08.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - நான் எப்பொழுதும் சப்தத்திற்கு அப்பாற்பட்டு இருக்கிறேன். நான் குழந்தைகளாகிய உங்களை விடுபட்டவராக ஆக்குவதற்காக வந்துள்ளேன். இப்பொழுது உங்கள் அனைவருக்கும் வானப்பிரஸ்த நிலை ஆகும். இப்பொழுது சப்தத்திற்கு அப்பாற்பட்ட வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

 

கேள்வி:

நல்ல முயற்சி செய்யும் (புருஷார்த்தி) மாணவர்கள் என்று யாருக்குக் கூறலாம்? அவர்களுடைய முக்கிய அடையாளங்களை கூறுங்கள்.

 

பதில்:

யார் தன்னிடமே தனக்குத் தானே உரையாட அறிந்திருக்கிறாரோ, சூட்சுமமாக படிப்பை பயிலுகிறாரோ அவர்களே நல்ல புருஷார்த்தி மாணவர்கள் ஆவார்கள். புருஷார்த்தி மாணவர்கள் எனக்குள் எந்த ஒரு அசுர சுபாவம் (நடத்தை) ஒன்றும் இல்லையே, தெய்வீக குணத்தை எதுவரை தாரணை செய்துள்ளேன் என்று எப்பொழுதும் தங்களை சோதித்துக் கொண்டே இருப்பார்கள். சகோதர சகோதரன் என்ற பார்வை எப்பொழுதும் இருக்கிறதா, குற்றமான (கிரிமினல்) சிந்தனை ஒன்றும் எழுவதில்லையே என்று அவர்கள் தங்களது பதிவேட்டை வைத்திருப்பார்கள்.

 

ஓம் சாந்தி.

