07.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு தந்தை என்ன கூறுகின்றாரோ அதை மட்டும் கேளுங்கள். அசுரத்தனமான விசயங்களைக் கேட்காதீர்கள், பேசாதீர்கள். கெட்டதைக் கேட்காதீர்கள், கெட்டதைப் பார்க்காதீர்கள் . . . . .

 

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களுக்கு எந்தவொரு நிச்சயம் தந்தை மூலம் தான் ஏற்பட்டது?

 

பதில்:

நான் உங்களது தந்தையாகவும் இருக்கிறேன், ஆசிரியராகவும், சத்குருவாகவும் இருக்கிறேன் என்று தந்தை உங்களுக்கு நிச்சயம் செய்விக்கிறார். நீங்கள் இதே நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்யுங்கள். ஆனால் மாயை இதை உங்களை மறக்கடிக்கிறது. அஞ்ஞான காலத்தில் மாயையின் விசயம் இல்லை.

 

கேள்வி:

எந்த சார்ட் வைப்பதில் விசால புத்தி தேவை?

 

பதில்:

தன்னை ஆத்மா என புரிந்து தந்தையை எவ்வளவு நேரம் நினைவு செய்தோம் - இந்த சார்ட் வைப்பதில் மிகவும் விசால புத்தி தேவை. ஆத்ம உணர்வுடன் தந்தையை நினைவு செய்யுங்கள், அப்போது பாவ கர்மங்கள் அழியும்.

 

ஓம் சாந்தி.

