07.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! மனிதர்கள் சரீரத்தின் முன்னேற்றத்திற்காக கண்டுபிடிப்புகளை படைக்கிறார்கள், ஆத்மாவின் முன்னேற்றம் அல்லது உயர்வுக்கான சாதனத்தை பாபா தான் சொல்கின்றார் - இது பாபாவின் பொறுப்பாகும்.

 

கேள்வி:

குழந்தைகளுக்கு எப்போதும் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்க பாபா என்னென்ன ஸ்ரீமத் கொடுக்கின்றார்?

 

பதில்:

குழந்தைகளே! தங்களுடைய முன்னேற்றத்திற்காக 1. எப்போதும் நினைவு யாத்திரையில் இருங்கள். நினைவின் மூலம் தான் ஆத்மாவின் துரு நீங்கும். 2. ஒருபோதும் கடந்து போனவற்றை நினைவு செய்யாதீர்கள் மற்றும் எதிர்காலத்திற்கான ஆசை எதுவும் வைக்காதீர்கள். 3. சரீர நிர்வாகத்திற்காக கர்மம் செய்யுங்கள் ஆனால் கிடைக்கின்ற நேரத்தை வீணாக்காதீர்கள், பாபாவின் நினைவில் நேரத்தை பயனுள்ளதாக்குங்கள். 4. குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் ஈஸ்வரிய சேவை செய்தீர்கள் என்றால் உங்களுடைய முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகள் அல்லது ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார், ஆத்மாவின் பொறுப்பு பரமாத்மாவிடம் இருக்கிறது என்று மனிதர்கள் கூறுகிறார்கள். அவர் தான் அனைத்து ஆத்மாக்களின் முன்னேற்றம் மற்றும் மன அமைதிக்கான வழியைச் சொல்ல முடியும். ஆத்மா இருபுருவங்களுக்கு இடையில் அனைத்திலும் தனிப்பட்டதாக இருக்கிறது. வியாதி என்பது குறிப்பாக சரீரத்திற்குத் தான் வருகிறது. இங்கே இருபுருவங்களுக்கு இடையில் வருவதில்லை. தலையில் வலி ஏற்படலாம், ஆனால் ஆத்மாவின் சிம்மாசனத்தில் எந்த கஷ்டமும் ஏற்படாது. ஏனென்றால் அந்த சிம்மாசனத்தில் ஆத்மா வீற்றிருக்கிறது. ஆத்மாவின் உயர்வு அல்லது அமைதியைக் கொடுக்கக் கூடிய டாக்டர் ஒரு பரமபிதாவே ஆவார். ஆத்மாவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டால் தான் ஆரோக்கியமும் செல்வமும் கிடைக்கும். சரீரத்திற்கு எவ்வளவு தான் செய்தாலும் அதன் மூலம் எந்த முன்னேற்றமும் நடக்காது. சரீரத்திற்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆத்மாவிற்கு ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது. மற்றவர்கள் அனைவரும் உலகத்தில் சரீரத்தின் உயர்வுக்காக நிறைய கண்டுபிடிப்புகளைப் படைக்கிறார்கள், மற்றபடி ஆத்மாவின் முன்னேற்றம் அல்லது உயர்வு ஏற்படுவதில்லை. அதை பாபா தான் கற்றுக் கொடுக்கின்றார். அனைத்தும் ஆத்மாவில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது. ஆத்மா தான் 16 கலை சம்பூரணமாக ஆகிறது. பிறகு ஆத்மா தான் முற்றிலும் கலையற்றதாக ஆகி விடுகிறது. 16 கலையுடையதாக ஆகிறது, பிறகு கலை குறைந்ததாக எப்படி ஆகிறது என்பதையும் பாபா தான் புரிய வைக்கின்றார். சத்யுகத்தில் உங்களுக்கு அதிக சுகம் இருந்தது என்று பாபா கூறுகின்றார். ஆத்மா ஏறும் கலையில் இருந்தது. மற்ற சத்சங்கங்களில் ஆத்மாவிற்கு எப்படி உயர்வு ஏற்படும் என்ற விஷயம் புரிய வைக்கப் படுவதில்லை. அவர்கள் உலகீய போதையில் இருக்கிறார்கள். தேக அபிமானம் இருக்கிறது, பாபா உங்களை ஆத்ம-அபிமானியாக மாற்றுகின்றார். தமோபிரதானமாக ஆகியிருக்கும் ஆத்மாவை சதோபிரதானமாக மாற்ற வேண்டும். இங்கே அனைத்தும் ஆன்மீக விஷயங்களாகும். அங்கே சரீரத்தின் விஷயங்களாகும். டாக்டர்கள் ஒரு இதயத்தை எடுத்து விட்டு வேறொன்றை வைக்கிறார்கள். அவர்களுக்கு ஆத்மாவோடு எந்த சம்மந்தமும் இல்லை. ஆத்மா இருபுருவங்களுக்கு இடையில் இருக்கிறது, அதற்கு ஆபரேஷன் போன்ற எதுவும் நடக்காது.

 

ஆத்மாவின் முன்னேற்றம் ஒரே ஒரு முறை தான் நடக்கிறது என்பதை பாபா புரிய வைக்கின்றார். ஆத்மா எப்போது தமோபிரதானம் ஆகி விடுகிறதோ அப்போது ஆத்மாவின் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பாபா வருகின்றார். அவர் இல்லாமல் எந்தவொரு ஆத்மாவிற்கும் முன்னேறும் கலை நடக்க முடியாது. இந்த மோசமான தமோபிரதான ஆத்மாக்கள் என்னிடம் வர முடியாது என்று பாபா கூறுகின்றார். உங்களிடம் யாராவது வரும்போது அமைதி எப்படி கிடைக்கும் அல்லது எப்படி முன்னேற்றம் ஏற்படும் என்று கேட்கிறார்கள்? ஆனால் முன்னேற்றத்திற்குப் பிறகு நாம் எங்கு செல்வோம், என்ன நடக்கும்? என்பதை தெரிந்திருக்கவில்லை. தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்குங்கள், ஜீவன்முக்திக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அழைக்கிறார்கள். என்றால் ஆத்மாக்களைத் தான் அழைத்துச் செல்வார் அல்லவா! சரீரம் இங்கேயே அழிந்து விடும். ஆனால் இந்த விசயம் யாருடைய புத்தியிலும் இல்லை. இது ஈஸ்வரிய வழியாகும். மற்றவை அனைத்தும் மனிதர்களுடைய வழியாகும். ஈஸ்வரிய வழிப்படி ஒரேயடியாக வானளவிற்கு உயர்ந்து விடுகிறீர்கள் - சாந்திதாமம், சுகதாமத்திற்கு. பிறகு நாடகத்தின்படி கீழே இறங்கத்தான் வேண்டும். ஆத்மாவின் முன்னேற்றத்திற்கு பாபாவைத் தவிர வேறு எந்த டாக்டரும் இல்லை. டாக்டர் உங்களை அவருக்குச் சமமாக மாற்றுகின்றார். சிலர் நிறைய பேரை நன்கு முன்னேற்று கிறார்கள், சிலர் மத்திமமாகவும், சிலர் மூன்றாம் தரத்தில் மற்றவர்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆத்மாக்களின் முன்னேற்றத்திற்கு பாபா தான் பொறுப்பாவார். உலகத்தில் யாருக்கும் இது தெரிவதில்லை. இந்த சாதுக்கள் போன்றவர்களையும் கடைத்தேற்ற நான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். முதலில் ஆத்மா வரும்போது தூய்மையாகத்தான் வருகிறது. இப்போது பாபா அனைவரையும் முன்னேற்றுவதற்கு வந்துள்ளார். வரிசைகிரமமான முயற்சியின்படி உங்களுடைய முன்னேற்றம் எப்படி ஏற்பட்டுள்ளது என்பதை பாருங்கள். அங்கே உங்களுடைய சரீரம் கூட மிகவும் முதல்தரமானதாக இருக்கும். பாபா அழிவற்ற டாக்டர் ஆவார். அவர் தான் வந்து உங்களுடைய முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றார். அப்போது நீங்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த தங்களுடைய இனிமையான வீட்டிற்குச் சென்று விடுவீர்கள். அவர்கள் நிலவிற்குச் செல்கிறார்கள். அழிவற்ற டாக்டர் உங்களை முன்னேற்றுவதற்காக என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும் என்று கூறுகின்றார். பாபா உலகத்திலுள்ள குழந்தைகளை விடுவிக்கின்றார். நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்லும்போது மற்றவர்கள் சாந்திதாமத்தில் இருப்பார்கள். பாபா எவ்வளவு அதிசயமான காரியத்தைச் செய்கின்றார். பாபாவினுடைய காரியம் அதிசயமானதாகும். ஆகையினால் தான் இறைவா! உங்களுடைய வழியும் நிலையும் தனிப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆத்மாவில் தான் வழி இருக்கிறது, ஆத்மா தனியாகி விட்டால் வழி கிடைக்க முடியாது. ஈஸ்வரிய வழிப்படி ஏறும் கலையும், மனித வழிப்படி இறங்கும் கலையும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. சொர்க்கம் உருவாகி விட்டது என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இன்னும் போகப்போக இது சொர்க்கமா அல்லது நரகமா என்பது தெரிய வரும். மொழியின் மீது எவ்வளவு பிரச்சனை செய்கிறார்கள். துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா. சொர்க்கத்தில் துக்கம் எற்படுவதே இல்லை. பூகம்பமும் நடக்காது. இப்போது பழைய உலகம் வினாசம் ஆக வேண்டும், பிறகு சொர்க்கமாக ஆகி விடும். பிறகு அரைகல்பத்திற்கு அதுவும் மறைந்து விடுகிறது. துவாரகை கடலுக்கடியில் சென்று விட்டது என்று கூறுகிறார்கள். தங்கத்தால் ஆன பொருட்கள் கீழே புதைந்து விட்டது. அப்படியென்றால் பூகம்பத்தின் மூலம் தான் கீழே சென்றிருக்கும். கடலைத் தோண்டியா எடுக்க முடியும். பூமியைத் தோண்டி அங்கிருந்து பொருட்களை எடுக்கிறார்கள்.

 

நான் அனைவருக்கும் உபகாரம் செய்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். பதிலாக எனக்கு அனைவரும் அபகாரம் செய்கிறார்கள், நிந்தனை செய்கிறார்கள். நான் அபகாரம் செய்பவர்களுக்கும் உபகாரம் செய்கின்றேன், எனும்போது கண்டிப்பாக எனக்கு மகிமை ஏற்பட வேண்டும். பக்தியில் பாருங்கள் எவ்வளவு மரியாதை இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்களும் கூட பாபாவிற்கு எவ்வளவு மகிமை செய்கிறீர்கள். படத்தில் 32 குணங்கள் காட்டப் பட்டுள்ளன. இப்போது நீங்களும் கூட பாபாவைப் போல் குணவான்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் எனும்போது எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். நேரத்தை வீணக்கக் கூடாது. மிகவும் உயர்ந்த தந்தை கற்பிக்கின்றார் என்றால் கண்டிப்பாக தினமும் படிக்க வேண்டும். இவர் அழிவற்ற தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார், கடைசியில் வருபவர்கள் பழையவர்களை விடவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது பாபாவின் மூலம் முழு உலகத்தின் முன்னேற்றம் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரையும் குணவானாக மாற்றக் கூடியவர் பாபா ஆவார், அனைவருக்கும் கொடுக்கக் கூடியவர். மற்றவர்கள் அனைவரும் வாங்குகிறார்கள். வரிசைக்கிரமமான முயற்சியின்படி வம்சம் உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லையற்ற தந்தை எவ்வளவு இனிமையானவர் மற்றும் எவ்வளவு அன்பானவராக இருக்கின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் மூலம் அனைவருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. மற்றவர்கள் அனைவருடையதும் ஏணியில் இறங்கவே வேண்டும். பாபாவினுடைய காரியம் அதிசயமானதாகும். சாப்பிடுங்கள் அனைத்தும் செய்யுங்கள் பாபா வின் குணங்களை மட்டும் பாடுங்கள். பாபாவின் நினைவில் இருப்பதினால் உணவு சாப்பிட முடியாது என்பது கிடையாது. இரவில் நிறைய நேரம் கிடைக்கிறது. 8 மணி நேரம் இருக்கிறது. குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் இந்த (ஈஸ்வரிய) அரசாங்கத்தின் சேவை செய்யுங்கள். யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு ஆத்மாவின் முன்னேற்றத்திற்கான வழியைச் சொல்லுங்கள். ஜீவன்முக்தி என்றால் உலகத்திற்கு எஜமானன் மற்றும் முக்தி என்றால் பிரம்மாண்டத்திற்கு எஜமானன் என்பதாகும். இதை புரியவைப்பது எளிதல்லவா. ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் என்ன முயற்சி செய்ய முடியும்.

 

பாபாவின் நினைவு இல்லாமல் ஆத்மாவின் துரு நீங்காது என்று பாபா புரிய வைக்கின்றார். என்னதான் முழு நாளும் ஞானத்தை சொன்னாலும் ஆத்மாவின் முன்னேற்றத்திற்கான வழி நினைவைத் தவிர வேறு எதுவும் இல்லை. பாபா தினம்-தினம் மிகவும் அன்போடு புரிய வைக்கின்றார் ஆனால் தங்களுடைய முன்னேற்றம் ஏற்படுகிறதா இல்லையா என்பதை ஒவ்வொருவரும் அவர்களே புரிந்து கொள்ள முடியும். இதை நீங்கள் மட்டும் கேட்கவில்லை அனைத்து செண்டர்களை சேர்ந்த குழந்தைகளும் கேட்கிறார்கள். இந்த டேப் ரிகார்டர் வைக்கப்பட்டுள்ளது. இது கூட சேவைக்காக தன்னிடத்தில் சப்தத்தை நிறைத்துக் கொண்டு செல்கிறது. இது மிகவும் நல்ல சேவை செய்கிறது. நாம் சிவபாபாவின் முரளியை கேட்கின்றோம் என்று குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். உங்களின் மூலம் கேட்பது மறைமுகமாகி விடுகிறது, பிறகு நேரடியாக கேட்பதற்கு இங்கே வருகிறார்கள். பிறகு பாபா பிரம்மாவின் கமலவாயின் மூலம் சொல்கின்றார் அல்லது வாயின் மூலம் ஞான அமிர்தத்தை கொடுக்கின்றார். இந்த சமயத்தில் உலகம் தமோபிரதானமாக ஆகி விட்டது எனும்போது அதன் மீது ஞான மழை பொழிய வேண்டும். அந்த தண்ணீர் மழை நிறைய பொழிகிறது. அந்த நீரின் மூலம் யாரும் தூய்மையாக ஆக முடியாது. இவையனைத்தும் ஞானத்தின் விஷயமாகும்.

 

பாபா கூறுகின்றார், இப்போது விழித்துக் கொள்ளுங்கள், நான் உங்களை சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். ஆத்மாவிற்கும் இதில் தான் முன்னேற்றம் இருக்கிறது, மற்றவை அனைத்தும் சரீரத்தின் விஷயங்களாகும். நீங்கள் மட்டும் தான் ஆன்மீக விசயங்களைக் கேட்கின்றீர்கள். பதம்பதியாகவும் பாக்கியசாலிகளாகவும் நீங்கள் தான் ஆகின்றீர்கள். பாபா ஏழைப்பங்காளன் ஆவார். ஏழைகள் தான் கேட்கிறார்கள், ஆகையினால் தான் பாபா கூறுகின்றார், அகலிகை போன்று சபிக்கப்பட்டவர்கள், விலைமாதர்கள் போன்றவர்களுக்கும் புரியவையுங்கள். சத்யுகத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடப்பதில்லை. அது எல்லையற்ற சிவாலயமாகும். இப்போது எல்லையற்ற வேஷாலயமாகும் (விகார உலகம்), முற்றிலும் தமோபிரதானமாக இருக்கிறது. இதில் அதிக நேரம் இல்லை. இப்போது இந்த தூய்மையற்ற உலகம் மாற வேண்டும். பாரதத்தில் இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யம் நடக்கிறது. இப்போது அனேக தர்மங்களாகி விட்டன. ஆகையினால் தான் அசாந்தி ஏற்பட்டு விடுகிறது. சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது இன்னும் அதிகமாக சண்டை நடக்கும். மிகவும் கடுமையான சண்டை நடந்து பிறகு நின்று விடும். ஏனென்றால், இராஜ்யமும் ஸ்தாபனை ஆக வேண்டும், கர்மாதீத் நிலையும் ஏற்பட வேண்டும். இப்போது யாரும் அப்படி சொல்ல முடியாது. அந்த நிலை வந்து விட்டால் பிறகு படிப்பு முடிந்து விடும். பிறகு தங்களுடைய முயற்சியின்படி மாறி விடுவார்கள். இந்த வைக்கோல்போருக்கு தீ வைக்கப்பட வேண்டும். உடனே வினாசம் நடந்து விடும். அதனை கொலை விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. அனைவரும் இறந்து விடுவார்கள். இரத்த ஆறு ஓடும். பிறகு பாலாறும் நெய்யாறும் ஓடும். ஐயோ என்ற கூக்குரலிலிருந்து வெற்றி முழக்கம் ஏற்படும். மற்றவர்கள் அனைவரும் அஞ்ஞான உறக்கத்தில் உறங்கி-உறங்கியே மடிந்து விடுவார்கள். மிகவும் யுக்தியோடு ஸ்தாபனை நடக்கிறது. தடையும் ஏற்படும், கொடுமைகளும் நடக்கும். இப்போது தாய்மார்களின் மூலம் சொர்க்கத்தின் நுழைவாயில் திறக்கிறது. அதிகமாக ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் தாய்மார்கள் பிறவி அளிக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு ஆண்களின் மூலம் அதிக வளர்ச்சி கிடைக்கிறது. சொர்க்கத்திற்கு அனைவரும் வரிசைக்கிரமமாக செல்வார்கள், சிலர் இரண்டு பிறவிகள் ஆணாகவும் ஆகலாம், நாடகத்தில் என்ன கணக்கு-வழக்கு பதிவாகியிருக்கிறதோ அது நடக்கிறது. ஆத்மாவிற்கு உயர்வு ஏற்படுவதின் மூலம் எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது. சிலர் ஒரேயடியாக உயர்ந்தவர்களாக ஆகி விடுகிறார்கள், சிலர் முற்றிலும் கீழானவர்களாக ஆகி விடுகிறார்கள். ராஜா எங்கே பிரஜை எங்கே!

 

இப்போது முயற்சி செய்யுங்கள் என்று இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு பாபா புரிய வைக்கின்றார். யோகத்தின் மூலம் தூய்மை ஆகுங்கள். அப்போது தான் தாரணை ஆகும். குறிக்கோள் மிகவும் உயர்ந்ததாகும். தங்களை ஆத்மா என்று புரிந்து மிகவும் அன்போடு பாபாவை நினைவு செய்ய வேண்டும். ஆத்மாவிற்கு பரமாத்மாவோடு அன்பு இருக்கிறது அல்லவா? இது ஆன்மீக அன்பாகும், இதன் மூலம் ஆத்மாவிற்கு முன்னேற்றம் ஏற்படுகிறது. சரீர அன்பின் மூலம் விழுந்து விடுகிறார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை எனும்போது வெளியேறி விடுகிறார்கள். யக்ஞத்தை மிகவும் பாதுகாக்க வேண்டும். தாய்மார்களின் ஒவ்வொரு பைசாவின் மூலம் யக்ஞத்தின் சேவை நடந்து கொண்டிருக்கிறது. இங்கே ஏழைகள் தான் செல்வந்தர்களாகிறார்கள். அனைத்தும் படிப்பின் மீது தான் ஆதாரப்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் சதாகாலத்திற்கும் சுமங்கலிகளாக ஆகின்றீர்கள் - இந்த உணர்வு அனைவருக்கும் வருகிறது. மாலையின் மணியாக ஆகக்கூடியவர்களுக்கு எவ்வளவு நல்ல உணர்வு வேண்டும். சிவபாபாவை நினைவு செய்து கொண்டே, சேவை செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அதிக முன்னேற்றம் ஏற்படும். சிவபாபாவின் சேவையில் சரீரத்தை கூட பலியிட வேண்டும். முழு நாளும் போதை இருக்க வேண்டும் - இது ஒன்றும் சித்தி வீடு போல் கிடையாது. நாம் நமக்கு எவ்வளவு முன்னேற்றம் செய்கின்றோம் என்று பார்க்க வேண்டும். கடந்து போனவற்றை நினைவு செய்யாதீர்கள் என்று பாபா கூறுகின்றார். எதிர்காலைத்தைப் பற்றிய ஆசை எதுவும் வைக்காதீர்கள். சரீர நிர்வாகத்திற்காக கர்மம் செய்யத் தான் வேண்டும். கிடைக்கின்ற நேரத்தில் பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால், விகர்மங்கள் வினாசம் ஆகும். பாபா அடிமைப் போன்ற மாதர்களுக்கும் புரிய வைக்கின்றார், நீங்கள் தங்களுடைய கணவருக்கு மிகவும் பணிவு மற்றும் அன்போடு புரிய வைக்க வேண்டும், யாராவது அடித்தால் அவர்கள் மீது மலர் அபிஷேகம் செய்யுங்கள். தங்களை பாதுகாத்துக் கொள்ள மிகுந்த யுக்தி வேண்டும். கண்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஒருபோதும் ஆடக்கூடாது. இதைப்பற்றி அங்கதனுடைய உதாரணமும் இருக்கிறது, முற்றிலும் அசையாதவராக இருந்தார். நீங்கள் அனைவரும் மகாவீரர்களாவீர்கள், எதுவெல்லாம் கடந்ததோ அவற்றை நினைவு செய்யக் கூடாது. எப்போதும் புன்சிரிப்போடு இருக்க வேண்டும். நாடகம் என்பதின் மீது அசையாது இருக்க வேண்டும். பாபா அவரே கூறுகின்றார், நானும் கூட நாடகத்தின் கட்டுக்குள் கட்டுபட்டிருக்கின்றேன். மற்றபடி வேறு எந்த விஷயமும் இல்லை. சுயதரிசன சக்கரத்தின் மூலம் கொன்றார் என்று கிருஷ்ணரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இவையனைத்தும் கதைகளாகும். பாபா ஹிம்சை செய்ய முடியாது. இவர் தந்தை மற்றும் டீச்சராக இருக்கின்றார், கொல்வதற்கான விசயம் கிடையாது. இந்த விஷயங்கள் அனைத்தும் இந்த சமயத்தினுடையதாகும். ஒருபுறம் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள், மறுபுறம் நீங்கள், யாருக்கு வர வேண்டுமோ அவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். கல்பத்திற்கு முன் போல பதவியை அடைந்து கொண்டே இருப்பார்கள். இதில் அற்புதம் எதுவும் கிடையாது. பாபா இரக்கமனமுடையவர், துக்கத்தை போக்கி சுகத்தை வழங்குபவர், பிறகு எப்படி துக்கம் அளிப்பார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் ஈஸ்வரிய அரசாங்கத்தின் சேவை செய்து தங்களுடைய நேரத்தை பயனுள்ளதாக்க வேண்டும். பாபாவைப் போல குணவானாக ஆக வேண்டும்.

 

2) எது கடந்ததோ அதை நினைவு செய்யக் கூடாது. கடந்தவற்றை கடந்து (மறந்து) விட்டு எப்போதும் புன்முறுவலுடன் இருக்க வேண்டும். நாடகம் என்பதில் அசையாமல் உறுதியாக இருக்க வேண்டும்.

 

வரதானம் :

வெற்றி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்ற போதையில் இருந்து பாபாவின் பல கோடி மடங்கு உதவியை அடையக் கூடியவராகி மாயாஜீத் ஆகுக.

 

பாபாவின் பலகோடி மடங்கு உதவிக்கு பாத்திரமான குழந்தைகள் மாயா போரிடும் போது உன்னுடைய வேலை வருவது எங்ளுடைய வேலை வெற்றி அடைவது என சவால் விடுகிறார்கள். அவர்கள் மாயாவின் சிங்க ரூபத்தை எறும்பு என நினைக்கிறார்கள். ஏனென்றால் இந்த மாயையின் இராஜ்ஜியம் இப்போது முடியப்போகிறது. பலமுறை வெற்றி அடைந்த ஆத்மாக்களாகிய நமது வெற்றி 100 சதவீதம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிச்சயிக்கப்பட்ட போதை பாபாவின் பல கோடி மடங்கு உதவியை அடையச் செய்கிறது. இந்த போதையினால் எளிதாக மாயாவை வெற்றி அடைகிறீர்கள்.

 

சுலோகன்:

எண்ணங்களின் சக்தியை சேமித்து தனக்காக அல்லது உலகிற்காக பயன்படுத்துங்கள்.

 

பிரம்மா பாபாவிற்கு சமமாக மாறுவதற்கான விஷேச முயற்சி

 

பிரம்மா பாபாவிற்கு சமமாக தங்களின் இந்த கண்களால் ஆன்மீக தன்மையின் அனுபவத்தை செய்வியுங்கள். நடத்தை பாபாவின் சரித்திரத்தை சாட்சாத்காரம் செய்விக்கட்டும். புருவ மத்தியானது(மஸ்தக்) மஸ்தக் மணியை சாட்சாத்காரம் செய்விக்கட்டும். இந்த அவ்யக்த முகம் தெய்வீக அலௌகீக நிலையை பிரத்யக்ஷ் ரூபமாக காண்பிக்கட்டும். இதற்காக உள்நோக்கு பார்வை, அலௌகீக மற்றும் ஆன்மீக நிலையில் சதா காலம் இருப்பதற்கு பயிற்சி செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி