08.01.2021 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே!
பிராமணர்களாகிய நாம் தான் தேவதைகளாக ஆகின்றோம், பிராமணர்களாகிய
நமக்குத் தான் தந்தையின் சிரேஷ்ட வழி கிடைக்கிறது என்ற போதை
உங்களுக்கு இருக்க வேண்டும்.
கேள்வி:
யாருக்கு புது இரத்தம் ஒடிக்
கொண்டிருக்கிறதோ அவர்களிடத்தில் எந்த ஒரு ஆர்வம் மற்றும் போதை
இருக்க வேண்டும்?
பதில்:
இந்த உலகம் பழைய இரும்பு யுகமாக
மாறி விட்டது இதை யுகத்தை புதிய, தங்க யுகமாக மாற்றுவதற்கு,
பழையதை புதியதாக ஆக்கக் கூடிய ஆர்வம் இருக்க வேண்டும்.
கன்னிகைகளுக்கு புது இரத்தம் இருக்கிறது எனில் தன் போன்று
உள்ளவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும். சேவை போதையை நிலையாக
வைத்துக் கொள்ள வேண்டும். சொற்பொழிவு செய்வதில் மிகுந்த போதை
இருக்க வேண்டும்.
பாட்டு:
இரவு பயணியே ...
ஓம்சாந்தி.
குழந்தைகள் இந்த பாட்டின்
பொருளைப் புரிந்து கொண்டீர்கள். இப்பொழுது பக்தி மார்க்கத்தின்
காரிருள் முடிவடைந்து கொண்டிருக்கிறது. நாம் கிரீடம் அணியும்
நேரம் வந்து கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள்
புரிந்திருக்கிறீர்கள். இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்,
மனிதனிலிருந்து தேவதை ஆகக் கூடிய இலட்சியம் இருக்கிறது. நீங்கள்
உங்களை எருமை மாடு என்று நினைத்தால் எருமை மாடாகவே
ஆகிவிடுவீர்கள் என்று சந்நியாசிகள் கூறுவர். அது பக்தி
மார்க்கத்தின் உதாரணமாகும். இராமர் குரங்குப் படையை
பயன்படுத்தினார் என்ற உதாரணமும் இருக்கிறது. நீங்கள் இங்கு
அமர்ந்திருக்கிறீர்கள். நாம் தான் இரட்டை கிரீடமுள்ள தேவி
தேவதைகளாக ஆகிறோம் என்பதை அறிவீர்கள். பள்ளியில் படிக்கின்றனர்
எனில், நான் இந்த கல்வியைக் கற்று டாக்டராக ஆவேன், இன்ஜினியராக
ஆவேன் என்று கூறுவர். அதே போன்று நாமும் இந்த படிப்பின் மூலம்
தேவி தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். இந்த சரீரத்தை விட்டதும் நமது தலையில்
கிரீடம் வந்து விடும். இது மிகவும் அசுத்தமான, சீ சீ உலகம்
அல்லவா! புது உலகம் முதல் தரமான உலகமாகும். பழைய உலகம்
முற்றிலும் மூன்றாம் தர உலகமாகும். இது அழியப் போகிறது. புது
உலகிற்கு எஜமானராக ஆக்கக் கூடியவர் அவசியம் உலகை படைக்கக்
கூடியவராகத் தான் இருப்பார். வேறு யாரும் கல்வியைக் கற்பிக்க
முடியாது. சிவபாபா தான் உங்களுக்கு கற்பிக்கின்றார். முழுமையாக
ஆத்ம அபிமானியாக ஆகிவிட்டால் வேறு என்ன வேண்டும் என்று தந்தை
புரிய வைக்கின்றார். நீங்கள் பிராமணர்களாக ஆகிவிட்டீர்கள். நாம்
தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்கள். தேவதைகள்
எவ்வளவு தூய்மையாக இருந்தனர்! இங்கு மனிதர்கள் எவ்வளவு
தூய்மையின்றி இருக்கின்றனர்! உருவம் மனிதனாக இருந்தாலும்
குணங்கள் எப்படியெல்லாம் இருக்கிறது! தேவதைகளின் பூஜாரிகளாக
இருப்பவர்களும் தேவதைகளின் முன் சென்று நீங்கள் அனைத்து
குணங்களும் நிறைந்தவர்கள், 16 கலைகளிலும் முழுமையானவர்கள் ...
என்று மகிமை பாடுகின்றனர். நாங்கள் விகாரிகளாக, பாவிகளாக
இருக்கிறோம். அவர்களது உருவமும் மனிதன் போன்று தான் இருக்கிறது,
ஆனால் அவர்களிடம் சென்று மகிமை பாடுகின்றனர், தன்னை அசுத்த
விகாரிகள் என்றும் கூறிக் கொள்கின்றனர். எங்களிடம் எந்த
குணங்களும் கிடையாது. மனிதன் என்றால் மனிதன் தான். நாம்
இப்பொழுது மாறி தேவதையாக ஆவோம் என்பதை நீங்கள் புரிந்து
கொண்டீர்கள். கிருஷ்ணபுரிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்
தான் கிருஷ்ணரை பூஜிக்கின்றனர். ஆனால் எப்பொழுது செல்வோம்?
என்பது தெரியாது. பகவான் வந்து பக்தியின் பலனைக் கொடுப்பார்
என்று நினைத்து பக்தி செய்து கொண்டே இருக்கின்றனர். முத ல்
உங்களுக்குள் இந்த நம்பிக்கை இருக்க வேண்டும் - நமக்கு
கற்பிப்பது யார்? இது ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவின் வழியாகும். சிவபாபா
உங்களுக்கு ஸ்ரீமத் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். யாருக்கு
இது தெரிய வில்லையோ அவர்கள் எப்படி சிரேஷ்டமாக ஆக முடியும்?
இவ்வளவு பிராமணர்கள் ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவின் வழிப்படி நடந்து
கொண்டிருக்கின்றனர். பரமாத்மாவின் வழி தான் சிரேஷ்டமானவர்களாக
ஆக்குகிறது, யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களது
புத்தியில் தான் அமரும். இல்லையெனில் எதையும் புரிந்து
கொள்ளமாட்டார்கள். எப்பொழுது புரிந்து கொள்வார்களோ அப்பொழுது
குஷியடைந்து உதவி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சிலர்
அறியாமலேயே இருக்கின்றனர், இவர் யார்? என்பது அவர்களுக்கு என்ன
தெரியும்? அதனால் தான் பாபா யாரையும் சந்திப்பது கிடையாது.
அவர்கள் தனது வழியை உருவாக்கிக் கொள்வர். ஸ்ரீமத்தை அறியாத
காரணத்தினால் மற்றவர்களுக்கும் தனது வழியைக் கூற ஆரம்பித்து
விடுகின்றனர். குழந்தைகளாகிய உங்களை சிரேஷ்டமானவர்களாக
ஆக்குவதற்காக இப்பொழுது தந்தை வந்திருக்கின்றார். 5 ஆயிரம்
ஆண்டிற்கு முன்பு போல் பாபா உங்களை சந்திக்க வந்திருக்கிறார்
என்பதை குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். யார் அறியவில்லையோ
அவர்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது. குழந்தைகளுக்கு படிப்பின்
போதை அதிகமாக இருக்க வேண்டும். இது மிகவும் உயர்ந்த கல்வியாகும்.
ஆனால் மாயையும் அதிக எதிர்ப்பு காண்பிக்கிறது. நம் தலையின் மீது
இரட்டை கிரீடம் வரும் படியான கல்வியை நாம் கற்றுக்
கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எதிர்காலத்தில்
பல பிறவிகளுக்கு இரட்டை கிரீடதாரிளாக ஆவோம். ஆக அதற்கு
அப்படிப்பட்ட முயற்சி செய்ய வேண்டும் அல்லவா! இது தான்
இராஜயோகம் என்று கூறப்படுகிறது. எவ்வளவு ஆச்சியரியமானது!
லெட்சுமி நாராயனன் கோயிலுக்குச் செல்லுங்கள், பூஜாரிகளுக்கும்
நீங்கள் புரிய வைக்க முடியும் என்று பாபா சதா புரிய
வைக்கின்றார். பிறகு அவர்களும் மற்றவர்களுக்குப் புரிய வைப்பர்
- இந்த லெட்சுமி நாராயணன் எப்படி பதவி அடைந்தனர்? இவர்கள்
உலகிற்கு எஜமானர்களாக எப்படி ஆனார்கள்? இவ்வாறெல்லாம் அமர்ந்து
புரிய வைக்கின்ற பொழுது பூஜாரிகளுக்கும் புகழ் கிடைத்து விடும்.
இந்த லெட்சுமி நாராயணனுக்கு இராஜ்யம் எப்படி கிடைத்தது? என்பதை
நாம் உங்களுக்குப் புரிய வைக்கின்றோம் என்று நீங்கள் கூற
முடியும். கீதையிலும் பகவானின் மகாவாக்கியம் இருக்கிறது அல்லவா!
நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து இராஜாவிற்கெல்லாம்
இராஜாவாக ஆக்குகின்றேன். சொர்க்கவாசிகளாக நீங்கள் தான்
ஆகிறீர்கள் அல்லவா! ஆக நான் இவ்வாறு (லட்சுமி, நாராயணன் போல)
ஆகிறேன் என்ற போதை குழந்தைகளுக்கு எவ்வளவு இருக்க வேண்டும்!
தனது (நிகழ்கால) சித்திரம் மற்றும் இராஜ்யத்தின் சித்திரம் (போட்டோ)
இங்கு ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். கீழே உங்களது சித்திரம்,
மேலே இராஜ்யத்தின் (தேவதைகளின் உலகம்) சித்திரமும் இருக்க
வேண்டும். இதற்கு செலவு ஒன்றும் கிடையாது அல்லவா! இராஜ்ய
அலங்காரம் உடனேயே செய்து கொள்ள முடியும். ஆக நான் தான்
தேவதையாக ஆகின்றேன் என்ற நினைவு அடிக்கடி இருக்கும். மேலே
சிவபாபாவையும் வையுங்கள். இந்த சித்திரத்தையும் உருவாக்கிக்
கொள்ள வேண்டும். நீங்கள் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகிறீர்கள்.
இந்த சரீரத்தை விடுத்து நாம் தேவதைகளாக ஆவோம், ஏனெனில்
இப்பொழுது நாம் இந்த இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆக
இந்த போட்டோவும் உதவி செய்யும். மேலே சிவன் சித்திரம் பிறகு
இராஜ்ய சித்திரம். கீழே உங்களது சாதாரண சித்திரம்.
சிவபாபாவிடமிருந்து நாம் இராஜயோகம் கற்றுக் கொண்டு தேவதைகளாக,
இரட்டை கிரீடதாரி களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். போட்டோ
வைத்திருந்தால் அதைப் பார்த்து யாராவது கேட்கின்ற பொழுது நமக்கு
கற்பிக்கக் கூடியவர் சிவபாபா ஆவார் என்று நீங்கள் கூற முடியும்.
போட்டோவைப் பார்த்ததும் குழந்தைகளுக்கு போதை ஏறிவிடும்.
கடைகளிலும் இந்த போட்டோவை வைத்து விடுங்கள். பக்தி
மார்க்கத்தில் பாபா நாராயணனின் சித்திரம் வைத்திருந்தார்.