ஆசிரியர் வந்துவிட்டார் என மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், பரம சத்குருவாகவும் இருக்கிறார் என குழந்தைகள் அறிவார்கள். குழந்தைகளுக்கு நினைவில் இருக்கிறது - ஆனால் வரிசைக்கிரமமான முயற்சியின் அடிப்படையில். சட்டம் சொல்கிறது - ஆசிரியராக இருக்கிறார் அல்லது இவர் தந்தையாக இருக்கிறார், குருவாக இருக்கிறார் என ஒருமுறை தெரிந்து கொண்டு விட்டால், பிறகு மறக்க முடியாது. ஆனால் இங்கே மாயை மறக்கடித்து விடுகிறது. அஞ்ஞான காலத்தில் மாயை ஒரு போதும் மறக்கடிப்பதில்லை. இவர் நம்முடைய தந்தை, இவருக்கு இன்ன தொழில் என குழந்தை ஒருபோதும் மறக்க முடிவதில்லை. நாம் தந்தையின் செல்வத்திற்கு எஜமானன் என குழந்தைக்கு குஷி இருக்கும். தானும் படிக்கின்றனர், ஆனால் தந்தையின் ஆஸ்தி கிடைக்கிறது அல்லவா. இங்கே குழந்தைகளாகிய நீங்களும் படிக்கிறீர்கள், மேலும் தந்தையின் ஆஸ்தியும் உங்களுக்கு கிடைக்கிறது. நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தந்தை மூலம் நிச்சயம் ஏற்பட்டு விடுகிறது - நான் தந்தையுடையவன், தந்தைதான் சத்கதிக்கான வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார், ஆகையால் அவர் சத்குரு வாகவும் இருக்கிறார். இந்த விஷயங்களை மறக்கக் கூடாது. தந்தை சொல்லிக் கொடுப்பதைத்தான் கேட்க வேண்டும். கெட்டதைப் பார்க்காதே, கெட்டதை கேட்காதே..... என்று குரங்குகளின் பொம்மைகளைக் கொண்டு காட்டுகின்றனர், இது மனிதர்களின் விஷயமாகும். அசுரத்தனமான விஷயங்களைப் பேசாதீர்கள், கேட்காதீர்கள், பார்க்காதீர்கள் என்று தந்தை சொல்கிறார். கெட்டதைக் கேட்காதே.... இதை முதலில் குரங்குகளின் பொம்மைகளாக உருவாக்கினார்கள். இப்போது மனிதர்களைக் கொண்டு உருவாக்குகின்றனர். உங்களிடம் உள்ளது நளினியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆக நீங்கள் தந்தையை நிந்தனை செய்யும் விஷயங்களைக் கேட்காதீர்கள். என்னை எவ்வளவு நிந்தனை செய்கின்றார்கள் என்று தந்தை சொல்கிறார். உங்களுக்குத் தெரியும் - கிருஷ்ணரின் பக்தர்களின் முன்பாக அகர்பத்தியை ஏற்றி வைத்தால் இராமனின் பக்தர்கள் மூக்கை மூடிக்கொள்கின்றனர். ஒருவருக்கு மற்றவரின் நறுமணம் கூட பிடிக்கவில்லை. தங்களுக்குள் எதிரிகள் போல் ஆகிவிடுகின்றனர். இப்போது நீங்கள் இராம வம்சத்தவர்கள். முழு உலகமும் இராவண வம்சத்தவர்கள். இங்கே அகர் பத்தியின் விஷயம் எதுவும் இல்லை. தந்தையை எங்கும் நிறைந்தவர் என்று சொன்னதன் மூலம் என்ன கதி ஆனது என்பதை நீங்கள் அறிவீர்கள். கல், முள்ளில் இருப்பதாக சொன்னதால் புத்தி கல்லாகி விட்டது. என்றாலும் ஆஸ்தியைக் கொடுக்கக் கூடிய எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை எவ்வளவு நிந்தனை செய்கின்றனர். யாருக்குள்ளும் ஞானம் இல்லை. அவை ஞான ரத்தினங்கள் அல்ல; கற்கள் ஆகும். இப்போது நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். நான் யார், எப்படி இருக்கிறேன் என சரியான விதத்தில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்று தந்தை சொல்கிறார். குழந்தைகளிலும் வரிசைக்கிரமமாக உள்ளனர். தந்தையை சரியான முறையில் நினைவு செய்ய வேண்டும். அவரும் கூட இவ்வளவு சிறிய ஒளிப்புள்ளியாக இருக்கிறார், அவருக்குள் இந்த நடிப்பு அனைத்தும் அடங்கியுள்ளது. தந்தையை சரியான முறையில் தெரிந்து கொண்டு நினைவு செய்ய வேண்டும், தன்னை ஆத்மா என புரிந்து கொள்ள வேண்டும். நாம் குழந்தைகளாக இருக்கலாம், ஆனால் தந்தையின் ஆத்மா பெரியது, நமது சிறியது என்பதல்ல. தந்தை ஞானம் மிக்கவராக இருக்கலாம், ஆனால் ஆத்மா பெரியதாக ஆக முடியாது. உங்களின் ஆத்மாவுக்குள்ளும் ஞானம் இருக்கிறது, ஆனால் வரிசைக்கிரமமாக உள்ளது. பள்ளியில் கூட வரிசைக்கிரமமாக தேர்ச்சி அடைகின்றனர் அல்லவா. பூஜ்யம் மதிப்பெண் யாருக்கும் இருக்காது. ஏதாவது கொஞ்சம் மதிப்பெண்கள் எடுக்கின்றனர். நான் சொல்லக்கூடிய இந்த ஞானம் மறைந்து விடுகிறது. என்றாலும் கூட படங்கள் இருக்கின்றன, சாஸ்திரங்கள் கூட உருவாக்கப்பட்டிருக்கின்றன. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகிறார் - கெட்டதைக் கேட்காதே. . .இந்த அசுர உலகில் என்ன பார்க்க வேண்டும்? இந்த சீச்சீ உலகில் இருந்து கண்களை மூடிக் கொள்ள வேண்டும். இப்போது ஆத்மாவுக்கு நினைவு வந்துள்ளது, இது பழைய உலகம் ஆகும். இதனுடன் என்ன தொடர்பு வைப்பது? இந்த உலகைப் பார்த்தபடியே இருந்தாலும் பார்க்கக் கூடாது என்று ஆத்மாவுக்கு நினைவு வந்துள்ளது. தனது சாந்தி தாமம், சுக தாமத்தை நினைவு செய்ய வேண்டும். ஆத்மாவுக்கு ஞானத்தின் மூன்றாம் கண் கிடைத்துள்ளது எனும் போது இதை நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்திலும் அதிகாலை எழுந்து மாலையை உருட்டுகின்றனர். அதிகாலை முகூர்த்தத்தை நல்லது என்று புரிந்து கொள்கின்றனர். பிராமணர்களின் முகூர்த்தம் (நேரம்) ஆகும். பிரம்மா போஜனத்தின் மகிமையும் உள்ளது. பிரம்ம போஜனம் அல்ல, பிரம்மா போஜனம். உங்களைக் கூட பிரம்மா குமாரிகள் என்பதற்குப் பதிலாக பிரம்ம குமாரிகள் என்று சொல்லிவிடுகின்றனர். புரிந்து கொள்வதில்லை. பிரம்மாவின் குழந்தைகள் எனும்போது பிரம்மா குமார்-குமாரிகளாக இருப்பார்கள் அல்லவா. பிரம்மம் என்பது தத்துவம் ஆகும். வசிக்கக் கூடிய இடமாகும். அதற்கு என்ன மகிமை இருக்கும். தந்தை முறையிடுகிறார் - குழந்தைகளே, நீங்கள் ஒருபுறம் பூஜை செய்கிறீர்கள், மறுபுறம் பிறகு அனைவரையும் நிந்தனை செய்கிறீர்கள். நிந்தனை செய்து செய்து தமோபிரதானம் ஆகிவிட்டீர்கள். தமோபிரதானமாகவும் ஆகத்தான் வேண்டியுள்ளது. சக்கரம் மீண்டும் அதே போல சுற்றும். யாராவது பெரிய மனிதர்கள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு சக்கரத்தை வைத்து கண்டிப்பாகப் புரிய வைக்க வேண்டும். இந்த சக்கரம் 5 ஆயிரம் வருடத்திற்கானதாகும். இதன் மீது மிகவும் கவனம் வைக்க வேண்டும். இரவுக்குப் பின் கண்டிப்பாக பகல் வரத்தான் வேண்டும். இரவுக்குப் பின் பகல் வரக் கூடாது என்பது முடியாத விஷயம் ஆகும். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் கண்டிப்பாக வர வேண்டும். இந்த உலகின் வரலாறு புவியியல் மீண்டும் நடக்கிறது.

