08.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! தூய்மையாவதற்கு நினைவு யாத்திரை மிகவும் அவசியம். இது தான் முக்கியமான பாடமும் ஆகும். இந்த யோக பலத்தால் நீங்கள் சேவை செய்பவராகவும் நல்ல குணங்கள் நிறைந்தவராகவும் ஆக முடியும்.

 

கேள்வி :

குழந்தைகளாகிய நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய யோகம் அதிசயமான யோகம். எப்படி?

 

பதில் :

இது வரை கற்று வந்த யோகம் அல்லது கற்பித்தவை அனைத்தும் மனிதர்கள் மனிதர்களுடனான தொடர்பாகும். ஆனால் இப்போது நாம் நிராகாரருடன் நினைவினால் தொடர்பு வைக்கிறோம். நிராகார ஆத்மா நிராகார் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இது அனைத்தையும் விட அதிசயமான விஷயமாகும். உலகத்தில் பகவானை நினைவு செய்கிறார்கள் என்றாலும் கூட அறிமுகம் இல்லாமல் நினைவு செய்கிறார்கள். அவரது தொழிலை அறியாமல் நினைவு செய்வது என்பது பக்தியாகும். ஞானி குழந்தைகள் அறிமுகத்துடன் நினைவும் செய்கிறார்கள்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். குழந்தைகளுக்கு முதன் முதலில் பாபாவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. சிறிய குழந்தை பிறந்ததும் முதன் முதலில் தாய் தந்தையின் அறிமுகம் கிடைக்கின்றது. உங்களில் கூட வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப படைப்பவராகிய தந்தையின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை தான் அவருடைய மகிமையைக் கூற வேண்டும் என்பதை குழந்தைகள் அறிகிறீர்கள். சிவாய நமஹ, பிரம்மா நமஹ, விஷ்ணு நமஹ என மகிமை பாடுகிறார்கள். இது அழகில்லை. சிவாய நமஹ என்பது அழகாக இருக்கின்றது. பிரம்ம தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ என்பது அழகாக இருக்கிறது. அவர்களுக்கு தேவதை என்று கூற வேண்டியிருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். முதன் முதலில் யார் வந்தாலும் பாபாவின் மகிமையை தெரிவிக்க வேண்டும். அவர் சுப்ரீம் தந்தை ஆவார். பாபாவின் மகிமையை எப்படிக் கூறுவது என்பதை குழந்தைகள் மறந்து போகிறார்கள். முதலில் அவர் சுப்ரீம் தந்தை, டீச்சர், சத்குரு என்பதைப் புரிய வைக்க வேண்டும். மூவரையும் நினைக்க வேண்டும். நீங்கள் மூன்று ரூபத்திலும் சிவபாபாவை நினைக்க வேண்டும். இதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் பாபாவின் மகிமையை அறிந்திருக் கிறீர்கள். எனவே தான் மகிமை செய்கிறீர்கள். அவர்களோ உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை கல்லிலும், முள்ளிலும் இருக்கின்றார் என்று கூறுகிறார்கள். மனிதருக்குள் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் எப்போதும் மனித உடலில் இருக்க முடியாது. அவர் மனித உடலை கடனாகப் பெறுகிறார். நான் இந்த உடலின் ஆதாரத்தில் வருகின்றேன் என அவரே கூறுகின்றார். பாபா சத்தியமானவர் என்பதை முதலில் கூற வேண்டும். அவரே சத்திய நாராயணனின் கதையைக் கூறுகின்றார். நரனிலிருந்து நாராயணனாக சத்திய தந்தை தான் மாற்றுகின்றார். சத்தியுகத்தில் இந்த லட்சுமி நாராயணனின் இராஜ்யம் தான் இருந்தது. அவர்கள் எப்படி மாறினார்கள்? யார் மாற்றியது? எப்பொழுது கதையைக் கூறினார்? எப்போது இராஜயோகம் கற்பிக்கப்பட்டது? இது அனைத்தையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மற்ற யோகம் அனைத்தும் மனிதர்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வதாகும். எந்த மனிதரும் நிராகாரரின் அறிமுகத்தைத் தெரிந்து கொண்டு தொடர்பு கொள்ளவில்லை. தற்காலத்தில் சிவனுடன் தொடர்பு கொள்கிறார்கள், பூஜை செய்கிறார்கள். ஆனால் அவரை அறிய வில்லை. பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாக சாகார உலகத்தில் தான் இருப்பார் என்பது தெரியவில்லை. பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாக சத்யுகத்தில் இருப்பார் என நினைக்கிறார்கள். சத்யுகத்தில் பிரஜாபிதா பிரம்மா இருப்பார் என்றால் சூட்சும வதனத்தில் ஏன் காண்பிக்க வேண்டும்? அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இவர் சாகாரத்தில் கர்ம பந்தனத்தில் இருக்கிறார். அவர் சூட்சும வதனத்தில் இருக்கிறார். கர்ம பந்தனங்களுக்கு அப்பாற்பட்டவர் இந்த ஞானம் வேறு யாருக்கும் இல்லை. ஞானம் கொடுப்பவர் ஒரே ஒரு தந்தை தான். அவர் வந்து ஞானம் கொடுக்கும் போது தான் நீங்கள் பிறருக்குச் சொல்ல முடியும். பாபாவின் அறிமுகத்தை யாருக்கு வேண்டு மானாலும் சொல்வது எளிது. தந்தையைப் பற்றி தான் புரிய வைக்க வேண்டும். இவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் எல்லையற்ற தந்தையாவார். யாருக்கும் அறிமுகம் கொடுப்பதில் எந்த கஷ்டமும் இல்லை. மிகவும் எளிதாகும். ஆனால் நிச்சயம் இல்லை, பயிற்சி இல்லை என்றால் யாருக்கும் புரிய வைக்க முடியாது. யாருக்கும் ஞானம் கொடுக்கவில்லை என்றால் அஞ்ஞானி போன்று ஆகும். ஞானம் இல்லை என்றால் பக்தி அல்லவா. தேக அபிமானம் இருக்கின்றது. ஆத்ம அபிமானியாக இருப்பவருக்குத் தான் ஞானம் இருக்கும். நாம் ஆத்மா, நம்முடைய தந்தை பரம்பிதா பரமாத்மா. அவரே வந்து அப்பா, டீச்சர், சத்குருவாக இருக்கிறார். பிரஜாபிதா பிரம்மா கூட இருக்கிறார் அல்லவா. பாபா பிரஜாபிதா பிரம்மாவின் வேலையை தெரிவித்திருக்கிறார் அல்லவா? மேலும் தன்னுடைய வேலையையும் தெரிவித்திருக்கிறார். மனிதர்கள் சிவன் மற்றும் சங்கரரை சேர்த்து ஒன்றாக்கி விட்டனர். சங்கர் கண்னைத் திறந்ததும் வினாசம் ஆகிவிட்டது என கூறுகிறார்கள். இப்பொழுது வெடி குண்டுகளாலும் இயற்கை சீற்றங்களாலும் தான் அழிவு நடக்கின்றது. சிவசங்கர் மகாதேவ் என கூறுகிறார்கள். இந்த படம் உண்மையானது அல்ல. இது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சித்திரம் ஆகும். அங்கே யாரும் இவ்வாறு இல்லை. பிரஜாபிதா பிரம்மா கூட தேகம் உடையவர் ஆவார். எவ்வளவு நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த சித்திரங்கள் அனைத்தும் பூஜைக்காகத்தான் இருக்கிறது. இது (வியக்தம்) சரீரம் இருக்கிறது. அது (அவ்யக்த) சூட்சும சரீரம் என பாபா புரிய வைக்கிறார். (அவ்யக்தம்) சூட்சும சரீரம் ஆகும் போது (பரிஷ்தா) ஒளி உருவம் ஆகி விடுகிறார்கள். மூலவதனம், சூட்சும வதனம் இரண்டும் இருக்கிறது. சூட்சும வதனத்தில் செல்கிறார்கள். மனிதராக உள்ள பிரஜாபிரதா பிரம்மா தான் (பரிஷ்தா) சூட்சுமவதனவாசி ஆகிறார் என பாபா புரிய வைத்திருக்கிறார். பிறகு அதில் இராஜ்யமும் காட்டப்பட்டு இருக்கிறது. பிறகு இவரே இராஜ்யம் செய்கிறார். சூட்சும வதனத்தின் சித்திரம் இல்லை என்றால் புரிய வைப்பது கடினம். உண்மையில் விஷ்ணுவிற்கு நான்கு புஜங்கள் இல்லை. இது பக்தி மார்க்கத்தின் சித்திரம் ஆகும். ஆத்மாக்களைத் தான் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக்க வேண்டும் என பாபா கூறுகின்றார். தூய்மையாகி தன்னுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். ஆத்மாக்கள் நிராகார (அசரீரி) உலகத்தில் வசிக்கிறது. உடலை உடையவர்கள் இங்கே இருக்கிறார்கள். மற்றபடி சூட்சும வதனத்தில் முக்கியமான கதைகள் எதுவும் இல்லை. சூட்சும வதனத்தின் ரகசியத்தை பாபா புரிய வைக்கின்றார். எனவே மூலவதனம், சூட்சும வதனம், பிறகு ஸ்தூல வதனம் ஆகும். முதலில் அனைவருக்கும் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் கூட பாபாவை பகவான், பிரபு என கூறுகிறார்கள். ஆனால் அறியவில்லை. சிவ பரமாத்மாய நமஹ என்று எப்போதும் கூறுகின்றார்கள். சிவதேவதா என்று கூறமாட்டார்கள். பிரம்மா தேவதா என கூறுவார்கள். அவரை சர்வ வியாபி என்று கூற முடியாது. தூய்மை இல்லாதவர்களை தூய்மையானவர்களாக்கும் கடமையைச் செய்ய வேண்டும் என்றால் கல்லிலும் முள்ளிலுமா சென்று செய்வார். இதற்குத் தான் கருமையான காரிருள் என்று பொருள். இதுவும் நாடகத்தில் நிச்சயக்கப்பட்டு இருக்கின்றது.

 

யதா யதாஹி...... என்பது யாருடைய தவறு என்று பாபா வந்து புரிய வைக்கிறார். அவர்களோ சுலோகத்தைக் கூறி பிறகு பொருளைப் புரிய வைக்கிறார்கள். இதை குழந்தைகளாகிய நீங்கள் அங்கே சென்று பார்க்க வேண்டும். நாங்கள் இதனுடைய பொருளைப் புரிய வைக்கின்றோம் என்பதைக் கூற வேண்டும். பிறகு உடனே புரிய வைக்க வேண்டும். இவர்கள் பி.கே என யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆடை வெண்மையாக இருக்கலாம். ஆனால் அதில் (யாரென) அச்சடிக்கப்படவில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று கேட்கலாம். இதனுடைய பொருளைக் கூறுங்கள் என்று கேட்கலாம். அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று பாருங்கள். மற்றபடி இத்தனை சித்திரங்கள் அனைத்தும் விளக்கமாகப் புரிய வைப்பதற்காக உள்ளவை. அளவற்ற ஞானம் ஆகும். கடலை மையாக மாற்றினாலும்....... முடிவில்லை. பிறகு ஒரு நொடியின் விஷயம் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அவர் எல்லையற்ற தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள் சதோதரர்கள். எனவே நமக்கு நிச்சயமாக சொர்க்கத்தின் இராஜ்யம் வேண்டும். ஆனால் அனைவருக்கும் கிடைக்காது பாபா பாரதத்தில் தான் வருகின்றார். பாரத வாசிகள் தான் சொர்க்கவாசிகளாக மாறுகின்றார்கள். மற்றவர்கள் பிற்காலத்தில் வருகின்றார்கள். இது மிகவும் எளிதாகும். ஆனால் புரிந்து கொள்ளவில்லை. பாபாவிற்கு அதிசயமாக இருக்கின்றது. ஒரு நாள் விலைமாதர்கள் (வேசிகள்) கூட வந்து புரிந்து கொள்வார்கள். கடைசியில் வரக்கூடியவர்கள் புத்தி கூர்மையானவர்களாகிவிடுவார்கள்.. அவர்கள் வசிப்பிடத்திற்குக் கூட யாராவது சென்று சேவை செய்யலாம். நிறைய பேருக்கு வெட்கமாக இருக்கிறது, தேகபிமானம் நிறைய இருக்கிறது. வேசிகளுக்குக் கூட சென்று புரிய வையுங்கள் என்று பாபா கூறுகின்றார். பாரதத்தின் பெயரை அவர்கள் தான் கீழே விழ வைத்தார்கள். முக்கியமாக யோக பலம் வேண்டும். முற்றிலும் தூய்மையின்றி இருக்கிறார்கள். தூய்மை ஆவற்கு நினைவு யாத்திரை வேண்டும். இப்பொழுது அந்த நினைவு பலம் சற்று குறைவாக இருக்கின்றது. சிலருக்குள் ஞானம் இருக்கின்றது என்றால் நினைவு குறைவாக இருக்கின்றது. கடினமான பாடம் ஆகும். இதில் தேர்ச்சி அடையும் போது தான் வேசிகளையும் சீர்படுத்த முடியும், நல்ல நல்ல அனுபவம் நிறைந்த தாய்மார்கள் சென்று புரிய வைக்கலாம். குமாரிகளுக்கு அனுபவம் இல்லை. தாய்மார்கள் புரிய வைக்க முடியும். தூய்மையாக மாறினால் உலகத்திற்கு அதிபதியாக மாறலாம் என பாபா புரிய வைக்கின்றார். உலகமே சிவாலயம் ஆகிறது. சத்யுகத்திற்கு சிவாலயம் என்று பெயர். அங்கே அளவற்ற சுகம் இருக்கின்றது. தூய்மையாக இருப்பேன் என உறுதி செய்யுங்கள் என அவர்களுக்கும் புரிய வையுங்கள் என பாபா புரிய வைக்கின்றார். தூய்மை இல்லாதவர்களை துய்மையாக மாற்றக்கூடிய வாள் மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். இதில் இன்னும் தாமதமாகிறது. புரிய வைப்பதில் வரிசைக்கிரமம் இருக்கிறது. சென்டரில் வசிக்கிறார்கள். அனைவரும் ஒன்று போல இல்லை என பாபா புரிந்து கொள்கிறார். சேவைக்காக செல்பவர்களுக்குள்ளும் இரவு பகல் வித்தியாசம் இருக்கின்றது. எனவே யாருக்குப் புரிய வைத்தாலும் முதலில் பாபாவின் அறிமுகம் கொடுங்கள். தந்தையின் மகிமையைச் செய்யுங்கள். இத்தனை குணங்கள் பாபாவைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. இப்போது இது சங்கமயுகம் ஆகும். நீங்கள் புருஷோத்தமராக மாறிக் கொண்டு இருக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. இது ஆத்மாவின் சரீரம் என புரிய வைக்கப்படுகிறது. யார் எவ்வளவு புரிந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது முகத்தின் மூலமாகத் தெரிகின்றது. யாராவது (மூட்ஆப்) மன நிலையில் தடுமாற்றம் ஆகியிருந்தால் முழு முகமும் மாறிவிடுகின்றது. ஆத்மா என உணர்ந்து அமர்ந்தால் முகமும் நன்றாக இருக்கும். இதற்கும் பயிற்சி தேவைப்படுகின்றது. வீடு, இல்லறங்களில் இருப்பவர்கள் இவ்வளவு வேகமாகச் செய்ய முடியாது. ஏனென்றால் வேலை தொழில் போன்றவை இருக்கின்றது அல்லவா. போகும் போதும், வரும் போதும், உட்காரும் போதும், எழும் போதும் உறுதியாக இருந்து முழுமையாக பயிற்சி செய்வதால் பக்குவமாகவும். நினைவினால் தான் நீங்கள் தூய்மையாகிறீர்கள். ஆத்மா எவ்வளவு நினைவு யாத்திரையில் இருக்கிறதோ அவ்வளவு தூய்மையாக மாறுகின்றது. சத்யுகத்தில் நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள், மிகவும் குஷியும் இருந்தது.

 

இப்போது சங்கமயுகத்தில் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தை கிடைத்திருக்கின்றார். வேறு என்ன வேண்டும். பாபாவிற்கு அர்ப்பணம் ஆக வேண்டும். பணக்காரர்கள் வருவது கஷ்டம். ஏழைகளுக்குத் தான் கிடைக்கின்றது. நாடகம் அவ்வாறு உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து கொண்டேயிருப்பார்கள். கோடியில் ஒரு சிலர் தான் வெற்றி மாலையில் மணியாகிறார்கள். மற்றபடி வரிசைக்கிரமத்தில் தான் பிரஜைகள் உருவாகிறார்கள். எவ்வளவு பேர் உருவாகுவார்கள். பணக்காரர்கள், ஏழைகள் அனைவரும் இருப்பார்கள். இப்பொழுது முழு இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டு இருக்கின்றது. மற்ற அனைவரும் அவரவர் பிரிவில் சென்று விடுவார்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும் என பாபா புரிய வைக்கின்றார். இந்த ஆசைகள் இங்கே இருக்கின்றது. பாபா மிகப்பெரிய வானப்பிரஸ்திகளின் (முதியோர்) ஆசிரமங்களைப் பார்த்திருக்கின்றார். மிகவும் அமைதியாக வசிக்கிறார்கள். இங்கே எல்லையற்ற விஷயங்கள் அனைத்தும் பாபா புரிய வைக்கின்றார். வேசியைகள் உங்களிடம் வருவார்கள். உங்களை விட வேகமாக செல்வார்கள். மிகவும் நன்றாக பாடலைப் பாடுவார்கள். கேட்ட உடனேயே குஷியின் எல்லை அதிகரிக்கும். இவ்வாறு கீழே விழுந்தவர் களுக்கும் புரிய வைத்து உயர்வானவர்களாக மாற்றினால் உங்களின் பெயரும் உயர்ந்ததாகி விடும். இவர்கள் வேசியைகளைக் கூட இவ்வளவு உயர்ந்தவர்களாக மாற்றுகிறார்கள் என அனைவரும் கூறுவார்கள். நாங்கள் சூத்திரர்களாக இருந்தோம். இப்போது பிராமணர்களாக மாறிவிட்டோம். பிறகு நாம் தான் தேவதைகளாக, சத்திரியர்களாக மாறுவோம் என அவர்கள் கூறுவார்கள். இவர்கள் முன்னேறுவார்களா இல்லையா என பாபா ஒவ்வொரு வரையும் புரிந்து கொள்வார். பின்னால் வரக்கூடியவர்கள் அவர்களை விட முன்னேறிச் செல்வார்கள். இன்னும் போகப்போக நீங்கள் அனைத்தையும் பார்ப்பீர்கள். இப்பொழுதும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். புதிய குழந்தைகள் சேவையில் எவ்வளவு உற்சாகமாக பங்கேற்கிறார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. தூய்மை இல்லாதவர்களை தூய்மையானவர்களாக்கக்கூடிய சேவை செய்ய வேண்டும். விலை மாதர்களுக்கும் ஞானம் கொடுங்கள், கீழே விழுந்தவர்களையும் தூக்கி விடும் பொழுது பெயர் கிர்த்தி (புகழ் பெரும்).

