08.01.23 காலை முரளி
ஓம் சாந்தி 23.04.93 பாப்தாதா,
மதுபன்
நிச்சய புத்தியுடையவர் ஆகுக, அமரர் ஆகுக
இன்று பாப்தாதா மிக அன்பான, யக்ஞ ஆரம்பத்திலிருந்து ஸ்தாபனைக்
காரியத்தில் உதவியாளர் களாக, பல ரூபத்தில் வந்த வித விதமான
பிரச்சனைகள் என்ற பேப்பரில் நிச்சயபுத்தி வெற்றி யாளர்களாக ஆகி
கடந்து சென்ற ஆதி அன்பான, சகயோகி, ஆடாத-அசையாத ஆத்மாக்களுடன்
சந்திப்பு செய்வதற்காக வந்திருக்கின்றார். நிச்சயபுத்தி என்ற
பாடத்தில் தேர்ச்சி பெற்ற குழந்தைகளிடம் வந்திருக்கின்றார்.
இந்த நிச்சயம் இந்த பழைய வாழ்க்கையிலும் சரி, அடுத்த
வாழ்க்கையிலும் சரி சதா வெற்றியின் அனுபவம் செய்விக்கிறது.
நிச்சயம், அமரர் ஆகுக என்ற வரதானம் சதா கூடவே இருக்கிறது. இன்று
விசேஷமாக நீண்ட கால அனுபவி வயோதிக ஆத்மாக்கள், அவர்களுடைய
நினைவு மற்றும் அன்பு என்ற பந்தனத்தில் கட்டுப்பட்டு தந்தை
வந்திருக்கின்றார். நிச்சயத்திற்கான வாழ்த்துக்கள். ஒருபுறம்
யக்ஞம் அதாவது பாண்டவ கோட்டைக்கான அஸ்திவார ஆத்மாக்களும்
எதிரில் இருக்கின்றனர், மற்றொரு புறம் அனுபவி ஆதி
ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த பாண்டவ கோட்டையின் முதல்
செங்கற்களாக இருக் கிறீர்கள். அஸ்திவாரமும் எதிரில் இருக்கிறது,
ஆதியின் முதல் செங்கல், உங்களது ஆதாரத்தில் இந்த கோட்டை
உறுதியானதாக ஆகி உலகிற்கு நிழற்குடையாக ஆகியிருக்கிறது,
நீங்களும் எதிரில் இருக் கிறீர்கள். ஆக குழந்களின் அன்பில்
தந்தை எஜமான், ஆஜராக இருக்கின்றார் என்பதை செய்து
காண்பித்திருக்கின்றார். இதே போன்று பாப்தாதா மற்றும் நிமித்த
ஆத்மாக் களின் ஸ்ரீமத் அல்லது கட்டளைகளை சதா சரி என்று கூறிக்
கொண்டே இருக்க வேண்டும். ஒருபோதும் மனவழி அல்லது பிறரது வழிகளை
கலப் படம் செய்யக் கூடாது. எஜமானை அறிந்து ஸ்ரீமத் படி பறந்து
கொண்டே செல்லுங்கள். நல்லது.
மதுபன் நிவாசிகளுக்கு சேவைக்கான வாழ்த்துக்கள் கொடுத்து
பாப்தாதா கூறினார்:-
நல்லது, விசேஷமாக மதுபன் நிவாசிகளுக்கு மிகுந்த வாழ்த்துக்கள்.
முழு சீசனிலும் தங்களது இனிமை மற்றும் களைப்பற்ற சேவையின் மூலம்
அனைவருக்கும் சேவை செய்வதற்கு நிமித்தம் ஆகிறீர்கள். எனவே
முதலில் முழு சீசனிலும் நிமித்த சேவாதாரி விசேஷ மதுபன்
நிவாசிகளுக்கு நல்வாழ்த்துக்கள். மதுவனம் என்றால் மது அதாவது
இனிமை. ஆக இனிமை அனைவரையும் தந்தையின் அன்பில் அழைத்து வருகிறது.
ஆகையால் ஹாலில் அமர்ந்திருந் தாலும் அல்லது சென்று விட்டாலும்
அனைவருக்கும் விசேஷமாக ஒவ்வொரு துறையினருக் கும் பாப்தாதா
சேவைக்கான வாழ்த்துக்கள் கொடுக் கின்றார், மேலும் சதா
களைப்பற்றவராக ஆகுக இனிமையானவர்களாக ஆகுக என்ற வரதானத்தின்
மூலம் முன்னேறிக் கொண்டும், பறந்து கொண்டும் இருங்கள்.
