07-10-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தீயவைகளை கேட்காதீர்கள், ஒரு தந்தை கூறுவதை மட்டுமே கேட்க வேண்டும், இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று இருக்க வேண்டும்.

கேள்வி:

எந்த விளையாட்டை யதார்த்த முறையில் அறிந்த குழந்தைகள் ஒருபோதும் குழப்பமடைய முடியாது?

பதில்:

துக்கம் மற்றும் சுகம், பக்தி மற்றும் ஞானத்தின் விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக் கிறது, இதை யதார்த்த முறையில் அறிந்தவர்கள் ஒருபோதும் குழப்பமடைய மாட்டார்கள். பகவான் யாருக்கும் துக்கம் கொடுப்பது கிடையாது, அவர் துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எப்போது அனைவரும் துக்கமானவர்களாக ஆகிவிடு கிறார்களோ அப்போது துக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அவர் வருகின்றார்.

பாடல்:
இன்று அதிகாலையில் யார் வந்தது ..

ஓம் சாந்தி.
குழந்தைகள் என்ன கேட்டீர்கள்? பக்தியின் பாடல். பக்தியை ஆங்கிலத்தில் ஃபிளாசபி (தத்துவ ஞானம்) என்று கூறுவர். டாக்டர் ஆஃப் ஃபிளாசபி என்ற பட்டம் கிடைக்கிறது. ஃபிளாசபியை (பக்தியை) சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் அறிவர். ஈஸ்வரன் எங்கு இருக்கிறார்? என்று யாரிடத்திலாவது கேட்டால் சர்வவியாபி என்று கூறிவிடுவர். இதுவும் பக்தி ஆகிவிடுகிறது அல்லவா! இப்போது சாஸ்திரங்களின் எந்த விசயத்தையும் தந்தை கூறுவது கிடையாது. எந்த பக்தனையும் ஞானக் கடல் என்று கூறமாட்டோம். அவர்களிடத்தில் ஞானமும் கிடையாது, ஞானக் கடலின் குழந்தைகளாகவும் இல்லை. ஞானக்கடலான தந்தையை யாரும் அறியவில்லை. தன்னை குழந்தை என்று புரிந்து கொள்வதும் கிடையாது. பகவானை அடைவதற் காகவே அவர்கள் பக்தி செய்கின்றனர். ஆனால் பகவானை அறியவில்லை எனும் போது பக்தியினால் என்ன பலன் ஏற்படும்? பலருக்கு டாக்டர் ஆஃப் ஃபிளாசபி என்ற பட்டம் கிடைக்கிறது, அவர்களது புத்தியில் ஈஸ்வரன் சர்வவியாபி என்ற ஒரே ஒரு விசயம் தான் இருக்கிறது. அதை பிளாசபி என்று நினைக்கின்றனர். இதன் மூலம் கீழே இறங்கி வந்தனர், இது தான் தர்ம நிந்தனை என்று கூறப்படுகிறது. நாம் எந்த மனிதனிடத்திலும் சாஸ்திரங்களின் வாத, விவாதம் செய்வது கிடையாது. நாம் எந்த மனிதனிடத்திலும் படிக்கவில்லை. மற்ற மனிதர்கள் அனைவரும் மனிதர்களின் மூலம் படிக்கின்றனர். வேத சாஸ்திரங்ள் போன்ற அனைத்தும் மனிதனின் மூலம் தான் படிக்கின்றனர். உருவாக்கியது மனிதர்கள் தான். உங்களுக்கு இந்த ஞானம் கூறுபவர் ஒரே ஒரு ஆன்மீகத் தந்தை ஆவார். அவர் ஒரே ஒரு முறை வந்து புரிய வைக்கின்றார். இப்போது நாம் எந்த மனிதனி டத்திலும் எதுவும் கற்கக் கூடாது. நீங்கள் இப்போது ஆன்மீகத் தந்தையிடம் மட்டுமே கேட்க வேண்டும். கேட்பவர்கள் ஆன்மீகக் குழந்தைகள், ஆத்மாக்கள். அவர்கள் அனைவரும் மனிதர்கள், மனிதர்களுக்கு கூறு கின்றனர். இது ஆன்மீகத் தந்தையின் ஞானமாகும். அது மனிதர்களின் ஞானமாகும். இந்த பாபாவும் (சாகாரம்) மனிதர் அல்லவா! ஆன்மீகத் தந்தை இவர் மூலம் கூறுகின்றார் என்று சொல்லுங்கள். ஆத்மாக்களாகிய நாம் கேட்கிறோம். ஆத்மாக் களாகிய நாம் சரீரத்தின் மூலம் மற்றவர்களுக்கு கூறுகிறோம். இது ஆன்மீக ஞானம். மற்ற அனைத்தும் பௌதீகமாகும். பக்தியில் உடலுக்குத் தான் பூஜை செய்கின்றனர். நீங்கள் உங்களை மனிதன் என்றோ அல்லது பக்தன் என்றோ நினைக்காதீர்கள் என்று தந்தை கூறுகின்றார். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதர சகோதரர்கள். ஆத்மா பரமாத்மாவைப் பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டது ....... என்றும் பாடப்பட்டிருக்கிறது. ஆக நாம் எந்த மனிதன் கூறுவதையும் கேட்கக் கூடாது. யாராவது கேள்வி கேட்டால் எங்களுக்கு எந்த சாஸ்திரத்தின் ஞானமும் கிடையாது என்று கூறுங்கள். நாம் அதை ஃபிளாசபி என்று கூறுகிறோம் அதாவது பக்தி மார்கத்தின் ஞானமாகும். சத்கதி ஏற்படுத்தும் ஞானம் ஒரே ஒரு தந்தை மட்டுமே கொடுக்கின்றார். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் என்று ஒரே ஒருவர் தான் பாடப்பட்டிருக்கிறார். ஆக குழந்தை களாகிய நீங்கள் யாரிடத்திலும் வாக்குவாதம் செய்யக் கூடாது.

