07-02-2021 காலை முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 29-10-1987


உடல், மனம், செல்வம் மற்றும் சம்மந்தத்தின் சக்தி

இன்று சர்வ சக்திவான் பாபா தம்முடைய சக்திசாலிக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் சக்திசாலி ஆகியிருக்கிறார். ஆனால் நம்பர்வார் உள்ளனர். சர்வ சக்திகள் பாபாவின் ஆஸ்தி மற்றும் வரங்களை வழங்கும் வள்ளலின் (வரதாதாவின்) வரதானம். தந்தை மற்றும் வரங்களை வழங்கும் வள்ளல் -- இந்த இரட்டை சம்மந்தத்தின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த சிரேஷ்ட பிராப்தி ஜென்மத்திலிருந்தே உள்ளது. ஜென்மத்திலிருந்தே பாபா சர்வ சக்திகளின், அதாவது பிறப்புரிமையின் அதிகாரி ஆக்கி விடுகிறார். அதனுடன் கூடவே வரதாதா என்ற நிலையில், ஜென்மம் எடுத்ததுமே மாஸ்டர் சர்வசக்திவான் ஆக்கி, சர்வசக்தி பவ என்ற வரதானத்தைக் கொடுத்து விடுகிறார். குழந்தைகள் அனைவர்க்கும் ஒருவர் மூலமாக ஒரே மாதிரி யான இரட்டை அதிகாரம் கிடைக்கிறது. ஆனால் தாரணை செய்வதற்கான சக்தி நம்பர்வார் ஆக்கி விடுகிறது. பாபா அனைவரையும் சதா மற்றும் சர்வ சக்திசாலி ஆக்கி விடுகிறார். ஆனால் குழந்தைகள் அவர்களது சக்திக்கேற்றவாறு ஆகி விடுகின்றனர். அது போல் லௌகிக வாழ்க்கையில் அல்லது அலௌகிக வாழ்க்கையில் வெற்றிக்கான ஆதாரம் சக்திகள் தாம். எவ்வளவு சக்திகளோ அவ்வளவு வெற்றி. முக்கியமான சக்திகள் -- உடலின், மனதின், செல்வத்தின் மற்றும் சம்மந்தத்தின் சக்திகள் -- நான்குமே அவசியம். நான்கில் ஒரு சக்தி குறைவாக இருந்தாலோ, வாழ்க்கையில் சதா மற்றும் சர்வ வெற்றி கிடைப்பதில்லை. அலௌகிக வாழ்க்கையில் கூட நான்கு சக்திகளும் அவசியம்.

