07.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஞானத்தின் இலாக்கா (உங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற்) தனிப்பட்டது, யோகாவின் இலாக்கா (துறை) தனிப்பட்டது. யோகாவின் மூலம் ஆத்மா சதோ பிரதானம் ஆகிறது, யோகாவிற்கு தனிமை அவசியமானதாகும்.

கேள்வி:

நிலையான நினைவிற்கு ஆதாரம் என்ன?

பதில்:

உங்களிடம் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவைகளை மறந்து விடுங்கள். சரீரமும் நினைவிற்கு வரக் கூடாது. அனைத்தையும் ஈஸ்வரிய சேவையில் ஈடுபடுத்துங்கள். இது தான் முயற்சியாகும். இந்த அர்ப்பணம் மூலம் நினைவு நிலையானதாக ஆக்கிவிட முடியும். குழந்தைகளாகிய நீங்கள் அன்பாக தந்தையை நினைவு செய்தால் நினைவின் மூலம் நினைவு கிடைக்கும். பாபாவும் சக்தி (கரண்ட்) கொடுப்பார். கரண்ட் மூலம் தான் ஆயுள் அதிகரிக்கும். ஆத்மா சதா ஆரோக்கியமானதாக ஆகிவிடும்.

 

ஓம்சாந்தி.

யோகா மற்றும் ஞானம் இரண்டு விசயங்கள் ஆகும். தந்தையிடம் இந்த மிகப் பெரிய பொக்கிஷங்கள் உள்ளன, அதனைக் குழந்தைகளுக்கு கொடுக்கின்றார். தந்தையை யார் அதிகமாக நினைவு செய்கிறார்களோ அவர்களுக்கு கரண்ட் கிடைக்கிறது. ஏனெனில் நினைவின் மூலம் நினைவு கிடைக்கிறது. இது நியமம் ஆகும். ஏனெனில் முக்கியமானது நினைவு ஆகும். ஞானம் அதிகமாக இருப்பதால் நினைவு இருக்கிறது என்று கூற முடியாது. ஞான இலாக்கா தனிப்பட்டது, யோகா மிகப் பெரிய பாடமாகும், ஞானம் அதை விட குறைந்தது ஆகும். யோகாவின் மூலம் ஆத்மா சதோ பிரதானமாக ஆகிவிடும். ஏனெனில் அதிகமாக நினைவு செய்கிறீர்கள். நினைவு இல்லாமல் சதோ பிரதானம் ஆவது என்பது அசம்பவமாகும். குழந்தைகள் முழு நாளும் நினைவு செய்யவில்லையெனில், தந்தையும் நினைவு செய்யமாட்டார். குழந்தைகள் நல்ல முறையில் நினைவு செய்கின்றனர் எனில், தந்தைக்கும் நினைவின் மூலம் நினைவு ஏற்படுகிறது. தந்தையை கவர்ந்திழுக்கிறீர்கள். இதுவும் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். இதை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நினைவிற்காக மிகவும் தனிமை தேவை. பின் நாட்களில் வருபவர்கள் உயர்ந்த பதவி அடைய வேண்டுமெனில் அதற்கும் ஆதாரம் நினைவு ஆகும். அவர்களுக்கு நினைவு அதிகமாக இருக்கும். நினைவின் மூலம் நினைவு கிடைக்கிறது. குழந்தைகள் அதிகம் நினைவு செய்கின்ற பொழுது தந்தையும் அதிகமாக நினைவு செய்கிறார். அது கவர்ந்திழுக்கிறது. பாபா, கருணை காட்டுங்கள், இரக்கம் காட்டுங்கள் என்று கூறுகிறீர்கள் அல்லவா! இதற்கும் தேவையானது நினைவு ஆகும். நல்ல முறையில் நினைவு செய்கின்ற பொழுது தானாகவே அந்த கவர்ச்சி ஏற்படும், கரண்ட் கிடைக்கும். நான் பாபாவை நினைவு செய்வதால் அந்த நினைவு முற்றிலுமாக நிறைத்து விடும். ஞானம் என்பது செல்வமாகும். நினைவின் மூலம் நினைவு கிடைக்கிறது, இதன் மூலம் ஆரோக்கியமானவர்களாக ஆகிவிடுகிறீர்கள், தூய்மையானவர்களாக ஆகிவிடுகிறீர்கள். அந்த அளவிற்கு சக்திசாலி ஆகி விடுகிறீர்கள் அதாவது முழு உலகையும் தூய்மையாக ஆக்கி விடுகிறீர்கள். அதனால் தான் பாபா, வந்து பதீதமானவர்களை பாவனம் ஆக்குங்கள் என்று அழைக்கின்றனர்.

