07.04.2019                           காலை முரளி               ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    29.04.1984          மதுபன்


 

ஞான சூரியனின் ஆன்மீக நட்சத்திரங்களின் வித விதமான விசேஷங்கள்

 

இன்று ஞான சூரியன், ஞான சந்திரன் தங்களுடைய பலவிதமான நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அன்பான நட்சத்திரங்கள், சிலர் விசேஷ சகயோகி நட்சத்திரங்கள், சிலர் சகஜயோகி நட்சத்திரங்கள், சிலர் சிரேஷ்ட ஞானி நட்சத்திரங்கள், சிலர் விசேஷமாக சேவைக்கான ஊக்கம் வைத்திருக்கும் நட்சத்திரங்கள். சிலர் கடின உழைப்பின் பலன் என்ற பழத்தை அருந்தும் நட்சத்திரங்கள், சிலர் சுலபமாக வெற்றியடையும் நட்சத்திரங்கள் அந்த மாதிரி அனைத்து நட்சத்திரங்களும் விதவிதமான விசேஷங்கள் உள்ளவர்கள். ஞான சூரியன் மூலமாக அனைத்து நட்சத்திரங்களுக்கும் ஆன்மீக ஒளி கிடைக்கும் காரணத்தினால் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களாகவோ ஆகிவிட்டார்கள். ஆனால் ஒவ்வொரு விதமான நட்சத்திரங்களின் விசேஷத்தின் ஜொலிப்பு விதவிதமானது. எப்படி ஸ்தூல நட்சத்திரங்கள் பலவிதமான கிரகத்தின் ரூபத்தில் அற்ப காலத்திற்காக பலவிதமான பலனை பிராப்தி செய்விக்கிறது. அதே போல் ஞான சூரியனின் ஆன்மீக நட்சத்திரங்களுக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும் அழியாத பிராப்தியின் சம்மந்தம் இருக்கிறது. எப்படி சுயம் அவரே எந்த விசேஷத்தில் சம்பன்னமாக இருக்கும் நட்சத்திரமாக இருக்கிரோ, அதே போல் மற்றவர்களுக்கும் அதன் பிரகாரம் பலனை பிராப்தி செய்விப்பதற்கு பொறுப்பாளர் ஆகிறார். எந்தளவு அவரே ஞான சந்திரன் மற்றும் சூரியனின் அருகில் இருக்கிறரோ அந்தளவு மற்றவர்களையும் நெறுக்கமான சம்மந்ததில் கொண்டு வருகிறார். அதாவது ஞான சூரியன் மூலமாக கிடைத்திருக்கும் விசேஷங்களின் ஆதாரத்தில் மற்றவர்களையும் விசேஷங்களின் சக்தியின் ஆதாரத்தினால் இந்தளவு நெருக்கமாகப் கொண்டு வந்திருக்கிறார். அதனால் அவர்களுக்கு நேரடியாக ஞான சூரியன், ஞான சந்திரனுடன் சம்மந்தம் ஏற்பட்டுவிடுகிறது. நீங்கள் அந்தளவு சக்திசாலியான நட்சத்திரங்கள் தான் இல்லையா? ஒருவேளை அவரே சக்திசாலியாக இல்லை, நெருக்கத்திலும் இல்லையென்றால் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. தூரமாக இருப்பதற்கான காரணம் அதே நட்சத்திரங்களின் விசேஷத்தின் அனுசாரம் அவர்கள் மூலமாக எந்தளவு சக்தி, சம்மந்தம் தொடர்பை பிராப்தி செய்ய முடியுமோ, அந்தளவு சக்திக்கு ஏற்றப்படி பிராப்தி அடைந்து கொண்டிருக்கிறார்கள். நேரடியாக சக்தியைப் பெறுவதற்கான சக்தி இருப்பதில்லை, எனவே எப்படி ஞான சூரியன் உயர்ந்ததிலும் உயர்ந்தவராக இருக்கிறாரோ, விசேஷ நட்சத்திரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்களோ, அதேபோல் உயர்ந்த நிலையின் அனுபவம் செய்ய முடியாது. சக்திக்கு ஏற்றப்படி பிராப்தி செய்கிறார்கள். எந்தளவு சக்திசாலியான நிலை இருக்க வேண்டுமோ, அதை அனுபவம் செய்வதில்லை.

 

அந்த மாதிரி ஆத்மாக்களின் மனதிலிருந்தும் மற்றும் வாயிலிருந்தும் என்ன நடக்க வேண்டுமோ, அது நடக்கவில்லை என்ற வார்த்தைகள் தான் வெளியாகும். இந்த மாதிரி ஆகவேண்டும், ஆனால் இன்னும் ஆகவில்லை. இதைத் தான் செய்ய வேண்டும், ஆனால் செய்ய முடியாது. இந்த நிலையைத் தான் அவரின் சக்திக்கு ஏற்றப்படி செய்யும் ஆத்மாக்கள் என்று கூறுவது. அனைத்து சக்திகளும் நிறைந்த ஆத்மாக்களாக இல்லை. அந்தமாதிரியான ஆத்மாக்கள் தனது மற்றும் பிறரது தடைகளை அழிப்பவராக ஆக முடியாது. கொஞ்சம் முன்னேறிச் செல்வார், தடை வரும், ஒரு தடையை அகற்றுவார், சற்று தைரியம் வரும், குஷி ஏற்படும். பிறகு இன்னொரு தடை வந்துவிடும். வாழ்க்கையில் முயற்சி செய்யும் இணைப்பு எப்பொழுதும் தெளிவாக இருக்காது. நிற்பது, முன்னேறிச் செல்வது இந்த விதியின் மூலம் தான் முன்னேறிச் சென்றுக் கொண்டேயிருப்பார், மேலும் மற்றவர்களுக்கும் படிப்பித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆக நிற்பது மேலும் முன்னேறிவதின் காரணமாக அதிவேகத்தின் அனுபவம் ஆவதில்லை. சில நேரம் நடக்கும் கலை, சில நேரம் ஏறும் கலை, சில நேரம் பறக்கும் கலை என்றிருக்குமே தவிர. ஒரே சீரான சக்திசாலியின் அனுபவம் ஆவதில்லை. சில நேரம் பிரச்சனைகள், சில நேரம் சமாதான சொரூபம், ஏனென்றால் அவரவரின் சக்தி ஏற்றப்படி செய்கிறார்கள், ஞான சூரியனிடமிருந்து அனைத்து சக்திகளையும் கிரஹிப்பதற்கான சக்தியில்லை. இடையில் யாருடைய ஆதரவாவது அவசியம் தேவையாக இருக்கிறது. இதைத் தான் அவருடைய சக்திக்கு ஏற்றப்படி செய்யும் ஆத்மா என்று கூறுவது.

 

எப்படி இங்கு உயர்ந்த மலையில் ஏறுகிறீர்கள். எந்த வாகனத்தில் வந்தாலும், அது பேருந்து அல்லது சிறிய வாகனமாக இருந்தாலும் இஞ்சின் சக்திசாலியாக இருக்கிறது என்றால், அதி வேகத்துடன் எந்தவொரு தண்ணீர் அல்லது காற்றின் ஆதாரமின்றி நேரடியாகவே வந்து சேர்ந்து விடுகிறீர்கள். மேலும் ஒருவேளை இஞ்சின் பலஹீனமாக இருக்கிறதென்றால் நின்று தண்ணீர் மற்றும் காற்றின் ஆதாரத்தை எடுக்க வேண்டியதாக இருக்கும். எங்கும் நிற்காமல் வர முடியாது. நிற்க வேண்டியதாக இருக்கும். அதே போன்று அவரவர்களின் சக்திக்கு ஏற்றப்படி செய்யும் ஆத்மாக்கள் ஏதாவதொரு ஆத்மாவின் அவர் செய்யும் உதவியின் மற்றும் சாதனங்களின் ஆதாரத்தை எடுக்காமல் அதி வேகத்துடன் பறக்கும் கலையின் மூலம் இலக்கை சென்று அடைய முடியாது. சில நேரம், இன்று குஷி குறைந்து விட்டது, இன்று யோகா அந்தளவு சக்திசாலியாக இருக்கவில்லை, இன்று இந்த தாரணை செய்வதைப் புரிந்துக் கொண்ட போதும், பலஹீனமாக இருக்கிறேன். இன்று சேவை செய்வதின் ஊக்கம் வரவில்லை. சில நேரம் தண்ணீர் வேண்டும், சில நேரம் காற்று வேண்டும், சில நேரம் தள்ளி விட வேண்டியிருக்கும். இதை சக்திசாலி நிலை என்று சொல்வோமா? பார்க்கப்போனால் அவர் அதிகாரி தான் பெறுவதில் நம்பர் ஒன் அதிகாரி, யாரை விடவும் குறைந்தவரில்லை. மேலும் செய்ய வேண்டியபோது என்ன கூறுகிறார்? நானோ சிறியவன். நான் புதியவன், பழையவன் இல்லை, இன்னும் சம்பூரணம் ஆகவில்லை. இப்பொழுது இன்னும் நேரம் இருக்கிறது. இது பெரியவர்களின் குறை, என்னுடையது இல்லை. கற்றுக் கொண்டிருக்கிறேன், கற்றுக் கொண்டு விடுவேன். பாப்தாதாவோ அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எப்பொழுதுமே கூறுகிறார். எனக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். நான் கூறுவதையும் கேட்க வேண்டும், இப்படி கேட்டுப் பெறுவதில் நான்! ஆனால் செய்வதில் எப்படி பெரியவர்கள் செய்வார்களோ. அப்படி! அதிகாரத்தை பெறும் விஷயத்தில் இப்பொழுது உடன்! ஆனால் செய்வதில் பின்னால் எப்பொழுதாவது (எப்படியாவது) செய்து விடுவோம்! பெறுவதில் பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள். செய்வதில் சிறியவர்கள் ஆகிவிடுகிறார்கள். இதைத் தான் அவரவரின் சக்திக்கு ஏற்றப்படி செய்யும் ஆத்மா என்று கூறுவது.

 

பாப்தாதா இந்த ரமணீகரமான விளையாட்டைப் பார்த்துப் பார்த்து புன்முறுவல் செய்துக் கொண்டிருக்கிறார். தந்தையோ மிகவும் சாதுர்யமானவர். ஆனால் மாஸ்டர் சாதுர்யமானவர்களும் குறைந்தவர்கள் அல்ல! எனவே சக்திக்கு ஏற்றப்படி செய்யும் ஆத்மாவிலிருந்து இப்பொழுது மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுங்கள். செய்பவராக ஆகுங்கள். இயல்பாகவே சக்திசாலியான காரியத்தின் பலன், சுபபாவணை, சிரேஷ்ட விருப்பங்களின் பலன் கிடைத்து விடுகிறது. அனைத்து பிராப்திகளும் அவைகளாகவே உங்களுக்குப் பின்னால் நிழலுக்குச் சமமாக கண்டிப்பாக வரும். ஞான சூரியனிடமிருந்து பிராப்தி ஆகியிருக்கும் சக்திகளின் கிரணங்களின் பிரகாஷத்தில் மட்டும் சென்று கொண்டேயிருந்தீர்கள் என்றால், அனைத்து பிராப்தி என்ற நிழல் தனாகவே உங்கள் பின்னால் வரும். புரிந்ததா? இன்று அவரவர்களின் சக்திக்கு ஏற்றப்படி செய்யும் மற்றும் சக்திசாலி நட்சத்திரங்களின் மழைச் சாரலை பார்த்துக் கொண்டிருந்தோம். நல்லது.

 

அனைவரும் அதி வேகமாக ஒடி ஒடி வந்து சேர்ந்து விட்டீர்கள். தந்தையின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்றால், குழந்தைகளை வாருங்கள் வாருங்கள் என்று தான் வரவேற்போம். எப்படி எத்தனை ஸ்தானங்கள் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் உங்களுடைய வீடு தான். வீடோ ஒரு நாளில் அதிகரிக்காது, ஆனால் உறுபினர்களின் எண்ணிக்கையோ அதிகரித்து விட்டது தான் இல்லையா? எனவே உள்ளடக்க வேண்டும். ஸ்தானம் மற்றும் நேரத்தை எண்ணிக்கைக்கு ஏற்றப்படி தான் நடத்துவிக்க வேண்டியிருக்கும். அனைத்தும் நிரம்பி விட்டது தான் இல்லையா? வரிசையோ அனைத்து விஷயங்களிலும் நிச்சயம் உருவாகும். இருந்தும் இப்பொழுது கூட நீங்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால், பாண்டவ பவன் மேலும் என்னென்ன ஸ்தானங்கள் இருக்கின்றனவோ, அதனுள்ளேயே நிரம்பி விட்டீர்கள். வெளியில் வரை வரிசையோ நிற்கவில்லை தான் இல்லையா? வளர்ச்சியோ கண்டிப்பாக அடையும். வரிசையும் கண்டிப்பாக உருவாகும். எப்பொழுதும் ஒவ்வொரு விஷயத்திலும் குஷி மற்றும் மகிழ்ச்சியில் இருங்கள். இருந்தும் தந்தையின் வீட்டில் இருப்பது போல் மனதிற்கு ஒய்வு வேறு எங்காவது கிடைக்க முடியுமா?. எனவே எந்தச் சூழ்நிலையிலும் எப்பொழுதும் திருப்தியாக இருங்கள். சங்கமயுகத்தின் வரதான பூமியின் மூன்று அடி நிலம் கூட சத்தியுகத்தின் மாளிகைகளை விட சிரேஷ்டமானது. அமருவதற்காக இந்தளவு இடம் கிடைத்திருக்கிறதே, அதுவும் சிரேஷ்டமானது. இந்த நாளும் பிற்காலத்தில் நினைவு வரும். இப்பொழுது இருந்தும் திருஷ்டி மற்றும் டோலி கிடைக்கிறது, பின்பு திருஷ்டி மற்றும் டோலியை கொடுப்பவர்களாக (நீங்கள்) ஆகவேண்டும். வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கிறது, இதுவும் குஷியின் விஷயம் தான் இல்லையா? என்ன கிடைக்கிறதோ, எப்படி கிடைக்கிறதோ, அனைத்திலும் திருப்தியாக இருப்பது, மேலும் வளர்ச்சி அதாவது நன்மை பெறுவது. நல்லது.

 

விசேஷமாக கர்னாடகா தேடிக் கண்டு பிடிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மஹாராஷ்ட்ராவும் எப்பொழுதும் எண்ணிக்கையில் மகானாக இருந்ததிருக்கிறது.. டெல்லியும் பந்தயம் செய்தார்கள். வளர்ச்சி நன்றாக அடைந்து கொண்டேயிருங்கள். உத்திரபிரதேசமும் யாரையும் விட குறைந்து இல்லை. ஒவ்வொரு மண்டலத்திற்கும் அவரவர்களின் விசேஷம் இருக்கிறது. அதை பின்பு கூறுவோம்.

 

பாப்தாதாவிற்கும் ஸ்தூல உடலை ஆதாரமாக எடுக்கும் காரணத்தினால், நேரத்தின் எல்லையையும் வைக்க வேண்டியதாக இருக்கிறது. இருந்தும் கடனாக பெற்ற உடல் என்னுடையதோ இல்லை, உடலுக்கான பொறுப்பும் பாப்தாதாவினுடையதாக ஆகிவிடுகிறது. எனவே எல்லைக்கு அப்பாற்பட்ட எஜமானன் கூட எல்லைக்குள் கட்டிப்போடபடுகிறார். அவ்யக்த வதனமோ எல்லையற்றது. இங்கேயோ கட்டுபாடு, நேரம் மற்றும் உடலின் சக்தி அனைத்தையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. எனவே எல்லையற்றதில் வாருங்கள். சந்திப்பை செய்யுங்கள். அங்கே உங்களை யாருமே இப்பொழுது வாருங்கள், இப்பொழுது செல்லுங்கள் அல்லது வரிசைக்கிரமாக வாருங்கள் என்று கூறமாட்டார்கள். திறந்த அழைப்பு இருக்கிறது, மேலும் திறந்த அதிகாரம் இருக்கிறது. விரும்பினால் 2 மணிக்கும் வாருங்கள். நல்லது.

 

எப்பொழுதும் அனைத்து சக்திகள் நிறைந்த சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் ஞான சூரியனின் அருகில் மற்றும் சமமான உயர்ந்த நிலையில் நிலைத்திருக்கும் விசேஷ ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் ஒவ்வொரு காரியம் செய்யும் பொழுதும் முதலில் நான் என்ற ஊக்கம் உற்சாகம் வைக்கக் கூடிய தைரியம் நிறைந்த ஆத்மாக்களுக்கு, எப்பொழுதும் அனைவரையும் சக்திசாலியான ஆத்மாவாக ஆக்கக் கூடிய அனைத்து நெருக்கமான குழந்தைகளுக்கு, ஞான சூரியன், ஞான சந்திரனின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

தாதிகளுடன் சந்திப்பு :

பாப்தாதாவிற்கு குழந்தைகளாகிய உங்கள் மீது பெருமிதம் இருக்கிறது. எந்த விஷயத்தில் பெருமிதம் இருக்கிறது? எப்பொழுதும் தந்தை தனக்குச் சமமாக குழந்தைகளைப் பார்த்து பெருமிதம் அடைகிறார். எப்பொழுது குழந்தைகள் தந்தையையும் விட விசேஷ காரியம் செய்து காண்பிக்கிறார்கள் என்றால், தந்தைக்கு எவ்வளவு பெருமிதம் இருக்கும். இரவு பகலாக தந்தையின் நினைவு மற்றும் சேவை இந்த இரண்டின் ஈடுபாடு இருக்கிறது. ஆனால் மகாவீர் குழந்தைகளின் விசேஷமே முதன்மையாக நினைவை வைப்பார்கள், பிறகு சேவையை வைப்பார்கள். குதிரைப் படை மற்றும் காலாட் படையாக இருப்பவர்கள். முதலில் சேவை பிறகு நினைவு என்று வைத்துக் கொள்வார்கள், எனவே வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது, முதலில் நினைவு பிறகு சேவை செய்தீர்கள் என்றால் வெற்றி கிடைக்கும். சேவையை முதன்மையாக வைப்பதினால், என்னென்ன நன்மை மற்றும் தீமை காரியம் நடக்கிறதோ அதனுடைய விளைவில் வந்து விடுகிறார்கள், மேலும் முதலில் நினைவை வைப்பதினால் சுலபமாகவே விலகியிருப்பவர் ஆகிவிடுகிறார், அந்தமாதிரி சமமாக இருக்கும் குழந்தைகளைப் பார்த்து தந்தைக்கும் பெருமிதம் இருக்கிறது. முழு உலகத்தில் அந்தமாதிரி சமமான குழந்தைகள் யாருக்கு இருப்பார்கள்? ஒவ்வொரு குழந்தையின் விசேஷத்தை வர்ணனை செய்தோம் என்றால், பாகவதம் ஆகிவிடும். தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு மகாரதியின் விசேஷத்தை வர்ணனை செய்தோம் என்றால், பாகவதம் ஆகிவிடும். எப்பொழுது மதுபனில் ஞான சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், ஒரு குழுவாக மின்னிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், மதுபனின் ஆகாயத்தின் அழகு எவ்வளவு உயர்ந்தாக ஆகிவிடும். ஞான சூரியனுடன் நட்சத்திரங்களும் அவசியம் வேண்டும்.

 

தம்பதியர்களின் குரூப்புடன் பாப்தாதாவின் சந்திப்பு:

1. ஒருவழி என்ற தண்டவாளத்தில் செல்பவர்களோ மிக அதிக வேகமுடையவர்களாக இருப்பார்கள். இருவர்களின் வழியும் ஒன்று, இந்த ஒரு வழிதான் சக்கரங்கள். ஒரு வழியின் சக்கரத்தில் செல்பவர்கள் எப்பொழுதும் அதிக வேகத்தில் செல்பவர்களாக இருப்பார்கள். இரண்டு சக்கரங்களும் உயர்ந்தாக இருக்க வேண்டும். ஒன்று தொய்வானது வேகத்தினாலன்று இருக்காது தான் இல்லையா. இரண்டு சக்கரங்களும் ஒரே சீராக இருக்கிறது. தீவிர முயற்சி செய்வதில் பாண்டவர்கள் முதல் எண்ணில் இருக்கிறார்களா? அல்லது சக்திகள் இருக்கிறார்கள்? ஒருவர் மற்றவரை முன்னேற வைக்கிறார் என்றால், தன்னை முன்னேற்றுவது. மற்றவர்களை முன்னேற வைத்து தானே பின் தங்கிவிடுகிறார் என்பது அப்படி இருக்கக் கூடாது. மற்றவர்களை முன்னேற்றுவது என்றால், தானும் முன்னேறுவது. நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டம் நிறைந்த ஆத்மாக்கள் தான் இல்லையா? டெல்லி மற்றும் மும்பை நிவாசிகள் விசேஷமாக அதிர்ஷ்டசாகள், ஏனென்றால் வழியில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுதும் மிகுந்த பொக்கிஷம் கிடைக்கிறது. விசேஷஆத்மாக்களின் தொடர்பு, அல்லது சகயோகம், அறிவுரை அனைத்தும் கிடைக்கிறது, கேட்காமலேயே கிடைத்து கொண்டிருக்கிறது என்பது வரதானம் தான். மற்றவர்கள் எவ்வளவு கடின உழைப்பு செய்கிறார்கள், முழு பிராமண வாழ்க்கையில் அல்லது சேவையின் வாழ்க்கையில் அந்தமாதிரி சிரேஷ்ட ஆத்மாக்கள். எங்காவது இரண்டு மூன்று தடவைகள் கூட செல்வதில்லை, ஆனால் நீங்கள் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் உங்களிடம் சுலபமாகவே வந்து சேர்ந்து விடுகிறார். அந்தமாதிரி சேர்க்கையின் பாதிப்பு எது பிரசித்தமானதோ, அது விசேஷ ஆத்மாக்களின் சேர்க்கையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது. அந்தமாதிரி நீங்கள் எவ்வளவு சுலபமாக பாக்கியத்தை பிராப்தி அடையும் பாக்கியம் நிறைந்த ஆத்மாக்கள். ஆஹா! என்னுடைய சிரேஷ்ட பாக்கியம்! என்ற பாடலை எப்பொழுதும் பாடிக் கொண்டேயிருங்கள். என்ன பிராப்தி ஆகிக் கொண்டிருக்கிறதோ, அதனுடைய பலனாக எப்பொழுதும் பறக்கும் கலை இருக்கும். நிற்பது மற்றும் நடப்பதாக இருக்காது, எப்பொழுதும் பறப்பதாக இருக்கும்.

 

2. எப்பொழுதும் தன்னை தந்தையின் பாதுகாப்பு குடை நிழலின் கீழ் இருப்பவர் என்று அனுபவம் செய்கிறீர்களா? தந்தையின் நினைவு தான் குடை நிழல். யார் குடை நிழலின் கீழ் இருப்பாரோ, அவர் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பார். எப்பொழுதாவது மழை அல்லது வெயில் இருக்கிறதென்றால், குடை நிழலின் கீழே சென்றூ விடுவார்கள். அந்த மாதி ரி தந்தையின் நினைவு குடை நிழல். குடை நிழலின் கீழ் இருப்பவர் சுலபமாகவே மாயாவை வென்றவராக இருப்பார். நினைவை மறந்தார் என்றால், குடை நிழலிலிருந்து வெளியில் வந்துவிட்டார். எனவே தந்தையின் நினைவு எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கட்டும். யார் அந்தமாதிரி குடை நிழலின் கீழ் இருப்பார்களோ, அவர்களுக்கு தந்தையின் சகயோகம் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டேயிரு க்கிறது. ஒவ்வொரு சக்தியின் பிராப்தியின் சகயோகம் எப்பொழுதும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. அவர் ஒருபொழுதும் பலஹீனமானவராகி மாயாவிடம் தோல்வி அடைய முடியாது. எப்பொழுதாவது மாயா நினைவை மறக்க வைத்து விடவில்லையே? 63 ஜென்மங்கள் மறந்தே இருந்தீர்கள், சங்கமயுகம் நினைவில் இருப்பதற்கான யுகம். இந்த நேரம் மறக்கக் கூடாது. மறப்பதினால் வேதனை அடைந்தீர்கள், துக்கம் கிடைத்தது. பிறகு இப்பொழுது எப்படி மறப்பீர்கள். இப்பொழுது நீங்கள் எப்பொழுதுமே நினைவில் இருப்பவர்கள்.

 

விடை பெறும் நேரத்தில் கூறிய மகாவாக்கியம்:

சங்கமயுகமே சந்திப்பதற்கான யுகம். எந்தளவு சந்திப்பீர்களோ, அந்தளவு இன்னும் சந்திக்க வேண்டுமென்ற ஆசை அதிகரிக்கும். மேலும் சந்திக்க வேண்டுமென்ற நல்ல ஆசை இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த சந்திப்பதற்கான நல் ஆசை தான் மாயாவை வென்றவர் ஆக்கிவிடுகிறது. இந்த சந்திக்க வேண்டுமென்ற நல் எண்ணம் எப்பொழுதும் தந்தையின் நினைவை இயல்பாகவே கொண்டு வந்து விடுகிறது. இது இருக்கத் தான் வேண்டும். இது நிறைவேறி விட்டதென்றால் சங்கமயுகம் முடிவடைந்துவிடும். மற்ற அனைத்து ஆசைகளும் நிறைவேறி விட வேண்டும், ஆனால் நினைவில் எப்பொழுதும் முழ்கியிருக்க வேண்டுமென்ற நல் ஆசை முன்னேற்றத்தை செய்வித்துக் கொண்டேயிருக்கும். அப்படித் தான் இருக்கிறது இல்லையா? எனவே எப்பொழுதுமே சந்திப்பு விழா நிகழ்ந்துக் கொண்டேயிருக்கும், அது அவ்யக்தமாக இருக்கலாம், அல்லது வியக்தமாக இருக்கலாம். எப்பொழுதுமே கூடவே தான் இருக்கிறோம் பிறகு சந்திப்பதற்கான அவசியம் தான் என்ன? ஒவ்வொரு சந்திப்பிற்கும் அதனதன் சொரூபம் மற்றும் பிராப்தி இருக்கிறது. அவ்யக்த சந்திப்பு வேறு, மற்றும் சாகார சந்திப்பு வேறு. சந்திப்பதோ நல்லதே தான். நல்லது. எப்பொழுதுமே நல்ல மற்றும் சிரேஷ்ட காலை இருக்கும். அவர்களோ குட்மார்னிங் என்று மட்டும் சொல்வார்கள். ஆனால் இங்கே நல்லதாக இருக்கிறது, சிரேஷ்டமாகவோ இருக்கிறது. ஒவ்வொரு வினாடியும் நல்லது மற்றும் சிரேஷ்டமானது, எனவே ஒவ்வொரு வினாடிக்காக வாழ்த்துக்கள்! நல்லது. ஒம்சாந்தி.

 

வரதானம்:

தந்தையின் துணை மூலமாக தூய்மை என்ற இயற்கையான குணத்தை சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

 

ஆத்மாவின் இயற்கையான குணமே தூய்மை, தூய்மையின்மை மாற்றானின் குணம். எப்பொழுது இயற்கையான குணத்தின் நிச்சயம் ஏற்பட்டுவிட்டது என்றால், மாற்றானின் குணம் அசைக்கவே முடியாது. தந்தை என்னவாக இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று ஒருவேளை அவரை யதார்த்தமாக தெரிந்துக் கொண்டு உடன் வைத்துக் கொள்கிறீர்கள் என்றால், தூய்மை என்ற இயற்கையான குணத்தை தாரணை செய்வது மிக சுலபம். ஏனென்றால், உடன் இருக்கும் துணைவன் சர்வ சக்திவான். சர்வ சக்திவானின் குழந்தைகள் மாஸ்டர் சர்வசக்திவானின் எதிரில் தூய்மையின்மை வரமுடியாது. ஒருவேளை எண்ணத்தில் மாயா வருகிறதென்றால், அவசியம் ஏதோவொரு கதவு திறந்திருக்கிறது, மேலும் நிச்சயத்தில் குறை இருக்கிறது.

 

சுலோகன்:

மூன்று காலங்களையும் தெரிந்தவர் எந்தவொரு விஷயத்தையும் ஒரு காலத்தின் கண்ணோட்டதோடு பார்ப்பதில்லை, ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை இருக்கிறது என்று நினைப்பார்கள்.

 

ஓம்சாந்தி