07.12.2018  காலை முரளி  ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்


இனிமையான குழந்தைகளே! அழிவற்ற சர்ஜனிடம் எதையும் மறைக்கக் கூடாது, தவறு நடந்து விட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் சுமை அதிகரித்துக் கொண்டே செல்லும், அவதூறு செய்பவர்களாக ஆகிவிடுவீர்கள்.

கேள்வி:

உண்மையான வருமானத்திற்கு ஆதாரம் என்ன? முன்னேற்றத்தில் ஏன் தடை ஏற்படுகிறது?

பதில்:

உண்மையான வருமானத்திற்கு ஆதாரம் படிப்பாகும். ஒருவேளை படிப்பு சரியாகப் படிக்கவில்லையெனில் உண்மையான வருமானம் செய்ய முடியாது. எப்பொழுது சரியான சகவாசம் இல்லையோ அப்பொழுது தான் முன்னேற்றத்தில் தடை ஏற்படுகிறது. நல்லவர்களின் தொடர்பு முன்னேற்றம். தீயவர்களின் தொடர்பு மூர்கடித்து விடும் என்றும் கூறப்படுகிறது. சகவாசம் தவறாக இருந்தால் படிக்கமாட்டீர்கள், தோல்வி அடைந்து விடுவீர்கள். சகவாசம் தான் ஒருவரையொருவர் பாதாளத்தில் தள்ளி விடுகிறது, ஆகையால் சகவாசத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பாட்டு:

நீ அன்புக் கடலாக இருக்கிறாய் ........

ஓம்சாந்தி.

