08-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

16 கலைகள் நிரம்பியவர்களாக மாறுவதற்கு குழந்தைகளாகிய நீங்கள் என்ன முயற்சி செய்கிறீர்கள்?

பதில்:

யோக பலத்தை சேமித்தல். யோக பலத்தினால் நீங்கள் 16 கலை நிறைந்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு தானம் அளித்தீர்கள் என்றால் கிரகணம் விலகி போகும் என்று பாபா கூறுகிறார். கீழே விழ வைக்கக் கூடிய காம விகாரத்தை தானமாக அளித்து விட்டால் நீங்கள் 16 கலைகளில் நிரம்பியவர் ஆகிவிடுவீர்கள். 2. தேக உணர்வை விட்டு விட்டு ஆத்ம உணர்வுடையவர் கள் ஆகுங்கள். சரீர உணர்வை விட்டு விடுங்கள்.

பாடல்:

தாயும் தந்தையும் நீயே.....

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாபாவின் மகிமையைக் கேட்டீர் கள். அவர்கள் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே நீங்கள் நடைமுறையில் அந்த பாபாவின் சொத்தை அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். பாபா நம் மூலமாகத் தான் பாரதத்தை சுகதாமமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். யார் மூலமாக மாற்றிக் கொண்டிருக்கிறாரோ நிச்சயமாக அவரே சுகதாமத்தின் அதிபதியாவார். குழந்தைகளுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். பாபாவின் மகிமைகள் அளவு கடந்ததாகும். அவரிடமிருந்து நாம் சொத்தை அடைந்துக் கொண்டிருக் கிறோம். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கும் உங்கள் மீதும் முழு உலகத்தின் மீதும் குருவின் அழியாத தசை நடக்கிறது. முக்கியமாக பாரதம் மற்றும் உலகம் முழுவதும் அனைவர் மீதும் இப்போது குரு திசை இருக்கிறது என பிராமணர்களாகிய நீங்கள் அறிகிறீர்கள். ஏனென்றால் இப்போது நீங்கள் 16 கலைகளில் நிறைந்தவர்கள் ஆகிறீர்கள். இச்சமயம் வேறு எந்த கலையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். இங்கே மகிழ்ச்சி இருக்கிறது, வெளியே சென்றதும் மறைந்து விடுகிறது. அப்படி இருக்கக் கூடாது. யாருடைய மகிமையைப் பாடுகிறீர்களோ அவர் இப்போது உங்கள் முன்பு இருக்கிறார். 5000 வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுத்து விட்டுச் சென்றேன் என்று பாபா புரிய வைக்கிறார். போகப் போக அனைவரும் அழைத்துக் கொண்டே இருப்பார்கள். இதை நீங்கள் பார்ப்பீர்கள். திருமதி இந்திரா காந்தி (முன்னாள் பிரதம மந்திரி) ஒரு தர்மம், ஒரு மொழி, ஒரு இராஜ்யம் என்று கூறினார். அது போல உங்களுடைய சுலோகன் வந்துக் கொண்டே இருக்கும். அவருக்குள் கூட ஆத்மா கூறுகிறது அல்லவா. உண்மையில் பாரதத்தில் ஒரு இராஜ்யம் இருந்தது. இப்போது அது எதிரில் நிற்கிறது என ஆத்மாவிற்குத் தெரிகிறது. ஒரு நேரத்தில் அனைத்தும் அழிந்து போகும். இது ஒன்றும் புது விஷயம் அல்ல என்று புரிந்துக் கொள்கிறார்கள். பாரதம் 16 கலைகளிலும் நிரம்பியதாக நிச்சயம் மாற வேண்டும். நாம் இந்த யோக பலத்தினால் 16 கலைகளில் நிரம்பியவர்கள் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் அறிகிறீர்கள். தானம் அளித்தால் கிரகணம் விலகிப் போகும் என்று கூறுகிறார்கள் அல்லவா? விகாரங்கள், அவகுணங்களை தானம் அளியுங்கள் என்று பாபா கூறுகின்றார். இது இராவண இராஜ்யம் ஆகும். தந்தை வந்து இவைகளிலிருந்து விடுவிக்கிறார். இதிலும் காம விகாரம் மிகப் பெரிய அவகுணம் ஆகும். நீங்கள் தேக உணர்வு உடையவர் ஆகிவிட்டீர்கள். இப்போது ஆத்ம உணர்வு உடையவர் ஆகுங்கள். சரீரத்தின் உணர்வையும் விட்டு விடுங்கள். இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்துக் கொள்கிறீர்கள். உலகினர் யாரும் புரிந்துக் கொள்ளவில்லை. பாரதம் 16 கலைகள் நிரம்பியதாக இருந்தது. சம்பூரண தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இப்போது கிரகணம் பிடித்திருக்கிறது. இந்த லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது அல்லவா? பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்போது விகாரங்களின் கிரகணம் பிடித்திருக்கிறது. ஆகவே, தானம் அளித்தால் கிரகணம் விலகி போகும் என்று பாபா கூறுகின்றார். இந்த காம விகாரம் தான் விழ வைக்கக் கூடியது. ஆகவே, இதை தானம் அளித்தால் 16 கலைகளில் நிரம்பியவர் ஆகலாம், கொடுக்கவில்லை என்றால் ஆக முடியாது என்று பாபா கூறுகின்றார். ஆத்மாக்கள் ஒவ்வொருவருக்கும் தனக்கென்று நடிப்பின் பாகம் கிடைத்திருக் கிறது அல்லவா? இதுவும் உங்களுடைய புத்தியில் இருக்கிறது. உங்களுடைய ஆத்மாவில் எவ்வளவு பாகம் இருக்கிறது. நீங்கள் உலகத்தின் இராஜ்ய பாக்கியத்தை எடுக்கிறீர்கள். இது எல்லையற்ற நாடகம் ஆகும். அளவற்ற நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் முதல் தரமான நடிகர்கள் இந்த லஷ்மி நாராயணன் ஆவர். இவர்களுக்கு நம்பர் ஒன் பார்ட் இருக்கிறது. விஷ்ணுவிலிருந்து பிரம்மா சரஸ்வதி, பிறகு பிரம்மா சரஸ்வதியிலிருந்து விஷ்ணு ஆகிறார்கள். இந்த 84 பிறவிகளை எப்படி எடுக்கிறார்கள்? முழு சக்கரமும் புத்தியில் வருகிறது. சாஸ்திரங்களை படிப்பதால் புரிந்துக் கொள்ள முடியாது அவர்களோ கல்பத்தின் ஆயுளைக் கூட லட்சக்கணக்கான வருடங்கள் என கூறுகிறார்கள். பிறகு ஸ்வஸ்திக் கூட போட (நான்கு யுகங்களென பிரிக்க) முடியாது. வியாபாரிகள் கணக்கெழுதும் போது அதில் சுவஸ்திக் போடுகிறார்கள். பிள்ளையாரை பூஜிக்கிறார்கள். இது எல்லையற்ற கணக்காகும். ஸ்வஸ்திக்கில் 4 பாகங்கள் உள்ளன. ஜகன்நாத் புரியில் சாதத்தை பெரிய அண்டாவில் வைக்கிறார்கள் அது வெந்தவுடன் 4 பாகம் ஆகிறது. அங்கே சாதத்தைத் தான் படைக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அதிகமாக சாதத்தை சாப்பிடுகிறார்கள். ஸ்ரீநாத் துவாராவில் சாதம் வைப்ப தில்லை. அங்கேயோ அனைத்தும் சுத்தமான நெய்யில் செய்யப்பட்ட பொருட்களாக இருக்கும். சமைக்கும் போது கூட வாயை மூடிக் கொண்டு சுத்தமாக சமைக்கிறார்கள். பிரசாதத்தை மிகவும் மரியாதையோடு எடுத்துச் செல்கிறார்கள். படைத்த பிறகு அது அனைத்தும் பூஜாரிகளுக்கு கிடைக் கிறது. அவர்கள் அதை எடுத்துச் சென்று கடையில் வைக்கிறார்கள். அங்கே நிறைய கூட்டம் இருக்கிறது. பாபா (பிரம்மா பாபா) பார்த்திருக்கிறார். இப்போது குழந்தைகளாகிய உங்களை யார் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் அன்பான தந்தை வந்து உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கிறார். உங்களுக்கு சேவை செய்துக் கொண்டிருக்கிறார். அந்தளவு போதை இருக்கிறதா? ஆத்மாக்களாகிய நம்மை பாபா படிக்க வைக்கின்றார். ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது அல்லவா? மனிதர்கள் ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று கூறி விடுகிறார்கள். ஆத்மாவில் 84 பிறவிகளின் அழிவற்ற பாகம் நிரம்பியிருக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். பிறகு அதில் எதுவும் ஒட்டாது என்று கூறுவது எவ்வளவு இரவு பகலுக்குள்ள வித்தியாசம் உள்ளது. இதை யாராவது நன்கு ஒரு மாதம் அல்லது அரை மாதம் (கவனமாக) நல்லவிதமாகப் புரிந்துக் கொண்டால் தான் கருத்துகள் புத்தியில் பதியும். ஒவ்வொரு நாளும் கருத்துகள் நிறைய வந்துக் கொண்டிருக்கிறது. இது கஸ்தூரி போன்றாகும். குழந்தைகளுக்கு முழுமையாக நிச்சயம் வந்து விட்டால் உண்மையில் பரம்பிதா பரமாத்மா வந்து துர்கதியிலிருந்து சத்கதி அடைய வைக்கிறார் என புரிந்துக் கொள்கிறார்கள்.

இப்போது உங்களுக்கு குரு திசை (பார்வை) இருக்கிறது என பாபா கூறுகின்றார். நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றினேன். இப்போது மீண்டும் இராவணன் ராகு திசையை உட்கார வைத்திருக்கிறான். இப்போது மீண்டும் சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுவதற்காக தந்தை வந்திருக்கிறார். எனவே, தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. வியாபாரிகள் தங்களது கணக்கை எப்போதும் சரியாக வைக்கிறார்கள். நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியவர்களுக்கு அறிவில் லாதவர்கள் என்று கூறப்படுகிறது. இப்போது இது மிகப் பெரிய வியாபாரம் ஆகும். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தான் வியாபாரிகள் இந்த வியாபாரத்தை செய்கின்றனர். இது அழிவற்ற வியாபாரம் ஆகும். மற்ற அனைத்து வியாபாரங்களும் மண்ணோடு கலந்து போகக் கூடியது ஆகும். இப்போது உங்களுடைய உண்மையான வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது. பாபா ஞானக்கடல், வியாபாரி, ரத்ன வியாபாரி ஆவார். படக்கண்காட்சிகளில் எத்தனை பேர் வருகிறார்கள். பாருங்கள், சென்டரில் சிலரே கஷ்டப்பட்டு வருவார்கள். பாரதம் மிகப் பெரியது அல்லவா? அனைத்து இடங்களுக்கும் நீங்கள் போக வேண்டும். கங்கை தண்ணீர் முழு பாரதத்திலும் இருக்கிறது அல்லவா. இதையும் நீங்கள் புரிய வைக்க வேண்டும். பதீத பாவனர் தண்ணீரின் கங்கை கிடையாது. நீங்கள் ஞான கங்கைகள் போக வேண்டும். நாலாபுறங்களிலும் திருவிழா, கண்காட்சிகள் நடந்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். பார்க்கும் போதே மகிழ்ச்சி ஏற்படும் வகையில் அழகான சித்திரங்களாக இருக்க வேண்டும். இவர்கள் சரியாகப் புரிய வைக்கிறார்கள். இப்போது லஷ்மி நாராயணனின் இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏணிப்படி படம் கூட மிக நன்றாக இருக்கிறது. இப்போது பிராமண தர்மத்தின் ஸ்தாபனை நடந்துக் கொண்டிருக் கிறது. இந்த பிராமணர்கள் தான் பிறகு தேவதையாகிறார்கள். இப்போது நீங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக் கிறீர்கள் என்றால் எனக்குள் சிறிய பெரிய முள் எதுவும் இல்லையா என உள்ளுக்குள் மனதில் தன்னைத் தானே கேளுங்கள். காமத்தின் முள் இல்லையா? கோபத்தின் சிறிய முள் கூட மிகவும் மோசமானது. தேவதைகள் கோபக்காரர்கள் கிடையாது. சங்கரர் கண்ணை திறந்ததும் வினாசம் நடப்பதாகக் காண்பிக்கிறார்கள். இவ்வாறு ஒரு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். வினாசம் நடக்கத்தான் வேண்டும். சூட்சும வதனத்தில் சங்கரர் மீது பாம்பு எதுவும் இருக்காது. சூட்சும வதனம் மற்றும் மூல வதனத்தில் தோட்டம், பாம்பு போன்ற எதுவும் கிடையாது. இது அனைத்தும் இங்கே தான் இருக்கிறது. சொர்க்கமும் இங்கே தான் இருக்கிறது. இச்சமயம் மனிதர்கள் முட்களைப் போன்று இருக்கிறார்கள். ஆகவே இதற்கு முள் காடு என்று கூறப்படுகிறது. சத்யுகம் மலர்களின் தோட்டமாகும். பாபா எவ்வாறு தோட்டத்தை உருவாக்குகிறார் என்று நீங்கள் பார்க்கிறீர்கள். மிகவும் அழகாக உருவாக்குகிறார். அனைவரையும் அழகாக மாற்றுகிறார். அவர் எப்போதுமே அழகாக இருக்கிறார். அனைத்து பிரிய தர்ஷினிகளையும் அழகாக மாற்றுகிறார். இராவணன் முற்றிலும் கருப்பாக்கி விட்டான். இப்போது குழந்தை களாகிய உங்களுக்கு நம் மீது குரு திசை இருக்கிறது என்ற மகிழ்ச்சி இருக்க வேண்டும். பாதி காலம் சுகம், பாதி காலம் துக்கம் என்றால் அதில் என்ன லாபம் இருக்கிறது. முக்கால் பங்கு சுகம், கால் பங்கு துக்கம் ஆகும். இவ்வாறு நாடகம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நாடகம் ஏன் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பலர் கேட்கிறார்கள். அட! இது அனாதி அல்லவா? ஏன் உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழ முடியாது. இது அனாதி அழியாத நாடகம், உருவாக்கப் பட்டிருக்கிறது. நடந்த நடந்துக் கொண்டிருக்கின்ற நடக்கப் போவது ஆகும். இதில் யாருக்கும் மோட்சம் கிடைப்பதில்லை. இதில் ஆதியும், முடிவும் இல்லாமல் சிருஷ்டி சுழன்றுக் கொண்டிருக் கின்றது. சுழன்றுக் கொண்டே இருக்கும். பிரளயம் நடப்பதில்லை.

பாபா புதிய உலகத்தை உருவாக்குகிறார். ஆனால் அதில் எவ்வளவு வசதிகள் அடங்கியதாக இருக்கும். மனிதர்கள் பதீதமாகி துக்கம் அடையும் போது அழைக்கிறார்கள். தந்தை வந்து அனைவரின் உடலையும் கல்பத்தருவாக மாற்றுவதால் அரைக் கல்பத்திற்கு உங்களுக்கு அகால மரணம் கிடையாது. நீங்கள் காலனை வெற்றி அடைகிறீர்கள். எனவே குழந்தைகள் மிகவும் முயற்சி செய்ய வேண்டும். எவ்வளவு உயர்ந்த பதவி அடைகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஒவ்வொருவரும் அதிக வருமானத்திற்காக முயற்சி செய்து தான் ஆக வேண்டும். விறகு விற்பவர்கள் கூட நாங்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பார்கள். சிலர் ஏமாற்றி கூட சம்பாதிக்கிறார்கள். பணத்தினால் தான் ஆபத்து இருக்கிறது. அங்கே உங்களுடைய பணத்தை யாரும் கொள்ளை அடிக்க மாட்டார்கள். பாருங்கள், உலகத்தில் என்னென்ன நடந்துக் கொண்டிருக்கிறது. அங்கே இது போன்று துக்க விஷயம் எதுவும் கிடையாது. இப்போது நீங்கள் பாபாவிடமிருந்து எவ்வளவு சொத்து அடைகிறீர்கள். நாம் சொர்க்கத் திற்குச் செல்ல தகுதி அடைந்திருக்கிறோமோ என்று தன்னைத்தானே சோதித்துக் கொள்ளுங்கள். (நாரதரைப் போன்று) மனிதர்கள் பல தீர்த்த யாத்திரைகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் கிடைக்கவில்லை. நாலாபுறமும் சுற்றி அலைந்தோம். இருப்பினும் தொலைவிலேயே இருக் கின்றோம் என்ற பாடல் இருக்கின்றது அல்லவா. இப்போது பாபா உங்களுக்கு எவ்வளவு நல்ல யாத்திரையைக் கற்பிக்கின்றார். இதில் எந்த துன்பமும் இல்லை. என்னை மட்டும் நினைத்தால் விகர்மங்கள் அழிந்து போகும் என்று பாபா கூறுகின்றார் மிகவும் நல்ல யுக்தியைக் கூறுகிறேன். குழந்தைகள் கேட்கிறார்கள். இது நான் கடனாகப் பெற்ற சரீரம் ஆகும். இந்த தந்தைக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் பாபாவிற்கு சரீரத்தைக் கடனாக அளித்திருக்கிறேன். பாபா என்னை உலகத்திற்கு அதிபதியாக மாற்றுகின்றார். பெயரே பாக்கிய ரதன் ஆகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ராம்புரிக்குச் செல்வதற்காக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே முழுமையாக முயற்சியில் ஈடுபட வேண்டும். ஏன் முள்ளாக மாற வேண்டும்.

நீங்கள் பிராமணன் பிராமணிகள். அனைத்திற்கும் ஆதாரம் முரளியாகும். உங்களுக்கு முரளி கிடைக்க வில்லை என்றால் நீங்கள் ஸ்ரீமத்தை எங்கிருந்து கொண்டு வருவீர்கள். ஒரு பிராமணி மட்டும் தான் முரளியைச் சொல்ல வேண்டும் என்று கிடையாது. யார் வேண்டுமானாலும் முரளியைப் படித்துக் கூறலாம். இன்று நீங்கள் சொல்லுங்கள் என்று கூற வேண்டும். இப்போது படக்கண்காட்சியின் படங்கள் கூட புரிய வைப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த முக்கியமான சித்திரங்களை உங்கள் கடையில் வையுங்கள். பலருக்கு நன்மை நடக்கும். வாருங்கள், நாங்கள் உங்களுக்குப் புரிய வைக்கிறோம் என்று கூறுங்கள். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுழல்கிறது. யாருக்காவது நன்மை செய்வதற்காக சிறிது நேரம் செலவழித்தாலும் பரவாயில்லை. அந்த வியாபாரத்துடன் இந்த வியாபாரமும் செய்யலாம். இது பாபாவின் அழிவற்ற ஞான ரத்தினங்களின் கடையாகும். ஏணிப்படியின் படம் மற்றும் கீதையின் பகவான் சிவனின் சித்திரமும் நம்பர் ஒன் ஆகும். பாரதத்தில் சிவ பகவான் வந்திருந்தார். அவருடைய ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். இப்போது மீண்டும் அந்த தந்தை வந்திருக்கிறார். யக்ஞத்தைப் படைத்திருக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜ யோகத்தின் ஞானத்தைக் கூறிக் கொண்டிருக்கிறார். தந்தையே வந்து ராஜாக்களுக்கு ராஜாவாக மாற்றுகிறார். நான் உங்களை சூரிய வம்சத்தின் ராஜா ராணியாக மாற்றுகிறேன். அவர்களை விகாரி ராஜாக்கள் கூட வணங்குகிறார்கள் என்று பாபா கூறுகிறார். எனவே சொர்க்கத்தின் மகாராஜா மகாராணி ஆவதற்கு முழுமையான முயற்சி செய்ய வேண்டும். பாபா கட்டிடம் போன்றவைகளைக் கட்டுவதற்குத் தடுக்கவில்லை. நல்லது கட்டுங்கள் பணம் கூட மண்ணோடு மண்ணாகி விடும். அப்படி இருக்கும் போது ஏன் கட்டிடம் கட்டக் கூடாது. நன்றாக சுகமாக இருங்கள். பணத்தை காரியத்தில் பயன்படுத்துங்கள். கட்டிடமும் கட்டுங்கள், சாப்பிடுவற்கும் வைத்துக் கொள்ளுங்கள். தான புண்ணியங்கள் கூட செய்கிறார்கள். காஷ்மீர் ராஜா தனது சொத்துக்களை ஆரிய சமாஜத்திற்குத் தானமாக அளித்து விட்டார். தன்னுடைய தர்மம், ஜாதிக்காக செய்கிறார்கள் அல்லவா? இங்கே அது போன்ற எதுவும் இல்லை. அனைவரும் குழந்தைகள். ஜாதி போன்ற எதுவும் இல்லை. அது தேகத்தின் ஜாதி ஆகும். நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு இராஜ்ய பதவி கொடுக்கிறேன். தூய்மை யாக்குகிறேன். நாடகத்தின் படி பாரதவாசிகள் தான் இராஜ்ய பாக்கியம் அடைவார்கள். நம் மீது குரு பார்வை இருக்கிறது என குழந்தைகளுக்குத் தெரிகிறது. என்னை மட்டும் நினையுங்கள். வேறு எதுவும் இல்லை என்று ஸ்ரீமத் கூறுகிறது. பக்தி மார்க்கத்தில் வியாபாரிகள் ஏதாவது சிறிது தர்மத்திற்காக நிச்சயம் ஒதுக்குகிறார்கள். அதனுடைய பலன் அடுத்த பிறவியில் அல்பகாலத்திற்கு கிடைக்கிறது. இப்போது நான் நேரடியாக வந்திருக்கிறேன். எனவே நீங்கள் இந்த காரியத்தில் ஈடுபடுத்துங்கள். எனக்கு எதுவும் வேண்டாம். சிவபாபாவிற்கு தனக்காக எந்த கட்டிடமாவது கட்ட வேண்டுமா என்ன? இது அனைத்தும் பிராமணர்களாகிய உங்களுக்காகும். ஏழைகள் பணக்காரர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். சிலர் பகவானிடம் கூட சரிசமமான பார்வை இல்லை என்று கோபப்படுகிறார்கள். சிலரை மாளிகையில், சிலரை குடிசையில் வைக்கிறார். சிவபாபாவை மறந்து போகிறார்கள். சிவபாபாவின் நினைவிருந்தால் ஒரு போதும் இது போன்ற விஷயங்களைப் பேச மாட்டார்கள். அனைவரிடமும் கேட்க வேண்டியிருக்கிறது அல்லவா? இவர் வீட்டில் இவ்வாறு வசதியாக இருப்பார் என்றால் அதற்கு ஏற்ற ஏற்பாடு செய்து தர வேண்டி இருக்கிறது. ஆகவே தான் அனைவரையும் உபசரியுங்கள் என்று கூறுகிறார். எந்த ஒரு பொருளும் இல்லை என்றால் கிடைக்கும் பாபாவிற்கு குழந்தைகள் மீது அன்பு இருக்கிறது. இவ்வளவு அன்பு வேறு யாரும் வைக்க முடியாது. குழந்தை களுக்கு எவ்வளவு புரிய வைக்கிறார். முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுக்காகவும் யுக்தியைக் கண்டுபிடியுங்கள். இதற்கு மூன்றடி நிலம் வேண்டும். அதில் குழந்தைகள் புரிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். யாராவது பெரிய மனிதர்களிடம் ஹால் இருந்தால் நாம் படங்களை மட்டும் வைக்கின்றோம். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் காலை மாலையில் வகுப் பெடுத்து விட்டு சென்று விடுவோம். செலவு முழுவதும் எங்களுடையது,பெயர் உங்களுடையதாக இருக்கும். பலர் வந்து கூழாங்கல்லிருந்து வைரமாக மாறுவார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. உள்ளுக்குள் என்னென்ன (முட்கள்) விகாரங்கள் இருக்கிறதோ அதை சோதனை செய்து நீக்க வேண்டும். இராமபுரிக்குச் செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