இந்த அலௌகிக வாழ்க்கையில் ஆத்மா மற்றும் இயற்கை (சரீரம்) இரண்டின் ஆரோக்கியமும் அவசியம். ஆத்மா ஆரோக்கியமாக உள்ளதென்றால் உடலின் கணக்கு-வழக்கு அல்லது உடலின் நோய், ஈட்டியிலிருந்து முள்ளாகி விடுகிற காரணத்தால், சுய ஸ்திதியின் காரணத்தால் ஆரோக்கி யத்தை அனுபவம் செய்கிறது. அவர்களின் வாயில், முகத்தில் நோயின் கஷ்டத்தினுடைய சின்னம் இருப்பதில்லை. வாயில் ஒரு போதும் நோய் பற்றிய வர்ணனை செய்யப் படுவதில்லை. கர்ம போகத்தின் வர்ணனைக்கு பதிலாக கர்மயோகத்தின் ஸ்திதியினுடைய வர்ணனை செய்கின்றனர். ஏனென்றால் நோயின் வர்ணனையும் கூட நோயை அதிகப் படுத்துவதற்கான காரணம் ஆகி விடுகிறது. அவர்கள் ஒரு போதும் நோயின் கஷ்டத்தை அனுபவம் செய்ய மாட்டார்கள். மற்றவர் களுக்கு கஷ்டத்தைப் பற்றிச் சொல்லி கஷ்டத்தின் அலையைப் பரப்ப மாட்டார்கள். மேலும் மாற்றம் செய்யும் சக்தி மூலம் கஷ்டத்தைத் திருப்தியாக மாற்றம் செய்து திருப்தியாக இருந்து, மற்றவர் களிடமும் திருப்தியின் அலை பரவச் செய்வார்கள். அதாவது மாஸ்டர் சர்வசக்திவான் ஆகி, சக்தியின் வரதானங்களில் சமயத்தின் பிரமாணம் பொறுமை சக்தி, உள்ளடக்கும் சக்தியைப் பிரயோகம் செய்வார்கள். மேலும் சமயத்தில் சக்திகளின் வரதானம் மற்றும் ஆஸ்தியைக் காரியத்தில் கொண்டு வருவது -- இது தான் அவர்களுக்கு வரதானம். அதாவது ஆசிர்வாதம் மருந்தின் வேலையைச் செய்யும். ஏனென்றால் சர்வசக்திவான் தந்தை மூலம் கிடைக்கும் சர்வ சக்திகளை, எப்படி பரிஸ்திதி, எப்படி சமயம் மற்றும் எந்த விதி மூலம் நீங்கள் காரியத்தில் ஈடுபடுத்த விரும்புகிறீர்களோ, அதே ரூபத்தில் இந்த சக்திகள் உங்களுக்கு சகயோகி ஆகி விடும். இந்த சக்திகளை அல்லது பிரபு-வரதானத்தை எந்த ரூபத்தில் விரும்புகிறீர்களோ, அந்த ரூபத்தில் தாரணை செய்ய முடியும். அவ்வப் போது குளிர்ச்சியின் ரூபத்தில், அவ்வப்போது எரிக்கும் (அக்னி) ரூபத்தில். நீரின் குளிர்ச்சியையும் கூட அனுபவம் செய்விக்க முடியும். நெருப்பு எரிப்பதையும் அனுபவம் செய்விக்க முடியும். மருந்தின் வேலையும் செய்ய முடியும் மற்றும் சக்திசாலி ஆக்குவதற்கான லேகியத்தின் (சத்து மருந்து) வேலை செய்ய முடியும். சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்துவதற்கான அத்தாரிட்டியாக மட்டும் ஆகுங்கள். இந்த சர்வ சக்திகள், மாஸ்டர் சர்வசக்திவானாகிய உங்களுக்கு சேவாதாரிகள். எப்போது எதைக் கட்டளையிடுகிறீர்களோ, அப்போது அது இதோ ஆஜர் பிரபு என்று சொல்லி சகயோகி ஆகி விடும். ஆனால் வேலை வாங்குபவரும் கூட அவ்வளவு சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டும். ஆக, உடலின் சக்தி, ஆத்மிக சக்தியின் ஆதாரத்தில் சதா அனுபவம் செய்ய முடியும். அதாவது சதா ஆரோக்கியமாக இருப்பதாக அனுபவம் செய்ய முடியும்.

