07.02.19    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே ! தூய்மை ஆவதற்காக ஒன்று நினைவின் பலம் இரண்டாவது தண்டனைகளின் விளைவு . நீங்கள் நினைவின் பலத்தினால் தூய்மை ஆகி உயர்ந்த பதவியை அடைய வேண்டும்

கேள்வி:
தந்தை ஆன்மீக மருத்துவர் , உங்களுக்கு எந்த ஒரு தைரியத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளார் ?

பதில்:
எவ்வாறு உலகீய மருத்துவர்கள் நோயாளிகளிடம் உங்களுடைய வியாதி குணடைந்து விடும் என்று தைரியமளிக்கின்றனரோ அவ்வாறே ஆன்மீக மருத்துவரும் கூட குழந்தைகளே! நீங்கள் மாயையின் வியாதியால் பீடிக்கப்பட்டுள்ளீர்கள், பயப்பாடதீர்கள், மருத்துவர் மருந்து தருகின்றார். எனவே இந்த வியாதி அனைத்தும் குண மடைந்து விடும், அதன் நினைவு அஞ்ஞானத்திலும் கூட நினைவு வராது என்று தைரியம் கூறுகிறார். வந்தாலும் கூட நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் உழைப்பு (முயற்சி) செய்யுங்கள், உங்களுக்கு இப்போது சுகமான நாட்கள் வந்தே வந்து விட்டது.

