் ஆகியுள்ளீர்கள். தந்தையிட மிருந்துதான் ஆஸ்தி கிடைக்கும் - வரிசைக்கிரமமான முயற்சியின்படி. தந்தை சிறிது காலத்திற்காக சாகாரத்தில் வந்துள்ளார். நான் குழந்தைகளாகிய உங்களுக்குத்தான் ஞானத்தைத் தர வேண்டும். இது என்னுடைய நிரந்தரமான உடல் அல்ல, இதில் நான் பிரவேசம் செய்கிறேன். சிவ ஜெயந்தி யிலிருந்து பிறகு உடனே கீதா ஜெயந்தி ஆகிவிடுகிறது. அதிலிருந்து ஞானத்தைத் தொடங்கி விடுகிறார். இந்த ஆன்மீகக் கல்வியை பரம ஆத்மா கொடுத்துக் கொண்டிருக்கிறார். தண்ணீரின் வியம் அல்ல. தண்ணீரை ஞானம் என சொல்ல மாட்டோம். ஞானத்தால் தூய்மையற்றதி-ருந்து தூய்மையானவர்களாக ஆவார்கள். தண்ணீரால் தூய்மையடைய முடியாது. நதிகள் என்னவோ முழு உலகிலும் இருக்கவே செய்கின்றன. ஞானக் கடலான தந்தை வருகிறார், இவருக்குள் பிரவேசமாகி ஞானத்தைச் சொல்கிறார். இங்கே கௌமுக் (பசுவின் வாய்) என்ற இடத்திற்குச் செல்கின்றனர். உண்மையில் கௌமுக் என்பது சைதன்யத்தில் நீங்கள்தான். உங்களுடைய வாயிலிருந்து ஞான அமிர்தம் வெளிப்படுகிறது. பசுவிடமிருந்து பால் கிடைக்கிறது. நீரின் வியமே கிடையாது. இவையனைத் தையும் தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். அவர் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல். இப்போது அனைவரும் துர்க்கதியில் இருக்கின்றனர். இராவணனை ஏன் எரிக்கிறோம் என முன்னர் நீங்கள் அறிந்திருக்கவில்லை. எல்லைக்கப்பாற் பட்ட தசரா நடக்கவுள்ளது என இப்போது நீங்கள் அறிவீர்கள். இந்த முழு உலகமும் தீவாக உள்ளது. இராவணனின் இராஜ்யம் முழு சிருஷ்டியின் மீதும் இருக்கிறது. குரங்குகளின் சேனை இருந்தது, குரங்குகள் பாலம் கட்டின. . . என்றெல்லாம் சாஸ்திரங்களில் இருப்பது கட்டுக் கதைகள் ஆகும். பக்தி முதலானவை நடக்கின்றன, முதலில் அவிபசாரி பக்தி நடக்கிறது, பிறகு விபசாரி பக்தி. தசரா, ராக்கி பந்தன் முதலானவை இப்போதைய பண்டிகைகள் ஆகும். சிவ ஜெயந்திக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. இப்போது கிருஷ்ணபுரி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இன்று கம்சபுரியாக இருக்கிறது, நாளை கிருஷ்ணபுரியாக ஆகப் போகிறது. கம்சன் என அசுர சம்பிரதாயத்திற்கு சொல்லப்படுகிறது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் சண்டை கிடையாது. கிருஷ்ணரின் ஜன்மம் சத்யுகத்தில் ஆகிறது, அவர் முதல் இளவரசன் ஆவார். பள்ளியில் படிப்பதற்காக செல்வார். பெரியவராகும்போது ராஜ சிம்மாசனத்தில் அமருவார். மகிமைகள் அனைத்தும் ஒரு சிவபாபாவுடையதாகும், அவர் தூய்மையற்றவர்களை தூய்மையானவர்களாக ஆக்கக் கூடியவர் ஆவார். மற்றபடி இந்த ராச லீலை முதலானவை தங்களுக்குள் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருப்பதை குறிப்பதாகும். மற்றபடி கிருஷ்ணர் யாருக்காவது ஞானம் சொல்வது என்பது எப்படி நடக்க முடியும். யாரையும் பக்தி செய்யாதீர்கள் என தடுக்க வேண்டாம் என பாபா சொல்கிறார். தானாகவே விடுபட்டு விடும். பக்தியை விடுகின்றனர், விகாரத்தை விடுகின்றனர், இதன் மீதுதான் தகராறு ஏற்படுகிறது. நான் ருத்ர யக்ஞத்தை படைக்கிறேன், இதில் அசுர சம்பிரதாயத்தவரின் தடைகள் ஏற்படும் என பாபா சொல்லியிருக்கிறார். இது சிவபாபாவின் எல்லைக்கப்பாற்பட்ட யக்ஞமாகும். இதன் மூலம் மனிதரிலிருந்து தேவதை ஆகின்றனர். ஞான யக்ஞத்திலிருந்து வினாசத்தின் ஜுவாலை எழும்பியது என பாடப்பட்டுள்ளது. பழைய உலகம் வினாசமாகும்போது நீங்கள் புதிய உலகில் இராஜ்யம் செய்வீர்கள். நாங்கள் அமைதி ஏற்பட வேண்டும் என சொல்கிறோம், இந்த பி.கு.க்கள் வினாசம் ஏற்படும் என சொல்கின்றனர் என மனிதர்கள் சொல்கிறார்கள். ஞானத்தைப் புரிந்து கொள்ளாததால் இப்படி சொல்கின்றனர். இந்த பழைய உலகம் முழுவதும் இந்த ஞான யக்ஞத்தில் ஸ்வாஹா (அர்ப்பணம்) ஆகிவிடும் என தந்தை புரிய வைக்கிறார். பழைய உலகில் தீ பற்றப் போகிறது. இயற்கையின் சீற்றங்கள் ஏற்படும், கடுகு போல அனைவரும் அரைக்கப்பட்டு அழியப் போகின்றனர். மீதி கொஞ்சம் ஆத்மாக்கள் மிகுந்திருப்பார்கள். ஆத்மா அழிவற்றது. இப்போது எல்லைக்கப்பாற்பட்ட ஹோலி ஏற்படவுள்ளது, இதில் சரீரங்கள் அனைத்தும் அழிந்து போய் விடும். மற்றபடி ஆத்மா தூய்மை யடைந்து சென்று விடும். நெருப்பில் போட்ட பொருள் சுத்தமாகி விடுகிறது. சுத்தப்படுத்து வதற்காக தீயில் இடுகின்றனர். அவையனைத்தும் ஸ்தூலமான வியங்கள் ஆகும். இப்போது முழு உலகமுமே ஸ்வாஹா ஆகப் போகிறது. வினாசத்திற்கு முன்பாக கண்டிப்பாக ஸ்தாபனை ஆக வேண்டும். பிறருக்குப் புரிய வையுங்கள் - முதலில் ஸ்தாபனை பிறகு வினாசம். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை. பிரஜாபிதா புகழ் பெற்ற ஆதி தேவன், ஆதி தேவி. . . ஜகதம்பாவின் கோவில்கள் இலட்சக்கணக்கில் உள்ளன. எவ்வளவு விழாக்கள் நடக்கின்றன. நீங்கள் ஜகதம்பா வின் குழந்தைகள் ஞான-ஞானேஸ்வரி, பிறகு ராஜ-ராஜேஸ்வரி ஆகப் போகிறீர்கள். நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக ஆகிறீர்கள். பிறகு பக்தி மார்க்கத்தில் தீபாவளியின் போது இலட்சுமி தேவியிடம் வினாசமாகக் கூடிய செல்வத்தை கேட்கின்றனர். இங்கே உங்களுக்கு அனைத்தும் கிடைத்து விடுகிறது ஆயுஷ்வான் பவ, புத்திரவான் பவ. அங்கே ஆயுள் 150 வருடங்களாக இருக்கும். இங்கே நீங்கள் எவ்வளவு யோகத்தில் ஈடுபடு வீர்களோ அவ்வளவு அதிகரித்தபடி இருக்கும். நீங்கள் ஈஸ்வரனிடம் யோகத்தை ஈடுபடுத்தி யோகேஸ்வரன் ஆகிறீர்கள்.

