07-05-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இப்போது பாபாவிற்கு சமமாக ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். குழந்தைகளே, எனக்கு சமமாகி என்னுடன் வீட்டிற்கு வாருங்கள் என்பதே பாபாவின் விருப்பம் ஆகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எந்த விஷயத்தைப் பார்த்து அதிசயப்பட்டு பாபாவிற்கு நன்றி கூறுகிறீர்கள்?

பதில்:
பாபா எப்படி தன்னுடைய கடமையைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் பார்த்து அதிசயப்படுகிறீர்கள். தன்னுடைய குழந்தைகளுக்கு இராஜயோகத்தைக் கற்பித்துத் தகுதி அடைய வைத்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் உள்ளுக்குள்ளேயே இனிமை யான தந்தைக்கு நன்றி கூறுகிறீர்கள். இந்த நன்றி என்ற சப்தம் கூட பக்தி மார்க்கத் தினுடையதாகும் என்று பாபா கூறுகின்றார். குழந்தை களுக்கு உரிமை இருக்கிறது. இதில் நன்றி எதற்கு. நாடகத்தின் படி பாபா ஆஸ்தியை அளிக்கத்தான் வேண்டும்.

பாடல்:
யாருடைய துணைவன் பகவான்.....

ஓம் சாந்தி.
இந்த பாடல் குழந்தைகளுக்காக .யாருடைய துணைவனாக சர்வ சக்திவான் பரம்பிதா பரமாத்மா இருக்கிறாரோ அவரிடம் மாயாவின் புழுதி காற்று அல்லது புயல் என்ன செய்ய முடியும். அந்த புழுதி காற்று அல்ல. மாயாவின் புயல் ஆத்ம ஜோதியை அனைத்து விடுகின்றது. இப்போது எழுப்பக் கூடிய துணைவன் கிடைத்திருக்கிறார் என்றால் மாயா என்ன செய்ய முடியும். மகாவீர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மாயா இராவணனை வெற்றி அடையக் கூடியவர். எப்படி வெற்றி அடைவது. குழந்தைகள் எதிரில் அமர்ந்திருக் கிறார்கள். பாப்தாதா அமர்ந்திருக் கிறார். தாதா மற்றும் பாபாவை தந்தை மற்றும் பிதாமகன் என்று கூறுகிறார்கள். எனவே பாப்தாதா ஆகிவிட்டார். ஆன்மீகத் தந்தை நம் முன் இருக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களுடன் தான் பேசுவார். ஆத்மா தான் உடல் மூலமாக கேட்கிறது. பேசுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு தேக உணர்வில் வருவது பழக்கம் ஆகிவிட்டது. முழு கல்பமும் தேக உணர்வில் இருக் கிறீர்கள். ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுத்தீர்கள். உடலுக்குத் தான் பெயர் வைக்கப்படுகிறது. சிலர் நான் பரமானந்தன் என்பார்கள், சிலரின் பெயரோ வேறு, வேறு சிலரின் பெயர் வேறு...... நான் எப்போதும் ஆத்ம உணர்வில் இருக்கிறேன் என பாபா கூறுகிறார். எனக்கு ஒரு போதும் தேகம் கிடைப்பதில்லை. எனவே எனக்கு ஒரு போதும் தேக உணர்வு ஏற்படுவ தில்லை. இந்த தேகமோ இந்த தாதாவினுடையது. நான் எப்போதும் ஆத்ம உணர்வுடைய வனாக இருக்கிறேன். குழந்தைகளாகிய உங்களை எனக்குச் சமமாக மாற்றுகிறேன். ஏனென்றால் இப்போது நீங்கள் என்னிடம் வர வேண்டும். தேக உணர்வை விட வேண்டும். நேரம் தேவைப்படுகிறது. நீண்ட காலமாக தேக உணர்வில் இருக்கக் கூடிய பயிற்சி ஆகிவிட்டது. இப்போது இந்த தேகத்தை விடுங்கள். எனக்கு சமமாகுங்கள் என்று பாபா கூறுகிறார். ஏனென்றால், நீங்கள் என்னுடைய விருந்தினர் ஆக வேண்டும். என்னுடன் திரும்ப வேண்டும். ஆகவே முதலில் தங்களை ஆத்மா என நிச்சயபடுத்திக் கொள்ளுங்கள் என கூறுகிறேன். நான் ஆத்மாக்களிடம் தான் இதைப் பேசுகிறேன். நீங்கள் தந்தையை நினைத்தால் அந்த பார்வை முடிந்து போகும். இதில் தான் உழைக்க வேண்டி யிருக்கிறது. நாம் ஆத்மாக்களின் சேவை செய்துக் கொண்டிருக்கிறோம். ஆத்மா உடல் மூலமாக கேட்கிறது. ஆத்மாவாகிய நான் உங்களுக்கு பாபாவின் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆத்மா தன்னை ஆண் என்றோ, பெண் என்றோ கூறாது. உடலை பொறுத்து தான் ஆண், பெண் என்ற பெயர். அவரோ பரமாத்மா ஆவார். ஏ, ஆத்மாக்களே! கேட்கிறீர்களா என்று பாபா கேட்கின்றார். ஆம், கேட்கிறேன் என்று ஆத்மா கூறுகின்றது. நீங்கள் உங்களின் தந்தையை அறிகிறீர்கள். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். எப்படி நீங்கள் ஆத்மாவோ அவ்வாறே நான் உங்களுடைய தந்தையாக இருக்கிறேன். அவருக்கு பரம்பிதா பரமாத்மா என கூறப் படுகிறது. அவருக்கென்று உடல் இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கு தனக்கென்று சூட்சுமமான உடல் இருக்கிறது. ஆத்மாவை ஆத்மா என்று தான் கூறுவார்கள். என்னுடைய பெயரோ சிவன் . சரீரத்திற்கு நிறைய பெயர் வைக்கிறார்கள். நான் சரீரத்தை எடுப்பதில்லை. ஆகவே, எனக்கு சரீரத்திற்கு என்று பெயர் இல்லை. நீங்கள் சாலிகிராம் ஆவீர்கள். ஓ, ஆத்மாக்களே! கேட்கிறீர்களா என்று ஆத்மாக்களாகிய உங்களுக்கு கூறுகின்றார். இப்போது நீங்கள் ஆத்ம உணர்வில் இருப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். ஆத்மாக்கள் இந்த உடல் மூலமாக கேட்கிறது, பேசுகிறது. தந்தை வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். ஆத்மா முட்டாளாகி விட்டது. ஏனென்றால், பாபாவை மறந்து விட்டது. சிவனும் பரமாத்மா, கிருஷ்ணரும் பரமாத்மா என்பது கிடையாது. அவர்களோ கல், முள் அனைத்திலும் பரமாத்மா இருப்பதாகக் கூறுகிறார் கள். முழு சிருஷ்டியிலும் தலை கீழான ஞானம் பரவி இருக்கிறது. பலர் நாம் பகவானின் குழந்தைகள் என நினைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் சர்வ வியாபி என்று கூறுபவர்கள் தான் இருப்பார்கள். இந்த புதை குழியிலிருந்து அனைவரையும் வெளியே எடுக்க வேண்டும். முழு உலகமும் ஒரு பக்கம் இருக்கிறது. பாபா இன்னொரு பக்கம் இருக்கிறார். பாபாவின் மகிமைகள் பாடப்பட்டிருக்கிறது. ஆஹா, பிரபு உன்னுடைய லீலையே லீலை.... ஆஹா என்னுடைய வழிப்படி கதி மற்றும் சத்கதி கிடைக்கிறது. சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவரே ஆவார். மனிதர்கள் கதி சத்கதிக்காக எவ்வளவு தலையை உருட்டுகிறார்கள். இந்த சத்குரு ஒருவரே முக்தி ஜீவன் முக்தி இரண்டையும் அளிக்கிறார்.

இந்த சாது சன்னியாசி போன்ற அனைவரையும் சத்கதி அடைவதற்காக என்னிடம் வர வேண்டியிருக்கிறது என பாபா கூறுகிறார். அனைவருக்கும் சத்கதி அளிப்பவன் நான் ஒருவனே! ஆத்மாக்களிடம் பேசுகிறேன். நான் உங்களுடைய தந்தை வேறு யாரும் நீங்கள் அனைத்து ஆத்மாக்களும் என்னுடைய வாரிசு என்று கூற முடியாது. அவர்களோ ஈஸ்வரன் சர்வ வியாபி என கூறுகிறார்கள். எனவே, இவ்வாறு ஒரு போதும் கூற முடியாது. நான் வந்திருக்கிறேன். பக்தர்களுக்கு பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக என்று தந்தையே கூறுகின்றார். பக்தர்களைப் பாதுகாக்கக் கூடிய பகவான் ஒருவரே என பாடப்பட்டிருக்கிறது. அனைவரும் பக்தர்கள், எனவே நிச்சய மாக பகவான் தனிப்பட்டவர் ஆவார். பக்தர்களே பகவான் என்றால் பகவானை நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் மொழியில் பகவானை என்னென்ன சொல்கிறார்கள். ஆனால் உண்மையான பெயர் சிவன் ஆகும். யாராவது யாரை யாவது நிந்தித்தார்கள் அல்லது இழிவுபடுத்தினார்கள் என்றால் அவர்கள் மீது வழக்கு தொடர் கிறார்கள். ஆனால் இது நாடகம். வேறு யாருடைய வியமும் இவ்வாறு நடக்காது. நீங்கள் துக்கம் அடைந்திருக்கிறீர்கள் மீண்டும் அது நடக்கும் என பாபா அறிகின்றார். கீதா சாஸ்திரம் போன்றவைகளும் அவ்வாறே வெளி வரும். ஆனால் கீதை போன்றவைகளை மட்டும் படிப்பதால் எதையும் புரிந்துக் கொள்ள முடியாது. இங்கே சக்தி வேண்டும். சாஸ்திரங்கள் கூறக் கூடியவர்கள் என்னிடம் தொடர்பு வைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும் என்று யாருக்காக கூறுவார்கள். இவ்வாறு கூற முடியாது. அவர்கள் வெறும் கீதையின் புத்தகத்தை மட்டும் படித்துக் கூறுவார்கள்.

இப்போது நீங்கள் அனுபவி ஆவீர். 84-பிறவியின் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என அறிகிறீர்கள். நாடகத்தில் ஒவ்வொரு வியமும் அதனதன் நேரத்தில் நடக்கிறது. இதை பாபா குழந்தைகளிடம், ஆத்மாக்களிடம் பேசுகின்றார். அதாவது நீங்களும் ஆத்மாக் களாகி நாம் ஆத்மாக்களிடம் பேசுகின்றோம், நம்முடைய ஆத்மா இந்த வாய் மூலமாகப் பேசுகின்றது என கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆத்மா இந்த காதுகள் மூலமாகக் கேட்கிறது. நான் பாபாவினுடைய செய்திகளை அளிக்கிறேன், நான் ஆத்மா. இதை புரிய வைப்பது எவ்வளவு எளிதாகும். உங்களுடைய ஆத்மா ஒரு உடலை விட்டு விட்டு இன்னொன்றை எடுக்கிறது. ஆத்மா 84 பிறவிகளை முடித்து விட்டது. ஒரு வேளை பரமாத்மா சர்வ வியாபி என்றால் ஜீவ பரமாத்மா என்று கூறுங்களேன் என கூறுகிறார். ஜீவ ஆத்மா என ஏன் கூறு கிறீர்கள். ஆத்மாவுடன் பேசுகின்றார்கள். என்னுடைய சகோதர ஆத்மாக்கள் புரிந்திருக்கிறீர்கள் அல்லவா நான் பாபாவின் செய்தியை கூறுகின்றேன், 5000 வருடத்திற்கு முன்பு இருந்தவர். என்னை நினையுங்கள் என்று பாபா கூறுகின்றார். இது துக்க தாமம் ஆகும். சத்யுகம் சுக தாமம் ஆகும். ஏ, ஆத்மாக்களே! நீங்கள் சுக தாமத்தில் இருந்தீர்கள் அல்லவா?. நீங்கள் 84ன் சக்கரத்தை சுற்றினீர்கள். சதோபிரதானத்திலிருந்து சதோ, ரஜோ, தமோவில் நிச்சயம் வர வேண்டும். இப்போது மீண்டும் கிருஷ்ண புரிக்குச் செல்ல வேண்டும். சென்று அங்கே என்ன ஆக விரும்புகிறீர்கள்.மகாராஜா, மகாராணி ஆவீர்களா அல்லது வேலைக்காரர்களா? இப்படி ஆத்மாக்களிடம் பேச வேண்டும். ஊக்கம் இருக்க வேண்டும். நான் பரமாத்மா என்பது கிடையாது. பரமாத்மாவோ ஞானத்தின் கடல் ஆவார். அவர் ஒரு போதும் அஞ்ஞானத் தின் கடல் ஆவதில்லை. ஞானம் மற்றும் அஞ்ஞானத்தின் கடலாக நாம் தான் மாறுகின்றோம். பாபா விடமிருந்து ஞானத்தை எடுத்து மாஸ்டர் கடலாகின்றோம். உண்மையில் கடல் ஒரே ஒரு தந்தை தான் மற்ற அனைத்தும் நதிகள் ஆகும். வித்தியாசம் இருக்கிறது அல்லவா? ஆத்மா புத்தியற்றதாக இருக்கும் போது தான் புரிய வைக்கப்படுகிறது. சொர்கத்தில் யாருக்கும் புரிய வைக்க மாட்டார்கள். இங்கே அனைவரும் புத்தியற்றவர்களாக, அழுக்காக, துக்கமானவர்களாக இருக்கிறார்கள். ஏழை மக்கள் தான் இந்த ஞானத்தை அமைதியாக உட்கார்ந்து கேட்பார்கள். பணக்காரர்களுக்கு தன்னுடைய போதை இருக்கிறது. அவர்களிலும் ஒரு சிலரே வருவார்கள். ஜனக ராஜா அனைத்தையும் கொடுத்து விட்டார் அல்லவா! இங்கே அனைவரும் ஜனகர்கள் ஆவார்கள். ஜீவன் முக்திக்காக ஞானம் எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். நாம் ஆத்மா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் பாபா நாங்கள் உங்களுக்கு எவ்வளவு நன்றி செலுத்துவது. நாடகப்படி தாங்கள் சொத்து கொடுக்கத்தான் வேண்டும். உங்களுடைய குழந்தையாக எங்களை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். இதில் நன்றி எதற்கு? எங்களை தங்களின் வாரிசாக மாற்றிடத்தான் வேண்டும். இதில் நன்றி எதற்கு? பாபாவே வந்து புரிய வைத்து தகுதி அடைய வைக்கின்றார். பக்தி மார்க்கத்தில் மகிமை செய்தார்கள் நன்றி என்ற வார்த்தை வெளிப்படுகிறது. தந்தையோ தன்னுடைய கடமையை செய்யத்தான் வேண்டும். வந்து மீண்டும் சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழியை தெரிவிக்கிறார். நாடகப்படி பாபா வந்து இராஜயோகத்தைக் கற்பிக்க வேண்டும். ஆஸ்தி கொடுக்க வேண்டும். பிறகு யார் எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அதற்கேற்ப சொர்க்கத்தில் செல்வீர்கள். பாபா அனுப்புவார் என்பது கிடையாது. தானாகவே முயற்சிக்கு ஏற்ப சொர்க்கத்தில் வந்து விடுவார்கள். மற்றபடி இதில் நன்றி கூறுவதற்கு எந்த விஷயமும் இல்லை. இப்போது பாபா என்ன விளையாட்டு காட்டுகின்றார். இதில் நாம் அதிசயப் படுகின்றோம். முன்பு நமக்குத் தெரியாது. இப்போது போக வேண்டும். பாபா நாங்கள் மீண்டும் இந்த ஞானத்தை மறந்து விடுவோமா? ஆம், குழந்தைகளே என்னுடைய மற்றும் உங்களுடைய புத்தியிலிருந்து ஞானம் மறைந்து போகும். பிறகு சரியான நேரத்தில் ஞானம் கொடுக்கக் கூடிய நேரத்தில் வெளிப்படும். இப்போது நாம் நிர்வாண தாமத்திற்குச் சென்று விடுவோம். பிறகு பக்தி மார்க்கத் தில் நான் பார்ட் நடிக்கிறேன். ஆத்மாவில் தானாகவே அந்த சம்ஸ்காரம் வந்து விடுகிறது. நான் கல்பத்திற்கு பிறகு இதே உடலில் வருவேன். இது புத்தியில் இருக்கிறது. ஆனால் மீண்டும் நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் தேக உணர்வுடையவராகி விடுகிறீர்கள். இது முக்கியமான விஷயமாகும். தந்தை, மற்றும் ஆஸ்தியை நினையுங்கள் கல்ப கல்பமாக நீங்கள் முயற்சிக்கு ஏற்ப ஆஸ்தி அடைகிறீர்கள். எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறார். மற்றபடி இந்த குறிக்கோளை அடைவதில் குப்தமான உழைப்பு இருக்கிறது.

ஆத்மா முதன் முதலில் வரும் போது புண்ணிய ஆத்மாவாக, சதோபிரதானமாக இருக்கிறது. பிறகு அது பாவ ஆத்மாவாக, தமோபிரதானமாக நிச்சயம் மாறுகிறது. இப்போது மீண்டும் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக நிச்சயம் மாற வேண்டும். என்னை நினையுங்கள் என்று பாபா செய்தி அளிக்கிறார். முழு படைப்பிற்கும் பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் சத்கதி அளிக்கக் கூடிய வள்ளல் அல்லவா. அனைவர் மீதும் தயை காட்டக் கூடியவர். அதாவது அனைவர் மீதும் இரக்கம் காட்டக் கூடியவர் ஆவார். சத்யுகத்தில் எந்த துக்கமும் இருக்காது. மற்ற ஆத்மாக்கள் அனைத்தும் சாந்தி தாமத்தில் போய் வசிக்கும். இப்போது மரணத்தின் தருணம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துக் கொண்டீர்கள். துக்கத்தின் கணக்கு வழக்கை யோக பலத்தால் முடிக்க வேண்டும். பிறகு ஞானம் மற்றும் யோக பலத்தால் நாங்கள் எதிர் கால சுகத்திற்கான கணக்கை சேமிக்க வேண்டும். எவ்வளவு சேமிக்கிறீர்களோ அவ்வளவு சுகத்தைப் பெறுவீர்கள். மேலும் துக்கத்தின் கணக்கு முடிந்து போகும். இப்போது நாங்கள் கல்பத்தின் சங்கமத்தில் வந்து துக்கத்தின் கணக்கு வழக்கை முடிக்கின்றோம். மேலும் இன்னொரு புறம் சேமிக்கின்றோம். இது வியாபாரம் அல்லவா? பாபா ஞான ரத்தினங்களைக் கொடுத்துக் குணவானாக மாற்று கிறார். பிறகு எவ்வளவு முடியுமோ தாரணை செய்யுங்கள். ஒவ்வொரு இரத்தினமும் லட்சக் கணக்கான ரூபாய் சொத்தாகும். இதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் சதா சுகமுடையவராக இருக்கிறீர்கள். இது துக்க உலகம் ஆகும். அது சுக உலகம் ஆகும். சன்னியாசி சொர்க்கத்தில் எப்போதும் சுகமே சுகம் இருக்கிறது என்பதை அறியவில்லை. ஒரேயொரு தந்தை தான் கீதையின் மூலமாக பாரதத்தை இவ்வளவு உயர்ந்ததாக மாற்றுகிறார். அவர்கள் எவ்வளவு சாஸ்திரங்கள் போன்றவைகளைக் கூறுகிறார்கள். ஆனால் உலகம் பழையதாகத்தான் ஆக வேண்டும். தேவதைகள் முதலில் புது உலகத்தில் இராம இராஜ்யத்தில் இருந்தனர். இப்போது தேவதை கள் இல்லை எங்கே போனார்கள்? 84 பிறவிகளை யார் அனுபவிப்பார்கள். வேறு யாருக்கும் 84 பிறவிகளின் கணக்கு வழக்கு எடுக்க முடியாது. 84 பிறவிகள் நிச்சயமாக தேவதா தர்மத்தினர் தான் எடுக்கிறார்கள். இலட்சுமி நாராயணன் போன்றோர் பகவானாக இருந்தார் என மனிதர்கள் நினைக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் நீயே நீதான். சரி, சர்வ வியாபி என்ற ஞானத்தினால் சுகமுடையவர் ஆகிறார்களா? சர்வ வியாபி என்ற ஞானம் போய் கொண்டே இருக்கிறது. இருப்பினும் பாரதம் ஏழையாக, நரகமாக ஆகிவிட்டது. பக்தியின் பலனை பகவான் கொடுத்தே ஆக வேண்டும். சன்னியாசிகள் அவர்களே சாதனைகள் செய்துக் கொண்டிருக்கும் போது என்ன பலன் கொடுப்பார்கள். மனிதர்கள் சத்கதி வள்ளல் கிடையாது. யார் யார் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களோ அவர்கள் வருவார்கள் இவ்வாறு பலர் சன்னியாசி தர்மத்தில் மாறியிருக்கிறார்கள். அவர்களும் வருவார்கள். இவை அனைத்தும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.

நான் ஆத்மா என்ற பயிற்சி செய்ய வேண்டும் என பாபா புரிய வைக்கிறார். ஆத்மாவின் ஆதாரத்தில் தான் உடல் நிற்கிறது. உடல் அழியக் கூடியதாகும். ஆத்மா அழிவற்றதாகும். நடிப்பு அனைத்தும் சிறிய ஆத்மாவில் இருக்கிறது. எவ்வளவு அதிசயமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் கூட புரிந்து கொள்ள முடியாது. இந்த அழிவற்ற, அழிக்க முடியாத நடிப்பு இச்சிறிய ஆத்மாவில் இருக்கிறது. ஆத்மாவும் அழிவற்றது. எனவே நடிப்பும் அழிவற்றது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்க்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கல்பத்தின் சங்கமத்தில் யோக பலத்தினால் துக்கத்தின் கணக்கு வழக்கை முடிக்க வேண்டும். புதியதை சேமிக்க வேண்டும். ஞான இரத்தினங்களைக் கடைபிடித்து குணவான் ஆக வேண்டும்.

2. நான் ஆத்மா, ஆத்மா சகோதரனிடம் பேசுகிறேன். சரீரம் அழிவற்றது. நான் என்னுடைய சகோதர ஆத்மாவிற்கு செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும்

வரதானம்:
சுபபாவனை மற்றும் சிரேஷ்ட உணர்வு மூலம் அனைவருக்கும் பிரியமானவர் ஆகி வெற்றி மாலையில் மணியாக வரக்கூடிய வெற்றியாளர் ஆகுக.

ஒருவர் எந்தவொரு எண்ணத்தோடு பேசட்டும் அல்லது நடக்கட்டும் ஆனால், நீங்கள் சதா ஒவ்வொருவருக்காகவும் சுபமான உணர்வு மற்றும் சிரேஷ்டமான உணர்வை தாரணை செய்யுங்கள். இதில் வெற்றியாளர் ஆகுங்கள். அப்பொழுதே மாலையில் மணியாகு வதற்கான அதிகாரி ஆகுவீர்கள். ஏனெனில், சம்பந்தம் தொடர்பில் ஒவ்வொருவருக்காகவும் சிரேஷ்டமான உணர்வை தாரணை செய்வதே அனைவருக்கும் பிரியமானவர் ஆகுவதற்கான சாதனம் ஆகும். அத்தகைய சிரேஷ்ட உணர்வுடையவர்கள் சதா அனைவருக்கும் சுகம் கொடுப்பார்கள், சுகம் பெறுவார்கள். இது கூட சேவையாகும். சுபபாவனை- மனதின் சேவைக் கான சிரேஷ்டமான சாதனம் ஆகும். அத்தகைய சேவை செய்பவர்கள் வெற்றிமாலையின் மணிகள் ஆகிவிடு கின்றார்கள்.

சுலோகன்:
கர்மத்தில் யோகத்தின் அனுபவம் செய்வது தான் கர்மயோகி ஆவதாகும்.