பாக்கெட்டிலும் வைத்திருந்தார். நீங்களும் தனது போட்டோவை
வைத்துக் கொண்டால் நான் தான் தேவி தேவதையாக ஆகிக்
கொண்டிருக்கிறேன் என்ற நினைவு இருக்கும். தந்தையை நினைவு
செய்யும் உபாயத்தைத் தேட வேண்டும். தந்தையை மறந்து விடும்
பொழுது கீழே விழுந்து விடுகிறீர்கள். விகாரத்தில் விழுந்து
விட்டால் பிறகு வெட்கம் வந்து விடும். இப்பொழுது என்னால் இந்த
தேவதையாக ஆக முடியாது. மாரடைப்பு ஏற்பட்டு விடும். இப்பொழுது
நான் தேவதையாக எப்படி ஆக முடியும்? விகாரத்தில் விழக்
கூடியவரின் போட்டோவையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாபா
கூறுகின்றார். நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு
தகுதியானவர் கிடையாது என்று கூறுங்கள். உங்களது பாஸ்போர்ட்
முடிவடைந்து விட்டது. நான் விழுந்து விட்டேன் என்று சுயம்
உணர்கின்றனர். அப்படியானால் நான் எப்படி சொர்க்கத்திற்குச்
செல்ல முடியும்? நாரதரின் உதாரணம் கொடுக்கப்படுகிறது அல்லவா!
நீ உனது முகத்தை பார்த்துக் கொள் என்று அவர் கூறப்படுகிறார்.
லெட்சுமியை திருமணம் செய்து கொள்ளும் தகுதி இருக்கிறதா? ஆக
முகம் குரங்கு போன்று தென்பட்டது. என்னிடமும் இந்த விகாரம்
இருக்கிறது, பிறகு நான் ஸ்ரீநாராயணன் அல்லது ஸ்ரீலெட்சுமியை
எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என்ற வெட்கம் ஏற்பட்டு
விடும். பாபா அனைத்து யுக்திகளைக் கூறுகின்றார். ஆனால்
நம்பிக்கை வைக்க வேண்டும் அல்லவா! விகாரத்தின் போதை
ஏற்படுகின்ற பொழுது நான் இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக, இரட்டை
கிரீடதாரியாக எப்படி ஆக முடியும்? என்று புரிந்து கொள்வீர்கள்.
முயற்சி செய்ய வேண்டும் அல்லவா! இந்த இந்த யுக்திகளை
உருவாக்குங்கள் மற்றும் அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டே
இருங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். இராஜயோகத்தின் மூலம்
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது (உலக அழிவு ) விநாசம்
எதிரில் இருக்கிறது. நாளுக்கு நாள் புயல்கள் மிக அதிகரித்துக்
கொண்டே செல்லும். அணுகுண்டுகளும் தயாரித்துக் கொண்டிருக்
கின்றனர். எதிர்காலத்தில் உயர்ந்த பதவி அடைவதற்காகவே நீங்கள்
இந்த கல்வியைக் கற்கிறீர்கள். நீங்கள் ஒரே ஒரு முறை தான்
பதீதத்திலிருந்து பாவனமாக ஆகிறீர்கள். நாம் நரகவாசிகளாக
இருக்கிறோம் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வது கிடையாது.
ஏனெனில் கல்புத்தியுடையவர்களாக இருக்கின்றனர். இப்பொழுது
நீங்கள் கல்புத்தியிலிருந்து தங்கப் புத்தியுடையவர்களாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். அதிர்ஷ்டத்தில் இருந்தால், உடனேயே
புரிந்து கொள்வர். இல்லையெனில் நீங்கள் எவ்வளவு தான் தலையை
உடைத்துக் கொண்டாலும் புத்தியில் அமராது. தந்தையையே
அறியவில்லையெனில், நாஸ்திகர்கள் ஆவர் அதாவது செல்வமற்றவர்கள்
ஆவர். ஆக செல்வந்தர்களாக ஆக வேண்டும் அல்லவா! அதுவும்
சிவபாபாவின் குழந்தைகளாக ஆகிவிட்டீர்கள். இங்கு யாரிடத்தில்
ஞானம் இருக்கிறதோ அவர்கள் தனது குழந்தைகளை விகாரத்திலிருந்து
காப்பாற்றுவர். அஞ்ஞானிகள் தங்களைப் போன்றே தங்களது
குழந்தைகளையும் சிக்க வைப்பர். இங்கு விகாரத்திலிருந்து
காப்பாற்றப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். முதலில்
கன்னிகைகளைக் காப்பாற்ற வேண்டும். தாய், தந்தையைப் போன்று
விகாரத்தில் தள்ளி விடுகின்றனர். இது கீழான உலகம் என்பதை
நீங்கள் அறிவீர்கள். சிரேஷ்ட உலகை விரும்புகின்றனர். பகவானின்
மகாவாக்கியம்- நான் சிரேஷ்டாச்சாரிகளாக (உயர்ந்த) ஆக்குவதற்கு
வருகின்ற பொழுது அனைவரும் கீழான நிலையில் இருக்கின்றனர்.
அனைவருக்கும் நான் நன்மை செய்கின்றேன். சாது, சந்நியாசி போன்ற
அனைவருக்கும் நன்மை செய்வதற்கு பகவான் வரவேண்டியிருக்கிறது
என்ற கீதையிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு பகவான் வந்து
அனைவருக்கும் நன்மை செய்கின்றார். மனிதர்கள் எவ்வளவு
கல்புத்தியுடையவர்களாக ஆகிவிட்டனர் என்பதை நினைக்கும் பொழுது
உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. கீதையின் பகவான்
சிவன் என்பது பெரிய பெரிய மனிதர்களுக்குத் தெரிந்து விட்டால்
என்ன நடக்கும் என்பதே தெரியாது, குழப்பம் ஏற்பட்டு விடும்.
ஆனால் இன்னும் நேரம் இருக்கிறது. இல்லையெனில் அனைவரின்
இருக்கையும் அசைய ஆரம்பித்து விடும். பலரது இருக்கை ஆடுகிறது
அல்லவா! யுத்தம் ஏற்படும் பொழுது இவரது இருக்கை ஆடுகிறது, கீழே
விழப் போகிறார் என்பது தெரிந்து விடும். இப்பொழுது இந்த விசயம்
தெரிந்து விட்டால் மிகுந்த குழப்பம் ஏற்பட்டு விடும். நாளடைவில்
ஏற்படும். பதீத பாவன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல்
சுயம் கூறுகின்றார் - பிரம்மாவின் உடல் மூலம் ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் சத்கதி என்றால் முன்னேற்றம்
செய்வித்துக் கொண்டிருக்கிறேன். பகவானின் மகாவாக்கியம் - இது
பதீத உலகமாகும், இவர்கள் அனைவரையும் நான் முன்னேற்ற வேண்டும்.
இப்பொழுது அனைவரும் பதீதமாக இருக்கின்றனர். பதீதமானவர்கள் (அசுத்தமானவர்)
மற்றவர்களை எப்படி பாவனம் (தூய்மை) ஆக்க முடியும்? முதலில்
சுயம் பாவனம் ஆக வேண்டும், பிறகு சிஷ்யர்களை ஆக்க வேண்டும்.
சொற்பொழிவு செய்வதில் மிகுந்த போதை தேவை. கன்னிகைகள் புது
இரத்தம் உடையோர். நீங்கள் பழையதை புதிதாக ஆக்கிக்
கொண்டிருக்கிறீர்கள். உங்களது ஆத்மா பழையதாக, இரும்பாக
ஆகிவிட்டது, இப்பொழுது புதியதாக, தங்கமாக ஆகிக் கொண்டிருக்கிறது.
கறைகள் நீங்கிக் கொண்டே செல்கிறது. ஆக குழந்தைகளுக்குள்
மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். போதை நிலைத்து இருக்க வேண்டும்.
தனது அக்கம் பக்கம் உள்ளவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும்.
குருமாதா (தாய் தான் குரு) என்றும் பாடப்படுகிறது. தாய்
எப்பொழுது குருவாக ஆகின்றார்? என்பதை இப்பொழுது நீங்கள் தான்
அறிவீர்கள். ஜெகதம்பா தான் பிறகு இராஜ இராஜேஸ்வரியாக ஆகின்றார்.
பிறகு அங்கு எந்த குருக்களும் இருக்கமாட்டார்கள். குருக்களின்
வரிசை இப்பொழுது தான் நடக்கிறது. தந்தை வந்து தாய்மார்களின்
மீது ஞான அமிர்த கலசத்தை வைக்கின்றார். ஆரம்பத்திலிருந்தே
இவ்வாறு நடக்கிறது. சென்டர்களிலும் பிரம்மா குமாரி தேவை என்று
கூறுகின்றனர். நீங்களாகவே நடத்துங்கள் என்று பாபா கூறுகின்றார்.
தைரியம் இல்லையா? பாபா டீச்சர் வேண்டும் என்று கூறுவது கிடையாது.
இதுவும் சரி தான், மரியாதை செலுத்துகின்றனர்.
இன்றைய நாட்களில் ஒருவருக்கொருவர் மரியாதையும் அரைகுறையாக
கொடுக்கின்றனர். இன்று பிரதம மந்திரியாக இருக்கிறார், நாளை
அவரை நீக்கி விடுகின்றனர். நிலையாக சுகம் யாருக்கும் கிடைப்பது
கிடையாது. இந்த நேரத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு நிலையான
இராஜ்ய பாக்கியம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உங்களை பாபா பல
வழிகளில் புரிய வைக்கின்றார். தன்னை சதா மகிழ்ச்சியாக வைத்துக்
கொள்ள மிகவும் நல்ல நல்ல யுக்திகளைக் கூறுகின்றார். சுப பாவனை
வைக்க வேண்டும் அல்லவா! ஆஹா, நான் இவ்வாறு லெட்சுமி நாராயணனாக
ஆகிறேன், அதிர்ஷ்டம் இல்லையெனில் அவர்கள் என்ன முயற்சி செய்ய
முடியும்? முயற்சியைப் பற்றி பாபா கூறுகின்றார் அல்லவா!
முயற்சி வீணாவது கிடையாது. அது எப்பொழுது வெற்றியுடையதாக
இருக்கும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிவிடும். மகாபாரத யுத்தத்தின்
மூலம் விநாசமும் ஏற்படும். நாளடைவில் நீங்கள் வேகம்
காண்பிக்கும் பொழுது இவை அனைத்தும் ஏற்பட்டு விடும். இப்பொழுது
புரிந்து கொள்ளமாட்டார்கள், பிறகு அவர்களது இராஜ்யம் (அரசு)
கவிழ்ந்து விடும். எத்தனை குருக்கள் உள்ளனர்! குருவைப்
பின்பற்றாத மனிதர்கள் யாருமே இல்லை. சத்கதி கொடுக்கும் சத்குரு
இங்கு உங்களுக்கு கிடைத்திருக்கின்றார். சித்திரங்கள் மிகவும்
நன்றாக இருக்கின்றன. இது சத்கதி அதாவது சுகதாமம், இது
முக்திதாமம். நாம் அனைத்து ஆத்மாக்களும் இங்கு
நிர்வாணதாமத்தில் இருக்கிறோம் என்று புத்தியும் கூறுகிறது.
அங்கிருந்து தான் சப்தத்திற்கு வருகின்றோம். அங்கு வசிக்கக்
கூடியவர்கள் நாம். இந்த விளையாட்டு பாரதத்தில் தான்
உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவஜெயந்தியும் இங்குதான்
கொண்டாடப்படுகிறது. நான் வந்திருக்கிறேன், கல்பத்திற்குப்
பிறகு மீண்டும் வருவேன் என்ற தந்தை கூறுகின்றார். ஒவ்வொரு 5
ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு தந்தை வந்ததும் சொர்க்கமாக
ஆகிவிடுகிறது. கிறிஸ்துவிற்கு இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு
சொர்க்கம் இருந்தது என்று கூறுகின்றனர். இப்பொழுது கிடையாது,
மீண்டும் உருவாகும். ஆக அவசியம் நரகவாசிகளுக்கு விநாசமும்,
சொர்க்கவாசிகளின் ஸ்தாபனையும் ஆக வேண்டும். நீங்கள்
சொர்க்கவாசிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நரகவாசிகள்
அனைவரும் அழிந்து விடுவர். இன்னும் லட்சம் ஆண்டுகள் இருப்பதாக
அவர்கள் நினைக்கின்றனர். குழந்தைகள் வளர்கின்றனர், திருமணம்
செய்ய வேண்டும்... நீங்கள் இவ்வாறு கூறமாட்டீர்கள். ஒருவேளை
குழந்தை ஸ்ரீமத் படி நடக்கவில்லை, சொர்க்கவாசி ஆக
விரும்பவில்லையெனில் என்ன செய்வது? என்று ஸ்ரீமத் பெற
வேண்டும். கட்டளைப்படி நடக்கவில்லையெனில், விட்டு விடுங்கள்
என்று தந்தை கூறுவார். இதற்கு முழு நஷ்டமோகா நிலை தேவை,
நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும்
நமஸ்தே.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவின் உயர்வான அறிவுரைப்படி நடந்து
தன்னை உயர்வானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் பகவானின் வழிமுறையில்
தன் மன வழிமுறையை கலக்கக்கூடாது ஈஸ்வரிய படிப்பின் போதையில்
இருக்க வேண்டும்.
2.தன் போன்றவர்களின் நன்மை செய்வதற்கான யுக்திகளை
உருவாக்கவேண்டும். அனைவர் மீதும் சுப பாவனை வைத்து
ஒருவருக்கொருவர் உண்மையான மரியாதை செலுத்த வேண்டும்.
மரியாதையில் குறை இருக்கக்கூடாது.
வரதானம்:
ஆன்மீக பயிற்சி மற்றும்
சுயகட்டுப்பாட்டின் மூலம் (ஆன்மீக) ஆழமான அனு பவம் செய்யக்
கூடிய பரிஸ்தா ஆகுக .
புத்தியின் நேர்த்தியை அல்லது
இலேசான நிலை பிராமண வாழ்க்கையின் அழகாகும். ஆழம் தான் மகான்
நிலையாகும். ஆனால் இதற்கு தினமும் அமிர்தவேளையில் அசரீரிக்கான
ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டும், மேலும் வீண் எண்ணங்கள் என்ற
உணவின் பத்தியம் இருக்க வேண்டும். பத்தியத்திற்கு சுய
கட்டுப்பாடு இருக்க வேண்டும். எந்த நேரத்தில் எந்த சங்கல்பம்
என்ற உணவு ஏற்கொள்ள வேண்டுமோ அந்த நேரத்தில் அதை மட்டுமே
ஏற்றுக் கொள்ளுங்கள். வீண் எண்ணங்கள் என்ற அதிகப்படியான உணவை
ஏற்றுக் கொள்ளாதீர்கள். அப்போது தான் நேர்த்தியான
புத்தியுடையவர்களாக ஆகி பரிஸ்தா சொரூபத்தில் இலட்சியத்தை
பிராப்தியாக அடைய முடியும்.
சுலோகன்:
ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு
அடியிலும் ஸ்ரீமத் படி சரியாக நடப்பவர்கள் தான் மகான்
ஆத்மாக்கள்.
ஓம்சாந்தி