நான் அழுக்குத் துணியை துவைப்பவனாக இருக்கிறேன் என தந்தை சொல்கிறார். அனைத்து அழுக்கான ஆத்மாக்களையும் வெண்மையாக்குகிறேன். பிறகு சரீரமும் சுத்தமானதாக கிடைக்கும். நான் ஒரு வினாடியில் உலகம் எனும் துணியை தூய்மை ஆக்குகிறேன். வெறும் மன்மனாபவ ஆவதன் மூலம் ஆத்மா மற்றும் சரீரம் தூய்மையாக ஆகிவிடுகின்றன. சூ. . . மந்திரம் ஆகி விட்டது அல்லவா. ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்பது எவ்வளவு சகஜமான உபாயமாக உள்ளது. நடந்து சுற்றியபடி சிவபாபாவை நினைவு மட்டும் செய்யுங்கள், வேறு எந்த கஷ்டமும் நான் கொடுக்கவில்லை. இப்போது ஒரு வினாடியில் உங்களுடைய ஏறும் கலை ஏற்படு கிறது. குழந்தைகளாகிய உங்கள் சேவகனாகி வந்துள்ளேன் என தந்தை சொல்கிறார். ஓ பதித பாவனா வாருங்கள், வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என நீங்கள் அழைத்தீர்கள் எனும்போது நான் சேவகனாகி விட்டேன் அல்லவா. நீங்கள் தூய்மையை இழக்கும்போது மிகவும் உறக்கக் கதறுகிறீர்கள். இப்போது நான் வந்துள்ளேன். நான் கல்பம் தோறும் வந்து குழந்தைகளுக்கு என்னை நினைவு செய்யுங்கள் என்ற மந்திரத்தைக் கொடுக்கிறேன். மன்மனாபவ என்பதன் அர்த்தமும் இதுவாகும். பிறகு விஷ்ணுபுரியின் எஜமான் ஆவீர்கள். நீங்கள் விஷ்ணுபுரியின் இராஜ்யத்தை எடுக்க வந்துள்ளீர்கள், இராவணபுரிக்குப் பிறகு விஷ்ணுபுரி. கம்சபுரிக்குப் பிறகு கிருஷ்ணபுரி. எவ்வளவு சகஜமாக புரிய வைக்கப்படுகிறது. இந்த பழைய உலகின் மீதுள்ள பற்றினை மட்டும் விடுங்கள் என தந்தை சொல்கிறார். இப்போது நாம் 84 பிறவிகளை முடித்துள் ளோம். இந்த பழைய உடலை விட்டுவிட்டு நாம் புதிய உலகிற்குச் செல்லப்போகிறோம். நினைவின் மூலம்தான் உங்களுடைய பாவங்கள் நீங்கும், இந்த அளவு தைரியம் வைக்க வேண்டும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. வாயிலிருந்து எப்போதும் ஞான அமிர்தம் வெளிப்பட வேண்டும். ஞானத்தின் மூலம்தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்க வேண்டும். ஒரு தந்தையிடமிருந்து மட்டுமே ஞானத்தைக் கேட்க வேண்டும், வேறு யாரிடமிருந்தும் அல்ல.