 

2. தன்னுடைய பார்வையை தூய்மையாக மாற்ற, போகும் போதும், வரும் போதும் நான் ஆத்மா என பயிற்சி செய்யுங்கள். ஆத்மாவுடன் பேசுங்கள். பாபாவின் நினைவில் இருந்தால் தூய்மையாகி விடுவீர்கள்.

 

வரதானம்:

ஒரு நிமிடத்தின் ஒருமுக நிலை மூலமாக சக்திசாலி அனுபவம் செய்யும் மற்றும் செய்விக்கும் ஏகாந்தவாசி ஆவீர்களாக.

 

ஏகாந்தவாசி ஆவது என்றால் ஏதாவதொரு சக்திசாலி நிலையில் நிலைத்திருப்பது, விதை ரூப நிலைபாட்டில் நிலைத்து விடுவது அல்லது லைட் மைட் ஹவுஸ் நிலையில் நிலைந்திருந்து உலகத்திற்கு லைட் மைட் (ஒளி, சக்தி) கொடுங்கள் அல்லது ஃபரிஷ்தா தன்மையின் நிலை மூலமாக மற்றவர்களுக்கு அவ்யக்த நிலைபாட்டின் அனுபவம் செய்வியுங்கள். ஒரு விநாடி அல்லது ஒரு நிமிடம் கூட இந்த நிலையில் ஒருமுகப்பட்டு நிலைத்து விட்டீர்கள் என்றால் சுயம் தங்களுக்கும் மேலும் மற்ற ஆத்மாக்களுக்கும் நிறைய பலனை அளிக்க முடியும். இதனுடைய பயிற்சி மட்டும் வேண்டும்.

 

சுலோகன்:

யாருடைய ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு பேச்சிலும் தூய்மையின் அதிர்வலைகள் (வைப்ரேஷன்) நிறைந்துள்ளதோ அவர்களே பிரம்மாசாரி ஆவார்கள்.

  

பிரம்மா தந்தைக்கு சமானமாக ஆவதற்கான விசேஷ புருஷார்த்தம்

 பிரம்மா தந்தைக்கு சமானமாக ஃபரிஷ்தா நிலையை அனுபவம் செய்ய வேண்டும் என்றால் செயல் புரிகையிலும் இடையிடையே நிராகாரி (அசரீரி) மற்றும் ஃபரிஷ்தா சொரூபம் இந்த மனதின் (எக்ஸர்சைஸ்) பயிற்சி செய்யுங்கள். எப்படி பிரம்மா தந்தையை சாகார ரூபத்தில் (சரீரத்தில்) பார்த்தீர்கள் - எப்பொழுதும் டபிள் லைட் (லேசாகவும், ஒளியாகவும்) இருந்தார், சேவையினுடையதும் கூட சுமை இருக்கவில்லை. இது போல (ஃபாலோ ஃபாதர்) தந்தையை பின்பற்றுபவராக ஆகுங்கள், அப்பொழுது சுலபமாகவே தந்தைக்குச் சமானமாக ஆகி விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி