06-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஆத்ம உணர்வுடையவராக இருப்பதில் தான் உங்களுடைய பாதுகாப்பு உள்ளது. நீங்கள் ஸ்ரீமத்படி ஆன்மீக சேவையில் ஈடுபட்டு விடுங்கள். அப்போது தேக அபிமானம் என்ற எதிரி தாக்க மாட்டான்.

கேள்வி:
விகர்மங்களின் சுமை தலை மீது உள்ளது என்பதற்கான அடையாளம் என்னவாக இருக்கும்? அதை இலேசாக ஆக்குவதற்கான விதி கூறுங்கள்?

பதில்:
விகர்மங்களின் சுமை உள்ளவரையும் ஞானத்தின் தாரணை ஆகாது. அப்பேர்ப்பட்ட செயல் கள் செய்திருப்பதன் காரணத்தால் அவை திரும்பத்திரும்ப தடை ஏற்படுத்துகின்றது. முன்னேற விடுவதில்லை. இந்த சுமையிலிருந்து இலேசானவர் ஆக வேண்டும் என்றால் உறக்கத்தை வென்றவராக ஆகுங்கள். இரவு விழித்து பாபாவை நினைவை செய்தீர்கள் என்றால் சுமை இலேசாக ஆகி விடும்.

பாடல்:
மாதா ஓ மாதா..

ஓம் சாந்தி.
இது ஜகதம்பாவின் மகிமை ஆகியது. ஏனெனில் இது புதியபடைப்பு ஆகும். உடனடி யாக புதிய படைப்பு ஆவது இல்லை. பழையதிலிருந்து புதியதாக ஆகிறது. மரண உலகத் திலிருந்து அமரலோகம் செல்ல வேண்டும். இது வாழ்வது மற்றும் இறப்பது பற்றிய கேள்வி ஆகும். ஒன்று மரண உலகத்தில் இறந்து முடிந்து விட வேண்டும் அல்லது உயிருடன் இருந்தே இறந்து அமரலோகம் செல்ல வேண்டும். ஜகத்திற்கு தாய் என்றால் ஜகத்தைப் படைப்பவர் தந்தை சொர்க்கத்தின் படைப்பு கர்த்தா என்பது நிச்சயம். படைப்பை பிரம்மா மூலமாகப் படைக்கிறார். நான் சூரிய வம்ச சந்திர வம்ச ராஜதானி ஸ்தாபனை செய் கிறேன் என்று தந்தை கூறுகிறார். சங்கமத்தில் வர வேண்டி உள்ளது. கல்பத்தின் சங்கம யுகத்தில் ஒவ்வொரு சங்கம யுகத்திலும் வருகிறேன் என்று கூறவும் செய்கிறார். தெளிவான விளக்கவுரை உள்ளது. மனிதர்கள் பெயரை மட்டும் மாற்றி தவறு செய்து விட்டுள்ளார்கள். சர்வ வியாபியின் ஞானம் கூறுபவர்களிடம் இவ்வாறு கூறியது யார்? எப்பொழுது கூறினார்? எங்கு எழுதப்பட்டுள்ளது என்று கேட்க வேண்டி உள்ளது. நல்லது. நான் சர்வ வியாபி என்றால் கீதையின் பகவான் யார்? ஸ்ரீகிருஷ்ணரோ தேகதாரி ஆவார். அவரை சர்வவியாபி எனக் கூற முடியாது. ஸ்ரீகிருஷ்ணருடைய பெயர் மாற்றப்பட்டு விட்டது என்றால் பிறகு விஷயம் தந்தை பற்றி வருகிறது. தந்தையோ ஆஸ்தி அளிக்க வேண்டி உள்ளது. நான் சூரிய வம்ச, சந்திர வம்சத்தின் ஆஸ்தி அளிப்பதற்காக இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன் என்று கூறுகிறார். இல்லையென்றால் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி அவர்களுக்கு யார் அளித்தார்? பிரம்மா வாய் மூலமாக பிராமணர்களைப் படைத்தார் என்று எழுதப்பட்டும் உள்ளது. பிறகு சிருஷ்டியின் முதல் இடை கடை பற்றிய ஞானத்தை அமர்ந்து பிராமணர்களுக்குக் கூறுகிறார். எனவே யார் ஞானம் அளிப்பவரோ அவர் புரிய வைப்பதற்காக அவசியம் படங்கள் கூட அமைப்பார். பார்க்கப்போனால் இதில் ஒன்றும் எழுத படிக்க வேண்டிய விஷயம் இல்லை. ஆனால் இதை எளிதாகப் புரிய வைப்பதற்காக படங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றால் நிறைய பயன்கள் ஏற்பட முடியும். எனவே ஜகதம்பாவிற்கும் மகிமை உள்ளது. சிவ சக்தி என்றும் கூறப்படுகிறது. சக்தி யாரிடமிருந்து கிடைக்கிறது? "வேர்ல்டு ஆல்மைட்டி" சர்வ சக்தி வான் தந்தையிடமிருந்து. "வேர்ல்டு ஆல்மைட்டி அத்தாரிட்டி" - சர்வ சக்திவான் என்ற இந்த வார்த்தை கூட மகிமையில் கூற வேண்டி உள்ளது. "அத்தாரிட்டி" என்றால் சாஸ்திரங்கள் ஆகியவற்றின் என்ன ஞானம் உள்ளதோ அவை எல்லாமே அறிந்துள்ளார். புரிய வைப்பதற்கான அத்தாரிட்டி (அதிகார உரிமை) உள்ளது. பிரம்மாவின் கையில் சாஸ்திரங்கள் காண்பிக்கிறார்கள். மேலும் பிரம்மா கமலத்திருவாய் மூலமாக அனைத்து வேத சாஸ்திரங்களின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார். எனவே அத்தாரிட்டி ஆகினார் அல்லவா? குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து வேத சாஸ்திரங்களின் ரகசியத்தைப் புரிய வைக்கிறார். தர்ம சாஸ்திரங்கள் என்று எதற்குக் கூறப்படுகிறது என்பது உலகிற்குத் தெரியாது. 4 தர்மங்கள் என்றும் கூறப்படுகிறது. அவற்றில் கூட ஒரு தர்மம் முக்கியமானது. இது அஸ்திவாரம் ஆகும். ஆலமரத்தின் உதாரணம் கூட கொடுக்கப்படுகிறது. இதன் வேர்ப் பகுதி அழுகி விட்டுள்ளது. மற்றது கிளைகள் கிளைகள் (விழுதுகள்) நின்றுள்ளன. இது உதாரணம் ஆகும். உலகத்தில் விருட்சங்களோ நிறைய உள்ளன. சத்யுகத்தில் கூட விருட்சமோ இருக்கும் அல்லவா? அடர்ந்த காடுகள் வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம். தோட்டங்கள் இருக்கும். மரத்தாலான பொருட்கள் செய்ய வேண்டி காடுகளும் இருக்கும். விறகுகள் ஆகியவை வேண்டும் அல்லவா? காடுகளில் கூட மிருகங்கள் பறவைகள் நிறைய இருக்கும். ஆனால் அங்கு எல்லா பொருட்களும் நல்ல பலன் அளிக்க (உபயோகப்படக்) கூடியதாகக் இருக்கும். மிருகங்கள், பறவைகள் கூட அழகானவையாக இருக்கும். ஆனால் அசுத்தப் படுத்துபவையாக இருக்காது. மிருகங்கள் பறவைகளின் அழகு கூட வேண்டும் அல்லவா? சிருஷ்டியோ (படைப்பு) சதோ பிரதானமாக இருப்பதால் எல்லா பொருட்களும் சதோ பிரதானமாக இருக்கும். ""பஹிஷ்த்" (சொர்க்கம்) என்றால் பின் என்ன? முதன் முதலாவதான முக்கிய விஷயம் - தந்தை யிடமிருந்து ஆஸ்தியைப் பெற வேண்டும். படங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் கூட பிரம்மா மூலமாக ஸ்தாபனை விஷ்ணு மூலமாக பாலனை.... என்று எழுத வேண்டும். இந்த வார்த்தை களை மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. எனவே "விஷ்ணுவின் இரண்டு ரூபம் லட்சுமி நாராயணர் ஆவார்கள், பாலனை செய்பவர்கள்". இதனை யாரோ கோடியில் ஒருவர் தான் புரிந்து கொள்வார்கள். பிறகு ஆச்சரியப்படும் வகையில் கேட்டார்கள், கூறினார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப தங்களுடைய பதவியை அடைகிறார்கள். ஏதோ ஒரு சில இடங்களில் இந்த விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. பகவானுடைய மகாவாக்கியம் என்ற வார்த்தை கூட சரியானது ஆகும். பகவானுடைய வாழ்க்கைச் சரித்திரமே குறையாகி விட்டால் பிறகு எல்லா சாஸ்திரங்களுமே குறையுள்ளதாக ஆகி விடும். தந்தை நாளுக்கு நாள் நல்ல நல்ல "பாயிண்ட்ஸ்" களை அளித்துக் கொண்டே இருக்கிறார் என்று பார்க்கப்படுகிறது. பகவான் ஞானக் கடல் ஆவார், மனித சிருஷ்டிக்கு விதை ரூபமாக உள்ளார் என்பதை முதன் முதலில் நிச்சயம் செய்விக்க வேண்டும். உயிருள்ள (சைதன்யமான) விதையில் எது பற்றிய ஞானம் இருக்கும்? அவசியம் விருட்சம் பற்றிய ஞானம் இருக்கும். எனவே தந்தை வந்து பிரம்மா மூலமாக ஞானத்தைப் புரிய வைக்கிறார். பிரம்மாகுமார் குமாரிகள் என்ற பெயர் நன்றாக உள்ளது. பிரஜாபிதா பிரம்மாவின் குமார் குமாரிகளோ ஏராளமாக உள்ளார்கள். இதில் குருட்டு நம்பிக்கையின் எந்த விஷயமும் கிடையாது. இதுவோ படைப்பு ஆகும் அல்லவா? பாபா, மம்மா அல்லது தந்தையும் நீயே தாயும் நீயே என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஜகதம்பா சரஸ்வதி பிரம்மாவின் மகள் ஆவார். இவரோ நடைமுறையில் பி.கே. ஆக இருக்கிறார். முந்தைய கல்பத்திலும் பிரம்மா மூலமாக புதிய சிருஷ்டியைப் படைத்திருந்தார். இப்பொழுது மீண்டும் அவசியம் பிரம்மா மூலமாகத் தான் படைப்பு படைக்கப்படும். சிருஷ்டியினுடைய முதல் இடை கடை பற்றிய ரகசியத்தை தந்தை தான் புரிய வைக்கிறார். எனவே இவருக்கு ஞானம் நிறைந்தவர் என்று கூறப்படுகிறது. விதையில் அவசியம் சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் இருக்கக் கூடும். அவருடைய படைப்பு சைதன்ய மனித சிருஷ்டி ஆகும். தந்தை இராஜயோகம் கூட கற்பிக்கிறார். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக பிராமணர்களுக்கு வந்து கற்பிக்கிறார். அதன் பின் அந்த பிராமணர்கள் தேவதை ஆகிறார்கள். இதை கேட்கும் நேரத்திலோ அனைவருக்கும் மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது. ஆனால் தேக அபிமானத்தின் காரணமாக தாரணை ஆவதில்லை. இங்கிருந்து வெளியே சென்று விட்டால் அவ்வளவு தான் முடிந்தது. அநேக விதமான தேக அபிமானம் உள்ளது. இதில் மிகுந்த உழைப்பு வேண்டும்.

உறக்கத்தை வென்றவர் ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். தேக அபிமானத்தை விடுங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். இரவு விழித்து நினைவு செய்ய வேண்டும். ஏனெனில் உங்கள் தலை மீது ஜன்ம ஜன்மாந்திரத்தின் விகர்மங்களின் சுமை நிறைய உள்ளது. அவை உங்களை தாரணை செய்ய விடுவ தில்லை. அப்பேர்ப்பட்ட கர்மங்கள் செய்யப் பட்டுள்ளன. அதன் காரணமாக ஆத்ம உணர்வுடையவராக ஆவதில்லை. நிறைய பொய் கூறுகிறார்கள். நாங்கள் 75 சதவிகிதம் நினைவில் இருக்கிறோம் என்று மிகவுமே பொய்யான சார்ட் எழுதி அனுப்புகிறார்கள். ஆனால் முடியாத விஷயம் என்று பாபா கூறுகிறார். நான் எவ்வளவு தான் நினைவு செய்ய முயற்சித்தாலும் மாயை மறக்கடித்து விடுகிறது என்று எல்லோரையும் விட முதல் நம்பரில் செய்பவரே கூறுகிறார். உண்மையான சார்ட் எழுத வேண்டும். பாபாவும் கூறுகிறார் அல்லவா? எனவே குழந்தைகளும் பின்பற்ற வேண்டும். பின்பற்றுவதில்லை என்றால் சார்ட் கூட அனுப்பு வதில்லை. புருஷார்த்தத்திற்காக (முயற்சி) நேரம் கிடைத்துள்ளது. இந்த தாரணை என்பது ஒன்றும் (சித்தி வீட்டிற்குச் செல்வது போல) சாதாரண விஷயம் அல்ல. இதில் களைப்படையக் கூடாது. ஒரு சிலருக்கு புரிந்து கொள்வதில் நேரம் பிடிக்கிறது. இன்று இல்லை என்றால் நாளை புரிந்து கொண்டு விடுவார்கள். யார் தேவி தேவதா தர்மத்தினராக இருந்து வேறு தர்மத்தில் மத மாற்றம் ஆகிச் சென்றிருப்பாரோ அவர் வந்து விடுவார் என்று பாபா கூறி இருக்கிறார். ஒரு நாள் ஆப்பிரிக்கர்கள் ஆகியோருடைய மகாநாடு கூட நடக்கும். பாரத கண்டத்தில் வந்து கொண்டே இருப்பார்கள். முன்பெல்லாம் ஒரு பொழுதும் வராமலிருந்தார்கள். இப்பொழுது மிகப் பெரியவர் கள் எல்லோரும் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஜெர்மனியின் இளவரசர் போன்றவர்கள் எல்லாம் ஒரு பொழுதும் வெளியில் வராமலிருப்பார்கள். நேபாள அரசர் ஒரு பொழுதும் புகை வண்டியைப் பார்த்ததே இல்லை. தனது எல்லைக்கு வெளியில் எங்கும் செல்ல அவருக்கு அனுமதி இருக்காது. போப் ஆண்டவர் கூட ஒரு பொழுதும் வெளியில் வரவே மாட்டார். இப்பொழுதெல்லாம் வருகிறார். எல்லோரும் வருவார்கள். ஏனெனில் இந்த பாரதம் அனைத்து தர்மத்தினர்களின் மிகவும் பெரியதிலும் பெரிய தீர்த்தமாகும். எனவே இந்த விளம்பரம் மிகவும் தீவிரமாக வெளிப்படும். நீங்கள் எல்லா தர்மத்தினருக்கும் கூற வேண்டும். அழைப்பு விடுக்க வேண்டும். பிறகும் யார் தேவி தேவதா தர்மத் தினராக இருந்து மத மாற்றம் செய்துள்ளார்களோ அவர்கள் தான் ஞானம் எடுப்பார்கள். இதில் அறிவு வேண்டும். புரிந்திருந்தது என்றால் அவசியம் சங்கொலி எழுப்ப வேண்டும். நாம் பிராமணர் இல்லையா? நாம் கீதை தான் கூற வேண்டும். மிகவும் சுலபமாகும். எல்லையில்லாத தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். அவரிடமிருந்து ஆஸ்தி பெறுவது நமது உரிமை ஆகும். அனைவருக்குமே தங்கள் பிறந்த வீடான முக்தி தாமத்திற்குச் செல்வதற்கான உரிமை உள்ளது. முக்தி மற்றும் ஜீவன் முக்தியின் உரிமை உள்ளது. ஜீவன் முக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டி உள்ளது. ஜீவன் பந்தனத்திலிருந்து விடுபட்டு சாந்தியில் செல்கிறார்கள். பிறகு மீண்டும் வரும் பொழுது ஜீவன் முக்தி அடைகிறார்கள். ஆனால் அனை வருக்கும் சத்யுகத்தில் ஜீவன் முக்தி கிடைப்பதில்லை. சத்யுகத்தில் தேவி தேவதைகள் ஜீவன் முக்தியில் இருந்தார்கள். பின்னால் வருபவர்கள் குறைவான சுகம், குறைவான துக்கம் அடைகிறார்கள். இந்த கணக்கு வழக்கு உள்ளது. எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இருந்த பாரதம் தான் எல்லாவற்றையும் விட ஏழையாக ஆகி விட்டுள்ளது. இந்த தேவி தேவதா தர்மம் மிகவுமே சுகம் அளிக்கக் கூடியது ஆகும் என்று தந்தையும் கூறுகிறார். இது ஏற்கனவே அமைக்கப்பட்டது ஆகும். எல்லோரும் அவரவர் சமயத்தில் அவரவர் பாகத்தை நடிக்கிறார்கள். ஹெவன்லி காட் ஃபாதர் தான் ஹெவென் (சொர்க்கம்) ஸ்தாபனை செய்கிறார். வேறு யாரும் செய்ய முடியாது. கிறிஸ்து வருவதற்கு மூன்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக உண்மையில் சொர்க்கம் இருந்தது. புதிய உலகம் இருந்தது என்று கூறுகிறார்கள். கிறிஸ்து அங்கு வருவாரா என்ன? அவர் தன்னுடைய நேரத்தில் தான் வருகிறார். பிறகு அவர் தன்னுடைய பாகத்தைத் திரும்ப நடிக்க வேண்டி உள்ளது. இவை எல்லாமே புத்தியில் பதியும் பொழுது தான் ஸ்ரீமத் படி நடக்க முடியும். எல்லோருடைய புத்தியும் ஒன்று போல இல்லை. ஸ்ரீமத்படி நடப்பதற் கான தைரியம் வேண்டும். பிறகு சிவபாபா நீங்கள் என்ன உணவூட்டுகிறீர்களோ என்ன அணிவிக் கிறீர்களோ.... பிரம்மா மற்றும் ஜகதம்பா மூலமாக. பிரம்மா மூலமாகத் தான் எல்லாமே செய்வார் அல்லவா? எனவே இருவருமே (கம்பைண்டு) இணைந்துள்ளார்கள். பிரம்மா மூலமாகத் தான் காரியம் செய்வார். சரீரமோ இரண்டும் சேர்ந்தாற் போல இல்லை. பாபா இரண்டு இணைந்த உடல்களைக் கூட பார்த்திருக்கிறார். ஆத்மாவோ இவர்களுடையதும் தனித்தனியானது ஆகும். இவருக்குள் பாபா பிரவேசம் செய்கிறார். அவரோ நாலேஜ் ஃபுல் ஆவார். எனவே ஞானத்தை யார் மூலம் கொடுக்க வேண்டும்? கிருஷ்ணரின் சரீரம் தனி ஆகும். இங்கோ பிரம்மா வேண்டும். பிராக்டிகலாக (நடைமுறையில்) எத்தனை பிரம்மா குமார் குமாரிகள் உள்ளார்கள். இது ஒன்றும் குருட்டு நம்பிக்கை அல்ல. தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பகவான் கற்பிக்கிறார். முந்தைய கல்பத்தில் யார் சுவீகாரம் செய்யப் பட்டார்களோ அவர்களே இப்பொழுதும் ஆகிறார்கள். வெளியில் அலுவலகங்களில் யாரும் தங்களை பி.கே. என்று கூற மாட்டார்கள். இது (குப்தமாக) மறைமுகமானதாக ஆகி விட்டது. சிவ பாபாவின் குழந்தைகளாகவோ இருக்கவே இருக்கிறார்கள். மற்றபடி படைப்பு புதிய படைப்பினுடையது படைக்கப்படுகிறது. பழையதிலிருந்து புதியதாக ஆக்குகிறார். ஆத்மாவில் துரு படியும் பொழுது பழையதாக ஆகி விடுகிறது. தங்கத்திலேயே கலப்படம் ஏற்பட்டு விடும் பொழுது அது பொய்யானதாக ஆகி விடுகிறது. ஆத்மா பொய்யானதாக ஆகி விடும் பொழுது சரீரம் கூட பொய்யானதாக ஆகி விடுகிறது. மீண்டும் உண்மையானதாக எப்படி ஆவது? பொய்யான பொருளை தூய்மைப் படுத்துவதற்காக நெருப்பில் போடுகிறார்கள். ஆக எவ்வளவு பெரிய விஷயம் ஆகிறது. இந்த பண்டிகை ஆகியவை கூட அனைத்தும் பாரதத் தினுடையது ஆகும். இவை யாருடைய பண்டிகை மற்றும் எப்பொழுதிலிருந்து கொண்டாடப் படுகிறது என்பதை யாரும் அறியாமல் உள்ளார்கள். ஞானத்தை மிகவும் குறைவாக எடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கடைசியில் போய் இராஜ்யம் கிடைக்கிறது என்றால் அதனால் என்ன பயன்? மிகவுமே குறைவான சுகம் ஆகியது அல்லவா? துக்கமோ மெல்ல மெல்ல ஆரம்ப மாகி விடுகிறது. எனவே நல்ல முறையில் புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். எவ்வளவு புதிய குழந்தைகள் புத்தி கூர்மை யுடையவர்களாக ஆகி விட்டுள்ளார்கள். பழையவர்கள் கவனம் கொடுப்பதில்லை, தேக அபிமானம் நிறைய உள்ளது. சேவை செய்பவர்கள் தான் மனதில் இடம் பெறுவார்கள். உள்ளொன்று வெளியில் ஒன்று என்று கூறப்படுகிறது அல்லவா? நல்ல நல்ல குழந்தைகளை பாபா உள்ளார்ந்த அன்பு செய்வார். ஒரு சிலர் வெளியில் நல்லவர்களாகவும் உள்ளுக்குள் மோசமாகவும் இருப்பார்கள். ஒரு சிலர் சேவை செய்வதில்லை. குருடர்களுக்கு கைத்தடி ஆவதில்லை. இப்பொழுது வாழ்வது - இறப்பது பற்றிய கேள்வி ஆகும். அமர புரியில் உயர்ந்த பதவியை அடைய வேண்டும். யார் யார் முந்தைய கல்பத்தில் புருஷார்த்தம் (முயற்சி) செய்து உயர்ந்த பதவி அடைந்தார்கள் என்பது தெரிய வருகிறது.. அவை எல்லாமே தென்படுகிறது. எந்த அளவு ஆத்ம உணர்வுடையவராக ஆகிறீர்களோ அந்த அளவு பாதுகாப்பாக நடந்து கொண்டிருப்பார்கள். தேக அபிமானம் தோற்கடித்து விடுகிறது. தந்தையோ கூறுவார் - ஸ்ரீமத்படி எந்த அளவு ஆன்மீக சேவையில் நடக்க முடியுமோ அவ்வளவு நல்லது. அனைவருக்கும் பாபா புரிய வைக்கிறார். படங்கள் மீது புரிய வைப்பது மிகவும் சுலபமாகும். எல்லோருமே பிரம்மா