06.11.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்போது இறை சேவையில் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் சுகத்தின் வழி காட்ட வேண்டும். ஸ்காலர்ஷிப் (தந்தையின் உதவியை) அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

 

கேள்வி :

குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் ஞானம் நன்கு தாரணை ஆகும் போது எந்த பயம் நீங்குகிறது?

 

பதில்:

குரு நமக்கு சாபம் கொடுத்து விடக்கூடாது என்று பக்தியில் பயம் இருந்தது. இந்த பயம் ஞானத்தில் வந்ததும் ஞானத்தைக் கடைப்பிடிப்பதால் நீங்குகிறது. ஏனென்றால் ஞான மார்க்கத்தில் யாரும் சாபம் கொடுக்க முடியாது. இராவணன் சாபம் கொடுக்கிறான். தந்தை சொத்து கொடுக்கிறார். ரித்தி சித்தி கற்பவர்கள் துன்புறுத்துதல், துக்கம் கொடுத்தல் போன்ற வேலை செய்கிறார்கள். ஞானத்திலோ குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் சுகத்தை அடைய வைக்கிறீர்கள்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு முன்பு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார். முதலில் நீங்கள் அனைவரும் ஆத்மா என்ற உறுதியான நிச்சயம் வைக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் பரந்தாமத்திலிருந்து இங்கே உடலை எடுத்து நடிப்பதற்காக வருகின்றோம் என குழந்தைகள் அறிகிறார்கள். ஆத்மா தான் நடிக்கிறது. மனிதர்கள் சரீரம் தான் நடிக்கிறது என நினைக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறாகும். இந்த காரணத்தால் ஆத்மாவைப் பற்றி யாரும் அறியவில்லை. இந்த வருவது போவதுமான சக்கரத்தில் ஆத்மாக்களாகிய நாம் வருகின்றோம், போகின்றோம். இந்த விஷயத்தை மறந்து விடுகிறார்கள். ஆகையால் பாபாவே வந்து ஆத்ம உணர்வுடையவராக மாற்ற வேண்டி யிருக்கிறது. இந்த விஷயம் கூட யாருக்கும் தெரியாது. ஆத்மா எப்படி நடிக்கிறது என்பதை பாபா தான் புரிய வைக்கிறார். மனிதர்கள் அதிக பட்சம் 84 பிறவிகளிலிருந்து குறைந்த பட்சம் ஒன்று இரண்டு பிறவிகள் வரை எடுக்கிறார்கள். ஆத்மா மறுபிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறது. இதிலிருந்து பல பிறவிகள் எடுக்கக் கூடியவர்கள் நிறைய மறுபிறவிகளை எடுக் கிறார்கள் எனத் தெளிவாகிறது. குறைவான பிறவி எடுப்பவர்கள் குறைவாக மறுபிறவி எடுக் கிறார்கள். நாடகத்தில் கூட ஒரு சிலருக்கு ஆரம்பத்திலிருந்து கடைசி வரையும் ஒரு சிலருக்கு சிறிது பாகம் மட்டுமே நடிப்பு இருக்கிறது. இது எந்த மனிதருக்கும் தெரியவில்லை. ஆத்மா தன்னைப் பற்றியே அறியவில்லை என்றால் தன்னுடைய தந்தையைப் (பரம் ஆத்மாவைப்) பற்றி எப்படி அறியும்? அவர் ஆத்மாவின் விஷயம் அல்லவா? ஆத்மாக்களுக்கு தந்தையாவார். கிருஷ்ணர் ஆத்மாக்களின் தந்தை கிடையாது. கிருஷ்ணரை நிராகாரர் என்று கூற முடியாது. சாகாரத்தில் தான் அவரை தெரிந்துக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஆத்மா