 

மேலும் தந்தை புரிய வைக்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள், ஆத்மாதான் அனைத்தும் செய்கிறது, நடிப்பை நடிக்கிறது. நாம் நடிகர்கள் என்றால் நாடகத்தின் முதல்-இடை-கடைசியைப் பற்றி கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. உலகின் வரலாறு-புவியியல் மீண்டும் நடக்கும் என்றால் நாடகமாகத்தான் உள்ளதல்லவா. ஒவ்வொரு வினாடியும் நடந்து முடிந்ததே மீண்டும் நடக்கும். இந்த விஷயங்களை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. புத்தி மந்தமானவர்கள் தேர்ச்சி அடைவதில்லை, பிறகு ஆசிரியர் கூட என்ன செய்ய முடியும். இரக்கம் காட்டுங்கள் என்றோ ஆசீர்வாதம் செய்யுங்கள் என்றோ ஆசிரியரிடம் சொல்ல முடியுமா என்ன? இதுவும் படிப்பாகும். இந்த கீதா பாடசாலையில் சுயம் பகவான் ராஜயோகம் கற்பிக்கிறார். கலியுகம் மாறி சத்யுகமாக கண்டிப்பாக ஆக வேண்டும். நாடகத்தின்படி தந்தையும் கூட வரவேண்டும். நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கம யுகத்தில் வருகிறேன். மேலும் யாரும் நான் சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் ஞானத்தை சொல்வதற்காக வந்துள்ளேன் என கூற முடியாது. தன்னை சிவோ ஹம் - நானே சிவன் என கூறுகின்றனர், இதனால் என்ன நடந்தது. சிவபாபா வருவதே படிப்பிப்பதற்காக, இராஜயோகம் கற்றுத் தருவதற்காகத்தான். எந்த சாது சன்னியாசியையும் சிவ பகவான் என சொல்ல முடியாது. நான் கிருஷ்ணன், லட்சுமி-நாராயணன் என்று பலரும் சொல்லிக் கொள்கின்றனர். இப்போது அந்த சத்யுகத்தின் இளவரசர் ஸ்ரீகிருஷ்ணன் எங்கே, இந்த கலியுகத்தின் அசுத்தமானவர்கள் எங்கே. இவர்களுக்குள் பகவான் இருக்கிறார் என சொல்ல முடியாது. இவர்கள் சத்யுகத்தில் இராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்தனர், பிறகு எங்கே சென்றார்கள்? என நீங்கள் கோவில்களில் சென்று கேட்க முடியும். சத்யுகத்திற்குப் பின் கண்டிப்பாக திரேதா, துவாபரம், கலியுகமாக ஆனது. சத்யுகத்தில் சூரிய வம்சத்தவரின் இராஜ்யம் இருந்தது, திரேதாவில் சந்திரவம்சத்தவர். . .இந்த ஞானம் முழுவதும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இத்தனை பிரம்மாகுமார்-குமாரிகள் உள்ளனர், கண்டிப்பாக பிரஜாபிதாவும் இருப்பார். பிறகு பிரம்மாவின் மூலம் மனித சிருஷ்டியை படைக்கிறார். பிரம்மா படைப்பவர் என்று சொல்லப்படுவதில்லை. அது இறைத் தந்தையாகும். எப்படி படைக்கிறார் என்பதை தந்தை நேரில் வந்துதான் புரிய வைக்கிறார், இந்த சாஸ்திரங்கள் பின்னர் உருவாகின - கிறிஸ்து புரிய வைத்தவை பிற்காலத்தில் பைபிள் ஆனது போல. பிறகு அமர்ந்து பாடுகின்றனர். இப்போது கிறிஸ்துவை என்னவென்று பாடுவது? அவர் ஏதும் குருவோ செய்தியாளரோ அல்ல. கதி, சத்கதி என்பது ஏதோ 5 - 7 பேருக்கு மட்டும் ஆவதில்லை. அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல், அனைவரையும் விடுவிப்பவர், பதித பாவனர் என ஒரு தந்தை பாடப் பட்டுள்ளார், இறைத் தந்தையே இரக்கம் காட்டுங்கள் என அவரை நினைவு செய்கின்றனர். கிறிஸ்துவே இரக்கம் காட்டுங்கள் என சொல்வதில்லை. ஒருவர் மட்டுமே தந்தை ஆவார். இவர் முழு உலகிற்கும் தந்தையாக இருப்பவர். அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுவிப்பவர் யார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. இப்போது படைப்பும் பழையதாக இருக்கிறது, மனிதர்களும் பழையவர்களாக, தமோபிரதானமாக இருக்கின்றனர். இது இரும்பு யுகத்தின் உலகமாகத்தான் உள்ளது. தங்க யுகம் இருந்ததல்லவா. பிறகு மீண்டும் கண்டிப்பாக இருக்கப் போகிறது. இந்த உலகம் வினாசமாகி விடும், உலகப் போர் நடக்கும், பலவிதமான இயற்கையின் பேராபத்துகளும் ஏற்படும். இதுதான் அந்த சமயமாகும். மனித சிருஷ்டி எவ்வளவு வளர்ந்து விட்டுள்ளது.