2. அழிவற்ற ஞான ரத்தினங்களின் வியாபாரம் செய்து யாருக்கு வேண்டுமானாலும் நன்மை செய்வதில் நேரம் ஒதுக்க வேண்டும். அழகாக மாற வேண்டும். பிறரையும் மாற்ற வேண்டும்.

வரதானம்:

முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் உயர்ந்த மனநிலை என்ற மெடலை (பதக்கம்) அடையக் கூடிய மகாவீர் (சக்திசாலியான) ஆகுக

இந்த முதலும் முடியுமற்ற நாடகத்தில் ஆன்மீக படையை சேர்ந்த படைவீரர்களுக்கு எந்தவித மெடலும் கொடுப்பதில்லை, ஆனால் நாடகத் திட்டத்தின் படி அவர்களுக்கு சிரேஷ்ட மனநிலை என்ற பதக்கம் தானாகவே கிடைக்கிறது. யார் ஒவ்வொரு ஆத்மாவின் நடிப்பையும் சாட்சியாக பார்த்துக் கொண்டே முற்றுப்புள்ளியை எளிதாக வைத்து விடுகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த பதக்கம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஆத்மாக்களின் ஆஸ்திவாரம் அனுபவத்தின் ஆதாரத்தில் ஏற்படுகிறது, எனவே எப்படிப்பட்ட பிரச்சனை என்ற சுவர் தடையாக இருக்க முடியாது.

சுலோகன்:

ஒவ்வொரு சூழ்நிலை என்ற மலையை கடந்து தனது குறிக்கோளை (இலட்சியம்) அடையக் கூடிய பறக்கும் பறவை ஆகுங்கள்.