யாரெல்லாம் சப்தத்திற்கு அப்பாற்பட்டு செல்வதற்காக, அதாவது வீட்டிற்குச் செல்வதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்து கொண்டிருக்கிறார்களோ அப்பேர்ப்பட்ட ஆன்மீகக் குழந்தைகளுக்காக. அது அனைத்து ஆத்மாக்களின் வீடு ஆகும். இப்பொழுது நாம் இந்த சரீரத்தை விட்டு வீடு செல்ல வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நான் உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். எனவே இந்த தேகம் மற்றும் தேக சம்மந்தங்களிலிருந்து விடுபட்டவர் ஆக வேண்டும் என்று தந்தை கூறுகிறார். இதுவோ சீ - சீ உலகம் ஆகும். நாம் இப்பொழுது செல்ல வேண்டும் என்பதையும் ஆத்மா அறிந்துள்ளது. தூய்மை ஆக்குவதற்காக தந்தை வந்துள்ளார். மீண்டும் நாம் தூய்மையான உலகத்திற்குச் செல்ல வேண்டும். இது உள்ளுக்குள் ஞான மனனம் செய்ய வேண்டும். வேறு யாருக்குமே இப்பேர்ப்பட்ட சிந்தனை வராது. நாம் சுயம் நமது மன விருப்பப்படி தூய்மையான சம்மந்தத்தில் புதிய உலகத்தில் வருவோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இந்த நினைவு கூட மிகவும் குறைவானவர் களுக்கே இருக்கிறது. சிறியவர்கள், பெரியவர்கள், வயோதிகர்கள் ஆகிய எல்லோருமே திரும்பி செல்ல வேண்டும். பிறகு புது உலகத்தில் தூய்மையான சம்மந்தத்தில் வர வேண்டும். நாம் இப்பொழுது வீடு செல்வதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம் என்பது அடிக்கடி புத்தியில் வர வேண்டும். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்களே கூட செல்வார்கள். யார் இப்பொழுது இறைவன் பெயரில் செய்கிறார்களோ அவர்கள் போய் புது உலகத்தில் கோடானு கோடீசுவரர் ஆகிறார்கள். அவர்கள் இந்த பழைய உலகத்தில் மறைமுகமாக செய்கிறார்கள். இறைவன் இதற்கு பலன் அளிப்பார் என்று நினைக்கிறார்கள். அது உங்களுக்கு குறுகிய கால ஒரு நொடியில் அழியக் கூடியது தான் கிடைக்கிறது என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது நான் வந்துள்ளேன். இப்பொழுது என்ன அளிப்பீர்களோ அது உங்களுக்க 21 பிறவிகளுக்கு கோடி மடங்கு ஆகி கிடைக்கும் என்று உங்களுக்கு ஆலோசனை தருகிறேன். உயர்ந்த வீட்டில் சென்று ஜன்மம் எடுப்போம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாமோ நாராயணர் அல்லது லட்சுமி ஆகிவிடுவோம். எனவே பிறகு அந்தளவிற்கு உழைப்பும் செய்ய வேண்டி உள்ளது. நாம் இந்த பழைய சீ - சீ உலகத்திலிருந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். இந்த பழைய உலகம், பழைய சரீரத்தை விட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே நினைவிற்கு வராத வகையில் அவ்வாறு தயாராக இருக்க வேண்டும். பழைய உலகம் அல்லது நண்பர், உறவினர் ஆகியோர் நினைவிற்கு வந்தால் என்ன கதி ஆகும்? கடைசி நேரத்தில் மனைவி நினைவிற்கு வந்தால்.. என்று நீங்கள் கூறுகிறீர்கள் அல்லவா? எனவே தந்தையைப் பின்பற்ற வேண்டும். அப்படி இன்றி பாபா முதியவராக இருக்கிறார் அதனால் அவர் இந்த சரீரத்தை விடவே வேண்டும் என்று நினைக்கிறார் என்பதல்ல. இல்லை.நீங்கள் எல்லோருமே முதியவர்கள் ஆவீர்கள். அனைவருக்குமே வானப்பிரஸ்த நிலை ஆகும். எல்லோருமே திரும்பி செல்ல வேண்டும். எனவே இந்த பழைய உலகத்திலிருந்து புத்தி யோகத்தை துண்டித்து விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுதோ நமது வீட்டிற்கு செல்ல வேண்டும். பிறகு எவ்வளவு பேர் அங்கு இருக்க வேண்டி இருக்குமோ அவ்வளவு பேர் அங்கு இருப்பார்கள். எந்த அளவிற்கு பின்னால் பார்ட் இருக்குமோ அந்த அளவு பின்னால் சரீரத்தை தாரணை செய்து பார்ட் நடிப்பார்கள். ஒரு சிலரோ 5000 வருடங்களில் 100 வருடம் போக மீதி காலம் சாந்தி தாமத்தில் இருப்பார்கள். பின்னால் வருவார்கள். எப்படி ("காசி கல்வட்) காசியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். எல்லா பாவங்களும் சட்டென்று முடிந்து போய் விடும். பின்னால் வருபவர்களுடைய பாவம் என்னவாகும். வந்தார்கள் மற்றும் போனார்கள். மற்றபடி மோட்சம் யாருக்கும் கிடைக்க முடியாது. அங்கு இருந்து கொண்டு என்ன செய்வார்கள். பாகத்தை அவசியம் நடித்தே ஆக வேண்டி உள்ளது. உங்களுடைய பார்ட் ஆரம்பத்திலிருந்து வருவதற்கானது ஆகும். எனவே தந்தை கூறுகிறார் - குழந்தைகளே இந்த பழைய உலகத்தை மறந்து கொண்டே செல்லுங்கள். இப்பொழுதோ போக வேண்டி உள்ளது. 84-பிறவியின் நடிப்பு முடிவடைந்தது. நீங்கள் தூய்மை இழந்து விட்டுள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். தெய்வீக குணங்களும் தாரணை செய்யுங்கள்.

