07.01.2021    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இந்த பாரதம் சொர்க்கமாக இருந்தபோது நீங்கள் மிகுந்த வெளிச்சத்தில் இருந்தீர்கள், இப்போது காரிருளாக உள்ளது, மீண்டும் வெளிச்சத்திற்குச் செல்லுங்கள்.

 

கேள்வி:

தந்தை தம் குழந்தைகளுக்கு எந்த ஒரு கதையைச் சொல்வதற்காக வந்துள்ளார்?

 

பதில்:

பாபா சொல்கிறார் - இனிமையான குழந்தைகளே, நான் உங்களுக்கு 84 பிறவிகளின் கதையைச் சொல்கிறேன். நீங்கள் முதன் முதல் பிறவியில் இருந்தபோது ஒரே ஒரு தெய்வீக தர்மம் மட்டும் இருந்தது, பிறகு நீங்கள்தான் இரண்டு யுகங்களுக்குப் பிறகு பெரிய பெரிய கோவில்களை உருவாக்கினீர்கள். பக்தியைத் தொடங்கினீர்கள். இப்போது இது உங்களுடைய கடைசியிலும் கடைசி பிறவியாகும். துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே . . . என நீங்கள் கூப்பிட்டீர்கள். இப்போது நான் வந்துள்ளேன்.

 

பாடல்: இன்று இருளில் இருக்கிறான் மனிதன். . .

 

ஓம் சாந்தி.

இப்போது இது கலியுக உலகமாக உள்ளது, அனைவரும் காரிருளில் மூழ்கியுள்ளனர் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முன்னர் பாரதம் சொர்க்கமாக இருந்த போது வெளிச்சத்தில் இருந்தீர்கள், இப்போது தன்னை இந்து என சொல்லிக்கொள்ளும் இதே பாரதவாசிகள் உண்மையில் தேவி தேவதைகளாக இருந்தனர். பாரதத்தில் வேறு எந்த தர்மமும் இல்லாத சமயத்தில் சொர்க்கவாசிகள் இருந்தனர். ஒரே ஒரு தர்மம் இருந்தது. சொர்க்கம், வைகுண்டம், மலர்த் தோட்டம், ஹெவன் - இவையனைத்தும் பாரதத்தின் பெயர்களாக இருந்தன. பாரதம் தூய்மையாகவும் பழமையானதாகவும் செல்வமிக்கதாகவும் இருந்தது. இப்போது பாரதம் ஏழையாக உள்ளது ஏனென்றால் இப்போது கலியுகமாக இருக்கிறது. நாம் காரிருளில் இருக்கிறோம் என நீங்கள் அறிவீர்கள். சொர்க்கத்தில் இருந்தபோது வெளிச்சத்தில் இருந்தோம். சொர்க்கத்தின் ராஜ ராஜேஸ்வரன், ராஜ ராஜேஸ்வரியாக ஸ்ரீ லட்சுமி நாராயணர் இருந்தனர். அது சுகதாமம் எனப்படுகிறது. தந்தையிடமிருந்துதான் நீங்கள் சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும். அது ஜீவன் முக்தி எனப்படுகிறது. இப்போது அனைவரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளனர். குறிப்பாக பாரதமும், பொதுவாக முழு உலகமும் இராவணனின் சிறையில், சோகவனத்தில் உள்ளனர். இராவணன் இலங்கையில் மட்டும் இருந்தான், இராமன் பாரதத்தில் இருந்தார், இராவணன் வந்து சீதையைத் கடத்தினான் என்பதல்ல. இவையனைத்தும் கட்டுக் கதைகளாகும். கீதை முக்கிய மானதாகும், அனைத்து சாஸ்திரங்களிலும் உயர்ந்தது, ஸ்ரீமத் அதாவது பகவானால் பாரதத்தில் சொல்லப்பட்டது. மனிதர்கள் யாருக்கும் சத்கதியை கொடுக்க முடியாது. சத்யுகத்தில் ஜீவன் முக்தியான தேவி தேவதைகள் இருந்தனர், அவர்கள் இந்த ஆஸ்தியை கலியுகத்தின் இறுதியில் அடைந்தனர். பாரதவாசிகளுக்கு இது தெரியாது, எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. சாஸ்திரங்களில் இருப்பது பக்தி மார்க்கத்தின் ஞானம். சத்கதியின் மார்க்கத்தின் ஞானம் மனிதர்களிடம் அறவே கிடையாது. அனைவரும் பக்தியைக் கற்றுக் கொடுப்பவர்கள். சாஸ்திரம் படியுங்கள், தான புண்ணியங்கள் செய்யுங்கள் என சொல்வார்கள். இந்த பக்தி துவாபரத்தில் இருந்து நடந்து வருகிறது. சத்யுகம் மற்றும் திரேதா யுகங்களில் ஞானத்தின் பலன் இருக்கும். அங்கும் கூட இந்த ஞானம் இருக்கும் என்பதல்ல. பாரதத்திற்கு இந்த ஆஸ்தி இருந்தபோது அது தந்தையிடமிருந்து சங்கமயுகத்தில்தான் கிடைத்திருந்தது. அது மீண்டும் இப்போது உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. பாரதவாசிகள் நரகவாசிகளாக எல்லையற்ற துக்கம் மிக்கவர்களாக ஆகி விடும்போது கூப்பிடுகின்றனர் - ஓ பதித பாவனா, துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே. . . யாருடைய துக்கத்தை? அனைவருடையதும். ஏனென்றால் குறிப்பாக பாரதம், பொதுவாக அனைத்து உலகம் என அனைவருக்குள்ளும் 5 விகாரங்கள் இருக்கின்றன. தந்தை பதித பாவனர். நான் கல்பம் தோறும், கல்பத்தின் சங்கம யுகத்தில் வருகிறேன் என தந்தை கூறுகிறார். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் நானே. அகலிகைகள், விலை மாதர்கள் மற்றும் குருமார்கள் என அனைவரையும் நான் தான் முன்னேற்ற வேண்டியுள்ளது ஏனென்றால் இது தூய்மையற்ற உலகமாக இருக்கிறது. சத்யுகம் தூய்மையான உலகம் என சொல்லப்படுகிறது. பாரதத்தில் இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இவர்கள் சொர்க்கத்தின் எஜமானாக இருந்தனர் என்பது பாரதவாசிகளுக்குத் தெரியாது. தூய்மையற்ற கண்டம் என்றால் பொய்யான கண்டம், தூய்மையான கண்டம் என்றால் உண்மையான கண்டம். பாரதம் தூய்மையான கண்டமாக இருந்தது, இந்த பாரதம் அழிவற்ற கண்டமாகும், இது ஒருபோதும் அழியாது. இவர்களின் (லட்சுமி நாராயணரின்) இராஜ்யம் இருந்த போது வேறு எந்த கண்டமும் இருந்ததில்லை. அவர்கள் அனைவரும் பின்னால் வருகின்றனர். மனிதர்கள் ஒரு கல்பம் இலட்சக்கணக்கான வருடங்கள் கொண்டது என எழுதி விட்டனர். கல்பத்தின் ஆயுள் 5 ஆயிரம் வருடங்களாகும் என தந்தை சொல்கிறார். அவர்கள் பிறகு மனிதர்கள் 84 லட்சம் பிறவிகள் எடுக்கின்றனர் என சொல்லி விடுகின்றனர். மனிதனை நாய், பூனை, கழுதை என எல்லாமாக ஆக்கி விட்டனர். ஆனால் நாய், பூனையின் பிறவிகள் தனிப்பட்டதாகும், 84 லட்சம் விதமான உயிரினங்கள் உள்ளன. மனித இனம் ஒன்றுதான். அவர்களுடையதுதான் 84 பிறவிகள் ஆகும். பாரதவாசிகள் தமது தர்மத்தை நாடகத்தின்படி மறந்து விட்டனர் என தந்தை சொல்கிறார். கலியுகத்தின் கடைசியில் முற்றிலும் பதிதமாக (தூய்மையற்றவர்களாக) ஆகி விட்டனர். பிறகு தந்தை சங்கமயுகத்தில் வந்து தூய்மையாக்குகிறார். அது துக்க தாமம் எனப்படுகிறது. மீண்டும் பாரதம் சுகதாமமாக ஆகப் போகிறது. தந்தை சொல்கிறார் - ஓ குழந்தைகளே, பாரதவாசிகளாகிய நீங்கள் சொர்க்க வாசிகளாக இருந்தீர்கள், பிறகு நீங்கள் 84 பிறவிகளின் ஏணியில் இறங்குகிறீர்கள். சதோவிலிருந்து ரஜோ-தமோ நிலைகளில் கண்டிப்பாக வரவேண்டும். தேவதைகளாகிய உங்களைப் போல செல்வந்தர்கள், எப்போதும் மகிழ்ச்சி மிக்கவர்கள், எப்போதும் ஆரோக்கியம், செல்வம் நிறைந்தவர்கள் வேறு யாருமில்லை. பாரதம் எவ்வளவு செல்வம் மிக்கதாக இருந்தது, வைர வைடூரியங்கள் கற்கள் போல் நிறைந்திருந்தன. இரண்டு யுகங்களுக்குப் பிறகு பக்தி மார்க்கத்தில் இவ்வளவு பெரிய பெரிய கோவில்கள் கட்டுகின்றனர். அதுவும் எவ்வளவு பெரிய கோவில்களை கட்டினர். சோமநாத் கோவில் பெரியதிலும் பெரியதானதாக இருந்தது. வெறும் ஒரு கோவில் மட்டும் இருக்காது அல்லவா? மேலும் இராஜாக்களின் கோவில்கள் கூட இருந்தன. எவ்வளவு கொள்ளையடித்துச் சென்றனர். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டுகிறார். உங்களை எவ்வளவு செல்வந்தர்களாக ஆக்கியிருந்தேன். நீங்கள் அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்களாக, 16 கலைகளும் நிரம்பியவர்களாக இருந்தீர்கள், மகாராஜா, மகாராணி போல. அவர்களை பகவான் - பகவதி என சொல்லலாம். ஆனால் தந்தை புரிய வைத்துள்ளார் - பகவான் ஒருவர், அவர் தான் தந்தை ஆவார். வெறுமனே ஈஸ்வரன் என சொன்னால் கூட அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை என்ற நினைவு வருவதில்லை. தந்தை வந்து கதை சொல்கிறார். இப்போது உங்களுடையது பல பிறவிகளின் இறுதிப் பிறவி ஆகும். ஒருவருடைய விஷயம் அல்ல, யுத்த மைதானம் முதலான எதுவும் கூட கிடையாது. தம்முடைய இராஜ்யம் இருந்தது என்பதை பாரதவாசிகள் மறந்து விட்டனர். சத்யுகத்தின் ஆயுளை மிகவும் நீண்டதாக செய்து விட்டதன் மூலம் வெகு காலத்திற்கு முன் என்று எடுத்துச் சென்று விட்டனர். தந்தை வந்து புரிய வைக்கிறார் - மனிதர்களை பகவான் என சொல்ல முடியாது. மனிதர்களால் யாருக்கும் சத்கதி கொடுக்க முடியாது. அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல், தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் என சொல்லப் படுகிறது. சத்யமான கண்டத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஒரே ஒரு சத்யமான பாபா ஆவார். பூஜை கூட செய்கின்றனர், ஆனால் பக்தி மார்க்கத்தில் நீங்கள் யாருக்கு பூஜை செய்தபடி வந்தீர்களோ அவர்களில் ஒருவருடைய வரலாறு கூட யாருக்கும் தெரியாது, ஆகையால், நீங்கள் சிவ ஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்கள் அல்லவா என தந்தை புரிய வைக்கிறார். தந்தை புதிய உலகைப் படைப்பவர், சொர்க்கத்தின் இறைத் தந்தை ஆவார். எல்லைக்கப்பாற்பட்ட சுகத்தைக் கொடுப்பவர். சத்யுகத்தில் நிறைய சுகம் இருந்தது. அதனை எப்படி, யார் ஸ்தாபனை செய்தது? இதனை தந்தைதான் வந்து புரிய வைக்கிறார். நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக ஆக்குவது அல்லது கீழானவர்களை உயர்ந்தவர்களாக, தேவதைகளாக ஆக்குவது என்பது தந்தையின் காரியமே ஆகும். குழந்தைகளாகிய உங்களை நான் தூய்மைப் படுத்துகிறேன் என தந்தை சொல்கிறார். நீங்கள் சொர்க்கத்தின் எஜமான் ஆகிறீர்கள். உங்களை தூய்மையற்றவர்களாக ஆக்குபவர் யார்? இந்த இராவணன். துக்கத்தையும் இறைவனே தருகிறார் என மனிதர்கள் சொல்லி விடுகின்றனர். தந்தை சொல்கிறார் - அரைக் கல்பம் நீங்கள் தந்தையை நினைக்கவே தேவையில்லாத அளவு அனைவருக்கும் நான் சுகத்தைக் கொடுக்கிறேன். பிறகு இராவண இராஜ்யம் ஏற்படும்போது அனைவருக்கும் பூஜை செய்யத் தொடங்குகின்றனர். இது உங்களுடைய பல பிறவிகளின் கடைசிப் பிறவியாகும். பாபா எவ்வளவு பிறவிகளை நான் எடுத்தேன்? என கேட்கின்றனர். பாபா சொல்கிறார் - இனிமையிலும் இனிமையான பாரதவாசிகளே, ஓ ஆத்மாக்களே, இப்போது உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியைக் கொடுக்கிறேன். குழந்தைகளே, நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள். இப்போது நீங்கள் 21 பிறவிகளுக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுக்க வந்துள்ளீர்கள். அனைவருமே ஒன்றாக வருவதில்லை. நீங்கள்தான் சத்யுகத்தின் சூரிய வம்சத்து பதவியை மீண்டும் அடைகிறீர்கள் அதாவது உண்மையிலும் உண்மையான பாபாவிடமிருந்து நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான சத்ய ஞானத்தைக் கேட்கிறீர்கள். இது ஞானம், அது பக்தி. சாஸ்திரங்கள் முதலான அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கானதாகும். அவை ஞானமார்க்கத்தினுடையவை அல்ல. இது ஆன்மீக ஞானமாகும். சுப்ரீம் ஆத்மா (பரமாத்மா) அமர்ந்து ஞானத்தைக் கொடுக்கிறார். குழந்தைகள் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். தன்னை ஆத்மா என நிச்சயப் படுத்திக் கொண்டு என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். தந்தை புரிய வைக்கிறார் - ஆத்மாவில்தான் நல்ல மற்றும் கெட்ட சம்ஸ்காரங்கள் இருக்கின்றன, அதன்படிதான் மனிதர்களுக்கு நல்ல அல்லது கெட்ட பிறவி கிடைக்கிறது. இவர் தூய்மையாக இருந்தார், இந்த இறுதிப் பிறவியில் தூய்மையற்றவராக உள்ளார், ததத்வம் (நீயே அது, அதுவே நீ). தந்தையாகிய நான் இந்த பழைய இராவணனின் உலகில், தூய்மையற்ற உலகில் வரவேண்டியுள்ளது. யார் முதல் பிறவியில் செல்ல வேண்டியவரோ அவருடைய உடலில்தான் வரவேண்டும். சூரிய வம்சத்தவரே 84 பிறவிகளை முழுமையாக எடுக்கின்றனர். இவர்கள் பிரம்மா மற்றும் பிரம்மா வம்சத்தின் பிராமணர்கள். தந்தை தினம்தோறும்தான் புரிய வைக்கிறார். கல்புத்தியை தங்க புத்தியாக ஆக்குவது சித்தி வீடு போல் அல்ல. ஓ ஆத்மாக்களே. . . ஆத்ம அபிமானி ஆகுங்கள். ஓ ஆத்மாக்களே, ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள். தேகத்தின் சம்மந்தங்களை விடுங்கள். அனைவரும் இறக்கத்தான் வேண்டும். அனைவருடையதுமே வானபிரஸ்த நிலையாகும். ஒரு சத்குருவைத் தவிர அனைவருக்கும் சத்கதி வழங்குபவர் யாரும் இருக்க முடியாது. ஓ பாரதவாசி குழந்தைகளே, நீங்கள்தான் முதன் முதலில் என்னிடமிருந்து பிரிந்தீர்கள். ஆத்மாக்களும் பரமாத்மாவும் வெகு காலம் பிரிந்திருந்தனர் என பாடப்படுகிறது. முதன் முதலில் பாரதவாசிகளாகிய நீங்கள் தேவி-தேவதா தர்மத்தினராக வந்தீர்கள். மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்களின் பிறவிகள் கொஞ்சமாக இருக்கும். முழு சக்கரமும் எப்படி சுற்றுகிறது என்பதை தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். தாரணை செய்விக்க முடியாதவர்களுக்கும் கூட மிகவும் சகஜமானதேயாகும். ஆத்மாக்கள் தாரணை செய்கின்றன, புண்ணிய ஆத்மா, பாவாத்மா ஆகின்றனர் அல்லவா. உங்களுடைய இந்த கடைசி பிறவி 84 ஆவது பிறவியாகும். நீங்கள் அனைவரும் வானபிரஸ்த நிலையில் இருக்கிறீர்கள். வானபிரஸ்த நிலையில் இருப்பவர்கள் மந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக குருவை பின்பற்றுகின்றனர். நீங்கள் இனி தேகதாரி குருவை பின்பற்றத் தேவையில்லை. உங்கள் அனைவரின் தந்தை, ஆசிரியர், குரு நானாவேன். என்னை ஓ பதித பாவனா சிவபாபா என சொல்லவும் செய்கிறீர்கள். இப்போது நினைவு வந்துள்ளது. அனைத்து ஆத்மாக்களின் தந்தை, ஆத்மா சத்யமானது, சைதன்யமானது ஏனென்றால் அமரனாக உள்ளது. அனைத்து ஆத்மாக்களுக்குள்ளும் நடிப்பு நிரம்பியுள்ளது. தந்தையும் கூட சத்யமானவர், சைதன்யமானவர். அவர் மனித சிருஷ்டியின் விதை வடிவமானதால் சொல்கின்றார்- நான் முழு மரத்தின் முதல் இடை கடைசியை அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் ஞானம் நிறைந்தவர் என சொல்லப்படுகிறேன். உங்களுக்கும் முழு ஞானமும் உள்ளது. விதையிலிருந்து மரம் எப்படி வெளிப்படுகிறது. மரம் வளர்வதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது அல்லவா. நான் விதை ரூபமாக உள்ளேன் என தந்தை சொல்கிறார். கடைசியில் முழு மரமும் உளுத்துப் போகும் நிலை அடைந்து விடுகிறது. இப்போது பாருங்கள் தேவி தேவதா தர்மத்தின் அடித்தளம் இல்லை. மறைந்து விட்டுள்ளது. தேவதா தர்மம் மறைந்து விடும்போது தந்தை வர வேண்டியுள்ளது. ஒரு தர்மத்தின் ஸ்தாபனை செய்து மற்ற அனைத்தையும் வினாசம் செய்வித்து விடுகிறார். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தந்தை ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். இவையனைத்தும் கூட நாடகமாக உருவாகியுள்ளது. இதற்கு முடிவு கிடையாது. தந்தை இறுதியில் வருகிறார். சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் ஞானம் சொல்ல வேண்டியிருக்கும்போது கண்டிப்பாக சங்கமத்தில் வருவார். உங்களுடைய தந்தை ஒருவரே ஆவார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவர். மூலவதனத் தில் வசிப்பவர். அந்த ஒரு தந்தையை அனைவரும் நினைவு செய்கின்றனர். துக்கத்தில் அனைவரும் நினைப்பார்கள். . .இராவண இராஜ்யத்தில் துக்கம் உள்ளது அல்லவா. நினைக்கின்றனர் எனும்போது தந்தை அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒருவரே ஆவார். அவருடையதுதான் மகிமையாகும். தந்தை வராவிடில் பாரதத்தை சொர்க்கமாக யார் மாற்றுவார்கள்? இஸ்லாமியர் முதலான அனைவரும் இந்த சமயத்தில் தமோபிரதானமாக உள்ளனர். அனைவரும் கண்டிப்பாக மறுபிறவி எடுத்தே ஆகவேண்டும். இப்போது மறுபிறவி நரகத்தில் கிடைக்கிறது. சொர்க்கத்திற்குச் சென்று விடுகின்றனர் என்பதல்ல. இந்துக்கள் (யாரேனும் இறந்துவிடும் போது) சொர்க்கவாசி ஆகி விட்டார் என்றால் கண்டிப்பாக நரகத்தில் இருந்தார் அல்லவா. இப்போது சொர்க்கத்திற்குச் சென்றார். உங்கள் வாயில் சர்க்கரை. சொர்க்கவாசி ஆகிவிட்டார், பிறகு நரகத்தின் அசுரத்தனமான பொருட்களை நீங்கள் அவருக்கு ஏன் ஊட்டுகிறீர்கள். வங்காளத்தில் மீன்கள் முதலானவற்றைக் கூட பரிமாறுகின்றனர். இவையனைத்தும் கட்டுக் கதைகள் என தந்தை சொல்கிறார். யாரும் திரும்பிப் போக முடியாது. சத்யுகத்தில் முதன் முதலில் பிறவி எடுப்பவர்கள்தான் 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கிறது.

 

இதில் எந்த கஷ்டமும் கிடையாது. பக்தி மார்க்கத்தில் எவ்வளவு கஷ்டங்கள் உள்ளன. ராமா ராமா என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது உடல் சிலிர்க்கிறது. அவையனைத்தும் பக்தி மார்க்கமாகும். இந்த சூரிய சந்திரனும் வெளிச்சத்தைக் கொடுப்பவை என நீங்கள் அறிவீர்கள். இவை ஏதும் தேவதைகள் அல்ல. உண்மையில் ஞான சூரியன், ஞான சந்திரன், ஞான நட்சத்திரங்கள்தான் உள்ளனர். மகிமை அவர்களுடையதாகும். பிறகு அவர்கள் சூரிய தேவதாய நம: என சொல்லி விடுகின்றனர். அவைகளை தேவதைகள் என புரிந்து கொண்டு தீர்த்தத்தைத் தெளிக்கின்றனர். இவையனைத்தும் பக்தி மார்க்கமாகும், இது மீண்டும் நடக்கும் என தந்தை புரிய வைக்கிறார். முதலில் சிவபாபாவின் அவிபசாரி (கலப்படமற்ற) பக்தி நடக்கிறது, பிறகு தேவதைகளுக்கு பூஜை நடக்கிறது, பிறகு கீழே இறங்கி இறங்கி, இப்போது பாருங்கள், முச்சந்தியில் மண் தீபத்தை ஏற்றி வைத்து எண்ணெய் முதலானவற்றை ஊற்றி அதையும் கூட பூஜிக்கின்றனர். தத்துவங்களுக்கும் கூட பூஜை செய்கின்றனர். மனிதர்களின் உருவத்தை செய்து வைத்து அதையும் கூட பூஜிக்கின்றனர். இப்போது இதனால் எந்த பலனும் ஏற்படுவதில்லை, இந்த விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள்தான் அறிவீர்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. ஆத்மாவிலிருந்து கெட்ட சம்ஸ்காரங்களை நீக்குவதற்காக ஆத்ம அபிமானி ஆக இருக்கும் பயிற்சியை செய்ய வேண்டும். இது 84-வது பிறவி, இறுதிப் பிறவியாகும், வானபிரஸ்த நிலையாகும், ஆகையால் புண்ணிய ஆத்மா ஆகக் கூடிய முயற்சி செய்ய வேண்டும்.

 

2. தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விட்டு தந்தையையும் இராஜ்யத்தையும் நினைவு செய்ய வேண்டும். விதை மற்றும் மரத்தின் ஞானத்தை சிந்தனை செய்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

 

வரதானம்:

உலக மாற்றத்தின் உயர்வான காரியத்தின் பொறுப்பை நிர்வகித்தபடி டபுள் லைட் -ஆக இருக்கக் கூடிய ஆதார மூர்த்தி ஆகுக.

 

யார் ஆதார மூர்த்தியாக இருப்பார்களோ அவர்கள் மீது தான் முழு பொறுப்பு இருக்கும். இப்போது நீங்கள் எந்த ரூபத்தில் எங்கே காலடி எடுத்து வைத்தாலும் பல ஆத்மாக்கள் உங்களை பின்பற்றுவார்கள், இந்த பொறுப்பு இருக்கிறது. ஆனால் இந்த பொறுப்பு, நிலையை உருவாக்குவதில் மிகவும் உதவி செய்யும், ஏனென்றால் இதன் மூலம் பல ஆத்மாக்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும், அதன் காரணமாக பொறுப்பு இலேசாக ஆகி விடும், இந்த பொறுப்பு களைப்பை நீக்கக் கூடியதாகும்.

 

சுலோகன்:

மனம், புத்தி இவ்விரண்டின் சமநிலையை வைத்து சேவை செய்வதன் மூலம் வெற்றி கிடைக்கும்.

 

ஓம்சாந்தி