அவ்யக்த பாப்தாதாவின் தனிப்பட்ட சந்திப்பு
1) சோம்பல் பலவீனம் ஆக்குகிறது, ஆகையால் விழிப்புணர்வுடன்
இருங்கள்
அனைவரும் சங்கமயுகத்தின் சிரேஷ்ட ஆத்மாக்கள் அல்லவா! வேறு எந்த
யுகத்திலும் இல்லாத எந்த ஒரு விசேஷதா சங்கமயுகத்தில் இருக்கிறது?
சங்கம யுகத்தில் விசேஷதா ஒன்று உடனடிப்பலன் கிடைக்கிறது,
மற்றொன்று ஒன்றிற்கு பல மடங்கு பிராப்தியின் அனுபவம் இந்த
பிறவியில் தான் ஏற்படுகிறது. உடனடிப் பலன் கிடைக்கிறது அல்லவா!
ஒரு விநாடி தைரியம் வைத்தீர்கள் எனில் உதவியும் எவ்வளவு
காலத்திற்கு கிடைக்கிறது! ஒருவருக்கு சேவை செய்கிறீர்கள் எனில்
எவ்வளவு குஷி கிடைக்கிறது! ஆக ஒன்றிற்கு பல மடங்கு பிராப்தி
அதாவது உடனடிப் பலன் இந்த சங்கமத்தில் கிடைக்கிறது. எனவே
உடனடிப் பலன் என்ற பழம் சாப்பிடுவது நன்றாக இருக்கிறது அல்லவா!
நீங்கள் அனை வரும் உடனடிப் பலன் அதாவது புதிய பழங்களை சாப்பிடக்
கூடியவர்கள், ஆகையால் சக்திசாலியாக இருக்கிறீர் கள். பலவீனமாக
கிடையாது தானே! சதா சக்திசாலியாக இருக்கிறீர்கள். பலவீனத்தை வர
விடாதீர்கள். ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் எனில் பலவீனங்கள்
தானாகவே அழிந்து விடும். சர்வசக்திவான் தந்தையின் மூலம் சதா
சக்தி கிடைத்துக் கொண்டே இருக்கிறது, பிறகு எப்படி பலவீனம் ஆக
முடியும்? பலவீனம் வர முடியுமா? தவறுதலாக வந்து விடுகிறதா?
கும்பகர்ணனின் உறக்கத்தில் சோம்பலுடன் உறங்கும் போது வந்து
விடுகிறது, இல்லையெனில் வர முடியாது. நீங்கள் விழிப்புணர்வுடன்
இருக்கிறீர்கள் அல்லவா! சோம்பலுடன் இருக்கிறீர் களா என்ன?
அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கிறீர் களா? சதா
விழிப்புணர்வுடன் இருக்கிறீர் களா? சங்கமயுகத்தில் தந்தை
கிடைத்தார், அனைத்தும் கிடைத்து விட்டது. எனவே விழிப்புணர்
வுடன் இருப்பீர்கள் தானே! யாருக்கு அதிக பிராப்திகள் கிடைத்துக்
கொண்டிருக்கிறதோ, அவர்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன்
இருப்பார்கள்! வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் வருமானம்
ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் பொழுது சோம்பலுடன் இருப்பார்களா?
அல்லது விழிப்புணர்வுடன் இருப்பார்களா? உங்களுக்கு ஒரு
விநாடியில் எவ்வளவு கிடைக்கிறது! பிறகு எப்படி சோம்பலுடன்
இருப்பீர் கள்? தந்தை சர்வசக்திகளையும் கொடுத்து விட்டார்.
சர்வ சக்திகளும் கூடவே இருக்கும் போது சோம்பல் வரவே முடியாது.
சதா புத்திசாலிகளாக, சதா எச்சரிக்கையுடன் இருங்கள்.
யு.கே என்றால் ஓ.கே என்றே பாப்தாதா கூறுகின்றார்கள்.