 

மனிதர்கள் எதையும் அறியாதவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு கூறிக் கொண்டே இருக்கின்றனர் மற்றும் நேரத்தை வீணாக்கிக் கொண்டே இருக்கின்றனர், தந்தையை அறியவேயில்லை. தீவிர பக்தி செய்கின்றனர், சிவனின் கோயிலுக்குச் சென்று காசியில் பலியாகி ன்றனர், ஆனால் எதையும் அடைவது கிடையாது. இருப்பினும் விகர்மம் செய்வது ஆரம்பமாகி விடுகிறது. மாயை உடனேயே மாட்ட வைத்து விடுகிறது. எந்த பிராப்தியும் கிடையாது. பதீத பாவன் தந்தை என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். அவரிடத்தில் பலியாக வேண்டும். சிவனும் சங்கரரும் ஒன்று என்று அவர்கள் நினைக்கின்றனர். இதுவும் அஞ்ஞானமாகும். இங்கு பாபா அடிக்கடி கூறுகின்றார் - மன்மனாபவ. என்னை நினைவு செய்தால் நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள். நீங்கள் காலன் மீது வெற்றி அடைகிறீர்கள். இதில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு மாயையும் விக்னங்களை உருவாக்கும். ஏனெனில் இவர்கள் தந்தையை நினைவு செய்தால் என்னை விட்டு விடுவர் என்று மாயை நினைக்கிறது. ஏனெனில், நீங்கள் எப்பொழுது என்னுடையவர்களாக ஆகிறீர்களோ அப்பொழுது அனைத்தையும் விட வேண்டியிருக்கிறது. உற்றார், உறவினர்கள், செல்வம் போன்ற எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. ஊன்று கோலையும் விட்டு விடுங்கள் என்ற கதையும் இருக்கிறது. அனைத்து பொருட்களையும் விட வைக்கிறார், சரீரத்தையும் நினையுங்கள் என்ற ஒருபொழுதும் கூறுவது கிடையாது. சரீரம் பழையது, இதை மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பக்தி மார்க்கத்தின் விசயங்களையும் விட்டு விடுங்கள். முற்றிலுமாக அனைத்தையும் மறந்து விடுங்கள். அதாவது எதுவெல்லாம் இருக்கிறதோ அதனைக் காரியத்தில் பயன்படுத்துங்கள், அப்பொழுது தான் நினைவு நிலைத்திருக்கும். ஒருவேளை உயர்ந்த பதவி அடைய வேண்டுமென்றால், அதிக முயற்சி தேவை. சரீரமும் நினைவிற்கு வரக் கூடாது. அசரீரியாக வந்தீர்கள், அசரீரியாகிச் செல்ல வேண்டும்.

 

தந்தை குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றார், இவருக்கு எந்த ஆசையும் கிடையாது. இவர் சேவை செய்கின்றார். தந்தையிடம் தான் ஞானம் இருக்கிறது அல்லவா! இது தந்தை மற்றும் குழந்தைகளிடையேயான விளையாட்டு ஆகும். குழந்தைகளும் நினைவு செய்கின்றனர், பிறகு தந்தை வந்து சக்திகளைக் கொடுக்கிறார். சிலர் அதிகமாக கவர்ந்திழுக்கின்றனர் எனில், தந்தை வந்து லைட் கொடுக்கிறார். பலர் கவர்ந்திழுப்பது கிடையாது எனும் பொழுது இந்த பாபா தந்தையை நினைவு செய்வார். சில நேரங்களில் யாருக்காவது கரண்ட் கொடுக்க வேண்டியிருக்கிறது எனில் தூக்கம் கலைந்து விடுகிறது. இன்னாருக்கு கரண்ட் கொடுக்க வேண்டும் என்ற கவலை ஏற்பட்டு விடுகிறது. படிப்பின் மூலம் ஆயுள் அதிகரிக்காது, கரண்டின் மூலம் ஆயுள் அதிகரிக்கும். சதா ஆரோக்கியமானவர்களாக ஆகிறீர்கள். உலகில் சிலருக்கு ஆயுள் 125-150 ஆண்டாக இருக்கிறது எனில் அவசியம் ஆரோக்கியமாகத் தான் இருப்பர். பக்தியும் அதிகம் செய்பவராக இருப்பர். பக்தியிலும் சில இலாபம் இருக்கிறது, நஷ்டம் கிடையாது. யார் பக்தியும் செய்யவில்லையோ அவர்களது நடத்தைகளும் நல்லதாக இருக்காது. பக்தியில் பகவானின் மீது நம்பிக்கை இருக்கிறது. தொழிலில் பொய், பாவம் செய்யமாட்டார்கள், கோபப்பட மாட்டார்கள். பக்தர்களுக்கும் மகிமை இருக்கிறது. பக்தி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்பது பக்தர்களுக்குத் தெரியாது. ஞானம் பற்றி தெரியவே தெரியாது. பக்தியும் சக்திசாலியாக ஆகிக் கொண்டே செல்கிறது, இருப்பினும் எப்பொழுது ஞானத்தின் பிரபாவம் ஏற்பட்டு விடுகிறதோ பிறகு பக்தி முற்றிலுமாக விடுபட்டு விடுகிறது. இது துக்கம்-சுகம், பக்தி மற்றும் ஞானத்தின் விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

துக்கம், சுகம் பகவான் தான் கொடுக்கிறார் என்று மனிதர்கள் கூறி விடுகின்றனர். பிறகு அவரை சர்வவியாபி என்று கூறி விடுகின்றனர். ஆனால் சுகம், துக்கம் தனிப்பட்டது ஆகும். நாடகத்தை அறியாத காரணத்தினால் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. இவ்வளவு ஆத்மாக்கள் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறது என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். சத்யுகத்தில் நீங்கள் ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள் என்று கூற மாட்டீர்கள். இதை இப்பொழுது தந்தை கற்றுக் கொடுக்கிறார் - இவ்வாறு ஆத்ம அபிமானிகளாக ஆகுங்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்ய வேண்டும். தூய்மையாக ஆக வேண்டும். அது தூய்மையான சுகதாமம் ஆகும். சுகமான பொழுது யாரும் நினைவு செய்வது கிடையாது. துக்கத்தின் பொழுது தான் பகவானை நினைவு செய்கின்றனர். நாடகம் எவ்வளவு ஆச்சரியமாக இருப்பதைப் பாருங்கள்! இதை நீங்கள் தான் வரிசைக் கிரமமாக அறிந்திருக்கிறீர்கள். இங்கு எழுதக் கூடிய கருத்துக்களும் கூட சொற்பொழிவின் பொழுது மீண்டும் படித்துப் பார்ப்பதற்காகவே. டாக்டர், வக்கீலும் கருத்துக்களை குறிப்பெடுக்கின்றனர். இப்பொழுது உங்களுக்கு தந்தையின் வழி கிடைக்கிறது எனில் பிறகு சொற்பொழிவு செய்வதற்காக மீண்டும் படித்துப் பார்க்கவும் வேண்டும். இவரிடத்தில் பாபா பிரவேசம் செய்கிறார். தந்தை உங்களுக்குப் புரிய வைக்கின்றார் எனில் இவரும் கேட்பார். அவர் கருத்து கூறவில்லையெனில் உங்களுக்கு கூறும் அளவிற்கு எனக்கு என்ன தெரியும்? தந்தை கூறுகின்றார் - இது பல பிறவிகளின் கடைசி பிறவியாகும். பிரம்மா மற்றும் விஷ்ணுவின் சித்திரமும் இருக்கிறது. நீங்கள் இராஜ்யத்திற்குச் செல்கிறீர்கள் வரிசைக்கிரமமாக! எந்த அளவிற்கு நினைவு செய்கிறீர்களோ, தாரணை செய்வீர்களோ அந்த அளவிற்கு பதவி அடைவீர்கள். ஆழமான விசயங்களைக் கூறுகிறேன் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் புதுப் புது கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். பழையது வேலைக்கு உதவாது. சொற்பொழிவு முடிந்த பின்பு தான் ஒருவேளை இந்தக் கருத்தைப் புரிய வைத்திருந்தால் புத்தியில் நன்றாக அமர்ந்திருக்கும் என்று நினைவிற்கு வருகிறது. நீங்கள் அனைவரும் ஞானத்தின் பேச்சாளர்கள் (நல்ங்ஹந்ங்ழ்), ஆனால் வரிசைக் கிரமமாக! அனைவரையும் விட நல்ல மகாரதிகளாக இருக்கிறீர்கள். பாபாவின் விசயம் தனிப்பட்டது. இந்த பாப்தாதா இருவரும் சேர்ந்து இருக்கின்றனர். மம்மா அனைவரையும் விட மிக நன்றாகப் புரிய வைப்பார். குழந்தைகள் சம்பூர்ண மம்மாவின் சாட்சாத்காரமும் செய்தனர். எங்காவது அவசியம் எனும் பொழுது பாபாவும் பிரவேசம் செய்து தனது காரியத்தைச் செய்து விடுவார். இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். நேரம் கிடைக்கும் பொழுது தான் படிப்பு இருக்கும். முழு நாளும் தொழில் போன்றவைகள் செய்கின்றனர். ஞானச் சிந்தனை செய்வதற்கு நேரம் தேவை, அமைதி தேவை. யாருக்காவது சக்தி கொடுக்க வேண்டும், யாராவது நன்றாக சேவை செய்யும் குழந்தையாக இருக்கின்றனர் எனில், அவருக்கு உதவி செய்ய வேண்டும். அந்த ஆத்மாவை நினைவு செய்ய வேண்டியிருக்கிறது. சரீரத்தை நினைவு செய்து பிறகு ஆத்மாவை நினைவு செய்ய வேண்டும். இந்த யுக்தியை உருவாக்க வேண்டும். சேவாதாரி குழந்தைகளுக்கு கஷ்டம் ஏற்படுகிறது எனில், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டும், பிறகு தன்னையும் ஆத்மா என்று புரிந்து கொண்டு அந்த ஆத்மாவை சிறிதளவாவது நினைவு செய்ய வேண்டும். இது சக்தி கொடுப்பது போன்றதாகும். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. நடந்தாலும், காரியங்கள் செய்தாலும், உணவு சமைத்தாலும் தந்தையை நினைவு செய்யுங்கள். மற்றவர்களுக்கு சக்தி கொடுக்க வேண்டுமெனில், இரவும் விழித்திருங்கள். அதிகாலையில் எழுந்து எந்த அளவு தந்தையை நினைவு செய்வீர்களோ அந்த அளவு கவர்ச்சி ஏற்படும். பாபாவும் லைட் கொடுப்பார். குழந்தைகளுக்கு சக்தி கொடுப்பது தான் தந்தையின் காரியமாகும். அதிகமாக சக்தி கொடுக்க வேண்டியிருக்கும் பொழுது தந்தை மிக அதிகமாக நினைவு செய்வார். ஆக தந்தையும் சக்தி கொடுப்பார். ஆத்மாவை நினைவு செய்து சக்தி கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த பாபாவும் சக்தி கொடுப்பார், பிறகு இதனை கருணை என்றும் கூறலாம், ஆசிர்வாதம் என்றும் கூறலாம், எது வேண்டுமென்றாலும் கூறிக் கொள்ளுங்கள். சேவாதாரி நோயாளி ஆகிவிட்டால் கருணை ஏற்படுகிறது. இரவு விழித்திருந்து அந்த ஆத்மாவை நினைவு செய்வார், ஏனெனில், அந்த ஆத்மாவிற்கு சக்தி தேவைப்படுகிறது. நினைவு செய்யும் பொழுது அதற்கு கைமாறாக நினைவு ஏற்படுகிறது. குழந்தைகள் மீது தந்தைக்கு அதிக அன்பு இருக்கிறது. பிறகு அவருக்கும் அன்பு சென்றடையும். மற்றபடி ஞானம் மிகவும் எளிதாகும், அதில் மாயையின் தடைகள் ஏற்படுவது கிடையாது. முக்கியமானது நினைவு, இதில் தடைகள் ஏற்படுகிறது. நினைவின் மூலம் புத்தி தங்கமானதான ஆகிவிடுகிறது, அதில் தாரணையும் ஏற்படுகிறது. சிங்கத்தின் பால் தங்கப் பாத்திரத்தில் தான் நிலைக்கும் என்று கதை கூறப்படுகிறது. இந்த தந்தையின் ஞான செல்வத்திற்காகவும் தங்கப் பாத்திரம் தேவை. எப்பொழுது நினைவு யாத்திரையில் இருப்பீர்களோ அப்பொழுது தான் அவ்வாறு ஏற்படும். நினைவு செய்யவில்லையெனில் தாரணை ஏற்படாது. தந்தை அனைவருக்குள்ளும் இருப்பதாக (அந்தர்யாமி) நினைத்து விடாதீர்கள். ஏதாவது கூறி அது நடந்து விடுவது என்பது பக்தி மார்க்கத்தில் நடைபெறும். குழந்தை பிறந்து விட்டால் குருவின் கருணை என்று கூறுவர். ஒருவேளை பிறக்கவில்லையெனில் ஈஸ்வரனின் செயல் என்று கூறுவர். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு நாடகத்தின் இரகசியத்தை தந்தை நல்ல முறையில் புரிய வைத்திருக்கின்றார். நீங்களும் முன்பு அறியாமல் இருந்தீர்கள். இது உங்களது மறுபிறவியாகும். நாம் தேவதைகயாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இந்த இலட்சுமி நாராயணனுக்கு இராஜ்யம் எவ்வாறு கிடைத்தது? பிறகு எப்படி இழந்தனர்? என்ற தலைப்பில் நீங்கள் புரிய வைக்க முடியும். முழு சரித்திர பூகோளத்தை நாம் உங்களுக்கு புரிய வைப்போம். இந்த பிரம்மாவும் நான் இலட்சுமி நாராயணனின் பூஜை செய்து வந்தேன், கீதை படித்து வந்தேன் என்று கூறினார். பாபா எப்பொழுது பிரவேசம் ஆனாரோ அனைத்தையும் விட்டு விட்டார். சாட்சாத்காரம் ஏற்பட்டது. என்னை நினைவு செய்தால் விகர்மம் விநாசம் ஆகும் என்று பாபா கூறியிருக்கிறார். இதில் கீதை போன்றவைகளைப் படிக்கும் விசயமில்லை. தந்தை இவரிடத்தில் அமர்ந்திருக்கிறார், அனைத்தையும் விட வைத்து விட்டார். சிவதரிசனம் செய்வதற்கு ஒருபொழுதும் கோயிலுக்குச் சென்றது கிடையாது. பக்திக்கான விசயம் ஒரேயடியாக நீங்கி விட்டது. படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் இந்த ஞானம் புத்தியில் வந்து விட்டது! தந்தையை அறிவதன் மூலம் நீங்கள் அனைத்தையும் அறிந்து விடுகிறீர்கள். நீங்கள் அதிசயமான தலைப்புகளை எழுதுங்கள், மனிதர்கள் ஆச்சரியப்பட வேண்டும், கேட்பதற்கு ஓடி வர வேண்டும். கோயிலுக்குச் சென்று யாரிடம் வேண்டுமென்றாலும் கேளுங்கள் - இந்த இலட்சுமி நாராயணன் உலகிற்கு எஜமானர் களாக இருந்த பொழுது வேறு ஏதாவது தர்மம் இருந்ததா? பாரதம் மட்டுமே இருந்தது எனும் பொழுது பிறகு நீங்கள் சத்யுகத்திற்கு இலட்சம் ஆண்டுகள் என்று எவ்வாறு கூற முடியும்? கிறிஸ்துவிற்கு 3 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு சொர்க்கம் இருந்தது என்று கூறுகிறீர்கள், பிறகு இலட்சம் ஆண்டுகள் எப்படி ஏற்படும்? இலட்சம் ஆண்டுகளில் பல மனிதர்கள் கொசுக்களைப் போல் உருவாகி விடுவர். சிறிது விசயங்களைக் கூறினாலேயே ஆச்சரியப்படுவார்கள். ஆனால் யார் இந்த குலத்தைச் சார்ந்தவர்களோ அவர்களது புத்தியில் தான் இந்த ஞானம் அமரும். இல்லையெனில் பிரம்மா குமாரிகளின் ஞானம் ஆச்சரியமானது, இதைப் புரிந்து கொள்வதற்கு புத்தி தேவை. முக்கிய விசயம் நினைவு. கணவன் மனைவி ஒருவரையொருவர் நினைவு செய்கின்றனர். இங்கு ஆத்மா பரமாத்மாவை நினைவு செய்கிறது. இந்த நேரத்தில் அனைவரும் நோயாளிகளாக இருக்கின்றனர். இப்பொழுது நோயற்றவர்களாக ஆக வேண்டும். இந்தத் தலைப்பும் வையுங்கள். இன்று அடிக்கடி நோயாளிகளாக ஆகின்றீர்கள்- அதனால் நாம் உங்களுக்கு அப்படிப்பட்ட சஞ்சீவினி மூலிகை கொடுக்கிறோம், பிறகு நீங்கள் ஒருபொழுதும் நோயாளிகளாக ஆகவே மாட்டீர்கள் - நமது மருந்தை நல்ல முறையில் காரியத்தில் பயன்படுத்தினால்! எவ்வளவு மலிவான மருந்தாகும்! 21 பிறவிகளுக்கு சத்யுகம், திரேதா வரை நோயாளிகளாக ஆகமாட்டீர்கள். அது சொர்க்கமாகும். இப்படிப்பட்ட கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அனைவரையும் விட மிகப் பெரிய அழிவற்ற சர்ஜன் உங்களுக்கு அப்படிப்பட்ட மருந்து கொடுக்கிறார் அதாவது நீங்கள் எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு ஒருபொழுதும் நோயாளிகளாக ஆகமாட்டீர்கள். இது சங்கமமாகும். இப்படிப்பட்ட விசயங்களைக் கேட்டு மனிதர்கள் குஷியடைவர். பகவானும் கூறுகின்றார் - நான் அழிவற்ற சர்ஜன். ஹே பதீத பாவனனே! அழிவற்ற சர்ஜனே வாருங்கள் என்று நினைவும் செய்கின்றனர். இப்பொழுது நான் வந்திருக்கிறேன். நீங்கள் அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். கடைசியில் அனைவரும் அவசியம் புரிந்து கொள்வர். பாபா யுக்திகளைக் கூறிக் கொண்டே இருக்கிறார். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தந்தையிடமிருந்து சக்திகளைப் பெறுவதற்காக அதிகாலையில் எழுந்து தந்தையின் நினைவில் அமர வேண்டும். இரவு விழித்திருந்து ஒருவருக்கொருவர் சக்திகளைக் கொடுத்து உதவியாளர்களாக ஆக வேண்டும்.