 

குழந்தைகளே! எனக்குள் எந்த ஒரு அசுர குணம் நடத்தை இல்லையே என்று உங்களை சோதித்து கொண்டே இருங்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். உங்களுடைய நடவடிக்கை தேவதைக்குரியதாக இருக்க வேண்டும். அதற்காக சார்ட் வைத்தீர்கள் என்றால் பக்கா அனுபவம் உள்ளவராக ஆகிக் கொண்டே செல்வீர்கள். ஆனால் மாயை எப்பேர்ப்பட்டது என்றால் அது சார்ட் வைக்கவே விடாது. 2-4 நாட்கள் வைத்து பிறகு விட்டு விடுகிறார்கள். ஏனெனில் அதிர்ஷ்டத்தில் இல்லை. அதிர்ஷ்டத்தில் இருந்தது என்றால் மிகவும் நல்ல முறையில் பதிவேட்டை வைப்பார்கள். பள்ளிக் கூடத்தில் அவசியம் பதிவேடு வைக்கிறார்கள். இங்கு கூட எல்லா சென்டர்களிலும் அனைவரினுடைய சார்ட், பதிவேடு வைக்க வேண்டும். பிறகு நாம் தினமும் செய்கிறோமா என்று பார்க்க வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்கிறோமா? சகோதர சகோதரி என்ற சம்மந்தத்திலிருந்து கூட உயர்ந்து செல்ல வேண்டும். சகோதர சகோதரர் என்ற ஆன்மீக பார்வை மட்டும் வேண்டும். நாம் ஆத்மாக்கள் ஆவோம். யாருடையதும் குற்ற பார்வை கிடையாது. சகோதர சகோதரி என்ற சம்மந்தம் கூட எதற்காக உள்ளது ஏனென்றால் நீங்கள் பிரம்மா குமார் குமாரிகள் ஆவீர்கள். ஒரு தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். இந்த சங்கமயுகத்தில் தான் சகோதர சகோதரியின் சம்மந்தத்தில் இருக்கிறோம். எனவே விகார பார்வை நீங்கி விட வேண்டும். ஒரு தந்தையைத் தான் நினைவு செய்ய வேண்டும். சப்தத்திற்கும் அப்பாற்பட்டு செல்ல வேண்டும். இது போல தங்களிடம் தாங்களே உரையாட வேண்டும். இது சூட்சும பயிற்சி ஆகும். இதில் சப்தம் செய்வதற்கான அவசியம் இல்லை. இதை குழந்தைகளுக்குப் புரிய வைப்பதற்காக சப்தத்தில் வர வேண்டி உள்ளது. சப்தத்திற்கு அப்பாற்பட்டு செல்வதற்காகவும் புரிய வைக்க வேண்டி உள்ளது. இப்பொழுது திரும்பச் செல்ல வேண்டும். வாருங்கள் எங்களை கூடவே அழைத்துச் செல்லுங்கள் என்று தந்தையை அழைத்திருக்கிறீர்கள். நாம் தூய்மை இல்லாதவர்களாக உள்ளோம். திரும்பச் செல்ல முடியாமல் உள்ளோம். தூய்மையற்ற உலகத்தில் இப்பொழுது யார் தூய்மையாக ஆக்குவது. சாது சந்நியாசி ஆகியோர் யாருமே தூய்மையாக ஆக்க முடியாது. தூய்மை ஆக வேண்டும் என்பதற்காக அவர்களோ கங்கா ஸ்நானம் செய்கிறார்கள். தந்தையை அறியாமல் உள்ளார்கள். யார் முந்தைய