07.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஆத்ம உணர்வுள்ளவராகி அமர்ந்து, நான் ஆத்மா என சிந்தித்தபடி, ஆத்ம அபிமானி ஆகுங்கள், உண்மையான சார்ட் (தினச்சரிய நினைவு யாத்திரை கணக்கு-வழக்கு) எழுதி வந்தீர்கள் என்றால் புத்திசாலிகளாக ஆகியபடி செல்வீர்கள், மிகவும் லாபம் ஏற்படும்.

 

கேள்வி:

எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய குழந்தைகள் எந்த ஒரு சட்டத்தை நல்ல விதமாகப் புரிந்து கொள்கின்றனர்?

 

பதில்:

இது அழிவற்ற நாடகம், இதில் ஒவ்வொரு நடிகரும் தனது நடிப்பை நடிப்பதற் காக தமது நேரத்தில் வரத்தான் வேண்டும். நாங்கள் எப்போதும் சாந்தி தாமத்திலேயே அமர்ந்து விடுவோம் என்று யாராவது சொன்னால் - அது சட்டப் பூர்வமானது அல்ல. அவர்களை நடிகர்கள் என சொல்லமாட்டோம். எல்லைக்கப்பாற்பட்ட தந்தைதான் இந்த எல்லைக்கப்பாற்பட்ட விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறார்.

 

ஓம் சாந்தி.

தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டு அமருங்கள். தேக அபிமானத்தை விட்டு விட்டு அமருங்கள். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். புரியாதவர்களாக இருப்பவர்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. ஆத்மாக்களாகிய நாம் புரியாதவர்களாக ஆகி விட்டோம் - தந்தை உண்மையைச் சொல்கிறார் என ஆத்மா புரிந்து கொள்கிறது. நான் ஆத்மா அழிவற்றவன், சரீரம் அழியக் கூடியது. நான் ஆத்ம உணர்வை விட்டு தேக அபிமானத்தில் மாட்டிக் கொண்டுள்ளேன். எனவே புரியாதவனாக ஆகிவிட்டேன் அல்லவா? அனைத்து குழந்தைகளும் தேக அபிமானத்தில் வந்து புரியாதவர்களாக (முட்டாள்களாக) ஆகியுள்ளனர் என தந்தை கூறுகிறார். பிறகு நீங்கள் தந்தையின் மூலம் ஆத்ம அபிமானி ஆகும் போது முற்றிலும் புத்திசாலிகளாக ஆகி விடுகிறீர்கள். சிலர் ஆகி விட்டனர், சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். முட்டாள்களாக ஆவதில் அரைக் கல்ப காலம் பிடித்தது. இந்த கடைசி பிறவியில் புத்திசாலி ஆக வேண்டியுள்ளது. அரைக் கல்ப காலமாக புரியாதவர்களாக ஆகி ஆகி 100 சதவிகிதம் புரியாதவர் களாக ஆகி விடுகின்றனர். தேக அபிமானத்தில் வந்து நாடகத்தின் திட்டப்படி நீங்கள் கீழே இறங்கியே வந்தீர்கள். இப்போது உங்களுக்கு விழிப்புணர்வு கிடைத்துள்ளது, என்றாலும் நிறைய முயற்சி செய்ய வேண்டும், ஏனெனில் குழந்தைகளுக்குள் தெய்வீக குணங்களும் இருக்க வேண்டும். நாம் அனைத்து குணங்களும் நிரம்பியவர்கள், 16 கலை களும் நிறைந்தவர்கள் . இப்படி இருந்தோம் என குழந்தைகள் அறிவார்கள். பிறகு இந்த சமயத்தில் குணமற்றவர்களாக ஆகியுள்ளார்கள். எந்த குணமும் இல்லை. குழந்தை களாகிய உங்களுக்குள்ளும் இந்த விளையாட்டைப் பற்றி வரிசைக்கிரமமான முயற்சியின்படி புரிந்து கொள்கிறீர்கள். இப்படியே எத்தனை வருடங்கள் ஆகி விட்டன. எனினும் கூட புதியவர்கள் நல்ல புத்திசாலிகளாக ஆகியபடி இருக்கின்றனர். மற்றவர்களையும் ஆக்கக் கூடிய முயற்சி செய்கின்றனர். சிலர் முற்றிலும் எதுவும் புரிந்து கொள்ளவில்லை. முட்டாளிலும் முட்டாளாக உள்ளனர். தந்தை வந்ததே புத்திசாலிகளாக ஆக்குவதற்கு. மாயையின் காரணமாக நாம் முட்டாளாகி விட்டோம் என குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர். பூஜைக்குரியவர்களாக நாம் இருந்த போது புத்திசாலிகளாக இருந்தோம், பிறகு நாம் தான் பூஜாரிகளாகி முட்டாள்கள் ஆகியுள்ளோம். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மறைந்து விட்டது. இது குறித்து உலகில் யாருக்கும் தெரியாது. இந்த லட்சுமி நாராயணர் எவ்வளவு புத்திசாலிகளாக இருந்தனர், இராஜ்யம் செய்து கொண்டிருந்தனர். தந்தை சொல்கிறார் - நீயே அது, அதுவே நீ (ததத்வம்). நீங்களும் தன்னைக் குறித்து அப்படி புரிந்து கொள்ளுங் கள். இவை மிக மிகப் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும். தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. தந்தைதான் உயர்ந்தவரிலும் உயர்ந்த புத்திசாலி களிலும் புத்திசாலியாக இருப்பார் அல்லவா என இப்போது அனுபவம் உண்டாகிறது. ஒன்று ஞானக் கடலாகவும் இருக்கிறார். அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளலாகவும் இருக்கிறார். பதீத பாவனரும் (தூய்மையற்றவரை தூய்மையாக்குபவர்) ஆவார். இது ஒருவரின் மகிமைதான் ஆகும். இவ்வளவு உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை வந்து குழந்தைகளே, குழந்தைகளே எனக் கூறி எவ்வளவு நல்ல விதமாகப் புரிய வைக்கிறார். குழந்தைகளே இப்போது தூய்மையாக வேண்டும். அதற்காக தந்தை ஒரே மருந்துதான் கொடுக்கிறார், அவர் சொல்கிறார் - நினைவின் தொடர்பின் மூலம் நீங்கள் எதிர்காலத்தின் 21 பிறவிகள் நோயற்றவர்களாக ஆகி விடுவீர்கள். உங்களின் அனைத்து நோய்களும் துக்கமும் முடிந்து விடும். நீங்கள் முக்தி தாமத்திற்குச் சென்று விடுவீர்கள். அழிவற்ற சர்ஜனிடம் (மருத்துவர்) ஒரே மருந்துதான் உள்ளது. ஒரே இஞ்செக்ஷன்தான் ஆத்மாவுக்கு வந்து போடுகிறார். எந்த மனிதரும் வக்கீலாகவும், இன்ஜினீயராகவும் ஒரே சமயம் ஆவதில்லை. அப்படி அல்ல. அனைத்து மனிதர்களுமே தம் தொழிலிலேயே மூழ்கி விடுகின்றனர்.