07.08.22    காலை முரளி            ஓம் சாந்தி   18.01.92      பாப்தாதா,   மதுபன்


பாபாவிடம் இருக்கும் அன்பின் அடையாளம் - பாபாவிற்கு சமமாக ஆவது

இன்று எல்லையில்லாத தாய் தந்தைக்கு முன்னால் முழு எல்லையில்லாத குடும்பம் இருக்கிறது. இந்த சபை மட்டும் அல்ல. ஆனால் நாலா புறங்களின் சிநேகி, சகயோகி குழந்தைகளின் சிறிய பிராமண குடும்பம், மிகவும் (ப்யாரா) பிரியமான மற்றும் (ந்யாரா) தனிப்பட்ட குடும்பம், அளெகீக குடும்பம், (சித்திரம்) உடலில் இருந்தாலும் (விசித்திர) உடலுக்கு அப்பாற்பட்ட விந்தையான குடும்பம் முன்னால் உள்ளது. பாப்தாதா அமிருதவேளை முதல் அனைத்து குழந்தைகளின் சிநேகத் தினுடைய, சந்திப்பு நிகழ்த்துவதற்கான, வரதானம் பெறுவதற்கான, இனிமையிலும் இனிமையான ஆன்மீக உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார். அனைவருடைய மனதிலும் சிநேகத்தின் உணர்வு (பாவனை) மற்றும் சமானம் ஆவதற்கான சிரேஷ்ட (காமனா) விருப்பம் - இதே ஊக்கம் உற்சாகத்தை நாலா புறங்களிலும் பார்த்தார். இன்றைய நாள் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு முன்னால் முதல் நம்பர் சிறந்த ஆத்மா பிரம்மா தாய் தந்தை வெளிப்படையான (இமர்ஜ்) ரூபத்தில் இருந்தார். அனைவருடைய இதயங்களிலும் இன்று விசேஷமாக அன்பின் கடல் பாப்தாதாவின் அன்பின் சொரூபம் கண்கூடான ரூபத்தில் குழந்தைகளுக்கு முன்னால் இருந்தது. நாலா புறங்களின் அனைத்து குழந்தைகளின் சிநேகத்தின், இதயத்தின் கீதங்களுக்கு பாப்தாதா செவி மடுத்தார். சிநேகத்திற்கு (ரிடர்ன்) பதிலாக வரதாதா (வரமளிக்கும் வள்ளல்) தந்தை குழந்தைகளுக்கு இதே வரதானம் கொடுத்து கொண்டிருக்கிறார் - சதா ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு ஆத்மாவிடத்தும் ஒவ்வொரு நிலைமையிலும் சிநேகத்தின் மூர்த்தி ஆவீர்களாக. ஒரு பொழுதும் தனது சிநேகத்தின் மூர்த்தி, சிநேகத்தின் குணங்கள், சிநேகத்தின் சம்பந்தம், தொடர்பு .... இவற்றை விட்டு விடாதீர்கள், மறந்து விடாதீர்கள் .. .. எந்தவொரு மனிதராகட்டும், இயற்கை ஆகட்டும், மாயை ஆகட்டும், எப்பேர்ப்பட்ட பயங்கரமான ரூபம், ஜுவாலை ரூபம் தரித்து முன்னால் வந்தாலும் சரி ஆனால் பயங்கரமான ஜுவாலை ரூபத்தை சதா சிநேகத்தின் குளிர்ந்த தன்மை மூலமாக பரிவர்த்தனை செய்து கொண்டே இருங்கள். இந்த புது வருடத்தில் விசேஷமாக சிநேகம் பெற வேண்டும். சிநேகம் கொடுக்க வேண்டும். சதா சிநேகத்தின் திருஷ்டி, சிநேகத்தின் உள்ளுணர்வு (விருத்தி), சிநேகம் நிறைந்த (க்ருதி) செயல்கள் மூலமாக, சிநேகம் நிறைந்த சிருஷ்டியை (படைப்பு) அமைக்க வேண்டும். யாராவது சிநேகம் கொடுக்கவில்லை என்றாலும் கூட நீங்கள் மாஸ்டர் சிநேக சொரூப ஆத்மாக்கள் வள்ளலாக ஆகி ஆன்மீக சிநேகத்தை கொடுத்துக் கொண்டே செல்லுங் கள். இன்றைய ஜீவ ஆத்மாக்கள் சிநேகம் அதாவது உண்மையான அன்பிற்கான தாகம் கொண்டுள்ளார்கள். சிநேகத்தின் ஒரு கணம் அதாவது ஒரு துளிக்கான தாகம் கொண்டுள்ளார்கள். உண்மையான சிநேகம் இல்லாத காரணத்தால் குழம்பி போய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான ஆன்மீக சிநேகத்தை தேடி கொண்டிருக் கிறார்கள். அப்பேர்ப்பட்ட தாகம் கொண்ட ஆத்மாக்களுக்கு ஆதாரம் அளிப்பவர்கள் மாஸ்டர் ஞானக் கடலான நீங்கள் ஆவீர்கள். உங்களையே நீங்கள் கேளுங்கள் - ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரை யும் பிராமண குடும்பத்தில் பரிவர்த்தனை செய்வதற்கான, கவருவதற்கான விசேஷ ஆதாரம் என்னவாக இருந்தது? இதே உண்மையான அன்பு, தாய் தந்தையரின் அன்பு, ஆன்மீக குடும்பத்தின் அன்பு - இந்த அன்பின் பிராப்தி தான் பரிவர்த்தனை செய்தது. ஞானமோ பின்னால் புரிந்து கொள்கிறீர் கள். ஆனால் முதல் கவர்ச்சி சுயநலமில்லாத குடும்ப உணர்வினுடைய அன்பு. இது தானே அஸ்திவாரமாக இருந்தது அல்லவா? இதனால் தான் அனைவரும் வந்தீர்கள் அல்லவா? உலகத்தில் கோடானு கோடீசுவரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் பரமாத்ம உண்மையான அன்பு பெறாத பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்.ஏன்? கோடானு கோடி செல்வத்தினால் இந்த அன்பு கிடைப்பதில்லை. அறிவியல் விஞ்ஞானிகள் கூட பாருங்கள் எவ்வளவு தான் அல்ப கால சுகத்தின் சாதனங்களை உலகிற்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகளோ அந்த அளவிற்கு இன்னும் ஏதாவது ஆராய வேண்டும்.... இன்னும் ஏதாவது ஆராய வேண்டும் -இந்த ஆராய்ச்சியிலேயே மூழ்கி இருக்கிறார்கள். திருப்தியின் உணர்வு இல்லை. இன்னும் ஏதாவது செய்ய வேண்டும், இன்னும் ஏதாவது செய்ய வேண்டும்..... இதிலேயே நேரத்தை இழந்து விடுகிறார்கள். அவர்களுடைய உலகமே ஆராய்ச்சி செய்வதாக ஆகி விட்டுள்ளது. உங்களை போல சிநேகம் நிறைந்த வாழ்க்கை யின் உணர்வு இல்லை. அரசியல் தலைவர்களை பாருங்கள் தங்களது பதவியை பாதுகாத்துக் கொள்வதிலேயே ஈடுபட்டுள்ளார்கள். நாளைக்கு என்ன ஆகுமோ - இந்த கவலையில் மூழ்கி விட்டுள்ளார்கள். மேலும் பிராமணர்களாகிய நீங்கள் எப்பொழுதும் பரமாத்ம அன்பின் ஊஞ்சலில் ஊஞ்சலாடுகிறீர்கள். நாளை பற்றிய கவலை இல்லை. (கல்) நாளை பற்றிய கவலை இல்லை (கால்) காலன் பற்றிய கவலையும் இல்லை ஏன்? ஏனெனில் எது நடந்து கொண்டிருக்கிறதோ அதுவும் நல்லதே மற்றும் எது நடக்கப்போகிறதோ அது இன்னுமே நல்லது என்பதை அறிந்துள்ளீர்கள். எனவே நல்லது, நல்லது என்று கூறியே நல்லவராக ஆகி விட்டுள்ளீர்கள்.

பிராமண வாழ்க்கை என்றாலே தீமைக்கு விடை கொடுத்து விடுவது (விதாயி) மேலும் எப்பொழுதும் நல்லதிலும் நல்லதாக உள்ளது என்பதற்கான (பதாயி) பாராட்டுக்கள் கொண்டாடுவது. இவ்வாறு செய்து விட்டுள்ளீர்களா? இல்லை, இப்பொழுது விடை கொடுத்தனுப்பி கொண்டிருக்கிறீர்களா? எப்படி பழைய வருடத்திற்கு விடை கொடுத்து விட்டீர்கள், புதிய வருடத்திற்கான வாழ்த்துக்கள் அளித்தீர்கள் அல்லவா? வாழ்த்துக்களின் கார்டுகள் நிறைய வந்துள்ளன அல்லவா? நிறைய குழந்தை களினுடைய வாழ்த்துக்களின் கார்டுகள் மற்றும் கடிதங்கள் வந்துள்ளன. பாப்தாதா கூறுகிறார் - எப்படி புதிய வருடத்திற்கான கார்டு அனுப்பினீர்கள் மற்றும் சங்கல்பம் செய்தீர்கள் - ஆக சங்கமயுகத்திலோ ஒவ்வொரு நொடியும் புதியது ஆகும் அல்லவா? சங்கம யுகத்தின் ஒவ்வொரு செகண்டுக்கான வாழ்த்துக்களின் கார்டு அனுப்பி விடாதீர்கள். கார்டுகளை பாதுகாத்து வைப்பது கடினமாக போய் விடும். ஆனால் கார்ட்டிற்கு பதிலாக ரிகார்டு - பதிவேடு வையுங்கள் - ஒவ்வொரு நொடியும் புதிய அனுபவம் செய்தேனா? ஒவ்வொரு புதிய நொடி புதிய ஊக்கம் உற்சாகம் அனுபவம் செய்தேனா? ஒவ்வொரு நொடியும் தனக்குள் புதுமை அதாவது தெய்வீகத் தன்மை - விசேஷதன்மை என்ன அனுபவம் செய்தீர்கள் .. .. அதற்கான வாழ்த்துக்கள் அளிக்கிறார். பிராமண ஆத்மாக்களாகிய உங்களுடைய எல்லாவற்றிலும் பெரியதிலும் பெரிய (செரிமனி) விழா எதுவாகும்? விழா என்றால் மகிழ்ச்சியின் நேரம் அல்லது மகிழ்ச்சியின் நாள். விழாவில் எல்லாவற்றையும் விட பெரியதிலும் பெரிய விஷயம் சந்திப்பு நிகழ்த்துவதற்கானது ஆக இருக்கும். சந்திப்பு கொண்டாடுவது தான் குஷி கொண்டாடுவது ஆகும். உங்கள் அனைவருடைய பரமாத்ம சந்திப்பு சிறந்த ஆத்மாக்களின் சந்திப்பு ஒவ்வொரு நேரமும் நிகழ்கிறது அல்லவா? எனவே ஒவ்வொரு நேரமும் விழா ஆகியது அல்லவா? ஆடுங்கள், பாடுங்கள் மற்றும் சாப்பிடுங்கள் - இப்படி தான் விழா நடக்கும். பிரம்மா தந்தையின் பண்டாராவிலிருந்து (பண்டக சாலை) சாப்பிடுகிறீர்கள். எனவே எப்பொழுதும் பிரம்மா போஜனம் சாப்பிடுகிறீர்கள். இல்லறத்தில் இருப்பவர்கள் யாரும் தங்களது சம்பாத்தியம் மூலமாக சாப்பிடுவ தில்லை. சென்டரில் இருப்பவர்கள் சென்டரின் பண்டாரியிலிருந்து (உண்டியல்) சாப்பிடுவதில்லை. ஆனால் பிரம்மா தந்தையின் பண்டாராவிலிருந்து சிவதந்தையின் பண்டாரியிலிருந்து சாப்பிடு கிறார்கள். எனது இல்லறம் என்பதும் கிடையாது. எனது சென்டர் என்பதும் கிடையாது. இல்லறத்தில் இருந்தாலும் கூட டிரஸ்டி ஆவீர்கள், தந்தையின் ஸ்ரீமத்படி (நிமித்தமாக) கருவியாக ஆகி உள்ளீர்கள். மேலும் சென்டரில் இருக்கிறீர்கள் என்றாலும் கூட தந்தையினுடைய சென்டர் ஆகுமேயன்றி என்னுடையது அல்ல. எனவே சதா சிவ தந்தையின் பண்டாரி ஆகும், பிரம்மா தந்தையின் பண்டாரா ஆகும். இந்த நினைவின் மூலமாக பண்டாரி கூட நிரம்பியதாக இருக்கும். பின் பண்டாரா கூட நிரம்பியதாக இருக்கும். எனது என்ற தன்மையை எடுத்து வந்தீர்கள் என்றால் பண்டாரா மற்றும் பண்டாரியில் முன்னேற்றம் ஏற்படாது. எந்தவொரு காரியத்தில் கூட ஏதாவதொரு விதமான தோஷம் அல்லது குறைவு இருக்கிறது என்றால் இதற்கான காரணம் தந்தைக்கு பதிலாக எனது என்ற தன்மையின் குற்றம் (கோட்) இருக்கிறது. எனவே குறைவு ஏற்படுகிறது. கோட் என்ற வார்த்தை குறைவுக்கும் கூறப்படுகிறது. மேலும் கோட் என்ற வார்த்தை அசுத்தத்தின் கலப்படத்திற்கும் கூறப் படுகிறது. எப்படி தங்கத்தில் கோட் - கலப்படம் ஏற்பட்டு விடுகிறது அல்லவா? ஆனால் பிராமண வாழ்க்கையோ ஒவ்வொரு நொடியும் விழா கொண்டாடு வதற்கான வாழ்த்துக்களினுடையது ஆகும். நல்லது.