2. ஏறும் கலையில் (முன்னேறும் கலை) செல்வதற்காக நடந்து செல்லும் போதும் திரும்பும் போதும் தந்தையை நினைவு செய்யும் பயிற்சி செய்ய வேண்டும். இந்த பழைய உலகம், பழைய சரீரத்தின் மீதுள்ள பற்றினை நீக்க வேண்டும்.

வரதானம்:

ஒரே வழி மற்றும் ஒருவருடன் மட்டுமே உறவு வைக்கக் கூடிய சம்பூர்ண ஃபரிஸ்தா ஆகுக.

நிராகார் மற்றும் சாகார் ரூபத்தின் மூலம் புத்தியின் தொடர்பு அல்லது உறவு ஒரு தந்தையுடன் பக்காவாக இருக்குமானால் ஃபரிஸ்தா ஆகி விடுவீர்கள். யாருடைய சர்வ சம்பந்தம் அல்லது உறவு ஒருவருடன் உள்ளதோ, அவர் தாம் சதா ஃபரிஸ்தா ஆவார். எப்படி அரசாங்கம் சாலையில் போர்டு வைக்கிறது - இந்த வழி தடை செய்யப் பட்டுள்ளது என்று அது போல் (மாயை நுழையும்) வழியைத் தடை செய்து விடுவீர்களானால் புத்தியின் அலைதல் நின்று போகும். பாப்தாதாவின் கட்டளை இது தான் - முதலில் அனைத்து வழிகளையும் அடைத்து விடுங்கள். இதனால் சகஜமாக ஃபரிஸ்தா ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:

சதா சேவையின் ஊக்கம்-உற்சாகத்தில் இருக்க வேண்டும் - இது தான் மாயாவிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான சாதனம்.