விழிப்புணர்வுடன் இருக்கும் போது தான் ஓ.கே வாக இருக்க முடியும்
அல்லவா! அஸ்திவாரம் சக்திசாலியாக இருக்கிறது. ஆகையால் உருவான
கிளைகளும் சக்திசாலியாக இருக்கிறது. விசேஷமாக பாப்தாதா, பிரம்மா
பாபா இலண்டனில் தங்களது முதல் அஸ்திவாரம் மனதார
போட்டிருக்கின்றனர். பிரம்மா பாபாவின் மிகவும் செல்லமானவர்கள்.
எனவே நீங்கள் உடனடிப் பலனிற்கு சதா அதிகாரி ஆத்மாக்கள் ஆவீர்கள்.
காரியம் செய்வதற்கு முன்பாகவே பழம் தயாராக இருக்கிறது. இவ்வாறு
தோன்றுகிறது தானே! அல்லது உழைப்பு ஏற்படுகிறதா? ஆடிக் கொண்டும்,
பாடிக் கொண்டும் பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
உண்மையில் அயல் நாட்டினருக்கு பழம் என்றால் பிடிக்கும் அல்லவா!
பாப்தாதாவும் யு.கே என்றால் சதா ஓ.கே வாக இருக்கும்
குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். தனது இந்த ஓ.கே
என்ற பட்டத்தை சதா நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது எவ்வளவு
பெரிய பட்டமாக இருக்கிறது! அனைவரும் சதா ஓ.கே வாக இருக்கக்
கூடியவர்கள், மற்றவர்களையும் தனது முகம், வார்த்தை,
விருக்தியின் மூலம் ஓ.கே ஆக்கக் கூடியவர்கள். இந்த சேவை தான்
செய்ய வேண்டும் அல்லவா! நன்றாக இருக்கிறது. சேவையில் ஆர்வமும்
நன்றாக இருக்கிறது. யார், எங்கிருந்து வந்திருந்தாலும் அனைவரும்
தீவிர முயற்சியாளர்கள் மற்றும் பறக்கும் கலையில் உள்ளவர்கள்.
அனைவரையும் விட அதிக குஷியுடன் யார் இருக்கிறார்கள்? நான் என்ற
போதை யுடன் கூறுகிறீர்கள். குஷி தவிர வேறு என்ன இருக்கிறது!
குஷி பிராமண வாழ்க்கையின் சத்தாண உணவாகும். சத்தாண உணவில்லாமல்
எப்படி போக முடியும்? உணவு இருப்பதனால் தான் முன்னேறிக்
கொண்டிருக்கிறீர்கள். இடமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பாருங்கள், முன்பு மூன்றடி இடம் பெறுவது பெரிய விசயமாக இருந்தது,
இப்பொழுது எப்படி இருக்கிறது? எளிதாக இருக்கிறது அல்லவா! ஆக
இலண்டன் அதிசயம் செய்திருக்கிறது அல்லவா! (இப்பொழுது 50 ஏக்கர்
நிலம் கிடைத்திருக்கிறது) தைரியம் கொடுப்பவரும் நன்றாக
இருக்கிறார், தைரியம் வைப்பவர்களும் நன்றாக இருக்கின்றனர்.
பாருங்கள், உங்கள் அனைவரது விரல் இல்லையெனில் எப்படி
சாத்தியமாகும்! எனவே அனைத்து யு.கே ஆத்மாக்களும் அதிஷ்டசாலிகள்
மற்றும் விரல் கொடுப்பதில் புத்திசாலிகள்.
2) தனது அனைத்துப் பொறுப்புகளையும் தந்தையிடம் கொடுத்து
கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுக
தன்னை சதா கவலையற்ற சக்கரவர்த்தி என்று அனுபவம் செய்கிறீர்களா?
அல்லது சிறிது கவலை இருக்கிறதா? ஏனெனில் தந்தை உங்களது
பொறுப்புகளை எடுத்துக் கொண்டார் எனில் பொறுப்பிற்கான கவலை ஏன்
ஏற்படுகிறது? தந்தையின் கூடவே நடப்பதற்கான பொறுப்பு மட்டுமே
இப்பொழுது இருக்கிறது. அதுவும் தந்தையின் கூட, தனிமையாக அல்ல.
பிறகு என்ன கவலை இருக்கிறது? பணிக்காக கவலை இருக்கிறதா? உலகில்
என்ன நடக்குமோ என்ற கவலை இருக்கிறதா? நமக்கு என்ன நடக்குமோ அது
நல்லதாகவே இருக்கும் என்பதை அறிவீர்கள். நிச்சயம் இருக்கிறது
அல்லவா! நிச்சயம் உறுதியாக இருக்கிறதா? அல்லது சில நேரங்களில்
அசைந்து விடுகிறதா? எங்கு நிச்சயம் உறுதியாக இருக்கிறதோ, அங்கு
நிச்சயத்தின் கூடவே வெற்றியும் நிச்சயிக்கப்பட்டது ஆகும்.
வெற்றி கிடைத்தே விட்டது என்ற நிச்சயமும் இருக்கிறது தானே!
அல்லது கிடைக்குமா? கிடைக்காது? என்பது தெரியவில்லை என்று
நினைக் கிறீர்களா? ஏனெனில் கல்ப கல்பத் திற்கும்
வெற்றியாளர்களாக இருக்கிறீர்கள், மேலும் சதா இருப்பீர்கள். இது
நமது முந்தைய கல்பத்திற்கான நினைவுச் சின்னத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். கல்ப கல்பத்திற்கும் வெற்றியாளன் என்ற
நிச்சயம் இருக்கிறது தானே! அந்த அளவிற்கு நிச்சயம் இருக்கிறதா?
கல்பத்திற்கு முன்பும் நீங்கள் தான் ஆகியிருந்தீர்களா? அல்லது
வேறு யாராவது ஆகியிருந்தனரா? எனவே நிச்சயபுத்தியுடைய வெற்றி
இரத்தினம் நான் தான் என்பதை சதா நினைவில் வையுங்கள். நான்
அப்படிப்பட்ட இரத்தினமாக இருக் கின்றேன், என்னை பாப்தாதாவும்
நினைவு செய்கின்றார். இந்த குஷி இருக்கிறது அல்லவா! அதிக
மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள் தானே! இந்த அலௌகீக தெய்வீக
சிரேஷ்ட பிறப்பின் மற்றும் தனது மதுபன் வீட்டிற்கு வந்தமைக்கு
வாழ்த்துக்கள்.
3) தந்தை மற்றும் நீங்கள் - யாரும் பிரிக்க முடியாத அளவிற்கு
இணைந்த ரூபத்தில் இருங்கள்
நான் மற்றும் தந்தை சதா இணைந்த ரூபத்தில் இருக்கின்றேன் என்று
அனுபவம் செய் கிறீர்களா? யார் இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை
ஒருபோதும், யாரும் பிரிக்கவே முடியாது. நீங்கள் பலமுறை இணைந்து
இருந்திருக்கிறீர்கள், இப்பொழுதும் இருக்கிறீர்கள், மேலும் சதா
இருப்பீர்கள். இதில் உறுதியாக இருக்கிறீர்களா? அந்த அளவிற்கு
உறுதியானவர் களாக இணைந்த ரூபத்தில் இருக்க வேண்டும். இணைந்து
இருந்தேன், இணைந்து இருக் கின்றேன், இணைந்து இருப்பேன் என்பதை
சதா நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அநேக முறை இணைந்த
சொரூபத்தில் இருந்தவர்களை பிரிக்கும் சக்தி யாரிடத்திலும்
கிடையாது. அன்பின் அடையாளம் என்ன? (இணைந்து இருப்பது) ஏனெனில்
சரீர ரூபத்தில் வேறு வழியின்றி பிரிந்திருக்க வேண்டியிருக்கும்.
அன்பு இருக்கும், ஆனால் வேறு வழியின்றி பிரிந்திருக்க
வேண்டியிருக்கும். ஆனால் இங்கு சரீரத்திற்கான விசயம் கிடையாது.
ஒரு விநாடியில் எங்கிருந்து எங்கு சென்று விட முடியும்! ஆத்மா
பரமாத்மாவின் கூடவே இருக் கிறது. பரமாத்மா எங்கு இருந்தாலும்
துணையாக இருக்கின்றார், மேலும் ஒவ்வொரு வரிடத் திலும் இணைந்த
ரூபத்தின் அன்பில் இருக்கின்றார். ஒவ்வொருவரும் என்னுடைய பாபா
என்று கூறுகிறீர்கள். அல்லது அவருடைய பாபா என்று கூறுகிறீர்களா?
என்னுடைய பாபா என்று ஒவ்வொருவரும் கூறுவீர்கள். ஏன் என்னுடையவர்
என்று கூறுகிறீர்கள்? அதிகாரம் இருப்ப தனால் தான் கூறுகிறீர்கள்.
அன்பும் இருக்கிறது, அதிகாரமும் இருக்கிறது. எங்கு அன்பு
இருக்கிறதோ, அங்கு அதிகாரமும் இருக்கும். அதிகாரத்தின் போதை
இருக்கிறது அல்லவா! எவ்வளவு பெரிய அதிகாரம் கிடைத்திருக்கிறது!
இவ்வளவு பெரிய அதிகாரம் சத்யுகத்திலும் கிடைக்காது. வேறு எந்த
பிறவியிலும் பரமாத்ம அதிகாரம் கிடைப்பது கிடையாது. இங்கு
பிராப்தியாக கிடைக்கிறது. இலாபம் சத்யுகத்தில் இருக்கிறது,
ஆனால் பிராப்திக்கான நேரம் இப்பொழுதாகும். ஆக எந்த நேரத்தில்
பிராப்தி ஏற்படுகிறதோ, அந்த நேரத்தில் எவ்வளவு குஷி ஏற்படுகிறது!
பிராப்தி ஏற்பட்டு விடுகிறது, பிறகு அது பொதுவான விசயமாக
ஆகிவிடுகிறது. ஆனால் எப்பொழுது பிராப்தி ஆகிக் கொண்டி ருக்கிறதோ,
அந்த நேரத்திற்கான போதை மற்றும் குஷி அலௌகீகமாக இருக்கும். ஆக
எவ்வளவு குஷி மற்றும் போதை இருக்கிறது! ஏனெனில் கொடுப்பவரும்
எல்லையற்றவர் ஆவார். கொடுப்பவரும் எல்லையற்றவர் மற்றும்
அடைவதும் எல்லையற்றது ஆகும். ஆக எல்லைக்குட்பட்டதிற்கு
எஜமானர்களா? அல்லது எல்லை யற்றதிற்கு எஜமானர்களா? மூன்று
லோகங்களை தன்னுடையதாக ஆக்கிக் கொண்டீர்கள். மூலவதனம், சூட்சும
வதனம் நம்முடைய வீடாகும் மற்றும் ஸ்தூல வதனம் வரக் கூடிய
நம்முடைய இராஜ்ய மாகும். மூன்று லோகங்களுக்கும் அதிகாரிகளாக
ஆகிவிட்டீர்கள். ஆக அதிகாரி ஆத்மாக்கள் என்ன கூறுவீர்கள்?
ஏதாவது குறை இருக்கிறதா? என்ன பாட்டு பாடு வீர்கள்? (எதை அடைய
வேண்டுமோ அதை அடைந்து விட்டேன்) அடைய வேண்டியதை அடைந்து
விட்டேன், இப்பொழுது அடைவதற்கு ஒன்றும் இல்லை. இந்த பாட்டு
பாடுகிறீர்களா? அல்லது ஏதாவது குறை இருக்கிறதா - பணம் தேவை,
கட்டிடம் தேவை? தலைவருக்கான சீட் தேவை? எதுவும் வேண்டாம்,
ஏனெனில் சீட் இருந்தாலும் ஒரு பிறவிக்கானது, அதிலும் நம்பிக்கை
கிடையாது. உங்களுக்கு எவ்வளவு உத்திரவாதம் இருக்கிறது? 21
பிறவிகளுக்கு உத்திரவாதம். உத்திரவாத அட்டையை மாயை திருடி
விடுவது கிடையாது தானே? இங்கு பாஸ் போர்ட் தொலைத்து விடும் போது
எவ்வளவு கடினமாக இருக்கிறது! அதுபோன்று உத்திரவாத அட்டையை மாயை
திருடி விடுவது கிடையாது தானே? மறைத்து வைத்து விடுகிறது. பிறகு
நீங்கள் என்ன செய்வீர்கள்? மாயாவிற்கு தைரியம் இருக்கவே கூடாது,
அந்த அளவிற்கு நீங்கள் சக்திசாலியாக ஆகிவிடுங்கள்.
4) ஒவ்வொரு காரியமும் திரிகாலதர்சி ஆகி செய்யுங்கள்
அனைவரும் தன்னை சிம்மாசனதாரி ஆத்மா என்று அனுபவம் செய்கிறீர்களா?