இந்த அலௌகிக பிராமண வாழ்க்கையே சதா ஆரோக்கியமான வாழ்க்கை. வரங்களை வழங்கும் வள்ளலிடம் இருந்து சதா ஆரோக்கியவான் ஆகுக என்ற வரதானம் கிடைத்துள்ளது. பாப்தாதா பார்க்கிறார் -- கிடைத்துள்ள வரதானங்களை அநேக குழந்தைகள் சமயத்தில் காரியத்தில் கொண்டு வந்து லாபமடைய முடிவதில்லை அல்லது இப்படிச் செய்கிறார்கள் -- அதாவது சக்திகளிடமிருந்து, அதாவது சேவாதாரிகளிடம் இருந்து தங்களின் விசாலத் தன்மை மற்றும் விசால புத்தி மூலம் சேவை பெற்றுக் கொள்வதில்லை. மாஸ்டர் சர்வசக்திவான் என்ற ஸ்திதி ஒன்றும் குறைந்ததில்லை. இது சிரேஷ்ட ஸ்திதியாகவும் உள்ளது, அதனுடன் கூடவே நேரடியாகப் பரமாத்மா மூலம் பரம டைட்டிலும் கூட. டைட்டிலின் நஷா எவ்வளவு வைக்கின்றனர்! டைட்டில் எவ்வளவு காரியங்களைப் பயனுள்ளதாக்கி விடுகிறது! ஆக, இது பரமாத்ம டைட்டில், இதில் எவ்வளவு குஷி மற்றும் சக்தி நிறைந்துள்ளது! இந்த ஒரு டைட்டிலின் ஸ்திதி என்ற இருக்கையில் செட்டாகி அமர்ந்து விட்டால் இந்த சர்வ சக்திகள் சேவைக்காக சதா ஆஜராகி இருப்பதாக அனுபவம் ஆகும் -- உங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கும். ஆகவே வரதானங்களை அல்லது ஆஸ்தியைக் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். மாஸ்டர் சர்வசக்திவான் என்ற சுவமானத்தில் நிலைத்திருக்கவில்லை என்றால் சக்திகளைக் கட்டளைப்படி நடத்துவதற்கு பதிலாக அடிக்கடி பாபாவிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டே இருக்கின்றனர் -- அதாவது இந்த சக்தியைக் கொடுங்கள், இந்த எனது காரியத்தைச் செய்து கொடுங்கள், இது நடந்துவிட வேண்டும், இப்படி ஆகிவிட வேண்டும். ஆக, கோரிக்கை அல்லது வேண்டுதல் வைப்பவர்கள் ஒரு போதும் சதா திருப்தியடைந்தவராக இருக்க முடியாது. ஒரு விஷயம் பூர்த்தியாகும், இரண்டாவது ஆரம்பமாகி விடும். ஆகவே மாலிக் ஆகி. யோகயுக்த் ஆகி, யுக்தியுக்த் சேவையை (சக்திகளாகிய) சேவாதாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்வீர்களானால் சதா ஆரோக்கிய மாக இருப்பதாக தானாகவே அனுபவம் செய்வீர்கள். இதைத் தான் உடலின் சக்தியினுடைய பிராப்தி எனச் சொல்வது.

அதைப் போலவே மனதின் சக்தி, அதாவது சிரேஷ்ட சங்கல்ப சக்தி, மாஸ்டர் சர்வசக்திவானின் ஒவ்வொரு சங்கல்பத்திலும் அவ்வளவு சக்தி உள்ளது -- அதன் மூலம் எந்தச் சமயம் எதை விரும்பு கிறார்களோ, அதைச் செய்ய முடியும் மற்றும் செய்விக்கவும் முடியும். ஏனென்றால் அவர்களின் சங்கல்பம் சதா சுப, சிரேஷ்ட மற்றும் நன்மை செய்வதாக இருக்கும். ஆகவே எங்கே சிரேஷ்ட நன்மையின் சங்கல்பம் உள்ளதோ, அது அவசியம் வெற்றி பெறும் மற்றும் மாஸ்டர் சர்வசக்திவானாக இருப்பதால் மனம் ஒரு போதும் எஜமானுக்கு ஏமாற்றம் தர முடியாது. துக்கத்தை அனுபவம் செய்விக்க முடியாது. மனம் ஏகாக்ர நிலையில் -- அதாவது ஓரிடத்தில் நிலைத்திருக்கும், அலையாது. எங்கே விரும்புகிறீர்களோ, எப்போது விரும்புகிறீர்களோ, மனதை அங்கே நிலைநிறுத்த முடியும். ஒரு போதும் மனம் சோர்வடையாது. ஏனென்றால் அந்த சேவாதாரி தாசராகி விடுவார். இது தான் மனதின் சக்தி -- இது அலௌகிக வாழ்க்கையில் ஆஸ்தி அல்லது வரதானமாகக் கிடைத்துள்ளது.

இதே விதமாக, மூன்றாவது செல்வத்தின் சக்தி -- ஞான செல்வம் இருந்தால் அது ஸ்தூல செல்வத்தின் பிராப்தியைத் தானாகவே செய்விக்கிறது. எங்கே ஞான செல்வம் உள்ளதோ, அங்கே இயற்கை தானாகவே தாசி ஆகிவிடும். இந்த ஸ்தூல செல்வம் இயற்கையின் சாதனத்திற்காகத் தான். ஞான செல்வத்தின மூலம் இயற்கையின் அனைத்து சாதனங்களும் தானாகவே கிடைத்து விடும். ஆகவே ஞான செல்வம் அனைத்து செல்வங்களின் ராஜாவாக உள்ளது. எங்கே ராஜா இருக்கிறாரோ, அங்கே சர்வ பதார்த்தங்களும் தானாகவே கிடைத்து விடும். முயற்சி செய்ய வேண்டியதில்லை. எந்த ஒரு லௌகிகப் பதார்த்தத்தையும் அடைவதில் முயற்சி செய்ய வேண்டி உள்ளது என்றால் இதன் காரணம் ஞான செல்வத்தின் குறைபாடு தான். உண்மையில் ஞானசெல்வம் பல கோடிக்கு அதிபதி ஆக்கக் கூடியது. பரமார்த்த விவகாரத்தைத் தானாகவே வெற்றி பெறச் செய்கிறது. ஆக, பரமாத்ம செல்வம் (ஞான செல்வம்) உள்ளவர்கள் பரமார்த்தி (ஆன்மிக உண்மையை நாடுபவர்) ஆகி விடுகின்றனர். சங்கல்பம் செய்வதற்கும் கூடத் தேவை இல்லை. தானாகவே அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகிக் கொண்டே இருக்கும். செல்வத்திற்கு அவ்வளவு சக்தி உள்ளது -- அநேக ஜென்மங்கள் இந்த ஞான செல்வம் ராஜாவுக்கெல்லாம் மேலான ராஜாவாக ஆக்கி விடுகிறது. ஆக, செல்வத்தின் சக்தியும் சகஜமாகக் கிடைத்து விடுகிறது.

இதே போல் சம்மந்தத்தின் சக்தி. சம்மந்தத்தின் சக்தியின் பிராப்திக்கான சுய இச்சை ஏற்படுவது ஏனென்றால் சம்மந்தத்தில் சிநேகம் மற்றும் சகயோகத்தின் பிராப்தி உள்ளது. இந்த அலௌகிக வாழ்க்கையில் சம்மந்தத்தின் சக்தி இரட்டை ரூபத்தில் கிடைக்கிறது. நீங்கள் அறிவீர்கள், இரட்டை சம்மந்தத்தின் சக்தி எப்படிக் கிடைக்கிறது என்று. ஒன்று -- தந்தை மூலம் சர்வ சம்மந்தம், இரண்டாவது தெய்விகப் பரிவாரத்தின் மூலம் சம்மந்தம். ஆக, இரட்டை சம்மந்தம் ஆகி விட்டது இல்லையா? -- தந்தையோடும் மற்றும் தங்களுக்குள்ளும் (பரிவாரத்துடன்). ஆக, சம்மந்தத்தின் மூலம் சதா சுயநலமற்ற அன்பு, அவிநாசி அன்பு மற்றும் அவிநாசி சகயோகம் சதா பிராப்தியாகிக் கொண்டே இருக்கிறது. ஆக, சம்மந்தத்தின் சக்தியும் உள்ளது இல்லையா? அதே போல் தந்தை, குழந்தையை ஏன் விரும்புகிறார் அல்லது குழந்தை, தந்தையை ஏன் விரும்புகிறது? சகயோகத்திற்காக, சமயத்தில் சகயோகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆகவே இந்த அலௌகிக வாழ்க்கையில் நான்கு சக்திகளின் பிராப்தி வரதான ரூபத்தில், ஆஸ்தியின் ரூபத்தில் உள்ளது. எங்கே நான்கு விதமான சக்திகள் கிடைக்கின்றனவோ, அவர்களின் ஒவ்வொரு நேரத்தின் ஸ்திதி எப்படி இருக்கும்? சதா மாஸ்டர் சர்வசக்திவான் என்ற ஸ்திதியின் இருக்கையில் சதா நிலைத்திருக்கிறீர்களா? இதைத் தான் வேறு சொற்களில் சுயத்தின் ராஜா அல்லது ராஜயோகி என்று சொல்வது. இராஜாக்களின் கஜானா சதா நிறைந்திருக்கும். ஆக, இராஜயோகி என்றால் சதா சக்திகளின் கஜானா நிறைந்தவராக இருப்பார். புரிந்ததா? இது தான் சிரேஷ்ட பிராமண அலௌகிக வாழ்க்கை எனச் சொல்லப்படும். சதா மாலிக் ஆகி சர்வ சக்திகளைக் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். சக்திக்கேற்றவாறு என்பதற்கு பதிலாக சதா சக்திசாலி ஆகுங்கள். வேண்டுதல் வைப்பவராக இல்லாமல், சதா திருப்தியானவராக ஆகுங்கள். நல்லது.

மதுபனுக்கு வருவதற்கான வாய்ப்போ அனைவருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது இல்லையா? கிடைத்துள்ள இந்த பாக்கியத்தை சதா கூடவே வைத்துக் கொள்ளுங்கள். பாக்கியவிதாதாவை உடன் வைத்துக் கொள்வது என்றால் பாக்கியத்தை உடன் வைத்துக் கொள்வதாகும். மூன்று மண்டலங் களைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். வெவ்வேறு இடங்களின் மூன்று நதிகள் வந்து ஒன்று சேர்ந்திருக்கின்றன. இதைத் திரிவேணி சங்கமம் எனச் சொல்கின்றனர். பாப்தாதாவோ வரதாதா ஆகி அனைவர்க்கும் வரதானம் கொடுக்கிறார். வரதானங்களைக் காரியத்தில் ஈடுபடுத்துவது என்பது ஒவ்வொருவர் மீதும் உள்ளது. நல்லது.

நாலாபுறமும் உள்ள அனைத்து ஆஸ்தி மற்றும் வரதானங்களுக்கு அதிகாரிகளாகிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சர்வ மாஸ்டர் சர்வசக்திவான் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா திருப்தியின் அலையைப் பரப்புகின்ற திருப்தி நிறைந்த ஆத்மாக்களுக்கு, சதா பரமார்த்தத்தின் மூலம் விவகாரத் தில் சித்தி பெறக்கூடிய மகான் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் சிநேகம் மற்றும் சக்தி நிறைந்த அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

அனைவரின் சகயோகத்தின் மூலம் சுகமய உலகம் என்ற நிகழ்ச்சி (புரோகிராம்) பற்றிய பாப்தாதாவின் பிரேரணைகள் --

இந்த விசயம் அப்படிப்பட்டது -- சுயம் அனைவரும் சகயோகம் தருவதற்கு முன்வருவார்கள். சகயோகத்தின் மூலம் பிறகு சம்மந்தத்திலும் கூட வருவார்கள். ஆகவே தாங்களாகவே முன்வருவார்கள். சுப பாவனை, சுப விருப்பம் நிறைந்த சேவையில் சேவாதாரிகள் முன்னேற வேண்டும். சுப பாவனையின் பலன் கிடைக்கவில்லை என்பது இருக்கவே முடியாது. சேவாதாரிகளின் சுப பாவனை, சுப விருப்பத்தின் பூமி சகஜமாக பலனளிப்பதற்கு நிமித்தமாகி விடும். பலன் தயாராக உள்ளது. பூமியைத் தயார் செய்வதில் மட்டும் கொஞ்சம் தாமதமாகிறது. பலனோ உடனடியாக வெளிப்படும். ஆனால் அதற்காகத் தகுதியுள்ள பூமி வேண்டும். இப்போது அந்த பூமி தயாராகிக் கொண்டிருக்கிறது.

அது போல் சேவையோ அனைவருக்காகவும் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் பிறகும் கூட யார் விசேஷஅதிகாரிகளாக உள்ளனரோ, அவர்களில் யாரும் சமீபத்தில் வரவில்லை. இராஜ்ய அதிகாரிகளுக்கு சேவை நடந்திருந்தாலும் சரி, அல்லது தர்மத் தலைவர்களுக்கு நடந்திருந்தாலும் சரி, ஆனால் சகயோகி ஆகி முன்னால் வர வேண்டும். சமயத்தில் சகயோகி ஆக வேண்டும் என்ற அவசியம் உள்ளது. அதற்காக சக்திசாலி அம்பை எய்த வேண்டியிருக்கும். யாரிடம் சர்வ ஆத்மாக்களின் சகயோக பாவனை உள்ளதோ, குஷியின் பாவனை உள்ளதோ, சத்பாவனை (நல்லெண்ணம்) உள்ளதோ, அவர் தாம் சக்திசாலி அம்பாகப் பார்க்கப் படுகிறார். இதன் மூலம் ஒவ்வொரு காரியமும் சகஜமாக வெற்றி பெறும். இப்போது செய்யும் சேவையை நீங்கள் தனித் தனியாகச் செய்கிறீர்கள். ஆனால் எப்படி முன்பெல்லாம் யாராவது ஒரு காரியம் செய்வதற்குச் செல்கிறார் என்றால் முழுப் பரிவாரத்தின் ஆசிர்வாதம் பெற்றுச் செல்வார். அந்த ஆசிர்வாதம் தான் காரியத்தை சகஜமாக்கி விடுகிறது. ஆகவே இப்போதைய சேவையில் அதை (ஆசிர்வாதத்தை)க் கூடுதலாகச் சேர்க்க வேண்டும். ஆக, எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் அனைத்து சுப பாவனைகள், சுப விருப்பங்களைப் பெறுங்கள். அனைவருடைய திருப்தியின் பலத்தை நிரப்புங்கள். அப்போது சக்திசாலி பலன் வெளிப்படும். இப்போது அவ்வளவு முயற்சி செய்வதற்குத் தேவையில்லை. அனைவரும் உள்ளீடற்ற வெறும் கூடாக ஆகி விட்டுள்ளனர். முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஊதினால் போதும், பறந்து இங்கே வந்து விழுந்து விடுவார்கள். அந்த மாதிரி வெறும் கூடாக உள்ளனர். மேலும் தற்பொழுதோ அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் -- கட்டுப்படுத்துவதற்கு இன்னும் ஏதாவது சக்தி வேண்டும் -- இராஜ்யத்தின் அல்லது தர்மத்தின் சக்தி. உள்ளுக்குள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். பிராமண ஆத்மாக்களின் சேவைக்கான விதியில் மட்டும் வித்தியாசம் வேண்டும். அதுவே மந்திரமாகி விடும். இப்போதோ மந்திரம் சொல்லுங்கள், உடனே வெற்றி கிடைக்க வேண்டும். 50 வருட முயற்சி செய்தீர்கள். இவையனைத்தும் நடக்கத் தான் செய்தது. அனுபவி ஆகி விட்டீர்கள். இப்போது ஒவ்வொரு காரியத்திலும் இதே லட்சியம் வையுங்கள் -- அனைவரின் சகயோகத்தின் மூலம் வெற்றி --- பிராமணர்களுக்காக இந்தத் தலைப்பு. மற்றப்படி உலக மக்களுக்காகத் தலைப்பு -- அனைவரின் சகயோகத்தால் சுகமய உலகம்.

நல்லது. இப்போதோ உங்கள் அனைவரின் வெற்றியினுடைய பிரத்தியட்ச ரூபம் காணப்படும். ஏதாவது கெட்டுப்போன காரியமும் கூட உங்கள் திருஷ்டியால், உங்கள் சகயோகத்தால் சகஜமாக முடிந்து விடும். இதன் காரணத்தால் பக்தியில் போற்றி போற்றி எனச் சொல்லி அழைப்பார்கள். இந்த அனைத்து வெற்றிகளும் கூட உங்கள் முன்னால் பிரத்தியட்ச ரூபத்தில் வரும். எந்த ஒரு சித்தியின் ரீதியிலும் நீங்கள் சொல்ல மாட்டீர்கள் -- ஆம், இது நடந்து விடும் என்று. ஆனால் உங்கள் வழி காட்டுதல் தானாகவே வெற்றி பெற வைத்துக் கொண்டே இருக்கும். அப்போது தான் பிரஜைகள் சீக்கிரம்-சீக்கிரமாகத் தயாராவார்கள். அனைத்துத் தரப்பிலும் இருந்து வெளிப்பட்டு உங்கள் பக்கம் வருவார்கள். இந்த சித்தியின் பாகம் (நினைத்ததை நடத்திக் காட்டும் வித்தை) இப்போது நடைபெறும். ஆனால் முதலில் அவ்வளவு சக்திசாலி ஆகுங்கள் -- சித்தியை ஸ்வீகாரம் செய்யாதீர்கள். அப்போது தான் இந்தப் பிரத்தியட்சதா (வெளிப்படுத்துதல்) நடைபெறும். இல்லையென்றால் சித்தி கொடுப்பவரே சித்தியில் சிக்கிக் கொள்வாரானால் பிறகு என்ன செய்வீர்கள்? ஆக, இந்த அனைத்து விஷயங்களும் இங்கிருந்தே தொடங்க வேண்டும். பாபாவுக்கான மகிமை -- அதாவது அவர் சர்ஜனாகவும் இருக்கிறார், இஞ்சினியராகவும் இருக்கிறார், வக்கீலாகவும் இருக்கிறார், நீதிபதியாகவும் இருக்கிறார் என்பத னுடைய நடைமுறை அனைத்தும் அனுபவம் செய்வார்கள். அப்போது அனைத்துத் தரப்பிலிருந்தும் புத்தியை நீக்கி ஒரு பக்கமாகச் செலுத்துவார்கள். இப்போதோ உங்களுக்குப் பின்னால் பெருங்கூட்டம் கூடப்போகிறது. பாப்தாதாவோ இந்தக் காட்சியைப் பார்க்கிறார் மற்றும் அவ்வப்போது இப்போதைய காட்சியையும் பார்க்கிறார் -- அதற்கும் இதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. நீங்கள் யாரென்பது பாபாவுக்குத் தெரியும். மிகமிக அற்புதமான பாகம் இப்போது நடைபெறப் போகிறது. அது உங்கள் நினைவிலோ கனவிலோ கூட இருந்திருக்காது. கொஞ்சம் நின்று போயிருக்கிறது, அவ்வளவு தான். எப்படி திரை அவ்வப்போது தடைப்பட்டு விடுகிறது இல்லையா? கொடியையும் ஏற்றி வைக்கிறீர்கள் என்றால் அதுவும் சில நேரம் தடைப்பட்டு விடுகிறது. நீங்கள் யாராக இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் -- மிகப்பெரிய மகான்கள் நீங்கள். உங்கள் விசேஷத் தன்மை பிரத்தியட்சமாகும் போது இஷ்டதேவ்-தேவி ஆவீர்கள். கடைசியிலோ பக்த மாலையும் பிரத்தியட்சமாகும் இல்லையா? ஆனால் முதலில் சிலை அலங்கரிக்கப்பட்டுத் தயாராக வேண்டும் -- அப்போது தான் பக்தர்கள் வருவார்கள் இல்லையா? நல்லது.

வரதானம்:

தனது ஓய்வைக் கூடத் தியாகம் செய்து சேவை செய்யக்கூடிய

சதா திருப்தியான, சதா மகிழ்ச்சியானவர் ஆகுக.
சேவாதாரி தனது இரவு-பகல் ஓய்வையும் கூடத் தியாகம் செய்து சேவையிலேயே ஓய்வை அனுபவம் செய்வார்கள். அவர்களின் தொடர்பில் இருப்பவர்கள் அல்லது சம்மந்தத்தில் வருபவர்கள் அந்த மாதிரி சமீபத்தின் அனுபவம் செய்வார்கள் -- எப்படி குளிர்ச்சி மற்றும் சக்தி, சாந்தியின் அருவிக்குக் கீழே அமர்ந்திருப்பது போல். சிரேஷ்ட சரித்திரவான் சேவாதாரிகள் காமதேனு ஆகி, சதா காலத்திற்கும் அனைவரின் மன விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். அத்தகைய சேவாதாரிகளுக்கு சதா மகிழ்ச்சியாக, சதா திருப்தியாக இருப்பதற்கான வரதானம் தானாகவே கிடைத்து விடும்.

சுலோகன்:

ஸ்லோகன் -- ஞான சொரூபம் ஆக வேண்டுமானால் ஒவ்வொரு சமயமும் படிப்பின் மீது கவனம் வையுங்கள். பாபா மற்றும் படிப்பின் மீது சமமான அன்பு இருக்க வேண்டும்.