மாதேஸ்வரி அவர்களின் விலைமதிக்க முடியாத மகாவாக்கியங்கள் : நிரந்தர ஈஸ்வரிய நினைவின் அமர்வு

பரமாத்மாவின் நினைவில் இப்போது அமர்கிறீர்கள் என்றால் அமர்வதன் அர்த்தம் என்ன? நாம் பரமாத்மா வின் நினைவில் அமர்வது மட்டும் போதாது. ஆனால் தனது ஈஸ்வரிய நினைவோ நடமாடும் போதும் சுற்றி வரும் போதும் ஒவ்வொரு நேரமும் இருக்க வேண்டும். மேலும் எந்தப் பொருளைப் பற்றிய (புரிதல்) அறிமுகம் உள்ளதோ, அதன் நினைவு தான் இருக்கும். அதன் பெயர்-வடிவம் என்ன? ஈஸ்வரன் பெயர்- வடிவத்திற்கு அப்பாற் பட்டவர் என்று நாம் சொல்வோமானால், எந்த வடிவத்தில் அவரை நினைவு கூறுவது, அவர் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கிறார் என்றால், பிறகு யாரை நினைவு செய்வது? நினைவு என்ற வார்த்தை இருக்கிறது என்றால் அவசியம் நினைவின் வடிவமும் இருக்கும். நினைவின் அர்த்தம் -- ஒருவர் நினைவு செய்பவர், இன்னொருவரை நினைவு செய்கிறார் என்றால் நிச்சயமாக நினைவு செய்பவர், அந்த இன்னொருவரில் இருந்து வேறுபட்டவர். ஆகவே பிறகு ஈஸ்வரன் சர்வ வியாபி அல்ல. ஆத்மாக்கள் நாம் பரமாத்வின் அம்சம் என்று யாராவது சொல்வார்களானால் பரமாத்மாவும் துண்டு-துண்டாக ஆகி விடுகிறாரா என்ன? அவ்வாறானால் பரமாத்மா விநாசி (அழியக்கூடியவர்) ஆகி விடுகிறார். அவரது நினைவும் விநாசி (இல்லாமல்) ஆகிறது. இப்போது இந்த விஷயத்தை மனிதர்கள் அறிந்திருக்கவில்லை, அதாவது பரமாத்மாவும் அவிநாசி (அழியாதவர்). அந்த அவிநாசி பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகளாகிய ஆத்மாக்கள் நாமும் அவிநாசி என்பதை. ஆக, நாம் வம்சமாகிறோம், அம்சமாகவில்லை. இப்போது நமக்கு ஞானம் தேவை. அதை பரமாத்மா சுயம் வந்து குழந்தைகளாகிய நமக்குக் கொடுக்கிறார். நமக்கு பரமாத்மா சொல்லும் மகாவாக்கியம் - நான் யாராக இருக்கிறேன் எப்படி இருக்கிறேன் அந்த ரூபத்தை நினைவு செய்வதால் நீங்கள் என்னை அவசியம் அடைவீர்கள். நான் சுக-துக்கத்திலிருந்து விடுபட்டிருக்கும் தந்தை. சர்வவியாபி என்றால் பிறகு விளையாட்டில் சுகம்-துக்கம் இருக்காது. ஆகவே நான் சர்வவியாபி அல்ல. நானும் கூட ஆத்மாவைப் போல் ஆத்மாவாக இருக்கிறேன். ஆனால் சர்வ ஆத்மாக்களையும் விட என்னுடைய குணங்கள் உயர்ந்தவை. ஆகவே என்னைப் பரம ஆத்மா - அதாவது பராமத்மா எனச் சொல்கின்றனர். நல்லது. ஓம் சாந்தி.