ஓம் சாந்தி .
எல்லையற்ற தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் புரிய வைக்கின்றார் - இப்பொழுது தந்தை வந்து விட்டார் என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். எனவே தைரியம் அளிக்கின்றார், ஏனெனில் பக்தி மார்க்கத்தில் - இறைவா (தந்தையே) வாருங்கள், துக்கத்தி-ருந்து விடுவித்து விடுதலை தாருங்கள் என்று எல்லோரும் அழைத்தனர். ஆகவே தான் இன்னும் சிறிது நாட்களே என்று தந்தை கூறி தைரியத்தை ஊட்டு கின்றார். யாருக்காவது வியாதியி-ருந்து குணமடைந்த பின் மீண்டும் வந்தாலும் கூறுகின்றனர் இப்பொழுது சரியாகி விடும் என்று. குழந்தைகளும் புரிந்து கொள்கினற்னர். இந்த சீசீ உலகில் இன்னும் சிறிது நாட்களே இருப்போம், பிறகு நாம் புதிய உலகம் சென்று விடுவோம் என்று. அதற்காக நாம் தகுதியானவர்களாக ஆக வேண்டும், பிறகு எந்த ஒரு வியாதி போன்றவை நமக்கு தொல்லை தராது. பாபா தைரியமளித்து கூறுகின்றார் - கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். இது போல வேறு யாரும் தைரியம் தர முடியாது. நீங்கள் தமோபிரதானமாகி விட்டீர்கள். இப்போது தந்தை வந்து விட்டார் மீண்டும் உங்களை சதோபிரதானமாக்குவதற்காக. சிலர் யோக பலத்தினாலும், சிலர் தண்டை பெறுவதினாலும் இப்போது அனைத்து ஆத்மாக்களும் தூய்மை அடைந்து விடுவார்கள். தண்டனை அடைவதினாலும் பலன் உள்ளது அல்லவா! யார் தண்டனை அடைவதினால் தூய்மை ஆகின்றனரோ அவர்களுடைய பதவி குறைந்ததாகி விடும். குழந்தைகள் உங்களுக்கு ஸ்ரீமத் கிடைத்துக் கொண்டிருக்கிறது. தந்தை கூறுகின்றார் என்னை மனதார நினைவு செய்யுங்கள். உங்களுடைய எல்லா பாவங்களும் பஸ்மமாகி விடும். நினைவு செய்யவில்லையானால் பாவச் சுமை நூறு மடங்கு அதிகமாகி விடும். ஏனென்றால் பாவ ஆத்மாவாகி என்னை நிந்தனை செய்கின்றீர்கள். இவருக்கு ஈஸ்வரன் அசுர நடத்தையை கற்றுத் தருகின்றார் என மனிதர்கள் கூறுவார்கள். ஏற்றம் இறக்கம் இருக்கிறது அல்லவா? குழந்தைகள் தோல்வியும் அடை கின்றனர். நல்ல குழந்தைகள் கூட தோற்றுப் போய் விடுகிறார்கள், இதனால் பாவங்கள் குறைவதேயில்லை. பிறகு அதற்கான விளைவை அனுபவிக்க வேண்டியுள்ளது. இது மிக மோசமான உலகம், இதில் எல்லா வித தீயவைகளும் நடந்து கொண்டேயிருக்கிறது. பாபா வந்து எங்களுக்கு வருங்கால புதிய உலகத்திற்கான வழியைக் கூறுங்கள் என அழைக்கவும் செய்கின்றனர். பாபாவுக்குத் தெரியும் - ஒரு பக்கம் பழைய உலகம், மறு பக்கம் புதிய உலகம் வரப்போகிறது என்பது. இப்பொழுது நீங்கள் உத்தம புருஷர்களாக வதற்காக முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த பழைய உலகத்தி-ருந்து உங்களுடைய நங்கூரம் எடுக்கப் பட்டுவிட்டது. ஆகவே நீங்கள் செல்ல வேண்டிய வீட்டைத்தான் நினைவு செய்ய வேண்டும். தந்தை கூறியுள்ளார் என்னை நினைவு செய்வதால் உங்களது கறை நீங்கி விடும். இதற்கு யோக பலம் தேவை. இல்லை யேயேல் தண்டனை தான். ஒவ்வொரு ஆத்மாவும் அவசியம் தூய்மையாக வேண்டும் தூய்மையின்றி யாருமே திரும்பிச் செல்ல முடியாது. எல்லோருக்கும் அவரவருக்கென நடிப்பின் பாகம் கிடைத்துள்ளது. இது உங்களுடைய கடைசி பிறவியென தந்தை கூறுகின்றார். க-யுகம் என்பதோ சிறிய குழந்தை போன்றதென மனிதர்கள் கூறுகின்றனர். அப்படியானால் மனிதர்கள் இதைவிடவும் அதிகதுக்கமுடையவர் களாகிவிடுவார்கள். இந்த துக்கதாமம் முடியப் போகிறது என்பதை சங்கமயுக குழந்தைகள் நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை தைரிய மூட்டுகிறார் (பொறுமை). கல்பத்திற்கு முன்பே தந்தை சொல்- இருக்கிறார் மாமேகம், என்னை நினைவு செய்தீர்களானால் பாவங்கள் குறைந்துவிடும், இதற்கு நான் உத்திரவாதம் என்கிறார். க-யுகத்தின் அழிவு நிச்சயம் ஆகும் மற்றும் சத்திய யுகமும் நிச்சயம் வரும் என்பதையும் புரிய வைக்கிறார். குழந்தைகளுக்குத் திருப்தியும் கிடைக்கிறது, நிச்சயமும் இருக்கிறது. ஆனால் நினைவில் நிலைக்க முடியாததால் ஏதாவதொரு விகர்மம் செய்து விடுகின்றார். பாபா கோபம் வருகிறது என்று சொல்கிறார்கள், இதையும் கூட ஒரு பூதம் என்று சொல்லப் படுகிறது. இது இராவணனின் இராஜ்யம், ஐந்து பூதங்களும் துக்கமளிக்கின்றன. முன்பு செய்த கணக்கு வழக்கு களைத் தீர்க்க வேண்டும், யாருக்கு காம விகாரம் தொல்லை தராமல் இருந்ததோ அவர்களுக்கும் கூட இப்போது அந்த வியாதி வெளிப்படுகிறது. முன்பு இது போன்ற தீய எண்ணம் ஒருபோதும் வந்ததே இல்லையே, இப்போது வந்து, ஏன் துன்புறுத்து கிறது? என்று கூறுகிறார்கள். இப்போது ஞானம் அல்லவா, ஞானம் எல்லா வியாதிகளையும் வெளியேற்றி விடுகிறது. பக்தி எல்லா வியாதிகளையும் வெளியேற்று வதில்லை. இது மிகவும் அசுத்தமான விகார உலகம், 100 சதவிகிதம் அசுத்தமே உள்ளது. 100 சதவிகிதம் தூய்மையின்மையி-ருந்து பிறகு 100 சதவிகிதம் தூய்மையாக வேண்டும். 100 சதவிகிதம் இழிவி-ருந்து 100 சதவிகிதம் தூய்மையான மேன்மையான உலகமாக வேண்டும்.

தந்தை கூறுகிறார் குழந்தைகள் உங்களை சாந்திதாமம் - சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே வந்துள்ளேன் என்று. என்னை நினைவு செய்யுங்கள் காலச் (படைப்பின்) சக்கரத்தை சுழற்றுங்கள். எவ்வித தீய கர்மங்களும் செய்யாதீர்கள். தேவதைகளிடம் என்னவெல்லாம் குணங்கள் உள்ளனவோ அவற்றைக் கடைபிடியுங்கள். பாபா ஒருபோதும் கஷ்டத்தைக் கொடுப்பதில்லை. சில சில வீடுகளில் கெட்ட ஆத்மாக்கள் உள்ளனர் ஆதலால் தீயை உண்டாக்குகிறது, நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த சமயம் மனிதர்கள் அனைவருமே தீயவர்கள் தான். ஸ்தூலமாகவும் கர்மத்தின் விளைவுகள் உண்டாகிறது. ஆத்மா ஒன்று மற்றொன்றிற்கு சரீரத்தின் மூலம் துக்கம் தருகிறது, சரீரம் இல்லையென்றாலும் துக்கம் தருகிறது. குழந்தைகள் பார்த்துள்ளார்கள் அதற்கு பேய், பிசாசு என்று சொல்கிறார்கள். அது வெண்மையாக நிழல் போன்று காண்பதற்குத் தெரிகிறது என்கின்றனர். ஆனால் சரியானபடி நினைவில் வருவதில்லை. நீங்கள் எந்தளவு நினைவு செய்கின்றீர்களோ அந்தளவு அவையனைத்தும் முடிந்துவிடும். இதுவும் கூட கணக்கு வழக்கு தான்.