ஞானத்தில் அத்தாரிட்டி, ஞானக் கடல் நான் தான் என்று தந்தை கூறுகின்றார். நான் உங்களுக்கு எந்த சாஸ்திரத்தின் ஞானமும் கூறுவது கிடையாது. இது நம்முடைய ஆன்மீக ஞானமாகும். மற்ற அனைத்தும் பௌதீக ஞானமாகும். அந்த சத்சங்கம் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையது. இதை ஆன்மீகத் தந்தை அமர்ந்து ஆத்மாக்களுக்கு புரிய வைக்கின்றார். ஆகையால் ஆத்ம அபிமானியாவதில் குழந்தைகளுக்கு உழைப்பு ஏற்படுகிறது. ஆத்மாக்களாகிய நாம் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகிறோம். தந்தையின் குழந்தைகள் அவசியம் தந்தையின் சிம்மாசனத்திற்கு வாரிசாக இருப்பர் அல்லவா! லெட்சுமி, நாராயணனும் தேகதாரி ஆவர். அவரது குழந்தைகள் சரீரமுடைய தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகின்றனர். இந்த விசயமே தனிப் பட்டது. சத்யுகத்திலும் கூட சரீர சம்மந்தப்பட்ட விசயம் ஏற்பட்டு விடுகிறது. ஆன்மீகத் தந்தை யிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்று அங்கு கூறமாட்டார்கள். தேக அபிமானத்தை நீக்க வேண்டும். நான் ஆத்மா, தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதுவே பாரதத்தின் பழமையான யோகா என்று பாடப்பட்டிருக்கிறது. (நினைவு) யாத் என்ற வார்த்தை ஹிந்தி வார்த்தையாகும். ஆக இந்த ஞானம் உங்களுக்கு இப்போது கொடுப்பது யார்? என்பதை எந்த மனிதனும் அறியவில்லை. ஜென்ம ஜென்மங்களாக மனிதன் மனிதனிடத்தில் தான் பேசிக் கொண்டு வந்தனர். இப்போது ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுடன் பேசுகின்றார். ஆத்மாவிற்கு கூறுகின்றார், அதனால் தான் இது ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது. கீதையையும் அவர்கள் ஆன்மீக ஞானம் என்று நினைக்கின்றனர். ஆனால் அதில் தேகதாரி கிருஷ்ணரின் பெயர் போட்டு விட்டனர். எந்த மனிதனிடத்திலும் இந்த ஞானம் இருக்கவே முடியாது என்ற தந்தை கூறுகின்றார். எப்பொழுதாவது யாராவது உங்களிடம் விவாதம் செய்தால் இது உங்களது பக்தியின் ஞானம் என்று கூறுங்கள். மனிதர்களினால் உருவாக்கப் பட்ட சாஸ்திரத்தின் ஞானமாகும். சத்திய ஞானம் ஒரே ஒரு ஞானக் கடலான தந்தையிடம் மட்டுமே இருக்கிறது. அவரே சுயம் ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவர் தான் சுப்ரீம் தந்தை என்று கூறப்படுகின்றார். பூஜையும் அந்த நிராகாரமானவருக்குத் தான் நடைபெறுகிறது. ஒருவேளை மற்ற நிராகாரமானவர்களுக்கும் பூஜை நடைபெறுகிறது எனில் அவர்களும் அவரது குழந்தைகளே! மணலால் சாலிகிராம் உருவாக்கி பூஜை செய்கின்றனர். ருத்ர யக்ஞம் படைக்கின்றனர். அந்த பரம்பிதா பரமாத்மா நிராகார உலகில் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாமும் அங்கு தான் இருக்கிறோம். அந்த ஞானக் கடலானவர் வந்து ஞானம் கூறி அனைவருக்கும் சத்கதி கொடுத்து விடுகின்றார். அவர் வெகு தொலைவில் இருக்கக் கூடிய பரம்பிதா பரமாத்மா ஆவார். அனைத்து ஆத்மாக்கள் என்ற சகோதரர்களுக்கு பாகம் கிடைத்திருக்கிறது. பிறகு சரீரத்தை தாரணை செய்து சகோதர, சகோதரிகளாக ஆகின்றனர். ஆத்மாக்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். ஆத்மா எப்போது சரீரத்தை தாரணை செய்கிறதோ அப்போது சொர்க்கத்தில் சுகமும், நரகத்தில் துக்கமும் அடைகிறது. ஏன் இவ்வாறு ஏற்படுகிறது? ஞானம் மற்றும் பக்தி என்று புரிய வைக்கப்படுகிறது. அது பகல், இது இரவு. ஞானத்தில் சுகம், பக்தியில் துக்கம் லி இவ்வாறு விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. துக்கமோ, சுகமோ அனைத்தையும் பகவான் தான் கொடுக்கின்றார் என்பது கிடையாது. பகவானை அழைப்பதே துக்கம் ஏற்படும் போது தான். அவர் சுகம் கொடுக்கக் கூடியவர் என்று நினைக்கின்றனர். சுகத்தின் நேரம் முடிவடையும் போது இராவணன் 5 விகாரங்களின் காரணத்தினால் துக்கம் ஆரம்பமாகிறது. இது தான் விளையாட்டு, அதை யதார்த்த முறையில் புரிந்து கொள்ள வேண்டும். இது தான் ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது. மற்ற அனைத்தும் சரீர சம்மந்தப்பட்ட ஞானமாகும், அதை நாம் கேட்க விரும்பவில்லை. நிராகார தந்தை கூறுவதை மட்டுமே கேளுங்கள் என்று நமக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தீயவைகளை கேட்காதீர்கள் ........ என்று தந்தை கூறுகின்றார். நாங்கள் ஒரு பகவான் கூறுவதை கேட்கிறோம். நீங்கள் மனிதர்கள் கூறுவதை கேட்கிறீர்கள் என்று கூறுங்கள். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. பெரிய பெரிய வித்வான்கள் சாஸ்திரம் போன்றவைகளை படிக்கின்றனர். அதை நாமும் அதிகம் படித்திருக்கிறோம். நீங்கள் பல குருக்களிடம் சென்றீர்கள், இப்போது அவர்களை விட்டு விடுங்கள், நான் என்ன கூறுகிறேனோ அதை கேளுங்கள் என்று இப்போது பகவான் கூறுகின்றார். பகவான் நிராகாரமானவர், அவரது பெயர் சிவன். இப்போது நாம் அவர் கூறுவதை கேட்டுக் கொண்டிருக்கிறோம். சுயம் தந்தை தனது அறிமுகம் மற்றும் தனது படைப்பின் முதல், இடை மற்றும் கடையின் அறிமுகத்தைக் கொடுக்கின்றார். இவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் உங்கள் மூலம் சாஸ்திரம் போன்ற விசயங்களை கேட்க வேண்டும்? நாங்கள் உங்களுக்கு ஆன்மீக ஞானம் கூறுகிறோம். கேட்க விரும்பு கிறீர்கள் எனில் கேளுங்கள். குழப்பமடைவதற்கான விசயம் எதுவும் கிடையாது. முழு உலகமும் ஒருபுறம் இருக்க, நீங்கள் மிகக் குறைந்தவர்களே இருக்கிறீர்கள். என்னை நினைவு செய்தால் உங்கள் மீது இருக்கும் பாவக் கறைகள் நீங்கி விடும் மற்றும் நீங்கள் தூய்மையாக ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். யார் தூய்மையாக ஆகிறார்களோ அவர்களே தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக ஆவார்கள். இப்போது பழைய உலகம் மாற வேண்டும். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும். சத்யுகம் தூய்மையான உலகமாகும், கலியுகத்தில் தான் வந்து நீங்கள் தூய்மை ஆக்குங்கள் என்று என்னை அழைக்கிறீர்கள். ஆக இப்போது நான் வந்திருக்கிறேன், என் ஒருவனை நினைவு செய்யுங்கள். இப்போது உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இது கடைசிப் பிறவியாகும். இந்த பழைய உலகில் அசுர இராஜ்யம் அழிந்து, இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஆகையால் இப்போது கடைசிப் பிறவியில் இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று தூய்மையாக ஆகுங்கள். இது விஷக் கடல் அல்லவா! தாமரை மலர் தண்ணீரின் மேலே இருக்கும். ஆக இப்போது நீங்கள் இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று தூய்மையாக ஆகுங்கள். நாம் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்போது முழு உலகமும் மாற வேண்டும். அந்த தர்ம ஸ்தாபகர்கள் அவரவர்களது தர்மத்தை மட்டுமே ஸ்தாபனை செய்கின்றனர். முதலில் அவர்கள் தூய்மையாக இருக்கின்றனர், பிறகு தூய்மையை இழந்தவர்களாக ஆகின்றனர். சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு சத்குரு ஆவார். எப்போது சத்கதியில் செல்ல விரும்புகிறார்களோ அப்போது தான் மனிதர்கள் குருக்களிடம் செல்கின்றனர். எப்போது பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போது ஆன்மீகத் தந்தை ஞானம் கூறுகின்றார். பக்தியின் பலனாகிய ஞானம் உங்களுக்கு பகவானிடமிருந்து கிடைக்கிறது. பகவான் எந்த பக்தியையும் கற்றுக் கொடுப்பது கிடையாது. அவர் ஞானம் கொடுக்கின்றார். என்னை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசமாகி விடும் என்று கூறுகின்றார், தூய்மையாவதற்கு வேறு வழியே கிடையாது. புது உலகில் அனைவரும் சொர்க்கவாசிகளாக இருந்தனர். இப்போது பழைய உலகில் அனைவரும் நரகவாசிகளாக இருக்கின்றனர், அதனால் தான் நான் அனைவரையும் முன்னேற்றுவதற்காக வந்திருக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். நான் வந்து தான் ஆன்மீக ஞானம் கொடுக்கிறேன். தந்தை தனது அறிமுகத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். நான் உங்களது தந்தை ஆவேன். இப்போது இது நரகமாகும். புது உலகம் சொர்க்கம் என்று கூறப்படுகிறது. இதுவே சொர்க்கம், நரகம் என்று எப்படி கூற முடியும்? யாரிடத்தில் அதிக செல்வம் இருக்கிறதோ அவர்கள் சொர்க்கத்தில் இருப்பதாக நினைக்கின்றனர்.! சொர்க்கம் என்பது புது உலகமாகும். இங்கு சொர்க்கம் எங்கிருந்து வந்தது? ஆகையால் நாம் எந்த மனிதனின் விசயங்களையும் கேட்பது கிடையாது. நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆக வேண்டும் எனில் என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். முழு நாளும் இந்த ஞானம் புத்தியில் இருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஒரே ஒரு தந்தை கூறும் ஆன்மீக விசயங்களை மட்டுமே கேட்க வேண்டும். வேறு யாரிடத்திலும் மற்றவர்களது விசயங்களைப் பற்றி வாக்குவாதம் செய்யக் கூடாது.

2) ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். சதோபிரதானம் ஆவதற்காக ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும்.

வரதானம்:

பாபாவின் கை மற்றும் துணையின் நினைவின் மூலம் கடினமானதை எளிதாக மாற்றக்கூடிய கவலையற்றவர் மற்றும் சோகமற்றவர் ஆகுக.

பெரியவர்களின் (மூத்தோர்களின்) கையோடு கைகோர்த்து இருக்கும் பொழுது கவலையற்ற மனநிலை இருக்கிறது. அதுபோல ஒவ்வொரு செயல் செய்யும் பொழுதும் பாப்தாதா என்னுடன் இருக்கிறார், மேலும் நம்முடைய இந்த அலௌகீக வாழ்க்கையின் கை அவருடைய (பாபாவுடைய) கைகளில் இருக்கிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டும், அதாவது நமது வாழ்க்கை அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எனவே பொறுப்புகளும் அவரிடம் தான் இருக்கும். அனைத்து சுமைகளையும் பாபாவின் மீது வைத்து தன்னை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். சுமைகளை இறக்குவதற்கான மற்றும் கடினமானதை எளிதாக மாற்றுவதற்கான எளிய சாதனம் லி பாபாவின் கை மற்றும் துணையில் இருப்பது.

சுலோகன்:

முயற்சியில் உண்மையானவராக இருந்தால் பாப்தாதாவின் அதிகப்படியான உதவியை அனுபவம் செய்ய முடியும்


மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியங்கள்

1. ஞானம், யோகம் மற்றும் தெய்வீக குணங்களின் தாரணை தான் வாழ்க்கைக்கான ஆதாரமாகும்.