அப்படியும் இன்றைய நாள் நீங்கள் அனைவரும் சப்தத்திற்கு அப்பாற்பட்டு செல்கிறீர்கள். மேலும் சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் இருக்கும் பாப்தாதாவை சப்தத்தில் எடுத்து வருகிறீர்கள். இந்த பயிற்சி (பிராக்டிஸ்) மிகவும் நன்றாக இருக்கிறது - இப்பொழுதே மிகவும் சப்தத்தில் இருக்கிறீர்கள். கலந்துரையாடல் நிகழ்ச்சி கொண்டிருந்தாலும் சரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் கூட சப்தத்திற்கு அப்பாற்பட்டு சென்று விட வேண்டும் என்று சங்கல்பம் செய்தீர்கள் என்றால் ஒரு நொடியில் சப்தத்திலிருந்து தனிப்பட்டு ஃபரிஷ்தா நிலையில் நிலைத்து விட வேண்டும்.. இப்பொழுதே கர்மயோகி, இப்பொழுதே ஃபரிஷ்தா அதாவது சப்தத்திற்கு அப்பாற்பட்ட அவ்யக்த ஸ்திதி. அப்படி இன்றி வாயுமண்டலம் மிகுந்த சப்தம் நிறைந்ததாக இருக்கிறது. எனவே சப்தத்திற்கு அப்பாற்பட்டு செல்வதில் நேரம் பிடிக்கும் என்பதல்ல. இல்லை. அவ்வாறு இருக்கக் கூடாது. ஏனெனில் கடைசி நேரத்தில் நாலா புறங்களிலும் மனிதர்களின் இயற்கை யின் குழப்பங்களின் சப்தம் இருக்கும் - கூச்சலிடும், ஆடி விட செய்யும் இதே வாயுமண்டலம் இருக்கும். அப்பேர்ப்பட்ட நேரத்தில் தான் ஒரு செகண்டில் அவ்யக்த ஃபரிஷ்தா மற்றும் நிராகாரி அசரீரி ஆத்மா ஆவேன்... என்ற இந்த பயிற்சி தான் வெற்றியாளராக ஆக்கி விடும். இந்த நினைவு ஸ்மரணைக்குரிய அதாவது வெற்றி மாலையில் எடுத்து வரும். எனவே இந்த அப்பியாசம் இப்பொழுது முதற் கொண்டே மிகவும் அவசியம் ஆகும். இதற்கு தான் பிரகிருதி ஜீத், மாயா ஜீத் - இயற்கையை வென்றவர், மாயையை வென்றவர் என்று கூறப்படுகிறது. எஜமானர் ஆகி எப்பொழுது வேண்டுமோ வாய் மூலமாக ஒலிக்க செய்வது, எப்பொழுது வேண்டுமோ காதுகள் மூலமாக கேட்க செய்வது - வேண்டாம் என்றால் ஒரு நொடியில் ஃபுல்ஸ்டாப், முற்றுப் புள்ளி பாதி புள்ளி அல்ல. ஃபுல்ஸ்டாப் - இது தான் பிரம்மா தந்தைக்கு சமானம் ஆவது ஆகும். சிநேகத்தின் அடையாளமே சமானம் ஆவது ஆகும். ஒவ்வொருவரும் எனது சிநேகம் அதிகமாக இருக்கிறது என்று கூறுவார்கள். யாரை வேண்டு மானாலும் யாருக்கு பிரம்மா தந்தை மீது அதிகமான சிநேகம் இருக்கிறது என்று கேட்டால் எனக்கு தான் என்றே கூறுவார்கள். எனவே எப்படி சினேகத்தில் என்னுடைய சிநேகம் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதே போல சமானம் ஆவதில் கூட நான் முதல் நம்பரில் வருபவருடன் கூடவே - ஜோடி மணியுடன் கூடவே மாலையின் மணியாக கோர்க்கப்படக் கூடியவனாக ஆகி விடுவேன் என்ற தீவிர புருஷார்த்தம் செய்யுங்கள். இதற்கு தான் சிநேகத்தின் (ரிடர்ன்) கைம்மாறு அளித்தீர்கள் என்று கூறுவார்கள். சிநேகத்தில் மதுபனுக்கு ஓடி ஓடி வருவதில் புத்தி சாலியாக இருக்கிறீர்கள். எல்லாரும் வேகம் வேகமாக ஓடி வந்து சேர்ந்து விட்டுள்ளீர்கள் அல்லவா? எப்படி இந்த (பிரத்யட்ச) கண்கூடான சொரூபம் காண்பித்தீர்களோ அதே போல சமானம் ஆவதற்குமான பிரத்யட்ச சொரூபத்தை காண்பியுங்கள். இடம் சிறியதாக இருக்கிறது மேலும் இதயம் பெரியதாக இருக்கிறது. எனவே இடம் கிடைக்கவில்லை என்று புகார் செய்யாதீர்கள். இதயம் பெரியதாக இருக்கிறது என்றால் அன்பு இருக்குமிடத்தில் எந்தவொரு கஷ்டமும் கஷ்டமாக தோன்றாது. பாப்தாதா விற்கு குழந்தைகள் கஷ்டப்படுவது பார்க்க பொறுக்காது. ஆம். யோகம் செய்யுங்கள். அப்பொழுது இடம் தயாராகி விடும். நல்லது.

நாலாபுறங்களின் தேச விதேசத்தின் சிநேகத்தில் மூழ்கி இருக்கும் சிறந்த ஆத்மாக்களின் நிறைய நிறைய சங்கல்பங்கள் மூலமாக கடிதங்கள் மூலமாக செய்திகள் மூலமாக இந்த நினைவு நாள் அல்லது புது வருடத்தின் அன்பு நினைவு பாப்தாதாவிற்கு கிடைத்தது. எல்லாருக்கும் இதய பூர்வமாக இனிமையிலும் இனிமையான பிரியத்திலும் பிரியமான குழந்தைகளே என்று கூறி அன்பு நினைவுகள் அளித்து கொண்டிருக்கிறார். பறந்து கொண்டே இருக்கிறீர்கள் மற்றும் இன்னும் தீவிர வேகத்துடன் பறந்து கொண்டே இருங்கள். மாயையின் விளையாட்டை விளையாடுபவராக ஆகி பார்த்துக் கொண்டே செல்லுங்கள். இயற்கையின் நிலைமைகளை மாஸ்டர் சர்வ சக்திவானாக ஆகி விளையாடியபடியே கடந்து சென்று கொண்டே இருங்கள். தந்தையினுடைய கை (ஹாத்) மற்றும் திவ்ய புத்தியோகம் என்ற (ஸாத்) துணையினை சதா அனுபவம் செய்து சக்திசாலி ஆகி சதா பாஸ் வித் ஆனர் ஆகிக் கொண்டே செல்லுங்கள். சதா சிநேக மூர்த்தி பவ என்ற வரதானத்தின் ஸ்மிருதி சொரூபத்தை நினைவில் கொள்ளுங்கள். அப்பேர்ப்பட்ட சர்வ சிநேகி மூர்த்திகளுக்கு சதா மாஸ்டர் தாதா (மாஸ்டர் வள்ளலான) ஆத்மாக்களுக்கு தாய் தந்தையினுடைய சக்தி நிறைந்த அன்பு நினைவு மற்றும் நமஸ்காரம்.

தாதிகளிடம் - தந்தையின் துணையினுடைய ஆஸ்தியே விசேஷ பவர்ஸ் - சக்திகள் என்பதாகும். இந்த சக்திகள் மூலமாக அனைத்து காரியங்களும் சுலபமாக முன்னேறிக் கொண்டே போகின்றன. அனைவரும் சமீபத்தின் துணையாளர்கள் ஆவீர்கள் அல்லவா? கூடவே இருக்கிறீர்கள் மேலும் கூடவே செல்வீர்கள் மற்றும் கூடவே ஆட்சி புரிவீர்கள். சங்கமத்தில் கூட சமீபத்தில், நிராகாரி உலகத்தில் கூட சமீபத்தில் மற்றும் ராஜதானியில் கூட சமீபத்தில் இருப்பீர்கள். பிறந்த உடனேயே சமீபத்தில் இருப்பது என்ற வரதானம் கிடைத்தது. அனைவருமே சமீப தன்மையின் வரதானம் உடையவர்கள் - அவ்வாறு அனுபவம் ஆகிறது அல்லவா? துணையினுடைய அனுபவம் ஆவது - இதுவே சமீபத் தன்மையின் அடையாளம் ஆகும். தனியாக பிரிந்து விடுவது கடினம் ஆகும். கூடவே இருப்பது இயல்பாகவே இருக்கிறது. சமீபத்தன்மையின் கூட்டமைப்பிற்கு சமீபத்தில் உள்ளீர்கள். இராஜ்ய சிம்மாசனம் பெறுவீர்கள் அல்லவா? சிம்மாசனத்தின் மீதும் வெற்றி அடைவீர்கள் அல்லவா? எப்படி இப்பொழுது இதயத்தின் மீது வெற்றி உள்ளது, இதயத்தை வென்றீர்கள். பிறகு வரிசைக்கிரமமாக உலக இராஜ்ய சிம்மாசனத்தின் மீது வெற்றி ஏற்படும். அப்பேர்ப்பட்ட வெற்றி யாளர்கள் ஆவீர்கள் அல்லவா? உங்களுடைய ஊக்கம் உற்சாகத்தை பார்த்து அனைவரும் ஊக்கம் உற்சாகத்தில் நடந்து கொண்டே இருக்கிறார்கள். மேலும் சதா நடந்து கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் தந்தையின் அற்புதத்தை பாடுகிறார்கள் மேலும் தந்தை குழந்தைகளின் அற்புதத்தை பாடுகிறார். நீங்கள் ஆகா பாபா ஆகா என்று கூறுகிறீர்கள் மேலும் பாபா ஆகா குழந்தைகளே ஆகா என்று கூறுகிறார். நல்லது.

பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு. நாம் அனைவரும் (பூஜ்ய) பூஜைக்குரிய மற்றும் (பூர்வஜ்) பூர்வீக ஆத்மாக்கள் ஆவோம் - இந்த அளவிற்கு போதை இருக்கிறதா? நீங்கள் அனைவரும் இந்த சிருஷ்டி என்ற விருட்சத்தின் வேர் பகுதியில் அமர்ந்துள்ளீர்கள் தானே? ஆதி பிதாவின் குழந்தைகள் ஆதி இரத்தினங்கள் ஆவீர்கள். எனவே இந்த விருட்சத்தின் வேர் பகுதியும் நீங்கள் ஆவீர்கள். கிளைகள் கொடிகள் எவையெல்லாம் வெளிப்படு கின்றனவோ, அவை விதைக்குப் பிறகு வேர் பகுதியிலிருந்து தான் வெளிப்படுகிறது. எனவே எல்லாவற்றையும் விட ஆதியான தர்மத்தின் ஆத்மாக்கள் நீங்கள் ஆவீர்கள். மேலும் மற்ற அனைவரும் பின்னால் வெளிப்படுகிறார்கள். எனவே பூர்வீகமானவர் கள் ஆவீர்கள். எனவே நீங்கள் அஸ்திவாரம் ஆவீர்கள். எந்த அளவிற்கு அஸ்திவாரம் பக்குவமானதாக இருக்குமோ அந்த அளவிற்கே படைப்பு கூட பக்குவமானதாக இருக்கும். எனவே அந்த அளவிற்கு தங்கள் மீது கவனம் கொள்ள வேண்டும். பூர்வீகம் அதாவது வேர்ப்பகுதி ஆன காரணத்தால் விதையுடன் நேரிடையாக சம்பந்தம் உள்ளது. நாங்கள் நேரிடையாக பரமாத்மாவினால் படைக்கப்பட்டு இருக்கிறோம் என்று உங்களால் பெருமிதத்துடன் கூற முடியும். உங்களை யார் படைத்தார்கள் என்று உலகத்தாரை கேட்டு பாருங்கள். பகவான் படைத்தார் என்று கேள்விப் பட்ட விஷயங்களை வைத்து கூறுவார்கள். ஆனால் அது பெயரளவில் தான் கூறுகிறார்கள். மேலும் நீங்கள் நேரிடையாக பரம ஆத்மாவின் படைப்பு ஆவீர்கள். தற்காலத்திய பிராமணர்கள் கூட நாங்கள் பிரம்மாவின் குழந்தைகள் ஆவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் (பிராக்டிகல்) பிரம்மாவின் குழந்தைகள் நீங்கள் ஆவீர்கள். எனவே நான் டைரக்ட் - நேரிடையான படைப்பு என்ற மகிழ்ச்சி இருக்கிறது. எந்தவொரு மகான் ஆத்மா, தர்ம ஆத்மாவின் படைப்பு அல்ல. டைரக்ட் பரம ஆத்மாவின் படைப்பு ஆவீர்கள். எனவே டைரக்ட் என்பது எவ்வளவு சக்தி ஆகும். உலகத்தார் பகவான் ஏதோ ஒரு வேடத்தில் வந்து விடுவார் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நீங்கள் எங்களுக்கு பகவான் கிடைத்து விட்டார் என்று கூறுகிறீர்கள். ஆக எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது. உங்களை பார்த்து மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்து விடும் அளவிற்கு அந்த அளவு குஷி இருக்கிறதா? ஏனெனில் மகிழ்ச்சியாக இருப்பவர்களின் முகம் என்றைக்குமே குஷி நிறைந்ததாக இருக்கும் அல்லவா?

ஆஸ்பத்திரியில் பணி புரிபவர்களை பார்த்து: ஆஸ்பத்திரியில் யாராவது துக்கமடைந்து வருகிறார் என்றால் திரும்பி செல்லும் பொழுது மகிழ்ச்சியுடன் செல்கிறாரா? அப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியின் வாயுமண்டலம் இருக்கிறதா? யார் வந்தாலும், துக்கத்தை மறந்து விட வேண்டும். ஏனெனில் மனிதரின் வைப்ரேஷன் (அதிர்வலை) மூலமாகத் தான் வாயு மண்டலம் அமைகிறது. எங்காவது துக்கமுடைய ஆத்மாக்களின் குழு இருந்தது என்றால் அங்கு இருக்கும் வாயுமண்டலம் கூட துக்கத் தினுடையதாக இருக்கும். அங்கு யாராவது சிரித்தபடியே வந்தாலும் கூட மௌனமாகி விடுவார் மேலும் எங்காவது மகிழ்ச்சியாக இருப்பவர்களின் குழு இருந்தது என்றால், குஷியின் குழு இருந்தது என்றால் எப்பேர்ப்பட்ட துக்கமுடைய ஆத்மாக்கள் வந்தாலும் கூட மாறி விடுவார்கள். அவசியம் தாக்கம் ஏற்பட்டு விடும். எனவே எவர் ஹேப்பி (என்றும் மகிழ்ச்சியாக இருக்கும்) ஹாஸ்பிடல் ஆகும் அல்லவா? ஹெல்தி (ஆரோக்கியமானது) மட்டும் அல்ல ஹேப்பி - மகிழ்ச்சியானதும் கூட. எல்லாரும் புன்முறுவலித்து கொண்டே இருந்தார்கள், சிரித்து கொண்டே இருந்தார்கள் என்றால் பாதி வைத்தியம் முடிந்து போய் விடும். குஷியே பாதி மருந்து, பின் மருந்துகளின் செலவு கூட மீதமாகி விடும் அல்லவா? நோயாளிகளும் கூட குறைந்த செலவில் நோயற்றவர் ஆகி விட்டோம் என்று குஷி அடைந்து விடுவார்கள் மேலும் ஆஸ்பத்திரியின் செலவு கூட குறைந்து போய் விடும். மருத்துவர் களுக்கும் கூட நேரம் குறைவாக ஒதுக்க வேண்டி வரும். எப்படி சாகாரத் தில் பார்த்தீர்கள் - பிரம்மா தந்தைக்கு முன்னால் வந்தார்கள் என்றால் என்ன அனுபவம் கூறிக் கொண்டிருந்தார்கள். நிறைய விஷயங்களை எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் தந்தைக்கு முன்னால் வந்த உடனேயே எல்லா விஷயங்களுக்கான தீர்வு உள்ளுக்குள்ளேயே கிடைத்து விடும். இந்த அனுபவங்கள் பற்றி கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? அதே போல மருத்துவர்களுக்கு முன்னால் யார் வந்தாலும் சரி, வந்த உடனேயே அங்கேயே பாதி வியாதி சரியாகி விட வேண்டும். எல்லா டாக்டர்களும் அப்படித் தானே இருக்கிறீர்கள் அல்லவா? எப்படி தந்தை அலௌகீகமானவரோ, பின் தந்தையின் குழந்தைகள் - யாரெல்லாம் காரியம் செய்வதற்கு (நிமித்தமாக) கருவியாக இருக்கிறார்களோ அவர்கள் கூட எல்லாரும் அலௌகீகமானவர்களாக இருப்பார்கள் அல்லவா? உங்கள் அனைவரி னுடையதும் அலௌகீக வாழ்க்கையா? இல்லை, சாதாரண வாழ்க்கையா? எந்த அளவிற்கு தபஸ்யாவில் முன்னேறிக் கொண்டே செல்வீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய (வைப்ரேஷன்) அதிர்வலை கள் மிகவும் தீவிர வேகத்துடன் வேலை செய்யும். நல்லது. குறைந்த செலவில் அதிகமான பலன் அடையக்கூடிய ஆஸ்பத்திரியாக இருக்க வேண்டும். நேரமும் குறைவாக செலவிடப்பட வேண்டும். மேலும் ஸ்தூல பணம் கூட குறைவாக செலவிடப்பட வேண்டும் மற்றும் பலன் அதிகமாக இருக்க வேண்டும். பெயர் பெரியது, செலவு குறைவானது. எனவே அப்பேர்ப்பட்ட அலௌகீக சேவாதாரிகள் ஆவீர்கள் அல்லவா? ஃபவுண்டேஷன் - அஸ்திவாரம் நன்றாக போட்டிருக்கிறீர்கள். ஆஸ்பத்திரி என்று தோன்றுகிறதா? இல்லை யோக பவன் என்று தோன்றுகிறதா? இது ஆஸ்பத்திரி இல்லை. ஆனால் யோக கேந்திரம் ஆகும், ஹேப்பி ஹவுஸ் ஆகும். இப்படி லௌகீகத்தில் கூட ஹேப்பி ஹவுஸ் அமைக் கிறார்கள். யாரெல்லாம் உள்ளே வருவார்களோ, சிரித்து கொண்டே இருப்பார்கள். ஆனால் இது மனதின் புன்முறுவல் ஆகும். அது சிறிது நேரத்திற்கானதாக இருக்கும் மேலும் இது சதா காலத்திற் கானதாக இருக்கும். நல்லது. எப்பொழுதுமே மகிழ்ச்சியான (மூட்) மனநிலையில் இருங்கள். என்ன ஆனாலும் சரி, உங்களுடைய (மூட் ஆஃப் ஆகி விடக் கூடாது) மனநிலை மாறி விடக் கூடாது. யாராவது நிந்தனை செய்தாலும் சரி அவமதித்தாலும் சரி, ஆனால் நீங்கள் சதா மகிழ்ச்சியுடன் இருங்கள். நல்லது. ஓம் சாந்தி.

வரதானம்:
சமர்ப்பண உணர்வோடு சேவை செய்து, வெற்றி பெறக்கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.

சமர்ப்பண உணர்வோடு சேவை செய்பவர் தாம் உண்மையான சேவாதாரி ஆவார். சேவையில் ஒரு போதும் எனது என்ற உணர்வு இருக்கக் கூடாது. எங்கே எனது என்பது உள்ளதோ, அங்கே வெற்றி இருக்காது. இது எனது வேலை, எனது சிந்தனை, இது எனது கடமை - என்றால் மோகம் உற்பத்தியாவதாகும். ஆனால் எங்கே இருந்தாலும் சதா ஸ்மிருதி இருக்க வேண்டும் - நான் நிமித்தமாக இருக்கிறேன். இது எனது வீடு இல்லை. ஆனால் சேவைக்கான இருப்பிடம். அப்போது சமர்ப்பண உணர்வுடன் பணிவுள்ளவர் மற்றும் பற்றற்றவர் ஆகி வெற்றி பெறுவார்கள்.

சுலோகன்:
சதா தனது சுவமான் (சுயமரியாதை) என்ற இருக்கையில் அமர்ந்திருப்பீர்களானால் சர்வ சக்திகள் உங்கள் கட்டளையை ஏற்று அதன் படி நடந்து கொண்டே இருக்கும்.