இப்பொழுது சிம்மாசனம் கிடைத்திருக்கிறதா? அல்லது எதிர்காலத்தில்
கிடைக்குமா? என்ன கூறுவீர்கள்? அனைவரும் சிம்மாசனத்தில்
அமர்வீர்களா? (இதய சிம்மாசனம் மிகப் பெரியது) இதய சிம்மாசனம்
பெரியது, ஆனால் சத்யுக சிம்மாசனத்தில் ஒரே நேரத்தில் எவ்வளவு
பேர் அமர்வீர் கள்? சிம்மாசனத்தில் யார் வேண்டுமென்றாலும்
அமரட்டும், ஆனால் சிம்மா சனத்திற்கு அதிகாரி இராயல்
குடும்பத்தில் வருவீர்கள் அல்லவா! சிம்மாசனத்தில் சேர்ந்து அமர
முடியாது. இந்த நேரத்தில் அனைவரும் சிம்மாசனதாரிகளாக
இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த பிறவிக்கு மகத்துவம்
இருக்கிறது. யார் விரும்புகிறார்களோ, எத்தனை பேர்
விரும்புகிறார்களோ இதய சிம்மாசனதாரிகளாக ஆக முடியும். இந்த
நேரத்தில் வேறு ஏதாவது சிம்மாசனம் இருக்கிறதா? என்ன சிம்மாசனம்
இருக்கிறது? (அழிவற்ற சிம்மாசனம்) அழிவற்ற ஆத்மாக்களாகிய
உங்களது சிம்மாசனம் பிருகுட்டி ஆகும். ஆக பிருகுட்டியின்
சிம்மாசன தாரிகளாகவும் இருக்கிறீர்கள் மற்றும் இதய
சிம்மாசனதாரிகளாகவும் இருக்கிறீர்கள். இரண்டு சிம்மாசனம் அல்லவா!
நான் ஆத்மா, பிருகுட்டியின் அழிவற்ற சிம்மாசனதாரியாக
இருக்கின்றேன் என்ற போதை இருக்கிறதா? இதய சிம்மாசனதாரி
ஆத்மாக்கள் சுயத்தின் மீதும் இராஜ்யம் செய்கின்றனர், ஆகையால்
சுயராஜ்ய அதிகாரிகளாக இருக்கிறீர்கள். சுயராஜ்ய அதிகாரியாக
இருக்கின்றேன் என்ற நினைவு எளிதாக தந்தையின் மூலம் அனைத்து
பிராப்திகளின் அனுபவம் செய்விக்கும். எனவே மூன்று
சிம்மாசனங்களின் ஞானமும் இருக்கிறது. ஞானம் நிறைந்தவர்கள் தானே!
சக்திசாலியாகவும் இருக்கிறீர்களா? அல்லது ஞானம் நிறைந்தவர்களாக
மட்டும் இருக்கிறீர்களா? எவ்வளவு ஞானம் நிறைந்தவர்களோ, அவ்வளவு
சக்திசா-யாக இருக்க வேண்டும். ஞானம் அதிகம், சக்தி குறைவாக
இருக்கிறீர்களா? ஞானத்தில் அதிகம் புத்திசாலியாக இருக்கிறீர்கள்.
ஞானம் நிறைந்தவர்- சக்திசாலி இரண்டும் இருக்க வேண்டும். எனவே
மூன்று சிம்மாசனத்தின் நினைவும் சதா இருக்க வேண்டும்.
ஞானத்தில் மூன்றிற்கு மகத்துவம் இருக்கிறது.
திரிகாலதர்சிகளாகவும் ஆகிறீர்கள். மூன்று காலங்களையும்
அறிவீர்கள். அல்லது நிகழ்காலத்தை மட்டுமே அறிவீர்களா? எந்த ஒரு
காரியம் செய்தாலும் திரிகாலதர்சி ஆகி காரியம் செய்கிறீர்களா?
அல்லது ஒரு காலதர்சி ஆகி காரியம் செய்கிறீர்களா? ஒரு காலதர்சியா?
அல்லது திரிகாலதர்சியா? நாளை என்ன ஆகப் போகிறது என்பதை
அறிவீர்களா? நாளை என்ன நடக்குமோ அது மிகவும் நன்றாகவே நடக்கும்
என்பதை நாம் அறிவோம் என்று கூறுங்கள். இதை அறிவீர்கள் தானே! ஆக
திரிகாலதர்சி ஆகிவிட்டீர்கள் அல்லவா! எது நடந்ததோ அது நன்றாக
நடந்தது, எது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அது இன்னும் நன்றாகவே
நடைபெற்றுக் கொண்டிருக் கிறது, எது நடக்க இருக்கிறதோ அது
இன்னும் மிக நன்றாகவே நடக்கும். நன்றாகவே நடைபெறும் என்ற
நிச்சயம் இருக்கிறது தானே! தீங்கு நடைபெறவே முடியாது. ஏன்?
நல்ல தந்தை கிடைத்திருக்கின்றார், நல்லவர்களாக நீங்கள்
ஆகியிருக்கிறீர்கள், நல்ல காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஆக அனைத்தும் நன்றாக இருக்கிறது அல்லவா! அல்லது சிறிது
கெட்டதாக, சிறிது நல்லதாக இருக்கிறதா? நான் சிரேஷ்ட ஆத்மா
என்பதை அறிந்து கொண்டீர்கள் எனில் சிரேஷ்ட ஆத்மாவின் சங்கல்பம்,
வார்த்தை, செயல் நன்றாக இருக்கும் அல்லவா! எனவே கல்யாணகாரி
தந்தை கிடைத்து விட்டார், எனவே சதா நன்மையே நன்மை தான் என்பதை
சதா நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தந்தையை விஷ்வ கல்யாணகாரி
என்று கூறுகின்றோம், நீங்கள் மாஸ்டர் விஷ்வ கல்யாணகாரிகள். யார்
விஷ்வ கல்யாண் செய்யக் கூடியவர்களோ, அவர்களுக்கு தீங்கு ஏற்படவே
முடியாது. ஆகையால் ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு காரியத்திலும்,
ஒவ்வொரு சங்கல்பத்திலும் கல்யாணகாரி என்ற நிச்சயம் வையுங்கள்.
சங்கமயுகத்திற்கும் கல்யாணகாரி யுகம் என்று பெயர்
கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே தீங்கு ஏற்படவே முடியாது. ஆக எதை
நினை வில் வைத்துக் கொள்வீர்கள்? எது நடைபெற்றுக்
கொண்டிருக்கிறதோ அது நன்மைக்கே, எது நடைபெற இருக்கிறதோ அது மிக
மிக நன்மைக்கே. இந்த நினைவு சதா முன்னேற்றத் தில் கொண்டு
செல்லும். நல்லது, அனைவரும் அனைத்து மூலைகளிலும் கொடியை பறக்க
வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அனைவரும் மிகுந்த தைரியத்துடன்
மற்றும் தீவிர முயற்சியுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்,
இன்னும் சதா முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். எதிர்காலம்
தென்படுகிறது அல்லவா! உங்களது எதிர்காலம் என்ன? என்று யாராவது
கேட்கிறார்கள் எனில் மிகவும் நன்றாக இருக்கும் என்பது
எங்களுக்குத் தெரியும் என்று கூறுங்கள். நல்லது.
வரதானம்:
தனது நெற்றியில் சிரேஷ்ட பாக்கிய ரேகையை பார்த்து அனைத்து
கவலைகளிலிருந்து விடுபட்டு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுக.
கவலையற்று இருக்கும் சக்கரவர்த்தி நிலை அனைத்து சக்கரவர்த்தி
நிலைகளிலும் மிக சிரேஷ்டமானது. ஒருவர் கிரீடம் அணிந்து
சிம்மாசனத்தில் அமர்ந்து கவலைப்பட்டுக் கொண்டி ருந்தால் அது
சிம்மாசனமா? அல்லது கவலையா? பாக்கியவிதாதா பகவான் தங்களது
நெற்றியில் சிரேஷ்ட பாக்கியத்தின் ரேகையை உருவாக்கி
யிருக்கின்றார், கவலை யற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். எனவே சதா
தனது நெற்றியில் சிரேஷ்ட பாக்கிய ரேகையை பார்த்துக் கொண்டே
இருங்கள் - ஆஹா எனது சிரேஷ்ட பாக்கியம் - இந்த போதையுடன்
இருக்கும் பொழுது கவலைகள் அழிந்து விடும்.
சுலோகன்:
ஒருநிலைப்படுத்தும் சக்தியின் மூலம் ஆத்மாக்களை ஆவாஹனம் (அழைத்து)
ஆன்மீக சேவை செய்வது தான் ஆன்மீக சேவையாகும்.