வீட்டில் குழந்தைகள் சொல்கிறார்கள் - தூய்மையாக இருக்க விரும்புகிறோம் என்று. இதை ஆத்மா சொல்கிறது. யாரிடம் ஞானம் இல்லையோ அந்த ஆத்மா சொல்கிறது தூய்மை ஆகாதே. பிறகு சண்டை ஏற்படு கிறது. எவ்வளவு உபத்திரவம் ஏற்படுகிறது. இப்பொழுது நீங்கள் தூய்மை ஆகிக் கொண்டுள்ளீர்கள். அவர்க ளெல்லாம் தூய்மையற்றவர்கள், ஆகவே தான் துக்கம் தருகின்றனர். இருந்தாலும் அவர்களும் ஆத்மாக்களே. அப்படிபட்டவர்களுக்கு கெட்ட (தீய) ஆத்மாக்கள் என்று சொல்லப்படுகிறது. சரீரம் இருந்தாலும் இல்லையென்றாலும் கூட துக்கம் தருகிறது. ஞானம் எளிதானது. சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும். மற்றபடி முக்கிய விஷயம் தூய்மை என்பது தான். இதற்காக தந்தையை மிகுந்த குஷியுடன் நினைவு செய்ய வேண்டும். இராவணனை தீயவன் என்று கூறப்படுகிறதல்லவா? இந்த சமயம் முழு உலகமுமே தீயதாக உள்ளது. ஒருவர் மற்றவரிடமிருந்து அநேக விதத்தில் துக்கமடைகின்றனர். தீங்கானது என்று தூய்மையின்மைக்குக் கூறப்படு கிறது. தூய்மையற்ற ஆத்மாக்களிடம் 5 விகாரங்களும் பல விதத்தில் இருக்கின்றன. சிலரிடம் விகாரத்தின் பழக்கம், சிலரிடம் கோபம் கொள்கின்ற பழக்கம், சிலரிடம் தொல்லை ஏற்படுத்தக் கூடிய பழக்கம், வேறு சிலரிடம் நஷ்டம் ஏற்படுத்துகின்ற பழக்கம் முதலானவை உள்ளன. சில பேரிடம் விகாரத்தின் பழக்கம் இருப்பதால் விகாரம் கிடைக்காத காரணத்தால் கோபம் உண்டாகி அதிகமாக அடிக்கவும் செய்கின்றனர். அப்போது தந்தை வந்து - ஏ! ஆத்மாக்களே, குழந்தைகளே பொறுமையாக இருங்கள், என்னை நினைவு செய்து கொண்டிருங்கள் மற்றும் தெய்வீக குணங்களைக் கடைபிடியுங்கள் என்று தைரியம் கூறுகிறார். ஆனால் தொழில் எதையும் செய்ய வேண்டாம் என்று சொல்வதில்லை. இராணுவத்தில் இருப்பவர்கள் போரிட செல்ல வேண்டி யுள்ளது அப்போது சிவபாபாவின் நினைவில் இருங்கள் என்று கூறப்படுகிறது. கீதையிலுள்ள வார்த்தைகளை எடுத்துக் கூறி நாம் போர்க்களத்தில் இறந்துவிட நேரிட்டால் சொர்க்கத்திற்குச் சென்றுவிடுவோம் என்பதை ஏற்று குஷியோடு போருக்குச் செல்கின்றனர். ஆனால் அவ்வாறான விஷயமே கிடையாது. சிவபாபாவை நினைவு செய்யுங்கள், நீங்கள் சொர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும் என பாபா சொல்கிறார். ஒரு சிவபாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும் அப்போது நிச்சயம் சொர்க்கம் சென்று விடுவீர்கள். இங்கு வருகிறார்கள் பிறகு வெளியேறி தூய்மை இழந்து விடுகின்றனர். இருப்பினும் நிச்சயம் சொர்க்கத்திற்கு வருவார்கள். தண்டனைகள் அனுபவித்து, தூய்மையாகி பிறகு தான் சொர்க்கத்திற்கு வருவார்கள். தந்தை இரக்கமனமுடையவர் அல்லவா? எந்த விகாரமும் செய்யாமல் இருந்தீர்களானால் விகர்மத்தை வென்றவர் களாவீர்கள். இந்த இலட்சுமி-நாராயணன் விகர்மத்தை வென்றவர்கள். விகர்மத்தை வென்ற நம்பர் ஒன் என்பது பிறகு 2500 வருடங்களுக்குப் பின் விக்ரம ஆண்டு ஆரம்பமாகிறது. மோகத்தை வென்ற அரசனின் கதை இருக்கிறதல்லவா? மோகத்தை வென்றவர் ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார். என்னை மனதார நினைவு செய்தீர்களானால் பாவங்கள் நீங்கிவிடும். 2500 வருடங்களில் செய்த பாவங்கள் 50-60 வருடங்களில் உங்களை சதோபிரதானமாக மாற்றிக் கொள்ள முடியும். ஒருவேளை யோக பலம் இல்லாவிட்டால் வரிசைக் கிரமத்தில் பின்னுக்குச் சென்றுவிடுவீர்கள். மாலையோ மிகப் பெரியது. பாரதத்தின் மாலை விசேஷமானது. இதில் தான் அனைத்து விளையாட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நினைவு யாத்திரை மிகவும் முக்கியமானது, எந்த கஷ்டமும் இல்லை. பக்தியில் அநேகமானவரோடு புத்தியின் தொடர்பை ஈடுபடுத்து கிறார்கள். அவர்களெல்லாம் படைக்கப்பட்டவர்கள். அவர்களை நினைவு செய்வதால் எந்த நன்மையும் ஏற்படாது. வேறு யாரையும் நினைவு செய்ய வேண்டாமென்று என்று தந்தை சொல்கிறார். முன்பு பக்தி மார்க்கத்தில் வெறுமனே பக்தி மட்டுமே செய்து வந்தீர்கள். இப்போது இந்த கடைசி நேரத்தில் என்னை நினைவு செய்யுங்கள். தந்தை எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கிறார். இதற்கு முன் எதுவுமே தெரியாம-ருந்தீர்கள். இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்துள்ளது. மற்ற தொடர்புகளை விட்டுவிட்டு ஒருவரோடு தொடர்பை இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது யோக அக்னியால் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் பஸ்மமாகிவிடும். நிறைய பாவங்களை செய்தே வந்துள்ளீர்கள். காமவாளை செலுத்தி ஒன்றிரண்டு பேருக்கு முதல்-இடை-கடைசி வரையிலுமே துக்கத்தைக் கொடுத்து வந்துள்ளீர்கள். இதுவும் நாடகமல்லவா? இந்த நாடகம் ஏன் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்று கேட்க முடியாது. இது ஆரம்பமும் முடிவும் இல்லாத விளையாட்டு. இதில் என்னுடைய பாகமும் உள்ளது. நாடகம் எப்பொழுது உருவாக்கப்பட்டது, எப்பொழுது முடிவு பெறும் இதையும் கூட சொல்ல முடியாது. இதெல்லாம் ஆத்மாவில் அதன் நடிப்பின் பங்கு நிரப்பப்பட்டுள்ளது. ஆத்மாவின் பதிவு தகட்டில் (ரிகார்ட்) என்ன பதிவாகியுள்ளதோ அது தேய்ந்து (அழிந்து போவதில்லை) ஆத்மா அழிவற்றது, அதிலுள்ள பாகமும் அழிவற்றது. நாடகமும் கூட அழிவில்லாதது என்று கூறப்படுகிறது. தந்தை மறுபிறவியில் வருவதில்லை அவரே வந்து அனைத்து இரகசியங்களையும் புரிய வைக்கிறார். படைப்பின் முதல்-இடை-கடைசி பற்றிய இரகசியத்தை வேறு யாராலும் புரிய வைக்க முடியாது. தந்தையின் காரியம் (தொழில்), ஆத்மாவைப் பற்றி எதையுமே தெரிந்து கொள்ளவில்லை. இந்த படைப்பின் சக்கரம் (கால சக்கரம்) சுற்றிக் கொண்டே இருக்கிறது.