வந்து பதீதத் திலிருந்து பாவனமாக்குங்கள் என தந்தைக்குச் சொல்கின்றனர், ஏனெனில் தூய்மை யற்ற நிலையில் துக்கம் உள்ளது. சாந்தி தாமத்தை தூய்மையான உலகம் எனக் கூறுவதில்லை. சொர்க்கத்தைத்தான் தூய்மையான உலகம் என சொல்வோம். மனிதர்கள் அமைதி மற்றும் சுகத்தை விரும்புகின்றனர் என்பதையும் புரிய வைத்துள்ளார். உண்மையிலும் உண்மை யான அமைதி என்பது அங்கே உள்ளது, அது சாந்தி தாமம் என சொல்லப்படுகிறது. சாந்திதாமத்திலேயே இருந்து விடுகிறோம் என பலர் சொல்கின்றனர். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. அப்படி விரும்புபவர்கள் நடிகர்கள் ஆகவில்லை என அர்த்தம். குழந்தைகள் நாடகத்தையும் கூட புரிந்து கொண்டு விட்டீர்கள். நடிகர்களின் நடிப்பு எப்போது இருக்குமோ அப்போது வெளியில் மேடையில் வந்து நடிப்பை நடிப்பார்கள். இந்த எல்லைக்கப்பாற்பட்ட விஷயங்களை எல்லைக்கப்பாற்பட்ட தந்தைதான் புரிய வைக்கிறார். அவர் ஞானக் கடல் எனவும் அழைக்கப்படுகிறார். அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல், பதீத பாவனராக இருப்பவர். அனைவரையும் தூய்மைப்படுத்துபவர் தத்துவமாக இருக்க முடியாது. நீர் முதலான அனைத்தும் தத்துவங்கள் ஆகும், அவை எப்படி சத்கதியைக் கொடுக்கும்? ஆத்மாதான் நடிப்பை நடிக்கிறது. ஹடயோக நடிப்பும் கூட ஆத்மா நடிக்கிறது. இந்த விஷயங்களையும் புத்திசாலியாக இருப்பவர்கள்தான் புரிந்து கொள்ள முடியும். தந்தை எவ்வளவு புரிய வைத்திருக்கிறார் - எப்படி பூஜைக்குரிய வரிலிருந்து பூஜாரிகளாகின்றனர் என மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதமாக ஏதாவது யுக்தியை உருவாக்குங்கள். பூஜைக்குரியவர்கள் இருப்பது புதிய உலகத்தில், பூஜாரிகள் இருப்பது பழைய உலகத்தில். தூய்மையானவர்கள் பூஜைக்குரியவர்கள் எனவும் தூய்மை இழந்தவர்கள் பூஜாரிகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இங்கே அனைவருமே தூய்மை யற்றவர்களாக இருக்கின்றனர். ஏனென்றால் விகாரத்தில் பிறவி எடுக்கின்றனர். அங்குள்ளவர்கள் உயர்ந்தவர்கள். சம்பூரண சிரேஷ்டாச்சாரி என பாடவும் செய்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அப்படி ஆக வேண்டும். உழைக்க வேண்டும். முக்கியமான விசயம் நினைவினுடையது ஆகும். நினைவில் இருப்பது மிகவும் கஷ்டமானது என அனைவரும் சொல்கின்றனர். நாங்கள் விரும்பிய அளவு நினைவில் இருக்க முடிவதில்லை. யாராயினும் உண்மையாக சார்ட் (நினைவின் அட்டவணை) வைத்தால் மிகவும் லாபம் ஏற்படும். தந்தை குழந்தைகளுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார் - மன்மனாபவ. நீங்கள் அர்த்தத்துடன் சொல்கிறீர்கள். உங்களுக்கு தந்தை அனைத்து விசயங்களையும் சரியான விதத்தில் அர்த்தத்துடன் புரிய வைக்கிறார். தந்தையிடம் குழந்தைகள் பல விதமான கேள்விகளைக் கேட்கின்றனர். தந்தை அவர்கள் மனம் கோணா தவாறு ஏதாவது சொல்கிறார். ஆனால் என்னுடைய வேலையே பதீதத்திலிருந்து பாவனராக்குவது என தந்தை கூறுகிறார். என்னை நீங்கள் இதற்காகத்தான் அழைக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் சரீரத்துடன் தூய்மையாக இருந்தோம் என நீங்கள் அறிவீர்கள். இப்போது அதே ஆத்மா சரீரத்துடன் சேர்த்து தூய்மையற்றதாக ஆகியுள்ளது. 84 பிறவி களின் கணக்கல்லவா.

 

இப்போது இந்த உலகம் முட்கள் நிறைந்த காடாகியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த லட்சுமி நாராயணர் மலர்கள் அல்லவா? அவர்கள் முன்பாகச் சென்று முட்கள் சொல்கின்றன - நீங்கள் அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள். நாங்கள் பாவிகள், கபடமிக்கவர்கள். அனைத்திலும் பெரிய விகாரம் - காம விகாரமாகும். இதன் மீது வெற்றி கொண்டு உலகை வென்றவர் ஆகுங்கள் என தந்தை கூறுகிறார். பகவான் ஏதாவது ஒரு ரூபத்தில் வர வேண்டும் என மனிதர்கள் நினைக்கின்றனர். பாகியசாலியின் ரதத்தில் அமர்ந்தபடி வரவேண்டும். பழைய உலகை புதிய உலகமாக ஆக்குவதற்காக பகவான் வரவேண்டியுள்ளது. புதிய உலகம் சதோபிரதானம், பழைய உலகம் தமோபிர தானம் எனக் கூறப்படுகிறது. இப்போது பழைய உலகமாக இருப்பதால் கண்டிப்பாக தந்தை வரத்தான் வேண்டும். தந்தைதான் படைப்பவர் என அழைக்கப்படுகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு எளிதாக புரியவைக்கிறார். எவ்வளவு குஷி இருக்க வேண்டும். மற்றபடி யாருக்காவது கர்மபோகத்தின் கணக்கு வழக்கு இருந்தாலோ, வேறு எதுவாக இருந்தாலும் அதை அனுபவிக்க வேண்டும், இதில் பாபா ஆசீர்வாதம் செய்வதில்லை. என்னை அழைக்கவும் செய்கிறீர்கள் - பாபா வந்து எங்களுக்கு ஆஸ்தி கொடுங்கள். பாபாவிடம் எந்த ஆஸ்தியை அடைய விரும்புகிறீர்கள். முக்தி ஜீவன்முக்தி யினுடைய ஆஸ்தி. முக்தி ஜீவன் முக்தி வழங்கும் வள்ளல் ஒரே ஞானக்கடலான தந்தை ஆவார், ஆகையால் அவர் ஞானத்தின் வள்ளல் என அழைக்கப்படுகிறார். பகவான் ஞானத்தைக் கொடுத்தார், ஆனால் எப்போது கொடுத்தார், யார் கொடுத்தது என்பது யாருக்கும் தெரியாது. அனைத்து குழப்பங்களுமே இதில்தான் உள்ளது. யாருக்கு ஞானத்தைக் கொடுத்தார் என்பதும் யாருக்கும் தெரியாது. இப்போது இந்த பிரம்மா அமர்ந்திருக்கிறார்-நானே நாராயணனாக இருந்தேன், பிறகு 84 பிறவிகள் அனுபவம் செய்தேன் என்பது இவருக்குத் தெரிய வந்தது. இவர் இருப்பது முதல் நம்பரில் ஆகும். என்னுடைய கண்கள் திறந்தே விட்டன என பாபா (பிரம்மா) சொல்கிறார். எங்களுடைய கண்களே திறந்து விட்டன என நீங்களும் சொல்வீர்கள். மூன்றாம் கண் திறக்கிறது அல்லவா. எங்களுக்கு தந்தை பற்றி, சிருஷ்டிச் சக்கரத்தைப் பற்றிய முழு ஞானமும் கிடைத்து விட்டது. நான் யார், நான் எப்படி இருக்கிறேன் - என்னுடைய கண்கள் திறந்து விட்டன. எவ்வளவு அதிசயமாக உள்ளது. ஆத்மாக்கள் நாம் என்பதே முதன்மையானது, மேலும் பிறகு தன்னை தேகம் என புரிந்து கொண்டு அமர்ந்திருக்கிறோம். நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன், எனினும் நான் தன்னை ஆத்மா என்பதை மறந்து தேக அபிமானி ஆகி விடுகிறேன் என ஆத்மா சொல்கிறது. ஆகையால் இப்போது முதன் முதலில் தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு அமருங்கள் என இந்த விழிப்புணர்வை உங்களுக்குக்கொடுக்கின்றேன். நான் ஆத்மா என உள்ளுக்குள் இதையே சிந்தித்தபடி இருங்கள். ஆத்மா என புரிந்து கொள்ளாததால் தந்தையை மறந்து விடுகிறீர்கள். நாம் அடிக்கடி தேக அபிமானத்தில் வந்து விடுகிறோம் என உணர்கிறீர்கள். உழைக்க வேண்டும். இங்கே அமர்ந்திருந்தாலும் ஆத்ம அபிமானி ஆகி அமருங்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன் என தந்தை சொல்கிறார். அரைக்கல்பம் நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள். ஏதாவது விஷயத்தை எதிர் கொள்ள வேண்டி இருந்தால் ஐயோ, ராமா! என்கின்றனர். ஆனால் ஈஸ்வரன் அல்லது ராமன் யார் என்பது யாருக்கும் தெரியாது. ஞானக்கடல், பதீத பாவனர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல், திரிமூர்த்தி பரமபிதா பரமாத்மா சிவன் என நீங்கள் நிரூபிக்க வேண்டும். வெறும் சிவ ஜெயந்தி அல்ல, ஆனால் திரிமூர்த்தி சிவ ஜெயந்தி ஆகும். சிவனின் ஜெயந்தி வந்தது என்றால் கண்டிப்பாக பிரம்மாவின் ஜெயந்தியும் வரும். சிவனின் ஜெயந்தியைக் கொண்டாடு கின்றனர், ஆனால் பிரம்மா என்ன செய்தார்? லௌகிக, பரலௌகிக தந்தை இருக்கின்றனர், மேலும் இவர் அலௌகிக தந்தை ஆவார். இவர் பிரஜாபிதா பிரம்மா ஆவார். புதிய உலகத்திற்கான இந்த புதிய ஞானம் இப்போதுதான் உங்களுக்கு கிடைக்கிறது, பிறகு மறைந்து விடுகிறது. படைப்பவராகிய தந்தை மற்றும் படைப்பின் ஞானம் இல்லாதவர்கள் அஞ்ஞானிகளாக உள்ளனர் என்றாகிறது அல்லவா? அஞ்ஞானத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஞானத்தின் மூலம் பகல், பக்தியினால் இரவு ஏற்படுகிறது. சிவராத்திரி யின் அர்த்தமும் தெரிவதில்லை ஆகையால் அதற்காக விடுமுறை கொடுக்கவும் தவறி விட்டனர்.

 

அனைவரின் ஜோதியை ஏற்றி வைப்பதற்காகத்தான் தந்தை வந்துள்ளார் என இப்போது நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இந்த தீபங்கள் முதலானவைகளை ஏற்றி வைத்தீர்கள் என்றால் பார்ப்பவர்கள் இவர்களுடைய விசேஷமான தினம் போலும் என புரிந்து கொள்வார்கள். இப்போது நீங்கள் அர்த்தத்துடன் ஏற்றி வைக்கிறீர்கள். அவர்கள் புரிந்து கொள்வதில்லை. உங்களுடைய சொற்பொழிவின் மூலம் முழுமையாகப் புரிந்து கொண்டு விட மாட்டார்கள். இப்போது முழு உலகின் மீதும் இராவணனின் இராஜ்யம் உள்ளது. இங்கே மனிதர்கள் எவ்வளவு துக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர். இந்த விசயங்களில் உங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என பாபா சொல்கிறார். தந்தை நேரடியான விசயம் சொல்கிறார் - குழந்தைகளே, நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் தூய்மையடைந்து விடுவீர்கள். உங்களுடைய அனைத்து துக்கங்களும் நீங்கிவிடும். நல்லது!

 

இனிமையிலும் இனிமயான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. சரியான முறையில் தந்தையை நினைவு செய்யவும், ஆத்ம அபிமானி ஆவதற்காகவும் முயற்சி செய்ய வேண்டும். உண்மையுடன் சார்ட் வைக்க வேண்டும். இதில்தான் மிக அதிக லாபம் உள்ளது.

 

2. அனைத்திலும் அதிகமான துக்கம் கொடுக்கக் கூடியது (முள்) காம விகாரமாகும், யோக பலத்தின் மூலம் இதன் மீது வெற்றி கொண்டு பதீதத்திலிருந்து பாவனராக வேண்டும். மற்றபடி யாருடைய விசயத்திலும் உங்களுக்கு தொடர்பு கிடையாது.

 

வரதானம்:

(விக்ன ப்ரூஃப்) தடைகள் அனுக முடியாத ஜொலிக்கின்ற ஃபரிஸ்தாவின் ஆடையை அணியக்கூடிய சதா விக்ன விநாசக் ஆகுக.

 

தனக்காகவும் மற்ற அனைவருக்காகவும் விக்ன விநாசக் ஆவதற்காக, கேள்விக்குறிக்கு விடை கொடுக்க வேண்டும் மற்றும் முற்றுப்புள்ளி (ஃபுல் ஸ்டாப்) மூலம் சர்வ சக்திகளின் முழு இருப்பு (ஃபுல் ஸ்டாக்) வைக்க வேண்டும். சதா விக்ன ப்ரூஃப் ஜொலிக்கின்ற ஃபரிஸ்தா ஆடை அணிந்திருக்க வேண்டும். மண்ணின் ஆடையை அணியக் கூடாது. அதனுடன் கூடவே சர்வ குணங்களின் அணிகலன்களால் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். சதா அஷ்டசக்தி சஸ்திரதாரி (எட்டு சக்திகள் என்ற ஆயுதங்களைத் தரித்தவர்) சம்பன்ன மூர்த்தி ஆகி இருக்க வேண்டும். மேலும் தாமரை மலர் ஆசனத்தில் தனது சிரேஷ்ட வாழ்க்கை என்ற காலை வைக்க வேண்டும்.

 

சுலோகன் :

அப்பியாசத்தின் (முயற்சி) மீது முழுமையான கவனம் வைப்பீர்களானால் முதல் டிவிசனில் நம்பர் வந்து விடும்.

 

மாதேஸ்வரி அவர்களின் விலைமதிப்பற்ற மகாவாக்கியங்கள்

இந்த ஈஸ்வரிய ஞானம் அனைத்து மனித ஆத்மாக்களுக்குமானது

 

முதல்-முதலிலோ தன்னை ஒரு முக்கிய பாயின்ட்டை சிந்தனையில் அவசியம் வைக்க வேண்டும். இந்த மனித சிருஷ்டி என்ற மரத்தின் விதைரூபமாக பரமாத்மா உள்ளார் என்றால் அந்தப் பரமாத்மா மூலம் எந்த ஞானம் கிடைக்கிறதோ, அது மனிதர்கள் அனை வருக்குமே அவசியமானதாகும். அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உரிமை உள்ளது. ஒவ்வொரு தர்மத்தின் ஞானமும் தனித்தனியாக இருக்கலாம். ஒவ்வொருவரின் சாஸ்திரமும் தனித்தனியாக இருக்கலாம். ஒவ்வொருவரின் வழிமுறையும் தனித்தனியாக இருக்கலாம். ஒவ்வொருவரின் சம்ஸ்காரமும் தனித்தனியாக இருக்கலாம். ஆனால் இந்த ஞானம் அனைவருக்கு மானதாகும். அவர்கள் இந்த ஞானத்தைப் பெற முடியாமல் இருக்கலாம். இந்தக் குலத்தில் கூட வராமல் போகலாம். ஆனால் அனைவரின் தந்தையாக இருக்கும் காரணத்தால், அவரிடம் யோகம் வைப்பதால் பிறகும் கூட அவசியம் தூய்மைடைவார்கள். இந்தப் பவித்திரதாவின் காரணத்தால் தங்களது செக்சனில் (பிரிவில்) பதவியை அவசியம் பெறுவார்கள். ஏனென்றால் யோகத்தையோ மனிதர்கள் அனைவருமே ஏற்றுக் கொண்டுள்ளனர். அநேக மனிதர்கள் இது போல் சொல்கின்றனர் - எங்களுக்கும் முக்தி வேண்டும். ஆனால் தண்டனைகளில் இருந்து விடு படுவதற்கான சக்தியும் கூட இந்த யோகத்தின் மூலம் கிடைக்கும்.

 

இடைவிடாத ஜெபம் (அஜ்பாஜாப்) என்றால் நிரந்தர நினைவு

 

பழமொழி உள்ளது -- ஒவ்வொரு சுவாசத்திலும் நிரந்தரமாக நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்கள் என்றால் அதன் யதார்த்த அர்த்தம் என்ன? நாம் சொல்கிறோம், அஜபாஜாப் என்றால் இதன் யதார்த்த அர்த்தம், (ஏதாவது மந்திரத்தை) ஜெபம் (நினைவு) செய்யாமல் ஒவ்வொரு சுவாசத்திலும் தங்கள் புத்தியோகத்தைத் தங்களின் பரமபிதா பரமாத்மாவுடன் நிரந்தரமாக ஈடுபடுத்துவது மற்றும் இந்த ஈஸ்வரிய நினைவு ஒவ்வொரு சுவாசத்திலும் நிலையாக நடைபெற்றே வருகின்றது. அந்த நிரந்தர ஈஸ்வரிய நினைவை அஜபாஜாப் எனச் சொல்கின்றனர். மற்றப்படி வாயின் மூலம் ஜெபம் செய்வது, அதாவது ராம் ராம் எனச் சொல்வது, உள்ளுக்குள் ஏதேனும் மந்திரத்தை உச்சரிப்பது, இதுவோ நிரந்தரமாக நடைபெற முடியாது. அவர்கள் நினைக்கிறார்கள், நாம் வாயினால் மந்திரத்தை உச்சரிப் பதில்லை. ஆனால் மனதினுள் உச்சரிப்பது -- இது தான் அஜபாஜாப். ஆனால் இதுவோ சகஜமான ஒரு சிந்தனையின் விசயம். அங்கே தனது வார்த்தையே அஜபாஜாப், எனில் அதை ஜெபிக்க வேண்டிய தேவையும் இல்லை. உள்ளே அமர்ந்து ஏதேனும் மூர்த்தியின் தியானமும் கூட செய்ய வேண்டியதில்லை. எதையும் நினைவு (சிமரண்) செய்ய வேண்டியதும் இல்லை. ஏனென்றால் அதையும் நிரந்தரமாக, உண்ணும் போதும் அருந்தும் போதும் செய்ய முடியாது. ஆனால் நாம் செய்யும் ஈஸ்வரிய நினைவு என்பது நிரந்தரமாக நடைபெற முடியும். ஏனென்றால் இது மிகவும் சுலபமானது. உதாரணமாக, ஒரு குழந்தை தன்னுடைய தந்தையை நினைவு செய்கிறது என்றால் அதே சமயம் தந்தையின் நிழற்படத்தை (ஃபோட்டோ) முன்னால் கொண்டு வர வேண்டியதில்லை. ஆனால் மனம்- சொல்-செயலால் தந்தையின் தொழில், செயல்பாடுகள், குணங்கள் சகிதம் நினைவு வருகிறது. அவ்வளவு தான். அது நினைவு வருவதன் மூலம் குழந்தைக்கும் கூட அந்த நடிப்பு அல்லது செயல்பாடு நடைபெறுகிறது (பின்பற்றுவது). அப்போது தான் குழந்தை தன் தந்தையை எடுத்துக் காட்டுவதாகும். அது போல் தன்னையும் கூட மற்ற அனைவரைப் பற்றிய நினைவை உள்ளுக்குள் இருந்து அகற்றி, அந்த ஒரே ஒரு பரலௌகிக பரமபிதா பரமாத்மாவின் நினைவில் இருக்க வேண்டும். இதில் அமரும் போதும் எழும் போதும், உண்ணும் போதும் அருந்தும் போதும் நிரந்தர நினைவில் இருக்க முடியும். அந்த நினைவின் மூலம் தான் கர்மாதீத் ஆகிறோம். ஆக, இந்த இயற்கையான நினைவைத் தான் அஜபாஜாப் எனச் சொல்கின்றனர். நல்லது. ஓம் சாந்தி.

 

ஓம்சாந்தி