பரமபிதா பரமாத்மாவின் மூலம் நமக்கு ஞானம் கிடைத்திருக்கிறது என்ற இந்த நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இந்த ஞானத்தில் முக்கியமாக மூன்று ஞானக் கருத்துகள் இருக்கிறது, இதற்காக தன்னை முழுவதுமாக முயற்சியில் ஈடுபடுவதில் கவனம் வைக்க வேண்டும். இதில் முதலாவதாக யோகம், அதாவது ஈஸ்வரனை நிரந்தரமாக நினைவு செய்வது, இதனால் விகர்மங்கள் அழிகிறது. இரண்டாவது ஞானம் என்றால் இந்த முழு பிரபஞ்சத்தின், உலகத்தின் முதல், இடை, இறுதி நிலை எப்படி சுழல்கிறது, இந்த ஞானம் இருக்கும் பொழுது தான் இந்த வாழ்க்கையில் நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வரமுடியும். மேலும் நாம் எதிர்காலத்தின் பாக்கியத்தை நன்றாக உருவாக்க முடியும். மூன்றாவது ஞான கருத்து: நாம் அனைத்து குணங்களில் நிறைந்தவராக ஆக வேண்டும், 16 கலைகளில் முழுமையானவர் ஆவது என்ற தகுதியை அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும், அப்பொழுது தான் தேவதை ஆக முடியும். எனவே தன்னை தானே நடந்தாலும் லி சுற்றினாலும், உணவை உண்டாலும், பருகினாலும் இந்த மூன்று விஷயங்கள் மீது அவசியம் கவனம் கொடுக்க வேண்டும். இந்த ஒரு ஜென்மத்தில் ஞானத்தின் பலம், யோகத்தின் பலம் மற்றும் தெய்வீக குணங்களின் தாரணை ஆகிவிடும். மூன்றுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகும் லி ஞானம் இல்லாமல் நினைவு செய்ய முடியாது, நினைவு செய்யாமல் தெய்வீக குணங்களின் தாரணை செய்ய முடியாது, இந்த மூன்று ஞான வியங்களின் மீது தான் முழு வாழ்க்கையின் ஆதாரம் இருக்கிறது. அப்பொழுது தான் விகர்மங்களின் கணக்கு முடிவடைந்து நல்ல செயல் உருவாகிறது, இதைத் தான் ஈஸ்வரிய வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது.

2. பாரதத்தின் பழமையான யோகம் பரமாத்மாவின் மூலம் கற்றுத் தரப்படுகிறது.

தனது இந்த ஈஸ்வரிய யோகம் பாரதத்தில் பழமையான யோகத்தின் பெயர் மிகவும் பிரபல மானதாகும். இந்த யோகத்தை அழிவற்ற யோகம் என்று ஏன் சொல்லப்படுகிறது? ஏனெனில் அழிவற்ற பரமபிதா பரமாத்மா மூலம் கற்றுத்தரபடுகிறது. யோகா மனித ஆத்மாக்களும் கற்று தருகிறார்கள், ஆகையால் யோக ஆசிரமம் முதலியன திறக்கிறார்கள், ஆனால் அவர்களால் பழமை யான யோகத்தை கற்று தர முடியாது. ஒரு அப்படி இருந்திருந்தால், அதனுடைய பலன் எங்கே? பாரதம் நாளுக்கு நாள் சக்தி இழந்துக் கொண்டே செல்கிறது, இதன் மூலமாக அவர்கள் கற்றுக் கொடுத்த யோகம் என்பது அழியக் கூடியதாக இருக்கிறது என்பது நிரூபணம் ஆகிறது. யாருடன் நினைவை இணைக்க வேண்டுமோ, அவரே கற்று தரமுடியும். மற்றபடி மற்றவர்கள் நினைவை இணைக்கவில்லையென்றால் எப்படி கற்று தரமுடியும்? பரமாத்மா தான் இந்த காரியத்தை செய்ய முடியும். அவர் தான் நமக்கு வேறுபாட்டை கற்று தர முடியும். மற்றபடி மற்ற தரப்பினர் நாங்கள் யோகம் கற்று தருகிறோம் என்று சொல்கிறார்கள். உண்மையான யோகத்தை சுயம் பரமாத்மா கற்றுக் கொடுத்து சூர்யவம்சம் மற்றும் சந்திரவம்சத்தின் குலத்தை, மற்றும் தெய்வீக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார் என்பதை நாம் தெரிந்திருக்கிறோம். இப்பொழுது பழமையான யோகத்தை பரமாத்மா வந்து கல்பலிகல்பமாக நமக்கு கற்று தருகிறார். ஆத்மாக்களே பரமாத்மாவாகிய என்னுடன் நிரந்தரமான நினைவை இணைத்திருந்தால் உங்களுடைய பாவங்கள் சாம்பல் ஆகிவிடும் என்று சொல்கின்றார். நல்லது ஒம்சாந்தி.