 

பகவான் வந்து விட்டார் என நீங்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். பிரம்மாவின் மூலம் ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என நீங்கள் அனைவருக்கும் சவால் விடுகிறீர்கள். நாடகத்தின்படி அனைவரும் கேட்கின்றனர். தெய்வீக குணங்களையும் தாரணை செய்கின்றனர். நமக்குள் எந்த குணமும் இருக்கவில்லை என நீங்கள் அறிவீர்கள். முதல் நம்பர் அவகுணம் காம விகாரமாகும். அது எவ்வளவு கஷ்டப்படுத்துகிறது. மாயையின் குத்துச் சண்டை நடக்கிறது. விரும்பாவிட்டாலும் மாயையின் புயல் காற்று விழ வைக்கிறது. இரும்பு யுகம் அல்லவா. முகத்தைக் கருப்பாக்கிக் கொள்கின்றனர். கரு நீல முகம் என சொல்ல முடியாது. கிருஷ்ணரைக் குறித்து சொல்லும்போது பாம்பு தீண்டியதால் கரு நீல நிறமாகிவிட்டார் என்று காட்டுகின்றனர். கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கரு நீல நிறம் என சொல்லிவிட்டனர். கருப்பு முகம் என சொன்னால் கௌரவம் கெட்டு விடும். ஆக, தூர தேசம், நிராகார தேசத்திலிருந்து பிரயாணி வருகிறார். இரும்பு யுகத்தில், கருப்பு சரீரத்தில் வந்து இவரையும் வெள்ளையாக ஆக்குகிறார். நீங்கள் மீண்டும் சதோபிரதானமாக ஆக வேண்டும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவ கர்மங்கள் அழிந்து விடும், மேலும் நீங்கள் விஷ்ணுபுரியின் எஜமான் ஆக ஆகிவிடுவீர்கள். இந்த ஞான விஷயங்கள் புரிந்து கொள்ள வேண்டியவையாகும். பாபா ஞானம் யோகத்தில் சிறந்தவர்,. தேஜோமயமான ஒளிப்புள்ளியாக உள்ளார். அவருக்குள் ஞானமும் இருக்கிறது. பெயர் உருவத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவருடைய ரூபம் என்ன என்பது உலகத்திற்குத் தெரியாது. தந்தை உங்களுக்குப் புரிய வைக்கிறார், என்னையும் ஆத்மா என்று சொல்கின்றனர், பரம ஆத்மாவாக மட்டும் இருக்கிறேன். பரம ஆத்மா என்பது பரமாத்மா என ஆகிவிட்டது. தந்தையாகவும், ஆசிரியராகவும் கூட இருக்கிறார். ஞானம் நிறைந்தவர் என்றும் சொல்கின்றனர். ஞானம் நிறைந்தவர் என்றால் அனைவரின் மனதையும் அறிந்தவர் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர். பரமாத்மா எங்கும் நிறைந்தவர் என்றால் பிறகு அனைவருமே ஞானம் நிறைந்தவர்கள் என்றாகி விட்டது. பிறகு அந்த ஒருவரை ஏன் சொல்ல வேண்டும்? மனிதர்களுக்கு எவ்வளவு கீழான புத்தி உள்ளது. ஞானத்தின் விஷயங்களை முற்றிலும் புரிந்து கொள்வதில்லை. தந்தை ஞானம் மற்றும் பக்தி இவற்றின் வித்தியாசத்தை அமர்ந்து புரிய வைக்கிறார் முதலில் ஞானம் பகலாக இருக்கிறது - சத்ய, திரேதா யுகம், பிறகு துவாபர-கலியுகம் இரவு. ஞானத்தின் மூலம் சத்கதி ஏற்படுகிறது. இந்த ராஜயோகத்தின் ஞானத்தை ஹடயோகிகள் புரிய வைக்க முடியாது. இல்லறவாசிகள் புரிய வைக்க முடியாது, ஏனென்றால் தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர். இப்போது இராஜயோகம் யார் கற்றுத் தருவது? என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் பாவகர்மங்கள் அழியும் என்று சொல்லக் கூடியவரோ அவர்தான். துறவற மார்க்கத்தின் தர்மமே தனியானது. அவர்கள் இல்லற மார்க்கத்தின் ஞானத்தை எப்படி சொல்வார்கள்? இங்கே அனைவரும் சொல்கின்றனர் இறைத்தந்தை சத்தியமானவர். தந்தைதான் உண்மையை உரைப்பவர். ஆத்மாவுக்கு பாபாவின் நினைவு வந்துள்ளது, ஆகையால், வந்து நரனிலிருந்து நாராயணராகக் கூடிய கதையை சொல்லுங்கள் என்று தந்தையை நினைவு செய்கின்றனர். உங்களுக்கு இந்த சத்ய நாராயணரின் கதையை சொல்கிறேன் அல்லவா. முன்னர் நீங்கள் பொய்யான கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். இப்போது நீங்கள் உண்மையானதைக் கேட்கிறீர்கள். பொய்யான கதைகளை கேட்டு கேட்டு யாரும் நாராயணர் ஆக முடியாது, பிறகு அது எப்படி சத்ய நாராயணன் கதை ஆகும்? மனிதர்கள் யாரையும் நரனிலிருந்து நாராயணனாக ஆக்க முடியாது. தந்தைதான் வந்து சொர்க்கத்தின் எஜமான் ஆக்குகிறார். தந்தை வருவதும் பாரத தேசத்தில்தான். ஆனால் எப்போது வருகிறார் என்பது யாருக்கும் புரியாது. சிவனையும் சங்கரனையும் ஒன்றாக்கி கதைகளை உருவாக்கிவிட்டனர். சிவ புராணமும் இருக்கிறது. கீதையை கிருஷ்ணருடையது என்று சொல்கின்றனர், பிறகு சிவ புராணம் பெரியதாக ஆகி விட்டது. உண்மையில் ஞானம் கீதையில் உள்ளது. பகவானுடைய மகா வாக்கியம் - மன்மனாபவ. இந்த வார்த்தை கீதையைத் தவிர வேறு எந்த சாஸ்திரத்திலும் இருக்க முடியாது. அனைத்து சாஸ்திரங்களிலும் உயர்வான கீதை என்று பாடவும் படுகிறது. உயர்ந்த வழி பகவானுடையதுதானாகும். நாங்கள் சொல்கிறோம் இன்னும் சில வருடங்களுக்குள் புதிய சிரேஷ்டாச்சாரி உலகம் ஸ்தாபனை ஆகி விடும் என்று முதன் முதலில் கூற வேண்டும். இப்போது உள்ளது கீழான உலகம். சிரேஷ்டாச்சாரி உலகில் எவ்வளவு குறைவான மனிதர்கள் இருப்பார்கள். இப்போது எவ்வளவு அளவற்ற மனிதர்கள் இருக்கின்றனர். அதற்காக வினாசம் எதிரில் உள்ளது. தந்தை இராஜயோகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. தந்தையிடமிருந்துதான் கேட்கின்றனர். யாரிடமாவது செல்வம் அதிகமாக இருக்கும், குழந்தை இருக்கும் என்றால் பகவான் கொடுத்தார் என்று சொல்வார்கள். ஆக, பகவான் ஒருவர் என்றாகி விட்டார் அல்லவா, பிறகு அனைவருக்குள்ளும் பகவான் எப்படி இருக்க முடியும்? இப்போது ஆத்மாக்களுக்கு தந்தை சொல்கிறார் - என்னை நினைவு செய்யுங்கள். எங்களுக்கு பரமாத்மா ஞானம் கொடுத்தார், பிறகு அதனை நாங்கள் சகோதரர்களுக்குக் கொடுக்கிறோம் என்று ஆத்மா சொல்கிறது. தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை எவ்வளவு நேரம் நினைவு செய்தோம் என சார்ட் எழுதுவதற்கு விசால புத்தி தேவை. ஆத்ம அபிமானி ஆகி தந்தையை நினைவு செய்ய வேண்டியுள்ளது, அப்போதுதான் பாவ கர்மங்கள் அழியும். ஞானம் மிகவும் சகஜமானதுதான், மற்றபடி ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்து தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இந்த சார்ட்டை அபூர்வமாக சிலர்தான் வைக்கின்றனர். ஆத்ம அபிமானி ஆகி தந்தையின் நினைவில் இருப்பதன் மூலம் ஒருபோதும் யாருக்கும் துக்கம் கொடுக்க மாட்டீர்கள். தந்தை வருவதே சுகத்தைக் கொடுப்பதற்காகத்தான் எனும்போது குழந்தைகளும் அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். ஒரு போதும் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. தந்தையின் நினைவின் மூலம் அனைத்து பூதங்களும் ஓடி விடும். மிகவும் குப்தமான முயற்சி ஆகும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. இந்த அசுரத்தனமான, கீழான உலகத்திலிருந்து தனது கண்களை மூடிக் கொள்ள வேண்டும். இது பழைய உலகமாகும், இதில் எந்த தொடர்பும் வைக்கக் கூடாது, இதனை பார்த்துக் கொண்டே பாராமல் இருக்க வேண்டும்.

 

2. இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தில் நாம் நடிகர்கள், இது ஒவ்வொரு வினாடியும் மீண்டும் மீண்டும் நடந்துக் கொண்டிருக்கிறது, எது நடந்து முடிந்ததோ அது மீண்டும் நடக்கும். . . இதனை நினைவில் வைத்து அனைத்து விஷயங்களிலும் தேர்ச்சி அடைய வேண்டும். விசால புத்தியுள்ளவராக வேண்டும்.

 

வரதானம்:

உயர்ந்த முறையான செயல்கள் மூலம் மன நிலையை மாற்றம் செய்யக் கூடிய சதா வெற்றி சொரூபமானவர் ஆகுக.

 

வெற்றி சொரூபம் ஆவதற்காக நற்செயல்கள் மூலம் மனநிலையை, மற்றும் நல்லெண்ணங்கள் மூலம் வீணான எண்ணங்களை மாற்றம் செய்யக் கூடிய காரியம் செய்யுங்கள். இதைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். இந்த சேவையில் சுறு சுறுப்பாகி விடும் போது இந்த சூட்சும சேவை தானாகவே பல பலவீனங்களை கடக்க வைத்து விடும். இப்போது இதற்கான திட்டம் தீட்டும் போது புதியவர்கள் அதிகமாவார்கள், வருமானமும் அதிகரிக்கும், கட்டடமும் கிடைத்து விடும் - எல்லா பலன்களும் எளிதாக கிடைத்து விடும். இந்த விதி வெற்றி சொரூபமானவர்களாக ஆக்கி விடும்.

 

சுலோகன்:

நேரத்தை வெற்றியுடையதாக்கும் போது நேரத்தின் ஏமாற்றத்திலிருந்து தப்பித்து விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி