07-04-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

மலர்களாக ஆகக் கூடிய குழந்தைகளுக்கு பகவானுடைய எந்த அறிவுரையின் மூலம் அவர்கள் எப்போதும் மணம் வீசக்கூடியவர்களாக இருப்பார்கள்?

பதில்:

ஓ! எனது மலர் போன்ற குழந்தைகளே, நீங்கள் தனக்குள் பாருங்கள் - எனக்குள் எந்த அசுரத்தனமான தீய குணம் என்ற முள்ளும் இல்லையல்லவா! ஒருவேளை உள்ளே ஏதாவது முள் இருந்தது என்றால் பிறருடைய அவகுணங்களின் மூலம் வெறுப்பு ஏற்படுவது போல தனது அவகுணத்தின் மீதும் வெறுப்பு ஏற்பட வேண்டும், அப்போது முள் வெளியேறிவிடும். தன்னைத் தான் கண்கானித்தபடி இருங்கள் - மனம்-சொல்-செயலால் தண்டனையை அனுபவிக்க வேண்டிய அளவு எந்த பாவ கர்மமும் ஆவதில்லைதானே.

ஓம் சாந்தி. ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தைப் புரிய வைக்கிறார். இந்த சமயம் இராவண இராஜ்யமாக இருப்பதால் மனிதர்கள் அனைவரும் தேக அபிமானிகளாக இருக்கின்றனர், ஆகையால் அவர்கள் காட்டு முள் எனப்படுகின்றனர். இதை யார் புரிய வைப்பது? எல்லைக்கப்பாற்பட்ட தந்தை. அவர் இப்போது முட்களை மலர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது மாயை மலராக ஆகிக் கொண்டிருக்கும்போதே முள்ளாக ஆக்கி விடக் கூடியதாக உள்ளது. இது முள் நிறைந்த காடு என்றே சொல்லப்படுகிறது, இதில் பல விதமான மிருகங்கள் போன்ற மனிதர்கள் வசிக்கின்றனர். மனிதர்கள்தான், ஆனால் ஒருவருக்கொருவர் மிருகங்களைப் போல சண்டையிட்டுக் கொண்டபடி இருக்கின்றனர். வீட்டுக்கு வீடு சண்டை மிகுந்திருக்கிறது. விஷக்கடலில் தான் அனைவரும் இருக்கின்றனர். இந்த முழு உலகமும் மிகப் பெரிய விஷக் கடலாக உள்ளது, அதில் மனிதர்கள் அடி வாங்கியபடி உள்ளனர். இதுதான் தூய்மையற்ற பிரஷ்டாச்சாரி (கீழான) உலகம் எனப்படுகிறது. இப்போது நீங்கள் முள்ளிலிருந்து மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். தந்தை தோட்டக்காரர் எனவும் அழைக்கப்படுகிறார். தந்தை வந்துப் புரிய வைக்கிறார் - கீதையில் உள்ளது ஞானத்தின் விஷயங்கள் மற்றபடி மனிதர்களின் நடத்தை எப்படி உள்ளது - பாகவதத்தில் இது குறித்த வர்ணனை உள்ளது. என்னென்ன விஷயங்கள் எழுதிவிட்டனர். சத்யுகத்தில் இப்படி சொல்லமாட்டார்கள். சத்யுகமே மலர்களின் தோட்டமாகும். இப்போது நீங்கள் மலர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மலர்களாக ஆகி பின் முட்களாக ஆகிவிடுகின்றனர். இன்று மிகவும் நன்றாக நடக்கின்றனர், பிறகு மாயையின் புயல் வந்துவிடுகிறது. அமர்ந்தபடியே மாயை மோசமான நிலைக்கு தள்ளிவிடுகிறது. நான் உங்களை உலகின் எஜமானாக ஆக்குகிறேன் எனத் தந்தைக் கூறிக் கொண்டே இருக்கிறார். நீங்கள் உலகின் எஜமானாக இருந்தீர்கள் என பாரதவாசிகளுக்கு கூறுகிறார். நேற்றைய விஷயமாகும். இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. வைர வைடூரியங்களால் ஆன மாளிகைகள் இருந்தன. அது அல்லாவின் தோட்டம் என்றே சொல்கின்றனர். வனம் இங்கே இருக்கிறது, பிறகு தோட்டமும் இங்கே இருக்குமல்லவா. பாரதம் சொர்க்கமாக இருந்தது, அதில் மலர்களே நிறைந்திருந்தன. தந்தைதான் மலர்த் தோட்டத்தை உருவாக்குகிறார். மலராக ஆகியபடியே பிறகு கெட்ட தொடர்பில் வந்துக் கெட்டுப் போகின்றனர். போதும், பாபா நாங்கள் திருமணம் செய்து கொள்கிறோம். மாயையின் கவர்ச்சியைப் பார்க்கின்றனர் அல்லவா. இங்கேயோ (மதுபன்) முற்றிலும் அமைதி நிறைந்துள்ளது. இந்த முழு உலகமுமே காடாக உள்ளது. காட்டில் கண்டிப்பாக தீ பற்றப் போகிறது. ஆக, காட்டில் வசிப்பவர்களும் அழிந்துப் போவார்கள் அல்லவா. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன் பற்றியதைப் போன்று அதே தீ பற்றும், அதன் பெயரை மகாபாரதச் சண்டை என வைத்துள்ளனர். அணுகுண்டுகளின் போர் முதலில் யாதவர்களுடையதாகத்தான் இருக்கும். அந்த பாடலும் உள்ளது. அறிவியலின் மூலம் ஆயுதங்களை உருவாக்கியுள்ளனர். சாஸ்திரங்களில் பல கதைகள் உள்ளன. தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - அப்படி யாரும் வயிற்றிலிருந்து ஆயுதங்களை வெளிப்படுத்த முடியாது. அறிவியலின் மூலம் எவ்வளவு அணுகுண்டுகள் முதலானவற்றை உருவாக்குகின்றனர். இரண்டே குண்டுகள் போட்டாலும் எவ்வளவு நகரங்கள் அழிந்துவிட்டன. எவ்வளவு மனிதர்கள் இறந்தனர். இலட்சக்கணக்கானவர்கள் இறந்திருப்பார்கள். இப்போது இந்த இவ்வளவு பெரிய காட்டில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கின்றனர், இதில் தீ பற்றப் போகிறது.

சிவபாபா புரிய வைக்கிறார், எனினும் கூட தந்தை இரக்க மனமுள்ளவர். தந்தையே அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். எங்கே போகப் போகிறார்கள்? தீ பிடிப்பதைப் பார்த்தார்கள் என்றால் பிறகு தந்தையிடம் தான் சரணடைவார்கள். தந்தை அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். பிறப்பு இறப்பற்றவர். அவரை பிறகு எங்கும் நிறைந்தவர் என்று சொல்லிவிடுகின்றனர். இப்போது நீங்கள் சங்கமயுகத்தவர்கள். உங்கள் புத்தியில் முழுமையான ஞானம் உள்ளது. நண்பர்கள்-உறவினர்களுடன் உறவையும் பராமரிக்க வேண்டும். அவர்களுக்குள் அசுர குணங்கள் உள்ளன, உங்களுக்குள் இருப்பது தெய்வீக குணங்கள். உங்களுடைய வேலை மற்றவர்களுக்கும் கூட இதையே கற்பிக்க வேண்டும். மந்திரத்தைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். கண்காட்சிகளின் மூலம் நீங்கள் எவ்வளவு புரிய வைக்கிறீர்கள். பாரதவாசிகளின் 84 பிறவிகள் முழுமையடைந்துள்ளன. இப்போது மனிதரிலிருந்து தேவதைகளாக ஆக்குவதற்காக தந்தை வந்துள்ளார் அதாவது நரகவாசி மனிதர்களை சொர்க்கவாசிகளாக ஆக்குகிறார். தேவதைகள் சொர்க்கத்தில் இருப்பார்கள். இப்போது தனக்கு அசுர குணங்களின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. தனக்குள் பார்க்க வேண்டும் - நாம் தெய்வீக குணங்கள் நிறைந்தவராகியிருக்கிறோமா? நமக்குள் எந்த தீய குணங்களும் இல்லைதானே? மனம்-சொல்-செயலால் அசுரத்தனமான வேலை ஆகிவிடும் படி நான் எந்த கர்மமும் செய்யவில்லைதானே? நாம் முட்களை மலர்களாக்கக்கூடிய சேவை செய்கிறோமா இல்லையா? பாபா மலர்த் தோட்டக்காரர், பிரம்மாகுமார், குமாரிகளாகிய நீங்கள் தோட்டத்தின் வேலைக்காரர்கள். வேலைக்காரர்களும் வித விதமானவர்களாக இருக்கின்றனர். சிலரோ ஒன்றும் அறியாதவர்களாக இருக்கின்றனர், யாரையும் தனக்குச் சமமாக ஆக்க முடிவதில்லை. (மலர்க்)கண்காட்சியில் தோட்டக்காரர் போகமாட்டார். தோட்ட வேலைக்காரர்கள் செல்வார்கள். இந்த தோட்ட வேலைக்காரரும் (பிரம்மா) சிவபாபாவுடன் இருக்கிறார், ஆகையால் இவரும் செல்ல முடியாது. தோட்ட வேலைக்காரர்களாகிய நீங்கள் சேவை செய்வதற்காகச் செல்கிறீர்கள். நல்ல நல்ல வேலைக்காரர்களைத்தான் அழைக்கின்றனர். எதுவும் தெரியாதவர்களை அழைக்காதீர்கள் என பாபாவும் சொல்கிறார். பாபா பெயரை குறிப்பிடுவதில்லை. மூன்றாம் தர வேலைக்காரர்களும் உள்ளனர் அல்லவா. யார் நல்ல நல்ல மலர்களை உருவாக்குகின்றனரோ அவர்களை தோட்டக்காரர் விரும்புவார். அவர்களைக் கண்டு தோட்டக்காரர் குஷியும் அடைவார். வாயிலிருந்து எப்போதும் இரத்தினங்களைத்தான் வெளிப்படுத்தியபடி இருப்பார்கள். யாரேனும் இரத்தினங்களுக்குப் பதிலாக கற்களை வெளிப்படுத்தினார்கள் என்றால் பாபா என்ன சொல்வார்? சிவனுக்கு எருக்க மலர்களையும் கூட சூடுகின்றனர் அல்லவா. ஆக சிலர் இப்படியும் கூட அமைந்துவிடுகின்றனர் அல்லவா. நடத்தை எப்படி இருக்கிறது பாருங்கள்! முட்கள் போன்றவர்கள் கூட வருகின்றனர், (ஏற்றம் அடைகின்றனர்) பிறகு காட்டிற்குச் சென்று (வனவாசி ஆகி) விடுகின்றனர். சதோபிரதானம் அடைவதற்குப் பதிலாக இன்னும் கூட தமோபிரதானமாகியபடி செல்கின்றனர். பிறகு அவர்களுடைய கதி என்ன ஆவது!

தந்தை சொல்கிறார் - ஒன்று நான் சுயநலமற்று இருக்கிறேன், மற்றொன்று பரோபகாரியாக இருக்கிறேன். என்னை நிந்தனை செய்யக் கூடிய பாரதவாசிகளுக்கு பர-உபகாரம் செய்கிறேன். நான் இந்த சமயத்தில்தான் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறேன். சொர்க்கத்திற்கு வாருங்கள் என அழைத்தால் நாங்கள் இங்கே சொர்க்கத்தில்தானே இருக்கிறோம் என்கின்றனர். அட, சொர்க்கம் இருப்பது சத்யுகத்தில். பிறகு கலியுகத்தில் சொர்க்கம் எங்கிருந்து வந்தது. கலியுகம் நரகம் என்று தான் அழைக்கப்படுகிறது. பழைய தமோபிரதான உலகமாக இருக்கிறது. சொர்க்கம் எங்கே இருக்கும் என மனிதர்களுக்கு தெரியவே தெரியாது. சொர்க்கம் ஆகாயத்தில் இருப்பதாக புரிந்துக் கொள்கின்றனர். தில்வாடா கோவிலில் கூட சொர்க்கத்தை மேலே காட்டியுள்ளனர். கீழே தபஸ் செய்துக் கொண்டிருக்கின்றனர். எனவே மனிதர்களும் இன்னார் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என சொல்லிவிடுகின்றனர். சொர்க்கம் எங்கிருக்கிறது? சொர்க்கவாசி ஆகினார் என அனைவரைக் குறித்தும் சொல்லிவிடுகின்றனர். இது விஷக் கடலாகத்தான் உள்ளது. பாற்கடல் என விஷ்ணுபுரி சொல்லப்படுகிறது. அவர்கள் பிறகு பூஜைக்காக ஒரு பெரிய குளத்தை உருவாக்கிவிட்டனர். அதில் விஷ்ணுவை அமர்த்தியுள்ளனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடு செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே பால் ஓடும் நதிகள் இருக்கும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் மலர்களாக ஆகியபடி இருங்கள். இவர் முள்ளாக இருக்கிறார் என்று யாராவது சொல்லும் அளவுக்கு எந்த விதமான நடத்தையும் ஒருபோதும் இருக்கக் கூடாது. எப்போதும் மலராக ஆவதற்கான முயற்சி செய்துக் கொண்டே இருங்கள். மாயை முள்ளாக ஆக்கிவிடுகிறது, ஆகையால் தன்னை மிகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இல்லற விஷயங்களில் இருந்தபடி தாமரை மலர்போல் தூய்மையாய் ஆக வேண்டும் என தந்தை சொல்கிறார். தோட்டக்காரரான பாபா முள்ளிலிருந்து மலராக ஆக்குவதற்காக வந்திருக்கிறார். நாம் மலராகியிருக்கிறோமா என பார்க்க வேண்டும். மலர்களைத்தான் சேவைக்காக அங்கும் இங்கும் அழைத்தபடி இருக்கின்றனர். பாபா! ரோஜா மலரை அனுப்புங்கள் என்கிறார்கள். என்னென்ன மாதிரியான மலர் உள்ளது என கவனிக்கப்படுகிறது அல்லவா. நான் வருவதே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக என தந்தை சொல்கிறார். இந்தக் கதை சத்ய நாராயணருடையதே ஆகும். சத்ய பிரஜைகளுடையது அல்ல. இராஜா இராணியாக ஆவார்கள் என்றால் பிரஜைகளும் ஆவார்கள் என்பது புரிந்த விஷயமாகும். இராஜா, இராணி மற்றும் பிரஜைகள் எப்படி வரிசைக்கிரமமாக ஆகின்றனர் என்பதை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். தம்மிடம் இரண்டு ரூபாயோ, ஐந்து ரூபாயோ கூட சேமிப்பு இல்லாத ஏழைகள் என்னதான் கொடுப்பார்கள். ஆயிரம் ரூபாய் கொடுப்பவர்களுக்கு கிடைக்கும் அளவு அவர்களுக்கும் கிடைக்கிறது. பாரதம் அனைத்தையும் விட ஏழையாக உள்ளது. பாரதவாசிகளாகிய நாம் சொர்க்கவாசிகளாக இருந்தோம் என யாருக்கும் நினைவில்லை. தவளைகள் கொர் கொர் என சப்தமிடுவது போல் தேவதைகளின் மகிமையைப் பாடுகின்றனர், ஆனால் புரிந்துக் கொள்ள முடிவதில்லை. வானம்பாடி பறவை எவ்வளவு இனிமையாக குரல் கொடுக்கிறது, அர்த்தம் எதுவும் இருப்பதில்லை. இன்றைய நாட்களில் கீதையை சொல்பவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர். தாய்மார்கள் கூட வெளிப்பட்டுள்ளனர். கீதையின் மூலம் எந்த தர்மம் ஸ்தாபனை ஆகியது? இதைப் பற்றி ஒரு சிறிதும் தெரியாது. கொஞ்சம் ஏதாவது யாரேனும் மந்திர தந்திரங்கள் செய்தால் போதும், இவர் பகவான் எனப் புரிந்துக் கொள்வார்கள். பதீத பாவனா எனப் பாடுகின்றனர். ஆக, தூய்மையற்றவர்களாக உள்ளனர் அல்லவா. தந்தை சொல்கிறார் - விகாரத்தில் செல்வது என்பது முதல் நம்பர் பதீதம் (தூய்மையற்ற) தன்மையாகும். இந்த முழு உலகமும் பதீதமாக உள்ளது. ஓ பதீத பாவனா வாருங்கள் என அனைவரும் கூக்குரலிடுகின்றனர். இப்போது அவர் வர வேண்டுமா அல்லது கங்கா ஸ்நானம் செய்வதன் மூலம் தூய்மையடைய வேண்டுமா? மனிதரிலிருந்து தேவதையாக்குவதற்கு தந்தை எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது. என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் முள்ளிலிருந்து மலராக ஆகிவிடுவீர்கள் என தந்தை சொல்கிறார். வாயிலிருந்து ஒருபோதும் கற்களை வெளிப்படுத்தாதீர்கள். மலராக ஆகுங்கள். இதுவும் கூட படிப்பல்லவா. போகப் போக கிரகாச்சாரம் பிடித்துக் கொண்டது என்றால் தோல்வியடைந்துவிடுகின்றனர். நம்பகமானவரிலிருந்து நம்பகமற்றவராகி விடுகின்றனர். பிறகு நாம் பாபாவிடம் செல்லலாம் என சொல்கின்றனர். இந்திர சபையில் அழுக்கானவர் வர முடியாது. இது இந்திரசபையல்லவா. அழைத்து வரக்கூடிய பிராமணியரின் (நிமித்தமானவர்கள்) மீதும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. விகாரத்தில் சென்றுவிட்டனர் என்றால் பிராமணியின் மீதும் சுமை ஏறிவிடும், ஆகையால் கவனத்துடன் பிறரை அழைத்து வர வேண்டும். முன்னே செல்லச் செல்ல நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் - சாது சன்னியாசிகள் முதலான அனைவரும் வந்து வரிசையில் நின்றுவிடுவார்கள். பீஷ்ம பிதாமகர் முதலானவர்களின் பெயர்கள் உள்ளன அல்லவா. குழந்தைகளுக்கு விசால புத்தி இருக்க வேண்டும். பாரதம் மலர்த் தோட்டமாக இருந்தது என நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் சொல்ல முடியும். தேவி தேவதைகள் வசித்துக் கொண்டிருந்தனர். இப்போதோ முட்களாகிவிட்டனர். உங்களுக்குள் 5 விகாரங்கள் உள்ளன அல்லவா. இராவண இராஜ்யம் என்றாலே காடு. தந்தை வந்து முட்களை மலர்களாக ஆக்குகிறார். சிந்தித்துப் பார்க்க வேண்டும் - இப்போது நாம் ரோஜா மலராக ஆகாவிட்டால் பிறவி பிறவிகளுக்கும் எருக்க மலராகவே ஆகிவிடுவோம். அனைவரும் தமக்கு நன்மை செய்துக் கொள்ள வேண்டும். சிவபாபாவுக்கு சகாயம் செய்யப் போவதில்லை. தனக்கு சகாயம் செய்துக் கொள்ள வேண்டும். இப்போது ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். தோட்டத்திற்கு யார் சென்றாலும் மணம் வீசும் மலர்களைத்தான் பார்ப்பார்கள். எருக்க மலர்களை பார்க்கமாட்டார்கள். மலர்க் கண்காட்சி நடக்கிறது அல்லவா. இதுவும் கூட மலர்க் கண்காட்சியாகும். மிகப்பெரிய பரிசு கிடைக்கிறது. மிகவும் முதல் தரமான மலராக ஆக வேண்டும். மிகவும் இனிமையான நடத்தை இருக்க வேண்டும். கோபமிக்கவர்களிடம் மிகவும் பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஸ்ரீமத்படி நடந்து தூய்மையடைந்து தூய்மையான உலகமாகிய சொர்க்கத்தின் எஜமான் ஆக விரும்புகிறோம். பல யுக்திகள் இருக்கின்றன அல்லவா. தாய்மார்களிடம் பெண்களுக்கேயான ஆழமான தந்திர குணங்கள் உள்ளன. சாதுரியத்துடன் தூய்மையாய் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். பகவானுடைய மகா வாக்கியம் - காமம் மிகப்பெரிய எதிரி, தூய்மையடைந்தீர்கள் என்றால் சதோபிரதானமாகிவிடுவீர்கள் எனும்போது நாம் பகவானுடைய பேச்சைக் கேட்கக் கூடாதா என்ன? என நீங்கள் எடுத்துச் சொல்ல முடியும். யுக்தியுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உலகின் எஜமான் ஆவதற்காக சற்றே சகித்துக் கொண்டால் என்ன ஆகிவிடும்? தனக்காக நீங்கள் செய்கிறீர்கள் அல்லவா? அவர்கள் இராஜ்யத்திற்காக சண்டையிடுகின்றனர், நீங்கள் உங்களுக்காக அனைத்தும் செய்கிறீர்கள். முயற்சி செய்ய வேண்டும். தந்தையை மறந்துவிடுவதால் தான் விழுகிறீர்கள். பிறகு வெட்கம் ஏற்படுகிறது. எப்படி தேவதை ஆகப்போகிறோம் என்று. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. மாயையின் கிரகச்சாரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வாயிலிருந்து எப்போதும் ஞான ரத்தினங்களை வெளிப்படுத்த வேண்டும். கெட்ட தொடர்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

2. மணம் வீசும் மலராக ஆவதற்காக தீய குணங்களை நீக்கிவிட வேண்டும். ஸ்ரீமத் படி மிக மிக பணிவானவராக ஆக வேண்டும். மிகப்பெரிய எதிரியான காம விகாரத்திடம் ஒருபோதும் தோல்வி அடையக் கூடாது.

வரதானம்:

சதா சக்திசாலியான உள்ளுணர்வின் மூலம் எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையில் தயாராக இருக்கக் கூடிய எல்லைக்குட்பட்ட வி‘யங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுக.

எவ்வாறு சாகார பிரம்மா பாபாவிற்கு சேவையை தவிர வேறு எதுவும் தென்படவில்லையோ, அவ்வாறு குழந்தைகளாகிய நீங்களும் கூட தனது சக்திசாலியான உள்ளுணர்வு மூலம் எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையில் சதா தயாராக இருந்ர்கள் என்றால் எல்லைக்குட்பட்ட விˆயங்கள் தானாகவே முடிந்துப் போய்விடும். எல்லைக்குட்பட்ட விˆயங்களில் நேரத்தை கொடுப்பது - இது கூட பொம்மை விளையாட்டாக இருக்கிறது, அதில் நேரம் மற்றும் ஆற்றல் வீணாகிறது, ஆகையால் சின்ன சின்ன விˆயங்களில் நேரம் மற்றும் சேமித்து வைத்துள்ள சக்திகளை வீணாக இழாக்காதீர்கள்.

சுலோகன்:

சேவையில் வெற்றி அடைய வேண்டுமென்றால் வார்த்தை மற்றும் நடத்தை தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்..