எல்லையற்ற தந்தையின் மகிமையை குழந்தைகள் செய்கின்றனர். இது பக்தி மார்க்கத்தின் மகிமையாகும். நல்ல குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நேரடியாக தந்தையின் மகிமை செய்கிறீர்கள். எல்லையற்ற தந்தை வந்து நமக்கு ஞானம் கொடுத்து சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் தான் ஞானக் கடலானவர். இறைவனிடம் ஞானம் இருக்கிறது. அதைத் தான் இறை ஞானம் என்று கூறுகிறோம். பரம்பிதா பரமாத்மா ஞானம் கொடுக்கக் கூடியவர். யாருக்கு? குழந்தைகளுக்கு. உங்களது மம்மாவிற்கு கல்விக் கடவுள் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள் அல்லவா! ஆக அந்த ஜெகதம்பா கல்விக் கடவுள் எனில் அவரது குழந்தைகளிடத்திலும் அதே ஞானம் இருக்கும். கல்விக் கடவுளுக்கு கடவுள் ஞானம் கொடுக்கிறார். ஆனால் யார் மூலமாகக் கொடுக்கிறார்? இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். ஜெகதம்பா யார்? என்பது உலகத்தினர்களுக்குத் தெரியாது. ஜெகதம்பா ஒரே ஒருவராகத் தான் இருக்க முடியும் என்பதை குழந்தைகள் அறிவர். பல பெயர்கள் கொடுத்து விட்டனர். பிரஜாபிதா பிரம்மா வாய் மூலம் ஞானம் கேட்டவர் தான் சரஸ்வதி என்பதை மனிதர்கள் அறியவில்லை. அவருக்கு ஞானம் கொடுப்பவர் கடவுள் ஆவார். சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? என்ற ஞானம் இறை தந்தை கொடுக்கிறார். தந்தை குழந்தைகளுக்கு ஞானம் கொடுத்திருந்தார். சரஸ்வதிக்கு எப்படி கிடைத்தது? கண்டிப்பாக பிரம்மா வாய் வழி வம்சத்தவர்களாக இருந்திருப்பார்! ஞானக் கடலான பரம்பிதா பரமாத்மா இந்த பிரம்மா வாயின் மூலம் சரஸ்வதிக்கு ஞானம் கொடுத்திருப்பார். அதே ஞானத்தைப் பிறகு மற்றவர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும். இறை தந்தை கற்பிக்கின்றார் எனில் அவசியம் இறை தந்தையின் குழந்தைகள் மாஸ்டர் கடவுள் ஆகின்றனர் அல்லவா! அதனால் தான் கல்விக் கடவுள் என்று பெயர் வைத்திருக்கின்றனர். நாம் மற்றும் நமது மம்மா ஞானக் கடலிடமிருந்து ஞானம் அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அவர் தான் கீதையின் கடவுள் என்று கூறப்படுகின்றார். பகவான் ஒரே ஒருவர் தான். எந்த ஒரு தேவதையோ அல்லது மனிதனோ பகவானாக ஆகிவிட முடியாது. கல்விக் கடவுள் எனில் எந்த கல்வியாக இருக்கும்? இராஜயோகத்தின் கல்வி. இந்த எளிய இராஜயோகத்தின் கல்வியின் மூலம் கல்விக் கடவுளாகிய சரஸ்வதியே பிறகு செல்வத்தின் கடவுளாகிய லெட்சுமி ஆகின்றார். கல்விக் கடவுளுக்கு மகிமை இருக்கிறது எனில் அவசியம் குழந்தைகளுக்கும் இருக்கிறது. பிரஜாபிதாவிற்கு அனைவரும் குழந்தைகள் ஆவர். மம்மாவின் குழந்தைகள் என்று கூறுவது கிடையாது. பிரஜாபிதா பிரம்மாவின் கமல வாயின் குழந்தைகள் இவர்கள். நீங்கள் அனைவரும் ஈஸ்வரிய குழந்தைகள் என்று நிச்சயம் செய்கிறீர்கள். ஈஸ்வரன் தந்தை கூறுகின்றார் - நான் குழந்தைகளின் நேரில் தான் வருகிறேன். அவர்கள் தான் என்னை அறிவார்கள். ஆக ஜெகதம்பா கல்விக் கடவுள் ஆவார். இது எளிய இராஜயோகத்தின் ஞானமாகுமே தவிர சாஸ்திரங்களின் ஞானம் அல்ல. கடவுள் இவருக்கு ஞானம் கொடுத்திருக்கின்றார், மேலும் இவர் கல்வியின் தேவி என கூறப்படுகிறது. ஜெகதம்பா தாய் என்று கூறப்படுகிறார். பிறகு அடுத்த பிறப்பில் செல்வத்தின் கடவுள் லெட்சுமியாக ஆகின்றார். அவரிடத்தில் தான் மனிதர்கள் யாசிக்கின்றனர். ஆக தந்தையின் மூலம் ஜெகதம்பா இராஜயோகம் கற்று ஆஸ்தி அடைகின்றார் என்பது நிரூபணம் ஆகிறது. அவர் தான் கல்விக் கடவுள் என்று கூறப்படுகின்றார். ஞானம் தான் வருமானத்திற்கான வழியாகும். இது தான் உண்மையான வருமானமாகும். இது சத்திய தந்தையின் மூலம் ஏற்படுகிறது. நீங்கள் இப்பொழுது வரிசைக் கிரமமாக உண்மையான வருமானம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை படிப்பு படிக்கவில்லையெனில் அவர்களுக்கு உண்மையான வருமானம் ஏற்படாது. சகவாசம் சரியானது இல்லையெனில் படிக்க முடியாது, முன்னேற்றம் ஏற்படாது. நல்லவர்களுடன் பழகுங்கள், கெட்ட தொடர்பு மூழ்க வைத்து விடும். கெட்ட சகவாசத்துடன் இருப்பவர்கள் படிக்கமாட்டார்கள், பிறகு தோல்வி அடைந்து விட்டு கடைசியில் அமர்ந்திருப்பார்கள். இதற்குக் காரணம் என்ன? என்பதை ஆசிரியர் அறிவார். தந்தை அறிந்திருக்கமாட்டார். ஆம் படிப்பு குறைவாக படித்திருக்கிறார், என்பதை மட்டும் தற்தை புரிந்திருப்பார், அவசியம் தீய சகவாசத்தில் இருந்திருக்கிறார், அதன் காரணத்தினால் தான் தோல்வி அடைந்திருக்கிறார். தங்களுக்குள் அன்பு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள், இருவரும் படிக்கவில்லையெனில் ஒருவரையொருவர் பாதாளத்தில் தள்ளிக் கொள்கின்றனர். இவர் படிப்பது கிடையாது, இவரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று தந்தை நினைப்பார். படிப்பு இன்றி மனிதர்கள் புத்தியற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். படிக்கின்றனர் எனில் புத்திசாலி என்று கூறுவர். பகவானின் வழிப்படி நடக்கவில்லையெனில் இவர் மாற்றான் குழந்தை என்று கூறப்படுவார். ஆனால் அவர்கள் அதன் பொருளை புரிந்து கொள்வது கிடையாது. யாராவது படிக்கவில்லையெனில் பிறகு பதீதத்திலும் பதீததமாகவே இருந்து விடுகின்றனர், தோல்வி அடைந்து ஓடிவிடுவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார் - ஆஹா இராவணனே! நீ எனது குழந்தைகளை விழுங்கி விடுகிறாய்! எவ்வளவு சக்திசாலியாக இருக்கிறாய்! குழந்தைகள் சைத்தானின் வழிப்படி நடக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஸ்ரீமத்படி நடப்பது கிடையாது. ஒவ்வொரு அடியிலும் நான் பாபாவின் வழிப்படி நடப்பேன் என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். யார் ஸ்ரீமத்படி நடக்கவில்லையோ அவர்களை அசுர வழிப்படி நடப்பவர்கள் என்று தான் கூறலாம். இவர் அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைய முடியாது என்பதை பாபா புரிந்து கொள்கிறார். யாருக்கும் புரிய வைக்க முடியாது எனில் இராவணனின் வசத்தில் இருக்கிறார் என்று தான் கூறலாம். புத்தி தூய்மையாகுமளவிற்கு யோகா கிடையாது. புத்தியின் யோகா இருக்க வேண்டும். ஈஸ்வரிய குழந்தைகளின் நடத்தைகள் மிக ராயலாக (அரசனுக்குரியதாக) இருக்க வேண்டும். பிறப்பு எடுத்ததுமே புத்திசாலியான இராஜாவாக யாரும் ஆகிவிட முடியாது. இதன் காரணத்தினால் தான் பாபா கூறுகின்றார் - 5 விகாரங்கள் என்ற இராவணன் மீது ஸ்ரீமத் மூலம் வெற்றி அடைய வேண்டும். யார் ஸ்ரீமத்படி நடக்கவில்லையோ அவர்கள் அசுர வழிப்படி இருக்கின்றனர் என்பதை பாபா புரிந்து கொள்வார். பிறகு சிலர் 5 சதவிகிதம் ஸ்ரீமத்படி நடக்கின்றனர், சிலர் 10 சதவிகிதம் நடக்கின்றனர். அதுவும் கணக்கு இருக்கிறது.