குமார் குமாரிகள் ஆவார்கள். சிவபாபா பெரிய பாபா ஆவார். பிறகு புதிய சிருஷ்டியைப் படைக்கிறார். மனிதனிலிருந்து தேவதையாக.. என்று பாடவும் செய்கிறார்கள். சீக்கிய தர்மத்தினர் கூட அந்த பகவானுக்கு மகிமை செய்கிறார்கள். குருநானக்கினுடைய வார்த்தைகள் மிகவும் நன்றாக உள்ளது. தலைவனை ஜபித்தீர்கள் என்றால் சுகம் கிடைக்கும். இது தான் சாரம். உண்மையான தலைவனை நினைவு செய்தீர்கள் என்றால் சுகம் அடைவீர்கள். அதாவது ஆஸ்தி கிடைக்கும். "ஏகோங்கார்".... என்றும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆத்மாவை எந்த எமனும் சாப்பிட முடியாது. ஆத்மா அசுத்தமாக ஆகி விடுகிறது. மற்றபடி அழிந்து போவதில்லை. எனவே அகால மூர்த்தி என்று கூறுகிறார்கள் "நான் அகால மூர்த்தி ஆவேன்". ஆத்மாக்கள் கூட அழிவற்றவை (அவினாஷி) ஆகும். ஆம், மற்றபடி புனர் ஜென்மத்தில் வருவார்கள். நான் ஒரே ரசனையில் இருக்கிறேன். நான் ஞானக் கடல் ஆவேன் (ரூப் பஸந்த்) - ஞானமும் யோகமும் உடையவனா வேன். எனவே இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டு புரிய வைக்க வேண்டும். குருடர்களுக்கு கைத்தடி ஆக வேண்டும் மறு வாழ்வு உடையவர் ஆக வேண்டும். பிறகு ஒரு பொழுதும் அகால மரணம் ஏற்படாது. நீங்கள் காலன் மீது வெற்றி அடைகிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஸ்ரீமத்படி ஆன்மீக சேவை செய்ய வேண்டும். குருடர்களுக்கு கைத்தடி ஆக வேண்டும். அவசியம் சங்கொலி எழுப்ப வேண்டும்.

2. ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும் என்றால் நினைவின் சார்ட் வைக்க வேண்டும். இரவு விழித்து முக்கியமாக நினைவு செய்ய வேண்டும். நினைவில் களைப்படையக் கூடாது.

வரதானம்:
சதா தனது சிரேஷ்ட கௌரவத்தில் நிலைத்திருந்து குழப்பங்களை நீக்கக்கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

நாம் எப்பொழுதும் தனது சிரேஷ்ட கௌரவத்தில் நிலைத்திருந்து மற்றவர்களின் குழப்பங்களை நீக்கக்கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் என்ற வரதானத்தை நினைவில் வைத்திருங்கள். பலவீனமானவன் அல்ல, சிரேஷ்ட கௌரவம் என்ற சிம்மாசனம். யார் அழிவற்ற சிம்மாசனத்தில் நிலைத்திருக்கிறார்களோ, பாபாவின் இதய சிம்மாசனத்தில் சிரேஷ்ட கௌரவத்தில் இருக்க கூடியவர்களாக இருக்கிறார்களோ, அவர்களின் கனவில் கூட ஒருபொழுதும் குழப்பம் ஏற்பட முடியாது. யார் எவ்வளவு தான் குழப்பங்களை ஏற்படுத்தினாலும், அவர்கள் தனது சிரேஷ்ட கௌரவத்தில் தான் நிலைத்திருப்பார்கள்.

சுலோகன்:
சதா தனது சுயமரியாதையில் இருந்தால் அனைவருடைய மரியாதையும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.