07-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தை எப்படிக் கொடுப்பது என இரவும் பகலும் இதே சிந்தனையில் இருங்கள். தந்தை மகனை வெளிப்படுத்தி விட்டார். மகன் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். இதில் புத்தியை ஈடுபடுத்த வேண்டும்.

கேள்வி:
ஞானம் சிறிது கூட வீணாகாமல் இருக்க எந்த விஷயத்தில் கவனம் வைக்க வேண்டும்?

பதில்:
ஞானச் செல்வத்தைக் கொடுப்பதற்கு முதலில் நம்முடைய பிராமணக் குலத்தினரா எனப் பாருங்கள். சிவபாபாவின் அல்லது தேவதைகளின் பக்தர்களா எனப் பார்த்து முயற்சி செய்து அவர்களுக்கு ஞானச் செல்வத்தை அளியுங்கள். இந்த ஞானத்தை அனைவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். யார் சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகிறார்களோ அவர்களுக்குத் தான் புரியும். நீங்கள் முயற்சி செய்து ஒவ்வொரு விஷயத்தையும் அனைவருக்கும் கூறுங்கள். அனைவருக்கும் சத்கதி அளிக்கக் கூடிய வள்ளல் ஒரு தந்தை தான். நீங்கள் அசிரீரி ஆகி என்னை நினைத்தால் உங்களுடைய படகு கரை சேர்ந்து விடும் என அவர் கூறுகிறார்.

பாடல்:
ஓம் நமசிவாய.....

ஓம் சாந்தி.
தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்கள். இரண்டு தந்தையும் வந்து விட்டனர். அந்தத் தந்தை வேண்டுமானாலும் புரிய வைக்கலாம், இந்தத் தந்தை வேண்டு மானாலும் புரிய வைக்கலாம். நீங்கள் பாபாவின் நினைவில் அமைதியில் அமர்கிறீர்கள். இதற்குத் தான் உண்மையான அமைதி எனக் கூறப்படுகிறது என்று பாபா புரிய வைக்கின்றார். இது பிரதி பலனைக் கொடுக்கக் கூடிய உண்மையான அமைதி யாகும். அது பொய்யானது. தங்களின் சுய தர்மத்தை பற்றியே அறியவில்லை. தன்னைப் பற்றியும் தனது பரம்பிதா பரமாத்மா பற்றியும் தெரியவில்லை என்றால் அமைதி, சக்தியை யார் கொடுப்பார்கள். சாந்தியின் வள்ளல் தந்தை தான், குழந்தைகளே! அசரீரியாகி தன்னை ஆத்மா என உணருங்கள் எனப் பாபா கூறுகிறார். நீங்கள் அழிவற்றவர் அல்லவா! தங்களுடைய சுய தர்மத்தில் அமருங்கள். வேறு யாரும் இவ்வாறு அமருவதில்லை. உண்மையில் ஆத்மா தான் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுக்கிறது. பரம்பிதா பரமாத்மா ஒருவர் தான். அவருடைய மகிமைகள் அளவற்றது. அவர் தந்தை யாவார். சர்வ வியாபி கிடையாது. ஒரு வியத்தைத் தெளிவு படுத்துவதில் தான் உங்களின் வெற்றி இருக்கிறது. பிறகு கீதையின் பகவான் கூடத் தெளிவாகி விடுவார். நிறையக் கருத்துக்கள் உங்களுக்குக் கிடைக்கிறது. சத்குரு அகால்..... அவரே அகால மூர்த்தி எனச் சீக்கியர்கள் கூடக் கூறுகின்றார்கள். அவர் விடுவிக்கக் கூடியவராகவும், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் எனவும் கூறுகின்றார் கள். துக்கத்திலிருந்து விடுவிக்கின்றார். பதீத பாவனரும் ஒரு தந்தையே. இது போன்ற கருத்துக்களை எப்போதும் விசாரச் சாகர மந்தனம் செய்ய வேண்டும். தந்தையை மறந்ததால் தான் அனைவருக்கும் துர்கதி ஏற்பட்டிருக்கிறது. பகவான் ஒருவரே. வேறு யாரையும் பகவான் எனக் கூற முடியாது. சூட்சும வதனவாசியைக் கூடப் பகவான் எனக் கூற முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு பகவான். இங்கேயோ மனித சிருஷ்டியில் மறுபிறவியில் வருகிறார்கள். பரம்பிதா பரமாத்மாவோ மறுபிறவியில் வருவதில்லை. பிறகு நாய், பூனை அனைத்திலும் பரமாத்மா இருக்கிறார் என எப்படிக் கூறுகிறார்கள்? பாபாவின் அறிமுகத்தை எப்படிக் கூறுவது என முழு நாளும் புத்தியில் இருக்க வேண்டும். அனைவருக்கும் எப்படி வழி காட்டுவது என்று இரவும் பகலும் நீங்கள் இதே சிந்தனையில் இருங்கள். பதீதமானவர்களைத் தூய்மையாக்கக் கூடியவர் ஒரு தந்தையே. பிறகு கீதையின் பகவான் கூட நிரூபணமாகி விடும். குழந்தை களாகிய நீங்கள் வெற்றி அடைய வேண்டும். எனவே, கடினமாக உழைக்க வேண்டும். யானைப் படை, குதிரைப் படை, காலாட்படை இருக்கிறது அல்லவா?.

பாரதத்திற்குத் தான் பாபாவிடமிருந்து ஆஸ்தி கிடைத்தது எனக் குழந்தைகள் அறிகிறீர்கள். இப்போது பறிக்கப்பட்டிருக்கிறது, பிறகு பாபா இருக்கின்றார். பாபா பாரதத்தில் தான் வருகிறார். இத்தனை தர்மங்கள் இருக்கின்றது. அது அனைத்தும் முடியப் போகிறது. பிறகு சத்யுகம் வரும். ஐயோ, ஐயோ என்பதற்குப் பிறகு வெற்றி முழக்கம் ஏற்படும். மனிதர்கள் துக்கம் ஏற்படும் போது இராமா! என்கிறார்கள் அல்லவா! இராமரின் பெயரில் தானம் அளியுங்கள் எனக் கூறுகிறார்கள் அல்லவா?. இதைப் பற்றிச் சுலோகன் கூட உருவாக்கப் பட்டிருக்கிறது. சீக்கியர்களுக்குக் கூட நிறையப் பெயர்கள் இருக்கிறது. அவர்கள் கூட அழிவற்ற சிம்மாசனம் (அகால் தக்த்) என்கிறார் கள். குழந்தைகளாகிய உங்களின் சிம்மாசனம் எது? ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் அகால மூர்த்தி. உங்களைக் காலன் யாரும் சாப்பிட முடியாது இந்தச் சரீரம் அழிந்து போகும். அழிவற்ற சிம்மாசனம் அமிர்தசரசில் இருக்கிறது என அவர்கள் நினைக் கிறார்கள். ஆனால் அழிவற்ற சிம்மாசனம் என்பது மகா தத்துவமாகும். ஆத்மாக்களாகிய நாமும் அங்கே வசிக்கக் கூடியவர்கள். பாபா! தங்களின் சிம்மாசனத்தை விட்டு விட்டு வாருங்கள் எனப் பாடுகிறார்கள். அது அனைவருக்குமே அமைதியின் சிம்மாசனம் ஆகும். இராஜ்ய சிம்மாசனம் என்பது அனைவருக்கும் என்று கூற மாட்டார்கள். பாபாவின் சிம்மாசனமே நம்முடையது. அங்கிருந்து நாம் நடிப்பதற்காக வந்திருக்கிறோம். மற்றபடி ஆகாயத்தை விடக் கூடிய வியம் எதுவும் இல்லை. பாபாவின் அறிமுகத்தை யாருக்கு எப்படி அளிப்பது என்பதில் குழந்தைகள் புத்தியை செலுத்த வேண்டும். தந்தை மகனை வெளிப்படுத்துகிறார் மகன் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய தந்தை யார்?. அவருடைய சொத்து என்ன? எதற்கு அதிபதியாகலாம்?. இது புத்தியில் இருக்கிறது. முக்கியமானது பாபாவின் அறிமுகம் ஆகும். அனைத்து சண்டை யும் இதில் தான் இருக்கிறது. அதிகப்படியான தவறின் நாடகம் அல்லவா?. தவறு செய்விப்பவன் இராவணன்.

சத்யுகத்தில் நீங்கள் ஆத்ம உணர்வடையவராக இருந்தீர்கள். மற்றபடி நாம் பரம்பிதா பரமாத்மாவை அறிந்திருக்கிறோம் எனக் கூற மாட்டீர்கள். இல்லை. அங்கே சுகமே சுகமாகும். துக்கத்தில் அனைவரும் நினைக்கிறார்கள். பக்தி மார்க்கம் முடிவடைந்து விட்டது. ஞான மார்க்கம் ஆரம்பம் ஆகிவிட்டது. ஆஸ்தி கிடைத்து விட்டது. பிறகு ஏன் பகவானை நினைப் பார்கள். கல்ப கல்பமாக ஆஸ்தி கிடைக்கிறது. இந்த நாடகமே இவ்வாறு உருவாக்கப் பட்டிருக்கிறது. தந்தையை யாரும் அறியவில்லை. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குப் பாபா அறிமுகத்தைக் கொடுத்துவிட்டார். இரவும் பகலும் புத்தியில் இவ்வாறு ஓடிக் கொண்டி ருக்க வேண்டும். இது புத்திக்கான உணவாகும். எப்படிப் பாபாவின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுப்பது. பாபாவின் அவதாரம் ஒன்று தான் என்று பாடப்பட்டிருக்கிறது. கலியுகத்தின் முடிவு, சத்யுகத்தின் ஆரம்பம் ஆகிய சங்கமத்தில் பதீதமானவர்களைத் தூய்மையாக்குவதற்காக நிச்சயம் வருவார் என்று புரிந்து கொள்கிறார்கள். முக்கியமானது கீதையாகும். கீதையினால் தான் வைரம் போன்று மாற முடியும். மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும் கீதையின் குழந்தை குட்டிகள் ஆகும். அதன் மூலமாக எந்த ஆஸ்தியும் கிடைக்காது. அனைத்து சாஸ்திரங் களுக்கும் தாயாக விளங்ககுவது கீதையாகும். ஸ்ரீமத் புகழ் வாய்ந்தது. ஸ்ரீ என்றால் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ஸ்ரீ ஸ்ரீ 108 ருத்ர மாலை. இது சிவபாபாவின் மாலையாகும். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை இவர் என நீங்கள் அறிகிறீர்கள். பாபா! பாபா! என்று அனைவரும் கூறுகிறார்கள் அல்லவா? பாபாவின் படைப்பு படைக்கப்பட்டு இருக்கிறது. இதை யாரும் அறியவில்லை. உங்களுக்கு அதிகமான துன்பத்தைக் கொடுக்க வில்லை எனப் பாபா கூறுகிறார். பாபாவை மட்டும் மறந்ததால் விழுந்திருக்கிறீர்கள். அவரை அறிய வேண்டும். இப்போது நீங்கள் காரிருளிலிருந்து நல்ல வெளிச்சத்திற்கு வந்திருக் கிறீர்கள். நீங்கள் ஞான நடனம் ஆட வேண்டும். மீரா பக்தியின் நடனம் ஆடினார். பொருளைப் புரிந்துக் கொள்ளவில்லை. வியாச பகவான் என்கிறார்கள். இப்போது வியாசரோ தந்தை ஆவார். அவர் கீதையைச் சொல்கின்றார். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தந்தை ஒருவர் தான் அவரிடமிருந்து தான் சொத்துக் கிடைக்கிறது என்று தெளிவு படுத்தலாம். இல்லை என்றால் பாரதத்திற்குச் சொர்க்கத்தின் ஆஸ்தியை யார் கொடுப்பார்கள்?. சொர்க்கத்தின் ஸ்தாபனை பாபாவைத் தவிர யாரும் செய்ய முடியாது.. அனைவரையும் விடுவிக்க வேண்டியது. ஒரு பாபாவின் வேலையாகும். போப் கூட ஒன்றாக வேண்டும் என்று கூறினார். ஆனால் அது எப்படி நடக்கும்?. நாம் அனைவரும் ஒருவருடையவராக ஆகி இருக்கிறோம் அல்லவா?. பிறகு சகோதரன் சகோதரி எப்படி? இதை அறிய வேண்டும். ஒன்றாகுதல் என்றால் தந்தைத்துவம் ஆகிவிட்டது. இங்கேயோ அனைவரும் சகோதரர்கள் அல்லவா! ஓ, கடவுளே இரக்கம் காட்டுங் கள் என்று முழு உலகமும் அழைக்கிறது. எனவே நிச்சயம் இரக்கமற்றவர்களாக இருந்து கொண்டிருக் கிறார்கள். இரக்கம் அற்று இருக்க வைப்பவர் யார் என அறியவில்லை. இரக்கம் காட்டக் கூடியவர் ஒரு தந்தை யாவார். இராவணன் இரக்கம் அற்றவன் அவனை எரித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எரியவில்லை. எதிரி இறந்து விட்டால் அடிக்கடி எரிக்க மாட்டார்கள். என்ன உருவாக்கிக் கொண்டிரு கிறார்கள் என யாருக்கும் தெரியவில்லை. முன்பு நீங்களும் காரிருளில் இருந்தீர்கள். இப்போது இல்லை அல்லவா? எனவே, மனிதர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?. பாரதத்தைச் சுகதாமமாக மாற்றக் கூடியவர் ஒரேயொரு தந்தை தான். பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இதுவும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் புரிந்து கொள்ள மாட்டார்கள். இருப்பினும் யார் சூத்திரனிலிருந்து பிராமணன் ஆவார்களோ அவர்களே புரிந்து கொள்வார்கள். என்னுடைய பக்தர்களுக்கும் முயற்சி செய்து ஞானம் அளியுங்கள் எனப் பாபா கூறுகின்றார். ஞானச் செல்வத்தை வீணாக்காதீர்கள். தேவதைகளின் பக்தர்கள். நிச்சயம் தேவதா குலத்தைச் சார்ந்தவர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு தந்தை. அனைவரும் அவரை நினைக்கிறார்கள். இவரோ சிவபாபா அல்லவா! தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். யார் நல்ல வேலைகளைச் செய்து போகிறார்களோ அவர்கள் பூஜிக்கப்படுகிறார்கள். கலியுகத்தில் யார் மூலமாகவும் நல்ல வேலைகள் நடப்பதில்லை. ஏனென்றால் இங்கேயோ அசுர இராவணனின் வழியாகும். சுகம் எங்கே இருக்கிறது? எவ்வளவு நன்றாகப் பாபா புரிய வைக்கிறார். ஆனால் எப்போது பாபாவின் அறிமுகம் கொடுக்கிறோமோ அப்போது தான் புத்தியில் பதியும். இவர் தந்தையாகவும் இருக்கிறார். டீச்சராகவும் இருக்கிறார். சத்குருவாகவும் இருக்கிறார். இவருக்கு அப்பா, டீச்சர். சத்குரு, இல்லை. முதன் முதலில் தாய், தந்தை பிறகு டீச்சர் மற்றும் சத்கதி அளிக்கக் கூடியவர் குரு. எல்லையற்ற தந்தை ஒருவரே! அப்பா, டீச்சர் சத்குரு. இது அதிசய மாக இருக்கிறது!

அந்தத் தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என நீங்கள் அறிகிறீர்கள். அவரே பாரதத்திற்குச் சொர்க்கத்தின் ஆஸ்தி அளிக்கக் கூடியவர். நரகத்திற்குப் பிறகு சொர்க்கம். நரகத்தின் அழிவிற் காக விநாச ஜுவாலைகள் காத்திருக்கிறது. ஹோலிகாவில் போலியாகச் செய்கிறார்கள் அல்லவா! பிறகு சுவாமிஜி இவர்களின் வயிற்றிலிருந்து என்ன வரும் எனக் கேட்கிறார்கள். உண்மையில் பார்த்தோம் என்றால் ஐரோப்பியர்கள் யாதவர்களின் புத்தியினால் எவ்வளவு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் வெளியே வருகிறது! நீங்கள் முயற்சி செய்து ஒரேயொரு வியத்தைப் பற்றிப் புரிய வைக்க வேண்டும். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒருவரே!. தந்தை வருவதே பாரதத்தில் தான். தந்தை பாரதத்தில் வருகிறார் என்றால் இது எல்லா வற்றையும் விட மிகப் பெரிய தீர்த்தம் ஆகிவிட்டது. ஆனால் புரிந்துக் கொள்ள வில்லை. எது பழமையாகி விட்டதோ மீண்டும் வரும் எனப் புரிந்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இராஜ யோகத்தைக் கற்றுக் கொண்டீர்கள். இந்த ஞானத்தைப் பாபா கல்ப கல்பமாகக் கொடுக் கிறார் என்பது புத்தியில் இருக்கிறது. சிவனுக்குக் கூடப் பல பெயர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. பபுல் நாத் கோவில் கூட இருக்கிறது. முட்களை மலராக மாற்றியதால் பபுல் நாத் என்கிறார் கள். இவ்வாறு பல பெயர்கள் இருக்கிறது. இதனுடைய பொருளை நீங்களும் புரிய வைக்கலாம். எனவே பாபாவின் அறிமுகத்தைப் புரிய வையுங்கள் அவரை அனைவரும் மறந்து விட்டு இருக்கிறார்கள். முதலில் பாபாவை அறிந்து கொண்டால் தான் புத்தியின் தொடர்பு கிடைக்கும். பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். முக்தி தாமத்திலிருந்து மீண்டும் ஜீவன் முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். இது பதீதமான ஜீவன் பந்தனம் ஆகும். குழந்தைகளே, அசரீரி ஆகுங்கள் எனப் பாபா கூறுகின்றார். அசரீரி ஆகி பாபாவை நினையுங்கள். இதன் மூலமாகத் தான் படகு கரை சேரும். அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை அவர் ஒருவரே! பாபாவின் கட்டளை-என்னை நினைத்தால் யோகத்தின் மூலம் விகர்மம் வினாசம் ஆகும். கடைசி நினைவிற்கு ஏற்ப நிலையை அடையலாம். நாம் திரும்பப் போக வேண்டும். எவ்வளவு முடியுமோ சீக்கிரம் போகலாம். ஆனால் சீக்கிரமாக நடக்காது. உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்றால் அப்பாவை நினைக்க வேண்டும். நாம் ஒரு தந்தையின் குழநதைகள். இப்போது மன்மனாபவ எனப் பாபா கூறுகின்றார். கிருஷ்ணர் கூற மாட்டார். கிருஷ்ணனர் எங்கே இருக்கிறார்? இவரோ தந்தை. பரம்பிதா பரமாத்மா பிரஜா பிதா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார் என்றால், நிச்சயமாக இங்கே இருக்க வேண்டும். இது சாகார அழுக்கான உலகம் ஆகும். அது தூய்மையான உலகம் ஆகும். அழுக்கான உலகத்தில் தூய்மையானவர் யாரும் இல்லை. மரத்தில் பாருங்கள்!, மேலே நிற்கிறார். மேலும் பிரம்மா கீழே தவத்தில் அமர்ந்திருக்கிறார். இவருடைய தோற்றத்தையே சூட்சும வதனத்தில் பார்க்கிறார். இவர் சென்று பரிஸ்தா ஆகிறார். ஸ்ரீகிருஷ்ணர் இச்சமயம் கருப்பாக இருக்கிறார் அல்லவா?. முதல் விஷயம் எது வரை புரிய வைக்க வில்லையோ அதுவரை புரிந்து கொள்ள முடியாது இதில் தான் கடின உழைப்புத் தேவைப்படுகிறது. மாயா உடனடியாகப் பாபாவின் நினைவை மறக்க வைத்து விடுகிறது. நிச்சயத்தோடு நாங்கள் நாராயணன் பதவியை அடைவோம் என எழுதுகிறார்கள். இருப்பினும் மறந்து போகிறார்கள். மாயா மிகப் பெரிய எதிரியாகும். மாயாவின் புயல் எவ்வளவு வந்தாலும் ஆடக் கூடாது. அது கடைசி நிலையாகும். மாயா பலசாலி ஆகி சண்டை இடும். செம்மறி ஆடு போல இருந்தால் உடனடியாக விழ வைத்து விடும். பயப்படக் கூடாது. முதலில் அனைத்து நோய்களும் வெளியே வரும் என வைத்தியர்கள் கூறுகிறார்கள். மாயாவின் புயல் கூட நிறைய வரும். நீங்கள் உறுதி ஆகிவிட்டால் மாயாவின் அழுத்தம் குறைந்து போகும். இப்போது இவர்கள் அசைய மாட்டார்கள் எனப் புரிந்து கொள்ளும். பாபா தான் வந்து கல் புத்தியிலிருந்து தங்க புத்தியாக மாற்றுகிறார். இது மிகவும் இரமணீகரமான ஞானம் ஆகும். பாரதத்தினுடையது பழைமையான இராஜயோகம் எனப் பாடப்பட்டிருக்கிறது. இதை நீங்கள் அறிகிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அசரீரி ஆகி அப்பாவை நினைக்க வேண்டும். சுய தர்மத்தில் நிலைத்திருக்கப் பயிற்சி செய்ய வேண்டும். ஞானத்தின் நடனம் ஆட வேண்டும், ஆட வைக்க வேண்டும்.

2. மாயாவின் புயலை பார்த்து ஆடி விடக் கூடாது. பயப்படக் கூடாது. உறுதியாகி மாயாவின் அழுத்தத்தை முடிக்க வேண்டும்.

வரதானம்:
தந்தைக்குத் தனது அனைத்துப் பொறுப்புக்களைக் கொடுத்து சேவையின் விளையாட்டை விளையாடும் மாஸ்டர் சர்வசக்திவான் ஆவீர்களாக.

எந்தவொரு செயலைச் செய்யும் பொழுதும், சர்வசக்திவான் தந்தை நமது துணையாளர் ஆவார். நாம் மாஸ்டர் சர்வசக்திவான் ஆவோம் என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கட்டும். அப்பொழுது எந்தவொரு விதமான பாரமான தன்மையும் இருக்காது. எனது பொறுப்பு என்று நீங்கள் நினைக்கும் பொழுது தலை பாரமாக ஆகி விடுகிறது. எனவே பிராமண வாழ்க்கையில் தனது அனைத்துப் பொறுப்புக்களையும் தந்தைக்குக் கொடுத்து விட்டீர்கள் என்றால், சேவை கூட ஒரு விளையாட்டு என்று அனுபவம் ஆகும். எவ்வளவு தான் பெரிய யோசிக்கக் கூடிய காரியமாக இருக்கலாம், கவனம் கொடுக்க வேண்டிய காரியமாக இருக்கலாம், ஆனால் மாஸ்டர் சர்வசக்திவான் என்ற வரதானத்தின் நினைவு மூலமாகக் களைப்பற்றவராக இருப்பீர்கள்.

சுலோகன்:
முரளிதரனின் முரளி (புல்லாங்குழல்) மீது தேகத்தின் உணர்வுகளையும் மறந்து, மெய் மறந்து குஷி என்ற ஊஞ்சலில் ஊஞ்சலாடுபவர்களே உண்மையான கோபர் மற்றும் கோபிகைகள் ஆவார்கள்.