ஆக ஜெகதம்பா ஒரே ஒருவர் தான். ஜெகதம்பா பிரம்மாவின் வாய் வழி வம்சத்தைச் சார்ந்தவர், மகள் சரஸ்வதி ஆவார். இது அவரது முழுப்பெயர் ஆகும். சரஸ்வதியிடம் தான் வீணை கொடுத்திருக்கின்றனர். இவர் கல்விக் கடவுள் ஆவார். அவசியமாக அவரது குழந்தைகளும் இருப்பர். அவர்களிடத்திலும் தம்பூரா இருக்க வேண்டும். மரத்தில் (கல்ப மரம்) சரஸ்வதி அமர்ந்திருப்பதைப் பாருங்கள், இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறார், பிறகு அவர் செல்வத்தின் கடவுள் லெட்சுமியாக ஆகின்றார். இதில் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி அனைத்தும் வந்து விடுகிறது. இதை பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. சொர்க்கத்தைப் படைக்கும் இறை தந்தை அவர் ஆவார். மம்மா சேவை செய்து கொண்டிருக்கிறார். மம்மாவை எங்காவது அழைக்கின்றனர் எனில் முதலில் மம்மாவின் தொழிலை அறிந்திருக்க வேண்டும். இவர் யார்? என்ற ஞானம் முதலில் தேவை. உலகத்தினர் அறியவில்லை. கிருஷ்ணர் திட்டு வாங்கினார் என்று கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு இருக்கவே முடியாது. அனைவரையும் விட அதிக திட்டு வாங்குபவர் சிவபாபா ஆவார். இரண்டாம் எண்ணில் திட்டு வாங்குபவர் பிரம்மா. கிருஷ்ணர் மற்றும் பிரம்மா. ஆனால் கிருஷ்ணரைத் திட்ட முடியாது. சரஸ்வதி கல்விக் கடவுளாக இருக்கிறார், எதிர்காலத்தில் இராதையாக ஆகின்றார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. சுயம்வரத்திற்குப் பிறகு லெட்சுமியாக, செல்வத்தின் கடவுளாக ஆகின்றார். அதில் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி அனைத்தும் வந்து விடுகிறது. புரிய வைப்பதற்கு உங்களுக்குள் மிகுந்த போதை இருக்க வேண்டும். மம்மா யார்? என்பதை புரிய வைக்க வேண்டும் அல்லவா! இவர் சரஸ்வதி, பிரம்மாவின் மகள், வாய் வழி வந்த வம்சம் ஆகும். பாரதவாசிகள் எதையும் அறியவில்லை. ஞானமே கிடையாது. அதிக குருட்டு நம்பிக்கை இருக்கிறது. பாரதவாசிகள் மிகுந்த குருட்டு நம்பிக்கையில் இருக்கின்றனர். யாரை பூஜை செய்கிறோம்? என்பதையும் அறியவில்லை. கிறிஸ்தவர்கள் தங்களது கிறிஸ்துவை அறிந்திருக்கின்றனர். குருநானக் சீக்கிய தர்மத்தை ஸ்தாபனை செய்திருக்கிறார் என்பதை சீக்கியர் அறிவர். தங்களது தர்ம ஸ்தாபகர்களை அறிந்திருக்கின்றனர். பாரதவாசிகளாகிய இந்துக்கள் மட்டும் தான் அறியாமல் இருக்கின்றனர். குருட்டு நம்பிக்கையுடன் பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். தொழில் பற்றிய எதையும் அறியவில்லை. கல்பத்தின் ஆயுள் அதிகப்படுத்தி எழுதிய காரணத்தினால் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்றவர்கள் பின் நாட்களில் வருகின்றனர். அவர்களுக்கு முன் இந்த தேவதைகள் இருந்திருப்பர். அவர்களும் இவ்வளவு காலம் இருந்திருப்பர். மற்ற அனைத்து தர்மத்தினர்களுக்கும் அரைக் கல்பம் ஏற்படுகிறது எனில் இந்த ஒரே ஒரு தர்மத்திற்கும் அரைக் கல்பம் கொடுக்க வேண்டும். இலட்சம் ஆண்டுகள் என்று கூற முடியாது. நீங்கள் ஜெகதம்பாவின் கோயிலுக்குச் சென்று புரிய வைக்க வேண்டும் - கல்விக் கடவுளாகிய இவருக்கு கல்வி கொடுத்தது யார்? கிருஷ்ணர் ஜெகதம்பாவிற்கு கல்வி கொடுத்தார் என்று கூறமாட்டார்கள். ஆனால் யாருக்கு நன்றாக பயிற்சி இருக்கிறதோ அவர்கள் தான் இதைப் புரிய வைக்க முடியும். சிலருக்கு தேக அபிமானம் அதிகம் இருக்கிறது. உற்றார் உறவினர்களின் யார் நினைவாவது வந்து கொண்டே இருக்கிறது. மற்றவர்களை நினைவு செய்தால் என்னை மறந்து விடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். மற்ற தொடர்புகளைத் துண்டித்து ஒருவரிடம் தொடர்பு ஏற்படுத்துவோம் என்று நீங்கள் பாடுகிறீர்கள். அவர் இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கிறார். பாபா, நாங்கள் உங்களுடையவர்களாக இருக்கிறோம், உங்களது வழிப்படி நடப்போம். பெயர் கெட்டுப்போகும் படியாக எந்த காரியமும் செய்யமாட்டோம். பல குழந்தைகள் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றனர். அதன் மூலம் பெயர் கெட்டு விடுகிறது. மற்றவர்கள் புரிந்து கொள்ளாத வரை திட்டிக் கொண்டு தான் இருப்பர். பெயரும் பிரபலமாகி இருக்கிறது. ஆஹா, பிரபுவே! உங்களது லீலை என்று பாடியிருக்கிறீர்கள். ஆனால் குழந்தைகள் தான் புரிந்து கொள்ள முடியும், வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! நான் எந்த பலனும் எதிர்பாராமல் சேவை செய்கிறேன். அபகாரம் செய்பவர்களுக்கும் உபகாரம் செய்கிறேன். பாரதத்தைத் தான் தங்கக் குருவியாக ஆக்குகிறேன். நம்பர் ஒன் உபகாரம் செய்பவனாக இருக்கிறேன். ஆனால் மனிதர்கள் என்னை சர்வவியாபி என்று கூறி அதிகம் வசை பாடி விட்டனர். குழந்தைகளாகிய உங்களுக்கு நான் ஞானம் கொடுக்கிறேன். ஆக இந்த ஞான யக்ஞத்தில் அசுர வம்சத்தின் பல விக்னங்கள் அவசியம் ஏற்படுகின்றன. எந்த குழந்தைகள் நன்றாகப் புரிந்து கொள்ளவில்லையோ அவர்களது காரணத்தினால் தான் குப்பைகள் ஏற்படுகின்றன என்பதை தந்தை புரிய வைக்கின்றார். நிந்தனை ஏற்படுத்துகின்றனர். சில குழந்தைகள் நன்றாக சேவை செய்கின்றனர், சிலர் தீங்கிழைக்கின்றனர். ஒருபுறம் சிலர் ஆக்கபூர்வமான (construction) காரியம் செய்கின்றனர், சிலர் கேடு விளைவிக்கும் (Destruction) காரியம் செய்கின்றனர். ஏனெனில் ஞானம் கிடையாது. இங்கு சூரியவம்சம், சந்திரவம்ச இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. யார் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையோ அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கருணை ஏற்படுகிறது அல்லவா! தந்தையினுடையவராக ஆகி ஆஸ்தி அடையவில்லையெனில் அவர் இருந்து என்ன பயன்? தந்தை கிடைத்திருக்கிறார் எனில் முழு முயற்சி செய்து ஆஸ்தி அடைய வேண்டும், ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தந்தையின் பெயர் கெட்டுப் போகும் படியான காரியம் எதுவும் செய்யக் கூடாது. காமம், கோபம் மிகப் பெரிய எதிரி என்பதை தந்தை அறிவார். இவைகள் மூக்கு, காதை பிடித்துத் திருகிக் கொண்டே இருக்கிறது. திசை திருப்பி தவறு இழைக்க வைக்கிறது. இவ்வாறு ஏற்படும். இவைகளைக் கடந்து செல்ல வேண்டும். சிலர் பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்கின்றனர். அனைத்துக் குழந்தைகளும் ஒன்று போல் கிடையாது. இருப்பினும் தந்தை எச்சரிக்கை செய்கின்றார் கவனமாக இருங்கள். இவ்வாறு தீய காரியங்கள் செய்து நிந்தனை செய்வித்தால் பதவி கீழானதாகி விடும். பலசாலியிடம் மாயை பலசாலியாகி சண்டையிடும். தந்தையை நினைவு செய்து செய்து மாயையின் புயல் எங்கேயோ கொண்டு சென்று விடுகிறது. குழந்தைகள் உண்மை கூறுவது கிடையாது. வழியும் கேட்பது கிடையாது. அழிவற்ற டாக்டரிடம் (surgeon) எதையும் மறைக்கக் கூடாது. ஒருவேளை கூறவில்லையெனில் மேலும் அழுக்காக ஆகிவிடுவீர்கள். பாபா அனைத்தும் அறிந்தவர், அனைத்தும் புரிந்திருப்பார் என்று நினைக்காதீர்கள். நீங்கள் என்ன அவமரியாதை செய்தாலும் வந்து கூறுங்கள் - சிவபாபா, என் மூலம் இந்த தவறு ஏற்பட்டு விட்டது, மன்னித்து விடுங்கள். மன்னிப்பு கேட்கவில்லையெனில் தவறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதாவது தன் மீது பாவச் சுமையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். கல்ப கல்பத்திற்கும் தனது பதவியைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். இப்பொழுது உயர்ந்த பதவி உருவாக்கவில்லையெனில் கல்ப கல்பத்திற்கும் இந்த நிலையே ஏற்படும். இது ஞானமாகும். முந்தைய கல்பத்தைப் போன்று இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை பாபா அறிவார். பாப்தாதா அதிகம் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் இவர் மிக அன்பான குழந்தை ஆவார். தாய்மார்களின் மகிமையை அதிகப்படுத்த வேண்டும். தாய்மார்களை முன் வைக்க வேண்டும். அவர்களை முன்னால் அழைத்துச் செல்லுங்கள் என்று கோபியர்கள் புரிய வைக்கப்படுகின்றனர். கோபியர்களும் அதிக சேவை செய்ய முடியும். சித்திரங்களை எடுத்துச் சென்று புரிய வையுங்கள் - உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான். பிறகு திரிமூர்த்தி - பிரம்மா, விஷ்ணு, சங்கர். அவர்களிலும் உயர்ந்தவர் யார்? அனைவரும் பிரஜாபிதா என்று கூறுவர், அவர் மூலமாகத் தான் ஆஸ்தி கிடைக்கிறது. சங்கர் மற்றும் விஷ்ணுவை பிதா என்று கூறுவது கிடையாது. அவர்களிடமிருந்து எந்த ஆஸ்தியும் கிடைப்பது கிடையாது. இவர் தான் பிரஜாபிதா பிரம்மா என்று கூறப்படுகின்றார். அவரிடமிருந்து என்ன ஆஸ்தி கிடைக்கிறது? பிரம்மா சிவபாபாவின் குழந்தை ஆவார். சிவபாபா ஞானக்கடலில் ஆவார், சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர். ஆக அவசியமாக அவரிடமிருந்து சொர்க்கத்திற்கான போதனைகள் கிடைக்கும். இது இராஜயோகத்திற்கான வழியாகும். பிரம்மாவின் மூலம் தந்தை ஸ்ரீமத் கொடுக்கிறார். இது தேவதை ஆவதற்காக. பிரம்மா குமாரியிலிருந்து ஸ்ரீ லெட்சுமி, செல்வத்தின் கடவுள் ஆகிறார். இவர் பிரம்மா, அவர் தேவி தேவதா. நிராகார உலகில் அனைத்து ஆத்மாக்களும் இருக்கின்றனர். குழந்தைகளுக்கு அதிகம் புரிய வைக்கின்றார், ஆனால் புரிந்து கொள்பவர்கள் தான் புரிந்து கொள்கின்றனர். மனிதர்கள் குருட்டு நம்பிக்கையினால் சந்நியாசி, குருக்களின் சிஷ்யர்களாக ஆகின்றனர். அவர்களிடமிருந்து என்ன கிடைக்கும்? என்பதையும் அறியவில்லை. பதவி அடைவர் என்பதை ஆசிரியர் அறிந்திருப்பார். மற்றபடி யாருடைய சிஷ்யர்களாக ஆகின்றார்களோ அவர்களிடமிருந்து என்ன பிராப்தி கிடைக்கும்? என்பதை அறியவில்லை. இது தான் குருட்டு நம்பிக்கையாகும். பின்பற்றுபவர்களாக யாரும் கிடையாது. அவர்கள் யாரையும் அது போல ஆக்குவதும் கிடையாது, நீங்கள் அவர்களைப் போன்று ஆவதும் கிடையாது. இலட்சியம் என்ன? என்பதை யாரும் அறியவில்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 தாரணைக்கான முக்கிய சாரம்:

1) கெட்ட சகவாசத்திலிருந்து சதா பாதுகாப்பாக இருக்க வேண்டும். உண்மையான படிப்பு படித்து உண்மையான வருமானத்தின் சேமிப்பு சேமிக்க வேண்டும்.

 

2) ஒவ்வொரு அடியிலும் பாபாவின் ஸ்ரீமத்படி நடப்பேன் என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வரதானம்:

எனக்கு ஒருவர் மட்டுமே (ஏக்விரதா) என்ற இரகசியத்தை அறிந்து வரமளிக்கும் வள்ளலை மகிழ்விக்கக் கூடிய அனைத்து பலன்களின் சொரூபமானவர் ஆகுக!

 

வரமளிக்கும் வள்ளலாகிய தந்தையிடம் அளவற்ற வரதானங்கள் இருக்கின்றன, யார் எவ்வளவு எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ களஞ்சியம் திறந்தே இருக்கிறது. இப்படிப்பட்ட திறந்த களஞ்சியத்தின் மூலம் சில குழந்தைகள் முழுமையாக நிறைத்துக் கொள்கின்றனர், சிலர் முடிந்த அளவிற்கு நிறைத்துக் கொள்கின்றனர். அனைவரின் புத்தி பையை நிறைத்துக் கொடுப்பதில் கள்ளங்கபடமற்றவர் வரதாதா ரூபத்தில் இருக்கின்றார், அவரை மகிழ்விக்கும் விதியை அறிந்து கொண்டால் போதும் அனைத்து பலன்களும் பிராப்தியாக கிடைத்து விடும். வரதாதாவிற்கு ஒரே ஒரு வார்த்தை மட்டுமே பிரியமானதாக இருக்கிறது - ஏக்விரதா. எண்ணம், கனவிலும் வேறு ஒருவர் இருக்கக் கூடாது. எனக்கு ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை என்று இயல்பான மனநிலையில் இருக்க வேண்டும். இந்த இரகசியத்தை அறிந்து கொண்டவர்களின் புத்தி பை வரதானங்களினால் நிறைந்திருக்கும்.

சுலோகன்:

மன சேவை மற்றும் வார்த்தைகளின் சேவை இரண்டையும் ஒன்றாகச் செய்தால் இரண்டு மடங்கு பலன் பிராப்தியாக கிடைத்துக் கொண்டே இருக்கும்.

ஓம்சாந்தி