இப்பொழுது புருஷோத்தம சங்கமயுகம், இதில் எல்லா மனிதர்களும் உத்தம புருஷர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். சாந்திதாமத்தில் எல்லா ஆத்மாக்களும் தூய்மையான உத்தமமானவர்களாகின்றனர். சாந்திதாமம் தூய்மையானது. புதிய உலகிலும் தூய்மையானவர்கள் உள்ளனர். அங்கே சாந்தி மட்டுமே உள்ளது. பிறகு சரீரம் கிடைத்து பாகத்தை நடிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குண்டான நடிப்பின் பாகம் கிடைத்துள்ளது என்று நமக்குத் தெரியும். அது நம்முடைய வீடு அமைதியில் இருப்போ:ம். இங்கு பாகத்தை நடிக்கின்றோம். பக்தி மார்க்கத்தில் என் ஒருவனின் பூஜை மட்டுமே செய்தீர்கள். துக்கம் இல்லாம-ருந்தீர்கள். இப்பொழுது பலரின் பக்தியில் வந்ததினால் துக்கமுடையவர்களாகி விட்டீர்கள் என்று தந்தை கூறுகிறார். இப்போது தந்தை சொல்கிறார் தெய்வீக குணங்களைக் கடைபிடியுங்கள் பிறகு அசுர குணங்கள் ஏன்? தந்தையை அழைத்ததே எங்களை தூய்மையாக்குங்கள் என்பதற்குத்தான், பிறகு ஏன் தூய்மையை இழந்தவரா கிறீர்கள்? இதில் முக்கியமான விஷயம் காமத்தை அவசியம் வெற்றி அடைவது அப்போது தான் உலகை வென்றவர்களாவீர்கள். மனிதர்கள் பகவானுக்காக தாங்களே பூஜைக்குரியவர்கள், தாங்களே பூஜாரி என்று சொல்கிறார்கள். அவரை கீழே அல்லவா கொண்டு வந்துவிடுகிறீர்கள். இவ்வாறெல்லாம் பாவங்கள் செய்து செய்தே மிகப் பெரிய விகார உலகமாகிவிட்டது. கருட புராணத்தில் மிகப் பயங்கரமான நரகம் என்று கூறப்படுகிறது. அங்கே தேள் தன் விஷக் கொடுக்கால் அனைவரையும் கடித்துக் கொண்டே இருக்கிறது. சாஸ்திரங்களில் என்னவெல்லாமே (எழுதி) காண்பித்துவிட்டார்கள். இதைக் கூட தந்தை இந்த சாஸ்திரங்கள் எல்லாம் பக்தி மார்க்கத்திற்கானவை என்று புரிய வைத்துள்ளார். இவர்களில் யாருமே என்னுடன் சந்திப்ப தில்லை. மேலும் மேலும் தமோபிரதானமாகின்றனர்.ஆகவே தான் என்னை அழைக் கிறார்கள் - வந்து தூய்மை ஆக்குங்கள் என்று, ஆக தூய்மையற்றவர்களாக உள்ளனர் அல்லவா? மனிதர்கள் எதையுமே புரிந்து கொள்வ தில்லை. யார் நிச்சய புத்தி உள்ளவர்களோ அவர்கள் தான் வெற்றி அடைகிறார்கள். இராவணனை வெற்றி அடைந்து இராம இராஜ்யத்திற்கு வருகின்றனர். காமத்தை வெற்றி கொள்ளுங்கள் இதனால் தான் சச்சரவுகள் ஏற்படுகிறது என்று தந்தை கூறுகிறார். அமிர்தத்தை தவிர்த்துவிட்டு விஷத்தை ஏன் அருந்துகிறீர்கள் என்று பாடுகின்றனர். அமிர்தம் என்ற பெயரை கேட்டு பசுவாயி-ருந்து அமிர்தம் வெளிவருகிறது என்று புரிந்து கொள்கிறார்கள், அட, கங்கை நீரை அமிர்தம் என்று சொல்லப்படுவதில்லை. இது ஞான அமிர்தத்தின் விஷயம். மாதர்கள் கணவனின் காலைக் கழுவிய நீரைக் குடிக்கிறார்கள், அதையும் கூட அமிர்தம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை அமிர்தம் என்றால் வைரத்திற்குச் சமமாக ஆகுங்களேன். தந்தை ஞானம் தருகின்றார் இதனால் வைரம் போல் ஆகின்றீர்கள். தண்ணீரின் விஷயத்தை எவ்வளவு பிரபலமாக்கி விட்டார்கள். நீங்கள் ஞான அமிர்தம் அருந்து கிறீர்கள் அவர்கள் தண்ணீரை அருந்துகிறார்கள். பிராமணர்கள் உங்களை யாரும் தெரிந்து கொள்ள வில்லை. அவர்கள் கௌரவர்கள்-பாண்டவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் பாண்டவர்களை பிராமணர்கள் என்று புரிந்து கொள்ளவில்லை. பாண்டவர்கள் பிராமணர்கள் என்பது போன்ற வார்த்தை கீதையில் இல்லை. தந்தை சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறார். சாஸ்திரங்களில் என்ன படித்தீர்களோ, நான் என்ன கூறுகின்றேனோ அவற்றை (சரியானதை) தீர்மானியுங்கள் என்று கூறுகிறார். முன்பு நாம் என்ன கேட்டோமோ அவை தவறானவை என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள், இப்பொழுது சரியானவற்றை கேட்கின்றீர்கள்.

தந்தை கூறுகிறார் நீங்கள் அனைவரும் சீதைகள் அதாவது பக்தைகள். பக்தியின் பலனைத் தருபவர் ராம் எனப்படுகின்ற பகவான். உங்களுக்கு பலனைத் தருவதற்காக வந்துள்ளேன் என்று சொல்கிறார். சொர்க்கத்தில் நாம் அளவில்லாத சுகம் அனுபவிக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். அந்த சமயத்தில் மற்ற அனைவரும் சாந்திதாமத்தில் இருப்பார்கள். அங்கே சாந்தி கிடைக்கிறதல்லவா. அந்த உலகில் சுகம், சாந்தி, தூய்மை அனைத்தும் உள்ளது. எப்போது உலகத்தில் ஒரே தர்மம் மட்டுமே இருந்ததோ அப்போது தான் அமைதி இருந்தது என்று மற்றவர்களுக்குப் புரிய வைக்கின்றீர்கள். என்றாலும் கூட புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். பிற்காலத்தில் நிறைய பேர் வருவார்கள். வேறெங்கே போவார்கள்? இது ஒரே ஒரு கடை தான் உள்ளது. கடைக்காரரிடம் பொருள் நன்றாக இருந்தால் விலையும் ஒரே விலையாகத்தான் இருக்கும். இது சிவபாபாவின் கடை, அவர் நிராகார். பிராமணனும் அவசியம் தேவை. பிராமணன் ஆகாமல் எப்படி தேவதையாக ஆவீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவும் , காலை வணக்கம் . ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம் .


தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தேவதைகளின் குணங்கள் என்னவோ அவற்றை தானும் கடைபிடிக்க வேண்டும், உள்ளுக்குள் என்னென்ன தீய பழக்கங்கள் உள்ளனவோ, கோபம் முதலான பழக்கங்கள் உள்ளனவே அவற்றை விட்டுவிட வேண்டும். விகர்மத்தை வெற்றிபெற வேண்டும். எனவே இனி எந்த ஒரு தீய செயல்களையும் செய்யக் கூடாது.

2. வைரத்திற்குச் சமமாக மேன்மையானவர்களாவதற்கு ஞான அமிர்தத்தைத் தானும் பருகி மற்றவர்களையும் பருகச் செய்ய வேண்டும். காம விகாரத்தின் மீது முழுமையாக வெற்றி பெற வேண்டும். தன்னை சதோபிரதானமானவராக மாற்றிக் கொள்ள வேண்டும். நினைவு பலத்தினால் பழைய கணக்கு வழக்குகள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும்.

வரதானம்:
சகஜயோகத்தின் சாதனையின் ( முயற்சியின் ) மூலம் சாதனங்களின் மீது வெற்றியடையக் கூடிய பிரயோகி ஆத்மா ( செயல் படுத்தும் ஆத்மா ) ஆகுக .

சாதனங்கள் இருந்தாலும், சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் யோகத்தின் நிலையில் தடுமாற்றம் ஏதும் இருக்கக் கூடாது. யோகி ஆகி பயன்படுத்துவதற்கு விடுபட்டவர் என்று அர்த்தம். (வேண்டியது) இருந்தாலும் கூட நிமித்தமாக மட்டும், ஆசையற்ற ரூபத்தில் பயன் படுத்துங்கள். ஒரு வேளை ஆசை இருந்தது என்றால் அந்த ஆசை நல்லவராக ஆக விடாது. உழைப்பதிலேயே நேரம் கடந்து விடும். அந்த சமயத்தில் நீங்கள் சாதனை செய்ய முயல்வீர்கள், சாதனங்கள் தம் பக்கமாக ஈர்க்கும். ஆகையால் பிரயோகியாக ஆகி சகயோகத்தின் சாதனையின் மூலம் சாதனங்களின் மீது அதாவது இயற்கையின் மீது வெற்றி பெற்றவராக ஆகுங்கள்.


சுலோகன்:
தானும் திருப்தியாக இருந்து அனைவரையும்

திருப்திப்படுத்துவதுதான் திருப்தி மணி ஆவதாகும்.