இருக்கிறது. ஒவ்வொரு ஆத்மாவின் நடிப்பும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயங்களை உங்களிலும் கூட வரிசைக் கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப புரிய வைக்க முடியும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மாக்களாகிய நாம் எப்படி 84 பிறவிகளை எடுக்கிறோம் என அறிகிறீர்கள். ஆத்மாவே பரமாத்மா ஆகிறது என்பது கிடையாது. ஆத்மாக்களாகிய நாம் முதலில் தேவதை களாகிறோம் என பாபா புரிய வைத்துள்ளார். இப்போது அழுக்காக தமோபிரதானமாக இருக் கிறோம். பிறகு தூய்மையாக சதோபிரதானமாக மாற வேண்டும். எப்போது இந்த சிருஷ்டி பழையதாகிறதோ அப்போது தான் பாபா வருகிறார். பாபா வந்து பழையதை புதியதாக மாற்றுகிறார். புதிய உலகத்தை ஸ்தாபனை செய்கிறார். புது உலகத்தில் தான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருக்கிறது. அவர்கள் தான் முதலில் கலியுக சூத்திர தர்மத்தினராக இருந்தனர் எனக் கூறலாம். இப்போது பிரஜா பிதா பிரம்மாவின் வாய் வழி வம்சத்தினராகி பிராமணன் ஆகி உள்ளீர்கள். பிராமண குலத்தில் வருகிறீர்கள். பிராமண குலத்தின் வம்சம் கிடையாது. பிராமண குலத்தினர் யாரும் இராஜ்யம் செய்யவில்லை. இச்சமயம் பாரதத்தில் பிராமண குலத்தினரும் இராஜ்யம் செய்யவில்லை. சூத்திர குலத்தினரும் இராஜ்யம் செய்யவில்லை. இவரும் ஆட்சி செய்யவில்லை. இருப்பினும் மக்கள் மீது மக்கள் ஆளக்கூடிய ஆட்சி நடக்கிறது. பிராமணர்களாகிய உங்களுக்கு எந்த இராஜ்யமும் இல்லை. மாணவர்களாகிய நீங்கள் படிக்கிறீர்கள். பாபா உங்களுக்குத் தான் புரிய வைக்கிறார். இந்த 84-பிறவியின் சக்கரம் எப்படி சுழல்கிறது. சத்யுகம், திரேதா... பிறகு சங்கமயுகம் வருகிறது. இந்த சங்கம யுகத்தின் மகிமையைப் போன்று வேறு எந்த யுகத்திற்கும் கிடையாது. இதுவே புருஷோத்தம சங்கமயுகம் ஆகும். சத்யுகத்திலிருந்து திரேதாவில் வருகிறார்கள். இரண்டு கலைகள் குறை கின்றது என்றால், அவர்களை எப்படி மகிமை செய்ய முடியும். விழுவதற்கு மகிமை செய்ய முடியாது. கலியுகத்திற்கு பழைய உலகம் என்று பெயர். இப்போது புதிய உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அங்கே தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவர்கள் புருஷோத் தமர்களாக இருந்தனர். பிறகு கலைகள் குறைந்துக் கொண்டே வந்து தாழ்ந்தவர்களாக சூத்திர புத்தி உடையவர்களாகின்றனர். அவர்களுக்கு கல்புத்தி என்று கூட கூறப்படுகிறது. யாரை பூஜை செய்கின்றார்களோ அவர்களுடைய வாழ்க்கை வரலாறு கூடத் தெரியாத அளவிற்கு கல்புத்தி உடையவர்களாகின்றனர். குழந்தைகள் பாபாவின் வாழ்க்கையை அறிய வில்லை என்றால் ஆஸ்தி எப்படி கிடைக்கும்? இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் வாழ்க்கையை அறிகிறீர்கள். அவரிடமிருந்து உங்களுக்கு சொத்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. எல்லையற்ற தந்தையை நினைக்கிறீர்கள். தாயும் நீயே, தந்தையும் நீயே... எனக் கூறுகிறீர்கள் என்றால், நிச்சயம் பாபா வந்திருப்பார். அப்போது தான் அளவிட முடியாத சுகத்தை அளித்திருப்பார் அல்லவா? நான் வந்திருக்கிறேன், அளவற்ற சுகத்தை குழந்தை களாகிய உங்களுக்குத் தருகிறேன் என பாபா கூறுகிறார். குழந்தைகளின் புத்தியில் இந்த ஞானம் நன்கு இருக்க வேண்டும். ஆகவே நீங்கள் சுய தரிசன சக்கரதாரி ஆகிறீர்கள். இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. நாமே தேவதைகளாகிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகியிருக்கிறீர்கள். கலியுக பிராமணர்கள் கூட இருக்கிறார்கள் அல்லவா? நம்முடைய தர்மம் மற்றும் குலம் எப்போது ஸ்தாபனை ஆனது என்று அந்த பிராமணர்கள் அறிவதில்லை. ஏனென்றால் அவர்கள் கலியுகத்தினர். இப்போது நீங்கள் நேரடியாக பிரஜா பிதா பிரம்மாவின் வாரிசாகி இருக்கிறீர்கள். மேலும் அனைவரையும் விட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். பாபா உங்களுக்கு கற்பித்தல், கவனித்துக் கொள்ளுதல் மற்றும் அலங்காரம் செய்தல் போன்ற சேவைகளைச் செய்கிறார். நீங்களும் கூட இறை சேவையில் மட்டும் இருக்கிறீர்கள்! அனைத்து குழந்தைகளின் சேவைக் காக நான் வந்துள்ளேன் என்று இறை தந்தை கூறுகின்றார். குழந்தைகளுக்கு சுகத்தின் வழியைக் காட்ட வேண்டும். இப்போது வீட்டுக்குச் செல்லுங்கள் என பாபா கூறுகின்றார். மனிதர்கள் முக்திக்காக பக்தி செய்கிறார்கள். நிச்சயம் வாழ்க்கையில் பந்தனம் இருக்கிறது தந்தை வந்து இந்த துக்கத்திலிருந்து விடுவிக்கிறார். அய்யோ அய்யோ என கூறுவார்கள் என குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஐயோவிற்கு பிறகு தான் வெற்றி முழக்கம் ஏற்படும். இயற்கை சீற்றங்கள் போன்றவை நிகழும் போது எவ்வளவு கூக்குரலிடுவார்கள் என உங்களுடைய புத்தியில் இருக்கிறது. ஐரோப்பியர்கள் தான் யாதவர்கள். ஐரோப்பியர் களுக்குத் தான் யாதவர் என்ற பெயர் என பாபா புரிய வைத்திருக்கிறார். வயிற்றிலிருந்து உலக்கை வருவது போன்று காட்டுகிறார்கள். பிறகு சாபம் கொடுக்கப்பட்டது. இப்போது சாபம் போன்ற எந்த விசயமும் இல்லை. இது நாடகம் ஆகும். பாபா சொத்து கொடுக்கிறார். இராவணன் சாபம் கொடுக்கிறான். இவ்வாறு ஒரு விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி சாபம் கொடுப்பவர்கள் வேறு மனிதர்கள். அந்த சாபத்தை நீக்குபவர்களும் இருக்கிறார் கள். மக்கள், குரு போன்றவர்களைப் பார்க்கும் போது சாபம் கொடுத்து விடக் கூடாது என பயப்படுகிறார்கள். உண்மையில் ஞான மார்க்கத்தில் யாரும் சாபம் கொடுக்க முடியாது. ஞான மார்க்கம் மற்றும் பக்தி மார்க்கத்தில் சாபத்தின் எந்த விசயமும் இல்லை. ரித்தி சித்தி போன்ற வைகளைக் கற்பவர்களே சாபம் கொடுக்கிறார்கள். மக்களை மிகவும் துன்பப்படுத்துகிறார்கள். நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். பக்தர்கள் கூட இந்த வேலை செய்வதில்லை.

 

சங்கமத்தின் கூடவே புருஷோத்தமர் என்ற வார்த்தையை நிச்சயம் எழுதுங்கள் என்று பாபா கூறுகின்றார். திரிமூர்த்தி என்ற வார்த்தையும் நிச்சயம் எழுத வேண்டும். மேலும் பிரஜா பிதா என்ற வாத்தை அவசியம் ஆகும். ஏனென்றால் பிரம்மா என்ற பெயர் கூட நிறைய பேருக்கு இருக்கிறது. பிரஜாபிதா என்ற வார்த்தை எழுதினால் சாகாரத்தில் பிரஜாபிதா இருக்கிறார் என்று புரிந்துக் கொள்வார்கள். வெறும் பிரம்மா என்று எழுதினால் சூட்சும வதனத்தில் இருப்பவர் என நினைக்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரரை பகவான் என்கிறார்கள். பிரஜா பிதா என்றால், பிரஜாபிதா இங்கே இருக்கிறார் என புரிய வைக்க முடியும். சூட்சும வதனத்தில் எப்படி இருக்க முடியும்? பிரம்மாவின் நாபிக் கமலத்திலிருந்து விஷ்ணுவைக் காண்பிக் கிறார்கள். எனவே குழந்தைகளுக்கும் ஞானம் கிடைத்திருக்கிறது. நாபி என்ற எந்த விஷயமும் இல்லை. பிரம்மாவிலிருந்து- விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து- பிரம்மா எப்படி ஆகிறார்? முழு சக்கரத்தின் ஞானமும் நீங்கள் இந்த படங்களினால் புரிய வைக்கலாம். படங்கள் இல்லாமல் புரிய வைப்பதில் சற்று கடினம் இருக்கிறது. பிரம்மாவிலிருந்து விஷ்ணு விஷ்ணுவிலிருந்து பிரம்மா ஆகிறார். லஷ்மி நாராயணன் 84 சக்கரத்தில் சுழன்று பிறகு பிரம்மா சரஸ்வதி ஆகின்றனர். பாபா முதலிலேயே பட்டி நடந்த போது பெயரை வைத்திருக்கிறார். பிறகு எவ்வளவு பேர் சென்று விட்டனர். ஆகையால் பிராமணர்களின் மாலை கிடையாது. ஏனென்றால் பிராமணர்கள் முயற்சியாளர்கள் என புரிய வைத்திருக்கிறார். ஒரு சில நேரம் கீழே, ஒரு சில நேரம் மேலே இருக்கிறார்கள். கிரகச்சாரம் பிடித்துக் கொள்கிறது. பாபா வியாபாரியாக இருந்தார். முத்துக்களின் மாலை எப்படி தயாராகிறது என்ற அனுபவம் இருக்கிறது. பிராமணர்களின் மாலை கடைசியில் உருவாகிறது. நாம் பிராமணர் தெய்வீக குணங்களைக் கடைப்பிடித்து தேவதையாகின்றோம். பிறகு ஏணிப்படியில் இறங்குகின்றோம். இல்லை என்றால் 84 பிறவிகள் எப்படி எடுப்பார்கள். 84 பிறவிகளின் கணக்கிலிருந்து இதை எடுக்க முடியும். உங்களுடைய பாதி காலம் முழுமை அடைந்ததும் மற்ற மதத்தினர் வருகிறார்கள். மாலையை உருவாக்குவதில் மிகவும் கடின உழைப்பு இருக்கிறது. மிகவும் கவனமாக முத்துக்கள் மேஜையில் வைக்கப்படுகிறது. எங்கேயும் அசைந்து விடக் கூடாது. பிறகு ஊசியினால் கோர்க்கப்படுகிறது. சரியாக உருவாகவில்லை என்றால் மாலையை கலைத்து மீண்டும் உருவாக்க வேண்டி உள்ளது. இதுவோ மிகவும் பெரிய மாலையாகும். நாம் புதிய உலகத்திற்காக படிக்கிறோம் என குழந்தைகளாகிய உங்களுக்கு தெரியும். நாம் சூத்திரனிலிருந்து பிராமணன், பிராமணலிருந்து தேவதையாக எப்படி மாற முடியும், வந்து புரிந்துக் கொள்ளுங்கள் என சுலோகனை உருவாக்குங்கள் ! என பாபாபுரிய வைத்திருக்கிறார். இந்த சக்கரத்தை புரிந்துக் கொள்வதால் சக்கரவர்த்தி ஆவீர்கள். சொர்க்கத்திற்கு அதிபதி ஆகி விடுவீர்கள். இவ்வாறு சுலோகனை உருவாக்கி குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். பாபா நிறைய யுக்திகளைத் தெரிவிக்கிறார். உண்மையில் உங்களுக்குத் தான் மதிப்பிருக்கிறது. உங்களுக்கு ஹீரோ, ஹீரோயின் பார்ட் கிடைத்திருக்கிறது. வைரம் போன்று நீங்கள் மாறுகிறீர்கள். பிறகு 84 சக்கரத்தை சுழன்று கூழாங்கல் போன்று மாறுகிறீர்கள். வைரம் போன்று பிறவி கிடைக்கிறது என்றால் கிளிஞ்சல்களுக்கு பின்னால் ஏன் செல்கிறீர்கள். வீடு வாசலை துறக்க வேண்டும் என்பது கிடையாது. இல்லறத்தில் இருந்துக் கொண்டே தாமரை மலருக்குச் சமமாக தூய்மை யாகுங்கள். மேலும் சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தை தெரிந்துக் கொண்டு தெய்வீக குணங் களைக் கடைபிடித்தால் நீங்கள் வைரம் போன்று மாறிவிடலாம் என்று பாபா கூறுகின்றார். உண்மையில் பாரதம் 5000 வருடங்களுக்கு முன்பு வைரம் போன்று இருந்தது. இதுவே குறிக்கோளாகும். இந்த சித்திரத்திற்கு(லஷ்மி-நாராயணன்) மிகவும் மகத்துவம் அளிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் படக் கண்காட்சி மியூசியத்தில மிகவும் சேவை செய்ய வேண்டும். பறக்கும் மார்க்கத்தின் (விரிவான) சேவை இல்லாமல் நீங்கள் எப்படி பிரஜைகளை உருவாக்குவீர்கள். இந்த ஞானத்தைக் கேட்கலாம். ஆனால் உயர்ந்த பதவி ஒரு சிலர் தான் பெறுகிறீர்கள். அவர்களுக்குத் தான் கோடியில் ஒருசிலர் என்று கூறப்படுகிறது. சிலர் ஸ்காலர்ஷிப் கூட அடைகிறார்கள் அல்லவா? 40-50 குழந்தைகள் பள்ளியில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவர் தான் ஸ்காலர்ஷிப் பெறுகிறார்கள். யாராவது சிலர் பிளஸில் வந்தால் கூட அவர்களுக்கும் தருகிறார்கள். இதுவும் அவ்வாறே. பிளஸில் நிறைய பேர் இருக்கிறார்கள். 8 மணிகள் இருக்கிறார்கள். அதிலும் வரிசைக் கிரமம் இருக்கிறது அல்லவா? அவர்களே முதன் முதலில் இராஜ்ய சிம்மாசனத்தில் அமர்வார்கள். பிறகு கலைகள் குறைந்துக் கொண்டே வரும். லஷ்மி நாராயணரின் சித்திரம் நம்பர் ஒன்னாகும். அவர்களின் இராஜ்யம் நடக்கிறது. ஆனால் லஷ்மி நாராயணனின் சித்திரம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கே சித்திரம் மாறிக் கொண்டே இருக்கிறது. சித்திரம் கொடுப்பதால் என்ன நன்மை? பெயர், ரூபம், தேசம், காலம் அனைத்தும் மாறுகிறது.

 

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தை புரிய வைக்கின்றார். சென்ற கல்பத்திலும் கூட புரிய வைத்திருந்தார். கிருஷ்ணர் கோப கோபியர் களுக்குக் கூறினார் என்பது கிடையாது. கிருஷ்ணரின் கோப கோபியர்கள் இல்லவே இல்லை. அவர்களுக்கு ஞானமும் கற்பிக்கப்படவில்லை அவரோ சத்யுகத்தின் இளவரசன். அங்கே எப்படி இராஜயோகத்தைக் கற்பிப்பார் அல்லது பதீதர்களை பாவனமாக மாற்றுவார். இப்போது நீங்கள் தங்களின் தந்தையை நினையுங்கள். தந்தை ஆசிரியராக இருக்கிறார். ஆசிரியரை மாணவர் கள் ஒரு போதும் மறக்க முடியாது. தந்தையை குழந்தைகள் மறக்க முடியாது. குருவையும் மறக்க முடியாது. பிறந்ததிலிருந்தே தந்தை இருக்கிறார். 5 வருடங்களுக்குப் பிறகு ஆசிரியர் கிடைக்கிறார். பிறகு வானப் பிரஸ்தத்தில் குரு கிடைக்கிறார். பிறந்த உடனே குருவை வைத்துக் கொள்வதால் எந்த பயனும் இல்லை. குருவின் மடியில் வந்தும் கூட அடுத்த நாள் இறந்து போகிறார்கள். பிறகு குரு என்ன செய்வார்? சத்குரு இல்லாமல் கதி இல்லை என்று பாடுகிறார்கள். சத்குருவை விட்டு விட்டு அவர்கள் குரு என்கிறார்கள். நிறைய குருக்கள் இருக்கிறார்கள். குழந்தைகளே நீங்கள் எந்த ஒரு தேகத்தை தரித்த குருக் களிடமும் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் யாரிடமும் எதுவும் கேட்க வேண்டியதில்லை என பாபா கூறுகின்றார். கேட்பதை விட இறப்பதே மேல் என்று கூறப்பட்டிருக்கிறது. நாம் எப்படி நமது பணத்தை மாற்றம் செய்வது என அவைருக்கும் கவலை இருக்கிறது. அடுத்த பிறவிக்காக அவர்கள் ஈஸ்வரனின் பெயரில் தானம், புண்ணியம் செய்கிறார்கள். அதற்குப் பலனாக இந்த பழைய உலகத்தில் அல்ப காலத்திற்குக் கிடைக்கிறது. இங்கே புது உலகத்தில் 21 பிறவிகளுக்கு உங்களுடையது மாறுகிறது. உடல், மனம், பொருள் பிரபுவிற்கு முன்பு அர்ப்பணம் செய்ய வேண்டும். வரும் போது தான் அர்ப்பணம் செய்வார்கள். பிரபுவைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்பதால் குருவை பிடித்துக் கொள்கிறார்கள். செல்வம் போன்றவைகளை குருவின் முன்பு அர்ப்பணம் செய்கிறார்கள். வாரிசு இல்லை என்றால் அனைத்தையும் குருவிற்கு அளிக்கிறார்கள். இன்று சட்டப்படி ஈஸ்வரனின் பெயரில் யாரும் அளிப்பதில்லை. நான் ஏழைப்பங்காளன், ஆகவே நான் பாரதத்தில் தான் வருகிறேன் என பாபா கூறுகிறார். உங்களை உலகத்திற்கே அதிபதியாக்குகிறேன். நேரடியாக இருப்பதிலும் மறைமுகமாக இருப்பதிலும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் எதையும் அறிய வில்லை. நாங்கள் ஈஸ்வரனுக்காக அர்ப்பணம் செய்கிறோம் என மட்டும் கூறுகிறார்கள். அனைத்தும் முட்டாள் தனமாகும். நிச்சயம் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்து தான் கிடைக்க வேண்டும். பாபாவிடமிருந்து நீங்கள் தாதா மூலமாக சொத்தை அடைகிறீர்கள். தாதாவும் அவரிடமிருந்து தான் சொத்தை அடைந்துக் கொண்டிருக்கிறார். சொத்து அளிப்பவர் ஒருவர் தான். அவரைத் தான் நினைக்க வேண்டும். குழந்தைகளே நான் இவருடைய பல பிறவிகளின் கடைசியில் வருகிறேன், இவருக்குள் பிரவேசமாகி இவரை பாவனமாக (தூய்மையாக) மாற்றுகிறேன். பிறகு இவர் பரிஸ்தாவாக மாறுகிறார் என பாபா கூறுகின்றார். பேட்ஜ் வைத்துக் கொண்டு நீங்கள் நிறைய சேவை செய்யலாம். உங்களிடம் உள்ள அனைத்து கருத்துகளும் பொதிந்த பேட்ஜ் ஆகும். இது உயிர் தானம் அளிக்கக் கூடிய சித்திரம் ஆகும். இதனுடைய மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. மேலும் பாபாவிற்கு எப்போதும் பெரிய பொருட்கள் (சித்திரம்) பிடிக்கும். யார் வேண்டுமானாலும் தொலைவிலிருந்து படிக்கலாம். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்து அடைய நேரடியாக தனது உடல் மனம் பொருளை ஈஸ்வரனுக்கு முன்பு அர்ப்பணம் செய்வதில் புத்திசாலி ஆக வேண்டும். தன்னுடைய அனைத்தும் 21 பிறவிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

 

2. பாபா, படிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது, மற்றும் அலங்காரம் செய்வது என்று எப்படி சேவை செய்கிறாரோ அவ்வாறே பாபாவிற்குச் சமமாக சேவை செய்ய வேண்டும். வாழ்க்கை பந்தனத்திலிருந்து விடுவித்து அனைவரையும் ஜீவன் முக்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

 

வரதானம்:

அனைத்து பொக்கிஷங்களுக்கும் சிக்கனத்திற்கான பட்ஜெட் உருவாக்கக் கூடிய ஆழமான முயற்சியாளர் ஆகுக.

 

லௌகீகத்தில் வீட்டில் சிக்கனம் இல்லையெனில் அது சரியான முறையில் நடக்காது. அதே போன்று நிமித்தமாக இருக்கக் கூடிய குழந்தைகள் சிக்கமானவர்களாக இல்லை யெனில் சென்டர் சரியான முறையில் நடைபெறாது. அது எல்லைக்குட்பட்ட இல்லறம், இது எல்லையற்ற இல்லறமாகும். ஆக எண்ணம், சொல் மற்றும் சக்திகளில் என்ன என்ன அதிகமாக செலவு செய்தேன்? என்று சோதனை செய்ய வேண்டும். யார் அனைத்து பொக்கிஷங்களிலும் சிக்கனத்திற்கான பட்ஜெட் தயாரித்து அதன்படி நடக்கிறார்களோ அவர்கள் தான் நேர்த்தியான (சரியான) முயற்சியாளர் என்று கூறப்படுகின்றனர். அவர்களது எண்ணம், வார்த்தை, செயல் அல்லது ஞானத்தின் சக்திகள் போன்ற எதுவும் வீண் ஆக முடியாது.

 

சுலோகன்:

அன்பு என்ற பொக்கிஷத்தால் செல்வந்தர்களாக ஆகி அனைவருக்கும் அன்பு கொடுங்கள் மற்றும் அன்பு அடையுங்கள்.

 

ஓம்சாந்தி