கல்பத்தில் அறிந்துள்ளார்களோ அவர்களே இப்பொழுது புருஷார்த்தம் (முயற்சி) செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த புருஷார்த்தம் (முயற்சி) கூட தந்தையைத் தவிர வேறு யாரும் செய்விக்க முடியாது. தந்தை தான் எல்லோரையும் விட உயர்ந்தவர் ஆவார். அப்பேர்ப்பட்ட தந்தையை கல்லிலும், மண்ணிலும் இருப்பதாக கூறியதால் மனிதர்களுடைய நிலை என்னவாக ஆகி விட்டுள்ளது. படி இறங்கியபடியே வந்துள்ளார்கள். அந்த சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தவர்கள் எங்கே. இந்த சம்பூர்ண விகாரி எங்கே. இந்த விஷயங்களை கூட முந்தைய கல்பத்தில் ஏற்றுக் கொண்டவர்கள் தான் ஏற்றுக் கொள்வார்கள். யார் வந்தாலும் அவர்களுக்கு தந்தையின் கட்டளையை கூறுவது உங்கள் கடமை ஆகும். ஏணியின் படத்தை வைத்து புரிய வையுங்கள். அனைவருக்கும் இப்பொழுது வானப்பிரஸ்த நிலை ஆகும். எல்லோரும் சாந்தி தாமம் மற்றும் சுக தாமத்திற்குச் செல்வார்கள். யார் ஆத்மாவை புத்தியோக பலத்தினால் முழுமையாக தூய்மை ஆக்குவார்களோ அவர்கள் சுகதாமத்திற்குச் செல்வார்கள். பாரதத்தினுடைய பழைமையான யோகம் கூட பாடப்பட்டுள்ளது. உண்மையில் நாம் முதன் முதலில் வந்திருந்தோம் என்ற நினைவு இப்பொழுது ஆத்மாவிற்கு வருகிறது. இப்பொழுது மீண்டும் திரும்பி செல்ல வேண்டும். உங்களுக்கு உங்களுடைய பார்ட் நினைவிற்கு வருகிறது. யார் இந்த குலத்தில் வரப் போவதில்லையோ அவர்களுக்கு நாம் தூய்மை ஆக வேண்டும் என்ற நினைவு கூட வருவதில்லை. தூய்மையாக ஆவதில் தான் உழைக்க வேண்டி இருக்கும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்களை வென்றவராக ஆகி விடுவீர்கள் மற்றும் சகோதர சகோதரி என்று உணர்ந்திருந்தீர்கள் என்றால் (திருஷ்டி) பார்வை மாறி விடும். சத்யுகத்தில் பார்வை மோசமானதாக இருப்பதில்லை. குழந்தைகளே நாம் சத்யுக தேவதை ஆவோமா இல்லை கலியுக மனிதரா என்று உங்களையே நீங்கள் கேளுங்கள் என்று தந்தை புரிய வைத்து கொண்டே இருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் மிக நல்ல நல்ல படங்கள், சுலோகன் ஆகியவை தயாரிக்க வேண்டும். ஒருவர் சத்யுகத்தினர் ஆவீர்களா இல்லை கலியுகத்தினரா என்று கேட்க வேண்டும். இன்னொருவர் இன்னொரு கேள்வி கேட்க வேண்டும். இது போல நல்ல செய்தியை ஆரவாரத்துடன் பரப்ப வேண்டும்.

 

தந்தையோ தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குவதற்கான ஸ்ரீமத் அளிக்கிறார். மற்றபடி தொழில் ஆகியவை பற்றி எனக்கு என்ன தெரியும். தந்தையை நீங்கள் வந்து மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கான வழி கூறுங்கள்" என்று தான் அழைத்திருக்கிறீர்கள். அதை நான் வந்து கூறுகிறேன். எவ்வளவு எளிமையான விஷயம் ஆகும். மன்மனா பவ என்ற குறிப்பே மிகவும் சகஜமானது. தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். பொருள் புரியாத காரணத்தினால் கங்கையை பதீத பாவனி என்று நினைத்து விட்டார்கள். பதீத பாவனரோ தந்தை ஆவார். இப்பொழுது அனைவருக்கும் தீர்ப்பிற்கான நேரம் ஆகும். கணக்கு வழக்கு தீர்க்குமாறு செய்வித்து விட்டு திரும்ப அழைத்து செல்கிறார். தந்தை புரிய வைக்கும் பொழுது புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் விழுந்து விடுகிறார்கள். சகோதர சகோதரி என்று உணருங்கள் என்று தந்தை கூறுகிறார். ஒரு பொழுதும் தீய பார்வை கூடாது. ஒருவருக்கு காமத்தின் பூதம் ஒருவருக்கு பேராசையின் பூதம் வந்து விடுகிறது. சில சமயம் நல்ல உணவு இருப்பதை பார்த்து விட்டால் சாப்பிட விருப்பம் ஏற்படுகிறது. கடலை விற்பனைக்காரரை பார்த்தார்கள் என்றால் சாப்பிட வேண்டும் என்று மனம் விரும்பும். பிறகு சாப்பிட்டு விட்டார்கள் என்றால் பக்குவமற்றவர்களாக இருப்பதால் சீக்கிரம் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. புத்தி மோசமாக ஆகி விடுகிறது. தாய் தந்தை மற்றும் நல்ல சர்ட்டிஃபிகேட் பெற்றிருக்கும் நெருங்கிய குழந்தைகளை பின்பற்ற வேண்டும். யக்ஞத்தில் என்ன கிடைத்தாலும் அதை இனிமையானதாக கருதி உட்கொள்ள வேண்டும். நாக்கு பேராசைக் கொள்ள கூடாது. யோகமும் வேண்டும் யோகம் இல்லை என்றால் கூறுவார்கள், குறிப்பிட்ட இந்த பொருளை சாப்பிட வேண்டும் என்பார்கள் இல்லை என்றால் நோய் வாய்ப் பட்டுவிடுவீர்கள் நாம் தேவதையாக ஆக வந்துள்ளோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும். இப்பொழுது நாம் திரும்ப வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு குழந்தையாக ஆகி தாயின் மடியில் வருவோம். தாயின் உணவு பானத்தின் தாக்கம் குழந்தை மீதும் ஏற்படுகிறது. அங்கு இந்த எந்த விஷயங்களும் இருக்காது. அங்கு எல்லாமே முதல் தரமானதாக இருக்கும். நமக்காக தாய் உணவு எல்லாம் கூட முதல் தரமானதாக உட்கொள்வார். அது நமது வயிற்றிலும் வந்து விடும். அங்கு இருப்பதே முதல் தரமானதாக. ஜன்மம் எடுத்த உடனேயே உணவு பானம் எல்லாம் தூய்மையாக இருக்கும். எனவே அப்பேர்ப்பட்ட சொர்க்கத்திற்கு செல்வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டும்.

 

தந்தை வந்து (ரிஜெனுவேட்) புதிய உலகை ஸ்தாபிக்கிறார். அந்த ஜனங்கள் குரங்கினுடைய சுரப்பிகளை மனிதனுக்குள் பொருத்துகிறார்கள். நாம் இளைஞர் ஆகி விடுவோம் என்று நினைக்கிறார்கள். எப்படி புது இதயம் பொருத்துகிறார்கள். தந்தை ஒன்றும் வந்து இதயத்தை பொருத்துவதில்லை. தந்தை வந்து மனிதர்களை தேவதைகளாக மாற்றுகிறார். மற்றது இவை எல்லாம் விஞ்ஞானம் (சையன்ஸ்) ஆகும். குண்டுகள் ஆகியவை அமைக்கிறார்கள். இதுவோ உலகத்தையே அழித்து விடுவதற்கான பொருட்கள் ஆகும். தமோபிரதான புத்தி ஆகும் அல்லவா? அவர்களோ இது கூட விதிக்கப்பட்டுள்ளது என்று குஷி அடைகிறார்கள். குண்டுகள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டியே உள்ளது. சாஸ்திரங்களில் பிறகு வயிற்றிலிருந்து உலக்கை (ஏவுகணை) வெளிப்பட்டது. பிறகு இது ஆகியது என்று எழுதப்பட்டுள்ளது. இவை எல்லாமே பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் ஆகும் என்று தந்தை புரிய வைத்துள்ளார். இராஜயோகத்தை நான் தான் கற்பித்திருந்தேன். அதுவோ ஒரு கதை ஆகி விட்டது. அதை கேட்டு கேட்டு இந்த நிலைமை ஆகி விட்டுள்ளது. இப்பொழுது தந்தை உண்மையான சத்திய நாராயணரின் கதை, மூன்றாவது கண்ணின் கதை, அமரநாத்தின் கதை கூறிக் கொண்டிருக்கிறார். இந்த படிப்பினால் நீங்கள் அந்த பதவியை அடைகிறீர்கள். மற்றபடி கிருஷ்ணர் சுய தரிசன சக்கரத்தினால் அனைவரையும் கொன்றார் என்று காட்டியிருப்பது போல எதுவும் கிடையாது. நானோ இராஜயோகத்தை கற்பித்து தூய்மைப்படுத்தும் காரியத்தை மட்டுமே செய்கிறேன். நான் உங்களை சுய தரிசன சக்கரதாரியாக ஆக்குகிறேன். அவர்கள் பிறகு கிருஷ்ணருக்கு சக்கரம் ஆகிய வற்றை காண்பித்துள்ளார்கள். சுய தரிசன சக்கரத்தை எப்படி சுற்றுவார்? மாயாஜாலத்தின் விஷயமா என்ன? இது எல்லாமே நிந்திப்பது ஆகும் அல்லவா? அதுவும் அரைக்கல்பம் நடக்கிறது. எப்பேர்ப்பட்ட அதிசயமான நாடகம் ஆகும். இப்பொழுது சிறியவர்கள் பெரியவர்கள் அனைவருக்கும் வானப் பிரஸ்த நிலை ஆகும். இப்பொழுது நாம் திரும்பச் செல்ல வேண்டியுள்ளது. எனவே தந்தையை நினைவு செய்ய வேண்டும். வேறு எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. அப்பேர்ப்பட்ட நிலை இருந்தது என்றால் தான் உயர்ந்த பதவியை அடைய முடியும். நமது ரிஜிஸ்தர் எந்த அளவு சரியாக உள்ளது என்று நம் மனதை நாமே கேட்டு பார்க்க வேண்டும்.முறைப்படி (ரெகுலர்) படிக்கிறோமா இல்லையா என்று ரிஜிஸ்தர் மூலம் நடத்தை பற்றி தெரிய வரும். ஒரு சிலரோ பொய் கூட கூறி விடுகிறார்கள். உண்மையை கூறுங்கள், கூற வில்லை என்றால் உங்களுடைய ரிஜிஸ்தர் தான் கெட்டுப் போய் விடும் என்று தந்தை கூறுகிறார். பகவானிடம் தூய்மையாக இருப்பதற்கான உறுதி எடுத்து பிறகு அதை மீறுகிறீர்கள் என்றால் உங்களுடைய நிலைமை என்னவாகி விடும். விகாரத்தில் விழுந்தார்கள் என்றால் விளையாட்டு முடிந்து விட்டது. முதல் நம்பர் எதிரி தேக அபிமானம் ஆகும். முடிந்து விட்டது. முதல் நம்பர் எதிரி தேக அபிமானம் ஆகும். பிறகு காமம், கோபம். தேக அபிமானத்தில் வருவதாலேயே விருத்தி (உள்ளுணர்வு) கெட்டு விடுகிறது. எனவே தேஹீ அபிமானி பவ என்று தந்தை கூறுகிறார். அர்ஜுனன் கூட இவர் ஆவார் அல்லவா? கிருஷ்ணருடைய ஆத்மா ஆவார். அர்ஜுனன் என்ற பெயர் இருக்குமா என்ன? யாருக்குள்ளே பிரவேசம் செய்கிறாரோ பிறகு அவர் பெயர் மாறி விடும். மனிதர்களோ இந்த கல்ப விருட்சம் ஆகியவை உங்களுடைய கற்பனை என்று கூறி விடுகிறார்கள். மனிதர்கள் என்ன கற்பனை செய்கிறார்களோ அது பார்வையில் தென்படுகிறது.

 

இப்பொழுது நாம் போய் சொர்க்கத்தில் சிறு குழந்தை ஆகிறோம் என்று குழந்தைகளுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். பிறகு பெயர், ரூபம், தேசம், காலம் எல்லாமே புதியதாக இருக்கும். இது எல்லை யில்லாத நாடகம் ஆகும். ஏற்கனவே அமைக்கப்பட்டது அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீண்டும் உருவாக்கப்படத் தான் வேண்டி உள்ளது. பிறகு நாம் ஏன் கவலைப் பட வேண்டும்? நாடகத்தின் ரகசியம் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. உலகத்தில் இச்சமயம் எல்லோரும் பூசாரியாக இருக்கிறார்கள். எங்கு பூசாரிகள் இருக்கிறார்களோ அங்கு ஒருவர் கூட பூஜிக்கத்தக்கவர் இருக்க முடியாது. சத்யுக திரேதாவில் தான் பூஜிக்கத் தக்கவர்கள் இருப்பார்கள். கலியுகத்தில் இருப்பவர்கள் பூசாரி ஆவார்கள். பிறகு நீங்கள் தங்களை பூஜிக்கத்தக்கவர் என்று எப்படி அழைத்து கொள்ள முடியும்? பூஜிக்கத் தக்கவர்களோ தேவி தேவதைகள் தான் ஆவார்கள். மனிதர்கள் பூசாரி ஆவார்கள். தூய்மை ஆக வேண்டும் என்றால் என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்ற அடிப்படை விஷயத்தை தந்தை புரிய வைக்கிறார். நாடகப்படி யார் எந்த அளவு புருஷார்த்தம் (முயற்சி) செய்திருப்பாரோ அந்த அளவே செய்வார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நமது படிப்பின் பதிவேடு வைக்க வேண்டும். நமது சகோதர சகோதரரின் பார்வை எதுவரை உள்ளது? நமது தெய்வீக சுபாவம் அமைந்துள்ளதா? என்று நமது பதிவேட்டைப் பார்க்க வேண்டும்.

 

2. நமது நாக்கின் மீது மிகுந்த கட்டுப்பாடு கொள்ள வேண்டும். நாம் தேவதை ஆகி கொண்டிருக்கிறோம். எனவே உணவு, பானங்கள் மீது மிகுந்த கவனம் கொடுக்க வேண்டும் என்பது புத்தியில் இருக்க வேண்டும். நாக்கு சஞ்சலப்படக் கூடாது. தாய் தந்தையைப் பின்பற்ற வேண்டும்.

 

வரதானம்:

ஒவ்வொரு மணித்துளியையும் கடைசி நேரம் என்று புரிந்து கொண்டு சதா தயார் நிலையில் இருக்கக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக!

 

தனது கடைசி நேரத்தின் மீது எந்த நம்பிக்கையும் கிடையாது. ஆகையால் ஒவ்வொரு நொடியையும் கடைசி நேரம் என்று புரிந்து கொண்டு தயாராக இருங்கள். தயார் நிலையில் இருப்பது என்றால் தீவிர முயற்சியாளர் ஆவது. விநாசம் ஆவதற்கு சிறிது காலம் ஏற்படும், அதற்குள் தயாராகி விடலாம் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு நொடியும் கடைசி நேரமாகும். ஆகையால் சதா பற்றற்றவர், விகார எண்ணங்களற்றவர், வீண் எண்ணங்களற்றவர் . வீணாவைகளும் இருக்கக் கூடாது, அப்போது தான் எவரெடி என்று கூற முடியும். செய்ய வேண்டிய காரியம் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும், ஆனால் தனது மன நிலை சதா விடுபட்டதாக இருக்க வேண்டும், எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடைபெறும்.

 

சுலோகன்:

தன் கையில் சட்டம் எடுத்துக் கொள்வதும் கோபத்தின் அம்சமாகும்

 

ஓம்சாந்தி