 

2) தனது அனைத்தையும் ஈஸ்வரிய சேவையில் வெற்றியாக்கி, இந்த பழைய உலகையும் மறந்து தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். முழுமையாக பலியாகி விட வேண்டும். ஆத்ம அபிமானியாக இருக்கும் முயற்சி செய்ய வேண்டும்.

 

வரதான்:

உன்னுடையது என்னுடையது என்ற குழப்பத்தை சமாப்தி செய்து கருணையின் உணர்வை வெளிபடுத்தக்கூடிய கருணை நிறைந்தவர் ஆகுக

 

சமயத்திற்கு தகுந்த படி எவ்வளவு ஆத்மாக்கள் துக்கத்தின் அலைகளில் வருகிறார்கள். இயற்கையின் சிறிய குழப்பம் ஏற்படுகிறது, ஆபத்துகள் வருகிறது என்றால் பலதரப்பட்ட ஆத்மாக்கள் பதற்றம் அடைகிறார்கள், கருணை, இரக்கத்தை யாசிக்கிறார்கள். அதனால் அப்படிப்பட்ட ஆத்மாக்களின் கூக்குரல் கேட்டு கருணையின் உணர்வை வெளிக்கொணருங்கள். பூஜ்ய சொரூபத்தின், கருணை உணர்வை தாரணை செய்யுங்கள். தனது முழுமை நிலையை உருவாக்குனீர்கள் என்றால், இந்த துக்கத்தின் உலகம் முழுமை பெற்றுவிடும். இப்பொழுது மாற்றத்திற்கான நல்ல உணர்வின் அலையை தீவிர வேகத்தோடு பரப்பினீர்கள் என்றால் உன்னுடையது என்னுடையது என்ற குழப்பம் முடிந்துவிடும்.

 

சுலோகன்:

வீணான எண்ணங்கள் சுத்தியால் பிரச்சனைகள் என்ற கற்களை உடைப்பதற்கு பதிலாக உயரம் தாண்டுதல் (ஹை ஜம்ப்) செய்து பிரச்சனைகள் என்ற மலையைக் கடந்து செல்லக்கூடியவர் ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி